• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் செல்லம்ஸ் , நான் அடுத்த எபியோட வந்துட்டேன் ....படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் செப்புங்க ...போன எபிக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் குடுத்த எல்லோருக்கும் தாங்க்ஸ்ங்கோ....இந்த சின்ன பிள்ளைக்காக இந்தவாட்டியும் அந்த லைக்ஸ் அ கொஞ்சம் அமுக்கிவிட்டு கமண்ட்ஸ்யையும் தட்டிவிட்டுறுங்கோ சரிதானே செல்லம்ஸ் ....??

நினைவில் தத்தளிக்கும் நேசமது 11 :

தேவலோக மங்கை போல் இறங்கியவளை கண்ட நாச்சியார் திருப்தியாக புன்னகைத்தார் . வேலையாளிடம் இருந்து ஆரத்தி தட்டை வாங்கியவர் , தன் கையால் மித்ராளினிக்கு ஆரத்தி சுற்றினார் . மகாலட்சுமி மாதிரி இருக்கமா...என் கண்ணே பட்ரும் போல என கூறி நெட்டிமுறித்தவர் . அனைத்தையும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாவை கண்டு டேய் ...எப்பப்பாரு கேக்கபக்கன்னுட்டு போடா போ உள்ள...நீ வா மா நம்பளும் உள்ள போலாம் .

கடவுளின் செயலோ இல்லை இயல்பாகவோ இடது காலை எடுத்து வைக்கும் பொழுது முன் சென்ற விஷ்வா தடுமாறுவது போல் தோன்றியதில் ஒரு நொடி நின்றவள் பின் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள் . அவ்வீட்டினுள் கால் பதித்த நொடி உலகில் உள்ள ஒட்டுமொத்த பேறும் கிடைத்ததை போல் அவள் இதயம் மகிழ்ச்சியில் குதித்தது . அவள் முகமும் அதை பிரதிபலிப்பதுபோல் பளபளத்தது . அதை கண்ட விஷ்வா , அட என்ன இது ...

அவளுக்கு அவ்வீட்டினை இதற்கு முன் பார்த்தது போல் ஓர் எண்ணம் ....ஏதோஏதோ நினைவுகள் கலங்களாய்......எவனோ ஒருவனின் கையணைப்பில் புகைப்படங்களை பார்ப்பது போல் ஓர் காட்சி தோன்றி மறைந்தது .அதை பற்றி யோசித்து உணர்ச்சிவசப்பட்டதில் மயங்கி சரிந்தாள் .
அதைக் கண்டு பதறிய நாச்சியார் விஷ்வா என கத்தியத்தில் திரும்பிய விஷ்வா அவளை தன் கைகளில் ஏந்த..... நாச்சியார் , என்னடா ஆச்சி இந்த புள்ளைக்கு , டேய் டாக்டர் க்கு போன் பண்ணட்டுமா டா ....அச்சோ முதல் முறையா வீட்டுக்கு வந்த புள்ளைக்கு இப்டி ஆகிடிச்சே .


அவரது புலம்பலில் பல்லை கடித்த விஷ்வா , மாம் உங்க பையன நீங்களே அசிங்கபடுத்தக்கூடாது ....நானும் டாக்டர் தான் மாம் ...இவங்க என்னோட பேஷன்ட் என அவளை அங்கிருந்த அறைக்கு தூக்கிசென்றான் . அச்சிச்சோ சாரிடா அம்மாக்கு பதட்டத்துல மறந்துடிச்சி என்னடா முறைக்குற முதல்ல அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு சொல்லு ....

அவளை சிறிது சோதித்து பார்த்தஒஒன்னும்இல்ல மாம் ....அவங்களுக்கு எதுனா நினைவுக்கு வந்து அதோட தாக்கத்துல மயங்கிட்டாங்கனு நினைக்கிறேனகொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க .

என்னடா சொல்லுற அப்போ அவளுக்கு நினைவு வரவே கூடாதா ...

அப்படியில்ல மாம் என அவன் விளக்கும் பொழுது வெளியே அம்ம்மா என ஜித்தேந்தர் அவரை அழைத்திருந்தான் .

போர்மல் உடையில் மித்ரேந்தரை கைகளில் ஏந்திக்கொண்டு படியில் இறங்கிக்கொண்டிருந்தவன் தன் தாயை கண்டு ..அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு , உடனே கிளம்பி ஆகணும் . இந்தாங்க மித்து குட்டிய வச்சிக்கோங்க என்று அவசரஅவசரமாக சொல்லி சென்றவன் சிறிது நின்று மாம் அது.. ஆர் யு ஆல்ரைட் .

