நீ நீயாகவே இரு

#1
"உன் நேர் வழியை
தடுத்திட நினைக்கும் தடுப்பணைகளை உடைத்திட்டு
நெஞ்சை நிமிர்த்தி நின்று நீ நீயாகவே இரு"


"உன் சுயமரியாதை
சுரண்ட படுகிறது எனில்
அவர்களை சுனாமி போல் தாக்கிவிட்டு
நீ நீயாகவே இரு"


"உன் உண்மை அன்பு
அலைக்கழிக்க படுகிறது எனில்
அவர்களை அடியோடு ஒதுக்கிவிட்டு
நீ நீயாகவே இரு"


"உன்னை விமர்சிக்கும் கூட்டம்
நீ விழும் போது தூக்கி விட போவதில்லை
அழும் போது துடைத்து விட போவதில்லை
விமர்சனங்களை தூக்கி எறிந்து விட்டு
உன் விருப்பபடி வாழ்ந்து விடு வாழ்க்கையை"


"இந்த வாழ்க்கை இன்பம் தரும்
துன்பம் தரும்
வெற்றி தரும்
தோல்வி தரும்
அவற்றின் மூலம் கற்றும் தரும்
எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்து விட்டு
நீ நீயாவே இரு"


"நியாமற்ற இந்த உலகில் வாழ்வற்க்காக
நிம்மதி இன்றி தவித்து
நெஞ்சம் அது வாடி நிற்காமல்
நீ நீயாகவே இரு
அது உன் வாழ்வின் இறுதி நொடி என்று
அறிந்த பின்னும்
நீ நீயாவே இரு"
 
#7
பணம் நோக்கி சிந்திக்கும் மக்கள் சுயம் நோக்கி சிந்தித்திருந்தால் சுற்றம் என்றோ மாற்றம் பெற்றிருக்கும்🙋👌👌👌👍💐💐
இது சூப்பர் டியர்.
 

Advertisements

Latest updates

Top