பவன் ல(ட்சி)யா கல்யாணம் -29🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
நேராக கல்யாண மண்டபத்திற்கு
போன இந்த பவன் லயா கல்யாண கதைக்கு ஒரு கிக் இருக்காது, அண்ட் லய(ப் )பவன் அவங்க day by day பிரிவாய் தெரியும் லவ் பிரியமாக போகும் கட்சிகள் ரசிக்கும் படியாக தரலாம்ன்னு சின்ன ட்ரை கொஞ்சம் detail🤔😋 ஆக களங்கம் இல்லாத காதல் ....

******
குறித்த கல்யாண தேதி வர
இன்னும் இரண்டு மாதம்.

நாட்கள் நெருங்கிட மூன்று குடும்பத்திற்கும் ஒரு நாள் ஒரு
நிமிடமாக மாறி போனது.

இரண்டு மாதம் என்பது
கடினமாக இருந்தும் ,கலை
காட்டியது கல்யாண வீடு.

பவன் புவனா தங்கள் வீட்டுக்கு
முடித்தால் வாரத்துக்கு ஒரு
முறை விசிட் செய்வதோடு சரி.

அவர்களை போக விடாமல் காட்டி
போட்டு விட்டன இங்கு இருக்கும் வேலைகள்.

கல்யாணம் மெஹந்தி சங்கீத் ,
மகள்களுக்கு மாப்பிள்ளைகளுக்கும்
உடை, நகை, என அனைத்து தானே பார்த்து கொள்ள போவதாக பரணி சொல்லவும்.

சிவாஜியும் , புவனாவும் மருமகளுக்கு வேண்டிய முகூர்த்த புடவை , ரிசெப்சனுக்கு ஆடை ஆபரணம் தங்கள்
பொறுப்பாய் ஏற்று கொண்டனர்.

அன்று மாலையே ரிசெப்ஷன்
என்றால் சற்று டென்ஷன், அலைச்சல் தரும் என்று மணமக்கள் சொல்லவும் , மறுநாள் மாலை சென்னை ITC cholaவில் ரிசெப்ஷ்ன்னுக்கு ஹால் புக் செய்து வைத்தார் சிவாஜி.

பரணி தானே அதையும் பார்த்து கொள்வதாக எவ்வளவோ சொல்லியும்.
அது முறை அல்ல என இவர்கள்
பிரித்து கொண்டனர்.

ஆளுக்கு ஒரு வேலை என பிசியாகி போனாலும் கிடைக்கும் நேரத்தில் சென்னை பரணி வீடு ஒரே
கொண்டாட்டம் குதூகலத்திற்கு
பஞ்சம் இல்லை,

மாப்பிள்ளைகளுக்கு மேலும் உரிமை சொந்தமாகி போனதால் உறக்கம் தவிர, உண்டு உருளுவது,
வேலைகள் போனிலே பார்ப்பதும் போவது வருவது என தங்கள் மாமன் வீடே கதி என இருந்தாலும் ஒரு
கட்டுப்பாடு கண்ணியத்தோடு
தான் இருந்தனர் இருவரும்.

புனிதாவுக்கு நிற்க நேரம் இல்லாமல்
ஒரே பரபரப்பு, மாப்பிள்ளைகள் வரவு ருசியாக உணவு வகை வகையாக செய்வது என அதில் பிசி... புவனாவுக்கு அவர்களை மேய்ப்பதில் பிசி..

ஆர்டர் செய்த கல்யாண பத்திரிகை
வரவும் ஒரு வெள்ளி கிழமையாக
பார்த்து பண்ணை கோவில் குலதெய்வத்திற்கு அபிஷேக, ஆராதனைக்கு ,முன் தினமே
ஏற்பாடுகள் ஆனது.

அங்கே பொங்கல் வைத்து
முதல் பத்திரிகை அம்மனுக்கு
படைத்து வழிப்பட,

மொத்த குடும்பம் ஒரே ஏசி
வேனில் போக ஏற்பாடு செய்து விடியற்காலை 4 மணிக்கே
கிளம்பி விட்டனர்.

