• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெகிழும் நினைவுகள் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
நினைவுகள் 1

1621019324842.png


“திங்கள் உறங்கினாலும்

அலைகள் ஓய்ந்தாலும்

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு நீங்காது”

திங்கள் மறைந்து போக போக இரவும் மெல்ல மெல்ல மலர்ந்தது அதன் ஆதாரமாக அந்த நீல வானம் தன் மீது மையை பூசிக்கொள்ள , நிலவும் நட்ச்சத்திரங்களும் தோன்றி இரவை உருதிபடுத்தியது , அதை பார்ப்பதற்கு கருநிற பந்தல் மீது மல்லிகை பூ பூத்து குலுங்குவதை அந்த வெண்மதி காவல் காப்பது போல தோன்றியது .

இந்த அருமையான இரவுக்காட்சியை பால்கனியில் நின்று கொண்டு ரசித்தவாரே தன் நினைவுகளில் மூழ்கிருந்தான் ஆதவ் .

ஆதவ் தான் நம் கதையின் நாயகன் முழுபெயர் ஆதவன் என்பதை இந்த நவீன காலத்துக்கேற்ப தனக்கு பிடித்தது போல் ஆதவ் என்று சுருக்கிக்கொண்டான் , அவன் தனக்கு பிடிக்காதது எதையும் தனக்கு ஏத்தது போல் மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவன் , தனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான் , அதே நேரத்தில் தனக்கு ஒன்று பிடித்துவிட்டால் அதற்காக உயிரையும் கூட கொடுப்பான் .

எதையும் காலத்தின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்பது இவனது கொள்கை, எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான் , எப்பவாது கோபம் வரும் ஆனால் அது வந்த வேகத்தில் மறைந்துபோகும் .

இயற்கையாக வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவன் , மாநிறம் , நல்ல உயரம் திடமான உடற்கட்டு என்று பார்ப்பதற்கு சினிமா நடிகனை போல இருப்பான் இவனிடம் பல அஸ்திரங்கள் இருந்தாலும் வசீகர பார்வை , மாயக்கண்ணனின் புன்னகை என்ற இவ்விரெண்டும் இவனது முக்கியமான பிரம்மாஸ்திரம் , இதில் மாயங்காதோர் யாரும் இல்லை , அனைவரிடம்மும் சகஜமாக பழகும் குணம் கொண்டவன் ,

இவனை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் பட்டாளாம் இருக்கும் அதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருப்பர் . எல்லா பெண்களிடமும் ஒரு வரையறையோடு பழகுவதால் பெண்கள் மத்தியில் இவனுக்கு எப்பொழுதும் வரவேற்பு உண்டு .

ஆதவ்வின் கொள்கை என்றால் "களவும் கற்று மற " என்பதுதான் , அனைத்தையும் தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை , தவறில் இருந்துதான் சரியை ஆறியமுடியும் என்பதை உறுதியாய் நம்புபவன் , பேஷன் டிசைனில் bachelor டிகிரி முடித்துவிட்டு தன் தந்தையின் கம்பெனியான RK பேஷன் லிமிடெட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறான், சென்ற வருடத்திற்கான சிறந்த CEO என்கின்ற பட்டத்தை தன் தனித்திறமையால் வென்றிருக்கிறான் .

ஆதவ் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கிருக்க அவன் அருகில் வந்து ஒருவர் அவனின் தோளில் கை வைத்து ," என்ன பா ஆதவ் இன்னைக்கும் அவன் தன் வேலைய காட்டிட்டான " என்றார் ,

அதற்கு ஆதவ் சிரித்துக்கொண்டே ," ஆமா மா , நீங்க இன்னும் தூங்கல " என்றான்

அவர் பெயர் தேவி ஆதவ்வின் அம்மா , ராதாகிருஷ்ணனின் மனைவி , இல்லத்தரசி ஆதவ்வின் செல்ல தாய் .