எனக்கு என்ன கண்ணா நல்லா தான் இருக்கேன் என்றவர் அவனின் பதட்டத்தை கண்டு அதைப்பற்றி கேட்க நினைத்தார் . நினைக்க மட்டுமே முடிந்தது
அவன்தான் அவர் பதிலை கேட்டபின் ஒருநொடி நிற்காமால் சென்றுவிட்டானே .


குழந்தையுடன் மித்ராளினி இருந்த அறைக்குள் நுழைந்தவர் அவள் இன்னும் விழிக்காததை கண்டு வருத்தத்துடன் அவள் பக்கத்தில் அமர்ந்துவிட்டார் .

விஷ்வா , டேய் குட்டி அப்பாவ பார்க்க வந்திங்களா வாங்க வாங்க என மிதரேந்தரை தூக்கி கொஞ்சியவன் மாம் நான் தான் சொன்னேன்ல கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்கனு போங்க போய் சாப்பிடறது ரெடி பண்ணுங்க மாம் .

ம்ம்ம் சரிடா நீ குட்டிபயல பாத்துக்கோ நான் போய் சமைக்கிறேன் இந்த புள்ளைய இனிமே நல்லபடியா கவனிச்சிக்கணும் என்று படுத்திருந்த மித்ராளினியின் தலை கோதி சென்றார் .
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் நுழைவாயிலில் சீறிக்கொண்டு வந்து நின்றது ரெட் கலர் FERRARI 599 GTB FIORANA ( 3.57 CRORES ).
அதிலிருந்து வெள்ளை சட்டையின் மேல் கருப்பு நிற பிளேசரும் கருப்பு நிற பேண்ட் அணிந்து இறங்கிய ஜித்தேந்தர் தன்னை பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்கள் வியந்து பார்ப்பதை வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் தன் வேகநடையுடன் உள்ளே சென்றான் .
இரண்டாம் மாடிக்கு சென்றவனை ஷாலினி பெரியத்தான் என்று அழைத்தவாறு வந்தாள் .
ஷாலினி ....ஷாலினிவர்தன் , ஜித்தேந்தரின் மாமன் மகள். சிறுவயதிலிருந்தே துப்பறியும் துறையில் ஆர்வமாய் இருந்தவளிற்கு லட்சியமே அத்துறையில் தானும் சாதிக்கவேண்டுமென்பதே . அவளின் தாயும் தந்தையும் தங்களின் செல்லமகளை தன் கைக்குள் வைத்து வளர்ந்திருந்தாலும் அவளின் இத்துறையின் மேலான தாகம் அவர்களின் கைவிட்டு வெளிவர அவளை தூண்டியது .அந்நேரத்தில் அவளுக்கு துணையாய் இருந்தது ஜித்தேந்தர் தான் ....அவன் அனைவரிடம் இருப்பதுபோல் அவளிடமும் தள்ளி தான் இருந்தான் ஆயினும் அவளும் அவனின் குடும்ப கூட்டுக்குள் ஒரு கிளி தானே அவனின் தம்பி தங்கையின் ஆசையை நிறைவேற்றியதை போல் இவளின் ஆசைக்கும் உறுதுணையாய் இருந்துவருகிறான் . அவளின் இந்த வேலையை பற்றி அவர்களின் குடும்பத்தில் எவருக்கும் தெரியாது அவர்களை பொறுத்தவரை அவள் மைக்ரோ ஆர்டிஸ்ட் .
தனது ராணிமாவை கண்டுபிடிப்பதற்கு தன்னாுயற்சிகளை செய்தவன் அவள் இறுதியில் காணாமல் போனதை அறிய இவளின் உதவியை நாடினான் ஜித்தேந்தர் .
அவளிடமும் முழுவதையும் சொல்லவில்லை ... அவன் ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறான் என்றவரை மட்டுமே அறிவாள் .


அவளிடம் , என்னாச்சு ஏதாவது தெரிஞ்சிதா எதுக்காக அவசரமா வர சொன்ன ??

அது அத்தான் நீங்க சொன்ன மாதிரி நாங்க அந்த பகுதியில் எல்லா இடத்தையும் விசாரிச்சுட்டோம் actually அந்த விபத்தில் சிக்குன்னு எல்லோரையும் அங்கிருக்குற அரசாங்க ஹாஸ்பிடலதான் சேர்த்திருக்காங்க . அதில யார் யார் இருந்தாங்கன்ற லிஸ்ட் இது என ஒரு பைலையை காட்டினாள்.

