Latest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் -30(2)🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
யூடி 30--(2)

🌿🎉மெஹந்தி பங்க்ஷன்🎊🌿

மெஹந்தி இட்டு கொள்ள அழைப்பு வந்ததும். லயா ஸ்வரா அவர்களுக்கு
என்று போட பட்ட இருக்கைக்கு தோழியோடு அமர்ந்து விட்டனர்.

Screenshot_20190827_113020.jpg

தேவலோக தேவதைகள் பூலோகம் வந்தது போல் ஒரு அலங்கரத்தில் இருந்தனர் லயா, ஸ்வரா,

IMG_20190827_120141.JPG
IMG_20190827_120958.JPG
நிஜ பூக்களால் செய்த ஆபரணங்களை உச்சி முதல் பாதம் வரை இருவருக்கும் அணிவித்து, மருதாணி இடும் வைபவம் ஆரம்பம் ஆனது.

பவன், பாபி ஆடியதோடு நில்லாமல்
நிரு, ஷ்ரவன் அவர்கள் ஜோடிகளையும் களம் இறக்கி போட்டி போட்டு அடி, பாடி வேறு லெவெலில் இருந்தது,.

மருதாணி இட்டு கொள்ளும் தங்கள் இணையை அட்ட்ரக்ட்,
அட்டாக் செய்து மயக்குவதோடு
நில்லாமல்,

பிஸியாக சுற்றி கொண்டு இருந்த பெரியவர்களையும் விடாமல் இழுத்து பழைய நடிகை சாவித்திரி, சரோஜா தேவி, MGR, சிவாஜி பாடல்களுக்கு அவர்களை போலவே நடித்து ஆட சொல்ல,

(கேரக்டர்ஸ் முகம் என் கற்பனையில் கேட்டதுக்காக 👇 )
IMG_20190923_105718.JPG

IMG_20190923_105423.JPG
IMG_20190923_105900.JPG
IMG_20190923_110818.JPG
சும்மா சொல்ல கூடாது பழமை என்றும் புதுமை தானட🤩 அசத்திட்டாங்க நடிச்சு, ஆடியவங்க எல்லாருமே 👌

கடைசியா மருதாணி சடங்கு முடியும் நேரத்திலே ஸ்வரா தோழிகள் பவன், பாபியை சபையில் இழுத்து,

பெண்கள் இருவரின் கைகளில்
அவரவர் ஜோடியின் பெயரை
உள்ளங்கையில் மறைத்து எழுதி வைத்ததை கண்டுபிடிக்க சொல்லவும்.

கண்ணுக்கே தெரியாத அளவுக்கு
மிக அழகாய் நுண்ணியமாக டிசைனில் பெயரை கண்டு பிடிக்க சொல்லுவது, திருப்பதியில் மொட்டை அடித்த தன் கணவரை தேடும் கதை தான்😝

இதில் இருவரில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே அவரின் காதலியை அதிகமாக நேசிப்பவர் என போட்டி வேறு வைக்கவும் ,
இரு ஆடவரும் அவர்கள் முன்னே
வந்து அமர்ந்து தான் தாமதம்

இரு பெண்ணிடம் ஒரு வித பதட்டம்...

லயாவின் முகத்தில் ஏனோ அதிகம்.
விழி எடுக்காமல் பவனை பார்ப்பது
அவள் கையை பார்ப்பது என
டென்ஷன் உச்சத்தில்.

இது சும்மா விளையாட்டு தான்.
இருந்தும் தன் மாமன் மனதில் தான் இன்னும் எந்த அளவில் இருக்கிறோம் என்ற ஐய்யப்பாடு மட்டும் போன படு இல்லை,

(இருக்கும் தானே, கோவம் இன்னும்
இருக்கு, என்று மனம் மவுனம் நாடகம் ஆடினாலும், அதை விட காதல் அதிகம் வைத்து இருப்பவள் )
லயா,
மாமா சொல்லிடுங்க ...?

சீக்கிரம் கண்டு பிடிங்க...
மா...மாஆ..?

"சொல்லுங்க...?"
விடாது வாய்யும் சத்தம் இல்லாது முணுமுணுக்க, விட்டால் அழுது
விடுவாள் போல, கையில் வேறு சிறு நடுக்கும்.

