• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பச்சாதாபம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
பச்சாதாபம் இந்த வார்த்தைக்கு இரக்கம், பரிவு, அனுதாபம் என்று பொருள்.

அன்பின் அவதாரங்களில் ஒன்றுதான் இதுவும்.

ஆனாலும் இந்த வார்த்தை ஏனோ நெருடலாய்.
பாவப்பட்டு, போனால் போகட்டும்
அச்சோ! பாவம் ஏனோ இப்படி
எனும் பொருள் கொண்டும் வரும் போல.

தன் மேல் அனுதாபம் ஏற்பட்டு தன்னை நேசிக்க வேண்டும் என்று ஓர் உறவு நினைக்குமா?
நினைக்கக் கூடும்.

ஆனால்,'எனை எனக்காய் நேசிப்பதை விட்டு, எனை என் சூழ்நிலைக்காய் ஏற்காதே, அது ஒரு போதும் மெய் அன்பாய் இருக்காது.' என்பதே அன்பை வேண்டி நிற்போர்களின் வேண்டுதலாக இருக்கும் தானே?

தன் வலிகள் கூறி, தன் வேதனைகள் கூறி எனை நேசிப்பாயோ என்று யார் கேட்பார்?
கேட்பார்களா தெரியாது
ஆனால் ஆறுதலை நாடுவார்கள்.
பிழையுண்டா? தெரியவில்லை.

அன்பு என்பது அத்தனை கடினமான ஒன்றா?
அழகாய் காண்பிக்கலாம் பிடிக்கவில்லையா அழகாய் விலகியும் போகலாம்

அதற்காய் ஒருபோதும் ஒருவர் காண்பிக்கும் அன்பை குறைக் காணாதீர்கள்

சிறியதாய் காயம் ஏற்பட்டாலும் சிறியோர்கள் எத்தனை பெரிதாய் அதை பாவனை செய்து அவர்கள் பக்கம் எமை திருப்பிவிடுகிறார்கள்
காட்டும் அன்பை இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள் அதற்காகத்தானே?
எதாவது வலி இருக்க,வலிக்கிறதா என்று கேட்டு பரிவாய் பார்க்கும் போது இல்லாத வலியையும் இருப்பதாய்க் கூறி அந்தநேர பொழுதை எமக்காய் எடுத்துகொள்வதில்லையா?

பொய்யாய் அழுகிறார்கள் என்று அன்னைக்கு தெரிந்த போதும் பிள்ளையை அணைத்து ஆறுதல் சொல்வதில்லையா? சிறு பிள்ளை மட்டுமா, சிறு பிள்ளையாய் இப்போதும் அதையே நாம் செய்வதில்லையா?

அன்பென்று அருகே வருவோறெல்லாம் அன்புக்காக மட்டுமே அன்றி வேறில்லை
போவோர் வருவோரிடமெல்லாம் கேட்டு வைக்கிறார்களா என்ன?
அருகே இருப்போர்கள் என்றாலும் இருப்போர் யாவரோடும் யாவரும் பேசிவிடுகிறார்களா என்ன?

ஏதோ மனம் இதமாகிறது எனும் உணர்வை கொடுத்திருக்கலாம்
இல்லையா,ஏதோ ஒரு நிம்மதி
அந்த அருகாமை கொடுத்திருக்கலாம்.இல்லாது எவரும் எவரிடமும் தாமாய் வரப்போவதில்லை அந்த நேசம் வேண்டி.
நலம் கேட்கிறார்களா? அதையே அவர்களை கேட்க யாருமில்லாதிருக்கலாம்
உண்டாயோ?
இன்றைய பொழுதெல்லாம் எப்படி கழித்தாய்?
இதுவெல்லாம் சாதாரண பேச்சுக்கள் தான்.இருக்கலாம் இருந்துவிட்டுப்போகட்டுமே.அவை எமக்கோ பலநேரம் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எரிச்சலாகவும், தொந்தரவாயும் போகலாம்.

அவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லாதிருக்கும்.அவர்களிடம் பேச கொட்டிக்கிடக்கும், ஆனாலும் கொட்டிட இடமின்றி பிறரிடம் கேட்டு,கேட்கும் வார்த்தைகளில் தமை சரிசெய்வோர்களாய் இருக்கவும் கூடும்.
அதையே பிரிதொரு நேரத்தில் உம் மனம் எதிர் பார்க்கவும் செய்யலாம்.
பிழையுமில்லை.நான் அப்படியெல்லாம் இல்லை கூறிக்கொள்ளுங்கள் அதுவும் பரவாயில்லை.
உடன் வரப்போவதில்லை யாரும்.
இங்கு நிஜம் அது மட்டுமே தான்.
உடல் மட்டுமே மண்ணுக்கு போகும் உயிர் படைத்தவனுக்கே சேரும்

பிணைந்திருந்த இவ்விரண்டுமே ஒன்றாய் ஒரு போதும் இருக்கப்போவதில்லை என்றிட மற்றவையெல்லாம் எம்மாத்திரம்?

அன்பென்றிடல் அன்பு மட்டும்தான்

காரண காரியங்கள் அதனோடு கோர்க்க வேண்டாம்
அன்புக்காய் மட்டும் அன்பு கொள்ளுங்கள். தனக்கு வேண்டாம் என்றிட தன்னிலை விளக்கம் மட்டுமே கொடுப்போம்.பிறர் அன்பில் குறை காணாதிருப்போம்

அன்பென்றிடல் அன்பு மட்டுமேதான்
அவ்வளவு தான்.

