• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவே என் வண்ணமுகிலே - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vishnu jegadeesan

புதிய முகம்
Joined
Sep 8, 2020
Messages
15
Reaction score
38
Location
Rajapalayam,virudhunagar
அத்தியாயம் -4



உன் விழிகளால்
எனை சிறை செய்தாய்
உன் இதய பெட்டகத்தில்
எனை அடைக்கலமாக்கினாய்
என் ஈரேழு ஜென்மம் வரை !




அபி, இவர் என் நெருங்கிய நண்பர் விஸ்வநாதன். இது அவர் குடும்பம் என்று அறிமுகப்படுத்தினார்.


இவன்தான் என் ஆருயிர் மகன் அபிமன்யு.... லண்டனில் எம்.பி.ஏ
முடித்துவிட்டு பிசினஸில் எனக்கு பதிலாக பொறுப்பேற்று நடத்துகின்றான்.


இதுவரை நடப்பதை கண் சிமிட்டாமல் சிலை போல பார்த்து கொண்டிருந்தவளை முதல் தடவை பார்ப்பது போல் அவளைப் பார்த்து அறியா பிள்ளையாய்... அப்பாவியாய்... முகத்தை வைத்துக் கொண்டு ஹலோ என்றான்.


திகைப்பிலிருந்து வெளி வந்தவள் சிறு புன்னகையை அவனுக்கு பதிலாக தந்துவிட்டு தன் அன்னையின் அருகில் நின்று கொண்டாள்.


முதல் தடவை பார்க்குற மாதிரி பார்வையை பாரு.... பச்ச புள்ள பால் வடியிற முகத்தை வச்சு இருக்கிற மாதிரி.... சரியான கள்ளுனி மங்கன்.... வாய்க்கு வந்ததை வச மாரியாய் பொழிந்தாள் மனதிற்குள்தான்.
பிறகு அவன் முன்னாடி சொல்வதற்கு அவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.


அபி அவள் பெற்றோருடன் நன்றாக பழகினான்.


"இவர்கள் பேசி பழகிக்கொள்வதை பார்த்தா ரொம்ப நாள் பழகினவங்க மாதிரி தெரியுதே" ஆராய்ச்சி கண்ணுடன் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.


விழா வெகு சிறப்பாக நடந்தேறியது. சிறிது நேரம் கழித்து அவள் அருகில் வந்தவன் " புடவையில் ரொம்ப அழகா இருக்க உத்ரா " அவன் கண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசனையாய் வருடியது.


அழகிய டிசைனர் புடவையில் மிதமான அலங்காரத்தில் தேவதையாய் ஜொலித்தவளை பார்த்து இம்மியும் பார்வையை நகர்த்த முடியவில்லை அவனுக்கு.


அவன் கூறுவதை கேட்டும் கேட்காதது போல் வீட்டின் அலங்காரத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.


ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டா,கண்களில் குறும்புடன் கேட்டான்.


உங்களுக்கு நான் யாருன்னு தெரியுதா ?..... "நான் கூட உங்களுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்னு நெனச்சேன்" நக்கலாய் கூறினாள்.


உன்னை மறக்க முடியுமா பேபி, சில பேர பார்த்த உடனே மனசுல
பதிஞ்சிடுவாங்க, அது மாதிரிதான் எனக்கு நீயும்.... ஆயுள் வரை மறக்க முடியுமா, கண்களில் என்னவென்று புரியா பாவனையுடன் கூறினான்.


உன்னோட அழகான , துருதுருன இருக்கிற கண்ணு, கோபப்படுறப்போ முகத்தில மாருர ரெட்டிஷ், படபடன துடிக்கிற உதடு , அவன் ரசனையாய் ஒவ்வொன்றை விவரிக்க அவளுக்கு ஏண்டா கேட்டோமென்றாகி விட்டது.


"போதும் நிறுத்துங்க" படபடத்த மனதுடன் சீறினாள்.


"இல்லையே, நான் இன்னும் முழுசா முடிக்கலை பேபி" ரசனையான குரலில் கூறினான்.


ஜஸ்ட் ஸ்டாப் இட். ஐ அம் நாட் பேபி... இனிமே என்னை அப்படி கூப்பிடாதீங்க , சீறினாள்.


"அனல் அடிக்குது, இவ்வளவு கோபம் வேண்டாம் பெண்ணே" குறும்பு கொப்பளிக்க கூறினான்.


"ம்... ரௌத்திரம் பழகுன பாரதியாரே சொல்லி இருக்கார்... கோபம் தான் பெண்களுக்கு ஆயுதம் , கவச குண்டலம் எல்லாமே.... இல்லனா ஆண்கள் எங்க தலையில மொளகா அரைச்சுர மாட்டீங்க" கண்கள் சிவக்க கோபத்துடன் கூறினாள்.


