• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -19?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
டார்லிங்ஸ் கோவப்பட கூடாது
ஒண்ணு இல்ல இன்னைக்கு ud கொஞ்சம் நிரஞ்சன் பகுதி தான் அதிகமா இருக்கும் பிலிஸ் my favorite யா அவன்???

சும்மா வந்தான் போனான்னு அவனை விட முடியல கொஞ்சம் அவனை நல்லபடியா செட்டில் பண்ணி குடும்பமாக அனுப்பிட்டு திரும்பியும் ep எண்டில் தான் கூட்டி வந்தா வருவேன் இல்லனா இல்ல ஓகே வா கொஞ்சம் digest பண்ணுங்க சாமி ?‍♀???

*****************
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை... !

நடந்ததையே நினைத்திருத்தல் அமைதி என்றும் இல்லை.... !


நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நடத்தி காட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க அந்த கால பெரியவங்க?‍♀?
அது தான் இப்போ இங்கே நடக்குது....

பவனுக்கு நிரஞ்சனை நினைத்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,

அவன் புத்திசாலி தனமும், அவனை பின்னும் பிரச்சனையை வந்தும் துளி பதற்றமும் காட்டாது, சமாளிக்கும் திறமை கண்டு வியப்பாக இருந்தது,

அவன் அப்படி இருப்பதால் தான் இந்த சின்ன வயதிலே MD யாக ஒரு தனி நிறுவனத்தையே நிறுவி , இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி பிடித்தது
ஒரு லீடிங் பிஸினஸ்மேனாக தன்னையும் நிலை நிறுத்தி இருக்கிறான் என்றும் புரிந்தது,

(இதை இங்க படிக்கும், சுயமாய் முன்னேறி வரும் இளம் குருத்துக்களுக்கும் சொல்லிக்கிறேன் டா.... "பதறாமல் செய்யும் காரியம் சிதறாது "ன்னு நம்ப முன்னோர்கள் சொல்லி இருக்காங்க அதுக்கு நம்ப நிரஞ்சன் கதாபத்திரம் ஒரு முன் உதாரணம் என்ன ரைட்டா ??

ஒரு காரியம் செய்யும் போது பதற்றமாய் இருக்கா ஒரு 5 நிமிடம் அந்த இடத்தை விட்டோ, இல்லை அமைதியா ஒரு டம்ளர் தண்ணீரை மெதுவாய் குடிச்சு அந்த நொடியை கடந்து விடுங்க அப்புறம் பாருங்க நம்பை நசுக்கும் கேள்விக்கு பதிலும் கிடைக்கும் மனசும் அமைதியா இருக்கும் சரியா அனுபவம் யா ?
சரி இது எல்லாரும் தெரியும் டி விடுவியா போதும் உன் அட்வைஸ் கதைக்கு போறியன்னு நீங்க காண்டு அக்குறது புரியுது ok?‍♀ஹாஹா ? )

நிரஞ்சன் மீது ஒரு அளவு கடந்த மரியாதையும் நட்பு பாராட்டும் எண்ணமும் வந்தது பவனுக்கு...

பேசி கொண்டே கீழே வரும் போது பவனிடம் நிரஞ்சன்..."

திடீர் என தானே பேசி அனைத்தையும் சரி செய்வதாக சொன்னவன்,
பவனிடம்...
"பவன் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் கொஞ்ச நேரம் பாருங்க, எனக்காக எங்கப்பா பண்ணின தப்பை, மகன் நான் சரி செய்யும் பிராயசித்தமா நினைச்சுக்கிறேன்

இதில் என் சுயநலமும் இருக்கும் ப்ரோ அண்ட் ... நான் சொல்லும் போது உங்க angel கிட்ட போயி பேசினால் போதும் ஓகே வா, நான் எப்பிடி காய் நகத்துறேன் மட்டும் silent modeலில் பாருங்க..
உங்க, எங்க பிரச்சனை எல்லாம் பிச்சிகிட்டு ஓடிடும் பாருங்க டூட்.... என்று ஒரு ஆடர்ரும் போட்டு விட,

அதை கேட்டு ... சரி என சிரித்துக்கொண்டே அவன் பின்னே சென்றான், பவன்

******
Bethrotal hall......
எல்லாம் தயார் நிலையில் இருந்தது....
அவர்கள் உள்ளே நுழையவும்,

மாப்பிள்ளையா கூட்டிண்டு வாங்கோ மாமி மாலை போடுவோம், நலுங்கு முடிய போறது, கடைசி மூணு நலுங்கு கிட்ட வந்துடுது, மாப்பிள்ளைக்கும் சேர்த்து வைங்கோ என்று ஜயர் குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது,

இருவரும் (பவன், நிரு) ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மேடை நோக்கி சடன் பிரேக் போட்டு நிற்கவும் அப்போது....

திடீர் என பாவாஆஆஆஆ.. " என்று ஒரு இனிமையான பெண் அழைக்கும் குரல் கேட்கவும்
சட்டென்று திரும்பிய நிரஞ்சனிடம் ஓடி வந்து ஒட்டி கொண்டது பட்டுடுத்தி நெற்றி வகிட்டில் குங்குமம், கழுத்தில் பொன் தாலியுடன் மஞ்சள் சரடு கழுத்தில் தழைய தழைய அழகு பதுமையாக ஒரு பெண்.

"அஷி.. ! என காதல் பொங்க அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு தன் மேல் சாய்த்து தோள் அணைத்து கொண்டான் ,

கூடவே அவள் பெற்றோரும் உடன் வந்தனர்

முன் வரிசையில் அமர்ந்து இருந்த நிருவின்
தந்தைக்கு செம்ம ஷாக், தாடர் என வேகமாய் எழுந்தவர்க்கு , இதை எல்லாம் கண்சிமிட்டவும் மறந்து பார்த்தவர் முகத்தில் சொல்ல முடியாத பேரதிர்ச்சி, பேய் அறைந்தது போல நின்று இருந்தாவர் கோவம் தலைக்கேறி பல்லை நறநறவென கடிப்பதும், ஆத்திரம் கோவமும் வெடிக்கும் அளவுக்கு தான் இருந்தது ..

