• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -28?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹனிமூன் என்ற வார்த்தையில் ...

அதுவரை போனில் நோண்டி கொண்டு இருந்த இருவரும்,

கடைசியாக சொன்ன வார்த்தை கேட்டதும்.

சுவிட்ச் ஆனது பாபி, பவன் இருவர் முகமும் பிரகாசமாக,

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெக்கம் படுவதும் குனிந்து சிரிப்பதுமாக இருந்தனர்.

அவர்கள் வழிச்சலை பார்த்து சிவாஜியும், பரணியும் வாய்விட்டு சிரித்து விடவே

புவனா புனிதாவுக்கு ஒரே சங்கோஜமாய் இருந்தது.

புனிதா எழுந்து,
" இதோ வரேன் இருங்க" அவர் உள்ளே நழுவவும் ,

அவர் பின்னே புவனாவும்,
"நானும் வரேன் இருமா" என விறுவிறு சென்று விட்டார்.

இரு கட்டழகனுக்கும் சிரிப்பு கட் ஆகி ,
அவர்கள் சிரிப்பு ஒரு மாதிரியாகி விட எழுத்து லயா, ஸ்வரா சென்ற ரூமை நோக்கி ஓட...

சிவாஜி மேலும் சிரித்து கொண்டே பரணியிடம் திரும்பியவர்,

பரணி,
"புள்ளைங்க ரொம்ப...? வேகமாக தான் இருக்காங்க, ஓடுறதை பாருங்க யா , ஹாஹா.. படுவாஸ்?"

"சரி நம்ப டாப்பிக்கு வருவோம்
புனிதாம்மா சொன்னது போல புவனம்மா இப்போ போயி திரும்ப வருவதை விட...

ரெண்டு மூணு நாள் இங்க இருந்தாங்கன்னா...புனிதா தங்கச்சிக்கு எல்லாவிதத்திலும் சௌகர்யமா இருக்கும் தானே பரணி "

"நீங்க என்ன சொல்றிங்க, " - சிவாஜி

"எனக்கும் அது தான் சரின்னு படுது சம்மந்தி, நான் புவனாட்ட பேசுறேன்.

(பெண்ணை, பிள்ளை பெற்றவர்கள் என்ற எந்த பாகுபாடும், பந்தாவும் இல்லாமல் ஒன்று இரண்டு வயது கூட்டி குறைவாக இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு தனி....
தான் சம்மந்திகள் என்ற எந்த கர்வமும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் கவனித்து மதித்து பழகும் நட்பும், ஒற்றுமையும் கிடைப்பதும் அரிது ??)

சிவாஜி, "ம்... ஓகே... "?
"அப்புறம், நானும் ஒண்ணு செய்றேன் பா,
பவனை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் , பாபியோடு கல்யாண ஷாப்பிங் சேர்ந்து பாக்கவும் சௌகர்யம், எங்க ஆபிஸ் வேலை பார்க்கவும் சுலபமா இருக்கும்.

நாளைக்கு இவங்க நாலு பேரையும் கிளப்பி அவங்க wedding அண்ட் reception கார்டு செலக்ட் பண்ணி printing குடுத்துட்டு வர சொல்வோம் ,

நாமலும் கல்யாணம் கோவிலில் பண்ண போறதால, நம்ப அய்யரை வரச்சொல்லி என்னென்ன ஏற்பாடு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போடா சொல்லுவோம் என்ன சொல்றிங்க பரணி..

எனக்கும் அது தான் சரின்னு படுது, அதுவும் இல்லமா , இங்க வீட்டிலே புனிதவும் கல்யாணம் கோவில்ல சொன்னாங்க, எந்த கோவில் , எங்கன்னுன்னு குறிப்பிடவே இல்லையே,

சொல்லி கொண்டு இருக்கும் போதே,
போன வேகத்திலே, இவர்களுக்காக இரண்டாம் முறையாக, தங்களுக்கும் சேர்த்து காபி ட்ரேயோடு திரும்பி வந்தனர் இரு பெண்களும்.

"அமுலு... " - பரணி
கோவில்ன்னு சொன்னிங்க, எங்க எந்த கோவில்ன்னு பிளான் இருக்க மா.."!

