• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பட்டாபிராமன் -ஜெயராம் நடித்த படம் -ஒரு அலசல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
1573271710699.png


ஹாய் நட்பூஸ்

இன்று இன்னொரு படத்தின் ரெவியூ உடன் வந்து இருக்கேன்.இந்த தடவை அனைவரும் ஒருமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய மலையாள படம் "பட்டாபிராமன்" என்ற படம்.ஜெயராம் நடித்தது.


'அருவம்' படம் எப்படி உணவு கலப்படம் பற்றி சொல்கிறதோ அதே கான்செப்ட்.அங்கு ஆவி,பேய்,பழிவாங்கல் என்று வேறு பக்கம் சென்றது.

இந்த படத்தில் எதார்தமாய் கொண்டு போய் இருக்கிறார்கள்.ஜெயராம் சிறந்த நடிகர் என்று அனைவரும் அறிந்ததே.versatile ஆக்டர்.பிச்சு உதறி இருக்கார்.

ஆரம்ப கணேஷ் பாடல் சூப்பர்.உணவு தர கட்டுப்பாடு அதிகாரியாக வரும் ஜெயராம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லாமே மாஸ்.எல்லா அதிகாரிகளும் தங்கள் அறையை விட்டு வெளியே வந்து களப்பணி செய்தாலே நாடு உருப்படும் என்ற உண்மையை சொன்ன விதம் அருமை.

ஒரு சாதராண டீ கடையை கூட அவர் விட்டு வைக்கவில்லை.டீ கடையில் தொடங்கி ,ஆர்கானிக் உணவு,மண் பாண்ட சமையல்அவசியம் ,விளைவிப்பவர்களிடம் இருந்து காய்,பழம் நேரிடையாக வாங்குங்கள் கார்பொரேட் உணவு பொருள் மாபியா,சமையல் நிகழ்ச்சி என்று பிராண்ட் பொருட்கள் பயன்,ஜூஸ் கடை என்று எல்லா பக்க அவலங்களையும்,இது சத்தான உணவு முறை,சமைக்கும் முறை என்று விட்டு விளாசுகிறார்.

இப்படி ஒரு அதிகாரி இருந்தால் என்று ஏங்க வைத்து விடுகிறார் நடிப்பில்.

இன்றைய துரித உலகில் சமையல் அறையில் பயன்படும் மஞ்சள் பொடி வரை நாம் இன்ஸ்டன்ட் பாக்கெட் தான் வாங்குகிறோம்.வீட்டில் தயரிப்பது எல்லாம் நிறைய இல்லங்களில் காணாமல் போய் விட்டது.வேலை என்று ஓடும் போது மாவு அரைப்பது முதல்,இந்த பொடிகள் வரை எல்லாம் பாக்கெட்டில் வருபவை தான்.

ஹோட்டல்கள் வார இறுதி நாட்களில் தெரு முனை வரை கியூ இருப்பது எல்லாம் பெரும் நகரங்களில் மட்டும் இல்லை பல டவுன்களில் சர்வ சாதாரணம்.swiggy,uber என்று இவர்கள் அதிகம் வளருவதில் இருந்தே தெரிகிறது எத்தனை தூரத்திற்கு நாம் வெளி உணவுகளை நம்ப ஆரம்பித்து விட்டோம் என்று.

வாரம் முழுவதும் சமைத்து விட்டு வார விடுமுறையிலாவது relaxation என்பது அனைவரும் விரும்புவதே.

ஆனால் இந்த பொடிகளிலும்,நாம் உண்ணும் உணவகங்களும் விஷம் என்றால்?-இந்த கேள்வியை முன் வைத்து நகர்கிறது கதை.

அவர்கள் காட்டும் சமையல் அறை,இந்த பொடிகள் தயாரிக்கும் அறை பார்த்தால் நிச்சயம் அந்த பக்கம் போகவே மாட்டோம் என்பது மட்டும் உறுதி.


ஒரு அதிகாரி தன் மகனுக்கு நொறுக்கு தீனிகளாக வாங்கி வந்து மலை போல் குவித்து கொண்டே இருப்பார்.பையன் ஆசையாய் சாப்பிடுறான் என்பது அவர் வாதம்.கடைசியில் அதுவே அவர் மகனுக்கு எமனாய் வந்து விட்ட பிறகு அந்த தந்தை நொறுங்கி அழும் காட்சி மனதை பிழிகிறது.

பஸ் ஸ்டாண்டில் அவர் பைத்தியமாய் அலையும் காட்சி அப்பப்பா வரும் முன் காப்போம் என்பதற்கு சிறந்த உதாரணம்.

நிச்சயம் ஒவ்வொரு குடும்பமும் சுய அலசல் உணவு அறை பொருட்களை ஒரு முறை செய்ய வேண்டிய அவசியத்தை இந்த படம் மிக அழகாய் விளக்குகிறது.

அடுத்த முறை இன்ஸ்டன்ட் உணவுபாக்கெட், ,துரித உணவகங்களை நோக்கி உங்கள் கை நீளும் போது இது தேவை தானா என்று யோசியுங்கள்.


நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இல்லை உணவு பாடம் நடத்தும் ஆசிரியர் இந்த பட்டாபிராமன்.

ஹாட்ஸ் ஆப் டு தி டீம்.

 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top