நிலவைக் கொண்டு வா – 14 (PRE-FINAL)

SAROJINI

Author
Author
#1
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் நிறைவு செய்ய போகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா – 14 (PRE-FINAL)

3514.jpg
 

SAROJINI

Author
Author
#2
நிலவைக் கொண்டு வா – 14 (PRE-FINAL)

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
சரியாக பத்து மணியளவில் காம்பவுண்டுக்குள் நுழைந்து ஓய்வுக்கு தயாரான BMW வில் இருந்து இறங்கி வரும் மகனையும், மருமகளையும் ஆசையாக பார்த்திருந்தார், துர்கா.

இருவரின் முகத்தில் இருந்த வசீகரம், அவர்களுக்கிடையே வந்திருந்த வசியத்தை வார்த்தைகள் இல்லாமல் வழிமொழிந்திட போதுமானதாக இருந்தது, அந்த தாயிக்கு.

இருவரும் இணைந்து புன்னகையுடன் வீடு நோக்கி நடந்து வரும் காட்சியினால், துர்காவின் மனது காற்றினை வெளித்தள்ளிய குடத்தில் நிரம்பி வழியும் நீர் போல மகிழ்ச்சியினால் நிறைந்து இருந்தது,

“கும்புடுறேன் அத்தை”, என்றவாறு இரு கைகளைக் கூப்பினாள், வதனி

“மகராசியா இருத்தா”, என்றவாறு

“எத்தன மணிக்கு அங்க இருந்து கிளம்புனீங்க?”

“அஞ்சரைக்கு கிளம்பினோம்த்த”

“காலைல ஒன்னும் பசியாறிருக்க மாட்டீங்க..... ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”

“இல்லமா, காரைக்குடில வந்து சாப்டுட்டு தான் வரோம்”

“இளனீனா குடிக்கிறீங்களா?”

இருவரும் மறுக்க, சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு துர்கா சென்றார்.அதன் பிறகு அங்கு வந்த நிர்மலா

“வாங்க....வாங்க.... இப்ப தான் வந்தீங்களா?”

“ஆமாக்கா”

“என்ன வதனி, எக்ஸாமெல்லாம் நல்லா பண்ணுனியா?”

“நல்லா பண்ணிருக்கேன்கா”

“அடுத்து என்ன செய்யப்போற..... ?.... உன் வீட்டுக்காரரு என்ன சொல்றாரு?”, என நந்தனைப் பார்த்தபடி கேட்க

“ஆடிட்டிங் ப்ராக்டிஸ் பண்ணனும்கா, அவங்க ஒன்னும் சொல்லல”, வதனிக்கு அவள் கேள்வியின் நோக்கம் புரியாமல் விழிக்க

“இல்ல, கொழுந்தனாரு .... அவரு பொண்டாட்டிய வெளில வேலைக்கெல்லாம் அனுப்பமாட்டேன்னு சொல்லுவாறே..... அதான் கேட்டேன்”

வதனி அவளது கணவனை நோக்கி, “அப்படியா?” என கண்களால் கேட்க...... அவன் “இல்லை” என கண்களாலேயே மறுக்க...... அதைப் பார்த்த நிர்மலா,

“நயன மொழி பேசுறதுக்கு ரெண்டு பேரும் கிளாஸ்ஸெல்லாம் நாலு நாளா போயிட்டு வந்திருக்கீங்க போல”, என கிண்டல் செய்தாள்.

“நயன மொழியும் பேசல, நயன்தாரா மொழியும் பேசல.......

நீ எங்கண்ணன்கிட்ட பேசுற மொழிய விடவா, நாங்க ரெண்டு பேரும் பேசிட்டோம்.....

நீ பேசுற மௌன மொழிக்கே எங்கண்ணன் ஆடி போறான்.... இன்னும் என்னென்ன மொழியெல்லாமோ பேசி அவன சர்க்கஸ்லாம் பண்ண வைக்கிற......

என்னிக்காவது நான் உங்கிட்ட அது பத்தி கேட்டிருக்கேனா.......?”, என்றான் சிரித்தபடி

“ஓரகத்திக பேசுற இடத்துல உனக்கு என்ன வேல, அத்த கூப்பிடுறாக, போ நீ அங்க”, என நந்தனை நிர்மலா விரட்ட, அவன் சிரித்தபடியே வதனியை பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

“என்ன வதனி, இனி இங்கதானா?”

