• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
நினைவில் தத்தளிக்கும் நேசமது 23 :

எத்தனை இடர்பாடு வந்தாலும் தன் சிரிப்பால் அதை கடந்து செல்லும் சித்ராங்கதா தன் காதலின் நிலைபாடை அறிய முடியா குழப்பத்தில் சிக்கி அதன் மூலம் தன்னை மட்டுமல்லாமல், தன்னவனையும் துயரத்தில் தொலைத்துவிட்டாள்.

தன் துயரில் மித்ராளினியையும், மித்ரேந்தரையும் மறந்து தன்போக்கில் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் இப்போது கண்ணீரின் சாயல் துளியும் இல்லை.

கைகளால் தன்னைத்தானே இறுக்கியவாறு நடந்து கொண்டிருந்த அவளின் முகமும் அதற்கு ஈடாக இறுகி இருக்க மனமோ நினைவுகளிடம் ஆறுதல் தேடி ஓடியது.

இவள் தன்னை மறந்து ஜிஷ்ணுவை நினைத்துகொண்டிருக்க , இவளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற படபடப்பில் இருந்தான் ஜிஷ்ணு.

இத்தனை நேரமாய் அவள் நடந்து கொண்ட விதத்தில் கோபமாய் இருந்தவன் இப்போது தன்னை தானே திட்டிக் கொண்டான் .

"எல்லாமே என் தப்புதான்.. எப்படி இருந்திருக்க வேண்டிய நாள்?? எப்பவும் நான்தான் ஓவரா பண்ணுவன் அவ அதை எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே ஒன்னும் இல்லாம பண்ணுவா.
இன்னைக்கு ஏதோ குழப்பத்துல அவ அப்படி நடந்துகிட்டானா நானும் கோபப்பட்டு ச்சே" என கைக்கொண்டு ஸ்டியரிங்கில் குத்தியவன் ,

"ஏழுகுண்டலவாடா நீ தான் என் பேபிக்கு துணையா இருக்கணும். ப்ளீஸ் என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது, அவ குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் அவள போய் அழ வச்சுட்டேன்" என அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் வந்த ஜிஷ்ணுவின் கரங்கள் சித்ராங்கதாவை தேடி வண்டியை செலுத்தினாலும் அவனின் மனம் அவளுடன் கழித்த நாட்களை நோக்கி ஓடியது.


--------------------------------------------------------------------------------


தங்கள் முன் மூச்சுவாங்க நின்றிருந்த அந்த பாதுகாவலரை கண்ட விஷ்வா, "என்னாச்சு?? ஏன் இவ்வளவு அவசரம்??" என கேட்க,

"சார் ...சார் ....உங்க... உங்ககூட நீங்க கூட்டிட்டு வந்தவங்களுக்கு ஆக்சிடென்ட் சார் " என படபடப்பாக சொன்னான் .

அவன் சொன்ன செய்தியில் இருவரும் அதிர்ந்தாலும் முதலில் சுதாரித்த ஷாலினி," அண்ணா ! என்ன சொல்றீங்க? யாருக்கு என்னாச்சி ? நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்கள் " என தெளிவு படுத்திக்கொள்ள கேட்டாள்.

"இல்லைமா ..நம்ப விஷ்வேந்தர் சார்க்கு பாதுகாப்புக்கு என்னை நியமித்த ஜித்தேந்தர் சார் அவரோட கூட ஒருத்தங்க வர போறதாவும் அவங்க பாதுகாப்பிற்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தார்மா. அவன் வழக்கம் போல இன்னிக்கும் அவங்களை தொடர அங்கு ஏதேதோ ஆகிபோய்ச்சிமா .அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடியே விபத்து ஆகி இரண்டு பேர் அவங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போய்ட்டதாவும் இப்போ தான்மா சொன்னான் " என்று கடகடவென தனக்கு தெரிந்த தகவல்களை ஒப்பித்தார் பாதுகாவலர் .