பவனுக்கு புரிந்தது.
இமைக்காது அவள் முகத்தை
கண்கள் வட்டம் அடித்தது.
அதில் தன் எத்தனை எதிர்பார்ப்பு
மெல்லிய கண்ணோரம் சிரிப்பு
அவனிடம்.

இல்லை, எந்த பதட்டமும் அவனிடம்,

மறுபடியும் அவள் கையை நோக்க, "


IMG_20190923_120315.JPG

(இந்த மெஹந்தியில் பவன் பெயரை அந்த பெண்ணின் இதயத்தில்பெரிய எழுத்தில் எழுதி இருக்கேன் உங்களுக்கு தெரிய, பவனுக்கு ரொம்ப குட்டிய தான் தெரியும்)

"ஆஹா...! " என்ற பவனை, சுற்றி இருக்கும் கண்களும் ஆச்சர்யமாக நோக்க, குறிப்பாக லயாவிடம் பதட்டம் வந்து ஒட்டி கொண்டு பரபரப்பாய் அவனை பார்க்க, அவளை பார்த்து கண் சிமிட்டி,

" ஹீஹீ... ஏதோ தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு டா... 🙇‍♂️🙆‍♂️
கொஞ்ச கண்டு பிடிக்கிறது சிரமமாக இருக்கு போல டி ஸ்வீட்டி,

லயா கோவ பார்வையில் ஓர பார்வையாக அவனை பார்த்து வாய் இஷ்டத்துக்கு முணுமுணுக்கவே...

சிரித்து கொண்டே, இரு... இருடி அதுக்குள்ள மவுன அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சிட்டியா , குனித்து
" எங்கோ ? எங்கே...?" என்றப்படி
கண்கள் தேட
அவ்வளவு குட்டியாக அவன் பெயர்...? எப்பிடி கண்டு பிடிப்பது?

ஆர்வம் மிக இருக்கையை மேலும் முன்னே நகர்த்தி கையில் கவனம் செலுத்த நினைக்க, முடியவில்லை ...

லயாவின் பரபரப்பு, படபடப்பு, அதனால் இதயம் எம்மி துடிக்கும் வேகம், அவள்
கையில் குவித்த பார்வையும் தாண்டி, அவன் கண் முன்னே இம்சை செய்யவும்
கவனம் வேறிடம் சிதறி போக நினைப்பதை கண்டன்.

தலை நிமிர்ந்து விடாது கூடவே
பிறந்த கண்ணியம், வளர்ப்பு கடிவாளம் போடவும்...
முகத்தை வேறு திசை திருப்பி மெல்ல மூச்சை சற்று இழுத்து விட்டு ஒரு நிமிடம்
கண்ணை மூடி திறந்ததும்...பதட்டம் குறையாவே... லாயவின் முகத்தை
நிமிர்ந்து பார்த்தன அவன் பிரவுன் விழிகள் .

அவள் கருவிழிகள் அலை பாய்ந்தன
அவன் கண்ணோடு. உதடு பற்கள் இடையில் சிக்கி தவித்தது.

(அய்யோ கோவிந்தோ... 🙆‍♀️இதுக்கே இந்த பொண்ணு இவ்வளவு டென்ஷன் பட்ட இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவோ இருக்கே வாத்து...?)

ஆள் காட்டி விரலால் அவள் உதட்டை தொட்டு பிரித்து விட்டவன் விரல், அதன் மென்மையை விட்டு வர மறுத்தது. கட்டுப்படுத்தி விரல் பிரித்து, குனிந்து அவள் கையை மறுபடியும் கூர்ந்து
பார்த்த அடுத்த நொடியே தெரிந்தது.

அவள் கையில் வரைந்த பெண்ணின் இதயம், --பவன்

"ஓ மை கடவுளே, எவ்வளவு குட்டியான இதயம்.. !"
இதை வரைந்த அந்த மார்வாடி பெண்ணை பாராட்டியே ஆகனும்.

என்ன நுணுக்கமாக கை முட்டியில் தொடங்கி விரல் நுனி வரை வரைந்து இருக்கிறார். "கிரேட்..." என அந்த பெண்ணை பாராட்டி விட்டு மறுபடியும் கையை கவனிக்க..

அந்த இதய வடிவின் நடுவில் தமிழில் மூன்று எழுத்து... பளிச் என கண்ணில் பட்டதும் .

