• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
அன்னை இல்லம் துளசி வளர்ந்த அநாதை ஆசிரமம். ஆட்டோவில் இருந்து ஆசிரமத்திற்குள் தன் குழந்தையுடன் உள்ளே நுழைந்த துளசிக்கு. சிறுவயதில் ஒடித்திரிந்த காலங்கள் அழியாத கோலங்களாக அவள் நினைவுச் சுவடுகளில் நின்றது. அவளை கண்டதும் ஆங்காங்கே முளைத்த தலைகள் அனைத்தும், அவளுக்கு பரிச்சயம் பட்ட முகங்களே! தலை குனிந்தவாறே நடந்த அவள், அந்த அன்னை இல்லத்தின் நிர்வாகியான, 'வசுந்தரா' அம்மையாரை கண்டு பேசத் தொடங்கினாள். கையில் குழந்தையுடன் வந்த துளசியை கண்டதும் முதலில் சந்தோஷப்பட்ட அம்மையார், துளசியின் முகம் வாடிப்போயிருப்பதை கண்டு குழம்பி போனாள். தனக்கு நேர்ந்த இன்னல்கள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். அந்த அம்மையாருக்கே கண்கள் கலங்கி போனது. தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை தானும், தன் குழந்தையும் தங்க அனுமதி கேட்க, வசுந்தரா அம்மையார், முழு மனதுடன் அவளுக்கு ஆதரவு அளித்தாள்.

துளசியையும், குழந்தையையும் அங்கிருந்தவராகள் முழு அன்புடனுடன் கவனித்துக் கொண்டனர்.

ராகவனை பற்றி தகவல்கள் ஏதாவது கிடைக்குமா என்று தின சரி நாளிதழ்கள் அனைத்தையும் தினமும் வாங்கி புரட்ட ஆரம்பித்தாள். டெல்லிக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க யாரிடம் உதவி கேட்கலாம் என்று குழம்பித் தவித்த வேளையில் டி.ஜி.பி.முத்துச்சாமியும், தோழி அனுவும் ஞாபகத்தில் வந்தனர். திருமணமாகி தன் கணவனுடன் டெல்லி சென்ற அனுவை உதவுமாறு கேட்கலாம் என்று தோன்றியது.

உடனே தொலைபேசியை எடுத்து அனுவின் எண்களை அமர்த்தி உயிர்பித்தாள். அனுவிடம் பேசிய துளசி தன் கஷ்டங்களையும், ராகவனைப் பற்றி செய்தியையும் அழுதவாறே கொட்டித் தீர்த்தாள்.

துளசியின் பரிதாப நிலையை கண்டு அனுவிற்கு மனது கஷ்டமாக இருந்தது.

"துளசி கவலைப்படாதப்பா! என் கணவரின் பிரண்ட் இங்க... அஸிஸ்டெண்ட் கமிஷனரா இருக்காரு.... அவரு மூலமா உன் புருஷனை பத்தின தகவல்களை உனக்கு சொல்றேன்... எதுக்கும் கவலைப்படாத..... நான் இருக்கேன்.... ஆண்டவன் உன்னை கைவிட மாட்டாரு...."

"ரொம்ப நன்றி அனு.... நான் வேணா என் குழந்தையோட அங்க வரவா...?"

"வேண்டாம் துளசி... இங்க நிலைமையே சரி கிடையாது.எங்க பார்த்தாலும் கலவரமா இருக்கு.... நான் பார்த்துக்கறேன்.... நீ பயப்படாதே...." என்று ஆறுதலாய் கூறிய பின் துளசிக்கு சற்று சமாதானமாய் இருந்தது.

அனு கூறிய படியே, இரண்டு வாரங்கள் கழித்து துளசியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அனு, அவளுக்கு ஆறுதலான செய்தி ஒன்றை கூறினாள்.

"துளசி... என் கணவரின் நண்பரான கமிஷனர்னு சொன்னேன்ல.... அவரு மூலமா உன் புருஷனைப் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு துளசி..."

"அப்படியா என்ன தகவல் அனு.... சொல்லு..." ஆவலுடன் துளசி கேட்டாள்.

"உன் புருஷன் சாகலை துளசி... என்று கூறியதும், அவளுக்கு உடல் முழுவதும் உணர்வு அலைகள் பரவசமாய் பரவ மனதினுள் சந்தோஷக் காற்று வீசத் தொடங்கியது.

"என்ன சொல்ற அனு? நீ சொல்றது நிஜம்தானா?

"ஆமா துளசி ... உன் புருஷன் அவங்க ஒன்னும் பண்ணலையாம் ஆனா?" என்று இழுத்தாள் அனு.

"என்ன அனு... சொல்லு..."

"உன் புருஷனோட சேர்த்து மொத்தம் பத்து நபர்கள் அவங்க பிணை கைதியாத்தான் வச்சிருக்காங்களாம்.... அரசாங்கம் அவங்க கோரிக்கையை ஏத்துக்க மறுத்துட்டதால தான், அவங்களுக்கு இவ்வளவு கோபம்...." அனு கூறிய பின் துளசியிடம் இருந்து எந்தவொரு பதிலும் வராததால் குழம்பி போனாள் அனு.

"துளசி... என்ன ஆச்சு...?"

"அனு... என் புருஷன் உயிரோட இருக்காதுன்னு நினைச்சு சந்தோஷப்படறதா... இல்லை...அவரு இப்படி பிணை கைதியா இருக்கறதை நினைச்சு வருத்தப்படறதான்னு எனக்கு தெரியலை அனு...." வருத்தம் தோய்ந்த குரலில் துளசி கூற , அவளின் நிலையை எண்ணி அனு வருந்தினாள்.

"கவலைப்படாதே துளசி... உனக்கு நிச்சயமா உதவி புரியுதா கமிஷனர் சொல்லியிருக்காரு... நீ தினமும் அந்த ஆண்டவனை வேண்டிக்கோ துளசி... உடம்பை பார்த்துக்கோ..." என்று கூறிவிட்டு தொலைபேசியை அணைத்தாள்.

துளசிக்கு ஒரு பக்கம் தன் கணவனின் நிலை கவலை அளித்திட, மறுபக்கம் அவள் குழந்தையின் எதிர்காலம் அச்சுறுத்தியது. ஆண்டாளிடம் தான் போட்ட சபதம் அவள் கண்முன் நிழலாடியது.

? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top