புனிதா,
"ஆமங்க,...இருக்கு, நம்ப பவன் அப்பா கல்யாண் அண்ணாவோட முன்னோர்கள் கட்டின கோவில் இருக்கேங்க .

எத்தனையோ தலைமுறை தலைமுறையாக நித்திய பூஜைகள், விழாக்கள் பண்ணும்....மிகவும் சக்தி நிறைந்த அவங்க குல தெய்வ கோவிலை பத்தி தான் சொல்றேன்.

அவங்க விவசாய நிலத்திலே இருந்து சுயம்புவாக வந்த அம்மன் சிலை, அவங்க தோப்புக்கு நடுவுலேயே கிடைச்சதும் அந்த இடத்திலேயே கோவிலும் காட்டி,

அந்த சுத்து வட்டாரத்தில் இருக்கும் எல்லாருக்குமே அந்த அம்மன் தான் குலசாமியாக இருக்குறதா, அண்ணி சொன்னாங்க தானேங்க....

"ஆமா மா எனக்கும் தெரியும்".. பரணி.

புனிதா....
"சுயம்புவாக வந்த அந்த அம்மன் சந்நிதியில், காலம் காலமாக எந்த நல்ல காரியமும் அந்த அத்தா அனுமதியோடு தான், கல்யாண் அண்ணா அவங்க தாத்தா , அப்பா செய்வாங்கன்னும் ..!

"அண்ணி....?
உங்க கல்யாணம் கூட அங்க தான் பண்ணிகிட்டிங்கன்னு சொல்லி இருக்கிங்க இல்ல அண்ணி ,

அதற்க்கு, ஆம் என பழைய நினைவுகளோடு புவனாவும் தலையாட்ட,

"ஆமா மூணு, நாலு வருஷத்துக்கு முன்னே ஸ்வராக்கு இருந்த பிரச்சனைக்கு என் தங்கை சொல்லி அங்க தானே கன்னி பூஜை ஒண்ணு செஞ்சாங்க நியாபகம் இருக்கு மா ... "! -பரணி,

புனிதா,
" ம்...அதே தான்ங்க, பெரியவங்க மறைவுக்கு பிறகு,

கல்யாண் அண்ணாவும் அவங்க தொழில் மட்டுமே கவனமாக இருத்தலே,

கோவில் நடக்கும் எந்த பூஜைக்கும் , எதுக்கும் போனது இல்லையாம் ,

ஒரே குடும்ப வாரிசாக இருந்துட்டு எந்த வழிப்படும்,
அவங்க பாட்டன், அப்பா காலத்துக்கு பிறகு இவர் கலந்துக்காம, கவனிக்காம விட்டதால் தான்,

( புவனா மட்டும் தான் எல்லாத்தையும் முன் நின்று செய்வர் )

குலதெய்வம் கோவத்துக்கு ஆளாகி, அதனாலே தான் அவருக்கு இவ்வளவு சிக்கிரம் அந்த முடிவு வந்து இருக்குமோன்னு புவனா அண்ணிக்கும் ஒரு வருத்தம் இருக்குங்க , சொல்லிட்டே இருப்பாங்க,

எனக்கும் அது மனசிலே ஒரு உறுத்தலாகவே இருந்துச்சுங்க ,

எப்போ நாம நம்ப மகளுக்கு பவன் தம்பிக்கு பேச ஆரம்பிச்சமோ,

அப்போவே என் மனசில் தோணின முடிவு , இந்த கோவிலில் தான் அவங்க கல்யாணம் பண்ணனும், நடத்தணும்ன்னு முடிவே பண்ணிட்டேன் .

"பவன் தம்பியும் அந்த வீட்டுக்கும் அவங்க குலத்துக்கும் இருக்கும் ஒரே வாரிசு. அது மேலும் தலைக்கணும்,"

"நம்ப புள்ளைங்க வாழ்க்கை ஆரம்பிக்கும் போது.....அவங்க முன்னோரர்கள் குலதெய்வம் அருளும் கண்டிப்பா நம்ப குழந்தைங்களுக்கு வேணுன்னுங்க."