“அத்தான் என்ன சொல்றாங்கனு தெரியல..... அவங்க சொல்ற மாதிரிதான் இனி செய்யணும்கா.....”

“என்னடி நாலு நாள்ள இப்டியாகிட்டா.....?, அத்தான் , பொத்தான்னு ..... விட்டுறாத.....

இப்பவே..... என்ன செய்யணும்னு நல்லா யோசிச்சு முடிவெடு.... பட்டிக்காட்டுல உக்காந்துக்கிட்டு, ஆடிட்டரான நீ ..... என்ன செய்ய போற?”

“யோசிக்கிறேன்கா.... உங்களுக்கு டெலிவரி டேட் எப்போ குடுத்துருக்காங்க....”

“அடுத்த மாசம்”

“தன்யா எங்கக்கா?”

“ஊருக்கு போறதுக்கு முன்னாடி நந்தா ஒரு வீடியோ கேம் வாங்கிக் குடுத்துச்சு..... அத வச்சு தான் விளையாடிட்டு இருக்கா ரூம்ல”, என்றபடி பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றனர்.ரகு, மதிய உணவிற்குப்பின் வழக்கமான அவனது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.

மாலையில், தனது தாயுடன் பேசிக்கொண்டிருந்த வதனியை போனில் அழைத்த ரகு, இன்று இறால் பண்ணையில் அறுவடை என்பதால், வீட்டிற்கு வர இரவு வெகு நேரமாகும் என்றும், அதுவரை தனக்காக காத்திருக்காமல்... உண்டு விட்டு உறங்குமாறும் கூறி போனை வைத்துவிட்டான்.நேரம் போகாமல் சென்னையில் MBA படித்துக்கொண்டிருக்கும், தனது தம்பி ப்ரவீணுக்கு அழைத்தாள், வதனி.

“வாத்து, சொல்லு....... இப்ப என்ன திடீர்னு இந்த தம்பி மேல ரொம்ப பாசம்”

“டேய், ஒரு அக்கா போன்ல பேசுனா, நல்லா இருக்கியானு முதல்ல கேளு..... அப்ப நீ ஒரு நல்ல தம்பி.... அத விட்டுட்டு எடுத்த உடனே வாத்து, ஊத்துன்னு... என்ன டென்சன் பண்ணிக்கிட்டு”

“சரி சரி.... ரொம்ப கோவபடாத.. இங்க வரைக்கும் அணல் அடிக்குது..... இப்ப எங்க இருக்க.....?”

“ம்.... சுந்தரமுடையான்ல இருக்கேன்....”

“என்ன சொல்ற? அதிர்ச்சினாலே எனக்கு அலர்ஜி.... இருந்தாலும் என்னால நம்ப முடியல!....

தீபாவளி, பொங்கலுக்கு தான எல்லாத்தையும் ஒரு கை பாக்கணும்னு போவ..... அப்புறம் மிஞ்சுனதெல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வந்து ஹாஸ்டல்ல கொட்டிக்குவ.....

இப்ப என்ன விசேசம்.... எனக்கு தெரியாம.... யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லலயே!”, என யோசித்தபடி கேட்டான்.

“டேய்! அடங்குடா..... என் புருசன் வீட்டுக்கு நான் வந்திருக்கேன்..... ஓவரா பேசுற....

இங்க வருவல்ல....அப்ப இருக்கு..... உன் வாயில டீக்கு பதிலா....... கழனித்தண்ணிய கழுவி ஊத்துறேன் பாரு”

“அதான் தெரியுமே நீ செஞ்சாலும் செய்வ.... எனக்கு நம்பிக்கை இருக்கு....

இருந்தாலும்.... சின்ன வயசுல நீ கூப்ட உடன டவுசரக் கூட ஒழுங்கா போடாம வேர்க்க விருவிருக்க வந்து நிப்பேனே......

அந்த சோட்டா பையன் ப்ரவீணுனு நினைச்சிட்டு இருக்கீயா...

ப்ரவீன்... தி க்ரேட் மா....

வாலண்டியரா வந்து மாட்ட நான் என்ன ரகு மச்சானு நினச்சியா?

