• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெகிழும் நினைவுகள் 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
நினைவுகள் 5

1623132112682.png

“கண்கள் மூடினால் நீ வருகிறாய் சிரிக்கிறேன்
கண்கள் திறக்கிறேன் நீயும் மறைகிறாய் வெறுக்கிறேன்
இனி பகலே வேண்டாம் , இரவே போதும்
தூக்கம் மட்டும் வரும் வரம் வேண்டும்
கனவில் உன்னை பார்த்துக்கொண்டிருக்க “

மறுநாள் காலையில் வழக்கம் போல எழும்பி ஆதவ் தன் ஆபீஸ்க்கு கிளம்பினான் , போகும் வழியெல்லாம் ராஜின் தந்தை தன்னிடம் முந்தய நாள் இரவு பேசியதையே தன் மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டிருந்தான் . வெகு நேர யோசனைக்கு பிறகு ஆதவ் ராஜாராம் சொல்லுவதும் சரி தான் என்கிற முடிவில் தன் ஆபீஸ்குள் நுழைந்தான் .

வந்தவன் நேராக தன் காபின்குள் நுழைந்து , தனது அசிஸ்டண்டை அழைத்தான் , அவளிடம்

" ராஜ் வந்துட்டார " என்று கேட்டான்

அவள் பதிலுக்கு ," இல்லை " என்று கூற

ஆதவ் ஒருவித யோசனையோடு , " ரிவீவ் மீட்டிங் எப்போம் " என்றான்

அசிஸ்டண்ட்," ராஜ் சார் வந்தவுடனே ஆரம்பிக்க வேண்டியதுதான் " என்றாள்

ஆதவ் ," என்ன ராஜ் சார் , மீட்டிங் கம்பனிக்காகவா , இல்ல ராஜ் சார்க்காகவா "

அசிஸ்டண்ட் ," சார் கம்பனிக்காக " என்று தயங்கிய குரலில் கூறினாள்

ஆதவ் ," மீட்டிங் எப்போம் "

அசிஸ்டண்ட் ," பத்து மணிக்கு சார் "

ஆதவ் ," அப்போம் சரி இன்னும் பைவ் மினிட்ஸ்ல எல்லாரையும் கான்பரன்ஸ் ரூம்ல அசம்பல் ஆக சொல்லு " என்றான்

அசிஸ்டண்ட் ," யஸ் சார் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

ராஜ் நேற்று அடித்த ட்ரிங்க்ஸால் வழக்கத்தை விட லேடாக எழும்பினான் , ஒரு வழியாக தயாராகி , ஆபீஸ் செல்வதற்காக கீழே வந்தான் .

அப்பொழுது அவன் அம்மா அவனிடம் ," எலும்பிட்டியா வா வந்து சாப்டு " என்றார்
ராஜ் ," நோ மா இன்னைக்கு ரிவீவ் மீட்டிங் இருக்கு , அல்ரெடி லேட் ஆயிடுச்சி , நா வராம ஆதவ்வும் மீட்டிங்க ஸ்டார்ட் பண்ண மாட்டான் , எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான் , நா ஆபீஸ்ல சாப்டுக்குரேன் மா " என்று கூறி கிளம்பினான் .

ஆதவ் கான்பரன்ஸ் ரூம்குள் வந்த பிறகு , தனது அசிஸ்டண்டை அழைத்து ," மீட்டிங் ஸ்டார்ட் ஆன பிறகு , யாரையும் உள்ள விடாத " என்று கூறி விட்டு மீட்டிங்கை துடங்கினான் .