"அதனாலே நம்ப பிள்ளைங்க கல்யாணத்தை அந்த கோவிலில் அந்த தெய்வத்துக்கு முன்னாடி செய்வோம்ங்க என்னங்க சொல்றிங்க..?

புனிதவும், புவனாவும், பரணி அடுத்து என்ன சொல்ல போக்கிறாரோ என அவர் முகத்தையே பார்த்து நிற்கவும் ..

பரணி ,
"நான் சொல்றதுக்கு என்னம்மா இருக்கு, எனக்கும் உங்க முடிவு என்னவோ அது தான் என் முடிவும்",

"ஆனா என்ன..! இது நாம மட்டும் எடுக்கும் முடிவு இல்லியே டா அமுலு..?

"நம்ப சம்மந்தி இருக்காரு..... இதில் அவர் சம்மதம் ரொம்ப முக்கியம் இல்லியாடா...

அவர் என்ன நினைக்கிறார் ,
அவரோட முடிவு என்னனு தெரியணும் மா, அவருக்கும் சில ஆசைகள் இருக்கும் இல்லியா,

"அவருக்கு இருப்பதும் ஒரே மகன், என்னதான் உயிர் நண்பர்கள், உறவினர்களாய் பழகினாலும்...! அவர்கள் குலவழக்கமும், அவங்களுக்குன்னு ஒரு செய்யும் முறைகள் வேறு இருக்கும் இல்லியா..?

"சம்மந்தி... நீங்க சொல்லுங்க உங்க பழக்க வழக்கங்கள் முறைகள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க,"

ஒன்னும் பிரச்சனை இல்லை, கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சு, முறைப்படி உங்களுக்கு திருப்தி தரும்படி பாபி, ஸ்வராவுக்கு செய்துட்டா போச்சு என்ன சம்பந்தி...?

கல்யாணம் மண்டபம் எப்பிடியும் தனியாக கோவிலுக்கு வெளியே தானே அமைக்க போறோம். உங்க சம்பிரதாயம் என்னவோ அதையே செய்துடுவோம் சொல்லுங்க சாமந்தி..."

"பரணி..." அவர் கை பிடித்து கொண்ட சிவாஜியின் குரல் இறங்கி ஒலித்தது.

" எனக்கு உங்களை பற்றி தெரியாத...,
நீங்க பிள்ளைங்களுக்காக எதையும் செய்விங்கன்னு"

"உங்களுக்கு தெரியாதது ஒண்ணு இல்லை பல எதிர்ப்புக்கு பின்னால்,
நானே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டேன்.

எங்க குடும்பத்திலே யாரும் செய்ய துணியாத காரியத்தை முதல் முதலில் புள்ளையார் சுழி போட்டதே நான் தான் பரணி.

இப்போ பாருங்க எனக்கு அடுத்த பிறந்த தலைமுறைகள் எல்லாமே கலப்பு திருமணம், வேறுவேறு நாடு,வேறு மதம், எம் மாதம் சம்மதம்ன்னு சொல்லுவது போல யதும் ஊரே யாவரும் கேளிர் என, பிரிந்து நாளா பக்கமும் போயி இருக்கு உறவுகள்.

"எனக்கும் நீங்க எப்பிடி செய்தலும் சம்மதம் தான் பா.... உங்க முடிவே என் சாசனம்... ஹாஹா" ???

"சோ டோண்ட், அண்ட் நோ ஒர்ரிஸ் சாமந்தி,"

"என் மகன் இஷ்டப்பட்டு தேர்வு செய்த வாழ்க்கை...."

கல்யாணம் என்பது ஒரு அடையாளம் சம்பிரதாயம் மட்டும் தான்,

ஆன ரெண்டு மனசும் ஒன்னான பிறகு அது தான் உண்மையான வேலி, பந்தம்ன்னு நான் நினைக்கிறேன் பரணி.

மத்தது எல்லாம் நம்ப திருப்திக்கு தான். நீங்க நடத்துங்க பரணி.
அது சிறப்பாக நிறைவாக தான் இருக்கும்.

