• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவுக்கு என் மேல்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நிலவின் கோபம் ... அற்புதம்!
*******************************

ஒரு பாடல் எப்போதெல்லாம் கேட்கிறோமோ அப்போதெல்லாம் தன் மலரை இன்னொரு முறை மலர்த்துகிறது. அப்படியானால் பாடலை முதன்முறை கேட்கும்போது என்ன நிகழ்கிறது?

பாடலை முதன்முறை கேட்பது ஒரு வினோதமான அனுபவம் அடுத்து அந்த பாடல் என்னவாய் திரும்பும் என்பது யூகித்து யோசித்தபடி அப்படியே நிகழ்ந்தால் ஒரு ஆனந்தம் ஒருவேளை எண்ணியது போல் இல்லாமல் வேறு புது மாதிரியாக அதே பாடல் நகர்ந்து நடந்து ஓடி திரும்பி தீர்ந்து போகுமே அந்த பாடல் சுகமான அனுபவமாக மனநிலையில் முதல் முறை ஏற்பட்ட செல்ல தோல்வி பிறகு ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு வித்தியாசமான முரண்பாடாகவே மனதுக்குள் தங்கிவிடும்!

ஸ்ரீதரின் "போலீஸ்காரன் மகள்" திரைப்படம் இன்றளவும் காதலை அன்பை மனித மனதின் நுட்பமான உணர்வுகளை பின்னிய கதையாய் பலரது நெஞ்சங்களிலும் தேங்கி நிரந்தரித்திருக்கும் கலைநதி!

கண்ணதாசனின் எழுத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் டிகே.ராமமூர்த்தி இருவரது இசையில் எல்லாப் பாடல்களும் தேனாய் இனித்தன. பிபி.ஸ்ரீனிவாஸ் எனும் மாயக்குரலோனின் நிகரில்லா பொற்பாடல் இது.

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது,
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது,
கனிமொழிக்கென் மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது"

இது ஒரு சுழல் இசை பாடல். மிக அழகாக முடிந்து முடிந்து தொடங்கி ஒன்று மற்றொன்றை தொட்டபடி கலந்து, தனித்து இசையாகவும் வரிகளாகும் மனதை மயக்கும் கானம்!

மெல்லிசை மன்னர்கள் யாராலும் யூகிக்க முடியாத நல்லிசை ஒன்று கொண்டு, இந்த பாடலை தொடங்கினார்கள் பிபி ஸ்ரீனிவாஸின் குரல் இயல்பாகவே மானசீக நடுக்கம் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்கும் அது, ஒவ்வொரு இழையாக இசையும் ஆன்மாவும் குரலும் பாடல் வரிகளும் கலந்து மலரின் இதழ் நுனியில் துளிர்க்கும் பனி தொட்டெடுத்த தொனி கொண்டு கேட்பவர் மனங்கொல்லும்! இந்த பாடலின் பல்லவி முடிந்து சரணம் நுழையும் இசைக்கோர்வை தொன்மமும் கலந்து ஒலிக்கும் புது நதி பாய்ச்சல் என கிறங்கடிக்கும். பிபி ஸ்ரீநிவாஸ் பேச்சுவார்த்தை நிகழ்த்துகிற பெரியமனுஷ மத்தியஸ்தரின் பொறுமை கலந்த தியான ஒழுங்குடன் காதலை முள்ளற்ற மலராக தன் குரலால் மலர்த்தி இருப்பார்!

"குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுதல் ஏனடியோ
உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு
வந்து கொல்வதுமேனடியோ,
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன்
நான் தானே,
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே"

இந்த வரிகளை பாடுவதற்குள் உலகில் உள்ள அத்தனை அன்பையும் குரல்வழி பெயர்த்து பாடி, பிறகு இன்னும் கூடுதலாய் சர்க்கரைப்ரியம் கலந்து உருகியிருப்பார் ஸ்ரீனிவாஸ்.அதற்கேற்ப குரலால் ஆகாததும் குழலால் ஆகும் என்ற இசைமொழிக்கேற்ப இணைப்பிசையாக ஒரு குழலிசை வரும்..மயங்காத மாமனமும் மயக்கமுறும்.மொத்த பாடலின் பொழுதும் பின்னால் தூர ஆழத்தில் ஒரு வயலின் கோர்வை தொடர்ந்து தவழ்ந்து பெருக்கெடுத்து சிறந்து முடிவுவரை ஒலிக்கும் அந்த இழையின் அலைகளாய் காலத்தின் திசைகள் மனம் கலைக்கும்!

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு,
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு,

கண்ணதாசன் கனிமொழி கனலாய் கண்களின் கணையாய் கொடியிடை படையாய் கவிவழி மனம் திறந்து மனுவெழுதி மனம் கலைத்து பார்வையை திறந்து விடு என்று புதியகாதல் செய்த வகையில் போலீஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களுமே சிறந்தாலும் இந்த பாடல் தியானகால காற்று உதிர்த்து தரும் கூடுதற்கனி மேலதிக சுவையொடு மனமினிக்கும் பாடற்சுளை...!
பகிர்வு

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top