அப்றம் என்னமோ சொன்னியே!...... ஆஹான்... புருசன் வீடா? இத்தன நாளு எங்கிட்ட சிடுமூஞ்சினு சொல்லுவ.... திடீர்னு என்னென்னமோ சொல்ற?....

என்ன நடக்குது அங்க?....

மச்சான இனி யாராலயும் காப்பாத்த முடியாது போலயே..... குறி வச்சி கட்டம் கட்டிட்ட போல”

“கட்டமும் கட்டல, கட்டடமும் கட்டல.... போரடிக்குதே கொஞ்ச நேரம் தம்பிகூட பேசலாம்னு கூப்டா ரொம்ப பேசுற”

“போரடிச்சா தான் நீயெல்லாம் எங்கூட பேசுவ..... ஆனா நாங்க அப்டியில்ல வாத்து..... உன் நினைப்பு வந்தாலே நேருல பார்க்க வந்திருவேன்”

“ரொம்ப பாச பயிர வளர்க்காதா...... ஆடு மேஞ்சுற போகுது!”

“எல்லாம் உனக்கு இன்னும் விளையாட்டுதான்”

“சரிடா ப்ரவீணு... வைக்கவா?”

“இனியாவது பொறுப்பா இருக்கா”, அவனின் அக்கா என்றழைப்பில் வெயிலுக்கு உருகும் வெண்ணையைப் போல மனம் மாறியவள்

“சரி தம்பி”, என்றவாறு தனது தம்பியின் அக்கா என்ற அரிய அழைப்பு மனதில் செய்த மகிழ்வை ரசித்தபடி போனை வைத்தாள் .
 

SAROJINI

Author
Author
#3
இரவு சரியாக பதினோரு மணி ஏழு நிமிடத்திற்கு வந்த ரகுநந்தனின் வரவைச் சொன்ன அவனது BMW சத்தத்தில், அதுவரை அவனுக்காக உண்ணாமல், உறங்காமல் காத்திருந்த பெண்ணவள் அவளது அறையிலிருந்து ஓடி வந்தாள் வாயிலுக்கு,

“ஏய்... என்ன இன்னும் நீ தூங்கலயா?”

“கை, கால் அலம்பிட்டு சாப்பிட வாங்க”

“எடுத்து வச்சுட்டு போயி படுக்க வேண்டியது தான.....”

சத்தமில்லாமல் அடுக்களைக்குள் செல்லும் மனைவியைக் கண்டு, சத்தமில்லாமல் பின்னே வந்தவன் அவளது இடக்கையை பிடித்து நிறுத்தினான்.

திரும்பியவள், கணவனையும் அவளது கையை அவன் விடாமல் பற்றி இருப்பதையும் மாறி மாறி பார்த்தவாறு

“எடுத்து வைக்க தெரியாம தான் இருந்துட்டேன், அடுத்த தடவை எடுத்து வைக்கிறேன், இப்போ என் கைய விட்டுட்டு கை கால் அலம்புங்க போங்க”

“உத்தரவு மகாராணி”, என்று சிரித்தவாறு போனவன் விரைவில் உண்ண வந்து அமர்ந்தான்.

அவனுக்கு உணவை தந்தவள், தட்டில் உணவுடன் வந்து அவனருகில் அமர்ந்தாள்.

“நீ இன்னும் சாப்டலயா?”

பேசாமல் உணவில் கவனம் செலுத்தியவளை, அதற்குமேல் பேசி துன்புறுத்தாமல் உண்டு எழுந்தான்.அடுக்களையை சீராக்கியவள், வாயிற்கதவுகளை சரி பார்த்து பூட்டிவிட்டு அவனது அறைக்குள் சென்றாள்.

இதுவரை, அவனுடைய அறையுடன் இணைந்து இருக்கும் (அவளது)அறையில் உறங்குபவள், இன்று அவனுடைய அறையில் இருக்கும் படுக்கையில் படுத்துவிட்டாள்.டிவியில் சிறிது நேரம் நியூஸ் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவனின் கண்களில், இரவு நேர விளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய படுக்கையில் படுத்திருக்கும் வதனியைக் கண்டான்.

“ஏஞ்சல்!”

“பேபி டால்!”

“பொண்டாட்டி!”

எதற்கும் சத்தம் வராமல் இருக்கவே, அதற்குள்ளாகவா உறங்கி விட்டாள், இப்போது தானே அறைக்குள் வந்தாள் என யோசித்தபடி வந்து படுத்தான்.