என் மகன் ஈஷு, பாபிக்கு குடும்பம், வீடு, நிறைய குழந்தை குட்டின்னு நிறைஞ்சு கலகலன்னு, சந்தோஷமா இருந்த அதுவே எனக்கு போதும் ,

நீங்க, தங்கச்சி எப்பிடி செய்யணும் சொல்றங்களோ அப்பிடியே செய்வோம் என்ன புனிதம்மா இந்த அண்ணா சொன்னது சரியா டா -சிவாஜி

சிவாஅண்ணா , ரொம்ப சந்தோஷம்ன்னா.. எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்லையேன்னு ரொம்ப வருத்தம் இருக்குன்னா, இனி அது இல்ல.

எனக்கு இனி நீங்க இருக்கிங்க, அது போதும்,கண் கரித்து கொண்டு வரவே குனிந்து தனக்கு வைத்த காபியை கையில் எடுக்க,

புவனா அவரை சேர்த்து அணைத்து கொண்டார்.
"புனி... எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செயதேன்னு தெரியல மா,

எனக்கு கிடைத்த பொக்கிஷம் மா நீ, எனக்காக என்னவெல்லாம் செய்றேடா நீ.

அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்த நான் உன் வயிற்றில் மகளாய் பிறந்து உன்னை கண்ணுக்குளேயே வைச்சு பார்த்துக்கணும் டா" என்று புனிதாவை கட்டி கொண்டு கலங்க,


புனிதா,
என்ன அண்ணி.... பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்க ,

உங்களை நான் என் அம்மா ஸ்தானத்தில் வைச்சு தானே பாக்கிறேன்,

என்னை போயி பெரிய மனுஷி ஆக்குறிங்க போங்க அண்ணி,

சரி வாங்க நாம போயி நைட்டுக்கு என்ன டின்னெர் செய்யலாம்ன்னு பார்க்கலாம். பேச்சை மாற்றி அவரை அழைத்து செல்ல,

சிவாஜி,
பரணி நமக்கு இனி இங்க என்ன வேலை இருக்கு,

வாங்க போயி receptionனுக்கு எந்த ஹோட்டல், இல்ல சத்திரம் கிடைக்குன்னு பார்த்துட்டு வரலாம், இருவரும் எழுந்து வெளியே சென்று விட்டனர்....

************************

நல்ல உறவுகளோடு பிறப்பது புண்ணியம்..

அதை விட, நல்ல உறவுகள் அமைவது வரம்...
கிடப்பதை தக்க வைத்து கொள்ளவது நிலைத்து இருப்பதும் பாக்கியம் ..

*************************
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
லயா, ஸ்வரா இருந்த அறைக்கு சென்ற பவன் , பாபி...

********
மெதுவாக எட்டி பார்த்த பாபி...

கட்டிலில் ஸ்வரா தலை கோதி விட அவள் மடியில் தலை சாய்த்து நகத்தை கடித்த படி படுத்து இருந்தால் லயா.

"ஹனி" - மெதுவாய் குரல், விசில் சவுண்ட் குடுத்த பாபி,

திரும்பி பார்த்த....ஸ்வரா,
வா , வா என வேகமாய் கை ஆட்டி அழைக்கவே,

ஆண்கள் இருவரும் கட்டிலில் அருகே வந்து நிற்கவும், நிமிர்ந்து பார்த்த லயா வேகமாக எழுத்து கொள்ள,

" இல்ல வேண்டாம் பி கம்போர்ட் லயா , நாங்க நிக்கிறோம்..." -பாபி

" லயா "-பவன்
லயா அருகே நெருங்கி வரவும்.

சற்று பின்னே செல்ல நினைத்த லயா கட்டில் இடிக்கவே, சாற்று தடுமாறியவளை தோள் இரண்டும் பற்றி நிற்க வைத்த பவன் அவளை விடாது நிற்கவே, மெல்ல நிமிர்ந்து பார்த்த லயாவுக்கு பவனில் அந்த பெரிய பிரவுன் விழிகள் அலைபாய்ந்து ஏதோ சொல்ல நினைத்திட ,

அவளால் தான் அந்த கூர்மையை எதிர் கொள்ள முடியாமல் தலை தாழ்த்தி அவள் விழிகள் கீழே நோக்கவும்.

சட்டென்று அவளை விட்டு சற்று தள்ளி போயி நின்றான் பவன் ....

