• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவொன்று கண்டேன் எனது கண்ணோட்டத்தில் ♥️♥️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கவிஞரை மறக்க முடியுமா....இல்ல மரவிட்டை மறக்க முடியுமா... இல்லை தொங்கு பாலத்தை மறக்க முடியுமா .... இல்ல காட்டுக்குள் நடை பயின்றதை மறக்க முடியுமா.... இல்ல வேட்டிய மடித்து கட்டி barbeque போட்டதை தான் மறக்க முடியுமா...

கவிதையாக ஒரு கதை... சமீபத்தில் கேட்ட ஒரு கவிதை இந்த சூழ்நிலைக்கு ரொம்பவே பொருந்தும் என்று நினைக்கிறேன் ....

மரத்தில் இருந்து உதிரும் இலை
காற்றின் வேகத்திற்கு சுழன்று சுழன்று நடனம் ஆடும்
ஆனால் அதை தொட்டால் நடனத்தை உணர முடியாது...

அப்படி தான் இந்த கதையை வாசிக்கும் போது ஒரு வித மயக்கம்... யவன தேறல் குடித்தது போன்ற மயக்கம் ஆனால் எதனால் இந்த மயக்கம் என்று ஆராய்ச்சி பண்ண சொல்ல முடியாது.. புலன் அறிய முடியாத போதை... மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தனியாது நம் தாகம்...

கதாநாயகனுக்கு அறிமுகம் ஆப்பிள் கண்ணா ( ஆப்பிள் போன்ற நிறத்தையுடைய கன்னம்) இப்படி தான் ஆரம்பம்... கதாநாயகியோ நடுடோட்டில் கூட்டிகிட்டு இருக்கிறாள் என்ன ஒரு partiality பாருங்க என் மச்சானுக்கு.. பார்த்தவுடன் எங்க கவிஞருக்கு ஒரு பெண் என்றே தோன்றவில்லை... காதல் வந்த பின் கண்ணாம்மா என்ற சொல்லை அவர் விடவில்லை.. எவ்வளவு முரண்பாடு பாருங்க...

கவிஞரின் காதல் புயலில் சிக்கி சின்னாபிண்ணமாகியது நித்திலா மட்டும் அல்ல .... கவிஞரோடு பயணம் செய்த நாம் அனைவரும் தான்..... காதல் சொன்ன விதமாகட்டும்... கல்யாணம் பண்ண சம்மதம் வாங்கியதாகட்டும் எல்லாவற்றிலுமே ஒரு கடினத்தன்மை, குசும்பு, தான் எங்க கவிஞருக்கு.. வன்மையில் மென்மை தான் எங்க கவிஞர் ??

கவிஞர் கவி பேசினால் நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம் ...நித்திலா மாதிரி முதல் வரிசையில் இருக்கை வேண்டாம் .... நான் அந்த ஒலிவாங்கியாகவே இருப்பேன் ... அவர் பேசும் ஒலி முதலில் என்னிடம் தான் வரவேண்டும் பிறகு தான் மற்றவர்களுக்கே... ( including his wife ??) அத்தனை பைத்தியமானேன் ... இந்த கதை படிக்க ஆரம்பித்த பிறகு சங்க இலக்கியத்தை ரொம்ப படிக்க கேட்க ஆரம்பித்து இருக்கிறேன் ... Thanks to my Machan ?? பின்ன திரிகூடராசப்பரை பள்ளியில் படித்த பிறகு இப்ப தான் கேட்கிறேன்...

ஒவ்வொரு காட்சியும் கண்ணு முன்னே வந்து 4d experience கொடுத்தது... ஆமாம் அந்த சூழலில் அப்படியே மெய்மறந்து அல்லவா போனேன் ...

வனதுறை அதிகாரி பண்ணையார் ஆனதை மறப்பேனா இல்ல பண்ணை தோட்டத்தில் மேல்சட்டையை கழற்றி... வேட்டியை மடித்து கட்டி வேலை செய்ததை மறப்பேனா இல்லை இல்லாளின் செல்ல சண்டையை (பொறாமையில் வந்த சண்டையை) மறப்பேனா... இம்புட்டு அழக இருந்துகிட்டு இப்படி எல்லாருக்கும் arms காட்டினால் எப்படி ... நியாயம் தானே..??? நித்தியின் கோபம்..

நான் கவிஞரை பற்றி பேசினால் நிறுத்தவே மாட்டேன் ....

ஆசிரமத்தில் வளரந்து வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்த நாயகி.... பெற்றோர்களின் அறவனைப்பு இல்ல... இருந்தாலும் நேர்மையான அதிகாரி...தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதை தட்டி கேட்கும் துணிச்சல்காரி... மாமியாரால் நற்பணி மன்றம் வைக்கப்பட்டவள்..?? அருமையான கதாபாத்திரம்... படிப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் கதாபாத்திரம்... நித்திலா...

மீசையை நீவி விட்டே நம்ம மனசையும் நீவி விட்டவரு.... வில்லனாக அறிமுகபடுத்தபட்டவரு.. கதாநாயகனின் தந்தை... அதிகமாக score பண்ணிய கதாபாத்திரமும் இவர் தான்... அன்பரசு...
அது என்னமோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை என் மச்சான் கஷ்டப்பட்டு வில்லனை கொண்டு வருவாங்க ஆனால் வில்லன் தான் எல்லோருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக மாறிவிடும் ?? நாயகனையே ஒரம் கட்டி விடும் அளவிற்கு ..

வானாதி செம்ம .... அன்பான கணவராக இருந்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... இந்த மொத்த கதையில் ரொம்ப strong ஆன கதாபாத்திரம்... எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம்..??♥

இதே போல் மேன்மேலும் பல கதைகளை எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மச்சான் ♥♥.....

கண்டிப்பாக epilogue கவியரங்கம் வேண்டும்.. அதுவும் நீ சொன்ன தலைப்பு அப்படி ... எங்களை தூண்டி விட்டு இருக்கு....
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆமாம் ஆமாம் கண்டிப்பாக எபிலாக் வேண்டும். ப்ரேமி டார்லிங் நான் இப்பொழுதெல்லாம் உங்கள் விமர்சனத்திற்கு விசிறியாகிவிட்டேன். அவ்வளவு அருமையாக இருக்கிறது உங்களது ஒவ்வொரு விமர்சனமும்..???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஆஹா! என்ன அழகான விமர்சனம்...
எப்பவுமே பிரேமா கண்ணோட்டத்தில் கமெண்டோ Review வோ அழகாத்தான் இருக்கும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top