• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீ பற்றவைத்த நெருப்பொன்று

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
நீ பற்றவைத்த நெருப்பொன்று
- பெண்மையே ரௌத்திரம் பழகு
143ffbcff280e73b.jpg

மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினம் ஆனால் இந்த அபலைக்கோ இறுதி அஞ்சலி ... வீதியோரம் வண்ண விளக்குகள் ... வீரமான மேடை பேச்சுகள் ... பல பல விருதுகள் ...

ஆண்களே பலே !!
கண்ணகியை கல்லாக்கி விட்டிர்கள் ..!!
திரௌபதியை துகிலுரித்தீர்கள் ... !!
சீதையை உயிரோடு சிதைத்தே விட்டிர்கள்...!!
பாரத மாதா மட்டும் .. வெறும்
பாரதியாய் இருந்தால் அவளையும் பலியிட்டுருப்பீர்கள் அல்லவா??

பெண்மையை இழிவு செய்யும் கயவர்களே !!
உங்களையும் கல்லால் அடித்து ..
சிதையில் சிதைத்து ..துகிலில் தூக்கிலிட....
எங்களுக்கு எத்துணை நொடி எடுக்கும் ??

பெண்கள் தினத்தைக் கொண்டாடும் ஆண்களே .... கேளுங்கள்
பெண்மையை உண்பதல்ல ஆண்மை ...
பெண்மையைக் காப்பதுவே ஆண்மை ...
இந்த உண்மையை உணர்ந்தால் ஆண்மைக்கும் இழிவில்லை
எந்த பெண்மைக்கும் பங்கம் இல்லை ....

நண்பன் என்று நம்பினாள் ....
பாவம் இன்று அவன் விரித்த மாயவலையில் சிக்குண்டு கசக்கி எறிந்த காகிதம் போல கிடக்கிறாள் ...
வெறித்துக் கூடப் பார்க்க முடியவில்லை மங்கிப்போன விழிகள் ...
உயிரணுக்கள் துடித்தது .........
நா வறண்டு போக கதறுகிறாள் பாவம் !!
கதறி என்ன பயன் ??
அந்த அரக்கனின் அகோர சிரிப்பொலியை தவிர அவளது செவிகளுக்கு வேறெதுவும் எட்ட வில்லை ...

விழிநீரை தவிர அணைத்து பாகங்களும் ஊமையாகி போயின ... மனிதர்கள் உறங்கிப்போக .... அசுரனின் வேட்டை துடங்கியது ....

கதறிய வாயும் ....போராடிய கரங்களும் பிணைக்கப் பட்டன ...
உதைத்த மலர் பாதங்களைச் சுருட்டுக்கு இரையாக்கினான் ...
தனது வன் பசிக்கு அப் பூவை உண்டான் ...
மிகவும் கொடுமையாக வேட்டையாடினான் ...
வெறி அடங்கியது ....
வேட்டை முடிந்தது ...
உண்ட மயக்கத்தில் தளர்ந்து அறையை விட்டு வெளியேறினான் ...

பாதி உயிர் மீதமிருக்க அரைமயக்கத்தில் கிடந்தாள் .... மயக்கம் மெல்ல தெளிந்தது இமைகளைப் பல சிரமத்துக்குப் பிறகு பிரித்துப் பார்த்தாள்.... கண்களை மெல்ல சுழற்றினாள் ... கிழித்தெறிய பட்ட ஆடைகள் எங்கோ ஒரு மூலையிலே கதறிக் கொண்டிருந்தது ... எழும்ப முடியவில்லை ..

உயிர் போகும் வலி முதுகெலும்பின் வழியே ஈட்டியை போலக் குத்தி துளைத்தது ... எழுந்து நடக்க இயலவில்லை நெருப்பால் சுட பட்ட பூ பாதங்களைத் தரையில் ஊன்ற முடியவில்லை ... ஆனாலும் நடந்து பார்த்தாள் முடியவில்லை ...

இறுதியில் அடிவயிற்றை இறுக்கப் பிடித்துக் கொண்டு தத்தி தத்தி தவிழ்ந்தாள் .... கிளியப்பட்ட ஆடைகளைத் தன் கையில் ஏந்தினாள் ... ஒரு வேளை இரும்பில் ஆடை அணிந்திருந்தால் ?? என்றது இரும்பாகி போன இதயம் ....

