பகுதி - 9

#1
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு குழந்தையுடன் இருவரும் வந்து சேர்ந்தார்கள். இதயா தோளில் குழந்தை துவண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். கை நிறைய பைகளுடன் பின்னால் குஷியாக வந்தாள் யாழிசை.

அதுவரை இதயா தன்னிடம் காட்டிய அலட்சியத்தை கூட பொருட்படுத்தாமல், ஓடிப்போய் அவனிடமிருந்து குழந்தையை மென்மையாய் வாங்கி கொண்டாடி, மிருதுளா அவனிடம், "குழந்தை ஏதாவது சாப்பிட்டாளா?" என்றாள்.

திருதிரு என்று விழித்தேன், "இ.... இல்லையே" என்றான் சின்ன குற்ற உணர்வுடன்.

அதற்குள் கை மாறியதில் சிணுங்கியது குழந்தை. அதை தட்டிக் கொடுத்தபடி அவசரமாய் சமையலறை நோக்கிப் போனாள் மிருதுளா.

பாகீரதியம்மாள் முன் பைகளை கடை பரத்தினாள் யாழிசை.

"அத்தை, எல்லாம் குழந்தைக்கு வாங்கினது"என்று பிரித்தாள்.

தேவதை போன்ற அடுக்கடுக்கான வெள்ளை உடை ஒன்றும், டெடி பியர் (Teddy bear) பொம்மை ஒன்றும் தான் அதில் குழந்தைக்கானது. வகைவகையான மேக்கப் பொருட்கள், புடவை, சுடிதார் வகைகள், அதற்கு தோதான உயர் ரக வளையல், நெக்லஸ் செட் என்று யாழிசைக்கான பொருட்கள் தான் அதிகம் இருந்தன.

"ஆமாம்மா , யாழிசை இதையெல்லாம் இருந்து வருஷம் கழிச்சு போட்டுக்க சரியா இருக்கும்" என்றார் பாகீரதியம்மாளும் முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல்.

அதிர்ந்த யாழ், " இ... இல்ல.... இதல்லாம் எனக்கு" என்றாள்.

" ஓ ! எல்லாம் குழந்தைக்குன்னு சொன்னியே... அவ வளர்ந்த பிறகு போட்டுக்க இப்பவே வாங்கிட்டியோன்னு பார்த்தேன்."

சட்டென எல்லாவற்றையும் வாரி எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போனால் யாழிசை.

68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652...jpeg

​

சாரி ரீடர்ஸ் இன்னைக்கு சின்ன அப்டித்தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நாளைக்கு கதை முடிக்க முயற்சி பண்றேன் பண்றேன் சீக்கிரமா.

இன்னிக்கி மைண்ட் அப்செட்டா இருக்கு அதான் சின்ன அப்டேட்
​​​​​​​​​​ 
Advt

Advertisements

Top