ஷாலினி ஏதோ பேச வர இடையிட்ட விஷ்வா, " ஷாலினி ! விசாரணைக்கு இப்போ டைம் இல்ல . சார் நீங்க போய் வண்டியை எடுங்க "என தன் வழக்கத்துக்கு மாறாய் மிகவும் படபடத்து பேசிய விஷ்வா காரை நோக்கி செல்ல, ஷாலினியும் அவனை தொடர்ந்தாள்.

முடிந்த அளவு அவர் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஷாலினிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை அளித்திருந்தாலும் , எதையும் பேசாமல் ஒருவித பரிதவிப்புடன் அமர்ந்திருந்த விஷ்வாவின் நிலையில் , அதில் தெரிந்த அலைபுறுதலில் அதற்குமேல் அமைதியாய் வர அவளால் முடியவில்லை.

முன்னிருப்பவர்க்கு கேட்காத வண்ணம் குரலைத் தாழ்த்தியவள், " என்னடா ! இப்படி ஆயிடுச்சுனு எனக்கும் கவலையா தான் இருக்கு, ஆனால் தயவு செஞ்சு இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காதடா, அத என்னால பார்க்க முடியால. அவங்களுக்கு எதுவும் ஆகாது ...ஆகவும் கூடாது ... அதுவும் இன்னிக்குதான் பெரியத்தான் " என ஆரம்பித்தவள் அதை நிறுத்தி ,

"நீதான சொன்ன அவங்க உன் ஏஞ்சல்னு. ஏஞ்சல்லுக்கு பிரச்சினை வரும் ஆனால் ஆபத்து வருமா" என சிறு குழந்தையை சமாதானம் செய்வது போல சொல்ல அவளின் கைகளை தன் கைகளில் பொத்தி கொண்ட விஷ்வாவின் உள்ளங்கைகள் இரண்டும் அத்தனை ஜில்லிட்டிருக்க அவனும் வியர்த்திருந்தான் .

சிறு குழந்தை என அவளின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவளின் முகம் பார்த்து " எனக்கு பயமாயிருக்கு ..அவங்களுக்கு எதுவும் ஆகாது தான ... எதுவும் ஆகக்கூடாது ஆமா எதுவும் ஆகக்கூடாது, அவங்களுக்கு எதுவும் ஆகாது என மீண்டும் மீண்டுமாய் நிலை இல்லாமல் புலம்ப, அவனின் நிலை கண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்து போனாள்.

" அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க " என முன்னிருப்பவரை துரித படுத்தியவளை பார்த்த விஷ்வா தொடர்ந்து, " உனக்கு தெரியாது என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்கள் உனக்கு தெரியாதுடி. நான் அவங்கள சும்மா பேச்சுக்கு ஏஞ்சல்னு சொல்லலை . என் வாழ்க்கையோட மோசமான பக்கங்களை அழிச்சி எனக்கு என்னோட வாழ்க்கையை சரிப்படுத்தி தந்த தேவதைடி அவங்க. அவங்கள போய் சந்தேகப்பட்டியேனு தான் எனக்கு கோபம். சொல்லுடி அவங்களுக்கு எதுவும் இல்லை தான " என மாற்றி மாற்றி சொல்லி தன்னுள் புதைத்திருந்த விஷயங்களை சிறிது சிறிதாக வெளிக்கொணர ஆரம்பித்தான் .

தன் காதல் , தன் வாழ்வின் மறக்க வேண்டிய நாட்கள் , மித்ராளினியின் வருகை அவன் வாழ்வை மாற்றியது என ஒவ்வொரு நிகழ்வுகளாய் தன் வாழ்வை பின்னோக்கிச் சென்று ஷாலினியிடம் கூற ஆரம்பிக்க, அவளும் அவன் சொல்லும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி , அச்சூழல்களில் தன் நிலைப்பாடுகளை நோக்கி தன் நினைவை செலுத்தினாள்.

