• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி- 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
நாட்கள் நகர, நகர துளசியின் உறக்கம் குறைந்து கொண்டே போகிறது. காலையில் 5 மணிக்கு எழுந்தும் வேலைகளை தீர்க்க முடியாமல் திணறிய துளசி இப்போது 4 மணிக்கே எழ தொடங்கினாள் . எழுந்தும் , குளித்து முடித்து வீட்டு வேலைகளில் மூழ்க அர்த்தப்படுத்திக் கொண்டாள். காலை சிற்றுண்டியை தயாரித்து மதியானத்திற்கு தேவையான சாப்பாடு, குழம்பு, பொரியல், வத்தல் என் ஆண்டாளிற்கு தேவையான சகலமும் தயாரித்து விட்டு தனக்கும், ராகவனுக்கும் மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்து பின் சிறுமலை போன்று காட்சியளிக்கும் பாத்திரங்களை கழுவி விட்டு பெருக்கி துடைப்பதற்குள் பாதி உயிரே போய்விடும். அத்தனை வேலைகளையும் காலையில் 8 மணிக்கு செய்து முடித்து விடுவாள். அதன் பின் ராகவன் அலுவலகத்திற்கு செல்ல உடுக்க வேண்டிய பேண்ட், சட்டைகளை அயர்ன் செய்து ஆண்டாளிற்கும் ராகவனிற்கும் டிபனை பறிமாறிக் பின் அவசர, அவசரமாக எதாவது ஒரு புடவையை உடுத்திக் கொண்டு 'எனக்கு பசிக்குது ஏதாவது தா." என்று அடம்பிடிக்கும் வயிற்றை சில சமயங்களில் ஏமாற்றி விட்டு பிறகு பள்ளிக்கு புறப்பட்டுவாள். துளசி இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கும் ஆண்டாளிடம் நல்ல பேர் கிடைக்கவில்லை.

எப்போதும் ராகவன் துளசியை தனது டூவீலரில் கொண்டு செல்வான் ஆனால் சில நாட்களாக அலுவகத்திற்கு ராகவன் சீக்கிரமாக புறப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவனின் துளசி தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை . தினமும் ராகவன் புறப்படும்போது போது துளசியை ஷேர் ஆட்டோவில் செல்லுமாறு கூறிவிட்டு கூறிவிட்டு தான் செல்வான். ஆனால் துளசி பள்ளிக்கு நடந்தே செல்வாள் . அதற்கு காரணம் ஆண்டாள்! துளசியின் சம்பள பணத்தை அப்படியே வாங்கிக் கொள்ளும் ஆனால் அவளின் கை செலவுக்கு கூட கொடுக்கமாட்டாள் அப்படியே வாய்த்தவர் துளசி கேட்டுவிட்டாள் என்றால், அங்கு ஒரு பிரளயமே வெடிக்கும்! "ஆமா, அவ அப்பா அம்மா சீர் கொண்டு வந்து கொட்டிட்டாங்க, அதுல இருந்த பணம் கேட்கிறார் பாரு" என்று எள்ளி நகையாடும் அவனுக்கு பயந்து துளசி பள்ளிக்கூடம் சென்று விடுவாள்.

நாளடைவில் துளசியின் உடல் மெலிந்து போன இதைக் கண்ட அனுமன் மீது பரிதாபப்பட்ட.

"என்ன துளசி அப்படி ஆயிட்டே?"

"இப்படி ஆயிட்டேன் அணு? "பதிலுக்கு துளசி கேட்டாள்.

"இப்படி ஆயிட்டேன்னா சும்மாவா சொல்றேன் பாரு ...பாரு பாரு உன் ஜாக்கெட் எப்படி லூசு ஆயிடுச்சுன்னு, வீட்டுல ரொம்ப வேலையா டா "துளசியின் தோள்களை பற்றிக் கேட்டாள் அனு.

"துளசி ,நீ பேசாம ஸ்கூல் வேலையை விட்டுட்டேன், நான் ஏன் சொல்றேனா வீட்டு வேலையையும் நீ பார்க்கனுமான்னு நினைக்கிறேன் " யோசித்தவாறு அணு கூற துளசி வேகமாக அதை மறுத்தாள்.

"இல்ல அனு. என்னால் இந்த வேலையை விட முடியாது எனக்கு இங்கே தான் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது அனு. நீ சொல்ற மாதிரிலாம் வேலையை விட்டுட்டு என் மாமியார் முன்னாடி நான் ஒரு செல்லாக் காசு ஆயிடுவேன்பா"

"சாரி துளசி நீ கஷ்டப்படுறது என்னால பாக்க முடியலை ... அதான் இப்படி சொல்லிட்டேன். நீ வேலையில கஷ்டப்படுவதைப் பார்த்து ஒன்னும் சொல்ல மாட்டாரா?"

"அவருக்கும் கஷ்டமா தான் இருக்கு அனு .என் மாமியார் உடம்பு சரி இல்லை. அதனால அவரால் எதுவும் அவங்க அம்மாவ சொல்ல முடியலை... "

" உன் நாத்தனார் சாந்தி, சனி, ஞாயிறு ஆனா வீட்டுக்கு வருவாங்களே அப்பயாவது உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்?" அனு துளசியை பார்த்து கேட்டாள்.

"ரிலாக்ஸாக அவங்க உட்கார்ந்த இடத்திலேயே அதிகாரம் பண்ணுவாங்க அனு, அதுவும் அவங்க புருஷன் திலீப் இருக்காரே வந்தவுடன் போய் படுத்துப்பாரு. அவருக்கு மீன், கறின்னு ஏதாவது சமைக்சு போடனும். இது பத்தாதுக்கு அவங்க பொண்ணு சரண்யா வேற குடிச்ச காபி டம்ளரைக் கூட கழுவி வைக்க மாட்டா, ஆனா என் புருஷன் வந்தா மட்டும் ஏதாவது அடுக்களை வேலை செய்யற மாதிரி பாவலா காட்டுவாங்க அனு" வருத்தத்துடன் துளசி கூறினாள்.

துளசியை மொத்தத்தில் சம்பளம் இல்லாத வேலைக்காரி போல் ஆண்டாள் நடத்துவது துளசியின் பேச்சில் இருந்தே அனு உணர்ந்தாள். அனுவால் துளசியின் மீது அனுதாபம் மட்டுமே செலுத்த முடிந்தது.

அனுவும் துளசியும் பேசிக் கொண்டிருந்த இடைவேளை நேரம் முடிவடைந்தது. பின் இருவரும் வகுப்பிற்கு சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினர்.


? துளசி ராகவன் வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
வீட்டுக்கு வரும் மருமகள் செலவில்லாத ஒரு வேலைக்காரியாக தான் நினைத்து கொள்கிறார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top