• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நொடி_1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
எங்கும் வெள்ளை மேகங்கள் மிதக்க அதில் வளைந்து விளையாடியபடி, காற்றைக்கிழித்துக்கொண்டு க்கீ..க்கீ...கீஇஇஇஇ என்னும் காதை பிளக்கும் ஓசையுடன் தன் சக்கரங்கள் நிலத்தில் தேய மெதுவாக நின்றது விமானம்.

அதிலிருந்து வந்து எக்சுலேட்டரிலன் வழியே இறங்கியவன் ஆலிவ் கிரின் சட்டையும் கிரே கோட்டும் ஒருகையை பிடிப்பில் பிடித்தபடி மற்றொரு கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி ஆறடிக்கு அசரவைக்கும் உடற்கட்டுடன், காற்றில் கருமுடிகள் கூத்தாடாமல் இருக்க ஜெல்வைத்து வாரிய தலையும், கையில் உயர்ரக கடிகாரமும், கண்ணில் கூலருடன், காதில் புளுடூத்தின் வழியில் யாருடனோ பிஸ்னஸ் பேசியபடி இறங்கி வந்தான் துருவ்வர்மா.

மும்பை தொழில் வட்டாரத்தின் மிகவும் இளம் வயது தொழிலதிபன். இரண்டுமுறை தொழில் சங்க தலைவராக இருந்தவன். ஒருநொடியையும் வீணாக்காமல் தந்தைக்கு நிகரான சொத்தை சேர்த்து வைத்தும், வர்மாஸ் கன்ஸ்டெக்ஸன், வர்மாஸ் ஹார்டுவேர், வர்மாஸ் ஸாப்ட்வேர், வர்மாஸ் எக்ஸ்போர்ட் என பல தொழில்களை ஒருங்கே தனித்து கவனிப்பவன் இதனால் தொழில் வட்டாரத்தில் தனக்கு நிகரான பல எதிரிகளை சம்பாதித்து அவர்களின் ஓட்டத்தையும் தன் கண் அசைவில் வைத்துள்ளவன். ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேலையை செவ்வனே செய்வதால் தான் தொழில் வட்டாரத்தில் முடிசூடா மன்னனாக வளம் வருகிறான் துருவ்வர்மா.

எக்சுலேட்டரில் இறங்கி வருபவனை பார்த்தது ஓடினர் ஐவர்கொண்ட குழு.

குட் மார்னிங் சார் என அவன் காரியத்தரசி ஷீலா கூற. மற்றவர்களும் தங்களது மார்னிங்கை தெரிவித்தனர்.

அவர்களது வணக்கத்தை சிறு தலையசைப்புடன் ஏற்றவன். ஷீலா டுடே வொர்க் டிடெய்ல்ஸ் சொல்லுங்க என்றபடி நடக்க, அங்கிருந்த நால்வருக்கும் தனி தனியே வேலையைக்கூறி அனுப்பிவைத்தவனை பார்த்தவள்.

சார், புது ஸாப்ட்வேர் செக்கிங் மீட்டிங், எக்ஸ்போர்ட்ல நியு வியர் லுக் லான்சஸ், ஸ்டார் குரூப்ஸ் கூட கான்ட்ராக்ட் சைன் பண்ணணும். அண் லாஸ்ட் ஒன் பைக் ரேஸ்க்கு சீப் கெஸ்ட்டா போகனும் . இன்னைக்கு அவ்வளவு தான் சார் என ஹோட்டல் மெனுவைப்போல் பட்டியலை வாசித்து முடித்தாள் ஷீலா.

ஓகே ஷீலா. டென் ஓ கிளாக் ஆபிஸ்ல மீட் பண்ணலாம் என்றவன் விரைவாக வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

காலையில் தன்னை சுத்தபடுத்திக்கொண்டு அனைவரும் அமர்ந்துள்ள சாப்பாட்டு மேசையின் முன் வந்தவன் பொதுவாக மார்னிங் என்றபடி அமர்ந்தான்.

அங்கு அமர்ந்திருந்த தந்தையான கல்யான்வர்மாவும் அண்ணாண சூர்யவர்மாவும் மார்னிங் என்றனர்.

என்ன மை சன் போன வேலை என்ன ஆச்சி என கேட்க. சூர்யாவோ அவ ஆட்டத்தில இறங்குனாலே சிக்சர்னு தெரிஞ்சது தானே அப்பா என கூற.

கல்யான் சிரித்தபடி, அன்னைக்கு ஏதோ கோவத்துல எனக்கு மேல ஒரு ரூபாய் அதிகமா சொத்து சம்பாதித்து காட்டுனு சொல்லிட்டேன். இப்ப என்னவிட அதிகமான சொத்தை வைச்சிகிட்டு இருக்க இப்பவும் எதுக்கு அலைந்து உடம்ப கெடுத்துகிறே என அக்கறையாக கேட்க.

