• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் லட்டுஸ் , நான் அடுத்த எபியோட வந்துட்டேன் .போன எபி்க்கு லைக்ஸ் அன்ட் கமண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி...


நினைவில் தத்தளிக்கும் நேசமது 10 :


புகைப்படத்தை பார்த்து தனக்குள் ஆழ்ந்து போய் இருந்த ஜிஷ்ணுவை கலைப்பது போல் இருந்தது கைப்பேசியின் ஓசை.

ஹலோ ...

ஹலோ ஜீ ,நான்தான் டாக்டர் விஷ்வேந்தர்.. நாளைக்கு என் ஏஞ்சல நான் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன் .நீங்க சொல்ல சொன்னதுனால இப்போ கால் பண்ணேன் . பாய் பாய் ஜீ...

டேய் நான் அவ்வளவு சொல்லியும் என் ஏஞ்சல்னா சொல்ற உன்ன்னன என சொல்லிக் கொண்டே இருந்தவன் மறுபக்கம் வந்த பீப் ஓசையில் விஷ்வேந்தர் கால் கட் செய்ததை உணர்ந்து கோபத்துடன் கைபேசியை தூக்கி எறிந்தான் .

அந்தப்பக்கம் விஷ்வேந்தர் , யாரு கிட்ட நாங்க எல்லாம் சிங்கத்துக்கு கூடவே வாழுறவங்க ஜுஜுபி சிறுத்தைக்கு பயப்படுவோமா ..
ஹா ஹா ஹா ஹா நீங்க திட்றதுக்கு முன்னாடியே கால கட் செஞ்சுருவோம்ல... டேய் விஷ்வா கில்லாடி டா நீ என் கண்ணே பட்றும் போலனு கண்ணாடியை பார்த்து சொல்லிக்கிட்டே அவன் டீஷர்ட் ல இல்லாத காலர தூக்கிவிட்டுக்குரான் . ( எரும திட்டுவாங்க பயந்து போன கட் பண்ணிட்டு என்னம்மா சீன போடுது பாருங்க.. இவனலாம் வச்சு ஒரு பூரிகூட செய்ய முடியாது )



மறுநாள் :
ARSHAD MULTISPECIALITY HOSPITAL



தனது அறை பரபரப்பாக இருப்பதைக் கண்டவள் நேற்று விஷ்வா சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் . அவளின் மயக்கம் தெளியும் வேளையில் அவள் அருகில் இருந்தவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச்செல்வதை பற்றி சொன்னான். முதலில் மறுத்தவளை அவனின் தொடர் பேச்சினில் ஒத்துக்கொள்ள செய்தான் . அதற்க்கு அவளிடம் இரண்டு காரணங்கள் இருந்தன ...ஒன்று அவளுக்கு கேட்ட குரலானது அவனின் குரலுடன் ஒத்துப்போனதால்.. அக்குரலுக்கானவனையும் அக்குரல் தனக்கு கேட்பதர்பதர்க்கான காரணத்தையும் கண்டுகொள்ள அவன் வீட்டிற்கு செல் என அவள் மூளை சொல்லியதால்..
மற்றொரு காரணம் ஏன்னென்று அறியாமலே அவள் மனம் கூக்குரலிட்டது ..அதுவே அவள் இருக்கவேண்டிய இடம் என.

யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்று மயக்கத்தில் இருந்தபொழுது தனக்கு கேட்ட குரல்கள் அவள் அதை கனவு என்றே எண்ணினாள். அதில் ஒரு குரலை விஷ்வாவினுடையது என விட்டவள் மற்றொன்றை பற்றி யோசித்தாள் ....


அப்பொழுது கதவை திறந்து கொண்டு வந்த ஜிஷ்ணு ...இவள் முழித்திருப்பதை கண்டு வேகமாக அருகில் வந்தவன் ..." மித்துமா , எப்டி டா இருக்க ...நேத்து நீ திரும்பவும் மயங்கி இருந்ததா பார்த்தவுடனே நான் ஒரு நிமிஷம் செத்துட்டேன் டா " என உணர்ச்சிகரமாக பேசியவன் தன் கை கொண்டு அவள் தலை கோதினான் .