--------------------------------------------------------------------------------

மித்ராளினி ஜித்தேந்தரை பிரிந்து ஆறு மாதங்கள் தான் கடந்திருந்தது , ஆனால் சென்றது வெறும் ஆறு மாதங்கள் தானா இல்லை வருடங்கள் ஆயினவா என தோன்றக் கூடிய அளவு இந்த நிமிடம் வரை ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் வேண்டுவதை கண்டு விடுவோமோ என்ற ஆர்வத்திலும், முடிவில் ஏமாற்றத்தையும் சுமந்து கொண்டு சென்ற இரவுகளையும் சந்தித்த ஜித்தேந்தருக்கு இந்த நிமிடம் அத்தனை அர்த்தம் நிரம்பியதாக இருந்தது .

நீண்ட நெடிய இடைவெளியாய் தோன்றிய நாட்களுக்குப் பிறகு கண்டுகொண்ட அவனின் இதய ராணி அவனின் நெஞ்சில் முத்தமிட்ட அத்தருணம் அவனின் மனம் அமைதியாய் இதுவரை அனுபவித்த துயர் நீங்கி அந்த உணர்வை மட்டும் ஆழ்ந்து அனுபவித்து .


தன் சிம்மாசனத்தை மீண்டுமாய் ஆக்கிரமித்து அது என்றும் எனது என்பது போல் அவனின் நெஞ்சமதில் இதழ்பதித்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு , நடுக்கடலில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இறுதியில் நலமாய் கரை சேர்ந்தது போல் ஒரு எண்ணம்.

தன் சுயம் அறியா நிலையிலும் அவளால் தன் உயிர் அறியமுடிந்ததே அவளின் காதலின் ஆழமற்கு அத்தாட்சி. இந்த நொடி வரை அவளின் நினைவில் எதுவும் மாற்றம் இல்லை. ஆனால் அவள் மனமோ இந்த சிம்மாசனம் உனக்கே உனக்கானது எனக் கட்டியம் கூறியதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் இன்னும் அழுத்தமாய் தன் இதழ் பதித்தாள் .

அவளின் செயலில், உடல் முழுக்க ஏற்பட்டிருந்த காயத்தின் விளைவாய் வெளிப்பட்ட சிறு வலி கூட காணாமல் போக, ஜித்தேந்தரின் உதடுகள் இரண்டும் அழகாய் புன்னகைத்தன .


உடலின் கடைசி துளி ரத்தம் வற்றும்வரை எத்தனை வலி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்களில் சிறு தூசியும் படாமல் காக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப்படுத்த அறியாமல் இருக்கலாம், அதற்காக அவர்கள் பாசம் இல்லாதவர்கள் அல்ல .

அவர்களில் ஒருவனாய் இருந்த ஜித்தேந்திருக்கு உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு ஆடை முழுவதும் அவன் மற்றும் மித்ராளினியின் இரத்தத்தில் நனைந்து இருந்ததை உணர்ந்தவனுக்கு தனக்கு ஏற்பட்ட காயங்களை விட தன்னவளுக்கு ஏற்பட்ட காயமும் , தன்னால் அவளையும் தங்கள் பிள்ளையையும் காக்கமுடியவில்லையே என்ற எண்ணமே அதிக வலியை கொடுத்தது.

கண்களைமூடியபடியே, சிறிது நகர்த்தினால் கூட உயிர் போகும் வலியை கொடுத்த வலது கையில் தன் மகனை சமாதானப்படுத்துவதற்காக மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவனின் வருடலில் மித்ரேந்தர் அமைதியாக, மித்ராளினியும் தன்னிடம் சேர்ந்ததில் அந் நிமிட சந்தோஷத்தை அனுபவித்தபடி தன் வலி உணராமல் அமைதியாய் இருந்தாள்.

முன்புற கண்ணாடியில் இவர்களை கண்ட ஜிஷ்ணு அமைத்த பாதுகாவலருக்கு, மித்ராளினி குழந்தையை அணைத்திருக்க இருவரையும் சேர்ந்தாற்போர் அணைத்து தலையில் இருந்து வந்த ரத்தம் கழுத்துமுழுக்க வழிய அமர்ந்திருந்த ஜித்தேந்தரை கண்டு கண்கள் கலங்கியது.

