• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் ஹாய் டியர்ஸ் நான் அடுத்த எபியோட வந்துட்டேன் . எல்லோரும் படிச்சிட்டு அந்த லைக்யையும், கமெண்ட்டும் பண்ணிட்டுபோங்க டியர்ஸ்... போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமண்ட் பண்ண எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ...


நினைவில் தத்தளிக்கும் நேசமது 18 :

மும்பை :

ஏய் என்னையா இது ஹாஸ்ப்பிட்டல ஒருத்தரையும் காணோம் இங்க இருந்த பேஷண்ட்ஸ் எல்லாம் எங்க போனாங்க என தன் முன் நின்றிருப்பவர்களிடம் கத்திக்கொண்டிருந்தான் முகுந்தன் , chairman of MV MULTISPECIALITY HOSPITALS .

அவனிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அனைவரும் திணறினர் . நேற்று இரவு திடீரென இரண்டு கார்களில் வந்த ஆட்கள் வேகவேகமாய் தடுப்பதற்கான நேரம் கூட கொடுக்காமல் , இங்கிருந்த அனைவரையும் அவரவர் உடல்நிலைற்கேற்ப பாதுகாப்பாய் கொண்டு சென்றுவிட்டனர் .

இதே போல் சில முறை நடந்ததில் அமைதியா இருந்த பணியாளர்கள் மனதிலோ , வழக்கமாய் ஐந்து முதல் பத்து என கணக்கிலே கொண்டுசெல்பவர்கள் இன்று மொத்த பேரையும் கொண்டுசெல்கிறார்களே என்ற யோசனை மட்டுமே .

கத்திக்கொண்டிருந்தவனை நிறுத்தியது கைபேசியின் ஓசை .

ஹலோ முகுந்தன் ஹியர்.

.......

வாட் ???? அதுவரைக்கும் நீங்க என்னத்த ****** இருந்திங்க .

.......

சே என போனை கட் பண்ணியவன் மீண்டும் அது ஒலிக்க எடுத்து பேசியவன் வேகவேகமாய் தனது லேப்டாப்பை எடுத்து எதையோ தேடினான் .

அதில் என்ன இருந்ததோ ஷிட் என கத்தியவன் அதை தூக்கி வீசியதில் அது அங்கிருந்த சுவற்றில் மோதி விழுந்தது .

அவனது இந்த கோபத்தில் ஏற்கனவே நடுங்கிக்கொண்டிருந்த அந்த ஹோச்பிடலின் பணியாளர்களுக்கு தூக்கிவாரி போட்டது .
அந்த நேரம் ஹாஸ்ப்பிட்டலின் வாயிலில் தட் தட் என கேட்ட ஒலியில் நிமிர்ந்தான் .

கருப்பு நிற ரேபோக் ஷூ தட் தட் என ஓசை எழுப்ப கருப்பு வண்ண சட்டையை கருப்பு நிற பேண்டில் டக் செய்து அதில் கருப்பு வண்ண ப்ரேடா பெல்ட் அணிந்திருந்தவன் , சட்டையின் மேல் கருப்பு வண்ண பிளேசர் அணிந்திருந்த வண்ணம் தன் கம்பீர நடையுடன்... ஆண்மையின் இலக்கணமான திண்ணிய தோள்களுடன் ...அந்த ஹாஸ்பிடல்குள் நுழைந்தான் ஜித்தேந்தர் .

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் வந்தவன் அங்கிருந்த முகுந்தனிடம் , பேசலாமா என்றான்.

யார் என்று தெரியவில்லை என்றாலும் அவனின் தோரணையில் முகுந்தனின் தலை தானாய் சரி என அசைந்தது .

ம்ம்ம் சொல்லுங்க யார் நீங்க .

சரியாய் ஆறுமாசம் முன்னாடி , ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்ல இருந்து ஒரு பொண்ண கடத்திருக்கீங்க. இப்போ அந்த பொண்ணு எங்க ??

ஏய் யார் நீ ??? உனக்கு எப்படி இது தெரியும்??