தேவி ," தண்ணீ குடிக்கலாம்ன்னு கீழ வந்தேன் , சரி நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டிங்கலான்னு பாக்கலாம்ன்னு ரூம்க்கு வந்தா பெட்ல உன்ன காணோம் , அப்போ நிச்சயமா பால்கனில தான் இருப்பன்னு இங்க வந்தா நீயும் சொல்லி வச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்க அப்றோம் ஆதவா " என்று ஆரம்பித்தவரை தடுத்த ஆதவ்

ஆதவ் ," மா எத்தன தடவ சொல்றது ஆதவா இல்ல , ஆதவ்ன்னு கூப்டுங்க " என்றான்

தேவி ," சரி ஆதவ் , இப்போம் சரியா "

ஆதவ் ," ஹ்ம்ம் ஒகே சொல்லுங்க என்ன விஷயம் " என்றான்

தேவி ," நா சொன்ன விஷயத்த பத்தி என்ன யோசிச்சிருக்க " என்றாள்

ஆதவ் ," இல்ல மா அத பத்தி இன்னும் நா எதுவும் யோசிக்கல" என்றான்

தேவி ," சரி யோசிச்சிட்டு சொல்லு , அப்றோம் ஆதவ் நேரம் வேற ஆயிட்டே இருக்கு , நீ வேணும்னா கீர்த்தி ரூம்ல போய் தூங்கேன் , கீர்த்தி தான் வீட்ல இல்லையே " என்றாள் .

ஆதவ் ," ஆனா அம்மா " என்று அவன் தொடங்குவதற்குள்

ஆதவ் என்று கூபிட்டுக்கொண்டே ஒருவர் தன் கண்களை கசகிக்கொண்டு ஆதவ்வின் அருகில் வந்தார் , ஆதவ் தன் அம்மாவை பார்த்து கண்ணசைக்க அவர் சிரித்தார் ,

பின்பு ஆதவ் ," என்ன என் பிரின்ஸ்சோட தூக்கம் கலஞ்சிட்டா" என்று கூறிக்கொண்டே அவனை தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான் . அச்சிறுவன் ," ஆதவ் என்கூட தூங்காம இங்க என்ன பண்ற " என்றான்

ஆதவ் ," என்ன தூங்க விட்டாதனடா , உருண்டு உருண்டு என்ன கீழ தள்ளிட்ட, அப்டியே நீ உங்க அம்மா அம்மு மாதிரி டா " என்றான் .

தேவி ," துருவ் கண்ணா அப்பா இங்க தூங்கட்டும் , நீ வேணும்னா பாட்டிகிட்ட தூங்கறியா " என்றார்

துருவ் ," ப்ளீஸ் பாட்டி நா அப்பா கிட்ட தான் தூங்குவேன் " என்று அடம்பிடித்தான் , உடனே ஆதவ் ," மா நீங்க போங்க நா இவன பாத்துக்கறேன் , குட் நைட் மா கீழ பாத்து போங்க " என்றான்

தேவி ," சரி பா குட் நைட் " என்று கூறி துருவ்வின் தலையை கோதி விட்டு விட்டு தன் அறைக்குச்சென்றார் .

துருவ் ஆதவ்வின் செல்ல மகன்.

ஆதவ் தன் கழுற்றை இறுக்கி கெட்டி பிடித்திருந்த தன் மகனை மெல்லமாக தூக்கிக்கொண்டு வந்து மெத்தை மீது கடத்தி , அவனை தட்டிகொடுத்துக்கொண்டே தானும் உறங்கினான் .

இரவு முடிந்து பகலும் புலர்ந்தது , தலையணையும் பெட் ஷீட்டும் எங்கயோகிடக்க ஆதவ்வின் நெஞ்சின் மீது துருவ் நிம்மதியாக துயில் கொண்டிருக்க , ஆதவ் தன் மகனை இறுக்கி பிடித்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான் .

சூரியனின் கதிர்வீச்சு தாங்க இயலாமல் துருவ் தன் தூக்கத்தில் இருந்து விடு பெற்றான் , பின்பு மணி ஒன்பதை காட்ட , துருவ் ," அச்சச்சோ அப்பாவுக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகுதே " என்று கூறி ஆதவ் ஆதவ் என்று தன் தந்தையை எழுப்பினான் ,

ஆதவ் தன் தூக்கத்தில் இருந்து லேசாக முழித்து தன் மகனை தன் பக்கம் இழுத்து என்னடா என்று கூறி அவனது கன்னத்தை லேசாக கிள்ளினான் ,

துருவ் ," அப்பா பாஸ்ட் , சீக்கரம் எந்திரிங்க " என்றான் , ஆதவும் சரி டா என்று கூறி வேண்டா வெறுப்பாக எழும்பினான் ,

பின்பு ஆதவ் பெட் காபி கேட்க்க , துருவ் ,

" அப்பா ப்ரஷ் பண்ணாம காபி குடிக்க கூடாதுன்னு என் மிஸ் சொல்லிருக்காங்க , ஸோ சீக்கரம் வாங்க பா ரெண்டு பேரும் சேர்ந்து ப்ரஷ் பண்ணுவோம் " என்றான் . உடனே

ஆதவ்,” எல்லா விஷயத்துலயும் அப்டியே உங்க அம்மா மாதிரி என்று கூற பின்பு ஒருவழியாக துருவ் தன் தந்தையை பாத் ரூம்மிற்குள் அழைத்துச்சென்றான் , இருவரும் பல் துலக்கிவிட்டு வெளியே வந்தனர் .

