• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love::love::love::love::love::love::love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 12

3514.jpg
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 12



கண் மீதுல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பார்க்கும் திசையில் வீசும் போது
நமக்குனு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட


“வதனி....” எனும் ரகுநந்தனின் அழைப்பில், அவன் மடியில் இருந்து எழுந்தவளை விடாமல், அமர வைத்து இருகைகளுக்குள் அவள் இருக்குமாறு அணைத்திருந்தான்.

அவனழைப்பில் இளகிய நெஞ்சம் பதில் பேச நினைக்க, அவன் அணைப்பு அவளின் இந்திரியங்களுடன் இன்னிசை மீட்ட, வெட்கத்துடன் “ம்” என்றாள்.

“சிடுமூஞ்சினு என்ன நீ போன்ல சேவ் பண்ணி வச்சிருக்கறத பாத்து, நான் தான் கோவபடணும், இல்ல பேசனும்....

ஆனா நீ எங்கூட பேசாம.... ரூம்ல போயி படுத்தா என்ன அர்த்தம்.....ம்....” , என அவளின் காதருகே வந்து, அவன் பேச

அவள் காதுமடலைத் தீண்டிய, அவனுடைய மீசையின் குறுகுறுப்பில் சிலிர்த்தவள், செல்லம் கொஞ்சும் குரலில், “அத மாத்திட்டேன்....அப்பவே”, என்றாள்.

“அட சொல்லவே இல்ல..... என்னனு மாத்திருக்கா.....”

“PM னு மாத்திட்டேன்”

“பாசக்கார மச்சானா?”

“இல்ல.....” ‘அட அப்டி கூட வச்சுக்கலாம்ல...’

“ரகுநந்தன்ற பேரு உனக்கு பிடிக்கலயா?”

“பிடிக்குமே!”, என இலகு குரலில் கூறியவள், அவன் மடியிலிருந்து எழ முற்பட....

“உக்காரு வதனா.....”, ஏக்கமான மெல்லிய குரலில் அவளை இறுக அணைத்தபடி அவன் கூற

“உங்கள பாக்க முடியல.... அதான்...”

“அவ்வளவு மோசமாவா இருக்கேன்....”, என கிண்டல் குரலில் சிரித்தபடி அவளைச் சீண்ட......

“போங்க.....”

“இப்பதான் பக்கத்துலயே வர ஆரம்பிச்சுருக்கேன்..... உடனே..... போங்குற.....”

“அத்தான்......ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க......”

“பொண்டாட்டிய கிண்டல் பண்ணாம வேற யாரப் பண்றது..?”

“நான் அழுதுருவேன்.....”, என வடிவேல் பாணியில் அவள் கூற, அவன் சிரித்தபடியே.....

“இப்பொ தான் ஃபர்ஸ்ட் டைம் அத்தான்னு சொல்ற”, என்றவன் அவளது ஒரு புற கன்னத்தில், அழுந்த தன் முதல் இதழ் பதித்தலை செவ்வனே செய்திருந்தான், அவள் கன்னச் சிவப்புடன்..... தவித்திருந்தாள்.

மச்சான் என அழைத்து வந்தவள், திருமணத்திற்கு பிறகு அவனிடம் இலகுவாக பேசாமல் சற்று விலகியே இருந்தாள். அதனால் அவனை அழைத்தது இல்லை. இன்றுதான், அவளுக்கு அதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தான்.

“சரி விசயத்துக்கு வரேன்..... கமிங் சாட்டர்டே.... திருச்சி கஜலக்ஷ்மி ஹோட்டல், தங்கம் கிராண்ட் ஹால்ல உன்னோட ஃப்ரண்ட்ஸ், கொலீக்ஸ், சென்னை, திருச்சி ப்ரான்ஞ் நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃப் எல்லாருக்கும், ஒரு பார்ட்டி ஆஃப்டர்னூன் லன்ச்சோட அரேன்ஞ் பண்ணிருக்கேன்..... உன் சைட்ல எத்ன பேரு வருவாங்கனு பாத்து சொல்றியா?”

“ம்...”, என்றாள்

“உனக்கு ட்ரெஸ் எதாவது வாங்கணும்னா இன்னிக்கு போயி வாங்கிட்டு வந்திரலாமா?”