மேடையில், சுற்றி இருந்தவர்கள் நிலைமையோ ....... !!!??

(லயா, ஸ்வரா, தோழிகள் உறவு பெண்கள் ..... மேடையில் அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாலும், லயா ஸ்வராவுக்கு புரிந்து விட்டது அப்பாடா என்று அடக்கி வைத்த மூச்சை வெளியே விட்டது போல் இருந்தது லயாவுக்கு, ஸ்வராவுக்கோ,
அய்யோடா .... லயா great எஸ்கேப் ரூட் clear மாமு என்று குத்தாட்டம் போட்டது மனது)

பெரியவர்கள் இங்கு நடக்கும் சலசலப்பை பார்த்து அதிர்ந்து போயி அவர்கள் அருகே பதட்டமாய் வந்தவர்களிடம்,

நிருவின் சகோதரி கணவர் அனைத்தையும் அறிந்தவர், நிருவின் காதல் குறித்து மொத்தமும் விளக்கி சொல்லி கொண்டு இருந்தார்,

பரணி புனிதாவுக்கு தங்கள் மகளுக்கு நடக்கும் நலுங்கு மிச்சம் நிறுத்தி வைத்து கீழே வந்தவர்களுக்கு, நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அவசியமே இல்லாமல் போன நிலை அறிந்து பேரதிர்ச்சியில் கண்கலங்க நிற்க்கும் நிலையில் என்றால், அவர்கள் தவிப்பை கண்டு அவர்களுக்கு என்னாகுமோ என்ற பயம் ஒரு புறம் புவனாவும் , சிவாஜிக்கு இதை எப்பிடி சரி செய்ய என்னும் போராட்டத்தில் கை பிசைந்து கொண்டு நின்றனர்

கீழே அமர்ந்திருந்த உற்றார் உறவினர்களிடமும் சலசலப்பு தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு என்ன நடாக்குமே என்ற கலவர முகங்கள்..

நிரஞ்சன்.....

முதல் காய் எடுத்து வைத்தான்.."?

மேடை முன்னே தான் மனைவியோடு கைகோர்த்து வந்து நின்ற நிரஞ்சன் அனைவரையும் பார்த்து கை கூப்பி தயவு செய்து எல்லாரும் என்னை மன்னிக்கணும், இப்போ இங்க நடக்கும் குழப்பங்களுக்கு காரணம் நான் தான், ஆனா நீங்க எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருந்தா இப்போ எல்லாம் சரி ஆகிடும்,

ஒரு சின்ன மாற்றம், கண்டிப்பா இங்க function நடக்கும் என்ன மாப்பிள்ளை மட்டும் வேற, நீங்க அமைதியா இருந்து ஒத்துழைச்சா, அடுத்து function தான், பிளீஸ் நீங்க எல்லாம் இருந்து வாழ்த்தி, ஆசிர்வாதம் பண்ணி நல்லபடியா நடத்தி குடுக்கணும் நன்றி ?என்றதும் அங்கே கொஞ்சம் சலசலப்பு அடக்கியது.......

அய்யர்ரோ.....

சொல்லவே வேண்டாம் ஜய்யோ.... தலையை சொரிந்து கொண்டே.... இங்கு அங்கும் முழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்த அவருக்குகோ."!

" பகவானே என்னது இது ... "???? பகவானே இன்னைக்கு நேக்கு நேரமே சரியில்லை .....??ஹீம்..நேக்கு வேற நேரம் ஆயிடுத்து இன்னொரு பங்ஷனுக்கு வேற போகணுமே.."? என்ற டென்ஷனின் உச்சத்தில் கைக் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததார் .....

(ஆனால் ஒரு நல்ல விஷயம் முகூர்த்த நேரம் இன்னும் அரைமணி நேரத்திற்கு மேலே இருந்தது,

" சார்வாள்..."? அதுக்குள்ளார ஒரு நல்ல முடிவுக்கு வாங்ககோ ஐயா."! நேக்கு கமிஷன் போய்டும் போல இருக்கே..". என்று தான் மனசாட்சியோடு பேசிக் கொண்டிருந்தார்)

( ஆத்தா வைய்யும் காசு குடு என்ற சப்பானி ரேஞ்சுக்கு அவர் முகபாவம் இருந்தது)

நாதஸ்வரம் எனக்கு என்னயா... full payement வந்துடுச்சு ஊத்திட்டு போயிடுவோம் என கண்ணை முடி அவர் கடமைக்கு தம் கட்டி ஊதி கொண்டு இருந்தார்..

பாபி கண்களால் ஸ்வராவுக்கு நூல் விட்டு கொண்டு, நடப்பதையும் அமைதியாய் பார்த்து கொண்டு இருந்தவன் , அப்போது தான் பவன் அருகே வந்து நின்றான், அவன் தோள் மேல் கை போட்டு,
காது அருகே சென்று மெதுவா பேசுறேன் என்று சத்தமாய்...

." என்ன மச்சி இது......!" நியூ கேரக்டர் எல்லாம் என்டர் ஆகுது,
நான் என்னவோ ஒரு டாமல் டீமில் குருஷேத்திர போர் நடக்கும்ன்னு எதிர்பார்த்த,
இவன் என்னடானா கூல் பேபி மாதிரி கெத்தா வந்தான் இப்போ திவ்யா....திவ்யான்னு.... தனுஷ் ரேஞ்சுக்கு ரொமான்ஸ் குடுத்தான் ,
மச்சுஉஉஉஉஉ ...... இந்த பொண்ணு வந்ததும் கட்டி எல்லாம் புடிக்குறான் பாரு டா ,,ஹீ ஹீ ஹீ ஹு.....
அதுவும் நக்கலாய் சிரித்து கொண்டே, ?