அட முட்டாள் பெண்ணே !! இரும்பில் ஆடையா ?? அதை தனது காமத்தீயால் ஒரு நொடியில் உறுகிறுப்பான் அந்தச் சதை வெறிபிடித்த அரக்கன் என்றது மழுங்கி போன அறிவு ...

ஆங்காங்கே குருதி வழிந்த தன் தேகத்தை ஒருவாறாக மூடிக்கொண்டாள் ... வலி உயிர் போனது ... நடை பிணமானாள் ...

என் அங்கத்தைச் சிதைத்த உன் (அருவ ) றுப்பை வெட்டி வீச வேண்டும் ...
வெறிகொண்ட உன் விழிகளைப் பிடுங்கி எரிய வேண்டும் ....
என்னை வதைத்த உன் கரங்களைக் கூர்வாளுக்கு இரையாக்கி பெருக்கெடுத்து ஓடும் உன் குருதியில் என் தேகத்தைக் கழுவி ... கொதிக்கும் தனலுக்கு உன்னை இரையாக்க வேண்டும் .....
என்று அவளது உள்ளம் சூழ் உரைத்த மறு நொடி !!

அவளது செவி கிழியும் அளவிற்கு எக்காள சத்தம் .... காதுகளை மூடினாள் ஆனாலும் அந்தச் சத்தம் அவளை விடவில்லை நிமிர்ந்து பார்த்தாள் ...
உடலே அரண்டது இடுகாடு போலக் காட்சியளித்தது அவள் நின்று கொண்டிருந்த அறை !! அதே இருட்டறை !! ஆம் அவளது கற்பை விழுங்கிய அதே அறை !! ... மீண்டும் முழங்கியது ...

குள்ளநரிகளின் சதியில் சிக்கி சிதைந்து போன முட்டாள் பெண்ணே கேள் !!

சூழ் உரைக்க நீ திரௌபதியும் இல்லை ...
என் குருதி சிந்தியாவது உன் சபதம் முடிப்பேன் என்று நெருப்பில் அடித்துச் சத்தியம் செய்ய உன் கணவன் ஒன்றும் வேந்தனும் இல்லை ...
அப்படி ஒரு யுத்தம் நிகழ்ந்தாலும் அதைக் காவியமாய் ஏட்டில் எழுதி போற்றித் துதிக்க இந்த மண்ணுலகில் எந்த மாந்தரும் இல்லை ...
மனிதர்கள் உறங்க ... தேவதைகளை வதை செய்ய விழிமூடாமல் காத்திருக்கும் அரக்கர்கள் வாழும் இடுகாட்டு பூமி இது ....

பேதை என்றால் பூலோகம் தாண்டி அடி பாதாளம் வரை கூடச் சென்று வேட்டையாட துடிக்கும் வன் புணர்ச்சி கொண்ட ஓநாய் கூட்டங்கள் வாழும் இந்த இடுகாட்டில் ... ஒவ்வொரு பெண்ணும் தன் மானத்தையும் ... தன் உயிரையும் காத்துக்கொள்ளத் தனியே தான் போராட வேண்டும் ... உனது யுத்தத்தையும் நீ தான் நடத்த வேண்டும்...

"இந்த நேரத்தில் இவளுக்கு அங்கு என்ன வேலை ???"

" முயன்றிருந்தால் தப்பித்திருக்கலாம் "

"அது என்ன ஆண் நண்பர்கள் ??? ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணிற்கு நண்பனாக முடியும் ???"

" நடந்தது நடந்து விட்டது அடுத்தக் கதையைப் பார்ப்போம் "

"இருட்டில் நடந்ததை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுவது "

"தவறு இவள் மீதும் இருக்கும் !!" எத்தனை கேள்விகள் ... இதை அனைத்தையும் தாண்டி நீ போராடி வெற்றி அடைந்தாலும் ... உன் கழுத்தில் விழப்போவது என்னவோ ' பழி மாலை ' மட்டும் தான் ...இப்பொழுதும் நீ போராட தான் போகிறாயா ?? சாட்சியாக எதைக் காண்பிப்பாய்

இந்த இருட்டு அறையையா இல்லை சிதைக்கப்பட்ட உன் தேகத்தையா !! .... பதில் இல்லையா ???
என் கேள்விக்கே உலர்ந்து போனாயே பெண்ணே !!
நீ பார்க்காத மிருகங்கள் பல மனித வேடத்தில் உன்னைக் கேள்விகளாலும் வார்த்தைகளாலும் வதைக்கக் காத்திருக்கின்றதே அவைகளுக்கு என்ன பதில் சொல்லுவாய் ??

