• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் --23?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
யூடி யோட வந்துட்டேன் நட்புக்களே படிச்சு குற்றம் குறை இருந்த பாசமா லைக்ஸ் ஆசையா கமெண்ட் போட்டு சொல்லுங்க , சைலன்டா படிக்கும் சைல்ட் எல்லாம் கூட கொஞ்சம் டைரக்ட் டா வந்து உங்க கமெண்ட் சொன்ன நல்லா தான் இருக்கும் வரணும் தோழிகளே காசா பணமா தில்லா வாங்க யா ?‍♀??? ....

*****************-

லயா....
"உங்க கண்ணுக்கு தவறாய் தெரிஞ்ச எங்க அழகான நட்பு எப்பிடி பட்டதுன்னு சொன்ன தான் உங்களுக்கும் புரியும் .... "?

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அவன் என்னை பார்த்து பழகிய முதல் நாளில் இருந்து என்னை என்ன சொல்லி கூப்பிடுவான் தெரியுமா மாமா.."?

"சின்னா .."! அதுக்கு அர்த்தம் தங்கச்சி, அவங்க வழக்கம் தங்கையை ஆசையா கூப்பிடுறது, ஒரு முறை கூட என்னை என் பேரு சொல்லி கூப்பிட்டது இல்லை அவன்..

எங்க முதல் சந்திப்பே ஒரு மோதலில்
தான் பிரண்ட் சிப் ஆச்சு,எனக்கு சீனியர் அவன்.

காலேஜில் நானும் என் க்ளோஸ் பிரண்ட் சைந்தவி ஜாயின் பண்ணி ஒரு மாசம் இருக்கும் .

அது வரை எந்த பிரச்சனை இல்லாம போயிட்டு இருக்கும் போது திடீர்ன்னு ஏதோ உள்ளுணர்வு யாரோ எங்களை பார்ப்பதும் பாலோவ் பண்ணுவது போல தெரிஞ்சுது.

திரும்பி பார்த்த ஆஜானு பாகுவா ஸ்மார்ட் டா கொஞ்சம் பிக் பாஸ் தர்ஷன் சாயலில் இன்னும் மேச்சுர இருந்தான்,.

நான் போகும் போது வரும் போதும் சும்மா என்னையே பார்த்திட்டு இருப்பான்.

சரி இளவட்டம் இது காலேஜில் சகஜம்ன்னு கண்டுக்காம போயிட்டு இருந்தேன் ,

"இருந்தாலும் தெடர்ந்து ஒரு வரமாய் இது இப்பிடியே continue ஆகவே.... "?

ஒரு நாள் காலேஜ் முடிந்து வீடு திரும்பும் முன் காலேஜுக்கு முன்னே பெரிய கார்டன் இருக்கும், அங்கே இருக்கும் புல்வெளியில் போடப்பட்டு இருக்கும் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அரட்டை அடிப்பது வழக்கம்,

ஏதோ உறுத்துவது போல இருக்கவே திரும்பி பார்த்தாள் லயா,
அதே ஆடவன் சற்று தள்ளி மரத்துக்கு பின்னே மறைந்து நின்று இருப்பது தெரிய

" செம்ம கண்டு ஆகி போயி
கோவமா?.."அவனை பார்த்து,
"அடேய்ஏஏஏஈஈஈ .... செத்த டா நீ
உன் மண்டைக்கு 16 தையல்
போடாம உன்னை விட போறது
இல்ல டி.."!!

" சைட்டு அடிக்குற சைட்டு என் மாமன் கூட அப்பிடி பார்த்தது இல்லடா என்னை , அவரு இப்போ உன்னை பாக்கணும் , சும்மா பிச்சி பிச்சி பிசா தான் டி நீயி... "என அவனை பார்த்து புலம்பி கொண்டே வேக வேகமாய் குனிந்து கீழே கிடந்த பெரிய சைஸ் கூழாங்கல்லு கையில் எடுத்ததும் தான் தாமதம்.