(அடியேய் நீங்க பண்ணாத ரவுசா யா அவுக பண்ணிட்டாங்க போடி அங்கிட்டு ?? )

நிரஞ்சன்.....

எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அமைதி படுத்தா பேசி கொண்டு இருந்தா நிரு,

சட்டென்று .....
பாபியை, திரும்பி பார்த்து ஒரு விரல் காட்டி பாத்திரம் என்று கண் சிமிட்டி சிரித்து கொண்டே தன் பேச்சை தொடர....

( பாபி பேசுவது கேட்கும் தூரத்தில் தானே நிருவும் நின்று இருந்தது... இந்த பாக்கியும் அத்தனை பேச்சும் சத்தமாக, அவனை பாத்து தானே பேசுது?? என்னாஆஆ, நக்கலு பாருங்க யா இந்த பாபிக்கு ??)

பாபி......


நிரஞ்சனை பார்த்து இஇஇஇஇ.... என்று அசடு வழிய இளித்து விட்டு அவன் திரும்பியதும் மறுபடியும் தான் நையாண்டி வேலையை தொடங்கி விட்டான்??

நம்ப பாபியா?‍♀ அடங்கும் ஆள், நோ நெவெர்..... கோபியா வந்தாலும் அடங்க மாட்டோம் இல்ல..... யாரு அவரு நம்ப அடங்காமுடி handsome ஆச்சே ????

பாபி, வாய் முடி சிரித்து கொண்டுடே ... ,

டேய், என்னடா நடக்குது இங்கே.... மெடிக்கல் miracle?‍♂
ஆன ஒண்ணு பவுனு.....
உன் ரூட் பாதி கிளியர் ஆச்சு, மீதியை
சமாதானம் கொடிவிடும் ஆக்ட் குடுக்க போறான் போல டா மச்சா...
ஆஆஆஆ...?
என்றவன் கையை நறுக் என பவன் கிள்ளி விட,

"உஸ்..ஆஆஆ..! ஏண்டா...அவ்வு ? "? எருமை ஏண்டா கிள்ளற
என்று தன் கை தேய்த்து கொண்டே கேட்ட பாபியை முறைத்து....

பவன்......

டேய்.. shutup பண்ணுடா மலைமாடே.... இல்லனா spray அடிச்சு புடுவேன், கொஞ்சம் நேரம் உன் அண்டா வாய்யா முடுறியா டா, ப்பா...ப்பா..! அவ்வா??‍♂.... என்ன ஸ்பீக்கர் வாயி இது, தூஉஉஉ.. சும்மா, நொய்யா நொய்யான்னு, இங்க என்ன மாதிரி sutivation போயிகிட்டு இருக்கு உன்னை ?..... கொஞ்சம் கோவ முகம் மாற்றி,

இருடா?... இப்போ இன்னும் கொஞ்ச நேரத்திலே தானா எல்லாம் சரி ஆக போகுது பாரு டி பாபிமா... என கண் சிமிட்டி, நடப்பதை மட்டும் கவனி டா மாம்ஸ் என, அவனை நெருக்கி அணைத்து கொள்ள வர முறுக்கி கொண்டே ,
பாபி..
ஹும்.. போடா சும்மாஆஆ,... ஹான், ???இப்பிடி...
?நல்ல வார்த்தையா சொன்ன தானே எனக்கும் ஏறுது... ????
என்னடா சொன்னா ??
மலைமாடா ???
அப்பிடின்னா புது வார்த்தை வைச்சு எல்லாம் திட்டுறானே ஒரு வேலை நம்ப பிகர் பத்து jelaous ah இருக்கும் புள்ளைக்கு?? அது தான் இப்பிடி மலேயா பாஷையில் புகழ்ந்து தள்ளிங் ?‍♂

பவனுக்கு சிரிப்பு வர அதை அடக்கியவன் , பார்வை லயாவிடம் திரும்பியது.....

***************
நிரஞ்சன்....

நிரு, இங்கே அமர்ந்து இருந்தவரிடம் பேசிவிட்டு....
அடுத்து பரணி நிற்கும் இடம் நோக்கி தான் அடுத்த காய் நகர்த்தினான்...
***********
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பரணி, சமாதானம்.....

சட்டென்று பரணியிடம் போயி தன் மனைவியுடன் நின்றான் நிரு .....

கலவரமாய் தன் மகளாய் பார்த்து கொண்டு நின்றவரின் கை பிடித்து சமாதானம் செய்து கொண்டு இருந்தனர் புவனா , புனிதா, அவர்களும் அதே நிலையில் தான் இருந்தனர் இருந்தாலும் யாராவது சமாளிக்க வேண்டுமே. சிவாஜியும் அங்கே தான் இருந்தார்

நிரஞ்சன் அவர் அருகே சென்று, அங்கிள் ஐயம் சாரி.... என சடார் என்று அவர் காலில் மனைவியோடு விழுந்தான்...
அய்யோ என பதறி பின்னே சென்றவர்.. சட்டென குனிந்து எழுந்துருங்க மாப்பிளை... தம்பி... என்றார்,

நிமிர்த்த நிரு...

அங்கிள் எங்க அப்பா பண்ண தப்புக்கு அவமரியாதை தலைகுனிவு என்னவோ உங்களுக்கு தான் அதிகம் ,
உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட இந்த பிரச்சனையை இப்போ நானே இன்னும் கொஞ்ச நேரத்துல சரி பண்ணி தர பாக்கிறேன் அங்கிள்...

