படிக்க முடியாத புத்தகம் நான்- 2

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அடுத்த பதிவை கொடுத்து விட்டேன் தோழிகளே உங்கள் கருத்துக்காக காத்து இருக்கின்றேன்.......................


பேதை– 2


"எண்ணிலடங்கா கற்பனையோடு தனது மகனையும், மகளையும்
காப்பாற்றி விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு தாய் மாமன் வீட்டில்
நுழைந் தஈஸ்வரிக்கு ஏமாற்றமே!"

இன்றோடு அவள் தாய்மாமன் வீட்டிற்கு வேலைப்பார்க்க வந்து ஒரு
வருடம் கடந்துவிட்டது, இந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட
ஒழுங்காக செல்லவில்லை, அதற்குள் சிறு சிறு இடையூறுகள்"
வேலை என்று வந்துவிட்டால் அதுவும் சொந்தத்திடம்கேட்கவா
வேண்டும்".

முதலில் அவர் கை வைத்ததே அன்னபூரணியின் படிப்பில்தான், பள்ளி
கட்டணத்துக்கு கை ஏந்தி நிற்கும் பொழுது தமிழ் மீடியம் சேர்க்க
சொல்லிவிட்டார்,தான் தான் படிக்காமல் கணவனால் கை விடப்பட்டு
அடுத்தவரை அண்டி இருக்கும் நிலை, தனது பிள்ளைகளுக்கும் அது
வேண்டாம் என்று முடிவாக மறுத்துவிட்டார், கடன் வாங்கி படிக்க
வைத்தார்.

இதுவே தொடர்ச்சியாக பலகாரணங்கள் கொண்டு மனஸ்தாபம்
அதிகமானது.

உச்சகட்ட வேதனையாக அமைந்த சம்பவம் என்னவென்றால் பள்ளி
வாகனத்தை விட்டுவிட்டனர், பூரணிக்கு யாரிடம் கேட்பது என்று
புரியவில்லை, மருந்திற்கு கூட கையில் காசு இல்லை, எட்டு வயது
சிறுமி துணிந்து தமையனை இழுத்துக் கொண்டு நடக்க தொடங்கி
விட்டாள் அதுவும் சரியான பாதையில் வீட்டிற்கும் பள்ளிக்கும்
சுமார் 12 கிலோமீட்டர் இருக்கும்.

இதை கேட்ட ஈஸ்வரிக்கு அதிர்ச்சி!!!!!!!!!!!!!!!!!

சரியாக வந்து சேர்ந்தன பிள்ளைகள்............இல்லையென்றால் எண்ணிப்
பார்க்கவே நடுங்கியது.

அதற்கு மேல் பொறுமையை இழந்த ஈஸ்வரி பிள்ளைகளை
கூட்டிக்கொண்டு, முதலில் தனிகுடித்தனம் சென்றுவிட்டாள்.

எட்டு வயது சிறுமியாக இருந்தாலும் அன்னபூரணியின் மனதில் மிக
பெரியதாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

ஏன் அம்மா...............அன்னபூரணி.

சொல்லுடா,ஈஸ்வரி.......

ஏன் தாத்தா வீட்டில் இருந்து வந்துட்டோம், இப்பபாருங்க சாப்பாடு கூட
இல்லை, தம்பியும் பாவம் அவனும் சாப்பிடலம்மா.

"இங்க பாரு பூரணி அம்மாவுக்கு யாருமில்லை அம்மாச்சி எவ்வளவு தான்
உதவி செய்வாங்க, எனக்கு தெரிஞ்சது சமையல் வேலை தான் பக்கத்துல
இருக்க ஆபீஸ்ல கேட்டு இருக்கேன், அவங்க சரினு சொன்னா சமைச்சு
குடுக்கலாம், தினமும் நாமளும் சாப்பிட்டுக்கலாம் என்ன?"......

யாரு கேட்டாலும் சாப்பிட்டேன்னு சொல்லணும், யார்கிட்டயும்
சாப்பிடலைனு சொல்லக்கூடாது என்ன புரிந்ததோ அந்த தளிருக்கு
வேகமாக தலை ஆட்டிவிட்டு, பக்கத்தில் இருக்கும் தமையனுடன் கதை.
பேச ஆரம்பித்துவிட்டது.

அடுத்த நாள் விடியல் நல்லவிடியலாகவே விடிந்தது, மெஸ் போன்று
சிறியதாக ஆரம்பித்து உணவு செய்து கொடுத்தார் ஈஸ்வரி நல்ல
லாபகரமான தொழில் தான், ஆனால் ஈஸ்வரிக்கு சுதாரிப்பில்லை
சிலர் கடன் சொல்லிவிட்டுச் சென்றனர்.