“இல்ல....நாளைக்கு போவோம்....., உங்களுக்கு நாளைக்கு வேல எதுவும் இருக்கா?”

“இல்ல..... , இன்னிக்கு எல்லாம் முடிச்சிட்டேன்...., பார்ட்டிக்கு எத்ன பேரு வருவாங்கனு சொன்னா, நம்ம ஸ்டாஃபே எல்லாம் பாத்துப்பாங்க.....

என் மொபைல்ல... பார்ட்டி கார்ட் டிசைன் பண்ணிருக்கேன்..... உனக்கு அனுப்பி விடுறேன்..... யாருக்கெல்லாம் நீ சொல்லணுமோ..... சொல்லு.... அனுப்பறதுனாலும் அனுப்பு”, என்றவாறு, ஒரு கையால் அவளை அணைத்தபடி, மறுகையால் அவளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கார்டை செண்ட் செய்தான்.

“அத்தான்..... நான் இப்டி இருந்தா எப்டி ஃப்ரண்ட்ஸ்கு இன்வைட் பண்ணுவேன்...”

அவளின் வசதிக்காக அவன் மடியிலிருந்த அவளை, அவனருகில் அமர வைத்தவன், அவன் வசதிக்காக அருகில் அமர்ந்திருந்தவளின் தோளை ஒரு கையால் அணைத்தவாறு, “கேரி ஆன்.....”, என்றபடி மறுகையில் இருந்த அவனது மொபைலில் மூழ்கினான்.


வதனி, அவளின் பள்ளி, கல்லூரி பருவ நெருங்கிய தோழமைகள் மற்றும் ஹாஸ்டலில் இருக்கும்போது நல்ல பழக்கமானவர்கள் என எண்பது நபர்களை இன்வைட் செய்து விட்டு, ரகுவிடம் கூறினாள்.

ரகுவின் இரு அலுவலகங்கள் சார்பில் நானூறு நபர்களை அழைத்திருந்தான்.


அடுத்த நாள் அவளுக்கு தேவையானவற்றை எடுத்தவன், அவனுக்கும் வேண்டியதை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, மதிய உணவிற்குபின் மூவிக்கு செல்லலாம எனக் கேட்டான்.

அவளின் முகம் சொன்ன செய்தியை, அவள் கூறும் முன் உணர்ந்தவன், வீட்டிற்கு அவளுடன் திரும்பிவிட்டான்.



ஃபுல் ஸ்லீவ் ஜோத்புரி ட்ரெடிஷனல் ஷூட்டில் ரகுநந்தனும், டொமட்டோ ரெட் நிற ஷிஃபான் ப்ராஸ்ஸோ டிசைனர் சாரியில் சந்திரவதனியும் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்தனர்.

அவளின் மலர்ந்த முகமே, அந்நிகழ்ச்சி பற்றிய அவளின் நிறைவைச் சொன்னது, அவனுக்கு.



அடுத்த நாள் ஊருக்கு செல்லலாம் என ரகு கூறியதை நினைத்தவளுக்கு, அதற்குள் நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை என எண்ணினாள் .

சிறுகனூரில் ரகுவுடன் தங்கியிருந்ததை அவள் மிகவும் ரசித்திருந்தாள். அங்கு குடியிருக்கும் ஆவல் மனதில் தோன்றியது. ஆனால், ரகுவிடம் இது சம்பந்தமாக மூச்சு விடவில்லை.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மாலையில் இருவருக்கும் டீ போட கிச்சனுக்குள் சென்றவள், அன்றைய தினத்திற்கு தேவையான காய்கறி, உணவுப்பொருட்கள் தவிர அதிகமாக இருப்பதை செண்பகத்திடம் எடுத்துக் கொள்ளுமாறு கூற எண்ணியவளாய், செண்பகத்திற்கு கால் செய்தாள். ரிங்க் போனது....

அந்த நேரம் அங்கு வந்த ரகு,

“மை ஏஞ்சல்...... என்ன பண்ணுது.....”

“டீ போடுறேன்....” என ரகுவிடம் சொன்னவள், “ஹலோ செண்பா, வீட்டுக்கு வரியா கொஞ்சம்.....?”, என போனில் பேசியவாறு, அங்கிருந்த எக்சஸ் திங்க்ஸ்ஸை ஒரு பேக்கில் எடுத்து வைத்தாள்.