" நீங்க வருத்த படாதீங்க, இப்போ உங்களுக்கே இப்போ என்னை பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சு இருக்கும்..."

"உங்க மகள் நேசிக்கும் ஒருத்தரை விட்டு என்னை கல்யாண பண்ணி மேலும் சிக்கல் தான் பெருகி இருக்கும் இதிலே ஒருத்தரும் சந்தோசமா வாழ்ந்து இருக்க முடியாது.."?

இப்போவும் ஒண்ணும் கெட்டு போகல உங்க அனுமதி கிடைச்ச உங்க மகள் உயிராக நேசிக்கும் உங்க தங்கை மகன் பவன்னுக்கு அவங்களை கலயாணம் பண்ணி குடுங்க பிளீஸ் ...

பரணி..... நிரு கை பிடித்து இல்ல மாப்பிள்.. தம்பி, நீங்க நினைக்கிற மாதிரி என் பொண்ணு தான் பவனை விரும்புற அது எனக்கும் தெரியும்,
ஆனா பவன்... எனக்கும் பவனை ரொம்ப பிடிக்கும் தம்பி அந்த ஆசையிலும் தான் இதுவரை 2 முறை போய் அவர் கிட்ட கேட்டுப் பார்த்தும் அவர் முகம் கொடுத்து கூட சரியா எனக்கு பதில் சொல்லல, இதுக்கு அப்புறமும் அவர் என் பொண்னை தான் விரும்புறாருன்னு எப்படி நம்புறது...

என அவர் முடிக்கும் முன்னேயே,

நிரு ....

இல்ல.... அங்கிள் தப்பா நினைக்காதீங்க, நீங்க அவரை புரிந்து கொண்டது அவ்வளவு தான், உங்களுக்கு அவரை பற்றி ஒரு பகுதி தான் தெரியும்....

பவன் இதுவரை என்னிடம் பேசியது வைச்சு நான் அவரை புரிஞ்சிக்கிட்டது வைச்சு சொல்றேன்,

அவரை விட உங்க பொண்ண நல்ல வச்சிக்கிற மாப்பிள்ளை உங்களுக்கு இந்த ஜென்மத்துல கிடைக்கிறது கஷ்டம், அவரை விட உங்க பொண்ண நேசிக்கிற ஒரு ஆளயும் பார்க்கறதும் கூட கஷ்டம்,
நீங்க அவரை மிஸ் பண்ணிடாதீங்க, ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க...அங்கிள்

உங்க பெண்ணை விட ஆயிரம் மடங்கு பவன் உங்க மகளை நேசிக்கிறார், என்ன அவருக்கு அதை காட்ட தெரியல ...

பவன் எல்லாத்தையும் என்னிடம் சொல்லி இந்த நிச்சியம் நிறுத்த தான் என்னை தனியா அழைச்சுட்டு போயி பேசினார், என..

பவன் நிரஞ்சனிடம் சொன்ன மொத்த கதையும் அவரிமும் ஒப்பித்தான்....

கேட்டு கொண்டு இருந்தா புவனா, புனிதா, பரணி, சிவாஜிக்கு முதலில் கோவம் வந்தாலும், அதன் பிறகு அவன் மனமாற்றம் புரிந்து ஒரு வழியாக சம்மதிக்கும் மூடுக்கு வந்தார் பரணி..

அவரிடம் மேலும் brain வாஷ் செய்து நன்றியும் சொல்லி பவனை நோக்கி விறுவிறுவென வந்தான்.....

******************

பவன்......

அங்கு நடப்பதையும் லயாவிடம் ஒரு பார்வை பார்த்து வைக்க
அவளோ, அவன் பார்க்கும் போது எல்லாம் அவனை திட்டி கொண்டு இருந்தவள் இப்போது தீர்மானமாய் சுற்றும் மறந்து எதிரே இருக்கும் பன்னீர் சொம்பை கையில் எடுத்து அடிப்பது போலவே,பாவலா செய்ய,
முகத்தை திருப்பி கொண்டான் பவன்...

அவன் பார்வை அங்கு வரும் போது எல்லாம் ஏதோ ஒரு மோனோ ஆக்ட்டிங் செய்து கொண்டு இருந்தால், ஒரு பக்கம் அவனுக்கு சிரிப்பு என்றால் இன்னொரு பக்கம் பக் பக், திக் திக் ஆக மனசு அடித்து கொண்டது .

அய்யோ? இந்த மஹாகாளிய எப்பிடி மாலை இறங்குவேன் தெரியலயே.... கொள்றலே என் அழகிய strawberry, என முதல் முறையாக அவளை பார்த்து உதடு குவித்து உம்மா... என்று கண் சிமிட்டி காற்றில் முத்தம் குடுத்தான் ஒரு பயத்தோடே,

அதை பார்த்ததும் தான் தாமதம் உதட்டை கடித்து முறைத்து கொண்டே உட்கார்ந்த நிலையிலேயே சுற்றும், முற்றும் தூக்கி அடிக்க இன்னும் பெரிய சைஸ்சில் எதையோ தேட ஆரம்பித்தாள், ஏதோ டார்கெட் பண்ணுற யா பவன் உஷார் மாமே ??

அவள் அமர்ந்து இருக்கும் அழகும் அவள் செய்யும் சேஷ்ட்டைகளும் பார்க்க பார்க்க.....

இணை பிரியாத நிலை பெறவே.... நெஞ்சில் யாகமே.....
தவித்திடும் போது ஆறுதலாய்.....
உன் மடி தேடினேன்....
காலம் தோறும் நெஞ்சில்....
வாழும் உந்தன் காதல்....
ஞாபகம் தினம் தினம்.....

கனவெல்லாம் நீதானே.....
விழியே உனக்கே உயிரானேன்....