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த மற்ற இரு ஜோடி கண்களுக்கு பொறுக்க முடியவில்லை.

ஸ்வரா இடுப்பில் ஒரு கையும் தலையில் ஒரு கை வைத்து உதடு பிதுக்கி பாபியை பார்த்த பார்வையில்

" என்னால முடியல சாமி "என சொல்வது போல இருந்தது,

பாபியின் மனநிலையும் அதுவே....

இவ்வளவு நேரம் கிளி பிள்ளைக்கு சொல்லியது போல பொறுமையாக எடுத்து சொல்லியும்....
தான் தாமங்கை இன்னும் தான் நிலை மாறாமல் இருப்பது அவளுக்கு கடுப்பாக தான் இருந்தது.

குறிப்பாக பாபிக்கு இருப்பு கொள்ள வில்லை.

பொறுமையும் பறந்தது , தான் நண்பன் பவன் படும் அவஸ்தை பாபிக்கு சொல்லவே வேண்டாம், ஒரு வேகமாய் லயாவிடம் திருப்பிய பாபி,

"லயா .... சொல்றேன்ன்னு தவற எடுத்துக்காதே,

அஸ் எ பிரண்ட்டா சொல்றேன்.... பிலிஸ் நீ இப்பிடி இருக்குறது எனக்கே... ! ஒரு மாதிரியா இருக்கு ,

எவ்வளவு ஆக்டிவான பொண்ணு நீ, வாட் இஸ் ஈட்டிங் யூ யர்...? ஏன் இப்போ இவ்வளவு அமைதியாகிட்டே..
உன்னை புரிச்சுக்கவே முடியல யா.


பாவம் யா மச்சான்..? அவன் தப்பு பண்ணி இருக்கான், இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா அவன் பண்ணியது மன்னிக்கவும் முடியாத தவறாக எனக்கு தெரியல லயா.

ஏதோ உன் மேலே இருக்கும் அஃபெக்ஷன் தான் அவன் அப்பிடி நடந்துக்க காரணம்.

இன்னோன்னும் புரிஞ்சுக்கோ இப்போ யாரும் அவ்வளவு ஜெனுனா லவ் பண்றது இல்லை, நடத்துகிறது இல்ல..
அந்த விஷயத்தில் நீ லக்கின்னு தான் சொல்லுவேன்.

ஆண் பெண் ரெண்டு பேரோடும் எந்த பாகுபாடு இல்லாம சகஜமா பழகும் இந்த காலத்தில்....

பவனுக்கு உன்னை தவிர எந்த பெண்ணிடம் காதல் வந்தது இல்லை, பழகியதும் இல்லை பேச்சோடு சரி.
கட் பண்ணிட்டு போயிட்டே இருப்பான். அது உனக்கும் தெரிந்த விஷயம் தானே...

அவன் நினைச்சு இருந்த உன்னிடம் எதையும் சொல்லாம மறைச்சு ஒரு பொய்யா சொல்லிட்டு போயி இருந்த உனக்கு தெரியவும் வாய்ப்பில்லை தானே......

"அவன் அப்பிடி செய்யாம உன்கிட்ட உண்மையா இருக்கணும் நினச்சு சொன்னது தான் தப்பா....!

இப்போ அவனோட உலகம் நீ மட்டும் தான் லயா.
இப்போ உன்னோட இந்த அமைதி, பாராமுகம் அவனை கொள்ளாம கொன்னுட்டு இருக்கு உனக்கு ஏன் அது புரியல லயா....?

"இதுவே நானா இருந்த கூட எதுக்கு அதை சொல்லி பிரச்சனைன்னு... சொல்லாம இதை solve செய்ய, சைலென்ட்டா கிராஸ் பண்ணி போயிட்டே இருப்பேன் ஆமா.. "?

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களும்
பாபியை பார்த்த பார்வையில் அனல் விசவே... ???

ஸ்வரவிடம் சின்ன கண்சிமிட்டால் குடுத்து அவள் கையோடு கை கோர்த்து....
சமாளிக்கவே அப்பிடி சொன்னேன் என அவளுக்கு அவன் பாஷையில் புரிய வைத்தான் ஸ்வராவில் பப்பு...