ஒவ்வொரு இளம் ஜோடியும்
அவரவர் துணையோடு அமர்ந்து ,
அவரவர் மனநிலை படி அரட்டை,
சீண்டல்,கேலி, கோவம், பாட்டு,
சிணுங்கல், சிரிப்புமாக இருந்தனர்.

கூடவே பரணியின் டிரைவர் தாமஸ் அவன் மனைவி குப்ஸ் கூட துணை வேலைக்கு உதவ , பெரிய வேன் என்பதாலும் அவர்களையும் ஏற்றி கொண்டனர் ...

இங்கே புது ஜோடிகள் பாடு தான் கொண்டாட்டமாய் இருந்தது.
லாயவை தவிர மற்ற குரல்கள்
ஹை டெஸிபலில் இருந்தது ..

குப்ஸ் சொல்லவே வேண்டாம், சின்ன வயதில் இருந்து லயா, ஸ்வராவுடன் வளர்த்த உரிமையில் கடைசி சீட்டில் உட்கார்ந்து கொண்டு அவள் அடிக்கும் அரட்டை,
வாயாடி பெண்... தன் தனி
தன்மையான பாஷையாலும்...
தன் காதல் அனுபவத்தை, காதல்
கணவனை பார்த்து கொண்டே
சொல்ல சொல்ல தாமஸ்
பூமியோடு பூமியாக புதைந்து
போகும் அளவுக்கு வெட்கத்தில் குனிந்தவன் தலை நிமிராவே இல்லை..

ஹாஹா...ஒரே சிரிப்பின் ஒலி..

மலர்ந்து வீசும் காதலை அனுபவத்தை சுவாரஸ்யமாய் கேட்கும் புது ஜோடிகளுக்கு இது வரை மொட்டாக இருந்த காதல்
இனி அன்பு, காமம், அக்கறையும் கூடி மலர போகும் தங்கள் பந்தம் நினைத்து ஒரு வித சிலிப்போடு
போதையை மூட்டி கொண்டு இருந்த மனம் கவர்த்தவர்களிடம் இருந்து வீசும் வாசமும் இழுத்தது.

கூடவே தலையில் சூடிய
முல்லைப்பூவில் நறுமணம்
மயக்கம் தரவே ,ஒருவரையொருவர்
ஒரு ஏக்க பார்வையோடு பார்த்த வண்ணம் மேலும் மேலும் நெருக்கி கொண்டும் தங்கள் காதல் மௌன பாஷையை கண்ணோடு கண் கலக்க விட்ட ஜோடியில்,

கேடி 2 மட்டும் அடங்க மாட்டேன்
என்று அடம் பிடுங்கும் சிறுவனாக
மாறி ஸ்வராவை இடித்து , முட்டி கொண்டு, கையும் காலும் சீண்டி கொண்டு இருந்தவனை பொறுத்து பொறுத்து பார்த்து முடியாது... பாபியின் காதை பிடித்து இழுத்து ,

" பப்பு... போவது கோவில், ஹனிமூன் இல்ல கொஞ்சம் உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வைங்க...", ஸ்வரா கொஞ்சி மிரட்டினாலும்,

பாபி...! தான் சேட்டையை நிறுத்தும் ஐடியாவே இல்லை,

பொருத்து பார்த்தாள் ஸ்வரா பட்டாடை வேறு நசுங்கவே .....🙆😤

(எஸ்கியூஸ் மீ தோழிஸ்... 😒
மணமாக போகும் தம்பதிகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி தான் இருப்பாங்க...
சோ...🤭🙄 ப்ளீஸ் அவர்கள் சேட்டைகளை கொஞ்சம்?🤗)

அவன் கை இரண்டையும் சேர்த்து தான் வயிற்றோடு கட்டி இருக்க பிடித்து அவனை நகர விடாமல் செய்யவே,

பாபி விட சொல்லி கெஞ்சி பார்த்து முடியாது, கொஞ்சம் இறங்கி வந்தவன்..

அடங்கி அவள் மீதே மொத்தமாக அவள் தோள் வளைவில் முகம் புதைத்து கொண்டான் -பாபி

"நான் தூங்க போறேன் டி பட்டுக்குட்டி மாமாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா மீ பாவம்...😋 ஓகே பேபி... சின்ன குழந்தை போல கண்ணை மெல்ல மூடி மூடி திறந்துகாட்டினான் ...

