• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பலி கெடா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
அன்று காலை முதலாகவே நூர் பரபரப்புடன் காணப்பட்டாள் . தான் செய்த ஏற்பாடுகள் அனைத்தும் சரியானதா என மனதிற்குள் நூறாவது முறையாக சோதித்து பாத்தாள். அவளது அனைத்து சோதனையின் முடிவுகளும் அவளுக்கு சாதகமாகவே அமைந்தன. இம்முறை நிச்சயம் வெற்றி உறுதி என எண்ணி கொண்டாள். இருந்தும் அவள் மனதில் சிறு பயம் எல்லாம் சரியாய் நடக்க வேண்டுமே என்று , பரீட்சையின் அனைத்து கேள்விக்கும் விடை தெரியும் என்கையில் , முதல் கேள்வி எழுதும் போது லேசாக கைகள் பதறுமே அந்த மாதிரியான பயம் .
டாமியை தூண்டில் புழுவாக, நொச்சி குப்பத்தில் விட்டாயிற்று. இவள் அங்கிருந்து சற்று தொலைவில் காருக்குள் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள். டாமியின் மீது பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் இவள் லேப்டாப் இன் கவனிப்பில் இருக்க, இவள் கவனமோ தோழிகளின் மீது இல்லாமல் இல்லை. அவர்களை இவ்வளவு சோர்வாக இவள் கண்டதே இல்லை. டாமிக்கு ஏதேனும் நிகழ்ந்தால் , அவர்களுக்கு என்ன சொல்வதென்பதை இவள் இன்னும் யோசித்திருக்கவில்லை. தன் வெற்றியின் வேட்கையே இவள் மனதை ஆக்கிரமித்திருந்தாலும், துரோகம் செய்கிறோமோ என்ற உணர்வும் ஊசியாய் அவ்வபோது உறுத்தி கொண்டிருந்தது.

*****************

டேய் எழுந்திரி டா .. டேய் என்ற சத்தம், கனவு கன்னியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த செல்வாவின் கனவை கலைக்க, கண் விழித்து பார்த்தான். அவன் முன்னே பெரிய மீசையுடன் நாளைக்கு ரிட்டையர்டு ஆவது போல் ஒரு ஏட்டைய்யா நின்று கொண்டிருந்தார்.

" என்ன சார் பகல்ல தான் நாய தேடி நாயா அலைய விடுறீங்கோ, ராத்திரியாச்சும் தூங்க விடுங்கய்யா.." முட்டை சொறிந்தவாறே சொன்னான்.

" ராத்திரியா.. நாயே மணி பகல் பத்து ஆவுது"

உம்கும் வாயை வெட்டி, சோம்பலை முறித்தான்.
" சீக்கிரம் கெளம்புடா., ஐயா உன்ன ரிலீஸ் பண்ண சொல்லிட்டாக "

அவன் சொன்ன வார்த்தை இவன் காதில் தேன் மிட்டாயாக இனிக்க, தான் காண்பது கனவா என ஒரு முறை தன தொடையை சொரிந்து பார்த்துக் கொண்டான். அவனிடம் மேலும் கேள்விகள் கேட்டால் , நீ போகவே வேணாம் என உக்கார வைத்து விடுவானோ என்ற பயத்தில், கேள்வி ஏதுமின்றி கிளம்ப தொடங்கினான் , சாரத்திலிருந்து பாண்ட்க்கு ஸுப்ட் ஆனவன், ஏட்டய்யாவுக்கு ஒரு சலாம் வைத்து விட்டு வெளியேற முயல,
" யோவ்.. இதுல ஒரு கையெழுத்தை போட்டுட்டு போ..! " என்றார் அந்த ஏட்டய்யா .
"இது வேறயா .." என வாய் விட்டே சலித்தவன்.
மனப்பாடம் செய்திருந்த தன் கையெழுத்தை அச்சு பிசகாமல் வரைந்து விட்டு, அங்கிருந்து நகன்றான். எதையோ யோசித்தவனாய் சட்டென நின்றான், பின் திரும்பி
" காற்றை கம்பிகுள்ள கட்டி வைக்க முடியாது ஏட்டய்யா," அவன் சிரிப்பதற்குள், ஏட்டய்யாவின் பதிலோ,
" சும்மா போறியா, இல்ல படுக்க போட்டு வாய்ல மிதிக்கவா..? " என வந்தது, சிரிக்க குவிந்த உதடுகள் அஷ்ட கோணலாய் சுருங்க, நொச்சிக் குப்பத்தை நோக்கி நடையை கட்டினான், செல்லும் வழி நெடுகிலும் , கடந்த இரண்டு நாட்களில் தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் அசை போட்டுக் கொண்டே தான் சென்றான். தன் அண்ணன் செத்தது கவலையான விசயமாக இருந்தாலும் தனக்கு அழுகையோ இல்லை அவனை கொன்றவர்கள் மேல் கோபமோ வரவில்லையே,,! ஒரு வேளை அனைவரும் சொல்வது போல தனக்கு சொரணை நரம்பு மட்டும் வேலை செய்யவில்லையோ என நினைத்துக் கொண்டான். தன் அண்ணனுக்கும் தனக்கும் இருந்த பாசப் பிணைப்பை எண்ணிப் பார்த்தான், தனக்கு அழுகை வராததில் அதிசயம் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது. அவன் அண்ணன் எப்போதும் அவனை தம்பியாய் பாவித்ததில்லை, அவனை தம்பி என கூறவே வெட்கி போவான், எப்படியாவது வாழ்நாளில் அவன் அண்ணன் மெச்சும்படி ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்திருந்தான் ஆனால் அதற்குள் அண்ணணின் ஆயுளே முடிந்து விட்டது, இனி லட்சியத்துக்கு வேலை இல்லை, வேறு ஏதாவது லட்சியம் யோசிக்க வேண்டும். கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தான் அதற்குள் பசி எடுக்க தன் சைக்கிளை நிறுத்தினான். நொச்சிக் குப்பத்தை நெருங்கி விட்டான், இவ்வளவு தூரம் வந்ததே தெரியவில்லை, அப்பாடா என பெருமூச்சு விட்டு, சிறுநீர் கழிக்க இடம் தேடிய வேளை , சற்று தொலைவில் அவன் கண்ட காட்சி, அவன் களைப்பை எல்லாம் கழை எடுக்க, தான் பிழைக்க வழி வந்ததென்ற எண்ணம் குல்பி ஐசாக அவனை அந்த வெயிலில் குளிர்வித்தது.