அவனை சொந்தமறியா பார்வை பார்த்தவள் அவனின் குரலில் இருந்த நேசத்தை கண்டுகொண்டாள் . தான் மயக்கத்தில் இருந்த பொழுது வேதனையுடன் ஒலித்த குரலை அடையாளம் கண்டதால் தயக்கம் நீங்கி ..இல்லை எனக்கு இப்போ ஒன்னும் இல்லை னு சிறு குரலில் சொன்னாள் .

அதே நேரம் ஜிஷ்ணுவுடன் அறைக்குள் வந்த விஷ்வா முதலில் அவன் பேசியதை கேட்டு ச்சுச்சுச்சு என்னா பாசம் என்னா பாசம் ..டேய் மைதாமாவு என்ன சொன்ன ஒரு நிமிஷம் செத்து போய்ட்டியா அப்போ இப்போ பேயாவா வந்து பேசிட்டு இருக்க சரியான லூசா இருப்பான் போல என ஜிஷ்ணு பேசுவதற்கு தனக்குள் கவுண்ட்டர் கொடுத்தவன் அடுத்து அவள் பேசியதை கேட்டு புசுபுசுனு மூச்சிவிடறான் ( கோபமா இருக்காராம் )

அடேய் ...ம்க்கும்...அட என்ன ஜீ இப்போ எதுக்கு இம்புட்டு சோகம் . பாருங்க என் ஏஞ்சல் உங்க மூஞ்ச பார்த்து எப்படி பயப்புடறாங்கனு என காலையில அவன் வரும்பொழுதே விஷ்வாவின் அறையில் இருந்த ஜிஷ்ணு முதல் நாள் இரவு அவனிடம் பேசியதற்கு விஷ்வாவை காய்ச்சி எடுத்த கோபத்தை இப்பொழுது காண்பித்தான் .

அவன் சொன்னதை கேட்டு கோபத்துடன் அவன் மேல பாயபோனவனை தடுத்தவள் ....இல்லை ..அவர் ..அவர ஒன்னும் பண்ணாதீங்க அவர் எப்பவும் இப்படித்தான் என விஷ்வாவிற்கு பரிந்து பேசினாள் . அவள் சொல்லியதை கேட்ட விஷ்வா ஜிஷ்ணுவை பார்த்து கண்ணடித்துவிட்டு தேங்க் யு சோ மச் மை ஏஞ்சல் என திரும்பவும் அவனை வெறுப்பேற்றியவன் நேரமாகியதால் அவளிடம் நான் போய் உன்னோட டிஸ்சார்ஜ் போர்மாலிட்டீஸ் ஆஹ் பார்க்குறேன் என்றவன் , ஜிஷ்ணுவிடம் திரும்பி் ஜீ ரொம்ப நேரம் உங்க மொக்கைய கேக்கனுன்னு எனக்கும் ஆச தான் ஆனா பாருங்க கடமை என்னை வா வானு அழைக்குது சோ நான் அப்றம் உங்க மொக்கையை கேட்டுக்கிறேன் என வேகவேகமாக கூறியவன் அவன் கையில் அகப்படுவதற்கு முன் அறையை விட்டு ஓடிவிட்டான் .