ஆபீஸ்க்கு அறக்க பறக்க ஓடி வந்த ராஜ் , நேராக ஆதவ்வின் அறைக்கு விரைந்தான் , ஆதவ் அங்கே இல்லை என்றவுடன் ," ஒருவேள கான்பரன்ஸ் ரூம்ல அரேஞ்மென்ட்ஸ் பண்ணிட்டு இருப்பான் " என்று கூறிவிட்டு கான்பரன்ஸ் ரூம் பக்கம் வந்தான் , அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ,

ஏனென்றால் இதனால் வரை ஆபீஸில் மட்டும் இல்லை ஆதவ் தன் வாழ்கையில் ராஜ் இல்லாமல் எதுவும் செய்ததில்லை , கம்பெனியை ஆதவ் தன் கையில் எடுத்த நாளில் இருந்து இதனால் வரை ராஜ் இல்லாமல் எந்த மீட்டிங்கும் இங்கு நடந்ததில்லை , ராஜ் இல்லாமல் எந்த கான்ட்ராக்ட்டும் ஆதவ் சயின் பண்ணினதும் இல்லை ராஜ்க்காக எவ்வளவோ பெரிய கான்ட்ராக்டையும் கூட ஆதவ் மிஸ் பண்ணினதுண்டு , ஆனால் எதுக்காகவும் ராஜை ஆதவ் மிஸ் பண்ணினதில்லை , இந்த ஆபீஸ்ஸில் ராஜ் இல்லாமல் நடக்கும் முதல் மீட்டிங் இது தான் .

ராஜ் உட்பட அங்கே மீட்டிங்கில் இருந்த அனைவரூம் அதிர்ச்சியில் இருந்தனர் .

ராஜ் தனக்குள் ," என்னடா சோகமா இருக்க , மீட்டிங் எப்போம் நீ எப்போம் வந்திருக்க அவனும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணுவான் , அதான் ஸ்டார்ட் பண்ணிட்டான்" என்று தனக்கு தானே சமாதான் கூறிவிட்டு ரூமிற்குள் நுழைய பார்த்தான் .

அப்போது அங்கு வந்த ஆதவ்வின் அசிஸ்டண்ட் ," சார் உள்ள மீட்டிங் நடக்குது நீங்க போக முடியாது " என்றாள்

ராஜ் ," வாட் , நா உள்ள போக கூடாதா " என்றான்

அசிஸ்டண்ட்," ஆமா சார் , ஆதவ் சார் ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு " என்றாள்
ராஜ் ," என்ன நீ உள்ள விடலன்னு தெரிஞ்சா , ஆதவ் உன்ன என்ன பண்ணுவான்னு தெரியுமா " என்றான்

அசிஸ்டண்ட்," சார் ப்ளீஸ் , சார் யார் வந்தாலும் விட கூடாதுன்னு சொல்லிருக்காரு என்ன மன்னிச்சிருங்க" என்றாள்

அதை கேட்ட ராஜ் ஒரு வித தடுமாறும் குரலில் ," ஒகே " என்று கூறி விட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றான் .

ஆதவ்வின் இந்த மாற்றத்தில் ஒருவித சோகம் கலந்த கவலையோடு தன் காபினில் அமர்ந்து கொண்டு ," ஏன் ஆதவ் இப்டி இருக்கான் , என்ன ப்ராப்லம் அங்கிள் எதுவும் சொல்லிருப்பாங்களோ , என்ன பிரச்சனயா இருக்கும் " என்று தன் நண்பனை பற்றி கவலை பட்டுக்கொண்டிருந்தான் .

மீட்டிங் முடிந்த பிறகு ஆதவ் தனது எம்ப்ளாயிடம் ," KRR குருப்ஸ் பைல் வேணும் " என்றான்

அதற்கு அவன் ," சார் அத பத்தி எனக்கு தெரியாது , அது ராஜ் சார்க்கு தான் தெரியும் " என்றான்

ஆதவ் ," ராஜ் ராஜ் ராஜ்க்கு தான் எல்லாம் தெரியும்னா நீங்க இந்த ஆபீஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றான்

அப்போது அங்கே வந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜ் , " ஆதவ் ஏன் அவர் கிட்ட கோபப்படுற , பைல் என் ரூம்லே தான் இருக்கு , நா வேணும்னா இப்போவே எடுத்துட்டு வரேன் " என்றான்

ஆதவ் ," இல்ல இப்போம் வேண்டாம் நா சொல்லும் போது கொண்டு வந்தா போதும் "
என்று தரையை பார்த்து கூறி விட்டு , அவனிடம் பேச்சி கொடுக்காமல் வேகமாக நடந்தான் .

ஆதவ்வின் இச்செயலில் மனமுடைந்த ராஜ் , லேசாக கலங்கிய கண்களோடு தன் காபின் வந்து அமர்ந்து கொண்டான் .