************

ரொம்ப நேரமாக தன மொபைலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நூர், என்னடா இன்னும் ஏதும் நடக்க்கலியே என சலிப்புற்றாள். இன்னும் எவ்ளவு நேரம் ஆகுமோ என அவள் எண்ணிய வேளை , டாமி மீது பொறுத்திய ஜிபிஎஸ் சட்டென ஒரே கோட்டில் வேகமாக நகர்வது தெரிந்தது அது ஒரு நாயின் அசைவை போல இல்லை, அதனால் புத்துணர்ச்சி பெற்றவள், அதனை தோழிகளுக்கு காட்டாமல் வண்டியிலிருந்து வெளியே நகர்ந்தாள் , தோழிகளுக்கு தெரிந்தால் காரியத்தை கெடுத்து விடுவார்கள் என்பதில் தெளிவாக இருந்தாள் , உடனே கணேஷுக்கு கால் செய்து அலர்ட் செய்தாள் . கடைசியில் தன் முயற்சி வீண் போக வில்லை என அவள் நினைத்த வேளை , அதுவரை வேகமாக நகர்ந்து கொண்டிருந்த ஜிபிஎஸ் சட்டென ஒரே இடத்தில் நின்று போனது, ஒரு வேளை அவர்கள் இங்கேயே சாப்ட்வேரை நோண்ட தொடங்கி விட்டனரோ ! சிக்னல் நின்று போன இடத்துக்கு ஓட தொடங்கினாள் நூர். தன துப்பாக்கியை எடுத்து கையுடன் மறைத்துக் கொண்டாள் . என்ன நேர்ந்தாலும் அவர்களை தப்பிக்க விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் .
அந்த இடத்தை நெருங்கியதும் பதுங்கி சென்றவள் துப்பாக்கியை ரெடியாக வைத்திருந்தாள், ஆனால் அங்கோ யாரும் இல்லை. டாமி மட்டுமே இருந்தது, அதுவும் சலனமற்று கிடந்தது, இவள் அருகில் வந்தும் அதன் உடல் உயிரற்றது போல எந்த அசைவும் இல்லை. டாமியை கொன்றும் அவர்களை பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளை ஆட்கொள்ள, கணேஷுக்கு, கால் செய்ய போனை எடுத்த வேளை , சட்டென டாமி உருண்டு மல்லாக்க படுத்துக் கொண்டு குறட்டை விட தொடங்கியது. ஒரு நாயின் குறட்டையை கேட்டு அவள் திகிலுற்றது அதுவே முதல் முறை.

**************

மித்ரனின் நண்பனை கண்டு தன் பசிக்கு சோறு போட ஆள் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில், அண்ணே என பாய்ந்தான் செல்வா,

" உன்னையும் உட்டாங்களானே .., எல்லாம் நான் மிரட்னது தான் "

அவன் முகத்திலோ ஈயாட வில்லை. இவன் முகத்தையும் பாராமல் தலை குனிந்தவாறே இருந்தான்.
"என்னன்னே யோசிச்சுட்டு இருக்க, சீக்கிரம் வா..! அண்ணி கையால சாப்பிடுவோம்.." என அவனை இழுத்த வேளை , தன கையில் மறைத்திருந்த கத்தியால் செல்வாவின் பசிக்கு கத்தி பிரியாணி போட்டான். செல்வா சுதாரிப்பதற்குள், மேலும் இரு முறை கத்தியால் அவன் வயிற்றை கிழிக்க, சொல்ல வந்த , வார்த்தைகள் ரத்த வெள்ளத்தில் மூழ்க சரிந்து விழுந்தான் செல்வா.

