நினைவில் தத்தளிக்கும் நேசமது6

Thoshi

Author
Author
#1
Hai drs , pona epikku likes and cmnys panna ellarukkum thanks drs ....


நினைவில் தத்தளிக்கும் நேசமது 6:


மித்ரேந்தர் அழுகையை நிறுத்தி திரும்ப தூங்க ஆரம்பிச்ச பிறகுதான் ஜித்தேந்தர்க்கு சுற்றி இருந்தவர்களின் நினைவு வந்தது . ஆனா எதாவது பேசிட்டா அது ஜித்தேந்தர் இல்லயே...குழந்தையை தூக்கிட்டு அவன் பாட்டுக்கு மேல போறான் . அங்க யாருமே இல்லைன்ற மாதிரி இருந்தது அவனது செய்கை .இது வழக்கம்தான் என்பதுபோல் நாச்சியார் பெருமூச்செய்தினார் .


அம்புட்டு நேரம் தன் கொஞ்சூண்டு மூளையை கசக்கி யோசிச்சிட்டு இருந்த ஷாலினி , வாசல்ல வாயில ஈ போறதுகூட தெரியாம பே னு பார்த்துட்டு இருந்த சித்ராங்கதா , விஷ்வாவ பார்த்துட்டு angry mode க்கு மாறி சித்துதுது னு கத்துறா.

ஷாலினி கத்துனத கேட்ட சித்ராங்கதா அய்யயோ இவ காளி அவதாரம் எடுத்துட்டாளே என முனங்கிகிட்டே , ஹேய் ஷாலு செல்லம்... எப்படா வந்த குட்டி ...ஏன் செல்லம் மூஞ்செல்லாம் தக்காளிய பூசின மாதிரி சிவப்பா இருக்கு ?? ஈவினிங் பார்ட்டிக்கு இப்பவே facial எதுனா பண்ணியா தங்கம் ..


இவ எதுக்கு இப்போ அவளுக்கு சோப் போட்றா ?? அப்போ இந்த குரங்கும் இப்போதான் வருதுபோலயே..அப்புறம் எதுக்கு phone ல அப்படி சொன்னா , சரி எதுக்கும் நம்பளும் ஒரு bit - அ போடுவோம் விஷ்வா வழக்கம் போல தனக்குள்ளயே பேசிகிட்டு ஷாலினி கி்ட , ஹாய் குள்ள...ம்க்கும் ஷாலினி எப்போ வந்த ?? மாமா அத்தை வரலையா ? ஏன் நின்னுட்டே இருக்க ...மாம் உங்க மருமகளுக்கு உட்கார கூட உரிமை இல்லையா என்ன ..ஓகே மாம் நான் போய் fresh ￰ஆகிட்டு வந்துர்றேன் என ஷாலினிகிட்ட ஆரம்பிச்சு நாச்சியார் கிட்ட முடிச்சி எப்படியோ நைசா எஸ் ஆகிட்டான் .

அவனை வெற்று பார்வை பார்த்தவள் ... சித்ராங்கதாவிடம் அடியே என்ன பாதில விட்டுட்டு எங்கடி போன ??

இவளின் வெற்று பார்வையில் யோசனையுடன் படிகளில் ஏறிய விஷ்வா அவள் பேசியதை கேட்டு இவள் அப்படிலாம் பாதில விட்டு போகமாட்டாளேனு சித்ராங்கதாவை சந்தேகமா பார்த்து வைத்தான் .


அய்யயோ சித்துகுட்டி இது என்னடி உனக்கு வந்த சோதனை , இன்னிக்கு இந்த விஷ்வா பக்கி கிட்ட மாட்டிகிட்டே இருக்கியே சரி சரி நம்ப பார்க்காததா சமாளிடி செல்லம்... உள்ளுகுள்ள பேசிகிட்டே முகத்தை பச்சபுள்ள மாதிரி வச்சி கிட்டு... ஷாலு செல்லம் , அது ஒன்னும் இல்லடி ..வழியில dominos பார்த்தனா சொல்லும் போதே ஒரு மார்கமா பார்த்த விஷ்வா, ஷாலினி ரெண்டு பேரையும் கவனிச்சி அது அந்த dominos பக்கத்துல இருந்த gift shop ல அண்ணாக்கு எதுனா வாங்கலாம்னு ஆர்வத்துல உன்ன விட்டுட்டு போய்டன் செல்லம் ( shobbbba எப்படியோ சமாளிச்சிட்டோம் ). இவர்களை கண்டு சிரிப்புடன் ரவி சாரும் நாச்சியாரும் உள்ளே சென்றுவிட்டனர் .
லூசு என்கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்து பெரியத்தான்க்கு எதுனா வாங்கிருப்பேன்ல ஷாலினி காதுமாகிட்ட பேசுறத பார்த்துக்கிட்டே விஷ்வா தன் ரூம்க்கு போய்ட்டான் .