" போராடி என்ன பயன் என்று தோன்றுமே ??" அறிவேன் நான்

" ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று தோன்றுமே ??" அறிவேன்

" உன்னை ஈன்றவள் மீதும் கோபம் வருமே ??"

" உன் மீதே வெறுப்பு வருமே " அறிவேன் ....

இதற்கு தான் இந்த வீர முழக்கமா ... மூலையில் முடங்க போகும் உனக்குச் சபதம் ஒரு கேடா !!
நீயும் ஒரு பெண் தானே !! உன்னிடம் நான் வேறெதை எதிர்ப்பார்க்க !! நானும் ஒரு முட்டாள் தான் உன் சபதம் கண்டு ஒரு கணம் வியந்து விட்டேன் எங்கே நீ தான் இந்தக் காரிருளின் விடிவெள்ளி என்று !!

போ போய் ஓர் இருட்டறையில் முடங்கிக் கொள் !! இல்லை உன் உயிரை மாய்த்துக்கொள்ள !!
சீக்கிரம் ஊமையாகி விடு அப்பொழுது தானே விழித்திருக்கும் வேட்டை நாய்களால் இன்னொரு பூவை வதைக்க முடியும் ... என்று அவளை அந்த இருட்டறை எள்ளி நகையாடியது போன்ற பிரம்மை அவள் விழி முன் வந்து மறைந்து செல்ல .... ரத்தம் உலையெனக் கொதிக்க ... கதறி அழுதாள் ...

விழிநீர் வலிய வலிய கன்றி போன முகம் நெருப்புப் பட்டது போல எரிந்தது ... சுவற்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள் ...நிற்க முடியவில்லை ... மீண்டும் கண்கள் சொருகி ... சரிந்து விழ போனவளை தாங்கி பிடித்தது இரு கரங்கள் ... அதே கரங்கள் ... தன் பெண்மையைச் சிதைத்த அதே கரங்கள் ...உதறி தள்ளினாள் ...

images (1).jpg

" கடவுளுக்கும் கிடைக்காத பரிசு நண்பன் ... எங்கோ படித்த நியாபகம் !

நண்பன் என்று தானே நம்பி வந்தேன்

உனக்காக உயிர் கூடத் துறப்பேன் என்றாயே !!

காவலன் என்று எண்ணினேன் !! காமுகனாய் மாறியதேனோ ??

அன்று ஆதரவாய் வருடிய கரங்கள் !!

இன்று என் ஆடைகளைச் சூறையாட துடித்ததே !!

உறுத்தவில்லையா உன் உள்ளம் ??

அன்று நான் இருக்கிறேன் என்று சூழ் உரைத்த இதழ்கள் !!

இன்று என் அதரத்தை சிதைக்கச் சித்தம் கொண்டதே!

கூசவில்லையா உன் மனம் ??

அன்று நம்பிக்கை கொடுத்த விழிகள் !!

இன்று முள்ளாய் என் மேனியை சிதைத்ததே!

வலிக்கவில்லையா உன் இதயம் ??

கைகள் கூப்பிக் கெஞ்சினேன் !!

கரையவில்லையா உன் கல்நெஞ்சம் ??

என் குருதியை குடித்து உன் போகத் தாகத்தைத் தீர்த்த
சதை வெறியனே !!

ஒரு நொடி கூடவா என் கதறலில் உன் தமக்கையைக் காணவில்லை ??

என் பெண்மையை உண்டு உன் காமப்பசியைத் தீர்த்த
பிணந்தின்னியே !!

ஒரு கணம் கூடவா என் சிதறலில் உன் தாயை பார்க்க வில்லை ??

நீ இன்பமடைய ,
என் பெண்மையைக் குடித்து உன் காமவெறிக்கு பழிதீர்த்தாய் !! ..

காற்றடைத்த வெறும் கூடாய் நடைபிணமானேன் ..

நீ குளிர்காய ,
என் தேகத்தை உன் காமத்தீக்கு இரையாக்கினாய் !!

காற்றில் பறக்கும் வெறும் சாம்பலாய் ஆனேன்..

