• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
துளசி அன்று இரவு முழுவதும் யோசனையில் மூழ்கி இருந்தாள். ராகவனுக்கு அன்று உடல் அலுப்பு அதிகமாக இருந்ததால் உற்சாகத்தில் மூழ்கி போனான். துளசிக்கோ அம் மாணவனின் எதிர்காலம் அவள் கண் முன்னே தோன்றி அச்சுறுத்தியது.

"இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த போதையால் தங்கள் எதிர்காலத்தை தொலைத் திருப்பார்களோ?" மனதினுள் கவலை உருண்டோடியது.

இப்பிரச்சனைக்கான தீர்வு என்ன? என்று எண்ணும் போது தான் அவள் மனத்திரையில் சட்டென்று நிழலாடியது அந்த காட்சி.

துளசி வளர்ந்த ஆசிரமத்தில் ஆண்டு விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பேச்சு போட்டி, கவிதை, கட்டுரை போன்ற பல போட்டிகளை நடத்தினர். அத்தனை போட்டியிலும் முதல் பரிசை தட்டிச் சென்ற துளசிக்கு விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த டி.ஜி.பி. முத்துச்சாமி கோடயத்தையும், சான்றிதழ்களை யும் துளசிக்கு பரிசாக வழங்கி அவளை வெகுவாக பாராட்டி பேசினார். மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்ய கடமைப்பட்டிருப்பதாக கூறிய வரின் தொலைபேசி எண்ணை தனது டைரியில் குறித்து வைத்த ஞாபகம்!

உடனே தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தூசி படிந்திருந்த டைரியை தட்டி பக்கங்களை புரட்டினாள். அதில் டி.ஜி.பி. முத்துச்சாமியின் தொலைபேசி எண் அவளுடைய முத்தான கையெழுத்துகளால் மின்னின! அப்போது தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு பிறந்தது .


காலையில் எழுந்ததும் வழக்கம் போல் ஆண்டாளிடம் அர்ச்சனைகளை வாங்கி விட்டு வேலைகளை முடித்து பள்ளிக்கு சென்ற துளசி தன் மொபைல் போனை உயிர்ப்பித்து டி.ஜி.பி. எண்களுக்கு உயிர் கொடுத்தாள்.

தொலைபேசியில் விவரத்தை தெரிவித்தாள் பள்ளிக்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பாடாது, அதே சமயம் போதை மருந்து கும்பலை பிடிக்கும் படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ள டி.ஜி.பி முகம் தங்கள் பிரச்சனையை சுமூகமாக முடித்து தருவதாக வாக்குறுதியத்தைக் கூற அதிர்ச்சியும் படபடப்பும் அவரை தொற்றிக் கொண்டது. அரைமணி நேரத்தில் பள்ளிக்கு சாதாரண உடையில் வந்த காவல்துறையினர் பள்ளி முதல்வர் சந்தித்து தங்கள் திட்டத்தை விவரித்தார்.

பள்ளி முதல்வர் விவரத்தை எந்த ஆசிரியையிடமும், தெரிவிக்கவில்லை. அனு தன் மாமாவின் திருமணத்திற்காக மூன்று நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்ததால் துளசியால் அனுவிடம் தெரிவிக்க முடியாத சூழ்நிலை!

மாலை 5 மணி! காவல்துறையினர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மறைந்த வண்ணம் நின்றிருக்க அங்கு வழக்கம் போல சுவரை ஏறிகுதித்து போதை மருந்து பாக்கெட்டுகளை விற்கும் கயவனையும், ஸ்டீபனையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து அலேக்காக பிடித்தனர்.



? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top