அந்த கார் அவர்களின் மருத்துவமனை நோக்கி பயணபட, ஜித்தேந்தரின் மனமோ தன்னவளுடன் இருந்த தன் வாழ்வின் பொக்கிஷநாட்களை நோக்கி பயணப்பட ஆரம்பிக்க , மித்ராளினியின் ஆழ்மனமும் அவனுடன் சேர்ந்து சென்றது.


இத்தனை நாட்கள் நினைவலை (ஜித்தேந்தர்- மித்ராளிணி), உயிர் அலை (விஷ்வேந்தர்- ஷாலினிவர்தன்), உணர்வலை (ஜிஷ்ணு- சித்ராங்கதா) என தனித்தனியாக தத்தளித்துக் கொண்டிருந்த இந்த அறுவரது மனங்களும் தற்பொழுது தத்தமது "நினைவில் தத்தளிக்கும் நேசமது"வை (நேசம்+அது)தேடி ஒன்றாய் பயணித்தது.
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
நான்கு வருடங்களுக்கு முன்பு:

ஆறடிக்கு குறையாத உயரத்தில் மைதாமாவு நிறத்தில் முகத்தில் மீசை , தாடி என எதுவும் இல்லாமல் வழுவழுவென இருந்த கன்னம் கோபத்தில் சிவக்க,
"பாட்டி" என பற்களை கடித்தவன் "நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? ஏர்போர்ட்டுக்கு யாரும் வர வேண்டாம் நானே போய்க்கிறேன். முக்கியமா பாப்பாவ உங்க கூடவே வெச்சுக்கோங்க எந்த திருட்டுத்தனமும் பண்ணாம பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டுதான வந்தேன் " என போனில் கத்திக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு .

பதிலுக்கு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, " ஆமா நீங்க அப்படியே கண்காணிப்பு புலி தான் !! உங்க பாப்பா திருட்டுத்தனமா என் காரு டிக்கில உட்கார்ந்து வந்திருக்கு. என்ன திட்டினாலும் எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரி எங்கேயோ பார்த்திட்டிருக்கா. ஒழுங்கா நம்ப டைரைவரைக்கு போன் போட்டு இங்கே வந்து கூட்டிட்டு போக சொல்லுங்க" என தொடர்ந்து சில பல அர்ச்சனைகளை தன் பாட்டிக்கு போன் மூலம் அனுப்பிகொண்டிருந்தான்.

அருகில் நின்றிருந்த மித்ராளினியோ அவன் சொன்னது போல அந்த ஏர்போட்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் பாட்டிற்கு செய்த அர்ச்சனையை முடித்தவன் போனை அணைத்து விட்டு அவளை பார்த்து முறைக்க அவளோ அவனைப் பார்க்கக் கூட இல்லை. அதில் மீண்டும் பற்களை கடித்து "மித்துமா" என கடித்த பற்களின் இடையில் கூப்பிட ,

மெதுவாய் திரும்பியவள் பார்க்க குமரியாய் இருந்தாலும் கண்கள் இரண்டும் சிறுபிள்ளையின் குறும்பு தனத்தை விடாமல் இருந்தது .

திரும்பியவள் "சொல்லுடா! ஆமா எதுக்கு இப்ப கருங்கல் மாதிரி நிற்கிற உனக்கு டைம் ஆகுதில்ல கிளம்பு கிளம்பு " என்று சொல்லி மீண்டும் தன் வேலையை (வேடிக்கை பார்ப்பதை) தொடர்ந்தாள் .

