• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
"வலது கால் எடுத்து வச்சு வா தாயி..." என்று ராகவனின் உறவுக்கார பாட்டி துளசியை அழைத்தும் பெட்டி ஒலியுடன் துளசி தனது வலது கால் எடுத்து வைத்தாள்.
"பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி அழகா இருக்கம்மா"என்று அந்த பாட்டி தன் கைவிரல்களால் திருஷ்டி முறிக்க சாந்தியின் முகமோ எழ கோட்டுக்கு போனது .
இரவு நேரத்தில் துளசிக்கு முதலிரவுக்கான அலங்காரம் செய்யப்பட்டு கொண்டிருந்தது. ஆண்டாளும் சாந்தியும் தங்களுக்கு தலைவலி என்றும். கை ,கால் குடைச்சல் என்றும் கூறி விட்டு படுத்துக் கொண்டனர் துளசியை அலங்கரித்த பெண்கள், அலங்காரம் முடிந்ததும் ஒரு தேவதையை போல் காட்சியளிக்கும் துளசியைப் பார்த்து இந்த குடும்ப உறவுகளில் இத்தனை அழகான பெண்களும் இல்லை என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். சொந்தங்கள் அனைவரும் ஆண்டாளிடம் விடைபெற்று தங்கள் விட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

நிலவு தன் தோழர்களான நட்சத்திரங்களுடன் வானத்தில் ஏறிக் கொண்டிருந்தது.

தன் கைகளில் பால் சொம்பை எடுத்துக் கொண்டு மெல்ல அறைக்கதவை திறந்தாள். அங்கு ராகவன் கட்டிலில் சாய்ந்தவாறே துளசியின் வருகைக்காக காத்திருந்தான் .கண்டதும், புன்னகை புரிந்தவன் சட்டென்று அவளை இழுத்து உதட்டில் தன் உதட்டை பதித்தான் பின் துளசி பால் சொம்பை வைத்துவிட்டு அவன் காலில் விழுப்போக அதை தடுத்தான்..

"என்ன துளசி இது? நமக்குள்ள என்ன பார்மாலிடீஸ்"?
"இல்லைங்க அம்மா அப்பா சொந்தம் பந்தம் யாரும் இல்லாம இருந்த என்ன உறவாய் திட்டங்களே நீங்க எனக்கு வாழ்வளித்த தெய்வம் உங்க கால்ல விழுந்து இதுல என்ன தப்பு?" துளசியின் கண்களில் நீர் கோர்த்து குனிந்து அவளது முகத்தை தன் கையில் நிமிர்த்தியவன் இனிமே நீ அனாதை இல்ல உனக்கு நான் எனக்கு நீ அம்மா அப்பா இல்லாத போன இடத்தில நான் என் அன்பு பாசத்துடன் நிரப்புவேன் என்று கூறியதும் அவனது மார்பில் தன் முகத்தை புதைத்தாள் துளசி சிறிது நேரத்தில் உடலில் எல்லை மீறி இருவரும் சுகமான ஒரு இரவு மனநிறைவுடன் அமைந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள். அப்போது வீட்டு முற்றத்தில் ஆண்டாள் பெருக்குவதையும், அங்கு சாந்தி கோலமாவை ஒரு கிண்ணத்தில் கொட்டுவதும் கண்டாள். துளசியின் வருகையை கண்டதும், சாந்தி ஆண்டாளை சீண்டி, அம்மா அவ வர்றா" என்று காதோரம் கிசுகிசுத்தாள். துளசி இருவரையும் உணர்ச்சிகளை காட்டாமல் நின்றிருந்தனர். இருப்பினும் தன்னையே ஆற்றியவாறு "குடுங்க அம்மா. நான் பெயருக்கேற்ப" என்றவள் ஆண்டாளிடம் இருந்து துடைப்பத்தை வங்கி பெருக்கத் தொடங்கினாள்.திடீரென்று‌ சாந்தி, அவளது கையில் உள்ள துடைப்பத்தை பிடுங்கி அவள் பெருக்கத் தொடங்க துளசி ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நிற்க ஆண்டாளுக்கும் அவளின் செயல் புரியாமல் போக, சாந்தியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன அம்மா.... என்னையே பார்க்கற குனிஞ்சு நிமிர்ந்து பொருக்கனா தானே குப்பை போகும். எல்லாரும் நம்மளை மாதிரி செய்வார்களா" குத்தலான வார்த்தைகள் சாந்தியிடம் இருந்து வர, துளசிக்கு முகமே இருண்டது. உடனே உள்ளே சென்றவள், விட்டை துடைத்து விட்டு துணிகளை மிஷினில் போட்டாள்.பிறகு பாத்திரங்களை கழுவத் தொடங்க சாந்தி தண்ணீரில் வெண்டைக்காயை நனைத்து விட்டு சாம்பாருக்காக வெட்டத் தொடங்க , ஆண்டாள் உலைக்கு போட வேண்டிய அரிசியை கழுவிக் கொண்டு இருந்தாள்.நிசப்தமான அந்த தருணத்தில் தான் சாந்தி துளசியிடம் பேச்சை தொடங்கினாள்.