அப்பா, உங்க கிட்ட வெச்ச பெட்ல நா வின் பண்ணிட்டேன். ஆனா நா அதுக்கு போட்ட உழைப்பு இப்ப என்ன சும்மா உட்கார வைக்க மாட்டேங்குது, அதா இன்னமும் சம்பாதிக்கிறேன். தினமும் வேலையில புது புது அனுபவம் கிடைக்குது, புது எதிரிகள் கிடைக்கிறாங்க, அவங்கதா நம்ப வெயிட்ட நமக்கே ப்ரூ பண்ணுறாங்க அப்பா . இந்த பீலும் நல்லா தா இருக்கு என துருவ் கூறியதை கேட்டபடி ஓன்பது மாத கருவுற்ற வயிற்றுடன்வந்தாள் அனிதா.

அனிதா சூர்யாவின் மனைவி, துருவின் கல்லூரி தோழி . சூர்யாவும் அனிதாவும் காதலித்து திருமணம் முடித்து இப்பொழுது அவர்களுக்கு யாழினி என்னும் ஐந்து வயது பெண் குழந்தையும் இருக்கிறாள்.

இருக்கும்டா இந்த பீல்லும் நல்லா இருக்கும் வயசு இருபத்து ஏழு ஆக போகுது ஒழுங்கா கல்யாணம் பண்ணுற வழிய பாரு என அதட்டியபடி அவன் அருகே வர.

எழுந்து நாற்காலியை சரிபடுத்தி அமர வைத்தவன் சிரித்தபடி அமர்ந்தான்.

சித்தப்பா என்னும் சத்தத்துடன் ஓடி வந்த யாழினியை தூக்கி மேசையின் மீது அமர வைத்தவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து முடித்தபின். தன் கையில் உள்ள கருந்துளசியை நீட்டினாள். இது இவர்களின் காலை வழக்கம் துளசிக்கு பிறகே உணவருந்த வேண்டும் என்பது துருவ் எழுதாப்படாத சட்டம்.


உணவை எடுத்தபடி சுஹாகல்யாண் ஒழுங்கா சாப்பிடுடா, உடம்பு இளைத்து போயிடுச்சி பாரு என்று கூறியபடி அனைவருக்கும் பரிமாற, சரிமா என்றபடி யாழினிக்கு ஊட்டியவன் தானும் உண்டு. அனைவரிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.

வானளவு உயர்ந்த கட்டிடங்களில் உள்ள கண்ணாடி சுவரில் சூரியனின் ஒளிகள் எதிரொளித்து ஏழு வண்ணங்களை காட்டிக்கொண்டிர்ந்த வர்மாஸ் ஸாப்ட்வேர்ஸூக்குள் நுழைந்தான்.

அவன் வருகைக்கு அனைவரும் எழுந்துநிற்க, இறுகிய முகத்துடனே தன் அறைக்குள் சென்றான்.

ஷீலா பிரசன்டேஷன் கொண்டுவர சொல்லுங்க என கூறியபடி நாற்காலியில் சுழல. உள்ளே வந்தனர் இரண்டு அணிகள். முதல் அணி தங்களின் திட்டத்தை சொல்லிமுடிக்க பல கேள்விகளுடனே விடையனுப்பினான்.
மற்றொருஅணி ஏதும் செய்யவில்லை கால அவகாசம் வேண்டும் என்று கேட்க.

இந்த ஸாப்ட்வேர் பிஸ்னஸ்ல ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப முக்கியம், உங்களுக்கு டைம் தான வேணும் என்றவன்,

ஷீலா அவங்க எல்லாருக்கும் டெய்ம் கொடுத்துவிடுங்க என்றபடி அவர்களை போகும்படி சைகை காட்ட.

அந்த பிரிவினர்கள், அவனிடம் கெஞ்சியும் பயனில்லை என அறிந்தவர்கள். ஷீலாவிடம் பேப்பர்சை பெற்றுக்கொண்டு அனைவரும் பையுடன் வெளியேறினர்.

முதல் அணியின் பிரசன்டேஷனில் சில மாற்றங்களை கொண்டு வந்து, மீட்டிங்கில் அதை ஓகே செய்துவிட்டு, ஸ்டார் குரூப்ஸ் உடன் கான்ட்ராக்ட் சைன் செய்துவிட்டு. ஷீலாவும் துருவனும் அன்று மதியமே பைக் ரேசுக்காக பெங்களூர் சென்றனர்.

பெங்களூரில் புகழ் பெற்ற பைக் ரேஸ் இடத்தில் வீரர்கள் தயாராகிக்கொண்டு தங்களுடைய கோச்சுக்கு சென்றனர்.

