நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....

Maha

Author
Author
SM Exclusive Author
En imagination appadi ka.???
நல்ல தான் இருக்கும் அதுவும் பிஞ்சு கத்திரிக்காய் எழுதின இளசா ஒரு தினுசா ஒரு கிலுக் மலுக் ஸ்டைலில் இருக்கும் எழுது மா?
 

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
நல்ல தான் இருக்கும் அதுவும் பிஞ்சு கத்திரிக்காய் எழுதின இளசா ஒரு தினுசா ஒரு கிலுக் மலுக் ஸ்டைலில் இருக்கும் எழுது மா?
Dhinusa va????yen ka yen...kuchi mittai venuma appidingara maari irukum kadaisi la
 

Suvitha

Well-known member
Wow wow wow???????????semma suvi?????நான் இன்னும் அந்த சாப்ட்டர் எல்லாம் படிக்கலை ஆனா இப்போ புரிஞ்சு போச்சு அழகா புரிய வைச்சிட்டிங்க டார்லிங் ரொம்ப அழக இருக்கும் டா as usual I luv your writing style suvi அழகு தமிழ் கொஞ்சி விளையாடி என் நெஞ்சில் மாஞ்சா போட்டு பட்டுன்னு ஒட்டி கிச்சு செல்லம்??????????நான் ஆல்ரெடி உங்க கமண்ட் பிடிக்கும் இப்போ உங்க் பிரியாணி சிம்பிலி சுப்பர்கோஓஓஓஓஓஓஓ?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍❤‍??‍❤
தேங்யூ மஹா:)
 

banumathi jayaraman

Well-known member
Zinab's மயங்காதே மனமே...
மித்ரன் தாமரைக்காக எனது பங்களிப்பு..


இரவு 7 மணி...
வாழ்க்கையில் முதன்முறையாக ஃபாக்டரியிலிருந்து இந்நேரத்திற்கு வீடு திரும்பி இருந்தான் மித்ரன்..முகம் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது..

தனது ருமிற்கு சென்று உடம்பு கழுவி மாற்றுடை அணிந்து கீழே இறங்கி வந்தவன் வாயோ, பாட்டி..பாட்டி என்று கூப்பிட ,கண்களோ தனது மனையாளைத் தேடியது..

பாட்டி, தாமரையை எங்கே என்று மித்ரன் கேட்க, அதே நேரம் பாட்டியும் தாமரையை எங்கே என்று மித்ரனிடம் கேட்டார்..

இங்க இல்லையா?பாட்டி,நான் இங்க இருப்பானுல்ல வந்தேன், என்று யோசனையோடே சொன்னான் மித்ரன்..
இல்லப்பா,ஃபாக்டரியிலிருந்து வரும்போதே கொஞ்சம் சோர்வாகத்தான் தெரிந்தா,அதான் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாப்பிட வாம்மா என்று நான் தான் ரூமிற்கு அனுப்பி வைத்தேன்,அப்புறம் சாப்பிடவும் வரலை,இப்போ டீ குடிக்கவும் வரலப்பா என்று பாட்டி சிறிது கவலையோடே சொன்னார்.

ஆமாம்...காலையில் தாமரையை தங்களது தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்ற மித்ரன் தன்னுடைய வேலை நீண்டு கொண்டே சென்றதால் பெண்ணவளை தனது காரில் டிரைவரோடு வீட்டுக்கு அனுப்பி இருந்தான்..
தனது உடன்பிறந்தவனை காண்பதற்கான காலையில் தன்னோடு ஆசை ஆசையாக சிறு பெண்போல் உற்சாகமாக ஃபாக்டரிக்கு வந்த தாமரையை நினைத்து அவனது இதழ்களில் சிறுநகை பூத்தது..

ஆனால் அங்கு கதிரோடு நடந்த சந்திப்போ கொஞ்சமும் புன்னகைக்கும் படியாக இல்லை...
காரிலிருந்து இறங்கி தன் மனையாளோடு இணைந்து நடந்த மித்ரனின் கண்கள் கதிரைத்தேட ,கூடவே தாமரையின் ஒருஜோடி தாமரைக்கண்களும் தேடின.ஆனால் அவன் வந்திருந்தால் தானே இவர்களின் கண்களுக்கு அகப்பட!!..

தமையனை காணவில்லை என்றவுடன் தாமரை தவிப்புடன்,என்னங்க "எங்க அண்ணன் வரலையா?" எனக் கேட்டாள்..
கொஞ்சம் பொறு தாமரை கண்டிப்பாக வருவான்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனக்கூறிய மித்ரனின் வார்த்தையில் இருந்த நம்பிக்கை நெஞ்சமதில் இல்லையோ??