"பவன் "🎉🎊என்று படித்தான் சத்தமாக...!

"ஹேய்..." 👏🤩, ஒரே கூச்சல் , சொல்லி விட்டான், தொடர்ந்து பாபியும் சொல்லிவிட,

அனைவருக்கும் வென்று விட்ட குதூகல சிரிப்பு, மூட்டி மோதி கடைசியில் கண்டும் பிடித்தாயிற்று.

என்றும் இல்லாத, திருநாளாக கண்கள் பளபளக்க லயாவிடம்
ஒரு மென்மையான காதல் பார்வை
வீச்சு அவனை தாக்கி சென்றது.

பவன்...
அதை பார்த்ததும் குஷி ஆகி
போனவன் இரண்டு கை விரல்கள் முஷ்ட்டியாக வைத்து யெஸ்..யெஸ்..
என, சிறு பிள்ளை போல கை அசைத்து சிரிப்போடு,

பாபி நீட்டிய கையோடு கை தட்டி தங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட பின்னர்,

பவன், பாபியும் ஆசையாக
தங்கள் கையிலும் அவரவர் காதலியின் பெயர்களையும் எழுதி கொண்டனர்.

IMG_20190923_111143.JPG

பவன், sweety எனஆங்கிலத்தில்,
பாபி ஸ்வரா என தமிழில்.

பெண்கள் ஏக குஷியாகி, மேலும் காதல் ஆகி கசிந்து உருகி போனது அவர்கள் இதயம்.

ஒரு பக்கம் இவங்கள் இங்கே இப்பிடி..

மறுபக்கம் வரும் விருந்தினர் அனைவருக்கும் வளையல் ,மெஹந்தி ,போட்டோ சூட், குழந்தைகளுக்கு கையில் ஹாம்லெஸ் டாட்டூஸ், சாட் கவுண்டர் என தனி தனியாக செக்க்ஷன்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது..

இன்னொரு பக்கம் சுற்றியும் உணவுகள் வரிசை, சில இளவட்டங்கள் நடனம் ஆடியபடி இருக்க அதை பார்க்க கையில் உணவு தட்டோடு ஒரு சிலர் நடனத்தை ரசித்த படி உண்டனர்.

வந்த கூட்டம் யாவும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றது. சிவாஜியும் அவரின் உடன் பிறப்புகளுடன் சென்று விட..

மொட்டை மாடியில் இவர்கள் குடும்பம்,
நிரு, ஷ்ரவன் ஜோடிகள் மட்டும் தான்.

மேலே உணவு எல்லாம் செல்ப் சர்வீஸ் என்பதால்.

வேலையாட்கள் எல்லாம் கீழே இலையில் சாப்பாடு ஓடி கொண்டு இருந்தது.

மெஹந்தியும் வைக்கும் வைபவமும்
முடியாவும்... பெண்களுக்கும் பசி வேறு வயிற்றை கிள்ளியது. எப்பொழுதோ மதியம் சாப்பிட்டது,

ஸ்வரா முகம் வாடி போயி பாபியின்
அருகில் குனிந்து,
" பப்பு பசிக்குது பேபி..?"என தான் இரண்டு கையையும் அவன் முன்னே நீட்டி உதடு பிதுக்கி கேட்டதும்.

பாபி--
அவள் கன்னம் கிள்ளி...
"ஓஓ மை பேபிக்கு பசிக்குது...
இருடா ஹனி...?"என்று திரும்பவும்...

அதே நேரம் இரண்டு பிலேட்டில் உணவோடு வந்தார் புனிதா..
லயா , ஸ்வரா அருகருகே பவன், பாபி சுற்றியும் நண்பர் கூட்டம் குட்டி கால்கள் வைத்த திவானில் அமர்ந்து இருந்தனர் .

அருகே வந்த புனிதா..
நீங்க எல்லாம் போங்க மா சாப்பிடுங்க
நான் இவங்களுக்கு ஊட்டி விடுறேன்.

அதற்குள் பவன் அவர் கையில்
இருக்கும் பிலேட்டை தான் கைக்கு
மாற்றி இருந்தான்..

"அத்தை நீங்க போயி சாப்பிடுங்க நாங்க செய்றோம் இந்த டூட்டி என்று பாபியில் கையில் ஒரு பிலேட்டை திணித்து.