அறிவிப்பாளர் மைக்கில் கலந்துக்கொண்டவர்களின் ரிஜிஸ்டர் நம்பரை வாசித்து வரிசைபடுத்த, அங்கிருந்த விதிமுறையாளர் ஆன் கெட் செட் கோஓஓ..என்றபடி கையில் இருந்த துப்பாக்கியை சுட.

வண்டிகள் யானை பிளிறலையும் சிங்க கர்ஜனையும் கொண்டு சீறி பாயந்தது, சிலர் மேட்டின் மேல் ஏறி ஆகாசத்தில் வண்டியை சுழற்றி சாகசங்கள் காட்ட, சிலர் தரையோடு சாய்ந்தபடி வண்டியை திருப்ப, சிலர் முன்வீலை தூக்கி சுற்ற, சிலர் பின்வீலை தூக்கி முன் வீலோடு நகர என அறிவிப்பாளர் அவர்களின் சாகசத்தை கூறிக்கொண்டிருக்க. வேடிக்கை பார்க்க வந்தவர்களும், வீரர்களின் உறவினர்களின் கத்தலுடன் மூவரின் வண்டி வெற்றி கேட்டை தாண்டி பறந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்க துருவ்வர்மா மேடைக்கு வர மூன்றாம் பரிசு, இரண்டாம் பரிசு, என கோப்பையை கொடுத்து முடிக்க, அறிவிப்பாளர் 839 அக்னிநேத்ரா என பெயரை வாசிக்க, கோப்பையை எடுக்க சென்ற கைகள் அப்படியே நின்றன.

முதல் பரிசை சொன்னதும் மக்கள் அக்னிஇஇ என்றும், சிலர் நேத்ரா நேத்ரா என்றும்,பலர் 839 அக்னிநேத்ரா பெயர் பலகையை தூக்கி கத்த.

அந்த புகழ் சத்தத்தை கேட்டபடி தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்டினாள் அவள். ஐந்துஅடி உயரமும் ஸ்மூதிங் செய்தமுடி முகத்தில் விழ தன் வலது கையில் ஹெல்மெட்டை பிடித்தபடி இடது கையால் முடியை சரிசெய்தபடி நடந்துவந்த அக்னிநேத்ராவை உள்ளே கோச்சில் இருந்து ஓடிவந்தவன் அவளை கட்டிக்கொண்டு குதிக்க. அதை பார்த்த துருவனின் கண்கள் சிவப்புற்றது.

மீண்டும் அறிவிப்பாளர் 839 அக்னிநேத்ரா என அழைக்க, அவனிடம் இருந்து மேடையை நோக்கி சென்றாள்.

வில் புருவமும், மையில்லாமல் விரிந்த கயல் விழிகளும், கூரிய நாசியும் , இயற்கையிலே சிவந்த உதடுகள், உடலை முழுவதும் மூடிய கருப்பு கோட்டும் என ஒவ்வொன்றையும் ரசித்தவன் கண்களில் செம்மை நிறம் குறைந்திருந்தது.

அக்னியின் கால்கள் படிகளில் ஏறியபடி கண்கள் மேடையை ஆராய்ந்து பார்க்க அதில் கண்ட ஒரு உருவத்தை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள் அவள் மனக்கண்ணில் பழைய நினைவுகள் வந்து போனதை அவளாளே தடுக்க முடியவில்லை.

அனைவரின் கை தட்டல்கள் செவியை அடைய தன்னை சமன்படுத்திக்கொண்டவள் மேடை ஏறி அனைவரையும் பார்த்து சிரித்தாள்.

துருவன் அவளை பார்த்து சிரித்து சூப்பர் என்றபடி கையை நீட்ட, அவள் இருகையையும் குவித்து நன்றி என கூற, கடுப்பானவன்

ரொம்ம கொழுப்பு அவனை கட்டிபிடிப்ப, என் கைய பிடிக்கமாட்டியா என கேபமாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனின் பேச்சை கேட்டும் கேளாதபடி நின்றிருந்தாள்.

துருவிடம் கோப்பையை கொடுக்க அதை எடுத்தவன் கங்கிராட்ஸ் நேத்ரா என நேத்ராவில் அழுத்தம் கொடுத்து கோப்பையை நீட்ட, தேங்ஸ் என்றபடி வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டாள்.

உடனே துருவன் ஷீலாவிடம் அக்னிநேத்ரா டீடியல்ஸ் என கூறியவன். அவள் தன் நண்பர் பட்டாளங்களுடன் இணைந்து பேசுவதைப்பார்த்தபடி ஒரு பெரு மூச்சை விட்டான்.

👀 நொடிக்கும்...⏱
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top