• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி - 36 தொடர்ச்சி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
“அப்போ... சித்தார்த் ஹாவ்வ பார்க்கவும் தான், என்கிட்ட பேசவே செய்தானா? அப்படி அவன் வராமல் போயிருந்தால்...” என முடிக்காமல் விட்டார் விசாலி.
“நீ ஏன் அப்படி நினைக்குற... அவன் தப்ப அவன் உணர்ந்துட்டான். அதற்கு ஹாவ் ஒரு கருவியா இருந்திருக்கான். ஆனா அவன் வந்துட்டு போய் எப்படியும் ஒரு இரண்டு மாசமாவது இருக்கும்...” என நிதர்சனத்தைக் கூறினார்.
ஆனாலும், விசாலினியின் மனம் கொஞ்சம் நெருட தான் செய்தது. விடிந்ததும், தோட்டத்தில் இருந்த தன்னை, தேடி வந்த மகனிடம், “ஏன் சித்து, ஹாவ் வந்து சொல்லலேன்னா... நீ என்ன ஏற்றுக் கொண்டிருக்க மாட்ட... அப்படித் தானே?” என நேரிடையாய் கேட்டார்.
ஆனால், அவனோ பதில் சொல்லாமல், அவரை அணைத்தவன், கண் கலங்க “அப்படியெல்லாம் இல்ல மா... ஆனா அவன் வரலேன்னா... இப்ப பேசியிருக்க மாட்டேன் தான்” என்று உண்மையாய் அவன் மனதை உரைத்தவனிடம் அவரும் கண்ணீர் வடித்தார்.
“ஆனா அம்மா... கண்டிப்பா... கண்டிப்பா உங்ககிட்ட பேசியிருப்பேன் மா. ஆனா கொஞ்ச நாள் ஆகிருக்கும்...” எனச் சொன்னவனைப் புரியாமல் பார்க்க, “ஏன்னா, இன்னும் கொஞ்ச நாளானா, எனக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வந்திருக்கும்ல மா...” எனக் கண்ணைச் சுருக்கி, தலையாட்டி சிறு பிள்ளை போல் சொன்னவனைக் கண்டு, சிறு வயது சித்தார்த்தாய், அவன் அவர் கண்களுக்குத் தெரிய, சிரித்து விட்டார்.
“நீ எப்போவும் பக்குவமானவன் தான் பா... அப்படி இல்லாட்டி, அப்பா அம்மா அரவணைப்பு இல்லாம, கை நிறையப் பணம் இருந்தும், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம, நல்லவனா, இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்த கட்டி காப்பவனா இருந்திருப்பியா?” எனத் தன் மகனை உச்சி முகர்ந்தார்.
“இதுக்கு எல்லாம் காரணம் நான் இல்ல மா... தாத்தா தான்.” என்றான்.
“ஆமா... மாமா மட்டும் இல்லேன்னா... நினைக்கவே பயமா இருக்கு... ரொம்ப நல்ல மனுஷர் பா...” என அவர் மட்டும் அப்போது இல்லையென்றால், இந்தக் குடும்பப் பெயரும், தொழில்களும் காற்றில் கரைந்து போயிருக்கும், தன் மகனும் தன் மீது வஞ்சம் கொண்டு தொலைந்து போயிருப்பான் என நிதர்சனத்தை உணர்ந்து, வாசனை பாராட்டினார்.
“ஆமா... ஆமாம்மா, நல்லவர் தான்... ஏதவாது தப்பு செஞ்சேன் தெரிஞ்சுச்சு... அவ்வளவு தான் தோளை உரிச்சு தொங்க விட்டிருவார்.” எனக் கண்டிப்போடு அன்பாய் வளர்த்த தன் தாத்தாவை பற்றி அன்னையிடம் கூறினான்.
“ஹா ஹா... அப்படி வளர்த்ததாலா தான். இன்னிக்கு நீ இவ்வளவு பெரிய மனுஷனாயிருக்க...” என மகனின் தலையை வருடி விட்டார்.