"லயா "-பாபி

சும்மா, சும்மா... இதையே இன்னும் நீ பிடிச்சு தொங்கிட்டு இருக்குறது உன்னை சுத்தி இருக்கும் எல்லாருக்குமே ரொம்ப delicate பீல் குடுக்கும் .

இப்பிடியே முகத்தை தொங்க போட்டு இருந்தே, எல்லோரோட சந்தோஷமும் அதில் காணாம போயிடும் பிலிஸ்.

நீயும் புரிஞ்சுகோ யா, முக்கியமா பவன் அவனை நினைச்சு பாரு ...

ரெண்டே மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு,
இனி காலம் எல்லாம் அவனோட தான் உன் வாழ்க்கை....

இப்போ நீ அவனிடம் நடத்தும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு காலம் முழுக்க மறக்க முடியாத ஒரு காயமாக மாறிடும் மைண்ட் இட், சற்று பொறுத்து

"பிலிஸ் லயா ஒரு வெல் விஷ்ரா சொல்றேன் கொஞ்சம் உன் கூட்டை விட்டு வெளியே வா , சுத்தி நடப்பதை பாரு முதல்ல பவனை அவன் முகத்தை நல்ல பாரு......"?

ஒரு கல்யாண பண்ணிக்க போகும் பையனுக்கு இருக்கும் எந்த சந்தோஷமும் குஷியும் அவன் முகத்தில் இல்லை யா.

" லுக் we r in 2019..... !" இந்த காலத்துக்கு இருக்கும் மெச்சூர்ட்னெஸ் நமக்கு அதிகமாவே இருக்கு"

" சோ சேன்ஞ்சு யுவர் செல்ப் அண்ட் கம் அவுட் ஆப் திஸ் மைன்ட்....

பிளீஸ் யார் பார் காட் ஷேக் ?

என்றவன் ஸ்வரவில் கைபிடித்து இழுக்காத குறையாக வெளியே இழுத்து சென்று கதவை டமார் என அடைத்து கொண்டு சென்ற விதமே சொன்னது அவனுக்கு இருக்கும் கோவம் ...

கதவு அரைந்த அதிர்வில் காதை அடைத்து கண்ணை மூடி, குனிந்த தலை நிமிராமல் இருந்த லயாவுக்கு நடுக்கம் வரவே

சிறிது நேரம் நின்ற லயா, அந்த அமைதி கூட இம்சையாக இருக்கவே....

நிமிர்ந்து பார்த்தவள் கண் எதிரே இரு கையையும் காட்டி சுவரோரம் சாய்ந்தது போல, சோகமே உருவாமாக, ஓவியமாக நின்றவனை...
பார்க்க பார்க்க வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத ஏதோ ஒரு உருண்டை உருள்வதை போல இருந்தது அவளுக்கு .

ஏதோ உணர்வு பிசைய அவனை பார்த்தவள், அவனும் கண் சிமிட்டது அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

அடுத்து என்ன என்று புரியாமல் லயா கை பிசைந்து நிற்கவே....

அவள் அருகே வந்து நின்ற பவன் அவள் கன்னம் பற்றி,

" ஸ்வீட்டி " sry டா எனக்காக பாபி உன்கிட்ட கடுமையா பேசி இருந்த தப்பா நினைக்காதே....

இல்ல இல்ல..! அவன் எனக்கும் பிரண்ட் தான். அவன் உண்மை தானே பேசிட்டு போறான் நான் தான் மாறனும்....

"இங்க வா.. என கை பிடித்து அருகில் இருந்த ஒற்றை சோபாவில் லயாவை அமர வைத்து அவள் காலடியில் கால் மடக்கி அமர்ந்து அவள் கையை தன் கன்னத்தில் வைத்து கொண்டே...

" லைலு நாம எவ்வளவு பேசணுமோ அவ்வளவு பேசியாச்சு..

இனியும் பேசவும் ஒண்ணு இல்ல....
நான் இப்போவும் சொல்றேன் என் மனசை திறந்து சொல்றது இது தான் கடைசி,

திரும்ப திரும்ப பேசினதே பேசி மேல மேல
ஆர்க்யூமென்ட் செய்ய எனக்கு விருப்பம் இல்ல டா வெறுப்பா இருக்கு மா...