இமையி...




பச்சாதாபம் இந்த வார்த்தைக்கு இரக்கம் பரிவு, அனுதாபம் என்று பொருள்.

அன்பினால் கொள்ளும் அவதாரங்களில் ஒன்றுதான் இதுவும்.

ஆனாலும் இந்த வார்த்தை ஏனோ நெருடலாய்.
பாவப்பட்டு, போனால் போகட்டும்...

அச்சோ! பாவம் ஏனோ இப்படி...
எனும் பொருள் கொண்டும் வரும் போல.

தன் மேல் அனுதாபம் ஏற்பட்டு தன்னை நேசிக்க வேண்டும் என்று ஓர் உறவு நினைக்குமா...?
நினைக்கக் கூடும்.

ஆனால் எனை எனக்காய் நேசிப்பதை விட்டு, எனை என் சூழ்நிலைக்காய் ஏற்காதே, அது ஒரு போதும் மெய் அன்பாய் இருக்காது. என்பதே அன்பை வேண்டி நிற்போர்களின் வேண்டுதலாக இருக்கும் தானே?

தன் வலிகள் கூறி, தன் வேதனைகள் கூறி எனை நேசிப்பாயோ என்று யார் கேட்பார்?

கேட்பார்களா தெரியாது.ஆனால் ஆறுதலை நாடுவார்கள்.

பிழையுண்டா?
தெரியவில்லை

அன்பு என்பது அத்தனை கடினமான ஒன்றா?
அழகாய் காண்பிக்கலாம் பிடிக்கவில்லையா அழகாய் விலகியும் போகலாம்.
அதற்காய் ஒருபோதும் ஒருவர் காண்பிக்கும் அன்பை குறைக் காணாதீர்கள்...

சிறியதாய் காயம் ஏற்பட்டாலும் சிறியோர்கள் எத்தனை பெரிதாய் அதை பாவனை செய்து அவர்கள் பக்கம் எமை திருப்பிவிடுகிறார்கள்

காட்டும் அன்பை இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள் அதற்காகத்தானே...

எதாவது வலி இருக்க,வலிக்கிறதா என்று கேட்டு பரிவாய் பார்க்கும் போது இல்லாத வலியையும் இருப்பதாய்க் கூறி அந்தநேர பொழுதை எமக்காய் எடுத்துகொள்வதில்லையா?

பொய்யாய் அழுகிறார்கள் என்று அன்னைக்கு தெரிந்த போதும் பிள்ளையை அணைத்து ஆறுதல் சொல்வதில்லையா...

அன்பென்று அருகே வருவோறெல்லாம் அன்புக்காக மட்டுமே அன்றி வேறில்லை...

போவோர் வருவோரிடமெல்லாம் கேட்டு வைக்கிறார்களா என்ன?
அருகே இருப்போர்கள் என்றாலும் இருப்போர் யாவரோடும் யாவரும் பேசிவிடுகிறார்களா என்ன?

ஏதோ மனம் இதமாகிறது எனும் உணர்வை கொடுத்திருக்கலாம்...

இல்லையா ஏதோ ஒரு நிம்மதி
அந்த அருகாமை கொடுத்திருக்கலாம்...
இல்லாது எவேரும் தாமாய் வரப்போவதில்லை எவரிடமும் நேசம் வேண்டி.

நலம் கேட்கிறார்களா? அதையே அவர்களை கேட்க யாருமில்லாதிருக்கலாம்...

உண்டாயோ?
இன்றைய பொழுதெல்லாம் எப்படி கழித்தாய்?
என்று சாதாரண பேச்சுக்கள் தான் இருக்கலாம்...
அவை எமக்கோ பலநேரம் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எரிச்சலாகவும், தொந்தரவாயும் போகலாம்...
அவர்களுக்கு அதுதெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லாதிருக்கும்...

அவர்களிடம் பேச கொட்டிக்கிடக்கும், ஆனாலும் கொட்டிட இடமின்றி பிறரிடம் கேட்டு,கேட்கும் வார்த்தைகளில் தமை சரிசெய்வோர்களாய் இருக்கவும் கூடும்.

உடன் வரப்போவதில்லை யாரும்.
இங்கு நிஜம் அது மட்டுமே தான்.

உடல் மட்டுமே மண்ணுக்கு போகும் உயிர் படைத்தவனுக்கே சேரும் பிணைந்திருந்த இவ்விரண்டுமே ஒன்றாய் ஒரு போதும் இருக்கப்போவதில்லை என்றிட மற்றவையெல்லாம் எம்மாத்திரம்?

அன்பென்றிடல் அன்பு மட்டும்தான்

காரண காரியங்கள் அதனோடு கோர்க்க வேண்டாம்...

அன்புக்காய் மட்டும் அன்பு கொள்ளுங்கள்...

தனக்கு வேண்டாம் என்றிட தன்னிலை விளக்கம் கொடுக்க, பிறர் அன்பில் குறை காணாதிருப்போம்...

அன்பென்றிடல் அன்பு மட்டுமேதான்...

இமையி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top