ஒரு பக்கம் அவளை கடித்து தின்று விடும் ஆசை...
இன்னொரு பக்கம் எங்க அவ எடுத்து அடிச்சு கிடிச்சு?‍♂ மண்டை மேல் கொண்டை வருமோன்னு பயம் ஒரு பக்கம் ?‍♂ இவளை எப்பிடி தான் சமாளிச்சு மூணு முடிச்சு போடுவோமோன்னு இருந்தது பவனுக்கு

தனக்கு விழுந்த முடிச்சுகள் தானாய் அவிழும் சந்தோசம் குழப்பம் என பல விதமான மூடில் கவனிக்க ஆரம்பித்தான் பவன்...

(பாவம் துரைக்கு தெரியல டார்லிங்ஸ் இனி தான் இவருக்கு இருக்கு அமாவாசை பூசை ???,

டேய் பவுனு மாம்ஸ்.....
பாக்க தான் டா அவ ஓவியா....
உன்னை புரோட்டா போட போற போறியா....
ஏண்டா பொறந்தேன்னு நான் பாவியா...
அவ பின்னாடியே பாடுவியா ....

ஏ.... வாடி புள்ள வாடி...
வாடி புள்ள வாடி....
உனக்கு ஏத்த ஜோடி....
உன்னை மாட்டு நினைச்சு இருக்கேன்....
ஏய் வாடி புள்ள வாடி.... ??
அடேய்...

உன்னா வுடு, என்னா வுடு இல்ல
அத்தா சிக்கல் சிந்துஜா, தோத்த நக்கல் நந்துஜாவா, உன்னை பிரிச்சுஉஉஉஉ ....(காந்திமதி அம்மா ஸ்டைல் ) மேய போறா.....? "

பவுனு மாமா all the best டி ????)

பாபி, ஏதோ பக் பக் என தானாய் பேசிக்கொண்டு இருந்தான் பவனிடம் ஆன நம்ப ஹீரோக்கு அது எல்லாம் காதுல விழுந்து இருந்தா பாபி வாய் இந்நேரம் வெத்தலை போட்டு இருக்கும்....

எங்கே பவுனு மாமா தான் கண்ணாலே காதல் அம்பு விட்டு கண்ணுல ரத்தம் தான் வரல, அவ்வளவு அனல் பார்வை இல்ல பதிலாக லயாவிடம் இருந்து வருது....

இதே சிந்தனை பிடியில் இருந்தா பவன் மனதை கலைப்பது போல் அவன் தோள் மேல் கை வைத்தான் நிரஞ்சன் ...


நிரஞ்சன்....

சட்டென்று திரும்பி பார்த்த பவனிடம் டூட் உங்க மாமா கிட்ட பேசி ஒரு வழியா சம்மதிக்கும் ஸ்டேஜ்க்கு வந்தாச்சு,

இப்போ போங்க உங்க angel கிட்ட உங்க கை வரிசை காட்டி அவங்க மனசை மாத்தி கூட்டி வாங்க சார், இந்த நிச்சிய மேடைக்கு ஓகேவா go head ப்ரோ.. என உற்சாகமாய் பவனை காட்டி பிடித்து கை குலுக்கி லயாவிடம் அனுப்பினான் all the best என்று thumbs up காட்டி ??...

பவன் நிருவை பார்த்து tnks ப்ரோ என்று தான் மகிழ்ச்சியை கண் சிமிட்டி காட்டி மேடை நோக்கி, பயம் குஷி இரண்டும் கலந்த மூடில் செல்ல..... .

***********-

நிரு...
தான் மனைவியை அழைத்து கொண்டு தான் தந்தையை இருக்கும் பக்கம் அடுத்த காய் நகர்த்த சென்றான்...
சென்றான் நிரஞ்சன்...

இதை எல்லாம் ஒரு அர்வாமாய் கவனித்த பெரியவர்கள் மனதில் திக் திக் என்ன நடக்கும் என்று.......

***************
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நிரஞ்சன்.......

தந்தை அருகில் ஜோடியாக வந்து நின்ற நிரஞ்சன்,
அவன் தாய் மீனாஷி, சகோதரி நிரஞ்சனா என்னாகுமோ என்று பதறி சரியாக கணவர் அருகே வந்து நின்றார் ....
குனிந்து இருவர் கால் தொட போனால் அஸ்வதா,
சட்டென பின்னே நகர்ந்து நின்றார் அந்த பெரிய மனிதர் மட்டும் ....
சற்று பதட்டமான நிலையில் நிருவின் தாயும் சகோதரியும் நின்று இருந்தனர்,

தந்தையிடம் திரும்பிய நிரஞ்சன்.....

"என்ன.. ப்பா.."? அதிர்ச்சியா இருக்க,
ஏன் உங்களுக்கு தான் ஷாக் குடுக்க தெரியுமா, நான் உங்க பிளட் டாட், உங்க அறிவு ஒரு 75% எனக்கு இருக்காது,

நீங்க விளையாட இது நீங்க போகும் கார்டு கிளப் கிடையாது... "? என் வாழ்க்கை... பா

"ஏன்..ஏன்.."? ப்பா...?‍♂? உங்களுக்கு இந்த கொடூர புத்தி சொசைட்டியில் பெத்த பேரில் இருக்கும் நீங்க,
உங்க சுயநலத்துக்காகவும், பாழாய்ப் போகும் கௌரவத்திற்காகவும்,
உங்க மனசை இப்பிடி குறுகிய வட்டத்தில் வைச்சு இருக்கீங்க,

ரெண்டு பொண்ணோட வாழ்க்கையை மட்டும் இல்ல , எனக்கும்...
என் ஆஷிமா... தான் எனக்கு முதலும் கடைசியும் தெரிஞ்சும் அதை குழி தோண்டி புதைக்க நினைச்சிட்டீங்களே ப்பா,
டென்ஷனால் ஏசி ஹால்லிலும் புளுங்க ஷர்ட் முதல் பட்டன் கழட்டி விட்டு கொண்டே அவர் அருகில் நெருங்கி ,
அவள் கை பிடித்து அவர் முன்னே பிடித்து ஆட்டி..
யாரு பா இவ உங்க ரத்தம் தானே இவளும், அது ஏன் உங்களுக்கு புரியல
என வெறுப்பாய் முகத்தை திருப்ப....