துருவ் ஆதவ்விடம் சீக்கரம் குளிச்சிட்டு ரெடியாகுங்க நா உங்க டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கறேன் என்றான்

ஆதவ் ,"ஒகே டா என் செல்லம் " என்றான் .

ஆதவ் மியூசிக் பிளேயர்ரை ஆன் செய்து விட்டு குளிக்க சென்றான் , பாட்டு அதற்க்கேற்ப ஒலிக்க , ஆதவ்வும் ஆபீஸ் செல்வதற்க்காக தயாரகிக்கொண்டிருந்தான் , ஒரு பக்கம் ஆதவ் தன் கழுத்தில் டையை மாட்டிக்கொண்டிருக்க , துருவ் தன் தந்தையின் ஷூவிற்கு பாலிஷ் செய்துகொண்டிருந்தான் .

ஆதவ்விற்கு சரியாக டை கெட்ட வரவில்லை , அப்பொழுது துருவ் தன் தந்தையின் தோள் மீது கையை வைக்க , ஆதவ் என்னடா இது நம்ம பையன் திடிர்ன்னு நம்ம heightக்கு வளந்துட்டான் , என்று ஆச்சரியத்துடன் கீழே பார்க்க , துருவ் பெட் மீது ஏறி நின்று கொண்டிருந்தான் , அதை பார்த்து ஆதவ் சிரிக்க ,

துருவ் ," சிரிக்கறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல வாங்க பா வந்து உக்காருங்க " என்று தன் தந்தைக்கு டையை அட்ஜஸ்ட் செய்துக்கொண்டிருந்தான் , அதை பார்த்த அதவ்க்கு தன் மனைவியின் நியாபகம் வந்தது ,

துருவ்வின் பிறப்புக்கு முன்பு ஒருநாள் இப்படி தான் ஆதவ் ஆபீஸ் செல்வதற்க்காக கிளம்பிக்கொண்டிருந்தான் , அப்பொழுது அவன் மனைவி ," ஆதவா இவ்வளவு பெரிய ஆளா வளந்திருக்க இன்னும் உனக்கு ஒழுங்கா டை கெட்ட தெரியல " என்றாள்

ஆதவ் ," ஏய் அம்மு , ஆதவா இல்ல ஆதவ் " என்றான் ,

அம்மு ," சரி மூஞ்ச தூக்காத ஆதவ் போதுமா " என்றாள்

ஆதவ் ," டபுள் ஒகே டியர் "

பிறகு அம்மு ஒரு சின்ன ஸ்டூல் மீது ஏறி ஆதவ்க்கு டை கெட்டி விட்டுக்கொண்டிருந்தாள் அப்பொழுது

அம்மு ," எப்போம் தான் டை கெட்ட படிக்க போற "

ஆதவ் ," ஏன் படிக்கணும் அதான் நீ இருக்கியே என்னோட பம்கின் " என்று கண்களை சிமிட்டினான்

அம்மு ," பம்கின்னா எவ்வளவு பேரு தான் எனக்கு வைப்ப ம்ம்ம் " என்றாள்

ஆதவ் ," சரி அம்மு மட்டும் ஒகே " என்று சிரித்தான் , பின்பு ஆதவ் அம்முக்கு கிச்சலம் காட்ட அம்மு ஸ்டூல்லில் இருந்து கீழே விழப்போனாள் உடனே ஆதவ் சிரித்துக்கொண்டே தன் மனைவியை தாங்கி பிடித்தான் ,

அப்பொழுது அவள் ," romance போதும் சீக்கரம் கிளம்பி கீழ வா " என்று அவனது தலையை தட்டிவிட்டு கீழே சென்றாள் , இவ்வாறு ஆதவ் தன் கடந்த கால நிகழ்வில் திளைத்திருக்க , துருவ் அப்பா அப்பா என்று தட்டிக்கொண்டிருந்தான் , தன் மகனின் அழைப்பில் தன் நினைவுக்கு வந்த ஆதவ் தன் மகனை பார்த்து சிரித்தான் ,