விஷ்வா அறை விட்டு சென்ற பின் ,அவன் யாரென்று அறியாமல் எவ்வாறு பேசுவது என்று அவளும் .... என்னை நினைவில்லாதபொழுது எதை பேச அதுனால மித்துமாக்கு எதுனா ஆகிடிச்சின்னா .. இந்த விஷ்வா வேற நம்பளா எதையும் நியாபகப்படுத்த கூடாதுனு சொல்லிற்கான் என சிந்தனையுடன் அவனும் (ஜிஷ்ணு) இருந்ததால் அவ்வறையில் அமைதி தவழ்ந்தது .
அமைதியாய் தன் விரல்களை பார்த்திருந்தவள் அதில் இருந்த மோதிரத்தை கண்டு இது...இந்த மோதிரம் நீங்கதான் குடுத்தீங்களா ??...என கேட்டாள் .
திடுமென அவள் குரல் கேட்டதில் திகைத்தவன் பின்பு அவளை கண்டு யோசனையுடன் இல்லை என தலையசைத்தான் .
அதில் குழம்பியவள் அது இவரோட குரல் மாதிரி தான இருந்திச்சி என யோசித்து கொண்டே அ...அது...இந்த மோதிரம் எங்கிட்ட எப்படி வந்துச்சின்னு உங்களுக்கு தெரியுமா என கேட்டுகொண்டே அவனை பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் இ...இல்லை எ.. எனக்கு உங்கள பா...பார்க்கும்போது ரொம்ப வ..வருஷமா தெரிஞ்சவங்க மாதிரி தோணிச்சி அ...அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமோ னு கேட்டேன் என பயத்துடன் திக்கிதடுமாறி கேட்டாள்.


எப்பொழுதும் தன்னுடன் சண்டையிட்டு வம்பாய் வாயடிப்பவள் ..இன்று தன்னிடம் பேசுவதற்க்கே பயப்படுவதை கண்டு அவன் இதயம் வலித்தது . ஆமாடா ரொம்ப வருஷம் தான் ...நீ பொறக்கும் போதே எனக்கு சொந்தமானவளா தான் பொறந்த, எப்பவும் எந்த நிலைமையிலும் நான் உன் கூட இருப்பேன் .. ......நீ இப்போ எதையும் யோசிக்காம கிளம்பு நான் அங்க அடிக்கடி வருவேன் ..எப்பவேணும்னாலும் எனக்கு கால் பண்ணு என சொல்லியவன் அதற்க்கு மேல் அங்கிருக்க முடியாமல் ... அவளை நெருங்கி தன் விசிட்டிங் கார்டை அவளின் கட்டிலில் வைத்து நான் கிளம்பறேன் டா, ஜாக்கிரத்தை என அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவ்வறையை விட்டு வெளியேறினான் .
அவன் செல்வதை பார்த்தவள் அவன் இட்ட முத்தத்தின் ஈரத்தில் கூட நேசமிருந்ததை கண்டு இவர் எனக்கு என்னவுறவு என் யோசனையுடன் கண்களை மூடினாள் .( அவ மோதிரத்தை பத்திதான கேட்டா அதுக்கு பதிலா சொன்னானா பாரு ...அதைவிட்டு கதை பேசிட்டு இருக்கான் ?)


நேசம் என்பது
உறவில் வளர்வதா !!
இல்லை...
உணர்வில் உயிர்ப்பதா!!
நினைவறியாமலே
அவன் நேசம் உணர்ந்தவள் ....
அவன் உறவறிவது

எப்போது ???


எல்லா போர்மாலிட்டீஸும் முடிச்சிட்டு தன்னறைக்கு வந்த விஷ்வா அங்கு இருந்த சித்ரங்கதாவை கண்டு மண்டையில் கொட்டியவன் ஏய் வாலு காலேஜ் போற ஐடியாவே இல்லையா உனக்கு ...எப்ப பார்த்தாலும் வெளியவே சுத்திட்டு இருக்க .

ஆஆ எரும எரும எதுக்குடா கொட்டுன ...இன்னிக்கு ட்ரைனிங் தான் அதான் நம்ப ஹாஸ்பிடலயே கத்துக்கலாம்னு வந்தேன் ...