அஸ்வதா.....
பெரியவர் அருகே வந்தவள் அவர் கை பிடிக்க, அவர் தடுத்தும் பிடிவாதமாய் கெட்டியாய் பிடித்து , முறைப்பவரிடம் நேர் கொண்ட கலங்கிய பார்வையோடு.. மாமா... இப்போவும் சொல்றேன் நான் உங்க மகனை மயக்கல, உங்க குடும்பத்தையும் பார்த்து தான் மயங்கி இருக்கேன்... உங்களோடு சேர்த்து வாழணும்ன்னு தவம் இருக்கேன் மாமா ..

எனக்கு என் பாவா மட்டும் இல்ல, நீங்க எல்லாமே வேணும் மாமா, எனக்கும் அம்மாவுக்கும் உங்களை விட்ட உறவுன்னு யாரும் இல்லையே மாமா என கலங்கியவள் தலை குனிய,
அருகே வந்து இடையோடு அணைத்து கொண்டான் நிரு... நான் இருக்கேன் டி உனக்கு காலம் முழுக்க என்று சொல்வது போல்இருந்தது அவன் அணைப்பு...

திரும்பி அவன் நெஞ்சில் முகம் புதைத்து விசும்பியவளை சற்று தள்ளி அழைத்து சென்று காதருகே குனிந்து, அஷி... என்று காதில் ஏதோ சொல்ல சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றவள், குனிந்து இருந்த முகத்தில் சிறு சிரிப்பின் சாயல்.. அதை கண்ட திருப்தியில் தந்தையிடம் திரும்பியவன் பார்வையில் வெறுப்பின் சாயல், சிவந்து போனது கண்கள்...

அவர்(அஸ்வதா தாய், தந்தை ) சகோதரியும் அவர் கணவரும் அவரை கெஞ்சும் பார்வையில் பரிதாபமாக பார்க்க....

பெரியவர்.. அவர்களை பார்த்தவர் தலையும் சற்று குனித்தது...

நிரஞ்சன்.....
சற்று கோபமாய்....
இப்போவும் சொல்றேன்..ப்பா, நீங்க வேண்டாம்ன்னு தூக்கி போட்டு, இவளுக்கு தாலி கட்டிய கையோடு உங்க மூஞ்சிலே கரியை பூசிட்டு, சொல்லாம கொள்ளாம நான் இங்க வராம போயி இருக்க முடியும்,

ஆன உங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கு அது என்னாலே போக வேண்டான்னு தான் உங்களுக்கு மதிப்பு குடுத்து ரிஜிஸ்ட்டர் மேரேஜ் முடிச்சு நேரா இங்க வந்து இருக்கேன்...

இனியும் உங்கள நீங்க மாத்திக்கலான்னா....

ச்சா......என முகத்தை திருப்பி கொண்டு
மனைவியை சகோதரியிடம் நிறுத்தி தாயிடம் வந்தவன் அவர் அருகில் இருக்கையில் அமர்த்தி... அவர் கை பற்றி முத்தமிட்டு,
ம்மா.... சாரி மா என்று தலை குனித்தவன் பின் குரல் செருமி, மா... நான் உங்க கிட்ட கூட சொல்லாம இந்த காரியம் செய்தது தப்பு தான் மா, நீயே சொல்லு ம்மா, என்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச நீங்களும் அப்பா கூட சேர்ந்துடிங்க இல்ல என குற்றம் சாட்டும் பார்வையால் தன் தாயை பார்க்க...

இல்ல.. இல்ல டா மா... என மீனாக்ஷி பேச்சு வராமல் தவிக்க,

சரி விடு போனது போகட்டும் ம்மா, எனக்கு என்ன செய்யன்னு தெரியல இனியும் நான் சும்மா இருந்த, என் அஷி எனக்கு இல்லாம போயிடுவா மா...
இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரும் ஒரே வழி இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் தான்னு பண்ணிட்டே ....
எனக்கும் வேற வழி தெரியல ம்மா.....
சாரிஇஇ..... பிளீஸ் மீனும்மா.." என கெஞ்சி கொண்டு......
உங்க முன்னாடி மாலை மாத்தி என் கல்யாணம் இன்னொரு தடவை பண்ணிக்கிறேன் என்ன ஓகே வா.... என்று அவன் அன்னையின் கன்னம் பற்றி, அவரை சமாதானம் செய்ய....

சொல்லடி என் அழகு மீனாஷி என குறும்பாய் தன் தாயை கெஞ்சி, கொஞ்சி கொண்டு இருந்த மகனை பார்க்க பார்க்க அந்த தாயின் மனதும் அவனுக்கு ஆறுதலாக இருக்க மனம் போராடியது, மகனின் தலை கோதியவாறு,

நிருமா... என்றவருக்கு பேச்சு வரவில்லை, இடது கையால் அவர் நெற்றியை பற்றியவர் முகத்தை தன் புறம் திருப்பி,

ம்மா..... இன்னும் என்னமா ... உன் புருஷர் கிட்ட பயமா, இருங்க என......
தன் பட்டு ஷர்ட் பாக்கெட்டில் இருந்த மெட்டி, மோதிரங்கள் வைத்த pouch எடுத்து அவர் கையில் திணித்தவன்,
இது போட்டு நீங்க ஆசிர்வாதம் பண்ண தான் மா அவ என முழு பொண்டாட்டி என்று தான் மனைவியை பார்த்து குறும்போடு கண்ணோரம் லேசாய் சிமிட்டி,