ஹாஹா எதுக்கு இப்போ கத்துறிங்க மிஸ்டர் . முகுந்தன் ....ம்ம்ம் ஷால் வி ஹவ் எ கப் ஒப் காஃபீ .

என்ன பாக்குறீங்க மிஸ்டர் .முகுந்தன் காபீ சொல்லுங்க குடிச்சிகிட்டே பேசுவோம் .

வேறுவழியில்லாமல் அவனும் சொல்ல சற்றுநேரத்தில் அங்கு இரண்டு கப்புகள் மணமிக்க காபியுடன் வந்தது.

அதில் ஒன்றை எடுத்த ஜித்தன் மீண்டும் கேட்டான் , சொல்லுங்க மிஸ்டர்.முகுந்தன் .

அவனோ என்ன சொல்வதென்று முழிக்க , ஜித்தனோ காபியை ரசித்து ஒரு மிடறு விழுங்க முகுந்தனின் கைப்பேசி சத்தமிட்டது .

ஜித்தேந்தரோ , எடுத்து பேசுங்க ம்ம்ம் பேசுங்க முகுந்தன் .

அந்தபுறம் என்னசொல்லப்பட்டதோ இவனின் முகம் பேயறைந்ததுபோல் ஆனது .

ஹாஹா என்ன மிஸ்டர்.முகுந்தன் உங்களோட **** பங்களா இருந்த இடம் தெரியாம தரைமட்டமாகிற்குமே என சிரித்துக்கொண்டே கேட்ட ஜித்தேந்தரின் விழிகளோ கோபாக்னியாய் ஜொலித்தது .

அவனோ வேகவேகமாய் அவ்வறை விட்டு ஓட பார்க்க தன் கைகளில் இருந்த கப்பை வேகமாய் வீசிஎறிந்த ஜித்தேந்தர் , ஒரே எட்டில் அவனை பிடித்தான் .

அங்கிருந்த சோபாவில் அவனை தள்ளியவன் இடது காலை அவனின் வலதுபுறத்தில் வைத்தவன் வலது கையால் அவனின் சட்டையை இறுக்கினான் .

உன்னோட ஒட்டு மொத்த ஹாஸ்ப்பிட்டலையும் ஒரே ராத்திரில தூக்கி , உன் வீடு , உன் தொழில் , உன்னோட எச்சசொச்ச மொத்தத்தையும் விரல் சொடுக்குற நேரத்துல தரைமட்டமாகுன்னு எனக்கு உன்ன உன் அம்மாக்கே அடையாளம் தெரியாம மாத்த எவ்ளோ நேரம் ஆகும்.

எப்படி எப்படி யாருக்கும் தெரியாம மத்த ஹாஸ்ப்பிட்டல் நோயாளிங்கள கடத்தியும் , உன் ஹாஸ்ப்பிட்டல் நோயாளிகள கொன்னும் நீ அவங்க உறுப்பை திருடுவ ஆன உன் *** எதுனா ஆனா மட்டும் துடிக்குதோ .

இங்க பாரு நானே என் ராணிமா இல்லாம பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சுத்திட்டு இருக்கேன் .எப்ப என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரில.

அங்கிருந்த கத்தியை எடுத்தவன் , இதோ இப்படி இந்த கத்திய எடுத்து சட்டுனு குத்துனேனு வை நீ பொட்டுனுலாம் போமாட்ட...கொஞ்சகொஞ்சமா துடிச்சு போய் சாவ என்ன குத்தடுமா என அவனின் தொண்டையில் நூலளவு இடைவெளியில் கத்தியை வைக்க ,

கண்கள் தெரித்துவிடுவதை போல் விரித்தவன் பயத்தில் , சொல்லிடறேன் சொல்லிடறேன் என அலறினான் .

நாங்க அந்த பொண்ண கடத்திட்டு வரும்போது வழில எங்க வண்டி நின்னுடுச்சி . அதுமட்டுமில்லாம அந்த சமயத்துல அங்கநிறைய போலீசை வேற குவிச்சிருந்தாங்க .அந்த பொண்ணு அப்போ ரொம்ப சீரியஸ் ஆஹ் இருந்ததுனால அங்க இருந்த எல்லோரும் உதவி பன்றேன்னு அங்க பக்கத்துல இருந்த வேறொரு ஹாஸ்ப்பிட்டல் ல அந்த பொண்ண சேர்த்துட்டாங்க .