அதற்கு துருவ் ," என்ன பா சிரிகீங்க " என்றான்

ஆதவ் " ஒன்னும் இல்லடா " என்று கூறி தன் மகனின் தலையை லேசாக தடவி விட்டு விட்டு கீழே செல்வதற்காக கிளம்பினான் , தன் ஷூவை மாட்டிக்கொண்டு அவன் எழும்பவும் துருவ் ஆதவ்வின் கையில் அவனது லேப்டாப் பக் , மொபைல் போன் என்று தன் தந்தைக்கு எந்த வேலையும் வைக்காமல் எடுத்துக்கொடுத்தான் ,

ஆதவ் தன் மகனை அள்ளியணைத்து அவனது நெற்றியில் முத்தம் இட்டு அவனை கையில் ஏந்திக்கொண்டு கீழே வந்துக்கொண்டிருந்தான் .

கீழே ராதாகிருஷ்ணன் @கிருஷ்ணன் ," தேவி இன்னும் உன் செல்ல பிள்ள கீழ வரலையா , டைம் இப்போம் என்ன ஆச்சு , கொஞ்சம் கூட பொறுப்பில்ல " என்று தன் மகனை வருத்தெடுத்துக்கொண்டிருந்தார் .

ராதாகிருஷ்ணனுக்கும் ஆதவ்க்கும் எப்பொழுதும் ஒத்துப்போகாது , ஆதவ்வின் பொறுப்பற்ற குணம் அவனது தந்தை கிருஷ்ணாவுக்கு பிடிக்காது .

தேவி ," ஏங்க அதோ ரெண்டு பேரும் வந்துட்டாங்க " என்று கூறினார்.

கிருஷ்ணா ," வர்ற டைமா இது " என்று மீண்டும் கரித்துக்கொட்டினார் .

ஆதவ் தன் அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே வந்து உட்கார்ந்தான், துருவ் ஓடி போய் தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டான் .

தன் தத்தா ஊட்டிவிட துருவ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் , பிறகு கிருஷ்ணன் தேவியிடம் ," சார் என்ன முடிவு பண்ணிருக்காராம்" என்றார் .

ஆதவ் , துருவ் கண்ணா போய் அப்பா ரூம்ல கப்போர்ட்ல ப்ளூ பைல் இருக்கும் அத கொஞ்சம் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைத்தான் . பிறகு தன் தந்தையிடம் ," யோசிக்கறதுக்கு ஒன்னும் இல்ல , என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது , அதுல எனக்கு விருப்பம்மும் இல்ல " என்றான்

கிருஷ்ணன் ," ஏண்டா " என்றார்

ஆதவ் ," ஏன்னா புடிக்கல " என்றான்

கிருஷ்ணான் ," கீர்த்திக்கு என்னடா குற , அவளுக்கும் உன்ன புடிச்சிருக்கு இதுக்கு மேல என்னடா வேணும் "

கீர்த்தி கிருஷ்ணாவின் தங்கையின் மகள் , ஆதவ்க்கு சொந்த அத்தை மகள் ,சிறு வயதில் இருந்தே ஆதவை உயிருக்கு உயிராக விரும்புபவள் .

ஆதவ் ," ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் , நா எப்டி ஒரு கல்யாணம் பண்ணிக்க முடியும் " என்றான்

கிருஷ்ணன் ," ஏன் இந்த உலகத்துல மனைவி இல்லாதவங்கலாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதே இல்லையா " என்றார்

ஆதவ் ," உலகத்துல இப்போம்லாம் என்னலாமோ நடக்குது அதுக்காக என்னால அப்டிலாம் பண்ணிக்க முடியாது " என்று அவன் கூறவும் துருவ் வரவும் சரியாக இருந்தது ,

துருவ் ," கப்போர்ட்ல பைல்லே இல்லபா , நா நல்லா தேடிபாத்துட்டேன் " என்றான்

ஆதவ் ," பரவில்ல பா , அப்பா ஆபீஸ் கிளம்புறேன் , அப்பா ஆபீஸ்ல இருந்து வர்றப்போம் உனக்கு என்ன வேணும் " என்றான்

துருவ் ," நீங்க சீக்கரம் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மூவி பாக்கலாம் " என்றான்

ஆதவ் ," ஒகே டா தங்கம் " என்று தன் மகனின் கன்னத்தில் தன் இதழ் பதிக்க , துருவும் தன் தந்தையின் கன்னத்தில் முத்தம் இட்டு வழியனுப்பி வைத்தான்

ஆதவ் ," தன் தாயிக்கு" போயிட்டு வரேன் என்பதை போல் கண்ணசைத்துவிட்டு தன் ஆபீஸ்க்கு சென்றான் .