ஸ்பூனில் உணவு நிரப்பி லயா உதட்டருகே நீட்டும் போது, அங்கே வந்த புவனா சிரித்தபடி மனதோடு,

" மவனே தாலியே கட்டல இப்போவே என்ன பாயசம் டா தங்கம் 😅
இப்போ அம்மா கண்ணுக்கு தெரிய மாட்டேனே அப்பிடியே அப்பனுக்கு
தப்பாம பிறந்து இருக்கீங்க நல்ல இருடா செல்லம்..". பவன் பாபி கன்னம் தட்டி நீங்களும் அப்பிடியே சாப்பிடுங்க உங்களுக்கும் சேர்த்து அனுப்புறேன் என சொல்லி சுற்றி இருப்பவரை அழைத்து கொண்டு சென்றார்.

இவர்கள் ஊட்ட ஆரம்பிக்கும் முன்னே,
போகும் நண்பர் கூட்டம்.. கோரஸ்ஸாக
ஓ ஓஹோ... என விசில் குடுத்து சிரித்து கொண்டே போக, ஷ்ரவன் நின்று,

ஜஸ்ட் 5 மினிட்ஸ் தான் பவன்,பாபி
மாம்ஸ் அடுத்த 6த் மினிட்ஸ் நாங்க
இங்க இருப்போம் சோ ஸ்டார்ட் த
மியூசிக் மாமே,
சூசகமாய் கண்ணடித்து நிருவும்
தம்ஸ் அப் 👍 காட்டி செல்லவும்.
பவன்... இடது கையால் தலை முடி கோதி thums up காட்டி சிரித்து கொண்டே திரும்ப .

லயா...
அமைதியாக அவன் செயலை பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்து,
என்ன...?
என கண்களால் கேட்டு அதே கண்ணால் உதட்டை பார்த்து திற என சொல்லியும் அவனையே பார்த்தபடி இருந்தவள்
கன்னம் பற்றி அழுத்த உதடு பிரிய உணவை ஊட்டி விட்டான்.

நான்கு வாய் மடமடவென வாங்கி கொண்டவள்.
ஸ்வரா எங்கே என தலை திரும்பி தேடியவள் கண்ணில்,

சற்று தள்ளி இருக்கும் சிறிய லனில்
இருப்பு ஊஞ்சலில். பாபி ஸ்வராவை மடி மீது அமர்த்திஇருக்க, அவன் கழுத்தை சுற்றி கை இரண்டும் தூக்கி பிடித்து, யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம் அங்கு வெளிச்சமும் குறைவு,

மெல்லிய நிலவு ஒளியில் அவர்கள் நிழல்கள் தான் தெரித்தது.
அவன் கையால் ஊட்டிய சப்பாத்தியை அவள் உதட்டால் பிடித்து அவனுக்கே பண்டம் பரிமாற்றம் செய்து கொண்டு இருந்தாள் .

ஷாக் அடித்தது போல சட்டென முகத்தை திருப்பிட, பவன் அவள் ரியாக்ட் ஆனது பார்த்து சிரிப்பு ஒரு பக்கம், கூடவே ஒரு ஏக்க பார்வையும் வீசி கொண்டு இருந்தான்.

லயா -
அந்த பார்வை வீச்சு, எதிர் கொள்ள முடியாமல் நாணத்தால் மெல்ல அவள்
இமை தானாக கீழ்நோக்க, உதடு
மட்டும் மெதுவாய் அசைத்து,

மாமா... நீங்களும் சாப்பிடுங்க..

ஒரு விரல் கொண்டு அவள் முகம்
நிமிர்த்தி "ஸ்வீட்டி என்ன பாரு டி ... "

மெல்ல இமை பிரித்து நோக்கிட,
ஆயிரம் காதை பேச நினைத்தது
அந்த பெரிய கந்த கண்கள்.

"ப்பாஆ.. என்ன பார்வை டி இது...?
எங்க டி ஒளிச்சு வைச்சு இருந்தே
இத்தனை நாள் இதை...! "

" கொல்லுது டி உன் பார்வை, ஸ்வீட்டு.."

வெக்கத்தோடு தலை குனிய போனவள் முகத்தருகே வேகமாக நெருங்கி..