"இப்ப தான் புரியுது உன்னோட முகத்தில ஏன் எள்ளும் கொள்ளும் வெடிக்குதுன ரொம்ப மொளகா சாப்பிடுவியோ" கிண்டல் தொனிக்க கூறினான்.... ஆனால் பார்வையிலேயே அளவிடமுடியாத மெச்சுதல்.


கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறீங்களா? என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.


"அப்ப கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பேசலாமா, எனக்கு ஓ.கே" குதூகலத்துடன் கூறினான்.


இப்ப உங்களுக்கு என்ன வேணும் , கோபமாக கேட்டாள்.


என்ன கேட்டாலும் கிடைக்குமா என்றவனின் பார்வை அவள் இதழ்களின் மேலே இருந்தது.


அவனின் பார்வை போன திக்கை பார்த்தவள் சிறு பயத்தோடு அவனை பார்த்தாள்.


அவனின் பார்வை அடி நெஞ்சு வரை அவளுக்கு ஜில்லிட்டது.
கண்களாலேயே மனதை படித்து விடுபவன் போல பார்த்துக் கொண்டிருந்தான்.


அவள் கண்களில் சிறு பயத்தை பார்த்தவன் உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டு, "நத்திங் பேபி உன்னை இங்கு பார்ப்பேன் என்று எதிர் பார்க்கலை, எனிவே ப்ரெண்ட்ஸ்" என தன் வலது கையை நீட்டினான்.


மனதிற்குள் சிறு பட்டிமன்றம் நடத்திக்கொண்டே யோசனையுடன் அவன் நீட்டிய கரத்தினை பற்றினாள். பிடித்த கையை விடாமல் அவள் கையின் மென்மையை பரிசோதித்து கொண்டிருந்தன அவன் விரல்கள்.


"விட்டுத் தொலையேண்டா" மெல்ல முணுமுணுத்துக் கொண்டே அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள போராடினாள்.


ஏதாவது சொன்னியா பேபி ? கன அக்கறையாக அவள் பக்கம் தலையை சாய்த்து கேட்டான்.


அவனின் மூச்சுக்காற்று அவள் கண்ணம் தீண்டியது.... மின்சாரம் தாக்கியது போல் உடல் சிலிர்த்தது.... அவன் உதடுகளோ அவள் கன்னத்தை தீண்டி விடும் தூரத்தில் இருந்தது.


பார்வை ஒன்றை ஒன்று கவ்வ , எவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களோ பத்மினியின் குரல் அவர்களை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.


கண்ணா பேசி முடிச்சிட்டீங்களா , லேட் ஆகிடுச்சு கிண்டலாக கேட்டபடி அங்கு வந்தார் பத்மினி.


அவரோடு சேர்ந்து மொத்த குடும்பமும் அங்கு வர , " எங்க பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள்ள சம் டிஸ்டர்பன்ஸ்", சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.


"அடப்பாவி நான் உன் அம்மாடா , என்னையவே டிஸ்டர்பன்ஸ்னு சொல்லுற, நீ பொழச்சிக்குவடா மகனே" கிண்டலடித்த கூறினார்.


அபியோ தனக்கு அவார்டு கிடைத்த மாதிரி கண்களில் குறும்பு மின்ன "தேங்க்ஸ் மாம்" என்றான்.


அவர்களின் பேச்சை கேட்டவர்களால் சிரிப்பை அடக்க இயலவில்லை.


கிளம்புகையில், இன்னொரு நாள் கண்டிப்பாக வர வேண்டும், என்று கூறி உத்ராவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் பத்மினி.


அவரின் பாசத்தில் நெகிழ்ந்தவள் கண்டிப்பாக வருவதாக கூறி விடைபெற்று கிளம்பினார்.


அபி , " நாளைக்கு மீட் பண்ணலாம் , பை பேபி " கன்னத்தை தட்டிவிட்டு சென்றான்.


வெகு நேரம் ஆகியும் அவன் தொட்ட இடம் கதகதப்பது போல் தோன்றியது உத்ராவுக்கு.


அவளுக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒரு நாள் பார்த்த ஒருவனை பற்றி தான் நினைப்பது தவறல்லவா?


திடீரென்று ஷாலினியின் நினைவு அவளை தாக்கியது.


வேண்டாம், அபியை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது தனக்கு நல்லதல்ல, பிறகு ஷாலினியின் நிலமை தான் தனக்கும் என்று எண்ணியவளுக்கு ஆயாசமாக இருந்தது.


வெகு நேரத்திற்கு பிறகு ஒரு முடிவிற்கு வந்தவள் நிம்மதியாய் உறங்க தொடங்கினாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top