• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி-21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
மறுநாள் காலையில் ராகவன் தன் டெல்லி பயணத்திற்கு ஆயத்தமாக கிளம்பி நின்றான். மருத்துவமனையில் துளசியையும், குழந்தையும் பார்த்து மனமில்லாமலேயே விடைபெற்றான்.

ஏனோ, ராகவன் டெல்லிக்கு புறப்பட்டு செல்வது அவள் மனதினுள் நெருடலாகவே இருந்தது!

ராகவன் டெல்லிக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் சாந்தியை சந்தித்து தன் முடிவை கூற, திலீப்பும் , சாந்தியும் வெளித்தோற்றத்தில் மிகச் சாதாரணமாய் முகத்தை வைத்து கொண்டாலும் மனதினுள் அலை அலையாய் சந்தோஷம். அதன் பின், அங்கு நின்று கொண்டிருந்த ஆண்டாளிடம் திரும்பிய ராகவன், "அம்மா..‌. நானும் ‌உன் வயித்துல தான் பிறந்தேன்.ஆனா உனக்கு என்னை காட்டிலும் அக்கா மேல தான் பாசம் .... பரவாயில்லை... எனக்காக ஒரு உதவி பண்ணு .... ஹாஸ்பிடல்ல துளசி அட்மிட் ஆகியிக்கா....அவளை வேளா வேளைக்கு சாப்பிட கொண்டு வந்து ஒரு தாய் மாதிரி அவளை கவனிச்சிக்க அது போதும்...." கண்களில் நீர் கோர்த்தவாறு கூறிவிட்டு ராகவன் புறப்பட்டான்.

இரு நாட்கள் கழித்து துளசி தன் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள். ராகவன் டெல்லிக்கு சென்று இரு நாட்கள் ஆகியும், எந்த ஒரு தொலைபேசி அழைப்பும் வராததால், துளசிக்கு மனதினுள் கவலை உருண்டோடியது.

குழந்தை அழுதால், ஆண்டாள் தூக்க கூட மாட்டாள். ஏதோ தனக்கும், அக்குழந்தைக்கு எந்தவொரு ரத்த பந்தமும் இல்லாதது போல் இருந்தாள். குழந்தையை துளசி தான் முழுவதும் பார்த்துக் கொண்டாள்.

வாரம் ஒன்று உருண்டோடியது!

ராகவனிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராததால் துளசிக்கு பயம் அதிகரித்து. அவனுடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டால் 'சுவிட்ச் ஆப்' என்ற செய்தி கேட்டால் அவள் மனதினுள் கலவரம் அதிகமானது.

மாலையில் ஆண்டாள் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான். செய்திகளை பார்த்த வண்ணம் இருந்தாள்.

குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால், துளசி துவைத்து துணிகளை மடக்கிய வண்ணம் அவ்வறையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது அச்செய்தியில் வெளிவந்த காட்சி அவளை பெரிதும் அதிர்ச்சியைடைச் செய்தது. அதில் ராகவன் புகைப்படம் காட்டப்பட்டது.

தமிழகம், புதுவை , கேரளா, பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர் என்ற செய்தி வெளியானது.

இதில் கடத்தல் காரணமோ.... இன்னும் அரசுக்கு தெரிவிக்கபடவில்லை என்றும் செய்தி ஒளிப்பரப்பானது . ஆண்டாளும் இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள். துளசிக்கு கண்களி இருந்து நீர் அருவியாய் கொட்டத் தொடங்கியது.

தலையில் ஒரு பெரிய இடி விழுந்ததுப் போல் தோன்றியது! எந்த தொலைக்காட்சி சேனலை திருப்பினாலும் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்தது.

அன்றைய இரவு, துளசியின் தலையணையைக் கண்ணீரால் ஈரமாகிய வண்ணம் கழிந்தது.

மறுநாள் காலையில் எழுந்தது முதல் தொலைக்காட்சி செய்தி கவனிக்கத் தொடங்கினால் செய்தியை கவனிக்கத் தொடங்கினாள். ஆண்டாளும் செய்திகளுள் பார்வை கலக்க, விஷமறிந்த சாந்தியும், திலீபனும், சரண்யா அதிகாலையில் வீட்டுக்கு வந்து விட்டனர்.

திடீரென தலைப்புச் செய்தியில் தீவிரவாதிகள் கடத்தியதற்கான காரணம் வெளியிட்டதாக செய்தி வந்ததும், அனைவரும் ஆவலுடன் செய்தியை கவனிக்கத் தொடங்கின 20 வருடங்களாக காஷ்மீர் மற்றும் டெல்லியில் குண்டு வைத்த பல உயிர்களை பறித்த அக் கூட்டத்தின் முக்கிய தலைவன் திகார் சிறையில் இருப்பவனே விடுவிக்கக் கோரி அரசுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அப்படி அரசு தீவிரவாதிகள் தலைவனை விடுதலை செய்ய தவறினால் கடத்தப்பட்ட 20 பேர் தலையை துண்டித்த கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்தி வெளியான.

இச்செய்தியை கண்டதும், அனைவரின் முகமும் இறுகிப் போனது. துளசி குழந்தையை மடியில் படுக்க வைத்துக் வண்ணம் அழுதுக் கொண்டிருந்தாள். மாலையில் கோவில் சென்று மனமுருகி வேண்டினாள்.

கடத்தப்பட்ட 20 நபர்களும் தங்கள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனை ஏற்கப்படுமா? அல்லது நிராக்கப்படுமா ? என்று இறைவனை மட்டும் அறிந்த ரகசியமாக இருந்தது.


? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்மா தஸீன் டியர்
என்னோட துளசி மேல உங்களுக்கு எதுக்கு இம்புட்டு காண்டு?
ராகவன் வர மாட்டான்னு பச்சைக் குழந்தையுடன் துளசியை ஆண்டாளும் அவள் மகளும் துரத்தப் போறாங்க
வேலையுமில்லாமல் கைக்குழந்தையுடன் துளசி எங்கே போவாள்?
என்ன செய்வாள்?
ராகவன் வந்து என் பொண்டாட்டியும் பையனும் எங்கேன்னு கேட்டால்
இந்த இரண்டு மூதேவிங்களும்
என்ன பதில் சொல்லுவாங்க?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top