காரில் ஆதவ் ," என் அப்பன் *** மசின் வழக்கம் போல இன்னைக்கும் என்ன சாப்டவிடாம பண்ணிட்டான் , " என்று தனக்குள் புலம்பிக்கொண்டே சென்றதில் தன் முன்னால் இருந்த வண்டியை கவனிக்காமல் இடித்துவிட்டான் ,

கீழே இறங்கி பார்த்த பொழுது வண்டியில் யாரும் இல்லாததால் , அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஆதவ் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் , இதை சற்று தொலைவில் இருந்து கவனித்த அந்த வண்டியின் owner தன் காரை எடுத்துக்கொண்டு ஆதவ்வை follow செய்து அவன் பின்னாலே சென்றார் .

பிறகு அந்த நபர் ஆதவின் காரை ஓவர் டேக் செய்து ஆதவின் காரின் முன்னால் ஒரு சுற்று சுற்றி தன் காரை நிப்பாட்டினார்.

ஆதவ் ," யாருடா இது கிருக்கேன் மாதிரி " என்று கூறி தன் காரை விட்டு இறங்கி திட்டுவதற்காக கீழே இறங்கவும் , அந்த காரில் இருந்து ஒரு பெண் இறங்கினார் , அவரை பார்த்தவுடன் , ஆதவின் கண்களில் இருந்த கோபம் தணிந்தது .

ஆனால் அந்த பெண்ணுக்கோ அவனை பார்த்தவுடன் கோபம் தலைக்கேற ," உன் பாட்டுக்கு என் கார இடிச்சிட்டு , ஒரு சாரி கூட கேக்காம ஹாயா வந்துட்ட " என்று போறிய துடங்கினாள் .

ஆதவ் , எவ்வளவோ அந்த பெண்ணிற்கு புரிய வைக்க முயற்சி செய்தான் , ஆனால் அவரோ கேட்பதற்கு தயாராவே இல்லை ,

பின்பு ஆதவ் ," கூல் டவ்ன் கூல் டவ்ன் சாரிங்க தெரியாமா பண்ணிட்டேன் , இது எல்லாத்தையும் சரி பண்ண எவ்வளவு பணம் தேவ படுமோ அத நானே குடுத்திரேன் " என்றான்.

அந்த பெண் ," நீ என்னடா எனக்கு பணம் குடுக்குறது இந்த ஆதிராவுக்கு யாரோட பணமும் தேவயில்ல , மறுபடியும் நீ என் மூஞ்சில என்னைக்கும் முழிக்காம இருந்தாலே போதும் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் .

ஆதவ் தனக்குள் ," அங்கரி bird " என்று கூறி சிரித்துவிட்டு அங்கிருந்து தன் ஆபீஸ்க்கு சென்றான் .

ஆதவ் ஆபீஸ்க்குள் நுழையவும் அனைத்து பெண்களும் கண்களும் ஷிம்லாவில் குளிரில் நடுங்குவது போல நடுங்கியது இல்லை துடித்தது , ஆதவ் அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு தன் அறைக்குச்சென்றான் .

பின்பு அவனது அறைக்கு வந்த ராஜ் அவனிடம் ," அப்டி என்னடா உன்கிட்ட இருக்கு , கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்னு தெரிஞ்சும் எல்லா பொண்ணுங்களும் உன்னையே பாக்காங்க " என்று தன் வேதனையை கூறினான் .

ராஜ் ஆதவ்வின் நெருங்கிய நண்பன் , கம்பனியில் ஆதவ் எப்படியோ அப்படியே தான் ராஜ் எந்த ஒரு முடிவையையும் இரண்டு பேரும் சேர்ந்து தான் எடுப்பர் .