அப்போது “அத்த... அத்த...” எனச் சாஸ்வதா குரல் தர, “இதோ வரேன் மா...” என மகனை விட்டு, சட்டென அவசரமாய் ஓடியே விட்டார்.
சித்தார்த்தோ மனதுள், “அடிப்பாவி! இப்ப அம்மாகிட்டயும் டெபாசிட் போச்சா...” என வாசன் தான், தன் மனைவிக்கு முதலிடம் கொடுத்தார் என்றால் இப்போது அம்மாவும் சேர்ந்து கொண்டாரே என்ற எண்ணத்தின் வெளிபாடு தான்.
உள்ளே சென்று பார்த்தால், அங்குச் சித்தார்த்தின் புதல்வன், காலை கடனை கழித்திருக்க, அவனைச் சுத்தம் செய்யச் சாஸ்வதாவோடு, விசாலினி உதவி கொண்டிருந்தார்.
இக்காட்சியைக் கண்டவனின் மனம் வீட்டை போன்றே நிறைந்து விட்டது. சித்தார்த்தின் புதல்வனுக்கு, தன் தாத்தாவின் பெயரான கமல வாசனையும், தன் தந்தையின் பெயரான விஷ்ணு வர்த்தனையும், இணைத்து கமல வர்த்தன் என்ற கமல் என வைத்தான் சித்தார்த்.
சில மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் காலை... இடம் மும்பை விமான நிலையம். “டேய்... என்னடா... இப்ப போய்ச் சுவிஸ் போற... கமலுக்கு ஒத்துக்குமா?” எனக் கேட்டான் அபய்.
“என்னடா பண்றது... உன் தங்கச்சி, நான் ஹனி மூன் கூட்டிட்டு போலன்னு சொன்னா... அதான். கமலுக்கு எய்ட் மன்த்ஸ் ஆகிடுச்சுடா, சோ நோ ப்ராப்லம்...” எனப் பதில் அளித்த சித்தார்த், அவனை நெருங்கி, “என்னடா உனக்குப் பிரச்சனை... வேணும்னா சொல்லு... உனக்கும் டிக்கெட் போடவா?” என அபயின் காதுக்குள் கிசுகிசுத்தான்.
“டேய்... நான் எப்படி?” எனச் சற்றே மேடிட்ட வயிற்றோடு, சாஸ்வதாவிடம் பேசிக் கொண்டிருந்த அஞ்சலியைப் பார்த்துக் கூறினான்.
“நீ மட்டும் வா டா... அங்க வந்து என்ஜாய் பண்ணிக்கோ...” எனக் கண்ணடித்தவனைக் கண்டு, மிரண்டவனாய் “ஐயோ... அபராடம்... அபராடம்... நான் அந்த ராம் மாதிரி ஏக் பட்டினி பையன் டா... என்ன பார்த்து எப்பிடி இப்பிடி சொல்லலாம்?” எனக் கத்தியே விட்டான்.
அவனின் தமிழும், பாவனையும் அனைவரையும் சிரிக்க வைக்க, கமலும் சேர்ந்து சிரிக்க, அப்படியே சித்தார்த் அனைவருக்கும் கையசைத்து விட்டு, மனைவி மகனுடன் சுவிஸ் சென்றான்.
சுவிஸ்ஸில் இருந்த, ஒரு உயர் தர நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். இங்கு வந்து, ஒரு நாளை கூட வீணாக்க கூடாது எனச் சித்தார் திட்டமிட்டான். அதனால், அன்றைய இரவு மகன் உறங்கிய பின், கட்டிலை தான் வரவழைத்த பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தான்.
அவன் மனைவியோ உள்ளே குளியலறையில் இருந்தாள். உள்ளே இருப்பவளுக்கு, ஆச்சரியமளிக்க வேண்டும் என, மலர்களை வைத்து, கட்டிலின் நடுவே இதயத்தை வரைந்தான்.