"துளசி... உனக்கு சமைக்கத் தெரியுமா?"
"இல்லக்கா எனக்கு தெரியாது." என்று கூறியது தான் தாமதம்.
ஆண்டாள் துளசியை வார்த்தைகளால் சுட்டு எரித்தே விட்டாள்.
பொதுவாகவே ஓர் பெண்ணிற்கு திருமணம் என்று ஆகிவிட்டால் அவள் ஒரு மாவட்டத்திற்கே கலெக்டரா இருந்தால் கூட அவளுக்கு சமைக்கத் தெரியவில்லை என்றால் புகுந்து லிட்டில் அவள் ஓர் ஏளனப் பொருள் தான் இதுயாராலும் மறுக்கப்பட்டாத உண்மையும் கூட. இதற்கு துளசி மட்டுமே என்ன விதிவிலக்கா?

"ஏண்டி சாந்தி. துளசிகிட்ட போய் சமைக்கத் தெரியுமான்னு கேட்கறியே. இது உனக்கே நல்லாயிருக்கா. அவளுக்கு தான் சமையல் சொல்லி குடுக்க அம்மா அப்பான்னு யாருமே இல்லையே" ஆண்டாளின் வார்த்தைகள் துளசியை ஊசியால் துளைக்காத குறையாய் குத்தின. கண்களில் கண்ணீர் ஒரு சேர துளசி தன் வாயை திறந்தாள்.

"அம்மாம எனக்கு என் பெத்தவங்க யாருன்னு எனக்கு தெரியாது தான். ஆனா இப்பதான் எனக்கு அம்மா ஸ்தானத்துல நீங்க இருக்கீங்க ளே. அதுவே போதும்மா..‌‌"

"இங்கு பாருடி. நீ ஒன்னும் என் அம்மாவை 'அத்தை'ன்னே கூப்பிடு அது போதும்? வார்த்தைகளில் விஷத்தை கலந்தாய் சாந்தி.

உடனே அழுதவாறே துளசி அவ்விடத்தை விட்டு அகன்றாள். பின் தன் அறைக்குள் சென்று கட்டிலில் மீது சரிந்தாள், குலுங்கி குலுங்கி அழுதாள்.

சிறிது நேரம் கழித்து அறையின் உள்ளே வந்த ராகவன், துளசியின் முகம் வாடிப்போயிருப்பதை கண்டதும் பதறிப்போனான்.

"துளசி என்னடா ஆச்சு? ஏன் முகமெல்லாம் டல்லா இருக்கு? அம்மா ஏதாவது சொண்ணாங்களா? இல்ல என் அக்கா ஏதாவது சொன்னாளா? சொல்லுமா"

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. லைட்டா தலைவலி குனிந்தவாறே பதிலளித்தாள்.

"சரி அப்படின்னா நீ உடனடியாக டிரஸ் பேச்சு பண்ணிட்டு வா.."
"எங்க? எதுக்குங்க?"
"வேற எங்க படத்துக்கு தான். பாடம் முடிஞ்சு உடனே ஈவினிங் பீச் போலாம். ம் சீக்கிரம் ரெடியாயுடு."
"சரிங்க" என்று கூறிய துளசி பாத்ரூமிற்கு சென்ற முகத்தை கழுவி விட்டு வேறு ஒரு அழகான புடவைக்கு மாறினாள். பின் ராகவனோடு புறப்பட்டுச் சென்றாள். துளசி புறப்பட்டுச் சென்ற சிறிது தருணத்திலேயே சாந்தியும் அவள் விட்டிற்கு கிளம்பி விட்டாள்.


? துளசி ராகவன் வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top