பக்கத்தில் நின்று இருந்த சைதவி அவள் கை பிடித்து,

" அடி பாவி ?, ஏய் இருடி ரவுடி... "!லய...லயா விட்டுடுடி பாவம்... பார்த்த ரொம்ப நல்லவரா இருக்காரு மச்சி, முதலில் அவர் கிட்ட பேசி என்னனு தெரிச்சுப்போம் டி, என்று அவள் கையை பிடித்து தடுத்து அவனுக்கு பறித்து பேச,


திரும்பி அவளை ஒரு லுக் விட்டு,
" என்ன.. "!! சைத்தான் ஹீஹீ சவீ(சைந்தவி ) ரூட் மாரிங் என்று கண் சிமிட்டிய லயா..

அதே நேரம் அந்த ஆடவனும் அவர்களுக்கு அருகில் அலறி கொண்டு ஓடி வந்தான்....

"ஸ்டாப், சின்னா ஸ்டாப்.."! என்று அடித்து பிடித்து கிட்ட ஓடி வந்தான்.

"என்னது சின்னா வா யாரு மேன் நீங்க சின்னா புண்ணான்னு, நானும் ஒரு வாரம் மா பார்த்துட்டு தான் இருக்கேன் உங்க activity எதுவும் சரி இல்ல சொல்லிட்டேன்.."!.

"" அய்யோஓஓ சீஸ் சீஸ், பிளிஸ், பீலிஸ் என்னை தப்பா புரிச்சிட்டீங்க முதல் நாள் உங்களை பார்க்கும் போதே, நான் ஏன் உங்களை fallow பண்ணேன் சொல்லி இருக்கணும். Extremly sry for that..... ?

"சிஸ் என் பேரு ஷ்ரவன் கார்த்திகேயன் கோயம்பத்தூர் ஊரு, எங்க அப்பா ஒரு வைர வியாபாரி ,பேரு கார்த்திகேயன், அம்மா கோதை எனக்கு ஒரு தங்கை ஸ்ரவந்தி , உங்க வயசு தான் அவளுக்கு என, வேர்க்க விறுவிறுக்க தான் பயோடேட்டா ஒப்பிக்க .

"ஹலோ...."! மிஸ்டர் கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க, இப்போ உங்க வரலாறு எல்லாம் நாங்க கேட்டோமா... என்பவளை தடுத்து,

சீஸ் கொஞ்சம் நான் என்ன சொல்ல வரேன் கேளுங்க, அப்போ தான் நான் ஏன் உங்களை fallow பன்றேன் தெரியும், பிளீஸ் சிஸ் கொஞ்சம் consider பண்ணுங்க yar பிளீஸ்... என பரிதாபமாய் கேட்கவும்..

சற்று தயங்கினாலும் லயாவுக்கு அவன் பதட்டமாய் பேசுவது பார்க்கும் போது அவளுக்கு ஏதோ பாவமாய் இருந்தது,

"சரி சொல்லுங்க ஏன் இந்த வேலை உங்களுக்கு, எதுக்காக என்னை தினம் இப்பிடி ஒளிச்சு ஒளிச்சு பாக்கணும்... "!!? என்றதும் மடமடவென சொல்ல ஆரம்பித்தான்....

ஷ்ரவனுக்கு ஒரே தங்கை, ஷ்ரவந்தி பேரு அவள் என்றால் கொள்ளை பிரியம் அவனுக்கு,

ஒரு வருஷத்துக்கு முன்னே, அவங்க friend மேரேஜ் கோவா போறேன்னு பொய் சொல்லிட்டு அவங்க லவ் பண்ண ஆளையே மேரேஜ் பண்ணிட்டு கனடா போயிட்டாங்களாம்.

இது தெரிஞ்சு விசாரித்து அலுத்து போயி இருக்கும் போது , கடைசியில் ஆறு மாசத்துக்கு முன்னாடி உரு குலைந்து உடம்பில் இருக்கும் எல்லா உறுப்பும் எடுக்கப்பட்டு பிணமாக தான் இவங்களுக்கு கிடைச்சு இருகாங்க..