வாய் தான் அப்பிடி சொல்லியது ஆனால்..!

அவ்வளவு நெருக்கத்தில் அவள் தள்ளி விட்டும் எட்டி கன்னத்தில் மூக்கை உரசுவது, காதில் ஊதுவதுமாக அவளை நெளிய விட்டு கொண்டு இருந்தான்..

"பப்பு மா...?
நீங்க இப்போ சைலன்ட் மோடுக்கு
போகல..

மேலும் அவன் அருகில்
நெருங்கி அவன் மூக்கை கடிப்பது
போல் பாவனை செய்து, இந்த
அழகான மூக்கை அப்பிடியே கடிச்சு முழுகிடுவேன் பாத்துக்கோங்க ஆமா... "!

( அட பாருடா இந்த கூத்தை 🙄சுறா வா இது 🤔🙆என்ன மரியாதை, என்ன பணிவு என்னம்மா ஆச்சு உனக்கு 😜)

(நிச்சயம் ஆனதும் )புனிதா அம்மா ஆர்டர் இங்க பாரு டி சொற..😡

"இந்த நிமிஷத்தில் இருந்து நீயி மாப்பிள்ளை கிட்ட மரியாதையாக தான் பேசணும் கேட்டுச்சா... "?

" இனிமே வடை தொடைன்னு (அது தான், வாடா போடா... 😰)
சொன்னேன்னு வை சுறா...???
உன்னை சாட்டியிலே போட்டு வறுத்து உப்பு கண்டம் போட்டுருவேன் பாத்துக்க என அம்மா வறுத்து ஆர்டர் 😢😭😱)

பாபி..." ஹேய் பிலிஸ் பிளீஸ் ஹனி
பேபி, எங்கே ஒரு வாட்டி கடிச்சு காட்டு டி மாமாக்கு,

(அட பக்கி அது என்ன முந்திரி பழம்மா யா🥶வெள்ளை கொரங்கு தானா போயி வில்லங்கம் பண்ணி விலா எலும்பு ஒடைச்சிகிட்டு வர போகுது 🐒)

ஆசையா இருக்குடி பேபி, சிரித்து அவளை மேலும் வம்புக்கு இழுத்து அவள் நெத்தியில் முட்ட..

ஸ்ஸ்ஸ்ஸ்... நெற்றி தடவி சுத்தியும்
பார்த்து,

சீ லூசு பப்பு நீ திருந்தவே
மாட்டே போ..டா முகத்தை திருப்பி கொள்ள இனி போதும் என பாபியும் அடங்கி அவள் தோள் சாய்ந்து
கண்னை மூடி கொண்டான்.
இப்பிடி ஒரு ஜோடி...

" இன்னொரு ஜோடி எப்பிடி
இருக்கோ கோவிலுக்கு போயிட்டு
பூஜை எல்லாம் முடிச்ச பின்னே
போயி பாக்கலாம்"...!?

********
தோப்பு கோவில் இருக்கும் இடம்
வந்து விடவே , வண்டியில் இருந்து
அனைவரும் இறங்கினர் ..

இன்னும் முழுவதும் விடியாது
இருந்த காலை பொழுதில் ,மணி 6:00
ஏசியை விட இயற்கையாக
வந்து மோதி சென்ற குளிர்ந்த
தென்றல் காற்று.

அவ்வளவு குளுமையாகவும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
சுற்றியும் எங்கும் பசுமை
மன்வாசனை, பால் கறக்கும்
மாடுகள் ஒட்டி செல்லும்
மணியோசை, குயில் கூவும்
இசை , கோவில் மணியின்
டண், டண் என்ற ஓசை....

சற்று தள்ளி கோவில் இரண்டு
பக்கமும் வரிசையாக எண்ணி
6 கடைகள் இருக்கும் , அவ்வளவு காலையிலே இட்லி வெந்து
புகையாக வரும் வாசம்,
கூடவே டீ கடையில் இருந்து
பால் பொங்கும் மணம்.