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நிமிர்ந்து நிற்கும் கதிர் வராமலேயே போய்விடுவானோ?கொஞ்சம் பதறத்தான் செய்தது மித்ரனுக்கு..
ஆனால் அதை வெளிக்காட்டினால் அவன் மித்ரனில்லையே!!

மனைவியோடு தனது கேபினுக்குள்வந்தவன் தனது சுழல் நாற்காலியில் தனது தாமரைப்பெண்ணை அமரவைக்க, அவளோ,ஐயையோ!! என்னங்க பண்ணுறீங்க என்று அமராமல் பதறினாள். இல்லை தாமரை இன்னைல இருந்து இருந்து இந்த மித்ரனுக்கே முதலாளி நீதான் அதனால நீ தாராளமாக இதுல உக்காரலாம்" என்று மித்ரன் கூறிய பதிலில் பெண்ணவளின் கண்கள் நாணத்தால் கவிழ்ந்தன..

அந்நேரம் உள்ளே வர அனுமதி கேட்டு மித்ரனின் கேபின் கதவில் மெதுவான ஒரு தட்டலை வைத்து கொண்டு கதவைத் திறந்துவந்தான் கதிர்
முதலா..ளி என்று அழைத்துக்கொண்டே நிமிர்ந்தவன் தாமரையைக் கண்டு சின்ன முகச் சுழிப்போடு பின்னோக்கி நகர்ந்தான்..

தெய்வத்தை கண்ட பக்தையைப்போல அண்ணனைக்கண்ட பெண்ணவளோ,அண்ணா...என்று கூவ,பதில் சொல்லாமல் திரும்பி நடந்தான் கதிர்..

அண்ணா..அண்ணா..நில்லுண்ணா..
உங்கிட்ட சொல்லாமல் நான் இவரைக் கல்யாணம் பண்ணுனது தப்பு தான்,என்னை மன்னிச்சுடுன்ணா,அதற்காக என்னோட பேசாமல்லாம் இருக்காதன்ணா என்று கதறினாள் தாமரை.

யாருக்கு யார் மா அண்ணன்,"இப்போ என்னோட பேசிக்கிட்டு இருக்கிறது என்னோட முதலாளியின் மனைவி மட்டும் தான்"..பதறாமல் வார்த்தைகளை கத்தியாய் சொருகினான் கதிர்..

அண்ணா..இவ்வளவுபெரிய மனுஷன் நம்ம அம்மா கதையைச் சொல்லி,எங்கிட்ட கையிரண்டையும் ஏந்தி என் பாவக்கணக்கை குறைக்க வழி செய்யம்மா என்று கேட்கையில் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலன்ணா..

ஓ..அதனால் தான் இந்த ஏழை அண்ணன் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாமல் கல்யாணம் பண்ண துணிஞ்சயோ, தாமரையின் பேச்சை இடைவெட்டினான் கதிர்..

கதிர்...நான் சொல்லுறதைக் கேளுடா..

வேணாம் முதலாளி,"ஒரு ஏழை அண்ணனின் உணர்ச்சிகளுக்கிடையே நீங்க வராதீங்க".. இப்பவும் நான் எனக்காகவோ,உங்களுக்காகவோ வேலைக்கு வரலை,என்னை இங்கே வேலைக்கு சேத்துவிட்டாரே ஒரு பெரிய மனுஷர் அந்த மனுஷனின் நல்ல மனசு இந்த வயசான காலத்தில் வருத்தப்பட்டுறக் கூடாதேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வர்றேன்.வேற போக்கத்து போய் ஒன்னும் வரலை,கொஞ்சமேக் கொஞ்சம் தன் ஆதங்கத்தை வார்த்தையில் காட்டினான் கதிர்.

அண்..ணா,கண்களில் நீர்வழிய அழைத்த தாமரையை பார்த்து,"
இன்னைல இருந்து அந்த உறவுக்கு அர்த்தமில்லாம போச்சு..
நீங்க முதலாளி வர்க்கம், நான் உங்க தொழிலாளி இதுதான் நமக்குள்ள உறவுமுறை,இதுக்கு சம்மதிச்சா நான் இங்க வேலைக்கு வரேன், இல்லைன்னா நான் மதுராந்தகன் ஐயா கிட்ட சொல்லிட்டு போய்டே இருக்கிறேன்..
எனக்கு இந்த மடம் இல்லைன்னா சந்தமடம் அவ்வளவுதான் " என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட தாமதியாமல் ரூமை விட்டு வெளியேறினான் கதிர்..
சூப்பர்ப், சுவிதா டியர்
 
Last edited:

Advertisements

Advertisements

Top