நிலவைக் கொண்டு வா - 8

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,:love::love::love::love:

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 8

3514.jpg
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
நிலவைக் கொண்டு வா – 8கனவு காணும் வாழ்க்கையாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று

தரையைத் தேடும் ஓடங்கள்சிவகங்கையில் இருந்து கிளம்பிய மனோகரிக்கு, தனது மகனின் குரலில் இருந்த செய்தி சற்று கிலியை உண்டாக்கினாலும் யாரிடமும் இது பற்றி தெரிவிக்காமல், காலையில் சென்னை வந்து மகனுக்கு அழைத்தார்.

மகனின் தோற்றமே அவருக்கு பல செய்திகளைச் சொன்னது. ஆனால் பேசாமல் மருத்துவமனைக்கு வந்து கமலத்திடம் விசயங்களை கேட்டறிந்தார். எதையும் மறைக்காமல் மனோகரிடம் கூறிவிட்டு, அப்படியே அங்கு வேதனையோடு அவரின் அருகில் அமர்ந்தவர், அவரின் மடியில் முகம் புதைத்து சத்தம் வராமல் கதறினார்.

“அத்த.... நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் நினச்சதில்லயே..... என் பொண்ணு ரெண்டு நாளா கண்ணே தொறக்கலயே.......எதுக்கு அவ இப்டி கஷ்டபடுறா.... எனக்கு பயமா இருக்குத்த..........”, என்றவாறு கதறியவரை தேற்ற வழி தெரியாமல், விழிநிறைந்த நீருடன்..... இறைவா.... என்ன சோதனை.....என அமர்ந்திருந்தார்.

மகனிடம், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என விசாரித்தார்.

“பிளட் டெஸ்ட்ல இருந்து, ஃபுல் பாடி ஸ்கேன் வர செஞ்சுட்டாங்கம்மா...... எல்லாமே நார்மலா இருக்காம்...... அதுல எந்த பிரச்சனையும் இல்ல..... அப்டினு சொல்றாங்க......”

“வேற என்னதான் நடந்தது?”

“எங்களுக்கும் தெரியலயேம்மா....”

“அவ அன்னைக்கு எங்க கூட பேசவே இல்ல.... சாப்டவுடனே படுக்க போயிட்டா..... நாங்களும் அவளுக்கு அசதினு விட்டுடோமா.... ஆனா ஃபிலைட்ல ஏற முன்னே எப்பவும் போல தான் பேசுனா...”, என தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து கதறினார்.

“காலைல எப்பவும் சீக்கிரமா எழறவ எழுந்துக்கலனு அவ அம்மா தான் எழுப்ப போனா..... அப்பவே.... பேச்சில்ல..... கண்ணு கூட திறக்கல..... ஆனா கண்ணுல இருந்து தண்ணியா வந்துதுமா...... அப்போ இருந்து ஐசியு ல தான் இருக்கா.....”

“தைரியமா இருய்யா..... எல்லாம் சரியாகிரும்”

இரண்டு நாட்களாக பசி என்ற உணர்வில்லாமல் இருவரும் இருக்க, மனோகரி இருவரிடமும்.... “புள்ளய பாக்க தெம்பு வேணும், காபித் தண்ணீயாவது குடிங்க...இப்டி உக்காந்து இருக்காதிங்க”

“பசிக்கல” , என இருவரும் கூற..... சிதம்பரத்தின் போன் அழைத்தது. எடுத்துப்பார்த்தார், சற்றே பதற்றமடைந்தவர்...... தன் தாயிடம் வந்து.....

“அம்மா ..... மாப்பிள்ள வீட்ல பேசுறாங்கம்மா.....”

“இங்க தா நான் பேசுறேன்......”, என வாங்கியவர்

“அலொ....நான் மனோகரி பேசுறேன்....”