ஜித்தேந்தர் நம்பாமல் கத்தியை அழுத்த , ஆஆஆ சத்தியமா சொல்றேன் இதான் நடந்துச்சு .உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் அந்த சமயத்துல ஊர் எப்படி இருந்ததுன்னு .

ஆனா நாங்க மறுபடியும் அந்த ஹாஸ்பிடல் போனும் அக்க்...க்க் ...அந்த பொண்ணு அங்க இல்ல . விசாரிச்சப்போ அப்படி யாரையும் அங்க சேர்க்கலைனு சொல்லிட்டாங்க . ஆனா ....ஆனா எனக்கு தெரியும் அந்த பொண்ணு அங்க தான் இருக்கும் என பேசமுடியாமல் நிறுத்தி நிறுத்தி சொன்னான் .

அந்த ஹாஸ்ப்பிட்டல் பேர் என்ன ??

...........

ம்ம்ம்ம் குட் என அவனை விட்ட ஜித்தேந்தர் தனது வேகநடையுடன், தன்னவளை பற்றிய நினைவுகளுடன் அங்கிருந்து சென்றான் .

முகுந்தனுக்கோ பெரும் சூழலில் சிக்கி தப்பியது போல் தோன்ற சிறிதுநேரம் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் வேகமாய் வெளியில் வந்தான்.

அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவனை பார்ப்பதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தனது காரை எடுத்தவன் அதை அதிவேகத்தில் செலுத்தினான்.

அடுத்தநொடி அவனின் காரை விட அதிக வேகத்தில் ஒரு லாரி அவனின் காரை நோக்கி வந்தது.


**************************************************

ஏய் சித்து இங்க என்னடி பண்ற என சித்ராங்கதாவை கேட்டுகொண்டே வந்தாள் கீர்த்தி அவளின் கல்லூரி தோழி .

லூசு கீர்த்தி மால்க்கு எதுக்கு வருவாங்க கேக்குறா பாரு கேள்வி .ஆமா நீ யார் கூட வந்த வசந்த் கூடவா என கண்சிமிட்டினாள் .

ப்ச்சே...நீ வேற ஏன்டி வெந்த புண்ணுல வேல பாய்ச்சிற.

சித்ராங்கதாவோ புரியாமல் , என்னடி என்ன ஆச்சி என்றாள்.

கீர்த்தியும் சித்ராங்கதாவும் ஒரே கல்லூரியில் தான் முதல் இரண்டு வருடம் ஒன்றாய் படித்தனர் . நெருங்கிய நட்பு இல்லை எனினும் விளையாட்டாய் கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு பழக்கம் .
வசந்த் இவர்கள் இருவரின் சீனியர் மாணவன் .

முதல்வருடம் முழுக்க கீர்த்தி இருக்கும் இடங்களில் எல்லாம் வசந்தின் இருப்பிடமாக அவனிடம் ஒற்றை வார்த்தை கூட பேசாமலே அவனிடம் காதல் வசப்பட்டாள். அவனுமே இவள் செல்லும் இடங்களில் எல்லாம் கண்களில் காதல் வழிய சுற்றத்தான் செய்தான்.
அதன்பின் இவர்கள் இரண்டாம் வருடம் செல்ல வசந்த் தனது படிப்பை முடித்து சென்றிருக்க அதன் பிறகு கீர்த்தியும் பாதியில் தன் படிப்பை நிறுத்திவிட்டாள்.

ஏய் சொல்லுடி என்ன ஆச்சி என சித்ராங்கதா கேட்க,

என்னத்த டி சொல்ல சொல்ற , அவன் என்ன லவ் பண்ணவே இல்லடி .

ஆஆ ஏய் என்ன ஒலற்ற , அவன் எப்பவும் நீ இருக்க இடத்துல தான சுத்தி சுத்தி வருவான்.