அவன் விழுந்ததும் சில நொடிகளில், ஒரு பொலேரோ கார் வந்து நிற்க அதிலிருந்து ரவியும், நாராயணனும் இறங்கினர்.
" பரவாயில்லயே சொன்ன மாதிரியே கரெக்டா பண்ணிட்டானே " என்றான் ரவி,

" நீங்க சொன்னதெல்லாம் பண்ணிட்டேன் சார் , இப்பவாச்சு என்ன விட்ருங்க சார்.." கலங்கிய கண்களுடன் மித்ரன் நண்பன் நிற்க, அவனுக்கு அவனுக்கு சொல்ல முனைந்த ரவியை , டௌட் கேட்கும் செந்திலாய் தடுத்தான் நாராயணன்,

" ஐயா எனக்கு ஜெர்ரி சார் சொன்ன பிளான் புரியலைங்க, இங்கிலிஷ்லேயே சொல்லிட்டாரு, நாம ஏன் இந்த செல்வா பயல கொன்னோம் "

உஷ்ஹ்ஹ் என சைலென்சராக புகைத்தவன், " யோவ் போன மாசம் நாம ஒரு பேங்க் ராபரி கேஸ்ல என்கவுண்டர் பண்ணுனோமே.. அதுல ஒருத்தன் தப்பிச்சான்ல.."

" அதுல எவன்யா தப்பிச்சான் நாம தான் எல்லாரையும் கொன்னுட்டோமே..?" மண்டையை சொரிந்தான் நாராயணன்.

இம்முறை எரிச்சலுடன் தொடர்ந்தான் ," அதோ செத்து கெடக்குறானே அவன் தான் பப்ளிக்னு வச்சிக்கோ " செல்வா வை காட்டி சொன்னான்.
" அவனை பொறுத்த வரை நம்ம என்கவுன்டர்ல ஒருத்தன் காசோட எஸ்கேப் ஆயிட்டான் , அவன் தான் இவன் " மித்ரனின் நண்பனை தன் துப்பாக்கியால் சுட்டிக் காட்ட, " இவன் அந்த காசெல்லாம் மாத்துறதுக்கு மித்ரன்ட்ட போயிருக்கான் , அவன் இவன ஏமாத்திட்டு காசோட எஸ்கேப் ஆயிட்டான். அந்த கடுப்புல இவன் மித்ரன் கொன்னுட்டான்," இதை கேட்டு மித்ரன் நண்பனுக்கு கை, கால்கள் உதறியது ஒடத் தயாரானான்.

" அந்த கடுப்புல மித்ரன் தம்பி இவன் மேல கம்பளைண்ட் கொடுக்க நம்ம ஸ்டேஷன் வந்திருக்கான் , அப்போ நாம அங்க இல்லனு வெளியே வந்துட்டான். அந்த கேப்ல இவன் மித்ரன் தம்பிய இப்போ கத்தியால் குத்திட்டான் . இப்போ நாம என்ன பண்ணனும்னு தெரியுமா..? "

இவன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில் மித்ரன் நண்பன் தெறித்து ஓடினான்,

ரவியின் கேள்விக்கு விடை தெரியாமல் நாராயணன் விழிக்க, சட்டென திரும்பி தொலைவில் ஓடிக் கொண்டிருந்த மித்ரன் நண்பனை சரியாக சுட்டான் ரவி. " இதான் பண்ணனும், இந்த கதையை தான் மீடியாக்கும் டிபார்ட்மென்ட் லயும் சொல்லப் போறோம், ஓகே! " சிரித்தான் ரவி.

************

நூர் காத்திருந்து காத்திருந்து தேயந்தே போனாள், யாரும் வரவில்லை. டாமியோ நன்கு தூங்கிக் கொண்டிருந்தது. சலிப்புடன் தன் காரை அடைந்தாள், " இன்னும் யாரும் வரலியே ..! " என தனக்குள்ளே வாய்விட்டு புலம்பினாள். அப்போதுதான் மிதல்முறையாக மேரி அவளிடம் பேசினாள், " யாரும் வர மாட்டாங்க மேடம் "
அவள் கூறியது நூர்க்கு விளையாட்டாக சொன்னதாக தெரியவில்லை, மேரியின் முகத்தை ஏறிட்டு பார்க்க, " எங்கள மன்னிச்சிருங்க மேடம் " சொல்லிவிட்டு தலை குனிந்தாள் மேரி. அவள் சொல்லப்போகும் வார்த்தைகள் நூரால் யூகிக்க முடிந்தது, ஆனால் அது நடந்திருக்க கூடாது என மனதுக்குள் மன்றாடினாள்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
காவலரே கள்வனாகிவிட்டால் எப்படி என்று உணர முடிகிறது.
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஜெர்ரி தப்பு மேல் தப்பா பண்ணிட்டே போறாரே....என்ன பண்ணாங்க நம்ம திருமதீஸ்? அருமையான பதிவு அண்ணா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஜாலன் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top