• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நோன்பின் நோக்கம் என்ன...????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
நோன்பின் நோக்கம் இறையச்சமே..!




“இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவராய்த் திகழக்கூடும்.” (குர்ஆன் 2:183)நோன்பின் நோக்கம் இறையச்சம் எனும் பயிற்சியைப் பெறுவதுதான் என்பது உறுதியாகிறது. சரி, நோன்பு இறையச்சத்தை ஊட்டுகிறதா? நிச்சயமாக. ஒருவர் தொழுகிறார், தான தர்மம் செய்கிறார், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதை எல்லாம் மிக எளிதாக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ளலாம். ஆனால் நோன்பு வைத்திருக்கும் ஒருவர் “நான் நோன்பாளி” என்று அவராகவே சொன்னால்தான் நமக்குத் தெரியும். நோன்பு என்பது இறைவனும் அடியானும் மட்டுமே அறிந்த ஒரு வழிபாடாகுமஇப்படி ஒரு நிகழ்வைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒருவர் நோன்பு வைத்துக்கொண்டு காலை ஒன்பது மணி அளவில் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார். வழியில் ஓர் உணவகத்திலிருந்து கமகமவென நெய் தோசையின் நறுமணம்.அவருக்குத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் இல்லை. அவர் நோன்பு வைத்திருக்கிறாரா இல்லையா என்பதும் யாருக்கும் தெரியாது. அவர் விறுவிறுவென்று உணவுவிடுதிக்குச் சென்று நெய் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட்டாலும் யாரும் கண்டிக்கப்போவதுமில்லை, யாரும் கண்டுகொள்ளப்போவதும் இல்லை.ஆனாலும் அவர் அப்படிச் செய்வதில்லை. ஏன்? “நான் நோன்பு வைத்துள்ளேன். இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னைக் கண்காணிக்கிறான். மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றிவிடலாம், ஆனால் ஒருபோதும் இறைவனை ஏமாற்றமுடியாது” என்கிற இறையச்சம்தான் அவரைத் தடுக்கிறது.



“நெய்தோசை” ஓர் எடுத்துக்காட்டுதான். அது போலத்தான் ஒவ்வொன்றும். அலுவலகத்தில் ஒரு காரியத்தை முடித்துத் தர ஒருவர் லஞ்சமாகப் பணத்தை நீட்டுகிறார். மனம் துடிக்கிறது..! “பணத்தை வாங்கிக்கொள், பெருநாள் செலவுக்கு ஆகும்” என்று மன இச்சை தூண்டுகிறது. ஆனால் அவருடைய இறையுணர்வு தடுக்கிறது. “நீ நோன்பாளி. சாதாரண நேரத்தில் லஞ்சம் பெறுவதே பெரும் பாவம். இப்போது நோன்பு வேறு வைத்திருக்கிறாய். நோன்பு வைத்துக் கொண்டு லஞ்சம் பெறுகிறாயா? இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் மறவாதே” என்று மனம் இடித்துரைக்கிறது. உடனே லஞ்சம் எனும் பெரும் பாவத்திலிருந்து அவர் விலகிக்கொள்கிறார். காரணம், நோன்பு தரும் இறையச்சப் பயிற்சி.“நோன்பு வைத்திருக்கும் நிலையில் யார் பொய் சொல்வதையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பது பற்றியோ தாகித்திருப்பது பற்றியோ இறைவனுக்கு எந்த அக்கறையும் இல்லை” என்று நபிகளார்(ஸல்) எச்சரித்துள்ளார்.உண்மையைப் பேசுதல், நேர்மையாக நடத்தல் ஆகிய உயர் பயிற்சிகளின் மூலம் ஆன்மா ஒளி பெற வேண்டும் என்பதுதான் நோன்பின் நோக்கம். ஆகவே பொய் புரட்டு புறம் பேசிக்கொண்டே நோன்பு வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும்?புறம் பேசிக் கொண்டிருந்த இரண்டு நோன்பாளிகளை அழைத்து நபிகளார் கூறினார்கள்: “நீங்கள் இன்று வைத்துள்ள நோன்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்னொரு நாளில் இந்த நோன்பை மீண்டும் நீங்கள் நோற்க வேண்டும்.”அந்த இரண்டு நோன்பாளிகளும் இறைத்தூதரை நோக்கி, “நாங்கள் செய்த தவறு என்ன?” என்று கேட்டார்கள்.“நீங்கள் இருவரும் புறம் பேசிவிட்டீர்கள். புறம் பேசுதல் என்பது இறந்துவிட்ட சொந்த சகோதரனின் இறைச்சியைப் புசிப்பது போல். ஆகவே உங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படாது’ என்று விளக்கம் அளித்தார் நபிகளார்.பொய், புறம், சண்டை சச்சரவு, தீய வார்த்தை பேசுதல் போன்ற எல்லா வகைச் செயல்பாடுகளையும் விட்டு விலகியிருத்தல்தான் நோன்பு ஆகும்.நாம் பேசுவதையும் செய்வதையும் இறைவன் கேட்டுக்கொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறான் எனும் எண்ணம் உள்ளத்தில் பசுமையாக இருந்தால்தான் தவறுகளிலிருந்து விலகி இருக்க முடியும்.அத்தகைய இறையச்சப் பயிற்சியைத்தான் நோன்பு எனும் உயர் வழிபாடு அடியார்களுக்கு அளிக்கிறது.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இவற்றை விடுத்து ஐந்து வேலை தொழுகை,குர் ஆன் ஓதுதல்,திக்ரு எண்ணுதல்,நபி(ஸல்)ஸலவாத் கூறுதல்,போன்றவற்றை செய்யலாம்!

ஒருவர் நோன்பு திறக்கும் சமயத்தில் கேட்கப்படும் துஆ என்பது அல்லாஹ் தஆலாவால் நிச்சயம் நிறைவேற்றப்படும்!☺

நோன்பை வைத்து விட்டு தூங்கியே அந்த நாளை கடத்தக்கூடாது !

மனிதன் பசியின் அருமையை உணர்ந்து பசியில் வாடுபவர்க்கு உணவு அளிக்க வேண்டும் என்பதும் நோன்பின் நோக்கம்!

அதிகமாக ஜகாத் குடுப்பவர்களுக்கு அதிக நன்மையை அல்லாஹ் வழங்குவான்

நோன்பாளிகள் மீது கருனையும் இறக்கமும் காட்ட வேண்டும் !
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top