ஆனால், இதே இதயத்தைத் தான் எல்லோரும் அலங்கரிகிரார்கள் என அதைக் கலைத்து, இரு ரோஜா பூக்களை வடிவமைத்துப் பார்த்தான். ஆனால், தான் ஒரு பூவாகவா? என எண்ணியவன், அதையும் கலைத்து, யோசித்தவன் மூளையில், மின்னலென ஒரு யோசனை படர்ந்தது.
அவள் வந்து விடப் போகிறாள், என அவசர அவசரமாய்ப் பாடு பட்டான் சித்தார்த். ஏன் இவ்வளவு பாடு என்றால், அவனுக்கு முதலிரவே நடக்காத... இல்லை இல்லை... முதலிரவன்று எதுவும் நடக்கவில்லை என்ற நிராசை தான் காரணமாம்.
பின்னே! எவ்வளவு அலங்காரம் செய்து, எல்லாம்.... ஹும்... அதெல்லாம் பழைய கதை. இப்போது புது மாப்பிளையாய் மாறிய சித்தார்த்தின் நிலையைப் பார்ப்போம்.
அவள் கதவை திறக்கவும், இவன் அலங்காரத்தை முடித்து, நிமிரவும் சரியாய் இருந்தது. நிமிர்ந்து, அவளைப் பார்த்தவன்........... சிலையாய் சமைந்து விட்டான்.
வேறு ஒன்றுமில்லை, சித்தார்த் மனைவிக்கு ஆச்சரியத்தைத் தர நினைத்தான். ஆனால், ஆச்சாரமாய் இருக்கும் அவளே ஆச்சரியமாய்... அதுவும் அவன் முதன் முதலில் வாங்கித் தந்த, அந்தக் கிரீம் வர்ண சேலையில்... அதுவும் கண்ணாடி போன்று மெல்லிசாய் இருக்கும் சேலையில், அதே சேலைக்குப் பொருத்தமாய், அவன் வாங்கித் தந்த அதே சட்டையை அணிந்து, அவன் அன்று ஆசைப்பட்டது போன்று லோ ஹிப்பில் வந்து நிற்பாள் எனச் சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
தன்னைக் கண்டு மயங்கியவன் அருகே வந்தவள், “என்ன ஆச்சு...” என அவன் காதில் மெதுவாய் கிசுகிசுத்தாள்.
“மெர்சலாயிட்டேன்... டி...” என அவள் இடையை வளைத்து சொல்ல, வெட்க சிரிப்பு சிரித்தவள், அவன் தோளில் தன் கைவைத்து, நாணத்தோடு முகம் சாய்த்தாள்.
அவள் பக்கம் தன் முகத்தைத் திருப்பி, “எனக்காகவா...” எனக் கேட்டவனுக்குப் பதிலாய், அவன் தோள் வளைவில் இருந்தப்படியே தலையசைத்தாள்.
“எனக்கே... எனக்கா...” என மீண்டும் கேட்டவனை, நிமிர்ந்து அவன் காதில், “இல்ல... ஒரு திமிர் பிடித்தவன் என்னைக் காதலித்தான்... அவன் தான் இந்தச் சாரிய தந்தான்... அதான் அவனுக்காகக் கட்டுனேன்... இப்ப புரிஞ்சுச்சா?” எனப் பொரிந்தாள்.
அவள் இடையை இன்னும் இறுக்கியவன், “உனக்கு லொள்ளு... ஜாஸ்தியாகிடுச்சு... உன்ன...” என அவளைத் தன்னோடு சேர்த்து, கட்டிலை நோக்கி நகர்த்தினான்.
அப்போது தான் அங்கு வடிவமைக்கப்பட்ட இரு ஜோடி மயில்களைக் கண்டாள். இரு மயில்களும், பின்புறமாய் ஒட்டி நின்றப்படி, திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. அப்படியே அவர்கள் வரவேற்பின் போது, ஆசனத்தில் வடிவமைக்கப்பட்ட மயில்களை, அது நினைவு படுத்தியது.