அப்பொழுது ராஜின் காபின்குள் வந்த மனேஜர் அவனிடம் ," சார் இந்த பைல் SR குருப்ஸ்கானது , நீங்க சயின் பண்ணிடீங்கனா எல்லாம் ஒகே ஆயிடும் " என்றார்

ராஜ் பைலை வாசிக்கும் பொழுது மனேஜர் ," சார் நீங்க வாசிக்க தேவயில்ல , உங்க சயின் மட்டும் போதும் ஆதவ் சார் கோட் பண்ணிட்டாரு " என்றான்

ராஜ் ," என்ன ஆதவ் கோட் பண்ணிட்டான "

மனேஜர் ," ஆமா சார் "

இதை கேட்ட ராஜை அடுத்த அதிர்ச்சி வந்து தாக்கியது , காரணம் இது வரை ராஜ் இல்லாமல் ஆதவ் எந்த கொட்டேஷனும் கோட் பண்ணினது இல்ல , ஏன் பல கொட்டேஷன ராஜ் தான் கோட் பண்ணுவான் .

ராஜ் ஒரு வித தயக்கதோடு சயின் பண்ணி விட்டு மனேஜரிடம் ," நீங்க போங்க நா பாத்துக்குறேன் " என்று கூறினான் .

பின்பு ஒரு பெரு மூச்சி விட்டுவிட்டு ஆதவை பார்க்க அவனது காபின்க்கு வந்துகொண்டிருந்தான் , அங்கே ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லோரும் கூட்டமாக கூடி ," என்ன ஆச்சி ராஜ் சார்க்கும் , ஆதவ் சார்க்கும் எதோ பிரச்சன போல இருக்கு, " என்று அவர்கள்

இருவரை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர் .ராஜ் அவர்களை பார்த்து முறைக்க , அனைவரும் தங்கள் வேலையை பார்க்க துடங்கினார் , பிறகு ராஜ் வேகமாக ஆதவ்வின் அறை கதவை திறக்க போனான் .

பிறகு வாசலில் நின்று கொண்டு ," மே ஐ கம் இன் சார் " என்றான்
ஆதவ் ராஜின் செய்கையில் , அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்பதையும் உணர்ந்து ," யஸ் கம் இன் " என்றான்

பின் ராஜ்ஜிடம் ," என்ன டா இது புதுசா பெர்மிசன்லாம் கேட்டுட்டு " என்றான்

ராஜ் ," புதுசா நா நடந்துகறனா இல்ல நீ நடந்துகிறியா " என்றான்

ஆதவ் ," என்ன உளர்ற , நா என்ன டா புதுசா நடந்துக்கறேன் " என்றான்

ராஜ் ," அப்போம் இன்னைக்கு நீ பண்ணின எதுவும் புதுசு இல்ல அப்டிதான, அப்போம் சரி இதுக்கு என்ன டா அர்த்தம் " என்று கூறி தன் கையில் இருந்த பையிலை டேபிள் மீது வீசினான் .

பின்பு ராஜ் ," ஆபீஸ்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் எதோ சண்டன்னு நினைக்காங்க " என்றான் .

ஆதவ் ," அதுக்கு ஏன் கோப படுற , அந்த மாதிரிலாம் ஒன்னும் இல்லன்னு சொல்லவேண்டியது தானே " என்றான்

ராஜ் ," என்ன சொல்ல வேண்டியதுதான , ரொம்ப ஈஸியா சொல்லிட்ட ம்ம்ம் , அவங்க அப்டி சொல்றாங்கனா அதுக்கு காரணம் யாருடா , நீ இப்டி நடந்துக்கறனாலதான் டா
அவங்க அப்டி பேசுறாங்க " என்றான்

ஆதவ் ," நா என்ன அப்டி நடந்துகிட்டேன் " என்றான் .

