• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பருப்பு உருண்டை குழம்பு ???????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
View attachment 19884
தேவையான பொருட்கள்:-
து. பருப்பு - 150 கிராம்
சி. வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
தக்காளி - 1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 5 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
தாளிக்க - கறிமசாலா
செய்முறை:-
து. பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த பருப்புடன் நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு, பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், சோம்பு சீரகத்தூள் ஒரு ஸ்பூன் உருண்டைக்கு தேவையான உப்பு சேர்த்து உருட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி கறிமசாலா தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் புளியை கரைத்து சேர்க்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு சீரகத்தூள் , ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து அதனுடன் தேங்காயை அரைத்து சேர்க்கவும். உப்பு உருண்டைக்கும் போட்டு இருப்பதால் சரியான அளவில் உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் நான்கு உருண்டைகளை போடவும். இன்னும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு உருண்டை உடையாமல் குழம்பை லேசாக கிண்டி விட்டு இன்னும் நான்கு உருண்டை போடவும். இதேபோல் சேர்த்து கடைசியாக சேர்த்த பின் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு உப்பு சரிபார்த்து அடுப்பை அணைத்து இரு நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். சமைக்கும் போது அடுப்பு மிதமான தீயில் வைக்கவும்.
Wow... sema... yummy....darlu.. na ethuvaraikum senjathu illa.. bt sappttu eruku.. kandipa na try pantra.. darlu..??????
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
பாடி கேளுங்க சிந்து
மீம்ஸ் ராணியே உங்க மீம்ஸ் எங்கம்மா
ஆசை ஆசையாய் உங்க மீம்ஸ் எதிர் பார்த்து நாங்கதான்
மீம்ஸ் ராணியே உங்க மீம்ஸ் எங்கம்மா
ஆசை ஆசையாய் உங்க மீம்ஸ் எதிர் பார்த்து நாங்கதான்
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
சூப்பர் அல்லி sis.
முந்தா நாள் தான் பண்ணோம் sis.
நாங்கள் கொஞ்சம் கடலை பருப்பு சேர்த்துக்குவோம்.
உங்க presentation very nice.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top