செண்பகம் வந்தவுடன் ஹாலுக்கு சென்ற ரகு, மனைவியை பார்த்தவாறு அவள் கொடுத்த டீயைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“நைட்டுக்கு மாவு இருக்காம்மா... எதுவும் செய்யனுமா?”

“ம்.... மாவு இருக்கு.... நான் சட்னி வச்சிக்குறேன்....”

“நாளைக்கு எத்ன மணிக்கு ஊருக்கு போறீங்க?”

“காலைல கிளம்பிருவோம் செண்பா.....”

“காலைல சாப்ட எதுவும் வந்து செஞ்சு தரவாம்மா....”

“இல்ல இயர்லியரா கிளம்பறதால போற வழில பாத்துக்குறோம்...”

“அப்ப நான் கிளம்பவாம்மா....?”

“சரி நீ கிளம்பு...., இந்த காயெல்லாம் எடுத்துட்டு போயிறு, இட்லி மாவு மிச்சமிருக்கு பாத்திரத்துல... அதயும் எடுத்துக்கோ”

வதனி கொடுத்ததை வாங்கிய செண்பகம் அவள் கொடுத்தை வாங்கியபடி அங்கிருந்து கிளம்பினாள்.

சிறுகனூர் வந்த மறுநாள் முதல், இருவருக்கும் தானே சமையல் செய்து கொள்வதாகக் கூறியதோடு, அவளே அதை இன்று வரை செய்தாள்.

மளிகை பொருட்கள் வாங்குவது, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பெருக்குவது போன்ற வேலைகளை மட்டும் செண்பகத்திடம் ஒப்படைத்து இருந்தாள்.



கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தவளின் அருகில் வந்தமர்ந்த ரகு,

“திங்க்ஸ் எல்லாம் வேணும்கிறத எடுத்து வச்சிரு....”

“எடுத்து வச்சுட்டேன்”

“காலைல இயர்லியரா கிளம்பினா பதினோரு மணிக்கெல்லாம் அங்க போயிரலாம்... சீக்கிரம் எழுந்திருவியா?”

“என் மாமியார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அவங்க தங்கம்.... ஆனா உங்க மாமியாரு வர்ஸ்ட்.... லேட்டானா.... முதல்ல என்கொயரி, அப்றமா..... பயங்கர அட்வைஸ் ...... அப்டினு நான் கஷ்டபடுறதுக்கு.... சீக்கிரமா கிளம்பி....... காருல தூங்கிட்டே வந்துக்குவேன்”, என்றாள் முகத்தை சோகமாக வைத்தபடி.

சிரித்தவன், “ஏன் சொல்ல மாட்ட.... அவ்ளோ தானா.... இல்ல.... இன்னும் எங்க மாமியார் பத்தி..... எதுவும் இருக்கா....?”

“அப்பப்போ கருத்து சொல்லுவோம், அத கருத்தா... நோட் பண்ணிக்கனும்.... அத விட்டுட்டு..... இப்டி மொத்தமா கேட்டா.... சொல்ல முடியாது....”, என சிரித்தபடி அவள் கூற....

அவனுக்கும் அவளின் பேச்சு சிரிப்பை உண்டு செய்ய, வாய் விட்டு சிரித்தான்.

“சரியான கேடி டி நீ....”

“அப்டினா....”

“ம்.... அப்டிதான் கண்டுபிடி.....”

“ஆராய்ச்சில்லாம் எனக்கு அலர்ஜினு தான், நான் ஆர்ட்ஸ் எடுத்து படிச்சேன்..... சமூகம் என்ன கண்டு புடிங்குது.... நான் என்ன செய்வேன்...?”

“இப்டி பேசுனா ..... உன்ன விட்ருவோம்னு நினச்சியா.... அதெல்லாம் விடமாட்டோம்.... கண்டு பிடிக்கிற......”

“கரண்டினா புடிப்பேன்..... இந்த கண்டு பிடிக்கறதெல்லாம் எனக்கு தெரியாது”

“உன்ன இப்போ விடணும்னா.... PM னா என்னனு சொல்லு.... விட்டுறேன்”

“புன்னகை மன்ன னத்தான்.....PM னு சொன்னேன்” , என்றாள் புன்னகைத்தபடி....