"ஏழுகுண்டலவாடா ! இவ இம்சை தாங்கமுடில எந்த தைரியசாலி இவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறானோ, முழி பிதுங்க போறானோ தெரியலையே " என உதட்டிற்குள் முனங்கியவன் ,

"உன்னை யாரு இங்க வரச்சொன்னா? நான் என்ன வெளிநாடா போறேன் ?இங்க இருக்கு டெல்லி அதுவும் அங்க போன உடனே வீட்டுக்கு தான் போன் பண்ண போறேன் . எப்பவும் எது செய்யாதனு சொன்னாலும் அதையே தான் செய்ய வேண்டுமா" என மித்ராளினிக்கும் தன் அர்ச்சனைகள் ஜிஷ்ணு வழங்க ,

சிறிது நேரம் போனால் போகிறதென அவனின் பேச்சை கேட்ட மித்ராளினி, அவன் நிறுத்தாமல் தொடர்ந்ததில் ,

" போதும்டா காது வலிக்குது. நான் என்னவோ நீ போறனு வருத்தப்பட்டு வந்தனு நினைச்சியா ? அதுக்குலாம் வாய்ப்பில்லை ராஜா" என நக்கலடித்தவள் "நான் வந்தது என் ஜித்தனை பார்க்க" என உளறினாள் .

அவளை சந்தேகமாக பார்த்த ஜிஷ்ணு, "அது யாரு ஜித்தன் " என்று கேட்டான்.

அவனின் பார்வையில், " ஹீஹீ ஜித்தனா என்ன பாவா ஜித்தன் யாரு " என வழக்கமாய் எதையாவது செய்து அவனிடம் மாட்டிக் கொள்ளும் பொழுது பயன்படுத்தும் வார்த்தையை சொல்லி அவனிடமே கேள்வியை திருப்பினாள்.

அவனோ சிறிதும் அசைந்துகொடுக்காமல் நேர்பார்வை பார்க்க,

"ப்ச்...இப்போ ஏன் ஜிணுபாவா இப்படி பாக்குற? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்பா. உன்கிட்ட சொல்லணும்னு தான் இருந்தேன் அதான் இன்னிக்கு உன் கூட வந்தேன்" என்றாள்.

சிறு வயது முதல் மற்ற நேரங்களில் அவளிடம் சரிக்கு சரியாக சண்டையிட்டாலும் இத் தருணங்களில் சிறுபிள்ளையாகவே அவன் கண்களுக்கு தெரி்வாள்.

மித்ராளினி பிறந்த தினம் தொட்டே அவள் ஜிஷ்ணுவிற்கு என அவ்வீட்டு பெரியோர் முடிச்சு போட்டு இருந்ததால், அவர்களின் குடும்பம் அவளை ஜிஷ்ணுவின் பொறுப்பில் விட்டதுமில்லாமல் அவனை "பாவா" என்றழைக்கவும் பழக்கி இருந்தனர் .

அந்த வயதில் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத போதிலும் அது தனக்கு வேண்டியதை பெற்று தரும் ஆயுதம் என்ற புரிதலுடன் அவள் அழைக்க, ஜிஷ்ணுவிற்கும் அவ்வழைப்பு தன் பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பை தோற்றுவிக்க அவளின் சிறு சிறு தேவைகளை கவனித்து செய்ய ஆரம்பித்தவனுக்கு ஒரு தந்தையின் ஸ்தானம் அப்பொழுதே கிடைத்துவிட்டது .

எத்தனை குறும்புகள் செய்தாலும் இருவருமே பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றுவது முதல் அவர்களின் பாசவிதிகளை இதுவரை சரியாய் பின்பற்றி வந்தனர்.

அமைதியாய் இருந்த ஜிஷ்ணுவிடம் "டேய்! எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ என்னன்னா நின்னுக்கிட்டே தூங்குற " என அவன் தலையில் கொட்டினாள் .


"ஸ்ஸ்ஆஆ" என தலையை தேய்த்துக்கொண்டவன் அவளை முறைத்தபடி, " சொல்லுமா யாரு அந்த ஜித்தன் " என கேட்டவனின் குரலும் வழக்கத்துக்கு மாறாக இறுகி இருந்தது .