அடபோடி அவன் சுத்திவந்துலாம் சரிதான் ஆனா அவன் என்னை சுத்திவர்ல எப்பவும் என்கூட அமைதியா ஒருத்தி சுத்துவா தெரியும்ல சுருதி அவளை தான் டி சுத்திவந்துருக்கான் .

அவளும் என்பின்னாடி தான் சுத்துறான்னு நினைச்சி சும்மாயிருந்துற்க்கா அப்றம் ஒருநாள் அவன் ப்ரொபோஸ் பண்ணும்போதுதான் அவளுக்கே தெரிஞ்சிருக்கு . இத அவ அன்னிக்கு அழுதுட்டே வந்து சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சிது .

ஓ அப்போ நீ இதுனால தான் காலேஜ் விட்டு போனியா என சித்ராங்கதா சோகமாய் கேட்டாள் .

ஹாஹா நீ வேற...உண்மை தெரிஞ்சி கொஞ்சம் பீல் ஆச்சிதான் அப்றம் சரிதான் நம்பளுக்குனு ஒருத்தன் வராமையா போவான்னு அந்த பீல அப்டியே பரோட்டாவை உள்ள தள்ளி அடக்கிட்டேனே என சிரித்தவள் ,

எங்க அப்பாக்கு வேலை மாற்றல் ஆகிடிச்சிடி லீவ்லயே எல்லாம் நடந்ததுல யாருக்கும் சொல்ல முடியாம போய்டிச்சி என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள் .
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அவளோ பேசிவிட்டு சென்றிருக்க சித்ராங்கதாவின் மனத்திலோ புயல் வீசியது .

நம்ப அதிரடி பார்ட்டி இப்டி எதாவது சொல்லிடுமோ சேய் சேய் அவன் நம்பள பார்க்க தான் காலேஜ் க்கு வந்திருப்பான் .இப்போகொஞ்ச நேரம் முன்னாடி கூட எப்பவும் போல விளையாட்ட தான பேசினான் .

அவளின் மனமோ , விளையாட்டாய் ஆமா அவன் எப்பவும் உன்கிட்ட விளையாட்டாதான பேசீர்க்கான்.

என்ன நீ ! தேவையில்லாம பேசாத அன்னிக்கு அவன் வீட்டுக்கு போனப்போ அவனோட கண்ணுல காதல் தெரிஞ்சிதே என அவள் மனதை குட்டி உள்ளே அனுப்ப ,

அதுவோ மீண்டும் திமிறிக்கொண்டு வந்து , காதல் தெரிஞ்சிதா அது எப்படி மா அந்த மைதாமாவு மூஞ்சிலயே எனக்கு எப்பவும் உணர்ச்சி எதுவும் தெரில இதுல உனக்கு கண்ணுல காதல் தெறித்து காதுல பாசம் வழியுதுனு என கவுண்ட்டர் கொடுத்தது .

மனதுடன் சண்டை போட்டுகொண்டு வந்த சித்ராங்கதாவை ஓர் கை பிடித்து இழுத்தது . யார் என்று நிமிர்ந்து பார்த்தாள் அது மித்ராளினி.

இல்ல அது நீங்க ஏதோ யோசனையில கவனிக்காம போனீங்க அதான் கை புடிச்சி இழுத்தேன் என சிரித்தவாரே சொன்னாள்.

ஓ...அதுஒண்ணுமில்ல சும்மா தான் .ஆமா நீங்க என்ன இங்க நிக்குறீங்க .

அது எனக்கு தெரிஞ்சவங்கள பார்த்தேன் அதான்.

அப்படியா ஆனா இந்த விஷ்வாவும் ,அம்மாவும் உங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லனு சொன்னாங்க என யோசனையாய் கேட்டாள்.

ம்ம்ம் ஆமா எதுவும் நியாபகம் இல்லை தான் ஆனா இவங்களோட இருந்த நினைவுகள் மட்டும் ஒன்னு ரெண்டு இருக்கு என சிரித்துகொண்டே சொன்னாள்.

இவங்களால எப்படி எப்பவும் முகத்துல சிரிப்போடவே இருக்க முடியுது என எண்ணிய சித்ராங்கதா அதை வாய்விட்டு சொன்னாள்.