கொஞ்சநேரம் ஹால்ல உட்கார்ந்து ஷாலினி கூட பேசிட்டு இருந்த காதுமா , சரி டி நீ போய் என் ரூம்ல fresh ஆகிட்டு வா ...நான் அண்ணாவ பார்த்து விஷ் பண்ணிட்டு வரேன்.


அவ்வீட்டின் முதல் மாடியில் வலதுபுறம் விஷ்வாவினுடையது இடதுபுறம் சித்ராங்கதாவினுடையது . இரண்டாம் மாடி முழுவதும் ஜித்தேந்தர் உடையது . அவனது அறை மட்டுமே வலதுபுறத்தை ஆக்கிரமித்திருந்தது , அதனுள் ஒரு குட்டி வீடே அடங்கும் . இடதுபுறத்தில் அலுவல் அறை மற்றும் உடற்பயிற்சி அறை . அவன் அறைக்கு முன் நான்கு சோபாக்கள் அமர்ந்து பேசுவதற்கு வாகாக போடப்பட்டிருந்தன .ஜித்தேந்தர் தன் அறைக்குள் எவரையும் அனுமதிப்பதில்லை . அதுவும் கடந்த ஆறு மாதமாக அறையை சுத்தம் செய்ய கூட எவரையும் அனுமதிக்காமல் தானே செய்கிறான் .


மேலே வந்த சித்ராங்கதா அறை மூடியிருப்பதை கண்டு கதவை தட்டிவிட்டு அறைமுன் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள் . இந்த அண்ணன் ஏன் இப்படி புதையலை காக்குற மாதிரி இந்த அறையை மூடியே வச்சிருக்குனு யோசிச்சிகிட்டே அமர்ந்திருந்தாள் . அவள் யோசனையை கலைப்பது போல் வெளியே வந்த ஜித்தேந்தர் தங்கை அமர்ந்திருப்பதை கண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான் .casual dress ￰லயும் அழகாய் இருந்த அண்ணனை கண்டு சிரிப்புட் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்றாள் . தன் தங்கையின் வாழ்த்தில் அவளை கண்டு அழகாய் புன்னைகைத்தான் . அவ்வளவுதான் அவ்வளவேதான் அவனது பதில் . அண்ணா இந்த விஷ்வா பக்கிலாம் பேசவே தெரியாம பேசி எல்லோர் காதுலையும் ரத்தம் வரவைக்குறான் , நீங்க என்னனா பேசவேமாட்றிங்க என சிறு விஷயத்திலும் விஷ்வாவை அவள் வம்பிழுப்பதை பார்த்து ..குட்டிமா விஷ்வா உன்கிட்ட படாதபாடு படறான்.ஆனா குட்டிமா அவன் உன்ன விட பெரியவன் இப்படி நீ அவன- னு ஜித்தன் ஆரம்பிக்கும் பொழுதே ...அண்ணா ப்ளீஸ் எனக்கு நிறைய வேளை இருக்கு ஈவினிங் பட்டைய கிளப்பனும் சோ நீங்க அப்புறமா உங்க கச்சேரிய வச்சிக்கோங்க ப்ளீஸ் ...னு சொல்லிட்டு வேகமா அந்த இடத்தை விட்டு விலக பார்த்தவள் ஜித்தேந்தர் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றுவிட்டாள் .

குட்டிமா எதுக்காகடா போலீஸ் ஜீப்ப வழிமறிச்சு நின்ன???-ஜித்தேந்தர்

அண்ண்ண்ணா ..அதுவந்து ..அது போலீஸ் ஜீப் மாதிரியே இல்லையேணா நான் அது வேற எதோ வண்டினு நினைச்சி அவள் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே போதும் என்பதுபோல் சைகை செய்தவன் வேண்டாம்டா குட்டிமா ,நீ பொய் சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியோ என்றவன் பின் என்ன நினைத்தானோ ,சரிடா உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு எப்பவும் அண்ணண் உனக்காக இருப்பேன் . அவள் சரி என்பது போல் தலையாட்டினாள் .குட்டிமா இன்னொரு விஷயம் நான் எங்க இருந்தாலும் என் பார்வை நம்ப குடும்பத்துல இருக்கவங்க மேல இருக்கும் அது சந்தேகத்துனால இல்ல உங்க பாதுகாப்புக்காக தான் . அதிசயமா நிறைய பேசுட்டு பேசுனது போதும்னு திரும்ப அவன் அறைக்கு போய்ட்டான் .


அவன் பேசியதை பற்றியே யோசித்துக் கொண்டு வந்த சித்ராங்கதா தன்மேல் மோதிய ஷாலினியை கண்டு சிந்தனை கலைந்தாள் . இவ எதுக்கு இப்போ இப்படி வந்து மோதுறானு...ஏய் என்னடி என்ன ஆச்சி ஏன் இப்படி ஓடி வர .
அது ...அது ஒன்னும் இல்லடி ,நான் .... நான் போயிட்டு fresh ஆகிட்டு வரேன்னு சொல்லி ஷாலினி எஸ்ஆகி போய்ட்டா . தனது யோசனையில் இருந்து முழுவதும் வெளியே வராத சித்திராங்கதாவும் அவளை சரியாய் ஆராயமல் அவளது தடுமாற்றத்தை பற்றி யோசிக்காமல் கீழே ென்று விட்டாள் . சித்ராங்கதாவின் அறை்கு வந்த ஷாலினியின் முகம் சிவந்தது சற்று முன் நடந்ததை எண்ணிப்பார்த்து .

