• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
பிரமாதமாய் அவளிடம் இதயா சொல்லி விட்டானே தவிர, குழந்தையை சமாளிப்பது அத்தனை சுலபமாய் இல்லை . யாழ்க்கு எல்லாம் சொல்ல வேண்டி இருந்தது. சொன்னாலும், அவள் சொன்னபடி செய்தவுடன் வந்து ஒட்டிக் கொண்டு விட ரக்ஷு என்ன பசையா? குழந்தை! அது தன்போக்கில் தான் நடந்து கொண்டது. அதை பொறுமையாய் தன் வசம் திருப்பும் திறமை யாழ்க்கு இல்லை.

அலுவலகத்திற்குக் கூட போகாமல் யாழ்க்கு உதவியாய் அவனும் வீட்டில் தங்கிக் கொண்டான். இருந்தும் பலன் இல்லை.

" என்ன யாழ் என்று அவன் அலுத்துக் கொண்ட போது, இதயா நான் ஒண்ணும் 'இன்ஸ்டன்ட்' அம்மா கிடையாது" என்றாள் பளிச்சென்று.

பாகீரதியம்மாளிடமும் இதையே அவன் சமாதானமாய் சொன்னான்."அம்மா ஒரு பொண்ணு மனைவியான பின் உடலாலும் மனசாலும் தாயா மற இயற்கையே பத்து மாசம் தருது. தீடீர் ஒரு ரெண்டு மூணு வயசு குழந்தையை இவ முன்னாடி நிறுத்தி ஒரே நாளில் பழகிக்கோனு சொன்னா... எப்படி?"

பாகீரதியம்மாள் சிரித்து கொண்டார்.

"தாய்மை இயற்கையான விஷயம்பா. பெண்களுக்கு இயல்பா வரும் உணர்வு. குழந்தையோட பழக்க வழக்கம் பிடிபட சில நாட்களாகலாம். ஆனா, மனசுல எழும் பாச உணர்வு தன்னால, தான்னிச்சையா கால நேரம் பார்க்காம வெளிப்படும். மிருதுளா இவளை விட சின்னவ. இவளுக்கு பக்கத்துல நீ இருந்து உதவறா மாதிரி அவளுக்கு யாரும் உதவக்கூட இல்லை. குழந்தைகிட்ட பார்த்த நொடி முதல் ஒட்டிக்கிட்டாளே!"

உண்மை என்று பட்டாலும், அவனால் உடனே ஏற்க முடியவில்லை.

"அதுவேதாம்மா இவளுக்கு எதிரா இருக்கு‌. அவ நினைவில் இவகிட்ட ஒட்ட மாட்டேங்கறா, குழந்தை...."

"அதுக்கு யார் என்ன செய்ய முடியும்? அவளை விட அதிக பாசமும் பொறுமையும் இருந்தாத்தான் யாழ் குழந்தையை ஜெயிக்க முடியும்." பளிச்சென பாகீரதியம்மாளும் சொல்லி விட்டார்.

அவனுக்கு அது புரிந்தது. ஆனால் யாழ்க்கு அது ரெண்டுமே குறைவு

குழந்தை பிறந்த சில தினங்களில் மனைவி இறந்த விட, உலகமே சூன்யமாய் உணர்ந்த பொழுதில், அதிகம் அவன் குழந்தை பக்கம் வரவில்லை.

மருமகள் இறந்த, மகன் உன்மத்தம் பிடித்தது போல் இருக்க, பிஞ்சு குழந்தைக்காக ராக் கண் விழித்து, துணி மாற்றி, நேரம் பார்த்து உணவு கொடுத்து என் பம்பரமாய் சுழல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவருடைய உடல்நலனை கவனித்துக் கொள்ள முடியாமல் போனது. சாக்கரை நோய் , ரத்த அழுத்தம் எல்லாம் எகிற ஒரு நாள் மயங்கிக் கீழே விழுந்தார். வீட்டு வேலையாட்கள் பதறி மருத்துவருக்கும் இதயாக்கும் செய்தி சொல்ல, இருவரும் பறந்து வந்தார்கள்.

"ஒன்றும் பயப்பட வேண்டாம். இந்த வயசுல கண் விழச்சு குழந்தையை பார்த்துக் கொள்றதெல்லாம் கொஞ்சம் அசாத்தியமான வேலை. ஒய் டோன்ட் யு ரீமேரீ, இதயா? அம்மாவுக்கு இவ்வளவு வேலையும் கவலையும் குறையுமே" என்றார் பரிசோத்தித்த மருத்துவர்.

அப்போது தான் அவன் வாழ்வில் யாழ் நுழைந்திருந்த சமயம். பூவாய் அவன் முகம் மலர்ந்தது. அதை குறித்துக் கொண்ட மருத்துவர், அம்மாகிட்டயும் சொல்றேன். ஆனா பொண்ணு ரெடியாவே இருந்தாலும், அடுத்த நாளே முகூர்த்தம் வைக்க முடியாது. அதனால , உடனடியா படிச்ச, பண்பான பொண்ணா பார்த்து குழந்தையை பார்த்துக்க வேலைக்கு சோர்த்துடுங்க. அம்மா மேல் பார்வை பார்த்துக்கட்டும் " என்றார்.

அதன் படி தான், மிருதுளாவை வேலைக்கு சேர்ந்தார்கள்.

?நம்ம கதை நாயாகி வேலைக்கு எப்படி சேர்ந்த சொல்லிட்டேன் ?

?திரும்பா இதயா விட்டுலா வேலைக்கு சேர்வாளா இல்லை தன் ஊர்யில வேறு வேலை பார்ப்பாலா பொருத்துருந்து பார்போம் ?

?இதயா தன்னை அவமரியாதை செய்தாக்கு மன்னிப்பு கேட்க சொல்வாளா மிருதுளா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதய ராசனோட யாழ் பைத்தியமும் கிறுக்கும் அந்த டாக்டருக்கும் அப்பவே தெரிஞ்சு போச்சா?
ஹா ஹா ஹா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top