“சின்னம்மா.... நான் துர்கா பேசுறேன்..... மதினி போனு ஸுட்சாப்பா இருக்கு.... அதேன்... அண்ணனுக்கு கூப்டேன்.... நீங்க எப்பொ வந்தீங்க”

“நான் இன்னிக்கு காலைல தான் வந்தேன் தாயி”

“செங்கல்பட்டுலயும், காஞ்சிபுரத்துலயும் பத்திரிக்கை குடுக்காம இருந்துது, அதான் நானும், அவரும் பத்திரிக்கை குடுத்துட்டு உங்கள எல்லாத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு போன் பண்ணேன், சின்னம்மா”

“வேற யாரும் கூட வந்துருக்காகலா”

“இல்ல சின்னம்மா.... ஏன் கேக்குறீங்க?”

“சிதம்பரத்திட்ட போன குடுக்குறேன், அவன் சொல்ற இடத்துக்கு வந்துட்டு போங்க தாயி”, என்றவாறு மகனிடம் கொடுக்க, அவரும் மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு பிரபல கடையில் அனைவரும் இருப்பதால் அங்கு வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு போனை வைத்தார்.“அம்மா.... இப்போ என்ன செய்யம்மா?”

“கமலா இங்க இருக்கட்டும்..... நம்ம ரெண்டு பேரும் போயி பாத்துட்டு வருவோம்”

“அவங்க என்ன நினைப்பாங்கம்மா.....”

“நீ அவ ஊருக்கு போயிட்டு வந்தத எதுவும் சொல்லாத...... நான் பேசுறேன்.... பாப்போம்”இருவரின் தோற்றத்தினை கண்டவுடன்...... அருகில் வந்த இருவரும்

“கமலாவுக்கென்ன .....?”, என ஹரிகிருஷ்ணன் பதற, அதே நேரம்,

“மதினிக்கென்ன....?”, என துர்கா பதற......மனோகரி சற்று தயங்கத்துடன்.....காதம்பரியை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதையும், கடந்த ஒன்றரை நாளில் நடந்த அனைத்தையும் கூறிவிட்டார்.

இருவரும் மிகவும் அதிர்ந்து

“எந்த ஹாஸ்பிடல்”

மருத்துவமனையின் பெயரைச் சொன்னவுடன் இருவரும் அவளை காண வேண்டும் எனக்கூற..... இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவர்களைச் சந்தித்து பேசினர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மறக்காமல் அழைக்குமாறு கூறிவிட்டு மாலையில் சென்னையில் உள்ள அவர்களது பிளாட்டிற்கு சென்றனர்.

ஹரிகிருஷ்ணன் தனது தாய் ராஜமனோகரியை அழைத்து சுருக்கமாக விபரம் சொன்னார்.

சற்று நிதானமாக கேட்ட ராஜம்....., அன்று இரவு தான் கிளம்பி சென்னை வருவதாகவும், அவர்கள் இருவரையும் அன்று இரவு கிளம்பி ஊருக்கு வருமாறும் கூறிவிட்டு வைத்துவிட்டார்.

சரியாக இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே திருமணத்திற்கு உள்ள நிலையில்..... சற்று நேரம் யோசித்தபடி இருந்தவர்...... வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி பகிராமல், பேரன்களிடம் சென்னை செல்ல வண்டி ஏற்பாடு செய்ய சொல்லி.... வண்டி வந்ததும், தனது துணைக்கு மகள் கீதாஞ்சலியை உடன் அழைத்தபடி கிளம்பிவிட்டார்.