என்னை காக்க ஒரு ராமனும் இல்லை !!

என் மானத்தைக் காக்க எந்தக் கிருஷ்ணனனும் இல்லை !!

ஏன் என்னைக் கவர்ந்து செல்ல ஒரு ராவணன் கூட இல்லை !!

உன் காமப்பசிக்கு என் பெண்மையை உண்ண தெரிந்த உன் ஆண்மைக்கு !!

உன் வயிற்று பசியைப் போக்கிய உன் தாயும் ஒரு பெண் என்பது மற்றும் எப்படி மறந்து போனது ??..."

என்று தனலில் வீசப்பட்டது போலத் துடித்தவள்..... விழிகள் அனலை கக்கியது .....
ஏளனமாய் சிரித்தான் ...
மீண்டும் காம வெறி தலையெடுக்க, அப்பூவை வதைக்க விரைந்தான் ... வேட்டையை தொடங்கினான் ... நாட்கள் நகர்ந்தன ... வெறி அடங்க அடங்க அவளை வதைத்தவன் இறுதியில் தூக்கி எறிந்தான் ....
எப்படியோ பிழைத்து கொண்டாள் உடம்பில் உயிர் மட்டுமே மீத இருந்தது ... சுற்றத்தாரின் ஒவ்வொரு கேள்வியும் ஏளன பார்வையும் அவளை மேலும் சித்திரவதை செய்ய நடை பிணம் போலக் காட்சி அளித்தாள் .... நாட்களும் மறைந்து போக அனைவரும் கடந்து போனார்கள் .... ஆனால் அந்த அபலையின் நிலையோ ...ஐயோ !! பாவம் ... ஒரு மூலையிலே இவள் முடங்கி கிடைக்க அந்த காமுகன் நிம்மதியாய் திரிந்தான் ... இவளது உள்ளது துடித்தது ... தன் பிறப்பை எண்ணி வேதனை அடைந்தாள் ... அடைந்த துயரமும் , பிறரின் கேவல பேச்சுகளும் அவளது வந்து வந்து போக ... கதறி கதறி அழுதவள் ... இனி வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணியவள் , தன் கையில் எடுத்த ஆயுதம் " பழிக்கு பழி " .... இறப்பதற்கு முன்
தனக்கு நேர்ந்த அநீதிக்கு தானே தண்டனை வழங்க எண்ணியவள் ... புதிதாய் பிறந்தாள் ... அந்த அரக்கனை வதைக்க வெறியோடு விரைந்தாள் ...

"என் மேனியில் அத்துமீறி

இச்சையோடு எச்சில் வடித்து,

மிச்சம் இன்றி என்னை உண்டு,

நான் ஆண் என்று மாறுதட்டிய

இரெண்டு கால் மிருகமே கேள்!! ...

பல ஆண்களோடு உறவாடும் பெண்

விலைமகள் என்றால் !!

உன் விரகப் பசிக்கு என்னை இரையாக்கிய

நீயும் ஒரு விலைமகன் தான் !!

பெண்மையை வன்மையாய் சிதைப்பதல்ல ஆண்மை

பெண்மையை மென்மையாய் மதிப்பதே ஆண்மை

அன்று என் ஊன் குடித்த அட்டை பூச்சியே

இன்று நடைபிணமாய்க் கிடப்பதேன் ??

அன்று மாறுதட்டிய உன் ஆண்மை

இன்று வீணாய் போனதேன்??

என் சதையைச் சிதைத்தால் சிதைந்து போவேன் என்று நினைத்தாயோ

உன்னை வதைத்து புதைக்க வந்த வேள்வியடா நான் !!

நீ பற்ற வைத்த நெருப்பு இதோ உனக்காக !! சிதைந்து போ....

ஆண்களே பெண்களின் கருவறை ஒன்றும் நீங்கள்

வந்து வந்து போகும் கழிப்பறை இல்லை

கொண்டவனாயினும் அனுமதி இன்றி நுழைந்தால் அவனது

ஆண்மையை வெறுமையாக்கும் சக்தி பெண்ணுக்கு உண்டு "

என்று அவளது தனல் விழிகள் நெருப்பைத் தெறிக்க ... அவன் பற்ற வைத்த நெருப்பிலே அவனை சிதைத்து போட்டாள் ...

Bt8C7LECQAAan8N.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top