அடுத்த கட்டாத்துக்கு போகணும்ன்னு நினைக்கிறேன் ஸ்வீட்டி.

iam fed up with this same talk yar ,

" இப்போவும் அதே தான் மீன் பண்றேன்... நீயா என்னை வேணும்ன்னு நெருங்கி வரும் வரை நானாக உன்னை தொல்லை செய்ய மாட்டேன்.

அதுக்காக எனக்கு உன்னை பார்த்த வரும் சின்ன சின்ன பிலிங்ஸ் காட்ட தயக்கவும் மாட்டேன். சாரி டி!.

"என்ன...? சீக்கிரம் உன்னை மாத்திகிட்டா.. இந்த பவன் மனுஷனா நடமாடுவேன்? பாவம் டி நான்.....

முகத்தை தொங்க போட்டபடி சொல்லி, சரிவாக அவளை பார்த்து கன்னத்தில் குழி விழ மெல்லிய சிரிப்பு சிந்தியவன் ....

லயாவுக்கு மெல்லிய சிரிப்பு எட்டி பார்ப்பேனா என்றது.

எனக்கு தெரியும் டா... உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்.... என்னை எவ்வளவு விரும்புறேன்ன்னு. "

"இப்போ உனக்குள்ளே நடக்கும் இந்த போராட்டம் உன் பிலிங்ஸ் பத்தி உனக்கு மட்டும் தான் தெரியும்..!

"அதையும் உனக்கும் பிடிக்காம மாத்திக்க முடியாம தான் தவிக்குறே, இப்பிடி இருக்கேன்னு எனக்கு புரியுது ".

நான் இல்லன்னு சொல்லலே,
நானும் உன் பிலிங்ஸ்சை மதிக்கிறோன் மா....

எந்த பெண்ணாலும் தன்னோட காதலனே அவளோட உண்மை காதலை கொச்சையாக நினச்சா தாங்கிக்க முடியாது

"நான் கற்று கொண்ட பாடம்... "
காதலிக்கும் போதும் சரி நாளைக்கு குழந்தை குடும்பம் பெருசான பிறகும் சரி நம்பை சுத்தி எப்போவும் சந்தோஷம் மட்டுமே இருக்காது, எப்போதாவது கருத்து வேறுபாடு வரும், வரணும்.

வெளிப்படையா அந்த நிமிடமே தெளிவு படித்திக்கணும், பேசிக்கணும் ஒளிவு மறைவு இருக்க கூடாது இப்போ நான் கத்துகிட்டதும் இது தான் .

அதுல தான் ஒரு புரிதல் வரும் ஒரு அந்நியோன்யம் இருக்கும்.

அப்பிடி இல்லனா நாம ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திட்டு முகமூடி போட்டு நடிக்கிற வாழ்க்கையாக தான் அது இருக்கும்.
எப்போவும் கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி ஆகிடும் மா .

"லைலு... "
நீ எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியான பொண்ணோ, அதே அளவுக்கு ரொம்ப சென்டிமென்ட், சென்சிட்டிவான பொண்ணு என்னோட ஸ்வீட்டின்னு எனக்கும் தெரியும்டா...

இதை சொல்லும் போதே தாங்க முடியாமல் அவன் தோளில் முகம் புதைத்து குலுங்கியவளை தடுக்க வில்லை இருந்த நிலையில் சேர்த்து அணைத்து கொண்டவனுக்கு அவள் அழுகை நெஞ்சை அழுத்தவே சரிந்து அவள் வயிற்றில் தான் கன்னம் புதைத்து.... .

"லைலு.. ! நான் அடுத்த ஸ்டேஜ்க்கும் வந்தாச்சு. இனியும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க முடியாதுன்னு உனக்கு புரியுதோ இல்லியோ என்னாலே முடியல மா, நீயும் புரிஞ்சுகோ, என்னையும் புரிஞ்சுக்கோ டி ..."?

இப்போ நமக்கு நடக்கும் கல்யாணம் நம்ப வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத நல்ல பிலிங்க்ஸ் மெமெரிஸ் குடுக்க போற பந்தம் இது.

