• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவே என் வண்ணமுகிலே - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vishnu jegadeesan

புதிய முகம்
Joined
Sep 8, 2020
Messages
15
Reaction score
38
Location
Rajapalayam,virudhunagar
அத்தியாயம் - 1

மார்கழி மாதத்து நிலவே
எம் வெம்மையை
தணிக்கவேன்று வந்து
உதிர்ந்தாய்!
காலங்கள் செய்யும் மாயங்களில்
நின் கோள்கள் செய்யும்
விந்தை என்னவோ!

கதிரவன் தன் வரவை பூமிக்கு
உணர்த்திக் கொண்டிருந்த நேரம். கீச் கீச் என்ற சத்தத்துடன் மரக்கிளைகளை அசைத்தபடியிருந்த கிளிகளும்,
எங்கோ ஒரு ஒற்றைக் குயில் தன் துணைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த அழகான காலை பொழுது.

முகத்தில் நீர்துளி பட சோம்பலாய் கண் திறந்தாள் உத்ரா. எதிரே ரௌதிரமாய் நின்றுக் கொண்டிருந்தவரைப்
பார்த்து "அட பேய் எல்லாம் கனவுல தான் வரும்னு நினைச்சேன், ஆனா காலங்காத்தாலேயே கண்ணெதிரில் பார்ப்பேன்னு நினைக்கலையே" கூறிவிட்டு
இரண்டு குட்டுகளை தலையில் வாங்கிக்கொண்டாள்.

"ஏண்டி அம்மாவையே பேயின சொல்றியா" கையில் கரண்டியுடன் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்த தாய் உத்ராவுக்கு அச்சு அசலாக பேயாகவே தெரிந்தாள்.

"சீச்சீ, உன்னை போய் பேய் என்று சொல்வேனா?" சும்மா விளையாட்டுக்கு அம்மா, எதுக்கும் அந்த கரண்டியை கொஞ்சம் தள்ளி வை. நான் குளித்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பனும்" என்று நழுவ பார்த்தாள்.

விடுவேனா உன்னை என்ற ரீதியில் "ஆபீஸுக்கு லேட்டாச்சு, சீக்கிரம் நீ கிளம்பனும்ன உன்னை வந்து எழுப்பினா கும்பகர்ணி மாதிரி தூங்கி கிட்டு இருக்க, அதான் ஒரு பக்கெட் தண்ணி எடுத்து ஊத்தினேன்".

"என்ன லேட்டாயிடுச்சா?" கேள்வியுடன் கடிகாரத்தை பார்த்தாள். அது மணி எட்டு எனக்காட்டியது.

ஐயோ, இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே, ஏன்மா என்னை சீக்கிரம் எழுப்பக் கூடாதா என்ற கேள்வியுடன் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தாள்.

"ஒரு நாளாவது சீக்கிரமா கிளம்பி ரெடியாகிரியா, எப்ப பாரு லேட்டா எழுந்துகிறது, சாப்பிடாமல் ஆபீசுக்கு போறது, இதுவே வேலையா வச்சிக்கிட்டு தினமும் என் உயிரை வாங்குற" என்று திட்டிக் கொண்டிருந்தார்.

உத்ராவோ, யாரோ யாரையோ திட்டிக் கொள்கிறார்கள் என்ற ரீதியில் கருமமே கண்ணாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

உத்ரா ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறாள். வீட்டிற்கு ஒரே செல்ல பெண். அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம், தேவைக்கு அதிகமாகவே பணம் இருந்த போதிலும் வேலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடித்து செல்கிறாள். கல்யாணமாவது பண்ணிக்கொள்ளேன் என்ற அம்மாவின் கோரிக்கையை சற்றும் நிறைவேற்றும் எண்ணமின்றி இருக்கிறாள்.

திட்டுகளையோ துளி கூட காதில் வாங்காமல் தனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"பாப்பா எழுந்துட்டியாடா?" என்று கேட்டபடி உள்ளே வந்தார் விஸ்வநாதன், உத்ராவின் தந்தை.

அப்பா என்ற அழைப்புடன் அவர் கழுத்தை கட்டிக் கொண்டு அம்மாவை பற்றிய புகார்களைை கூற ஆரம்பித்தாள்.