தங்கை மேல உயிரையே வைச்சு இருந்த ஷ்ரவனுக்கு அவங்க குடும்பத்துக்கு இது பெரிய இடி,

எப்பிடி இப்படி போயி ஒரு ஆயோக்கியனை நம்பி ஏமாந்து உயிரையே விட்டு இருக்க ஒன்னும் புரியல,

அவ்வளவு பாசமா அம்மா அப்பா முக்கியமா அண்ணன் ஷ்ரவன் மேல அளவுக்கு அதிகமா அன்பு இருக்கும் பொண்ணு, ஒரு ஆயோக்கியனை நம்பி ஏமாந்து எங்கோ தெரியாத ஊரில் மாட்டி நரகம் பாத்து இருக்க ,

இவர்கள் அவளை தேட ஒரு டிடெக்ட்டிவ்யிடம் சொல்லி வைக்க அவர் குடுத்த தகவலில் கிடைத்தது செய்தி இதுவே ...

யாரை நம்பி தன் பிரியமான குடும்பத்தையும் உதறி தள்ளி போனாலோ, அந்த அரக்கன் கொடூர பாடுபாவி, பல இளம் பெண்களை தான் காதல் வலையில் சிக்க வைத்து விற்கும் ஒரு பெண் புரோக்கர்,

இது அவளுக்கு தெரிய வரும் முன்னே வேறு கை மாற்றப்பட்டு தப்பிக்க முயற்சி செய்யாவும்,
போதை ஊசியில் வைத்து அவளை நாசம் ஆக்கி கடைசியில் போலீசில் அந்த கும்பல் ஆக படும் போது அந்த பெண் உயிரோடு இல்லை, அந்த ஆயோக்கியனிடம் அடித்து கிடைத்த தகவல் மூலம் இவர்களிடம் அந்த பெண் பிணமாக ஒப்படைக்கப்பட்டாள்.

இதை எல்லாம் சொல்லும் போதே தான் துக்கத்தை கட்டுப்படுத்த திரும்பி நின்று கொண்டான் ஷ்ரவன்..

இதை கேட்ட இரண்டும் பெண்களுக்கு பயங்கர அதிர்ச்சி, கண்களிலும் கண்ணீர் குளம் கட்டி, எப்பிடி அவனை சமாதானம் செய்வது என அறியாமல் திணறி நின்றது சில நிமிடம் தான் முதலில் லயா குரல் செருமி..

" ப்ரோ எனக்கு என்ன சொல்ல பேசன்னு தெரியல, உங்களுக்கு எப்பிடி ஆறுதல் சொல்லணும்ன்னு புரியல ,

அடுத்த நடக்க இருப்பது அதிர்ச்சியா ஆச்சர்யமா....
வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாத புதிர்..

அதுக்கு எக்ஸாம்பிள் உங்களுக்கும் சரி எனக்கும் சரி நம் கடந்து போன வருடங்கள் தான் பதில். அது போக்கில் போயி சமளிக்கணும் முடியாத போது வருவதை ஏற்று கொள்ள பழகிக்கணும்..

ஐயம் சாரி ப்ரோ.
நான் உங்களை விட வயசில் சின்னவள் அட்வைஸ் பன்றேன்னு தப்பா நினைக்காதீங்க , நமக்கு நடந்ததை நடக்க போவதையும் எதையும் மாற்ற முடியாது பிலிஸ் சில் ப்ரோ என்றதும்,

திரும்பி லாயவை பார்த்தவன் கண்கள் கோவை பழம் போல சிவந்து இருந்தது..