பரபரப்பான நாகரிக வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட
இயற்கையின் அழகு கிராமிய
சூழல் எங்கும் அமைதி பார்க்க
மெய் சிலிர்த்தது அனைவர்க்கும்
அந்த இடமே ஒரு தெய்விக
கலையோடு இருந்தது.

பண்ணை தோப்பு "ஆதி பராசக்தி"
கோவில் கோபுரம் மிகவும் பிரம்மாண்டமாக பொலிவோடு
சுற்றிலும் வயலுக்கு நடுவே
நிமிர்ந்து நின்றது..

அதை சுற்றிலும் அடர்த்த
தென்னை, மா தோப்பு,

தூரத்தில் எங்கும் பசுமை சற்று
பின்னே மலைமுகடுகள் மேகம்
சூழ்ந்து காட்சி அளித்தது...

எங்கோ சலசலவென தண்ணீர்
பாய்ச்சும் சத்தம்.கேட்ட வண்ணம் இருந்தது..

இளவட்டம் தங்களையும் மறந்து இயற்கையில் லயித்து போயி
இருந்தனர்.

இவர்கள் ஊர் கோவில் தர்மகத்தா. கோவில் பூசாரி, ஊர் தலைவர்
வயதில் மூத்த பெரியவராக
தெரித்த அவர் மனைவியோடு
புவனா அருகில் வந்தவர்..

"அம்மாடி சௌக்கியமா இருக்கிங்களா தாயி என பெரியவரும், அவர் மனைவி,
புவனா கை பிடித்து எவ்வளவு
நாள் ஆச்சு மா உங்களை எல்லாம் பார்த்து,என நலம் விசாரித்தார் ..

தர்மகத்தாவும் முன்னே வந்து
மாப்பிள்ளை நல்ல இருக்கிங்களா தம்பி என நலம் விசாரிப்புக்கு பிறகு,

"மாப்பிள்ளை தம்பிங்களா
இப்பிடி முன்னே வாங்கய்யா...

பூசாரி அந்த சாமி மாலையை புள்ளைகளுக்கு போட்டு விடுங்க.."
மாலை மரியாதை ஆனதும்,

கோவில் தர்மகத்தா புவனா
அருகே குனிந்து...

"அம்மா எல்லா ஏற்பாடும் ரெடியா இருக்குங்கமா, நீங்க பொங்கல்
வைச்சிட்டு வந்துருங்க...

அதுக்குலேயே ஆத்தாக்கு
அபிஷேகம் தயாரா இருக்கும் மா..

புவனா.... சரிங்க அய்யா ரொம்ப சந்தோஷம்🙏 முடிச்சுட்டு சொல்றேங்க.. என்றதும் அவர் சென்று விta,

பண்ணையில் கணக்கு வழக்கு
பாக்கும் ராசு,
அம்மா, பண்ணை வீட்டையும் சுத்த பண்ண சொல்லி காலை பலகாரம்
தயார் பண்ண சொல்லி இருக்கேன் மா.
நீங்க பூசை எல்லாம் முடிச்சுட்டு
வாங்க மா நான் போயி ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்.

"சரிங்க ராசு...நீங்க போயிட்டு வாங்க அப்பிடியே நம்ப பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு சேர்த்தே மாத்தியத்துக்கு சமைக்க சொல்லுங்க இன்னைக்கு அவங்களுக்கும் விருந்து கொடுப்போம்,

ஹான், ராசு யாருக்கு எல்லாம் இளநீர் கபி டீ வேணுன்னு கேட்டு குடுத்துட்டு போப்பா,

சரிங்க மா இதோ அனுப்புறேன் மா ராசு சென்றதும் .

கோவிலுக்கு உள்ளே பொங்கல் வைக்க என தனியாக மண் அடுப்புகள் அமைத்து இருந்தனர்,

புனித புவனா சொல்லி குடுக்க ,
லயாவும், ஸ்வராவும் தட்டு தடுமாறி
கை சுட்டு பொங்கல் வைக்க இவர்களையே பார்த்து கொண்டு இருந்த இருவர் மனசு பொங்கி பொசுங்கி..
ஒரு வழியாக எல்லா பூஜை புனஸ்காரம் பிராத்தனை எல்லாம் முடித்து,

பண்ணை வீட்டை ஒரு வழி செய்து உண்டு களைத்து...