அப்புறம் கிராண்ட் டா ICT chola வில் reception என்ன... ஓகே வா இந்த சுமாரான மூஞ்சி தான் என் பொண்டாட்டின்னு ஊருக்கெல்லாம் காட்டி சொல்லிடுவோம் என்னமா என்று சிரித்து கொண்டே மனைவி மீது ஒரு கண் வைத்து தாயின் தோள் அணைத்து சொல்ல, அவனை பார்த்து ஒழுங்கு எடுத்து, கை வெட்டுவது போல் ஜாடையில் கொன்னுடுவேன் என்றால் அவன் அஷி, சத்தம் வாராமல் சிரித்த நிரு,

"ம்மா..... கையிலே லூசு மாதிரி இதை வைச்சு கிட்டு சுத்திகிட்டு நிக்கிறேன் மீனுக்குட்டி,

"இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள் தான் மா.... " பாதி கல்யாணம் நானா பண்ணிக்கிட்டேன், மீதி கல்யாணம் உங்க முன்னாடி இங்கயே நடத்திடுவோம் ஓகே ?? ..

அப்பா மனசு கிரிமினல், soo அவர் கையாலேயே மாலை குடுக்க சொல்லி இங்கே எல்லார் முன்னடியும் இன்னும் ஸ்டராங் பண்ணிடுவோம் சரியா மீனு.. " என்று தாயிடம் சம்மதம் கேட்டவன்,

தமக்கையிடம்....., ரஞ்சி,
இன்னொரு முக்கியமான விஷயமும் ,
நீங்க எனக்கு பார்த்தது இருக்கும் பொண்ணு, ஏற்கனவே அவங்க அத்தை பையனை ரொம்ப வருஷமா எங்களை போலவே காதலிக்கிறாங்க,

அதிர்ச்சி ஆனார்கள் அவர்கள் சுற்றி நின்ற மொத்த நிரு குடும்பம்....

அங்க திரும்பி பாருங்க அந்த பொண்ணு குடும்பமே எப்பிடி வெறுத்து போயி நிக்கிறாங்க, நம்ப சைட் தப்பும் இருக்கும் மா அவ்வளவு அவசரமா இந்த அப்பா பண்ண கூத்துனாலே தானே இவ்வளவும்,

ஏதோ ஒரு கோவத்துல தான் மா அந்த பொண்ணு இதுக்கு சம்பாதிச்சு இருக்காங்க, அவங்களுக்கு இதில் துளி கூட இஷ்டமில்லை, அவங்க அத்தை பையன் பவன் தான் மா என்னை கூப்பிட்டு எல்லாம் தெளிவா சொன்னாரு,
இப்ப அவங்க கிட்ட சமாதானம் பண்ணி பேசி சம்மதம் வாங்க தான் போயிருக்காரு பவன்.....

அவங்களுக்குள்ள ஏதோ ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் மட்டும் தான் ம்மா, இப்போ சரி பண்ணிட்டு வந்திருவாருன்னு நினைக்கிறே?? ...

அனைத்துக்கும் வெறும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தார் மீனாட்சியம்மா, பாவம் அவர் என்ன செய்வார், கொஞ்சம் அமைதியான, பயந்த சுபாவம் கணவரிடம் அடங்கியே பழக்கப்பட்டவர்,

யாருக்கு என்று பேசுவார் ஆனால் மகனிடம் அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பவர் அவன் மனதை புரிந்து கொண்டு... தன் மகனின் வாழ்க்கை தான் முக்கியம், இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலோடு துணிந்து அனைத்திற்கும்
தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் நிருவின் மீனுக்குட்டி....

நிரஞ்சனா.....

தந்தையிடம் ..... இன்னும் என்னப்பா தயக்கம் உங்களுக்கு, எல்லாம் கேட்டிங்க தானே , பாவம் என் தம்பி சந்தோஷமா வாழட்டுமே சரின்னு சொல்லி அவன் இப்போ கேட்டதை நடத்தி கொடுங்க ப்பா .." என்ற.....
மகளை பார்த்தவர் என்ன பதில் சொல்லுவார் எல்லோரும் ஒரு முடிவோடு இருக்கும் போது மௌனம் சம்மதம் தான்.

நிரஞ்சனா அருகே நின்ற அஸ்வதா இரண்டு கன்னம் பிடித்து கிள்ளி,

"ஏய் திருட்டு பூனை.... எப்படியோ என் தம்பியை உன் பின்னாடி சுத்துற போல மயக்க வச்சிட்டியே கள்ளி டி நீயி, அங்க பாரு அவரு கண்ணு இங்கேயே தான் சுத்தி சுத்தி வருது.. ஹாஹா ??

இங்க பாரு பூன இனி என் தம்பிய சந்தோஷமா வெச்சுக்கிறது மட்டும் தான் உன் வேலை சரியா.... என் தம்பி பொண்டாட்டி தம்பிடி...

அவன் கண்ணுல ஆனந்த கண்ணீர் தவிர வேற பார்த்தேன் மகளே அப்புறம் இந்த நாத்தனார் கொடுமை என்னானு காட்ட வேண்டியிருக்கும்டி ஜாக்கிரதை.....

ஒழுங்கா இருந்துக்கோ என குறும்பாய் சிரித்து கொண்டு சொன்னாவளை இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்து சேர்த்து அணைத்துக் கொண்டாள் அஷி..

