• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பலன் சொல்ல பத்து டிப்ஸ்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
1.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் காலபுருஷ லக்கினத்திற்கு 5-ம் இடமான சிம்மத்தில் அடங்கக்கூடிய நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் விநாயகப்பெருமானை பிள்ளையார்பட்டி சென்று வழிபட்டு வருவது நல்ல பலனைத் தரும். ஆண்களின் விந்தணுவில் உள்ள உயிரணுக்களை குறிக்கக்கூடிய கிரகம் கேது என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே கேதுவின் நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

2.கோச்சார ரீதியாக அஷ்டமச் சனி மற்றும் ஏழரைச் சனி நடக்கின்ற காலகட்டங்களில் தசாநாதன் மற்றும் புத்தி நாதனின் காரகத்துவங்களில் ஜாதகர் எச்சரிக்கையாக இருப்பது நல்லதாகும்.

3.ஆறாம் அதிபதி நீசம் பெறுவது கடன், எதிரிகள் தொல்லையில்லாத மற்றும் நோயற்ற வாழ்வை தரும். நீச பங்கம் பெறும்போது கடன், நோயைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4.சுய ஜாதகத்தில் நான்காம் இடம் 9-ம் இடம் வலுத்து புதன் வலுவாக இருக்கும் போது உயர் படிப்புகள் படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
கல்விக்குரிய கிரகமான புதன் உச்சம் அடையும் ராசியான கன்னியும் சுபர்கள் தொடர்பில் இருக்கும் பொழுது உயர் கல்விகள் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்.

5.ஒரு கிரகம் ஸ்தானபலம் பெற்று மேற்கொண்டு சுபர்களின் தொடர்பு பெறும் போது அந்த கிரகத்தின் காரகத்துவ தொழில்கள் அமைவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உண்டு.

6.ஏழாமிடம் அதிகப்படியான சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது வீட்டுடன் மாப்பிள்ளையாக போவதற்கான வாய்ப்புகள் உண்டு

7.லக்ன ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சனி ராகு தொடர்பு, தந்தையுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படும். ஞாயிறுதோறும் சனி ஓரையில் சிவ வழிபாடு நன்மை தரும்.

8.பூரம் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் அந்த வகையில் வாழ்க்கை துணை விரும்பிய வண்ணம் கிடைப்பதற்கு பூரம் நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் பெருமாள் வழிபாடு மற்றும் ஆண்டாள் வழிபாடு நன்மை தரும். வாய்ப்பிருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயம் சென்று பெருமாளை சேவித்து வருவது விரும்பியவாறு வாழ்க்கைத்துணை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும்.

9.காலபுருஷ லக்கனத்திற்க்கு ஏழாவது ராசியான துலாம் ராசியுடன் நிறைய சுபகிரகங்கள் தொடர்பில் இருக்கும்போது தொடர்புடைய சுபகிரகங்களின் தசா புத்திகளில் ஜாதகர் காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

10.அந்நியர்கள், அன்னிய மதம், அன்னிய மொழி போன்றவற்றை சுட்டிக்காட்டக் கூடிய ராகு சுபர்களின் தொடர்பில் இருக்கும் பொழுது நிறைய மொழிகளை கற்றுக் கொள்வதற்கான திறமையினைத் தரும்.
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,617
Reaction score
6,947
Location
Salem

🙏🙏🙏
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top