ஓய் ... அழகு ராட்சசி நான் உனக்கு ஊட்டிவிட்டேன் இல்ல..? இப்போ நீ ஊட்டு எனக்கு என அதிகாரமாக கேட்டும் ,

லயா, குனிந்து அமைதியாக இருக்கவும்,

ஒரே முறை போதும் டா, இந்த காஜூ ஸ்வீட் மட்டும். பாவம் டி உன் புருஷன் கொஞ்சம் இரக்கம் காட்டு.

ஒரு ரியாக்சனும் இல்லை அவளிடம்...

( இவனுக்கு எரிச்சலாக...மகளே, இன்னைக்கு என்ன ஆனாலும் சரி டி பொண்டாட்டி..?
உன் உதட்டு ஸ்பரிசம் வாங்காம விட போறது இல்ல டி...பாரு நீயி ..?
மனதோடு கருவி கொண்டே பவன் அவளிடம் கொஞ்சி பேச)

இங்க பாரு டி , நீ ஊட்டி விட்ட சாப்பிடுவேன் இல்ல..?"

"நான் விரதம் இன்னைக்கு போ, என்ன சொல்றே ஊட்டிவிடுறியா இல்ல நான் பட்டினியா இருக்கவா..?

சடன் ரியாக்சன் 😟--லயா

"ஹான்...😮! நானா😒 என தன் கையை பார்க்க அவனை பார்க்க?

"ஹான்...!🤨நீயே தான், வேற யாரு?
ஆமா..? என்ன ஷாக்கு, வேற யாருக்கு அவ்வளவு தைரியம் உன் மாமனை
தொட, ஹூம் சொல்லுமா.

அவளுக்கு கேக்காதவாறு, "மாட்டினா டி வாத்து..."😝

"ஹூம் கம் ஆன் லட்டு...?"
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#2
முகத்தில் குழப்ப ரேகைகள் முட்டி மோதிட
மருதாணியோடு இருக்கும் விரலில் ஸ்வீட் எடுக்க போன லயாவை கை காட்டி நிறுத்த சொல்லி...

" ஊய்யி ஸ்டாப்🤚... !"

"ஹேய் டூப்புக்கு..? என்ன நாக்கால வாத்து குட்டி..? "

முறைத்தவள்...

ஹேய் மாமா வாத்து கித்துன்னு சொன்னிங்க அப்புறம் பாத்துக்கோங்க ஆமா..?" கை முகத்தருகே பூசுவது போல போக,

"ஏய்... " தடுத்தப்படி பின்னே சாய்த்து,

"அப்புறமா, எதுக்கு டி லட்டு, 😉
இப்போவே மாமன் பார்த்துட்டு தானே இருக்கேன்🤩😬 ஈ ஈ ஈ "இளித்து காட்டி,

"பின்னே என்ன செல்லம், எனக்கு மருதாணி எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லடி ஸ்வீட்டி..."

நக்கல் தலை தூக்க -லயா

"ம்... 😏நாங்க மட்டும் தினம் மூணு வேலையும் அத த சாப்பிடுறோம்
பாருங்க..."

"யோவ்...? பின்னே எப்பிடி தரட்டும் எனக்கு என்ன பத்து கை ய இருக்கு, ரெண்டு தானே இருக்கு, எல்லாம் தெரிஞ்சு வைச்சு செய்றங்க முணுமுணுக்க, ஹீம்..." 😒😏

"என்னது...? யோவ் வ...!" உன்னை அவள் உதட்டை பிடித்து இழுக்க

"ஆஆ...வலிக்குது மா..மா,"

(நல்ல வலிக்கட்டும், என் உதடுக்கு தான் அதை தொடும் பாக்கியம் இப்போதைக்கு இல்ல, அட்லீஸ்ட் என் விரலுக்கு கிடைச்ச சான்ஸ்சை நான் எப்புடி மீஸ் பண்ணுவேன் பேபி. நான் என்ன நீயா போடி என் டக்கு. )

(👆இப்பிடி பிராகெட் போட்டு வர்றது எல்லாம் மைண்ட் ரீடிங் டார்லிங்ஸ்)

வலிக்குதா, சாரிஈ ஈ... உதடை விட்டு,

ஏன் ஸ்வீட்டு, இதோ உன் அழகான ஸ்வீட் லிப்ஸ் இருக்கே 😉, இப்போ உன் கண்ணுக்கு முன்னாடி தானே உன் சுறா கிளீன் பிச்சர் ஓட்டி கட்டின,
இன்னும் என்ன டி , கம் ஆன் லைலு..