தலை நிமிர்த்தி...கண்ணோரம் நீர்துளியோடு -பவன்

"வரும் காலத்துல சந்தோசமா நாம இருக்கும் போதும்,நாம நம்ப குழந்தைகளும் இந்த அழுமூஞ்சி அம்மா அப்பா முகத்தை தான் வீடியோவில் ஆல்பத்தில் பார்க்கணுமே சொல்லு டி
என்றதும் ஒரு பதட்டம் லயாவிடம்.

சரி சரி இப்போவே பயந்து போயிடாதே
நான் அந்த அளவுக்கு போக விடமாட்டேன்.

கம் ஆன் கெட் அப்.. இப்போ இருந்து உன்னை தயார் செய்யணும்.

எழுந்து அவளுக்கும் கைகொடுத்து எழுப்பி.. மிக சாதாரணமாக...
சரி உன் மாமா இப்போ ரொம்ப டவுனா இருக்கேன் பாரு, எங்க கொஞ்சம் பூஸ்ட் பண்ணுற போல ஒண்ணு குடு பாக்கலாம் எனவும்.
குனிந்து தன் உடையை சரி செய்து கொண்டு இருந்த லயா..

பட்டென நிமிர்ந்து புருவம் உயர்த்தி உதட்டை மடக்கி மனசுக்குள்ளே, "

" பூஸ்ட் தானே மாமா குடுத்துட்டா போச்சு..?

ஓங்கி வேகமாய் வந்த அவள் கை அவன் வயிற்று அருகே சென்றதும் நிறுத்தி மெதுவாக குத்தி விட்டு செல்லவும்..

நிமிர்ந்து அவள் சேஷ்ட்டையை பார்த்து கொண்டு இருந்தவன்

"ஹாஹா... வென வாய் விட்டு மனது விட்டு சிரித்த பவன்,

ஹேய் ஸ்வீட்டூ... எம்புட்டு ஆசை டி உனக்கு
என் மேல..!
ஒரு அடி கூட எனக்கு வலிக்காம குடுக்கணும் நினைக்கும் நீயடி என்னை கஷ்ட படுத்துவே இல்லடா ...?

என்னை சந்தோஷமா வைச்சுக்குவேன்னு ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கிறே டி செல்லம்..
i லவ் யூ ..லவ் யூ என சத்தமாக சொன்ன பவன் வாய் அடைத்தவளை தன்னோடு இறுக்கி அவள் முகம் எங்கும் வேக முத்தம் பதித்து.

அவளை மூச்சுக்கு திணற விட்டு, திக்கு முக்காட வைத்து உதட்டருகே வந்து மூச்சு வாங்க நிறுத்தியவன்,
இந்த முத்தம் நீயாக எனக்கு தரணும் டி ..? தருவே....." தள்ளி நிறுத்தி விட்டு திரும்பி பார்க்காமல் வெளியேறிட..

பெண் அவள் பிரமை பிடிச்சது போல நின்றால் ...

இரண்டொரு முறை அவன் கன்னத்தில் இட்ட முத்தம் உணர்த்தவள் அதில் மென்மை மட்டும் கண்டவளுக்கு,

முதல் முறையாக அவனிடம் பெற்ற அதிவேகமான முதல் முத்த யுத்தம் லாயவை திணற வைத்தது.

*********
நாட்கள் பறந்து ஓடின......

மறுநாள் காலை பொழுது புலர்ந்தும் புலராத விடியலில் 3 இருந்து 41/2 பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணம்...
முதல் நாளே பரணி குடும்பம் பவன் வீட்டை நோக்கி பயணம் ஆனது,

பவன், பாபி ஈஸ்வர் மளிகை வண்ண வண்ண விளக்கு, பூ அலங்காரம், வாழை, தென்னை குருத்து, மா, பலா .ஓலை என கலை காட்டியது ..

அளவாக அழைத்த உறவினர், அவர்களுக்கு என தங்கிட, உணவு, கல்யாணத்துக்கு என வர போக வாகன வசதிகளும், புவனா அவர்கள் வீட்டின் அருகே இருக்கு ஹோட்டல் ரூம்ஸ் மொத்தம் புக் செய்து வைத்து இருந்தனர்.

தொடரும் ********
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top