பதில்கூறமால் நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதானே இது மேலே சொல் என்பதுபோல் பார்த்தவனிடம்

ம்ம்க்கும் ஒருத்தர்க்கு பேசியே கொல்றது வேலை இன்னொருத்தருக்கு பேசாம கொல்றதே வேலை நல்லா வருவீங்க அண்ணனும் தம்பியும் என முனங்கியவள் ..
நீங்க சொன்ன அந்த லிஸ்ட்ல இருந்த எல்லாருமே அங்க இருந்த ஆஸ்பிட்டல்ல தான் சேர்த்திருக்காங்க...ஆனா அதில் இருந்த ஒரு பெயர் இப்போ நான் குடுத்த லிஸ்ட்ல இல்ல ... அவங்க என்ன ஆனாங்கன்னு யாருக்குமே தெரியல....அத பத்தி தெரிஞ்சிக்க நம்ப மும்பை போகணும் பெரியத்தான் .


ஜித்தேந்தர் , லிஸ்ட்ல இல்லாத அவங்க பெயர் என்ன ஷாலினி ?

மித்ராளினி போட்டுருக்கு பெரியத்தான்...அவங்க பெயர் தான் ஹாஸ்பிடல அட்மிட் பண்ணவங்க லிஸ்ட்ல இருந்து மிஸ் ஆகுது .


அப்பெயரை கேட்டதும் தன் கண்களை இறுக்கமாய் மூடி கொண்டவனின் காதிற்குள் " பாவா இன்னும் எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கிறது ..எப்பவும் என் ராணிமாவ எதுக்காகவும் காத்திருக்க வைக்கமாட்டேன்னு சொன்னிங்க ....எப்போ வருவீங்க பாவா " என அவளின் குரல் சிணுங்கியது .

அவனின் நிலையை கண்ட ஷாலினி , பெரியத்தான் நான் ஒன்னு கேட்கட்டுமா?

அவளின் கேள்வியில் தன் நினைவில் இருந்து கலைந்தவன் என்ன என்பது போல் பார்த்தான் .

அது ....நீங்கள் தேட சொன்னது நம்ப மித்ரேந்தருடைய அம்மாவையா ? பயந்துகொண்டே தான் கேட்டாள் . என்னதான் அவன் அவளின் கனவிற்கு உயிர்கொடுத்து உறுதுணையாக இருந்தாலும் அவனின் பார்வையே எட்டி நிற்க வைக்கும் அந்த பயத்திலே இப்பொழுதும் இருந்தாள்.

அவளின் கேள்விக்கு இதழில் சிரிப்புடன் ஆம் ....என்னோட ராணிமா அவ .....என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் அவ தான் என கண்களில் காதல் மின்ன கூறினான் ..
.அவனின் சிரிப்பிலே வியந்திருந்தவள் அவனிடம் நிச்சயம் இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கவில்லை அதிலும் அவன் கண்களில் வழிந்த காதலில் அவளிர்க்கே அப்பெண்ணை உடனே கூட்டிவந்து அவனிடம் சேர்க்க வேண்டும்போல் தோன்றியது .


பெரியத்தான் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ரொம்ப சந்தோஷமா இருக்கு . நான் நிச்சயம் அவங்கள கண்டுபிடிச்சி உங்ககிட்ட சேர்ப்பேன் .
மீண்டும் புன்னகை செய்தவன் , எனக்கு நம்பிக்கை இருக்கு ஷாலினி ...அதனாலதான் இந்த பொறுப்பை நான் உன்கிட்ட கொடுத்தேன் என் ராணிமா சீக்கிரம் என்கிட்ட வந்துருவா ...வரணும...நான் இல்லாம அவள் நிச்சயம் நார்மலா இருக்க மாட்டா ..


பெரியத்தான் அவங்க எப்படி இருப்பாங்க...

அக்கேள்வியில் தன்னவளின் மதிமுகத்தை நினைத்தவன் குரலில் காதலை குழைத்து, அவள் பூவை போன்றவள் ...பிறந்த குழந்தையின் மென்மையாய் வன்மை என்பதே அறியாமல் , குறும்பும் அமைதியும் கலந்த கலவை என்றான்.