"சீஸ் நீங்க தான் என்னை மன்னிக்கணும் என் சோகத்தை சொல்லி உங்களையும் கலக்க அடிச்சுட்டேன்.. முதமுதலில் உங்களை இதே பார்க்கில் பார்த்ததும் நான் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், சொன்ன நம்ப மாட்டிக்க என் தங்கையை அச்சில் வார்த்தது போல இருக்கீங்க, அதே உயரம் ஜடை நிறம் என்னாலே நம்ப முடியல ஒருத்தரை போல ஏழு பேர் இருப்பங்கன்னு சொல்லுவாங்க, நான் உங்களை பார்த்த பின்னே தான் நம்பினேன்.
என்ன என் தங்கச்சி ரொம்ப ஒல்லி நீங்க கொஞ்சம் குண்டா இருக்கீங்க என்றதும்

லயா அவனை ஒரு முறை முறைத்தாள். அடேய்... இது தானே வேணாங்கிறது என வெளியே கேக்காதப்படி பல்லை கடித்து கொண்டே மெதுவாய் சொல்ல...

அவள் முறைப்பில் சற்று பீதியாகி
அய்யோ... sry sry சீஸ் தப்பா எடுத்துக்காதிங்க தெரியாம சொல்லிட்டேன் என்ன வித்தியாசம்ன்னு சொல்ல போயி அப்பிடி சொல்லிட்டேன் என பயந்து சொல்ல...

சிரித்து விட்டனர் இரு பெண்களும்..
ஷ்ரவனுக்கு நிம்மதி ஆனது.. யப்பா சிரிச்சுட்டாங்க யா இது போது ஈஷா ஓம் நாம சிவாய என எங்கோ பார்த்து கும்பிடு போட சைந்தவி அவன் மேல வைத்த விழியை இப்பிடி அப்படி கூட அசைக்கவில்லை, லயா அவள் தோள் இடித்து இரும்பி காட்டவும்,
தன்னை சரி செய்ய இயலாமல் தலை குனிந்து கொண்டாள் சவீ ...

ஷ்ரவன் லாயவை பார்த்து..

"சிஸ் நான் ஒண்ணு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டிங்க தானே..,!"

"சொல்லுங்க ப்ரோ இனி உங்க மேல எனக்கு எப்பவும் கோவம் வராது என்ன சொல்லணும் சொல்லுங்க என்றதும்..",

"நான்... நான் இனிமே உங்களை" சின்னா" ன்னு கூப்பிடவா என் தங்கையை நான் அப்பிடி தான் கூப்பிடுவேன் என்று சொல்லும் போதே அவன் கண் கலங்கி துக்கம் தொண்டை அடைத்து கொள்ள .."?

லயாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவளையும் அறியாமல் கண்ணில் நீர் வர தன்னை சமாளிக்க தலை குனிந்து தன்னை சமாளித்து...

"அதுக்கு என்ன ப்ரோ தாராளமா கூப்பிடுங்க, எனக்கும் கூட பிறந்த ஒரே தங்கை மட்டும் தான்.

எனக்கும் ஒரு அண்ணன் இல்லை என்ற ஒரு குறை எப்பவும் இருக்கும் ப்ரோ, இன்னைக்கு அது உங்க மூலமா நிவர்த்தி ஆகிடுச்சு நினைக்குறேன், இறைவனுக்கு நன்றி ?? என்றது அங்கே நின்ற மூவருக்கும் ஆனந்த கண்ணீர் சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை...

அன்றில் இருந்து எங்க மூவர் நட்பும் பாசமும் பாக்குறவங்க பொறாமை கொள்ளும் அளவுக்கு தான் இருந்தது.

இதுக்கு இடையில் ஷ்ரவன் சைதவியை விருப்ப ஆரம்பிச்சான். அவளுக்கு விருப்பம் தான் ஆன அவ அதை மனம் திறந்து சொல்லவும் மாட்ட, அவனையும் நெருங்க விடவும் மாட்ட,

அதுக்காக அவளை வழிக்கு கொண்டு வர, அவளை ஒதுக்கி, அவ பாக்க பாக்க ஷ்ரவன் என் கிட்ட மட்டும் பாசமா இருக்கவும், அது அண்ணன் தங்கை பாசம் தான் நல்லாவே தெரியும்,இந்த ஜூலியட்க்கு..