அதில் முகத்தை சுருக்கியவள்,"அதை ஏன் இப்படி சேத்துல விழுந்த மாதிரி மூஞ்சிய வச்சுட்டு கேட்குற" என கோபமாய் சிணுங்கினாள்.

அவளின் செயலில் சிரித்தவன், "போதும்டி எனக்கு பிலைட்க்கு டைம் ஆகுது சொல்லு" என்றான்.

"அவரு ...அவரு" என்றவளின் முகம் வெட்கத்தில் சிவந்துபோயிருக்க ,

அதை கண்ட ஜிஷ்ணு " மித்துமா !என்னடா திடிர்னு வெட்கம்ல பட்ற என நெஞ்சை பிடித்துக் கொண்டு மயக்கம் வருவது போல் நடித்தான் .

இம்முறை சற்று ஓங்கி அவன் தலையில் கொட்டிய மித்ராளினி, "மவனே கிண்டலா பண்ற . நானே கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சு அவர் இங்க வரப் போறாருனு தெரிஞ்சு பார்க்க வந்தா நீ வெட்டியா பேசிட்டு இருக்க " என முறைத்தவள்,

மறுநொடியே " டேய் ஜிணு !எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு , இப்பதான் பிரஸ்ட் டைம் பார்க்க போறேன் என்ன நடக்கும் தெரியலையே" என இவனிடம் பேசுவதாய் சொல்லி அவளுக்கு அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.

"மித்துமா ! என்ன உளர்ற ? இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்க போறியா .அப்றம் எப்படி "என கேட்டவனின் கண்களில் சந்தேகம் எட்டிப்பார்த்தது .

தன்னவனை முதல்முறை காணபோகும் ஆர்வத்தில் மித்ராளினியோ அதை கவனிக்காமல், " பின்னநான் பார்த்த பேப்பர்லலாம் அவர் போட்டோ எங்கையும் கிடைக்கலையே . நானும் எல்லாத்துலையும் தேடிட்டேன் அவர் போட்டோ மட்டும் கிடைக்கலை" என வருத்தமாய் சொல்ல,

"ஹாஹா போட்டோவ கூட பார்க்கலையா . ஏன் மித்துமா வீட்ல எல்லோரும் கூப்புட்ற மாதிரி பாப்பாவாவே இருக்கியே ஹாஹா . இவ்ளோ நேரம் பேப்பர்ல பார்த்த யாரோட பேரையோவா சொல்லிக்கிட்டு இருந்த" என அவள் சொல்லியதை விளையாட்டு என புரிந்து கொண்டவன் பின்னொரு நாளில் அவளின் இக்காதலை கண்டு வியக்க போவதை அறியவில்லை.

அவனின் சிரிப்பிலும் , பேச்சிலும் கோபம் கொண்டவள், " டேய் எரும மாடு! எது விளையாட்டு "என கோபமாய் கேட்டவள்,

"ஆமா உனக்கு நேரம் ஆகலை நின்னு கதை பேசிட்டு இருக்க . நான் என் ஜித்தனை பார்க்கணும் நீ மொதல்ல கிளம்பும் கிளம்பி தொலையும்." என அசால்ட்டாக சொல்ல,

ஜிஷ்ணு "அடிபாவி" என வாயை பிளந்தான் .

அதேநிமிடம் அங்கு கேட்ட மற்றொரு குரலில் ஜிஷ்ணு மற்றும் மித்ராளினி இருவருமே அந்த இடம் நோக்கி ஆச்சர்யம் மற்றும் சிரிப்புடன் திரும்பினர்.

அங்கு மித்ராளினியை போலவே கிண்டலாய் " டேய் நீ இன்னுமா கிளம்பல. சீக்கிரம் கிளம்பும் கிளம்பிதொலையும்" என விஷ்வேந்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சித்ராங்கதா.

விஷ்வாவும்," குரங்கு ! உன்னை யார் இங்கே வர சொன்னது? நீ முதல்ல கிளம்புடி" என பதிலுக்கு கத்தினான்.