வீட்டில் திருமணத்திற்கான வேலைகள் எந்த சுணக்கமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. நெருங்கிய சொந்தங்கள் சிலர் வந்திருந்ததால் வீடு பரபரப்புடன் இருந்தது.சென்னை சென்ற ராஜம், நேராக மருத்துவமனைக்கு சென்று, அங்கு மனோகரியை கண்டு கண் கலங்கினார். பிறகு வெண்டிலேசனில் இருந்த காதம்பரியை சென்று பார்த்தார். அன்று மாலை வரை அங்கிருந்தவர், மனோகரியை அழைத்து பேசினார். பிறகு மருத்துவர்களை சந்தித்து தனது சந்தேகங்களைக் கேட்டவர், எந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும் மருத்துவர்களிடமிருந்து வராததால்...... அங்கிருந்து கிளம்பி விட்டார் மற்றவர்களிடமும் விடைபெற்று.
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#4
அவர்களின் பிளாட்டில் வந்து சற்று நேரம் இருந்துவிட்டு, இரவு உணவுக்குப்பின் ஊருக்கு கிளம்பிவிட்டார்.அடுத்த நாள் காலையில் ஊருக்கு வந்தவர், பத்து மணி வாக்கில் சனவேலி எனும் ஊரில் உள்ள ஜோதிடரை காணச் சென்றார்.

மாலை வீடு திரும்பியவர், முதலில் தனது ப்ரியத்திற்குரிய பேரனான ரகுநந்தனை அவரின் அறைக்கு வருமாறு கூறினார்.

“அப்பத்தா.... என்ன கூப்டீங்களா?”

“ஆமாயா.......”

“என்ன விசயம் அப்பத்தா?”

“இப்போ கல்யாணம் வேணா...... இன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ சொன்னத இந்த கிழவி கேக்கல...... என்னோட வற்புறுத்தலால.... சரினு சொன்ன.... ஆனா இந்த ஆத்தா உனக்கு என்ன செஞ்சாலும்.... அது உன் நல்லதுக்கு தானு உனக்கு புரியுதுலயா”

“என்னப்பத்தா.... இன்னிக்கு ஏதேதோ பேசிட்டு...”

“கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாளு தான்யா இருக்கு”

“ஆமா அப்பத்தா..... அதுக்கென்ன?”

“பொண்ணு நாம முன்ன பார்த்தது இல்ல..... இனி தான் உனக்கு பாக்க போறேன்..... பாத்துட்டு சொல்றேன்..... ஆனா பொண்ணு மட்டும் மாறிருச்சுயா..... குறிச்ச தேதில... குறிச்ச நேரத்துல உன் கல்யாணம் நடக்கும்யா..... இந்த ஆத்தாவ மன்னிச்சிருயா.....”, என கண் கலங்கியபடி கையை எடுத்து பேரனை நோக்கி கும்பிட்டார்....

அவரின் செயலால் பதறியவன் ..... “எனக்கு நீங்க யாரப் பாத்திங்கனாலும் சரி அப்பத்தா...... ஆனா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்குதானு மட்டும் விசாரிச்சிருங்கப்பத்தா.....” என்றவன்

“மன்னிக்கற அளவுக்கு நீங்க எனக்கு கெடுதலா நினைப்பீங்க.... சின்ன வயசுல இருந்து எங்களுக்கு பாத்து... பாத்து செய்வீங்க..... அதுனால, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அப்பத்தா”, என்றவன் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

பேரனின் நம்பிக்கையை காப்பாற்ற...... யோசித்தார். அதன் பிறகு அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை அவர்.அடுத்த நாள் , தனது மகன், மருமகளை அழைத்துப் பேசினார்.

இரு மகள்களையும் அவரவர் கணவர்களுடன் தனித்தனியே அழைத்துப் பேசினார்.

அதோடு அவரின் அறைக்குள் சென்றவர், இரவில் மூத்த பேரனை அழைத்து

“விக்ரமா........நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டியும் திருச்சி போகணும்....”

“சரி அப்பத்தா”

“அங்க நம்ம சந்திராவ கூப்டுட்டு ..... உடனே கிளம்பி வரணும்..”

“வேற..... எதுவும் சொல்லணுமா அப்பத்தா?”

“இல்லயா.....”

“என்னப்பத்தா.... உடம்புக்கு முடியலயா?”