தோப்பு வயல் முழுவதும் சுற்றித் திரிந்து, மாலை 5 ஆனதும் எல்லோரும் வேனில் வந்து ஏறி விட லாயவை மட்டும் காண வில்லை....

அனைவருக்கும் ஒரே பதட்டம், இந்த நேரம் பார்த்து எங்கே போயிட்ட இந்த பொண்ணு என்று சுற்றுமுற்றும் தேடினர்...

பவன் துடித்து போனான், எங்க போயிட்ட, என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்னையே சும்மா சும்மா பார்த்துட்டே வேற இருத்தலே..

"லைலு உன் மனசுல என்ன தான் இருக்கு உன்னை புரிச்சுக்கவே முடியலயே டி,
ராட்சசி என்னை இப்பிடி உயிரோடு கொல்றதே வேலையா போச்சுடி உனக்கு,
கலங்கி விட்டது பவன் மனதும் கண்களும்..?

திடீர் என ராசு குரல் கேட்டது..

"பவன் அய்யா லயாமா கோவில் உள்ள இருக்காங்க, என்றதும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.."!

"கொஞ்ச நேரத்துல கிலி கொடுத்துட்டா இந்த பொண்ணு, நமக்கு கூட கோவில்ல பார்க்க தோணலையே, --பரணி சிவாஜியும் நிம்மதி மூச்சு விட,

பவன்..
" நான் போயி கூட்டிட்டு வரேன். "
என்று கோவில் உள்ளே சென்று பார்க்க ,
அம்மன் சிலையை இமைக்காமல் இன்னொரு உயிர் உள்ள சிலை கைகூப்பி பார்த்து கொண்டுஇருக்க .

அவள் அருகில் சென்று அவள் தோளை தொட்டு திருப்ப.. சிலைக்கு உயிர் வந்து திரும்பி அவனை பார்த்த கண்கள் சிவந்து கலங்கி இருந்தது.

"லயா...?"
ஒன்றும் பேச வில்லை பவன் அவன் கண்ணில் அத்தனை கோவம் வந்து இருந்தது...

சற்று பயந்து போன லயா, " மாமா சொல்லாம வந்துட்டேன் தப்பு தான் sry.. "

" சரியா பிராத்தனை செய்யலே,
ஆஆ.. அது தான் மறுபடியும் கும்பிட வந்தேன் மிரண்டு பதில் சொல்லவும்..

பவனிடம் மெல்ல கோவம் மாறி அமைதியாகி மென்மையாய் அவளை பார்த்து,

"கொஞ்ச நேரத்திலே கொன்னுட்டேடி, என்னவென நினைக்க.. "?
இப்போ நீ பண்ணதும் , இனி நீ எது செய்தலும் மனசுல பயம் வந்து சாகடிக்கும் ஸ்வீட்டி, பிளீஸ் டா ,
இந்த டென்ஷன் முடியல மா இனி இப்பிடி எல்லாம் பண்ணாதே டி.

அவனையே இமைக்காது பார்க்க.
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#3
பவன்...

ஆன்னா வுன்னா இப்பிடி ஒரு பார்வை பாரு டி...

"இன்னும் என்ன பார்வை..? உயிரோட கொன்னுடு அப்புறம் இப்பிடி ஒரு லுக் குடு கண்ணை பாரு.....

இப்பிடி பார்த்து பார்த்து மயக்கினது போதும் வா போலாம்,
அவள் கை பிடித்து இழுக்காதா குறையாக அழைத்து சென்றான்.

வேனில் அமர்த்தி பொத்தென அவளை இடிக்காத குறையாக சாய்த்து அமர்ந்தான் -பவன்

(பாஆஆஆ.. கண்ணா ஆஆ அது இனி இவ கண்ணை பாக்கவே கூடாது ரொம்ப டேமேஜ் ஆகுறோம்..)

(பவுனு மாமோய்... உன் கண்ணை விடவா போடா போடா... 🙄)

சில நாட்களாக லயா சில நேரங்களில் அவன் கடந்து போகும் இடம் எல்லாம் ஒரே முறைப்பு தான் அதிலே ஒரு குதூகலம் நம்ப ஹீரோவுக்கு.....

