நீளும் காதலின் தூரம்...(கவிதை)

#13
உன்னை பார்த்த கணம் முதல் என் உயிர் ஜீவனாய் என்னுள் உன் காதலடி...
உன் புன்சிரிப்பில் என் சப்த நாடியும் சிறையுண்டு தவிக்குதடி...
ஒற்றை விரலில் நீ தலைகோதுகையில் எல்லாம் உன் விரலாய் மாறிவிட என்னுள்ளம் துடிக்குதடி...
உன் விரலிடிக்கில் என் கைவிரலை கோர்த்தப்படி உன்னை என் நெஞ்சில் சாய்த்தக்கொள்ள வேண்டுமடி...
என் இதயத்துடிப்பில் வாழும் என் காதலை உனக்கு உணர்த்திட பேராசையடி...
உன் ஓரப்பார்வை கூட காதலாய் தான் தெரியுதடி எனக்கு மட்டும்...
உன்னுடன் மட்டுமே அதிகம் பேசியதில்லை... ஆனால் உன்னைப் பற்றி பேசாமல் என் ஒரு நொடியும் கழிந்ததில்லையேயடி...
கனவுகளில் மட்டுமே உன் காதலில் கரைகின்றேன்...நினைவுகளாய் அது மாற மனம் ஏங்குதடி...
புரிந்தும் புரியாமல் பிதற்றும் உன் மனதின் மொழியில் நிமிடமும் வாழ்கின்றதடி என் உயிர் காதல்...❤️
very nice sis
 
#16
இந்த அளவுக்கு ஒரு காதலனால் காதலிக்கப்படும் பெண் கொடுத்து வைத்தவள் ராஜி...
அருமையான கவிதை மா...
இன்னமும் தொடர்ந்து கவிதை மழையில் எங்களை நனைத்திட வாருங்கள்...
வாழ்த்துக்கள் ராஜி...
 

Latest updates

Latest Episodes

Top