அய்யோடா........ ???‍♀?
பாருடா நிரன்.... என்ன அழகா இப்பவே நாத்தனாருக்கு மஸ்கா போடுறா உன் பொண்டாட்டி சரியான ஆள் தாண்டா புடிச்சிருக்க.....
ஏதோ நல்லா இருந்தா சரி என்றவள் அருகில் வந்த நிரஞ்சன், மனைவியோடு சேர்த்து தன் சகோதரியையும் அணைத்துக் கொண்டு ரொம்ப தேங்க்ஸ் டீ வெள்ளரிக்கா.என்று வாய்விட்டு சிரித்து
"க்கா"வுக்கு அழுத்தம் கொடுத்து, தன் உடன் பிறப்பின் பின் மண்டையில் கொட்டினான்..

அப்படியே அஷி அருகே சாய்த்து ..
அடியே பொண்டாட்டி..... முத்தம் மொத்தத்தையும் உன் நாத்தனாருக்குகே கொடுத்தா அப்புறம் எனக்கு என்னடி வெச்சிருக்க.. இருடி உன்ன கவனிச்சுக்குறேன், என்றது தான் தாமதம் விலக நினைத்தவளை இழுத்துப் பிடித்து, இன்னும் அருகே இருக்கிக்கொண்டான் நிரஞ்சன்....

நிரஞ்சனி...

இருவரையும் தள்ளி நிறுத்தியவள்.. டேய் நீங்க ரெண்டு பேரும் என் மேலே ரொமான்ஸ் பண்ணினது போதும்டி...... என்றது தான்,
இருவரும் அசடு வழிய, நிரு இரண்டு கையால் தலைமுடி சரி செய்ய அஷி நகத்தை கடிக்க ரஞ்சியை பார்த்து இளித்து நின்றனர்....
அய்யோ போதுமே ரொம்ப வழியுதுங்க டா முடியல என்று கிண்டல் செய்து ,
அது என்னடா தமுடு ...

பொண்டாட்டி வந்ததும் அக்காவை அடிக்க ஆரம்பிச்சுட்டியா ஒரு வயசு தான் வித்தியாசம் உனக்கும் எனக்கும் இருந்தாலும் நான் உன்ன விட பெரியவா தானே என்னை எப்படி நீ கொட்டுவே, ? இருடா செல்லம்...?நிருவின் காதை பிடித்து திருகினாள்,

ஸ்ஸு.. ஆஆஆ விடுடி வலிக்குது என்று கதை இழுத்து தடவி கொண்டே நிரு....
போடி வெள்ளரிக்கா என.....

அம்மாஆ.... இந்த பாதி கல்யாணம் கேன்சல் பண்ணிடு, என்றால் வாய்விட்டு சிரித்து..
நிரஞ்சன் , அஸ்வத்தவும் கோரஸ்ஸாக சேர்ந்து...... அடப்பாவி என்றனர்.

இந்த அழகான குடும்பம் செய்யும் குறும்பு கூத்தையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்காத பாதிப்பேர், தங்கள் வயிற்றை நிரப்ப பல விதமான உணவுகள் இருக்கும் டைனிங் இருக்கும் இடத்திற்குச் சென்று இருந்தனர்,

******************
பவன்......

நிரு சொன்னது தான் தாமதம் அவனை கட்டி பிடித்து tnks நீரன் என்று கை குலுக்கி விட்டு ,

தான் மாமன்மகளை மொத்த காதலையும் கண்களில் தேக்கி பார்த்து கொண்டே மேடை நோக்கி இருக்கு 10 படியையும் இரண்டு இரண்டாக தாவி வந்தவன்,
நின்று....
லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி லைலு.... என்றது தான் தாமதம்,
நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நிற்க....

ஆவேசமாய் எழுத்து கண்மண் தெரியாது ஹாலுக்கு இடது பக்கம் வெளியே ஒட்டியே மணமகளுக்கு என்று உடை மாற்ற என, சின்ன கெஸ்ட் அறை ஒன்று கீழேயும் எடுத்து இருந்தனர் அங்கே சென்று கதவு அடைக்க திரும்பியது தான் தாமதம்...

அவள் பின்னேயே வேகமாய் ஓடி வந்த பவன் அவள் கதவு அடைக்கும் முன்னே கை வைத்து தடுக்க,

அது புஷ் டோர் சட்டென முட முடியாமல் அவள் திணற அவன் ஆண்மை பலத்தால் தள்ளிய வேகத்தில்,

அவள் கை பேலன்ஸ் விட்டு பின்னேயே,

ஆஆஆ.... வென்று கத்திய படி கீழே சாயா போனவளை கீழே விழாமல் தடுக்க அவள் கை பிடிக்க போயி தடுமாறி அவள் மீதே பொத்தென விழுந்தான் பவன்....

கதவும் தானாக போயி அடைத்து கொண்டது... "????

**************தொடரும்..........
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Sry டார்லிங்ஸ் என் மகனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை டா ரெண்டு நாளாக ஹாஸ்பிடல் அது இது என்று ஒரே கிலி ??
அது தான் ஏழுத முடியல அது தான் சொன்ன நாள் குடுக்க முடியல ??

காலையில் தான் ஸ்டார்ட் பண்ணே
நிறைய mistakes இருக்கும் கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க டா என்னால இதுக்கு மேல strain பண்ண முடியல படித்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sry டார்லிங்ஸ் என் மகனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை டா ரெண்டு நாளாக ஹாஸ்பிடல் அது இது என்று ஒரே கிலி ??
அது தான் ஏழுத முடியல அது தான் சொன்ன நாள் குடுக்க முடியல ??

காலையில் தான் ஸ்டார்ட் பண்ணே
நிறைய mistakes இருக்கும் கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க டா என்னால இதுக்கு மேல strain பண்ண முடியல படித்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி??
Akka.. paiyanai paathukonga kaa strain pannatheenga.. take care of your son and you too.. ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Akka.. paiyanai paathukonga kaa strain pannatheenga.. take care of your son and you too.. ??
எப்பிடி இருக்கு டா இன்னைக்கு ud any confusion இருந்தா சொல்லுங்க சரி பண்ணுவோம் டா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top