பத்து கேள்விக்கு ஒரே பதில் வேறு வந்தது, பரவாயில்லை தன்னோட ஸ்வீட்டி ஒரு வார்த்தை பேசின கூட போதும் என்ற மனநிலையில் பவன்..

பேசினான் பேசினான்... திட்டுவது பிறகு கொஞ்சுவது...
எல்லாம் கவனித்த லயா பதில் மட்டும் ஹீம்...ஹீம்.... தான்.

ஆனால் முன் இருந்த கோவம் சற்று குறைந்து தான் இருந்தது அவளிடம்...
முகத்தில் சிரிப்பின் சாயல் இருக்கு யா.."??? 🤔😉👍😜

அவன் கை கூட அவள் விரல்களில் கோர்த்து தான் இருந்தது.. அதற்க்கு எதிர்ப்பு இல்லை...

" sooo ...!🤔 மைனா மயங்கி வருது பாப்போம் ...."😝

பவன் தான் இணையின் முறைப்புக்கே சொக்கி சொக்கி மயங்கி போனான்.

பேசி பேசி சோர்ந்து போயி அப்பிடியே அவள் தோள் வளைவில் கன்னம் வைத்து உறங்கி போனான்....

சற்று பொருத்து திரும்பிய லயா கண்ணில்..
எல்லாம் செதுக்கி வைத்தது போல இருந்த அவன் முக உறுப்புகளை முதல் முறையாக தொட்டு தடவி பார்க்க மனம் ஏங்கியது..

மெதுவாக ஒரு விரல் கொண்டு....

அவன் வில் போன்ற அடர்த்தியான புருவமும் நீவி....

முடிய விழியில் நிண்டு வளர்த்த இமை மூடியை தடவி விட்டு....

அதற்கு கீழே தெரித்த நாசியும் மீசை, அளவான தாடி தடவிய படி வந்தவள்..

புகை பிடிக்காத பருத்த உதடு அருகே வந்ததும் பூ விரல் அங்கேயே நின்று விட்டது.

பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை அவளுக்கு சேர்த்து அணைத்து முத்தமிட மனது தூண்டிவிட்டது.

தன்னையும் அறியாமல் விழியோரம் கண்ணீர் மணி துளி கசிய, உதடு தந்தி அடித்தது...

இப்போது அவள் மனது மட்டும் அவனோடு தானாக உமை பாஷையில் பேசியது.

" மாமா... ஏன் மாமா நான் இப்பிடி இருக்கேன்..

எனக்கு உங்களை அவ்வளவு புடிக்குது முன்னாடி இருந்த கோவம் இப்போ இல்ல மாமா எனக்கு..

"ஆனா ஏன்னு தெரியல என்னால முன்ன போல உங்க கிட்ட சகஜமா இருக்க முடியல. !"

" எனக்கு நீ பழைய லயாவா வேணும் டி...
உன்னை மறுப்படியும் குறும்பு லயாவா பாக்கணும்ன்னு மூச்சுக்கு முந்நூறு தரம் நீங்களும் தான் என்னை கெஞ்சி கொஞ்சி கேட்டுட்டு இருக்கிங்க..."

" எனக்கே என்னை பிடிக்கல மாமா அவன் கை எடுத்து உதட்டோரம் வைத்து எடுத்தாள்..

இரண்டு மணித்துளி உருண்டு கீழே இறக்கி வந்து அவன் வாட்ச்லில் பாட்டு தெரிந்து போனது...

இப்போ எல்லாம் உங்க முகம் கொஞ்சம் வருத்தா பட்ட கூட என்னால தங்கவும் முடியல மாமா, பிலிஸ் மாமா இனிமே நீங்க என் கிட்ட கெஞ்சாதீங்க என்னால உங்களை இனிமே அப்பிடி பாக்க முடியாது...

"என்னையும் மாத்திக்கவும் முடியல நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க..."?

உங்க எல்லா குறும்பும், சீண்டல் நான் ரொம்பவே ரசிக்கிறேன் பவுனு மாமோய்.. மெல்லிய சிரிப்பில் மெதுவாய் அவன் நெற்றி மூடி கோதி விட்டு அங்கே உதடு ஒற்றி எடுத்தாள்.