“நீ ஏன் நேம ஸ்டோர் பண்ண மாட்டிங்கற.....”

“நேம் ஸ்டோர் பண்ணுவேன்.....ஆனா ரொம்ப க்ளோசானவங்க, இரிட்டேட் பண்றவங்க, இவங்களுக்கு மட்டும் நிக் நேம் வச்சு அத ஸ்டோர் பண்ணி வச்சுக்குவேன்”

“அப்ப நான் இரிட்டேட் லிஸ்ட்ல தான இருந்திருப்பேன்”

“ம்...ம்... அது முன்னாடி”, என்றாள்

“ஏண்டி.... அப்டி என்ன பண்ணுனேன்... உன்ன?”

“சொன்னா நீங்க என்ன பத்தி என்ன நினப்பீங்க...?... அதனால விட்ருவோம்”

“சும்மா சொல்லு....”

“வால் தாண்டி குதிச்சத பாத்துட்டு..... என்ன ரொம்ப சத்தம் போட்டீங்க ஒருநாள், அப்றம் சின்ன பசங்களோட நான் விளையாடும் போது அவங்க முன்னாடியே.... அவங்க கூட விளையாடற வயசா உனக்குனு, சத்தம் போட்டீங்க... அப்ப முகத்த.... சிடுசிடுன்னு வச்சிட்டு பேசுனதால தான் உங்களுக்கு அப்டி நிக் நேம் வைக்க வேண்டியதா போச்சு....”, என்றாள் சீரியசாக....

“இப்ப தான் பொறுப்பாகிட்டியே!”

“உங்கள கல்யாணம் பண்ணதில்ல இருந்து, கீத் எனக்கு செம ட்ரைனிங் குடுத்துட்டே இருக்காங்கள்ள..... அதான்.... ரொம்ப மாறிட்டு வரேன்.....”, என்றாள்

“அங்க வீட்ல தன்யா இருக்கா.... தெரியுமா...?”

“ம்.... அம்மா அன்னிக்கு பேசும்போது சொன்னாங்க....”

“வேற என்ன சொன்னாங்க?”

“பொறுப்பா நடக்கணும், பெரியவங்கள அனுசரிச்சு போகனும்னு.... இப்டி இன்னும் நிறைய சொன்னாங்க......, எதுக்கு கேக்குறீங்க”

“இல்ல.... நான் ஒன்னு கேப்பேன்.... மறைக்காம.... உண்மைய சொல்லணும்.... சொல்லுவியா...?”

“எத பத்தி....?”

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அப்பத்தா உங்கிட்ட என்ன கேட்டாங்கனு சொல்லு?”

சற்று முகம் மாறியவள்,

“கண்டிப்பா சொல்லணுமா?”

“ஆமா”, என ரகு கூற, தயங்கியபடி சொல்ல ஆரம்பித்தாள் வதனி.



ராஜத்தின் கேள்வியால், எழுந்து நின்று யோசித்தவாறு .... நிதானித்தவள், எதிரில் அமர்ந்திருந்த ராஜத்தின் எதிர்பார்ப்பு மிகுந்த பார்வையைக் கண்டாள்,

“அம்மாச்சி ரெண்டு நாள்ல கல்யாணம்..... உடம்புக்கு ஏதும் உங்களுக்கு பிரச்சனையா?”, என்னன்னவோ பேசுறீங்க”, என அவரின் அருகில் சென்று தொட்டுப் பார்த்தாள்.

“நீ பேச்ச மாத்தாத....”

“நான் பேச்ச மாத்தல..... நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க முதல்ல... அப்புறம் நான் சொல்றேன்.... அந்த பொண்ணு என்னாச்சு......”

ராஜம், சென்னை சென்று காதம்பரியை மருத்துவமனையில் நேரில் கண்டது, மருத்துவர்களிடம் விசாரித்தது என எல்லாவற்றையும் கூறினார்.

“அப்பொ கல்யாணத்த நிறுத்த வேண்டியது தான...”, என்றவளின் வாயை அவசரமாக மூடிய ராஜம்....

“நிறுத்திரலாம்.... நீ மாட்டனு சொல்லிட்டா...”, என்றார்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சரோ டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top