அவளோ அதை சட்டை காலரின் தூசியை தட்டுவது போல் தட்டி," அப்பா ! அவன தூக்கிட்டு போயி அந்த ப்ளைட்டுல போட்டுட்டு வாங்க . இங்கிட்டு இருக்க ஊருக்கு போக சீன போட்டுட்டு இருக்கான்" என மீண்டும் ஆரம்பிக்க,

பதிலுக்கு விஷ்வா ஏதோ சொல்ல போக வழக்கம் போல் இருவரும் தங்கள் இருக்கும் இடத்தை மறந்து அடித்துக்கொண்டனர்.

அதைக்கண்டு நாச்சியாரும், ரவிச்சக்கரவர்த்தியும் இதுங்க ரெண்டும் திருந்தாதுங்க என்பதை போல் பார்த்துக்கொண்டிருந்தனர் .

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜிஷ்ணு , மித்ராளினி இருவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

" ஹாஹா...ஹாஹா...ஜிணு பாரேன் என்ன மாதிரியே ஒரு பயபுள்ள இருக்கு " என மித்ராளினி ஜிஷ்ணுவிடம் குதூகலிக்கத்தாள்.

" ம்ம்ம்ஹும் ....உன்னை மாதிரி மட்டுமா, என்னை மாதிரியும் ஒரு அப்பாவி இருக்கான் பாரு " என விஷ்வாவை பார்த்து பொய்யாய் பெருமூச்சுவிட்டான்.


அவனைக் கண்டுகொள்ளாத மித்ராளினி அவர்கள் தன் மனம் கவர்ந்த ஜித்தனின் குடும்பம் என அறியாமலே அக்குடும்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கவனம் தன்னிடம் இல்லை என புரிந்து கொண்ட ஜிஷ்ணுவும் தன் கவனத்தை அக்குடும்பத்தை நோக்கித் திருப்பினான்.

அன்னையிடம் கிண்டலடித்துக் கன்னத்தில் முத்தமிட்டு ,அப்பாவை ஒவ்வொருநொடியும் ஓட்டி கொண்டு, தங்கையிடம் வம்பிழுப்பது என விஷ்வேந்தர் செய்து கொண்டிருந்தனைத்தையும் , சேட்டை செய்து அனைவரையும் வசீகரிக்கும் குழந்தையை ரசிப்பதை போல் ரசித்தாள் மித்ராளினி .

அவனின் கண்களுக்கு தற்பொழுது அவன் குழந்தையாய் தெரிந்ததுனாலையோ என்னவோ பின்னாளில் அவனிற்கு அவள் தேவதையாய் மட்டுமின்றி தாயாவும் மாறினாள்.

மறுபுறம் ஜிஷ்ணுவின் கண்களோ , குறும்பில் மித்ராளினியை பிரதிபலித்து கொண்டிருந்த சித்ராங்கதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

" பார்த்தா பதின்னொன்னோ , பன்னிரெண்டோ படிக்குறமாதிரி தான் இருக்கா ஆனா பேசுறத பாரு நம்ப மித்துமாக்கும் மேல இருப்பா போல" என அவளை நிந்திப்பது போல் நடித்த மனம் அவனையும் அறியாமல் சித்ராங்கதாவிடம் மயங்கித்தான் போனது.

ஜிஷ்ணுவின் விமானம் புறப்படும் நேரமாக மித்ராளினியிடம் விடைபெற்று சென்றவனின் மனதில் தன் வேலை பற்றிய நினைவுகள் மேலெழும்ப சித்ராங்கதாவின் முகம் முழுதாய் அவன் மனதை ஆக்கிரமிப்பதற்கு முன்பே வெளியேவும் செல்லாமல் அடிமனதில் சென்று தங்கியது.


-கரைவாள்..

ஒருவரை சித்திரவதை செய்ய சிறந்த ஆயுதம் அவரின் நினைவுகளை தவிர வேறொன்றுமில்லை !!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top