ஆதவ் ," அதுக்கெல்லாம் ஒரு சார்ம் வேணும்டா " என்றான்

ராஜ் ," எனவோ போ " என்றான்

ஆதவ் ," இன்னைக்காவது அந்த ஆதிராகிட்ட திட்டு வாங்காம வரணும்ன்னு நினச்சேன் , மறுபடியும் திட்டு வாங்கிட்டேன் " என்று நடந்த அனைத்தையும் கூறினான் .

ஆதிரா ஆதவ்வின் buisness எதிரி , ஆதவ் அவ்வாறு நினைப்பதில்லை , ஆனால் ஆதிராவுக்கு ஆதவ் என்றால் புடிக்காது , அவனை தன் எதிரியாக தான் நினைப்பாள், எப்பொழுதும் அவனிடம் தன் கோபத்தை மட்டும் தான் காட்டுவாள் .

அவளது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான சம்பவங்களே ஆதிராவை இவ்வாறு மாற்றி விட்டது , அது என்ன என்பதை பின் வரும் பகுதியில் பார்க்கலாம்.

ராஜ் விழுந்து விழுந்து சிரிக்க துடங்கினான் பிறகு ," அட்லீஸ்ட் ஒரு பொண்ணுக்காவது உன்ன புடிக்கலையே அது போதும் டா என்று " கூறி மீண்டும் சிரிக்க துடங்கினான் .

ஆதவ் ," ஏண்டா "

ராஜ் ," எல்லாம் ஒரு பீலிங் தாண்டா மச்சி " அப்டி இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்க ராஜின் போன் ," மாமா நீங்க எங்க இருக்கீங்க " என்று ஒலித்தது ,

போன் செய்தது வேற யாரும் இல்ல ஆதவ்வின் தந்தைதான் , உடனே ராஜ் டேய் ," உங்க அப்பாடா" என்றான் .

ஆதவ் ," அட்டெண்ட் பண்ணு ஸ்பீக்கர்ல போடு நா எங்கன்னு கேட்டா மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிரு " என்றான்

ராஜ் போனை அட்டெண்ட் செய்தான் , அப்பொழுது ," அவர் என்னபா ராஜ் எப்டி இருக்க " என்று கிருஷ்ணா நலம் விசாரித்தார் .

ராஜ் ," நல்லா இருக்கேன் அங்கிள் " என்றான் .

கிருஷ்ணன் ," நா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் பா, ஆதவ் எங்க " என்றார்

ராஜ் ," அவன் மீட்டிங்ல இருக்கான் அங்கிள் , நீங்க சொல்லுங்க " என்றான்.

கிருஷ்ணன் , " அப்போம் நல்லதா போச்சு பா , இங்க பாருப்பா ராஜ் நீ தான் ஆதவ் கீர்த்திய கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கணும் நாங்க சொன்னா கேக்க மாட்டிக்கான், இத எனக்காக நீ பண்ணும் பா " என்றார்

ராஜ் ," சரி அங்கிள் ஆதவ் கிட்ட இத பத்தி நா பொறுமையா பேசுறேன் " என்றான்

கிருஷ்ணன் ," உன்ன நம்புறேன் ராஜ் " என்று கூறி போனை வைத்தார் .

ராஜ் ," டேய் ஆதவ் என்ன கொஞ்சம் கிள்ளிபாறேன்" என்றான்

ஆதவ் ," ஏன் "

ராஜ் ," லைப்லேயே பர்ஸ்ட் டைம் உங்க அப்பா என்கிட்ட இவ்வளவு அன்பாவும் ,மரியாதையாவும் பேசிருக்காருடா "

ஆதவ் ," நம்பர் ஓன் buisness மன் டா , யார் கிட்ட எப்டி பேசுனா தன் காரியம் நடக்கும்ன்னு நல்லா தெரிஞ்சவரு , ஆமா இவருக்கு வேற வேலையே இல்லையாட , ஏன்டா என் வாழ்க்கையிலே தேவையே இல்லாம மூக்க நுழைக்கிறாரு , எவ்வளவோ தடவ சொல்லிட்டேன் , புரிஞ்சிக்கவே மாட்டிக்காரு " என்றான்

ராஜ் ," அவரு அவர் கவலைய சொல்றாரு "

ஆதவ் ," உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லடா , நா என் மனைவி மேல உயிரே வச்சிருக்கேன் டா " என்னால , இன்னொரு பொண்ண என் வாழ்க்கையில நினச்சிக்கூட பாக்க முடியாது என்றான் .