அன்னபூரணி நீ வாடகை சைக்கிள் எடுத்துட்டு போய் சாப்பாடு
கொடுத்துட்டு வா அந்த மான்ஷன்ல என்று ஈஸ்வரி உரைக்க,
சிட்டாகப் பறந்தாள் பூரணி.

அங்கு உள்ள அனைவரும் ஆண்களே, கூலி வேலை செய்பவர்கள் முதல்
கார்பரேட் வேலை செய்பவர்கள் வரை தங்குமிடம், சிறிதும்
அச்சமில்லாமல் அங்கு சென்று உணவைக் கொடுத்து வந்தாள்.

அன்றும் அப்படித்தான் சென்றாள்.............

அண்ணா, அம்மா காசு வாங்கிட்டு வர சொன்னாங்க, அவன் காசைக்
கொடுக்கும் சாக்கில் கையை இறுகப் பற்றி விடு வித்தான்.

சொல்ல முடியாத பயம் பூரணிக்கு அந்த முதல் தளத்தில் இருந்து
நுழைவாயிலுக்கு வருவதற்குள் நடுங்கி விட்டாள்.

ஏன் இந்த அண்ணே கையை அப்படி இறுக்கி புடிச்சாங்க கையே
வலிக்குது அம்மாகிட்ட சொல்லலாமா? வேணாமா?
என்று குழம்பிய வாறே வீடு வந்து சேர்ந்தாள்.

இது ஆரம்பம் தான் இனி நடக்க போகும் சம்பவங்களை வைத்து
ஆண்களையே வெறுக்கப் போகின்றோம் என்று அறியாத பேதை
அன்னையிடம் ஓடி சென்றது.

அம்மா.........அம்மா
..............அந்த அண்ணே காசு கொடுத்துட்டாங்க இந்தாங்க என்று கொடுத்து
விட்டு விளையாட பறந்து சென்று விட்டாள்,ஆண் பெண் என்று
பேதமில்லாமல் பழகும் வயது இது, பூரணி அந்த வயதை அனுபவித்தாள்,
ஓடி பிடித்து விளையாடுவதில் நாட்டம் அதிகம் ஆணுக்கு நிகராக
ஓடுவாள், பள்ளியிலும் பரிசுகள் வாங்கினாள்.

ஆர்வமாக ஒரு பெண் குழந்தை விளையாடினால் அதற்கும் புறம் பேச
ஆட்கள் உண்டு போலும்?

வயதிற்கே உண்டான குறும்புடன் இருக்கும் பூரணியை உறவினர்கள்
சிலர் வேறு விதமாக சாட ஆரம்பித்துவிட்டனர்.

பாட்டு, நடனம், ஸ்போர்ட்ஸ், ரோட்டில் நேரம்காலம் இல்லாமல்
விளையாடுவது என்று இருந்தவளை, அவர்கள் போக்குக்கு பேச
ஆரம்பித்து விட்டனர்.

விளைவு ஈஸ்வரியிடம் வாங்கிய அடி, இன்று எண்ணிப் பார்த்தாலும்
வலித்தது பூரணிக்கு ஒரு பெருமூச்சுடன் கடந்த காலத்தில் இருந்து
வெளியில் வந்தாள்.

நண்பர்கள் இருவரும் ஒன்றாகத் தான் இருப்பார்கள் போலும்,அவனும்
அவளது எட்டு வயது வரை நடந்த சம்பவங்களை படித்து முடித்து
அவளுக்கு அழைத்தான்.

சொல்லு செந்தில், பூரணி.

இப்போ தான் உன் டைரி முதல் பாகத்தை முடிச்சேன், ஏண்டி என்கிட்ட
உன்னைப் பத்தி ஒரு வார்த்தைக் கூட சொல்லல, நீ சின்ன வயசுல
இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன்னு நான் கனவுலையும் யோசிக்கலடி
என்று புலம்பித் தீர்க்க அலுங்காமல் பெரியகுண்டை
தூக்கிபோட்டாள் பூரணி.

நீ என்ன பண்ற நான் கொடுத்த டைரி எடுத்துட்டு வந்து கொடுத்துடு,
ஏன்னா இதெல்லாம் ஆரம்பம் தான் போகப் போக படிச்சா நீ காலி.............

பரவாயில்லை நான் முழுசும் படிக்காம இனி உனக்கு போன்
பண்ணமாட்டேன் போதுமாm படுடி முட்டைக்கண்ணி.


இன்னும் ஒருவாரத்துக்குள் கதறிக் கொண்டு அழைக்கபோவது
தெரியாமல் சபதமிட, பார்க்கலாம் என்று அவளும் அணைத்துவிட்டாள்……..

 

Latest Episodes

Sponsored Links

Top