இருந்தும் அவளுக்கு பொறாமை வர ஆரம்பிச்சுது, அவளை வெறுப்பு ஏத்தி விட தான் நானும் ஷ்ரவனும் அவளை அவாய்ட் பண்ணி ஊரு சுத்த ஆரம்பிச்சோம்.

அதுவும் அவளுக்கு பொறுக்கமா எங்க பின்னாடியே தான் வருவா, அது எங்களுக்கும் தெரியும்ன்னு அவளுக்கு தெரியாது.

இதை பார்த்து அவ பொறாமைக்கு ரெக்கை முளைச்சுதோ இல்லியோ உங்களுக்கும் பொறுமைக்கும் வேரு விட்டு மரம் ஆகி இப்போ இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு..

இது தான் மாமா நடந்தது... என சொல்லி முடிக்கவும்.
பவன் சட்டென லயா மடியில் முகம் புதைத்து அவள் இடுப்பை சுற்றி வளைத்து கட்டி கொண்டு ஸ்வீட்டு...

என்னை நினைச்சு எனக்கே அருவெறுப்ப இருக்கு டி, செத்து போயிடலாம் போல இருக்கு டா... என்றவனுக்கு அதற்க்கு மேல பேச்சு வரவில்லை..
லயாவுக்கு தான் மடியில் ஈரம் உணர்த்து மனசு கனத்து போனது தன்னையும் அறியாமல் பவன் தலை முடியை கோதி கொண்டே...

ஆரம்பத்தில் நான் உணர்த்த கவரப்பட்ட என்னோட பவன் மாமா இப்பிடி தான்னு எனக்கு ஒரு பிம்பம் கற்பனை வளர்த்துக்கிட்டேன்,

ஆன அப்போ உங்க மனசில் என்னை பத்தி இருந்த ஒரு அபிப்ராயம், சகஜமா சில ஆண் பெண் மனதில் வரும் சந்தேக பார்வை தான் அது தப்புன்னு சொல்ல முடியாது.

அளவுக்கு அதிகமா நாம யார் மேல அன்பு காதல் வச படுவோமோ அவங்களை கண்ணுக்கு மேல பொக்கிஷமா பொத்தி வைச்சு பார்ப்போம்.

வேற யார்க்கும் விட்டு குடுக்க முடியாது. நம்பை தவிர, வேற ஒருத்தர் இடம் கொஞ்சம் சிரிச்சி பேசினக்கூட ஜெலோஸ் வருவது சகஜம் தான். இல்லைன்னு சொல்ல மாட்டேன் மாமா.

ஆனா என்னை பொறுத்த வரை, நீங்க எப்பிடியோ, நானும் எனக்குன்னு ஒரு வளையம் போட்டு வைச்சு இருக்கேன்
மாமா என்னதான் நீங்க கண்முடி தனமான
காதலால் செய்தபிழை, அந்த வலியால் நான் பண்ண முட்டாள் தனம்ன்னு சொன்னாலும்

"நீங்க என் நடத்தையில் நான் உங்க மேல வைத்த காதலை சந்தேகம், கொச்சை படுத்தியதா தான் நினைக்கிறேன்.

எனக்கு உங்க மேல இருந்த நம்பிக்கையில் அடி பட்ட மனசு வலிக்குது மாமா .." என்றால் நெஞ்சில் கை வைத்து வேதனையோடு...
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
"அதுக்காக உங்களை என்னால வெறுக்கவும் மறக்கவும் முடியாது, வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது.

கோவம் இருக்கு தான் எனக்கு ஏற்பட்ட வலி அது போக கொஞ்சம் காலம் பிடிக்கும்... அதை மறக்கவும் மன்னிக்கவும்
எனக்கு கொஞ்சம் ஸ்போஸ் குடுங்க..

உங்களுக்கு தெரியாத விஷயம் இன்னும் ஒண்ணு சொல்லறேன்....