ராஜ் ," ஒ அது சரி நீ என்ன பண்ணினன்னு கூட உனக்கு தெரியலல , சரி இந்த பைல் , நா இல்லாமயே நீ கோட் பண்ணிருக்க , ஒகே மீட்டிங், என்னைக்கு டா நா இல்லாம நீ மீட்டிங் அட்டெண்ட் பண்ணிருக்க , கஷ்டமா இருக்குடா , நா எதாவது தப்பு பண்ணிருந்தா சொல்லிரு திருத்திக்கிறேன் , இப்டிலாம் பண்ணாத டா எதோ நீ என்ன அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு " என்றான்

ஆதவ் ," இதுலாம் ஒரு மட்டரா இத நீ இவ்வளவு பெருசா ஆக்குவன்னு நா நினைக்கல" என்றான்

ராஜ் ," வாட் இதெல்லாம் உனக்கு சாதாரணமான விஷயமா தெரியுதா ஹ்ம்ம் நா பெருசு படுத்துரேன் " என்று கூறி அழுதுகொண்டே ,

" அது ஒன்னும் இல்ல எனக்கு ஒரு ப்ரண்ட் இருந்தான் அவனுக்கு நானா உயிரு , எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான் .

அவனுக்கு புட்பால்னா உயிரு , அப்போம் எங்களுக்கு ஒரு பதினேழு வயசு இருக்கு ஸ்டேட் லெவல் புட்பால் மேட்ச் வந்துச்சி , இன்னைக்கு கிளம்பனும்ன்னு வச்சுகோயேன் நாளைக்கு மேட்ச் , எனக்கு பீவர்ங்கற ஒரே காரணத்துக்காக அவன் வாழ்க்கைக்கு முக்கியமான மேட்ச்க்கு போகாம என்கூட ஹாஸ்பிடல்ல கடந்தான் , ஏண்டா போகலன்னு கேட்டதுக்கு நீ தாண்டா முக்கியம் மேட்ச் கடக்குதுடா , நீ உடம்பு சரியில்லாம இருக்க நா எப்டி டா போறதுன்னு சொன்னான் .

எங்களோடது 25 வர்ஷ ப்ரண்ட்ஷிப்பு , இதனால் வரைக்கும் அவன் என்கிட்ட கேக்காம எதுவும் பண்ணமாட்டான் , ஆபீஸ்ல ஒரு கான்ட்ராக்ட்ல சயின் பண்றதா இருக்கட்டும் இல்ல ஒரு ஷூ வாங்குறதா இருக்கட்டும் என்கிட்ட தான் கேப்பான் .
ஒருநாள் ஒரு முக்கியமான மீடிங்க நா வரலங்கற ஒரே காரணத்துக்காக கென்செல் பண்ணினான் , ஆனா இன்னைக்கு நா லேட்டா வந்தேன்னு சொல்லி மீட்டிங் அட்டெண்ட் பண்ண கூடாதுன்னு சொல்றான் , ஏன்னு தெரியல , கஷ்டமா இருக்கு " என்றான் .

ஆதவ் தேம்பி தேம்பி அழுதுகொண்டே ராஜ்ஜிடம்," சாரி டா , எனக்கு இத விட்டா வேற வழி தெரியல , என்ன மன்னிச்சிருடா , நீ எனக்காக எவ்வளவோ பண்ணிட்ட , நீ என்ன விட்டு போயிருடா அப்போம் தான் நீ நல்லா இருப்ப " என்றான்

ராஜ் ," ஏண்டா என்னாச்சி , எதுக்கு சாரி கேக்க , என்ன வழி தெரியல , எனக்கு ஒன்னும் புரியல டா , யாரவது எதாவது சொன்னாங்களா , அப்பா , அப்பா எதுவும் சொன்னாங்களா"

ஆதவ் ," அவர் ஒன்னும் பொய் சொல்லலேயே , உண்மையத்தானே சொன்னாரு "
ராஜ் ," அப்போம் அவரு சொல்லிருக்காரு , அவர " என்றவனை தடுத்த ஆதவ் ," அவர் மேல எந்த தப்பும் இல்லடா , என்னால தான நீ ஜெயிலுக்குலாம் போயிட்டு ச்ச அத நினைக்கவே கஷ்டமா இருக்கு "

ராஜ் ," ஏண்டா பழசலாம் இப்போம் பேசிக்கிட்டு "