இதுவரை இவன் இப்படிப் பேசி கண்டிராத ஷாலினி வாயை பிளந்தவாரு பார்த்து கொண்டிருந்தாள் . தனது அத்தானா இவ்வாறு பேசியது இவருக்குள்ளையும் இப்படி ஒரு காதல் மன்னன் இருக்கானு எனக்கு தெரியாம போச்சே என மனதிற்குள் வியந்துகொண்டிருந்தவள் வெளியே அவனைக் கண்டு புன்னகை பூத்தாள் . அவளது புன்னகையிலே அவள் எண்ணுவதை கண்டு கொண்ட ஜித்தேந்தர் , நவிஷ்வேந்தருக்கு அண்ணன் மா என்றான் .
அவன் சொல்லில் ஒரு நொடி அதிர்ந்தவள் பின்பு எதையோ நினைத்து வருத்தத்துடன் புன்னகைத்தாள் .


அதில் யோசனையாக ஜித்தேந்தர் , ஷாலினி எதையும் ஆழமாய் யோசிக்கணும் ஏன்னா நம்ம கேக்குறதும் பாக்குறதும் எப்பவும் உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்லை ... உன் மனச மட்டுமே கேள் அதுவே உனக்கு பதில்சொல்லும் இடையில் பெரியத்தான் என குறுக்கிட்டவளிடம் ....பைன் நானே இந்தவாட்டி மும்பை கிளம்பறேன் என் ராணிமாவ தேடி ....அவ்வளவு தான் என்பதுபோல் பேச்சை மாற்றியவன் , நீ வீட்டுக்கு போ அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நம்ப ஊருக்கு புதுசா வந்திருக்கிற asp யாருன்னு பாரு.... அவர எப்படி நம்ப சித்துகுட்டிக்கு தெரியும்னு விசாரி அண்ட் மோர்வோவர் அவர் நேத்து நம்ப ஹாஸ்பிடல்க்கும் போயிருக்காரு அது என்னனு விசாரி என வரிசையாய் கூறினான்.

அனைத்திற்கும் சரி சரி என தலையாட்டியவள் அவன் சென்றபின் ...அம்மாடியோவ் இவர் பேசாம cid அ போலாம்போல இவருக்கு தெரியாம எதுவும் பண்ணமுடியாதுபோல என நினைத்தவள் அவன் விஷ்வாவின் பெயரை இழுத்தத்தை வைத்து நம்ப விஷயம் எதுவரைக்கும் தெரியும்னு தெரியலயே என யோசித்தாள் .


தன்னவளுக்காக
பல கரை கடக்கவும்
தயங்காதவனிடம் ...
எவர் கூறுவது ??
அவனவள்
தன்கரை உடைத்து

அவனின் கையருகில் இருப்பதை ....!!!
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
யாஹ்வி :

என்னடா இது நம்ப திரும்ப மயங்கிட்டோமா என சிந்தனையுடன் விழித்தவளை கவர்ந்தது அங்கு விஷ்வாவின் கைகளில் அமர்ந்து தன் பிஞ்சு விரல்களால் அவனின் தலை முடியை பற்றி விளையாடி கொண்டிருந்த மித்ரேந்தரின் சிரிப்பு .
ஆஆ என்னடா கண்ணா பண்றீங்க அப்பாக்கு வலிக்குதுடா என பொய்யாய் வலியில் சிணுங்கினான் விஷ்வேந்தர் . அதில் சிரிப்பு அதிகரிக்க இன்னும் வேகமாய் அவனின் முடியை பற்றி இழுத்து விளையாடியவ கண்டு சிரித்தாள் .


அச்சிரிப்பில் அவள் புறம் திரும்பிய விஷ்வேந்தர் அப்பாடி எழுந்தாச்சா , இம்புட்டு நேரம் எங்க அம்மாவே நான் உண்மையா டாக்டர் தானான்னு சந்தேகமா பார்த்துட்டு இருந்தாங்க இப்பவாவது கண்ணு முழிச்சிங்களே என பெருமூச்சிவிட்டவனை கண்டு சிரிப்புடன் இந்த குட்டி உங்க பையனா என கேட்டாள் .

அவளின் கேள்வியில் சந்தோஷத்துடன் குழந்தையை முத்தமிட்டு ஆமா நான் தான் இவனோட அப்பா என்றான் .

இவன் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்த நாச்சியார் , டேய் அவ முழிச்சா வந்து சொல்லுன்னு சொல்லிருந்தேன்ல உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க என்று அவனை கேட்டவர் அவளிடம் பாசமாய் இப்போ எப்படிமா இருக்கு இந்தா இந்த ஜூஸ குடி என குடுத்தார் .
பின்பே திரும்பியவர் அடடா மறந்தே போய்ட்டேன் பாரு என சொல்லிகொண்டே கதவின் அருகில் சென்றவர் என்ன தம்பி அங்கயே நின்னுட்டிங்க வாங்க என்றார்....