ஆனா என்ன திரும்பி ரியாக்ட் தான் தப்பு தப்பா பன்றேன்....

முகம் மறுபடியும் சோகமாய் வைத்து,

"என் மாமா இனி எனக்கே எனக்காய் கிடைச்சுட்டாருன்னு வானத்துக்கும் பூமிக்கும் குத்திக்கணும் போல இருக்கு!".

நீங்க சந்தேகம் பட்டது கூட இப்போ நினச்சா எனக்கு தப்பா தெரியல மாமா...

சந்தோஷமா தான் இருக்கு ஏன்னா என்னோட பவன் மாமா என்னக்காக....
நான் வேணும்ன்னு தானே என்னை தேடி வந்தாங்க ..

"என்னை இன்னொரு ஆளு கூட சேர்த்து
பார்க்க கூட பிடிக்கலைன்னா..."?

"அப்போ நான் உங்க மனசில் எந்த அளவுக்கு ஆழமா புதைஞ்சு இருக்கேன்னு இப்போ புரியுது மாமா... "கண்ணில் காதல் நிரப்பி..

உங்க கோவம், வெறுப்பு, இதுக்கும் எல்லாமே எதுக்காக நான் கிடைக்க மாட்டேன்ன்னு.. என் மனசில் வேற யாரும் இருக்க கூடாதுன்னு நினைக்கும் உரிமை தானே..

அதை தானே நானும் உங்க விஷயத்தில் நினைக்கிறேன் உங்களுக்காகவே காத்தும் இருந்தேன்...

என்னை தவிர வேறு வாழ்க்கை யோசிக்க முடியாத உங்க மனசு எனக்கான அடிச்சி பிச்சி ஓடி வந்திங்க பாருங்க அப்போவே ஓடி வந்து உங்களை கட்டி பிச்சு அழுகணும்ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கும்.

உடனே ஏதோ ஒரு வீம்பும் கோவம் என்னை கட்டி போட்டு எழ விடல மாமா...

இப்போ எல்லாமே சரியாகியும் நான் தான் இப்போ உங்களுக்கு பிரச்சனை கொடுக்கிறேன்...

"என்னை எதுவோ அடக்குது.."!

நான் மாறனும் மாமா, உங்களை சந்தோஷமா பாத்துக்கணு என் கூட்டை விட்டு வெளியே வரணும்.

இப்பிடி மனசுக்குள்ளே பேசினது எல்லாம் உங்க முன்னாடி மனசு திறந்து வெளியே கொட்டணும்....

இப்போ இது தான் நான் வேண்டி கொண்ட என் பிராத்தனை மாமா...
அவனையே சிறிது நேரம் பார்த்தவள்.

மெதுவாய் லயாவின் இடது கை அவன் வலது கையோடு கோர்த்து...

அவன் இடது கை எடுத்து தான் இடுப்பு சுற்றி போட்டு கொண்டாள் ...

தான் வலது கை எல்லையில்லா அன்பும் காதலும் நிரம்பி தானாக சென்று அவன் கன்னம் தொட்டு மயிலிறகை போல தடவி கொண்டே இருக்க,

உறக்கத்திலிருந்த அவனுக்கு அது மேலும் சுகமாய் இருக்கவே உட்கார்ந்த நிலையிலேயே மேலும் தன்னோடு வளைத்து இறுக்கிக் கொண்டு உறங்கினான்... லயாவுக்கு தன்னையும் மீறி சிரிப்பு வர,
அவன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே..

"என் முரட்டு சிங்கமே" உன்னை எப்பிடி டா சமாளிக்க போறேன் ... அவள் உதடு தானாக முணுமுணுத்தது.

**********
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
Revenge edukkura levella iruntha layaava Ippdi pesurathu... Pavanu nee சுத்த waste ... Unnai parthu Ava love feelings kottra unakku unnoda thookkam perusa pochu... Bobby nee samathu kutty in velai ennavo adha crcta pannra... Nee nadathu rasa...😆😆😍😍
 

Advertisements

Latest updates

Top