சுவரைப் பார்த்தபடி படுத்திருக்கும் மனைவியின் வதனத்தை காண எழுந்த ஆசையினால், தன் பக்கமாக திருப்ப முயல,

உறங்குவது போல பாவனையில் இருப்பவளைக் கண்டு கொண்டான்.

சட்டென, அவளை அள்ளி எடுத்து, தன் மல்லார்ந்த அகன்ற மேனியை அவளுக்கு படுக்கையாக்கினான்.

பெண்ணவள் திமிர, தன் கைகளால் அவளின் தோள்பகுதியையும், அவன் கால்களால் அவனிடமிருந்து நழுவிய அவள் கால்களையும் சிறை செய்திருந்தான்.

“ஏஞ்சலுக்கு அத்தாங்கிட்ட என்ன கோவம்?”

“கோபமெல்லாம் இல்ல.....”

“அப்ப ஏன் சாப்டாம இருந்த இவ்ளோ நேரம்?”

“உங்களோட சாப்பிடத்தான்”

“இனி இப்டி லேட்டானா எனக்காக வயிட் பண்ணாத”

“வயிட் பண்றது என் இஷ்டம், அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் மிஸ்டர். ரகு”

“புருஷன பேர் சொல்லிக் கூப்பிடுற”

“கூப்டறதுக்கு தான பேரு வச்சிருக்காங்க”

“என் மாமியாருட்ட போயி சொல்லப் போறேன்”

“சொல்லுங்க.... எனக்கு ஒன்னும் பயமில்ல”

“பயங்கர வீராங்கனையா ஆகிட்டு வர போல”

“ஆமா, எங்கயாவது அடியாளு வேணும்னா என்னைய அனுப்பி காலி பண்ணிறாத ரகு”

“என்னடி இப்டியெல்லாம் பேசுற... இன்னிக்கு”

“நான் இன்னும் பேசுவேன்.... என்ன விட்டா நான் பெட்ல படுத்துப்பேன், என்னை கைதிய விட மோசமா கட்டி வச்சிருக்கீங்க, விடுங்க....”

“நீ திமிர்னதால அப்டி பண்ணேன்”, என்றபடி அவளை விடுவித்திருந்தான். ஆனால் படுக்கைக்கு வர எண்ணாதவளாய்,

அவளின் முகத்தைத் தாங்கிய இரு கைகளையும் அவனின் திரண்ட மார்பில் ஊன்றியவாறு இருந்தவளின் அழகிய வதனத்தை கண்டிருந்தவனிடம்

“என்ன பார்வை?”

“பார்க்கறக்கெல்லாம் ரீசன் சொல்லணுமா?”

“இருட்டுல மின்னுற கண்ணு தெரியுது, ஆனா என்னைப் பற்றி என்ன நினச்சு, எப்படி பார்க்குறீங்கனு பாக்க முடியல, அதான் கேட்டேன்”

“தூக்கம் வரலயா?”

“வந்துது..... ஆனா இங்க படுத்து பழக்கமில்லல.... அதான் படுத்தா தூக்கம் வர மாட்டிங்குது”

“தாலாட்டவா..... தூங்குறியா?”

“வேணாம்”

“என் ஏஞ்சலுக்கு வேற என்ன வேணும்?”

“ஒன்னும் வேணாம்”

“வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தமாம், உனக்கு தெரியுமா?”

“இத எந்த அரவேக்காடு சொல்லிச்சாம்?”

“ஏண்டி.... புருசன அரவேக்காடுனல்லாமா சொல்லுவ”

“எதையும் எங்கிட்ட ஸ்ட்ரைட்டா சொல்லுங்க.... இல்லனா இப்டி தான் டேமேஜ் ஆகிருவீங்க”

“உன்னை இப்ப இந்த அரவேக்காடு என்ன பண்ணுதுன்னு பாரு”, என்றபடி அவளை மேலிழுத்து இதழைச் சுவைத்திருந்தான். எதிர்பாரா தாக்குதலால் பெண் துவண்டிருந்தாள்.
 
Last edited:
#10
நயன மொழி நயன்தாரா மொழி சூப்பர்....க்கா...😅😅

அக்கா, தம்பி பாசம் அழகு....💙💙
ரகு அத்தான்...😍😍😘😘😘
 

Advertisements

Latest updates

Top