வரும்பொழுதே விஷ்வேந்தரையும் அவன் கையில் இருந்த குழந்தையையும் பார்த்துகொண்டே உள்நுழைந்தான் ஜிஷ்ணு .

அவன் காலையில் மித்ராளினியை கண்டபின்பு முக்கிய விஷயமாய் வெளியே சென்றவனை அவ்வேலை உள்ளிழுத்து கொண்டது . கொஞ்சம் நேரம் கிடைத்தவுடன் அவளை காண விஷ்வா தனக்கு அனுப்பியிருந்த அவனது வீட்டு விலாசத்திற்கு வந்திருந்தான் . இவனை யாரென்று விசாரித்த நாச்சியாரிடம் தன்னை பற்றி கூறியவனை அவ்வறைக்கு அவர் அழைத்து வந்திருந்தார் . மித்ராளினி பேசியதும் விஷவேந்தர் பேசியதும் மிக தெளிவாகவே அவனிற்கு கேட்டது .அதனாலே இவன் ஒரு குழந்தைக்கு தகப்பனா என ஜிஷ்ணுவின் போலீஸ் மூளை விஷ்வேந்தரை ஆராய்ந்து பார்க்க சொன்னது .

கண்ணன்
வசுதேவரின் புத்திரன் மட்டுமல்லவே...
நந்தனின்
மைந்தனும் அவனே !!


இங்கோ
இவன் வாசுதேவனா என கேள்வியுடன் ஒருவர் ...
நந்தன் என்னும் பதிலுடன் ஒருவர்..
உண்மை அறிவர் எவரோ ??
நந்தனின் நிழலை

கண்டுகொள்பவர் எவரோ ???


-கரைவாள்

சின்ன சின்ன வெண்ணிலவே...
சிரித்து பேசும் வெண்ணிலவே...
பிஞ்சு பிஞ்சு கைகளினால் என்னை வரைந்த ஓவியமே...
ஆயிரம் ஜென்மம் வாங்கி வந்து உன் தாயென வாழ்ந்திட வேண்டுமென்று தாய்மை கேட்டவனின் தாயுமானவனே .....
வாழும் காலமெல்லாம் என் சுவாசமானவனே ...


சின்ன சின்ன வெண்ணிலவே ...
சிரித்து பேசும் வெண்ணிலவே ...


உன் முகம் காட்டு கண்ணாடி பூவே
ஆரிரோ ஆராரிரோ ...
என் உயிர் தீபம் ஏற்றிய தீயே
ஆரிரோ ஆராரிரோ ...


என் வாழ்வின் சந்தோஷங்கள்
கண்டேன் உன் கண்களிலே...
என் ஆயுள் ரேகை எல்லாம்
கண்டேன் உன் கைகளிலே...
தாய்மை கேட்பவனின்
தாயுமானவனே...
வாழும் காலம் எல்லாம்
என் ஸ்வாசமானவனே..


சின்ன சின்ன வெண்ணிலவே...
சிரித்து பேசும் வெண்ணிலவே....


ஆஹாஆஅ அஹாஆ அஹ்ஹாஆ

சங்கீத குருவி சந்தோஷ அருவி
சாஞ்சாடும் செல்ல துரவி...
லலலால லாலலா தனன்னனா....
பாட்டுக்கு நீ சுருதி
உன்னாலே பௌர்ணமிகள்
என் வானில் ஒய்வதில்லை...
சொல்லாலே சொல்லிவிட உன் வாசம்
பூ வாசம் இல்லை...
தாய்மை கேட்டவனின்
தாயுமானவனே...
வாழும் காலம் எல்லாம்
என் ஸ்வாசமனவனே...


சின்ன சின்ன வெண்ணிலவே...
சிரித்து பேசும் வெண்ணிலவே...
என்னை வரைந்த ஒவியமே...
ஆயிரம் ஜென்மம் வாங்கி வந்து
உன் தாயென வாழ்ந்திட வெண்டுமென்று
தாய்மை கேட்டவனின்
தாயுமானவனே...
வாழும் காலம் எல்லாம்

என் ஸ்வாசமானவனே...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Nice dear. ippo jithu miru va parkamaleh mumbai kilamba pogirano? Vishwa nanum doctor thaan nanum doctor thaan nu sollikite irru pa. Pavam ellorum confuse agiruvanga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top