இப்போ நீங்க வராமல் போன கூட எப்பிடியும் அத்தம்மா இதை நிறுத்தி இருப்பாங்க.... என்றதும்,

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் முகம் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது லயாவுக்கு அவனை நெஞ்சோடு அள்ளி அணைக்க தோணியது.. தன்னை சமாளித்து..
என்ன ஸ்வீட்டூ .... சொல்லறே அம்மாவா என் அம்மாவா... "!!?? ஒன்றும் விளங்கவில்லை பவனுக்கு. நிமிர்ந்து அமர்ந்து முகத்தை துடைத்து கொண்டே லாயவை கவனிக்க,

"ஹீம்.."! என் அத்தம்மா தான் என்னை புரிந்து கொண்ட உங்க அம்மாவே தான்...

"ஆமா மாமா.. அம்மாவுக்கு அவ்வளவு நம்பிக்கை, எப்பிடியும் நீங்க வருவிங்கன்னு இந்த function நிறுத்துவீங்கன்னு ரொம்ப உறுதியா என்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க..

நேத்து கூட நான் ரொம்ப அழுதுட்டு இருக்கும் போது கூட, எனக்கு நம்பிக்கை வரலைன்னு, உங்களை பத்தியே தான் சொல்லிட்டு இருந்தாங்க,

இந்த பத்திரிக்கை பார்த்ததுல இருந்து ஏதோ பறிகொடுத்தது போல சதா ஏதோ யோசனையில் இருந்திங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க,அவங்களுக்கு நேத்து வரை அத்தனை போன் கால் பண்ணி இருக்கிங்க, உங்களுக்கு இன்னும் டென்ஷன் ஏத்தி விட்ட நீங்க இங்க வருவீங்கன்னு தான் போனை கூட சுவிட்ச் ஆப் பண்ணிட்டாங்க சொன்னாங்க..

அப்பாகிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க இந்த நிச்சியம் வேண்டாம் கொஞ்சம் பொறுத்து பாப்போம்ன்னு.

ஆன எங்க அப்பாவும் உங்க மேல உள்ள கோவத்திலே பிடிவாதமா இது எல்லாம் வீம்புக்கு செய்துட்டு இருக்காங்க.. கடைசியில் அத்தம்மா சொன்னது தான் இப்போ நடந்து கிட்டு இருக்கு..

என் கிட்டயும் சத்தியம் வாங்கிட்டாங்க என் மகன் திருந்தி வந்தா அவனை நீ அப்பிடியே ஏத்துக்கணும்ன்னு சொன்னாங்க..

பவன் முகத்தில் அறைந்து கொண்டான், அவன் கை பிடித்து தடுத்த லயாவின் கை பிடித்து கொண்டு,

லைலு எல்லாம் என்னால தானே டா... என் அவசர புத்தியால் எனக்கு நானே துரோகம் பண்ணிக்க இருத்தேன்...

ஸ்வீட்டு, நீ மட்டும் சரின்னு சொல்லு என் உயிர கொடுத்தாவது மாமாவை நான் சமாதானம் படுத்துறேன் நீ மட்டும் சரின்னு சொல்லுடா..

(அடேய் நீ உயிர கொடுத்துட்டா இங்க யாருக்கும் டா கல்யாணம் பண்ண, போங்க டா டேய்?.. அங்க எல்லாருக்கும் சமாதானம் சம்மதம் தான் யா,

நீங்க மொதல்ல உங்க நான்ஸ்டாப் பக் பக்(talking ma ) நிறுத்திட்டு வெளியே உங்க தலையை காட்டுங்க சாமி, சீக்கிரம் இந்த நிச்சயம் முடிச்சு கல்யாணத்துக்கு யூடி கொண்டு போகணும், ??????? இன்னுமா டி ஸ்டார் ஹோட்டல் காலி பண்ணாம இருக்கேன்னு கழுவி உத்தாத குறை டா யப்பா,

இதுவே வேற ரைட்டரா இருந்த இந்நேரம் குழந்தையே பொறந்து பேரு வைச்சு இருப்பாங்க கிளம்புங்க டா காத்து வரட்டும் ?‍♀???)