“நல்லா இருக்கேன்யா..... எனக்கென்ன?”

“பாத்தா உடம்பு முடியாத மாதிரி இருக்கீங்க”

“இல்ல..... ஒன்னுமில்ல..... நீ ஊர்வசிகிட்ட இப்பவே சொல்லிரு....மறந்துராத......”, என அவனை அனுப்பிவிட்டார்.கீதாஞ்சலி காலையில் தனது மகளுக்கு கால் செய்து பேசினார்.

“என்னம்மா...... அண்ண மகன் கல்யாணத்துக்கு போன உனக்கு ஏன் ஞாபகமெல்லாம் இருக்கா ஆச்சரியமா இருக்கு”

“நாளைக்கு கிளம்பி இங்க வந்துரியா....”

“ஏன்..... ஏன்..... அதெல்லாம் முடியாது..... நாள மறுநாளே வந்துக்கறேன்”

“அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல..... அதான்.... நாளைக்கு கிளம்பற மாதிரி பாத்துக்கோ”

“ஏன்மா ....என்ன செய்யுது?”

“நீ நேரில வந்து பாத்துக்கோ”

அதற்கு மேல் பேசாமல், அவளிடம் மதியம் அவளை பிக் அப் பண்ண விக்ரமன் வருவதாக கூறி வைத்துவிட்டார்.மறுநாள் திருச்சி சென்று அழைத்து வரும் போது, முதலில் ராஜத்தை பற்றி விசாரித்தாள். பயப்படும்படி எதுவும் இல்லையென விக்ரமன் கூறியபின், வழியெல்லாம் ஊர்வசியுடன் பேசி சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வதனி.

இரவு வீட்டிற்கு வந்தவளை, கீதா குளித்துவிட்டு வந்து உணவு உண்ணுமாறு கூறினார். வீட்டில் கல்யாண வேலைகள் ஒருபுறம் நடக்க, வீட்டின் முக்கிய தலைகள் யாரையும் ஏன் காணவில்லை என யோசித்தபடி.....

குளித்து, உண்டு முடித்தபின் “அம்மாச்சி உன்ன பாக்க கூப்பிடுறாங்க” என கீதா கூற.....

‘என்ன .... எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு...... விக்ரம் மச்சான், ஆதி மச்சான் கல்யாணத்துல இருந்த.... ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே....’ என யோசித்தபடி ராஜமனோகரியை சந்திக்கச் சென்றாள், வதனி.“அம்மாச்சி......”

“உள்ள வா சந்திரா......”

உள்ளே யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.... என எண்ணியவாறு வந்தவளுக்கு, உள்ளே இருந்தவனை பார்த்ததும்...... ‘அட.... மாப்பிள்ள மன்னாரு நீரு இங்கதான் இருக்குறீரா!’ என நினைத்தபடி,

“அம்மாச்சி உங்களுக்கு முடியலனு அம்மா சொன்னாங்க..... என்ன செய்யுது” , எனக் கேட்டவாறு உள்ளே வந்தாள்.

“என்ன செய்யுது..... நல்லா தான் இருக்கேன்....”, அந்த குரலே சொன்னது நான் நன்றாக இல்லையென....

“ஹாஸ்பிடல் போனீங்களா?”

“போவோம்....... சரி அத விடு...... பயணமெல்லாம்.... நல்லா இருந்ததா?”

‘அட..... லேடி கிங்கு.... பேச்ச மாத்துது....!’

“அதுக்கென்ன.... நல்லா இருந்தது.....”

“படிப்பெல்லாம் எப்டி தாயி போகுது”

“அதுவா...... இப்போ ட்ரைனிங் பீரியட்.... அப்றம் ஃபைனல் எக்ஷாம்.... அப்டினு இன்னும் ரெண்டு, ரெண்டரை வருஷம் இருக்கு அம்மாச்சி”

அது வரை அமைதியாக இருவரின் சம்பாசனைகளை கேட்டுக்கொண்டிருந்தவன், எழுந்தான்.

