பகுதி -11

#1
ஊருக்குப் போய் சேர்ந்து தன் மனிதர்கள் என்று குரு குடும்பத்தினர் பார்த்த போது கூட தன் எதிர் பார்த்த மகிழ்ச்சி தன் மனதில் எழவில்லை என்பதுl ஆச்சரியமாக உணர்ந்தாள் மிருதுளா.


மனம் முழுவதும் சேர்ந்து, தன் ரக்ஷ்னாவின் சோக முகமே நிறைந்திருந்தது. சில மாதங்களயான தொடர்பு தான். ஆனாலும், எப்படி இப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது! அந்தக் குழந்தையை இனி தான் பார்க்கும் சந்தர்ப்பமே வராதோ? மனம் வலித்தது.


வெளியே வலுக்கட்டாயமாய் புன்னகையை மாட்டிக் கொண்டாள். குரு குடும்பத்தினரின் வரவேற்பு உபசாரங்களை எற்றாள். அவசரமாய் குளித்தாள். குருவின் மகள் வாணியை கேலி செய்தபடி இறங்காத உணவை வயிற்றில் திணித்தாள். மணி 10 பின் இதயா அலுவலகம் சென்றிருப்பான் என்ற உறுதியான எண்ணத்துடன், குன்னூருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.


அவள் எண்ணத்திற்கு மாறாக, அவள் எதிர்பார்த்த அமைதியான பாகீரதியம்மாளின் குரலுக்கு பதில் அதிகாரமான ஆத்மாவின் குரல் "ஹலோ" என்றது.


ஒரு நொடி இணைப்பை துண்டித்து விட இருந்தாள். மறு நொடி குழந்தை பற்றி அறியத் துடித்த பாசம் தெம்பு வர, "நா...ன் மிருதுளா.... பேசறேன்... பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்..." என்றாள்.


மறு முனையில் எந்த ஒரு பதில் வர வில்லை.


"கு... குழந்தை அப்புறம் சமாதான மாயிட்டாளா? பிரச்சினை எதுவும் இல்லையா?"


ஒரு அழுத்தமான மௌனத்தை பதில் முதலில் பதிலாய் தந்தவன் அவதை விட அழுத்தமான குரலில் , "லுக் மிருதுளா... நான் ஏற்கனவே சொன்னபடி அவ என் குழந்தை. நீங்க காசுக்கு பார்த்துக்க வந்தீங்க . அந்த எல்லையோர நிறுத்திக்கோங்க , ரைட்? போன வேலையில் கவனம் செலுத்துங்க. குழந்தை யாழ் கிட்ட ராசாத்தி மாதிரி இருக்கா" என்றவன் பளிச்சென இணைப்பை துண்டித்தான்.


உண்மையான பாசத்துடன் கேட்ட தனக்கு இப்படி ஒரு பதிலா என்று துடித்துப் போனவளின் கண்கள் தன்னிச்சையாக கண்ணீரை சிந்தின.
 
Latest Episodes

Advt

Advertisements

Top