சற்று அமைதியாக இருந்த லயா,
நான் இந்த நிச்சயத்துக்கு சம்மதிக்கிறேன்.. ஆன ஒரு கண்டிஷன்...

(பார்ரா அம்மினி கெத்தை ????)

மாமா, என் மனசில் உள்ள இந்த காயம் மறையும் வரை என்னை நீங்க நெருங்க கூடாது ..

என் சம்மதம் இல்லாம என்னை தொட கூடாது ஒரு வேலை உங்க மேல எனக்கு இருக்கும் அவநம்பிக்கை மாறினால், உங்களால மாற்ற முடிச்ச நம்ப வாழ்க்கையை தொடங்குவோம்.

(கிளிஞ்சுது போ தாயி?‍?)

அது வரைக்கும் நீங்க எனக்கு எந்த தொல்லையும் பண்ண கூடாது. இதுக்கு சம்மதம் என்றால் வாங்க இப்போவே மாலை மாத்திக்கலாம், நிச்சயம் பண்ணிக்குவோம் என்று முடித்து பவனை பார்க்க.

வாய் அடைத்து கொண்டது பவனுக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தது இன்னோரு பக்கம் அய்யோ.... இப்பிடி ஒரு கண்டிஷன் போட்டாளே , எப்பிடி இவளை சமாளித்து வழிக்கு கொண்டு வர....

அது வரை நாமலும் நம்ம கையும், காலும், வாய்யும் சும்மான்னு இருக்காதே இறைவா..
அந்த மன்மத ரஸா காதல் அம்பு விட்டு எனக்கு ஆப்பு வைக்கமா இருந்த சரி,

மீறி போன....
முதலுக்கே மோசம் போகுமே என நினைக்கும் போதே வயித்தையும் கலக்கியது.

மனசாட்சியோ....
ஹான்.... எவ்வளவோ பார்த்தாச்சு இதை சமாளிக்க மாட்டோமா விடுற, விடுற.. பவன் ஜமாய்ப்போம் என அவன் மனசாட்சி உசுப்பு ஏத்தி விட...

சரி ஸ்வீட்டி எனக்கு சம்மதம் செல்லம் என அவளை காட்டி பிடிக்க வர...

ஹீம்... அங்கேயே நில்லுங்க இப்போ சொன்னது என்ன நீங்க பண்றது என்ன, சொன்னது எல்லாம் எல்லாம் மறந்து போச்சா...

அடி குட்டி பிசாசே கட்டி பிடிக்க கூட தாடாவா...
இது எல்லாம் ரொம்ப அநியாயம் டி ஸ்வீட்டி.. (மைண்ட் வாய்ஸ் )

சரியாக அதே நேரம் கதவும் தட்ட படவும்...

வெளியே பாபி குரல் கொடுத்தான்,
" டேய் மச்சான் என்னடா இது அநியாயம், அடி போயி ஆவணி மாசமே வந்துடுச்சு நீங்க என்னடா உள்ளேயே குடும்பம் நடத்துறிங்க வெளியே வாடா மாப்பிளே..

பவன்.."டேய் வெளியே வந்தேன் பாருடி, குருமா தான் நீ...".

"வரேன் இருடா, பேசிகிட்டு தானே இருக்கோம்.. "

நல்ல பேசுங்க இப்போ கதவை தொறந்து இந்த டிரஸ் வாங்கி மாத்திக்கிட்டே பேசு நைனா ...

"வாட் ட்ரெஸ் ஆஆ.."!! இருடா வரேன் என்று எழுந்தவன், லயாவுக்கும் கை குடுக்க..

அவள் அவனை முறைத்து தானாகவே எழுந்து கொண்டாள்.