“என்னங்க... இது.....” எனக் கேட்டவளை, இடைமறித்து, “ஆமா... நம்ம வரவேற்புல இருந்த மயில் தான்... ஏன் போட்டேன் தெரியுமா... ஹும்... அன்னிக்கு தான் நம்ம பர்ஸ்ட் நைட் நடக்கல...” எனக் கூறிக் கொண்டே சென்றவனை...
இப்போது இவள் இடைமறித்து, “எதுவும் நடக்காம தான்... இந்தா... இங்க ஒன்னு தூங்கிட்டு இருக்கா?” எனத் தொட்டிலில் உறங்கிய மகனை சுட்டிக் காட்டி கேட்டாள்.
“ம்ச்சு... நான் அத சொல்லல டி... அன்னிக்கு அவ்வளவு அலங்காரம் பண்ணி... எதுவும் நடக்கலையே... அதான்... இப்ப அலங்காரம் பண்ணி, நாம பர்ஸ்ட் நைட் மாதிரி கொண்டாடலாமே...” எனத் தனக்குப் பயந்தது போல் இழுத்தவனைக் கண்டு, அழகாய் சிரித்தாள்.
அதையே சம்மதமாய் எடுத்தவன், அவளைத் தன் கையில் ஏந்தி, “சாஸ்..... டியர்....” என மையலோடு அவள் வதனத்தை நோக்கி அழைத்தான்.
அவளும்... கண்ணில் காதலோடு, அவன் முகத்தைத் தன் கையால் அளந்து, “தரு.....” எனச் செல்லமாய் அவன் பெயரின் இடையில் இருந்த எழுத்துக்களைச் சேர்த்து, செல்ல பெயர் ஒன்றை உருவாக்கி அழைத்தாள்.
அதில், “ஹேய்... அது என்ன தரு...?” எனக் கேட்க, “எல்லாம் உங்க பெயர் தான்... அதிலிருந்து தான், நான் மட்டும் கூப்பிடுற மாதிரி ஸ்பெஷல்லா இருக்கணும்னு எடுத்தேன்” என விளக்கம் அளித்தவளைக் கண்டு, “வரிசையா.... அசத்துறியே டியர்...” எனக் கொஞ்சினான்.
முன்பே, தன் பெயரை சொல்லி கூப்பிடு, என்று தான் சொன்ன போதும் அழைக்காதவள், இன்று அழைத்துத் தன்னை ஆச்சரியத்தில், அடுத்தடுத்து மூழ்கடித்தவளை, அவனும் தன் காதலால் மூழ்கடிக்க ஆயத்தமானான்.
அப்போது தேவகானம் போல்,
“நெஞ்சமெல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்...
உண்மை சொன்னால்
என்னை நேசிப்பாயா...
காதல் கொஞ்சம் கம்மி...
காமம் கொஞ்சம் தூக்கல்...
மஞ்சத்தில் மேல்
என்னை மன்னிப்பாயா...” என ஒலிக்க, அவனுள் மூழ்கி போயிருந்தவள், கண்களாலேயே வினவ, அவனும் கண்களாலேயே கேட்டு பார் எனப் பதில் கூறினான்.
காதலாய் உருக தெரியாதவன், காதல் மொழிகளைப் பேச தெரியாதவன், தன் காதலை இந்தப் பாடலின் மூலம் தெரிவித்தான். அந்தப் பாடல் வரிகளும், அவன் மனநிலையை, அவன் காதலை சொன்னது.
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்...
நீ தானே... மழைமேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ள பெருக்கு...
பாசாங்கு... இனி நமக்கெதற்கு...
யார் கேட்க நமக்கே நாம் வாழ்வதற்கு...
இப்போது பெண்ணின் குரலில்,
உன் காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னைத் திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகை தான்
என் வானம்... என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள்... நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.
பெண்ணின் குரலில் வந்த இந்த வரிகள் அவள் உள்ளத்தைச் சொல்வது போலவே இருக்க... அதில் உருகியவள், அவனை அணைத்துக் கொண்டு, காதல் நதியில் அவனோடு இனிமையாய் மூழ்கினாள்.
நிஜம் இனித்தது இதமாய்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top