"சில சமயம் எனக்கு கூட உன் அம்மா பேய் மாதிரி தான் தெரியுவா கண்ணா, நான் இருபத்தி நான்கு வருஷமா அட்ஜெஸ்ட் பண்ணி வாழவில்லையா, நீயும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா"
கன்னம் தட்டினார்.

பாப்பா நீயாச்சும் பரவாயில்லை கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போயிடுவே, ஆனா நான் கடைசி வரைக்கும் உங்க அம்மா கூடத்தான் குடும்பம் நடத்தி ஆகணும்.

என்னோட நிலைமையை யோசிச்சு பாருடா செல்லம் என்று கேட்டபடிி தனது மகளின் கல்யாண பேச்சை அடிக்கோடிட்டு ஆரம்பித்தார்.

தன்னை பேய் என்று சொன்னதற்கு குறைந்தது பத்து
தோப்புக்கரணமாவது போட வைக்கும் எண்ணத்தில் இருந்த
சுசீலா தன் கணவன் மகளின் திருமண பேச்சைை ஆரம்பிக்கவும் தண்டனையை ஒத்தி வைத்துவிட்டு மகளின் பதிலுக்காக ஆவலுடன்
காத்திருந்தார்.

அப்பா "அவ்ளோ சீக்கிரம் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிடலாம் என்று பார்க்கிறீங்களா, அதெல்லாம்
நடக்காது, நான் இங்கேதான் இருப்பேன்"என்று வழக்கமான பதிலையே மீண்டும் கூறினாள்.

"ஏண்டா கண்ணா, கல்யாணம் பண்ணிக்க கூடாதா, எப்ப கேட்டாலும் இதே பதிலை சொல்ற?"

நீங்களும் இதே கேள்வியைதானேபா கேட்கிறீங்க, அப்போ இதே பதில் தான் வரும். நீங்க கேள்வியை மாத்துங்க நான் பதிலை மாத்துரேன் என்று காமெடி பண்ணுவதாக நினைத்து கடுப்பேற்றி கொண்டிருந்தாள்.

யாரையாவது காதலிக்கிறாயாடா கண்ணா, சொல்லு கண்டிப்பாக கல்யாணம் பண்ணி வைக்கிறேன், விதவிதமாக கேள்விகளை கேட்டும் பயனின்றி போக பெருமூச்சுடன் அவரும் ஆபீஸுக்கு கிளம்பத் தயாராகினார்.

சாப்பிடும் நேரத்தில் அம்மாவை கிண்டலடித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"இது என்ன இட்லியா, ஆட்டுக்கல்லையே எடுத்து செதுக்கி வைத்து செஞ்ச மாதிரி
இருக்கு, நீ செய்றது சாம்பாரா, ரசமா தெரியல, ஆனால் ரெண்டுத்துக்கும் யூஸ் பண்ணலாம் போல இருக்கு"
கிண்டலடித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அப்பாவும் மகளும்.

"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட்டுறீங்கலா, இவ்வளவு சொல்றீங்க நான் சமைத்ததை சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதானே, நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டு நாலாவது இட்லி
சாப்பிடுறீங்க, அது மட்டும் இல்லாமல் என் சமையல் சாப்பிடாமதான் இப்படி இருக்கீங்களாக்கம்" அவருடைய லேசான தொப்பையை சுற்றிக்காட்டினார்.

சிரிப்பில் புரையேற தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த உத்ராவைப் பார்த்து, "பாப்பா எனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு பார்த்தா சிரிச்சுக்கிட்டு இருக்கியே, டூ பேட் மை டாட்டர், டூ பேட்"அபிநயமாக சொல்லிக்கொள்ள அங்கே
சிரிப்பலை கிளம்பியது.

வண்டியில் செல்கையில் கை அதன் போக்கை செலுத்த, மனமோ காவியாவின் ஞாபகத்தில் உழன்று கொண்டிருந்தது.
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,779
Location
Chennai
நைஸ் ஸ்டார்ட் டியர் ?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Nice start ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "நிலவே என்
வண்ணமுகிலே"-ங்கிற புதிய
அழகான அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஜீவன்யா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜீவன்யா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top