பவனுக்கு சற்று வருத்தம் இருந்தது, சரி விட்டு பிடிப்போம் என நீட்டிய கையை மடக்கி கொண்டே கதவை திறக்க போக திரும்பியவன்,

லயா கலைந்து இருக்கும் கோலம் கண்டு அவள் அருகே வரவும் சற்று பின்னே செல்ல நினைத்தவள் வலது கையை பின்னே மடக்கி அணைத்து பிடித்து கொண்டே,

அவன் வலது கையால் அவள் கலைந்த கேசத்தை கோதி சரி செய்து, நகை எல்லாம் நேராக்கி இன்னும் இறுக்கி அணைத்து அவள் காது அருகே குனிந்து..

"லைலு, my ஸ்வீட்டூ வாழ்க்கை முதல் படியை மிதிக்க போறோம் டி,

அதுக்கு அச்சாரம் வேணும் இல்ல, சோ pls excuse me டார்லிங் என அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் ஒன்று பதித்து சட்டென விலகி கதவை திறந்து பாபியிடம்பேச..

சற்று அதிர்ந்தலும் சின்ன சிரிப்பு லயாவிடமும் எட்டி பார்த்தது...

"வாடா மாமா உங்களை காஞ்சி குடிக்க வைக்கல நான் உன் ஸ்வீட்டூ இல்ல டா அவ்வளவு சொல்லியும் கட்டி புடிக்குற இருடா பவுனு மாமா .... "?

பாபி பவனுக்கு என வரவழைக்கப்பட்ட
எங்கேஜ்மெண்ட் ட்ரெஸ் அவனிடம் குடுக்க அவனை நிமிர்ந்து பார்த்த பவன் சிரிப்போடு,

" என்னடா மச்சி உனக்கும் டிரஸ் எல்லாம் பலமா இருக்கு என கிண்டல் செய்ய..
பாபியும் புது மாப்பிள்ளைக்குரிய தோரணையில் டிரஸ் செய்து இருக்க செம்ம ஸ்மார்ட் லூக்கிங்லில் இருந்தான்.

அருகே ஸ்வராவும் வேறு பட்டு புடவையில் இன்னும் கல்யாணம் களை கூடி அழகே உருவாய் லயாவிடம் சென்று பேசி கொண்டே அவளுக்கு கொண்டு வந்த ஜூஸ்சை கொடுத்தால்.

பாபி... பவன் வயிற்றில் ஒரு குத்து வைத்து, ஏன் டா சிரிக்க மாட்டே அவ்வளவு நேரம் உள்ளேயே ரொமான்ஸ் ஓட்டிட்டு இருந்த வெளியே என்ன நடக்குதுன்னு உனக்கு எப்பிடி தெரியும் மாம்ஸ்.. என்று

வெளியே நடத்த பேச்சு வார்த்தை இப்போது நடக்க இருக்கும் இரண்டு பேருக்கும் ஆனா நிச்சயம் நிரஞ்சனுக்கும் நடக்க இருக்கும் கல்யாணம் என சொல்லி முடித்தான்.

"பவன் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வாடா எல்லாரும் வெயிட்டிங் என்று ஸ்வார்வை இழுத்து கொண்டு மேடை நோக்கி சென்றான் பாபி .

பவனும் ரெடி ஆகி லயாவின் கை கோர்த்தபடி அந்த பிரம்மாண்ட ஹாலுக்கு நுழைய அங்கே இருந்த எல்லா கண்களும் அவர்கள் மீதே,

அவர்கள் ஜோடி பொருத்தம் பார்த்து சுற்றி இருந்தோர் கண்கள் படாமல் இருந்த சரி..

மேடை நோக்கி அந்த மூன்று ஜோடியும் சேர்த்து செல்ல பார்க்க கண் கோடி வேண்டும் அந்த அழகை வர்ணிக்க...


மன்னிக்கணும் வேற தமிழ் பாட்டு பொருத்தமா தேடி கிடைக்காம தெலுங்கு பாட்டு போட்டேன் புரியலன்னா திட்டக்கூடாது ?
தொடரும்.....
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top