“நான் கிளம்பவா .....”

“சரியா..... நீ கிளம்பு.... அப்றம் ஆத்தா கூப்டுறேன்”

அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், சந்திரவதனியிடம் திரும்பினார்.

“இந்த அம்மாச்சிக்கு ஒரு ஆச....... அத நான் உங்கிட்ட கேட்டா நிறைவேத்துவியா?”

“உங்களுக்கு இந்த வயசுல என்ன ஆச அம்மாச்சி....சொல்லுங்க..... முடிஞ்சா கண்டிப்பா நிறைவேத்துவேன்”

“நீ மனசு வச்சா நடக்கும்.... உன்னால மட்டும் தான் முடியும்”

“சரி, மனசு வைக்கிறேன்.... சொல்லுங்க”

“நிசமா....சொன்ன பின்ன முடியாதுனு சொல்லக்கூடாது?”

“நிஜமாத்தான்.... அம்மாச்சி....”

“கண்டிப்பா.....”

“கண்டிப்பா செய்யுறேன்”

“ஏன் பேரன்...... ரகுவ கல்யாணம் பண்ணிக்கிறியா?”

எதிர்பாரா இந்தக் கேள்வியால்........ அமர்ந்திருந்தவள்.... எழுந்து நின்றாள்.....

‘நம்ம காதுல.... எதோ.... ப்ராப்ளமா.... இல்ல அடச்சிருக்கோ..... இவ்வளவு நேரம் நல்லா தான் கேட்டுது.......’ என எண்ணியவாறு.....
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#7
காதம்பரி கதாபாத்திரம் மட்டும் நிஜத்தில் வாழ்ந்து மறைந்த, காணக்கிடைக்காத அற்புதம். அவளை மிகைப்படுத்தவில்லை, ஆனால் குறைவாகவே அவளின் பண்புகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
காதம்பரி கதாபாத்திரம் மட்டும் நிஜத்தில் வாழ்ந்து மறைந்த, காணக்கிடைக்காத அற்புதம். அவளை மிகைப்படுத்தவில்லை, ஆனால் குறைவாகவே அவளின் பண்புகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அதிநவீன மருத்துவ துறைக்கும் சவாலான ஒரு விசயம் அவளின் மரணம். அவளின் மூளை தற்காலிகமாக தனது இயல்பான பணிகளைக் கவனிக்காமல் வேலை நிறுத்தம் செய்ததால் மறைந்தவள்.
Enna reason avloda brain deathkku... Idhukku fb yedhum Varuma..
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#10
அவர்களின் பிளாட்டில் வந்து சற்று நேரம் இருந்துவிட்டு, இரவு உணவுக்குப்பின் ஊருக்கு கிளம்பிவிட்டார்.அடுத்த நாள் காலையில் ஊருக்கு வந்தவர், பத்து மணி வாக்கில் சனவேலி எனும் ஊரில் உள்ள ஜோதிடரை காணச் சென்றார்.

மாலை வீடு திரும்பியவர், முதலில் தனது ப்ரியத்திற்குரிய பேரனான ரகுநந்தனை அவரின் அறைக்கு வருமாறு கூறினார்.

“அப்பத்தா.... என்ன கூப்டீங்களா?”

“ஆமாயா.......”

“என்ன விசயம் அப்பத்தா?”

“இப்போ கல்யாணம் வேணா...... இன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ சொன்னத இந்த கிழவி கேக்கல...... என்னோட வற்புறுத்தலால.... சரினு சொன்ன.... ஆனா இந்த ஆத்தா உனக்கு என்ன செஞ்சாலும்.... அது உன் நல்லதுக்கு தானு உனக்கு புரியுதுலயா”

“என்னப்பத்தா.... இன்னிக்கு ஏதேதோ பேசிட்டு...”

“கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாளு தான்யா இருக்கு”

“ஆமா அப்பத்தா..... அதுக்கென்ன?”

“பொண்ணு நாம முன்ன பார்த்தது இல்ல..... இனி தான் உனக்கு பாக்க போறேன்..... பாத்துட்டு சொல்றேன்..... ஆனா பொண்ணு மட்டும் மாறிருச்சுயா..... குறிச்ச தேதில... குறிச்ச நேரத்துல உன் கல்யாணம் நடக்கும்யா..... இந்த ஆத்தாவ மன்னிச்சிருயா.....”, என கண் கலங்கியபடி கையை எடுத்து பேரனை நோக்கி கும்பிட்டார்....

அவரின் செயலால் பதறியவன் ..... “எனக்கு நீங்க யாரப் பாத்திங்கனாலும் சரி அப்பத்தா...... ஆனா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்குதானு மட்டும் விசாரிச்சிருங்கப்பத்தா.....” என்றவன்

“மன்னிக்கற அளவுக்கு நீங்க எனக்கு கெடுதலா நினைப்பீங்க.... சின்ன வயசுல இருந்து எங்களுக்கு பாத்து... பாத்து செய்வீங்க..... அதுனால, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அப்பத்தா”, என்றவன் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

பேரனின் நம்பிக்கையை காப்பாற்ற...... யோசித்தார். அதன் பிறகு அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை அவர்.அடுத்த நாள் , தனது மகன், மருமகளை அழைத்துப் பேசினார்.

இரு மகள்களையும் அவரவர் கணவர்களுடன் தனித்தனியே அழைத்துப் பேசினார்.

அதோடு அவரின் அறைக்குள் சென்றவர், இரவில் மூத்த பேரனை அழைத்து

“விக்ரமா........நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டியும் திருச்சி போகணும்....”

“சரி அப்பத்தா”

“அங்க நம்ம சந்திராவ கூப்டுட்டு ..... உடனே கிளம்பி வரணும்..”

“வேற..... எதுவும் சொல்லணுமா அப்பத்தா?”

“இல்லயா.....”

“என்னப்பத்தா.... உடம்புக்கு முடியலயா?”

“நல்லா இருக்கேன்யா..... எனக்கென்ன?”

“பாத்தா உடம்பு முடியாத மாதிரி இருக்கீங்க”

“இல்ல..... ஒன்னுமில்ல..... நீ ஊர்வசிகிட்ட இப்பவே சொல்லிரு....மறந்துராத......”, என அவனை அனுப்பிவிட்டார்.கீதாஞ்சலி காலையில் தனது மகளுக்கு கால் செய்து பேசினார்.

“என்னம்மா...... அண்ண மகன் கல்யாணத்துக்கு போன உனக்கு ஏன் ஞாபகமெல்லாம் இருக்கா ஆச்சரியமா இருக்கு”

“நாளைக்கு கிளம்பி இங்க வந்துரியா....”

“ஏன்..... ஏன்..... அதெல்லாம் முடியாது..... நாள மறுநாளே வந்துக்கறேன்”

“அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல..... அதான்.... நாளைக்கு கிளம்பற மாதிரி பாத்துக்கோ”

“ஏன்மா ....என்ன செய்யுது?”

“நீ நேரில வந்து பாத்துக்கோ”

அதற்கு மேல் பேசாமல், அவளிடம் மதியம் அவளை பிக் அப் பண்ண விக்ரமன் வருவதாக கூறி வைத்துவிட்டார்.மறுநாள் திருச்சி சென்று அழைத்து வரும் போது, முதலில் ராஜத்தை பற்றி விசாரித்தாள். பயப்படும்படி எதுவும் இல்லையென விக்ரமன் கூறியபின், வழியெல்லாம் ஊர்வசியுடன் பேசி சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வதனி.