ஆதவ் ," விஷயம் பழசு தான்டா ஆனா அத அப்டியே ஒதிக்கிற முடியாது டா "

ராஜ் ," இதெல்லாத்துக்கும் காரணம் என் அப்பா அவர "

ஆதவ் ," அவரு மேல எந்த தப்பும் இல்லடா "

ராஜ் ," நீ சும்மா இரு அவர் உன்ன என்னடா சொன்னாரு "

ஆதவ் ," அதெல்லாம் ஒன்னும் இல்ல டா "

ராஜ் ," இப்போம் சொல்ல போறியா இல்லையா "

ராஜ் கோபமாக கேக்க , ஆதவ் ,அனைத்தையும் கூறினான் , பிறகு ராஜ் ," அவர் ஏண்டா இப்டி பண்றாரு , உன்கிட்ட அப்டி பேச அவருக்கு யார் டா ரைட்ஸ் குடுத்தது , உனக்கும் எனக்கும் நடுவுல யார் வந்தாலும் அத என்னால ஏத்துக்க முடியாதுடா " என்றான்

ஆதவ் ," சந்தோஷமா இருக்குடா , ஆனா என்னாலா தானடா நீ ஜெயிலுக்கு போன நா கல்யாணம் பண்ணினதுக்கு நீ ஜெயிலுக்கு போக வேண்டியதாயிட்டே .
அதான் உன் அப்பா என் மேல கோவமா இருக்காங்க , என்ன காட்டிக்குடுக்க கூடாதுங்கறதுக்காக நீ ஜெயில்ல அடி வாங்க வேண்டியதாயிடுச்சே , நல்ல வேல என் அப்பா உன்ன வெளியில எடுத்தாரு இல்லனா அவ்வளவு தான், நினச்சி கூட பாக்க முடியல " என்றான்

ராஜ் ," போதும் டா போதும் பழச பேசாத , அது முடிஞ்சி போன விஷயம் " என்றான்
ஆதவ் ," சாரி உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் "

ராஜ் ," சாரிலாம் வேண்டாம் இனிமே , என்னைக்கும் யார் சொன்னாலும் நாம பிரியனும்ன்னு நீ சொல்ல கூடாது " என்றான்

ஆதவ் , " சரி டா இனிமே என்னைக்கும் நாம பிரியனும்ன்னு சொல்றதென்ன , நினைக்க கூட மாட்டேன் " என்றான்

ராஜ் ," நீ இன்னைக்கு பண்ணின காரியத்தால எதோ லவ்ர்ஸ் மாதிரி பேசிட்டு இருக்கோம் , பொண்ணுங்க மாதிரி அழ வேற வச்சிட்ட " என்றான்

ஆதவ் ," ஆமா டா , அப்றோம் ராஜ் உன் அப்பா கிட்ட இத பத்தி எதுவும் கேட்டுக்காத , இத அப்டியே ப்ரீயா விட்ரு " என்றான்

ராஜ் ," ஹ்ம்ம் சரி மச்சான் , அப்றோம் இன்னைக்கு நீ என்ன ரொம்ப பீல் பண்ண வச்சுட்டடா "

ஆதவ் ," ஆமா டா சரி ஒன்னு பண்ணலாம் , எங்கயாவது ஒரு லாங் டிரைவ் போலாம் என்ன சொல்ற ஹ்ம்ம் "

ராஜ் ," செம பிளான் வா டிரைவ் போய் ரொம்ப நாள் ஆச்சு " என்று கூறி இருவரும் ஒருவருக்கொருவர் கெட்டி அணைத்துக்கொண்டு

ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு ஆதவ்வின் காபினில் இருந்து வெளியே வந்தனர் .

அதை பார்த்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து முழிக்க , ஆதவ்வும் ராஜும் அவர்களை பார்த்து சிரித்துவிட்டு , காரில் சந்தோஷமாக பறந்தனர்.

கனவெல்லாம்
நீயே தெரிய அன்பே இன்றில் இருந்து தூக்கத்தை கூட ரசிக்க துடங்கிவிட்டேன்.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Pavam raj yepdi alaran paru. Rendu perume nalla frnds than ithu apdiye needikanum.. needikkuma? Aadhav wife pathi yeppo varum mira
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top