யாரு நீ கத்துகிறதுக்கு வந்த ..இத நான் நம்பனும் என சொல்லி அவளை மேல இருந்து கீழ வரைக்கும் நீ அதுக்கலாம் சரி பட்டு வரமாட்டியே டீ ன்ற மாதிரியே பார்த்தவன் ...உண்மைய சொல்லு எதுக்கு வந்த..என கேட்டான்

ஹான்...டேய் போடா அண்ணணாசேய்ன்னு உன் ஹோச்பிடல்க்கு வந்தேன் பாரு என்ன சொல்லணும் , போ நான் கோபமா கிளம்பறேனு சொல்லி அங்க இருந்து எஸ் ஆகிட்டா .

(ஆமா எஸ்ஸு தான் ..மேடம் இங்க வந்த காரணமே வேற )
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai

வெளியே வந்தவள் அங்கு ஜிஷ்ணு லிப்டினுல் (lift) நுழைவதை கண்டு வேகவேகமா தானும் சென்று நுழைந்தாள் . அப்படி ஒருவள் நுழைந்ததை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவன் தன் கைபேசியை பார்த்து கொண்டிருந்தான் .

அட கடவுளே இவனலாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபட போறேன்னு தெரியலயே...இங்க அம்சமா அழகா ஒருத்தி நிக்குறேன் கொஞ்சம் கூட கண்டுக்காம அந்த போன்ல அப்டி என்ன இருக்குனு அதுக்குள்ள தலையை விட்ருக்கான்....எதுக்கு ஹாஸ்பிடல் க்கு வந்தான்னு தெரிஞ்சிக்க இவன் பின்னாடியே வந்ததுக்கு அந்த விஷ்வா எருமைக்கிட்ட கொட்டு வாங்குனது தான் மிச்சம் ..பின்னாடி வந்தது தெரிஞ்சும் கண்டுக்குறானானு பாரு என மனதிற்குள் புலம்பியவள் அவனை பார்த்து ஆனாலும் நீ இப்படி இருக்கிறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா என் அழகா என முனகிகொண்டே அவனை ரசித்து கொண்டிருந்தாள் .


.............................................................................................................................................................................................................................

மனதை மயக்கும் மாலை பொழுது ...

யாஹ்வி (yahvi)

ங்னா...ங்னா என தன் பாஷையில் தன்னை பார்த்து பேசி கொண்டு தன் விரல்களை பிடித்து விளையாடி கொண்டிருந்த மகனை கண்டவன் ...நா பங்காரம் ஏமி ரா ...இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல என கேட்டுகொண்டே தன் கைகளில் அள்ளிக்கொண்டான் . ங்னா..க்னா என தன் சிறுவிரலை வாயில் வைத்து சப்பி சிரித்துகொண்டே தன் தகப்பன் சொன்னதை ஆமோதித்தான் அந்த சின்ன கண்ணன் .
ஹாஹா ஆமா டா குட்டி நாணாகூட இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .

மகனுடன் பேசியவன் தன் அறையில் இருந்த புகைப்படத்தினிடம் "ராணிமா என்னடி எனக்கு இன்னிக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்கு ....ராணிமா அவங்க பாவா கிட்ட வர போறாங்களோ ....பாவா காத்துகிட்டு இருக்கேன் டா மா சீக்கிரம் வாங்க "

சரியாக அதே நேரம் அம்மாளிகையின் வாயிலில் வந்து நின்ற காரினுள் இருந்து இறங்கிய விஷ்வா மறுபக்கம் வந்து கார் கதவை திறந்து விட தேவதை பூமியில் இறங்கி வந்ததோ என்று எண்ணும்படி பேரழகுடன் இறங்கினாள் ....ஜித்தனின் ராணிமா ....
விஷ்வாவின் ஏஞ்சல் ....
ஜிஷ்ணுவின் மித்துமா..
நம்மளுடைய மித்ராளினி...


- கரைவாள்


அழகோ அழகு

அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு...
அழகோ அழகு...

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு...
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு

தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு !!
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு !!
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ


IMG_20190203_200618.jpg1555851824925.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top