இரவு வீட்டிற்கு வந்தவளை, கீதா குளித்துவிட்டு வந்து உணவு உண்ணுமாறு கூறினார். வீட்டில் கல்யாண வேலைகள் ஒருபுறம் நடக்க, வீட்டின் முக்கிய தலைகள் யாரையும் ஏன் காணவில்லை என யோசித்தபடி.....

குளித்து, உண்டு முடித்தபின் “அம்மாச்சி உன்ன பாக்க கூப்பிடுறாங்க” என கீதா கூற.....

‘என்ன .... எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு...... விக்ரம் மச்சான், ஆதி மச்சான் கல்யாணத்துல இருந்த.... ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே....’ என யோசித்தபடி ராஜமனோகரியை சந்திக்கச் சென்றாள், வதனி.“அம்மாச்சி......”

“உள்ள வா சந்திரா......”

உள்ளே யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.... என எண்ணியவாறு வந்தவளுக்கு, உள்ளே இருந்தவனை பார்த்ததும்...... ‘அட.... மாப்பிள்ள மன்னாரு நீரு இங்கதான் இருக்குறீரா!’ என நினைத்தபடி,

“அம்மாச்சி உங்களுக்கு முடியலனு அம்மா சொன்னாங்க..... என்ன செய்யுது” , எனக் கேட்டவாறு உள்ளே வந்தாள்.

“என்ன செய்யுது..... நல்லா தான் இருக்கேன்....”, அந்த குரலே சொன்னது நான் நன்றாக இல்லையென....

“ஹாஸ்பிடல் போனீங்களா?”

“போவோம்....... சரி அத விடு...... பயணமெல்லாம்.... நல்லா இருந்ததா?”

‘அட..... லேடி கிங்கு.... பேச்ச மாத்துது....!’

“அதுக்கென்ன.... நல்லா இருந்தது.....”

“படிப்பெல்லாம் எப்டி தாயி போகுது”

“அதுவா...... இப்போ ட்ரைனிங் பீரியட்.... அப்றம் ஃபைனல் எக்ஷாம்.... அப்டினு இன்னும் ரெண்டு, ரெண்டரை வருஷம் இருக்கு அம்மாச்சி”

அது வரை அமைதியாக இருவரின் சம்பாசனைகளை கேட்டுக்கொண்டிருந்தவன், எழுந்தான்.

“நான் கிளம்பவா .....”

“சரியா..... நீ கிளம்பு.... அப்றம் ஆத்தா கூப்டுறேன்”

அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், சந்திரவதனியிடம் திரும்பினார்.

“இந்த அம்மாச்சிக்கு ஒரு ஆச....... அத நான் உங்கிட்ட கேட்டா நிறைவேத்துவியா?”

“உங்களுக்கு இந்த வயசுல என்ன ஆச அம்மாச்சி....சொல்லுங்க..... முடிஞ்சா கண்டிப்பா நிறைவேத்துவேன்”

“நீ மனசு வச்சா நடக்கும்.... உன்னால மட்டும் தான் முடியும்”

“சரி, மனசு வைக்கிறேன்.... சொல்லுங்க”

“நிசமா....சொன்ன பின்ன முடியாதுனு சொல்லக்கூடாது?”

“நிஜமாத்தான்.... அம்மாச்சி....”

“கண்டிப்பா.....”

“கண்டிப்பா செய்யுறேன்”

“ஏன் பேரன்...... ரகுவ கல்யாணம் பண்ணிக்கிறியா?”

எதிர்பாரா இந்தக் கேள்வியால்........ அமர்ந்திருந்தவள்.... எழுந்து நின்றாள்.....

‘நம்ம காதுல.... எதோ.... ப்ராப்ளமா.... இல்ல அடச்சிருக்கோ..... இவ்வளவு நேரம் நல்லா தான் கேட்டுது.......’ என எண்ணியவாறு.....
சிடுமூஞ்சி தான் மாப்பிள்ளை யா...😛😃
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top