ராஜ் ," ஆனா அண்ணி தான் உன்கூட இல்லையே "

ஆதவ் ," ஆமா இல்ல அதனால என்ன , அவளோட நியாபகம் என் கூடவே தான் இருக்கு , எங்களோட காதல் ஒன்னும் பொய் இல்ல , அது நூறு சதவீதம் உண்மையானது , ஏதோ கெட்ட நேரம் இப்டி ஆயிடுச்சு , என் லைப் டா நா பாத்துக்கறேன் , எனக்கு என் பையன் இருக்கான் , அவன் முகத்த பாத்தே நா வாழ்ந்துக்குவேன் " என்றான்

ராஜ் ," ஆமா உனக்கு ஒரு wife தேவபடாம இருக்கலாம் , ஆனா உன் பையன் , அவனக்கு ஒரு அம்மா தேவபட்டா"

ஆதவ் ," அவனுக்கு தேவபடாது , இதுவரைக்கும் தேவ படல இனிமையும் தேவ படாது " என்றான்

ராஜ் ," அது உனக்கு எப்டி தெரியும் "

ஆதவ் ," துருவ்வும் நானும் அப்பா புள்ளயா பழகல , ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் மாதிரி பழகுறோம் , தேவபட்டா என்கிட்ட கண்டிப்பா சொல்லிருப்பான் " என்றான்

ராஜ் ," அப்போம் சரி , இதுவரைக்கும் தேவ படல இனிமே தேவ பட்டா "

ஆதவ் ," என்னடா சொல்ற "

ராஜ் ," உண்மைய சொல்றேன் டா , இங்க பாரு ஆதவ் அவனக்கு அம்மா தேவ இல்லனா சந்தோசம் , தேவபட்டா அத சமாளிக்கவும் நமக்கு தெரிஞ்சிருக்கணும் " என்றான்

ஆதவ் ," சரி டா இத பத்தி நா துருவ் கிட்ட பேசுறேன் " என்றான்

ராஜ் ," எல்லாம் சரியாயிடும் நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் " என்றான்

ஆதவ் ," எனக்கு தெரியும் டா , அம்முக்கு அப்றோம் என் பிரச்சனையெல்லாம் நா ஷேர் பண்றேன்னா அது நீ தான் டா " என்று ஆதவ் கூற

ராஜ் ," நண்பேண்டா " என்று கூறி ஆதவ்வை கெட்டி அணைத்துக்கொண்டான் .

பிறகு ஆதவ் ," நா ஒன்னும் கேக்கணும் டா , நீ இன்னும் இந்த ரிங் டோன்ன மாத்தலையா "

ராஜ் ," எப்டி டா மாத்தமுடியும் இது நம்ம அப்பாகளுக்காகவே ஸ்பெஷல்லா செட் பண்ணினதாச்சே , முதல்ல வச்சதே நீ தான" என்றான்

ஆதவ் ," ஆமாட , இப்போலாம் அப்டி வைக்க முடியல , பையன் இருக்கான் , நாம என்ன பண்றமோ அதையே அவனும் பாலோ பண்றான் , ஆயிரம் கேள்வி கேக்குறான் , இன்னொரு டிகிரி கூட படிச்சரலாம் போல இருக்கு டா ஆனா அப்பாவா இருக்கறது தான் ரொம்ப கஷ்டம் " என்று புலம்பிக்கொள்ள ,

ராஜ் ஆதவ்வின் புலம்பலை கேட்டு சிரித்துவிட்டு ," ஏது நீ இன்னொரு டிகிரி பாஸ் பண்ணிருவ இத நாங்க நம்பனும் , யார்கிட்ட,"

ஆதவ் ," ஆமா இவரு லண்டன்ல MBA முடிச்சிருக்காரு , நீயும் என்கூட சேந்தவன் தான , நானாவது ஒழுங்கா பிட்டாவது அடிப்பேன் , சார்க்கு அதுவும் வராது " என்று கூற

ராஜ் ," விடு டா அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா " கூறி இருவரும் சிரித்தனர் .

அலைகள் போல உன் நினைவுகள் என்னை தீண்ட , முற்றிலுமாய் நான் நனைந்து போகிறேன் அன்பே , அலைகளின் ஒவ்வொரு துளியும் உன் நினைவுகளை எனக்கு நியாபக படுத்துகின்றது , அந்த ஸ்பரிசம் ஒன்றே போதும் நான் உயிர் வாழ ...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Aadahav aadhira nice name.... aana ivanoda wife yaru? Keerthu yaru ithula?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top