சில நிமிடங்களுக்கு முன்பு :

சித்ராங்கதா தன்னுடைய அறைக்கு செல்ல சொல்லிவிட்டு சென்றபின் மேலே வந்தவள் அறையினுள் நுழையும் முன் ஒரு கரம் அவளைப் பற்றி இழுத்து அறையினுள் அடைத்தது .அக்கரத்தினை கண்டு அதன் சொந்தக்காரனை உணர்ந்து அவள் அக்கரத்தில் இருந்து விடுபட திமிர தொடங்கினாள் . அவள் திமிறல்களை தனது வன்மையான கரங்களால் மென்மையாய் அடக்கி, ஏய் குள்ளச்சி என்னடி என்னாச்சு ?? ஏய் இங்க பாருடி ..ஆஸ்பிட்டலில் கொஞ்சம் எமர்ஜென்சி அதான் வர லேட் ஆகிடுச்சு .அதுக்குள்ள இந்த குரங்கு உன்ன கூட்டிட்டு வந்து நடுவுல விட்டுட்டு போயிட்டா உன்னை யாருடி அவகூட கிளம்ப சொன்னது ?? அத்தான் வரவரைக்கும் இருந்திருக்கலாம்ல..வேற யாரு நம்ப விஷ்வாதான் .


ஹலோ நீங்க யாரு ,நீங்க எதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க ..முதல்ல தள்ளிப் போங்க நான் போகணும் .

எங்க... எங்க போகணும் அதும் என்னை விட்டுட்டு விஷ்வா கொஞ்சலாய் கேட்டான்.

ஹலோ நீங்க யாரு மொதல்ல ?கிட்டலாம் வர வேலை வேணாம் .


ஏய் நான் உன் அத்தான் டி ,உன்கிட்டநான் வராம வேற யாரு வருவா ?


அத நான் முடிவு பண்ணனும் ... நீங்க முடிவு பண்ணக்கூடாது நீங்க யாரு அதை முடிவு பண்ண??

ஏண்டி லேட்டா வந்ததுக்குக்காடி இம்புட்டு அலும்பு பண்ணுற .
என் செல்லக்குட்டி எந்தப் பூ நம்ப கிட்ட வந்து நீ என்ன பறிச்சிக்கோன்னு சொல்லிருக்கு கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன் தனது விரல்கள் கொண்டு அவள் காதோரம் கூந்தலை ஒதுக்கி அவளது காதோடு தனது உதடுகளை ஒட்டியும் ஒட்டாமல் அவளது கழுத்தோரம் அவனது தலையின் சிறு முடிகள் உரச மென்மையாய் பாடினான் ....


பூ பறிக்கச் சொல்லி பூவாய் கேட்டுக் கொள்ளும்..
நான் பறித்துக் கொண்டாள் கூடாதென்றா சொல்லும் ..
பூ பறிக்க சொல்லி பூவாய் கேட்டுக்கொள்ளும்.. நான் பறித்துக் கொண்டால் கூடாதென்றா சொல்லும் ..
மைவிழி வீசுகின்ற மார்கழி
உன் விழி சங்கீத செம்மொழி
கயல்விழி வராதோ பைங்கிளி
கொஞ்சம் நெஞ்சோடு கொஞ்சம் நாழி...அவன் செய்கையிலும் பாடலிலும் கிறங்கியவள் அவனுக்கு தோதாய் பாடினாள் .

அன்பான சினேகிதா சின்னதாய் ஒரு சேட்டை செய்வேன்டா
அச்சாரம் என்பதை இப்போதே போட்டு வையேன்டா..


அழகான சினேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே...
ஆனாலும் சுல்லேன உணர்ச்சியை தூண்ட மாட்டேனே...


அவளின் பதிலில் சொக்கியவன் மிக நெருக்கத்தில் தெரிந்த தனது இதழ்களின் இணையை கண்டு அதனுடன் தனது இதழ்களை சேர்க்க எண்ணி அவள் முகம் நோக்கி குனிந்தவன் சட்டென்று தெளிந்து அவளிடமிருந்து விலகினான் .விலகினாலும் அவளால் தோன்றிய உணர்வுகளை அடக்க முடியாமல் கரங்களால் தன் சிகையை அழுந்த கோதிக்கொண்டான். இதை கண்டு தன் மயக்கம் களைந்த ஷாலினி அவனை காண வெட்கம் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி வரும்பொழுதுதான் சித்ராங்கதாவின் மேல் மோதியது ...அதை நினைத்தே இப்பொழுது அறையினுள் செங்கொழுந்தாகினாள்.
- கரைவாள்
 
Last edited:

Advertisements

Top