உங்களால எப்படி இப்படி எப்பவும் முகத்துல சிரிப்போடு இருக்கீங்க .உண்மையா சொல்லனும்னா உங்க சிரிப்பே எதிர்ல இருக்கவங்கள சுலபமா கவர்ந்துடும் போல என வியந்தவள் , சரி சரி வாங்க போலாம் இல்ல மிஸ்ஸஸ்.ரவி நம்பள வறுத்தெடுத்துடுவாங்க என அவளை அழைத்து சென்றாள்.

மித்ராளினிக்கோ மீண்டும் அந்த குரல் காதில் ஒலித்தது .

" ஏய் ராணிமா உன்னோட ஒத்த சிரிப்பு போதும் டி என்னோட மொத்த கஷ்டமும் ப்பு னு பறந்துபோயிடும் . சத்தியமா சொல்றேன் நீ சிரிக்கும்போதுலாம் அப்டியே அது என்னை மொத்தமா சுருட்டுது டி "
என கேட்ட குரலில் வழிந்த தாபத்தில் இவளிற்கு இப்பொழுதே அதை தீர்க்க தோன்றியது . தனது எண்ணங்களில் அதிர்ந்தவள் அந்த அதிர்வுடனே சித்ராங்கதாவுடன் சென்றாள்.

***************************************************

இரவு 7 மணி :

ஏய் நீ இங்க என்ன பண்ற என கேட்ட குரலில் திரும்பிய விஷ்வேந்தர் அங்கிருந்த ஜிஷ்ணுவை கண்டு , அட போலீஸ்காரருக்கு லவ் கார்ட்ஸ் கிட்ட என்ன வேலை என கேட்டான்.

ஏன் டாக்டர் லவ் பண்ணும்போது போலீஸ்காரன் லவ் பண்ணகூடாதா என நக்கலாய் கேட்க...

ஓ என கிண்டலை உதடை குவித்த விஷ்வா , பண்லாமே பண்லாமே என சொல்லி சென்றான் .

இருவரும் தத்தம் மனதிற்கு பிடித்த பொருட்களை தங்கள் காதலிக்கு வாங்கினர் .
இதற்க்குபின் வரிசையாய் வேலை இருக்க ஷாலினி திரும்ப வரும்பொழுது அவளை ஆச்சர்யப்படுத்துவதற்க்காய் விஷ்வா வாங்கினால் ,

நாளை எப்படியாவது தனது காதலை சித்ராங்கதாவிடம் சொல்லிவிட வேண்டும் . பாவம் என் செல்லம் ரொம்ப நாள் வெயிட் பண்றா என ஜிஷ்ணு அவனவளிடம் காதலை சொல்லி பரிசளிப்பதற்க்காய் சிலவற்றை வாங்கினான்.

நாளை இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் இரண்டு பேரும் தங்களது மனதில் வீற்றிருப்பவர்களுக்காய் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினர்.


****************************************************

பெரியத்தான் ! நான் மும்பை வந்துட்டேன் இப்போ எங்க வரட்டும் என ஷாலினியின் குரல் உற்சாகமாய் போனின் வழியாய் ஜித்தேந்தரின் காதில் கேட்டது .

ஷாலினி நான் இப்போ .......ஹாஸ்ப்பிட்டல்க்கு போய்ட்டு இருக்கேன். நீ நேரா அங்க வந்துடு என சொல்லியவன் அவ்வளவு தான் என போனை கட்செய்தான் .

ஆங் அதுக்குள்ள கட் பண்ணிட்டாரா ம்ம்ம்ம் இவர் இவ்ளோ பேசுனதே அதிகம் .ஆமா ஏதோ பேர் சொன்னரே ம்ம்ம் ..............ஹாஸ்ப்பிட்டலா இந்த பேர எங்கையோ கேட்ருக்கனே என யோசித்தவாரே டாக்சி பிடித்தாள்.

கிதர் ஜானா ஐ(எங்க போனும்)


" இந்தர் ஹார்ட்ஸ்பேஷாலிட்டி இஸ் தவாகனா ஜானா ஹை " (இந்தர் இதயமருத்துவமனை போங்க ) ணா.


-கரைவாள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top