(ஹான் 😯 பாரேன் கொழுப்பை😕)

"ஆ ஆ அது, அது......? "

"ஹா..😄அது அது தான்....🤗

முகம் அஷ்ட கோணலாக போனது அவளுக்கு எப்பிடி எல்லாம் வேட்டு வைக்குறாரு இந்த மாமா..."!

" டேய் இம்சை அரசா எப்புடி டா..? நான் உன் மேல டூ.... விட்டு இருக்கேன், ஹும் 😏

ஏதோ பாவம் பார்த்து கொஞ்சம் நெருங்கி பேசுனா😒 ரொம்ப தான் ஆசை, போடா முடியாது...

வாய் மட்டும் பல்லை கடித்து முணுமுணுக்க, முகம் வெக்கம் பூசி கொண்டு இருந்தது.

சிணுங்கி கொண்டே,

"அய்யோ இந்த மரியாதை ராமனை மரியாதை இல்லாம பேசுனா இந்த அம்மாக்கு எப்புடி தெரியுமோ, குபீர்ன்னு வந்துடுவாங்க, என்ன அர்ச்சனை செய்ய,

எப்புடி சமாளிக்க என உதடு கடித்த படி திணறியவள்.
பவனின் ஏக்கம் முகம், உணவு பிடித்த
கை அவள் முன் தூக்கியே இருக்க மனது ஏதோ செய்திட, அவனையே பார்த்து கொண்டே இருந்ததில். அவளே அறியாது பிரமை பிடித்தது போல சிப்பி உதட்டை பிரித்து கட்டவும்.

குஷி ஆகி போன பவன் இருப்பதிலே சின்ன துண்டாக பார்த்து எடுக்கவும், சுதாரித்து, அவன் எண்ணம் புரிந்து அலறியப்படி,

மா.. மாமா எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும், என இளித்து கொண்டே.. அதோ பெருசா இருக்கும் ஸ்வீட் தாங்க... என்றதும்,

"கள்ளி... " இதுல எல்லாம் உஷாரா இருப்பியே...?
"இருடி உன்ன... ?"
எப்புடி க க கவ்வுக்குறேன் மட்டும் பாருடி என் வாத்து... "

பெரிய பீஸ் எடுத்து அவள் உதட்டின் இடையில் வைத்து அவளையே குறும்பான பார்வையோடு கவனித்தான்.
மெல்ல அவன் அருகே நெருங்கி வருவது பின் தயங்குவது இப்பிடியே ஒரு நிமிடத்துக்கு மேலாக தடுமாற..

"ஹீம்.. ஐயம் வைட்டிங் பேபி..? " என்றதும் தான்.
பட்டென கண்ணை இருக்க மூடி, அவன் மூச்சு முகத்தில் மோதும் நெருக்கத்தில் நெறுக்கியவள் முகம், ஒரு இன்ச் இடைவெளி தான், பட்டென முன்னே ஏதோ தடுக்கவே பட்டென கண்ணை திறந்து பார்க்க...?

பவன் கை குறுக்கே தடுத்து நின்றது.
அவ்வளவு நெருக்கத்தில் பார்வைகள் மோதி கொள்ளவும் , குறுக்கே இருந்த அவன் கை விரல் அவள் உதட்டுக்கு வெளியே இருந்த ஸ்வீட்டை அப்பிடியே வாய்க்குள் தள்ளி விட்டான்,

அவள் தோள் இரண்டில் கை நீட்டி கோர்த்து கொண்டு . சிரித்த முகம், கனிவு நிறைந்த கண்களோடு அவள் நெற்றி முட்டிட.

சிந்தனையில், புருவ முடிச்சுடன் லயா,

ஓய்...லூசு பொண்டாட்டி என்னவோ லிப் லாக் பண்ண போற போல அவ்வளவு கொடுமையா முகத்தை வைச்சு இருக்கே,

முகம் வாட... அவ்வளவு கஷ்டம் மா இருக்கு இல்ல உனக்கு, ஒரு சின்ன பீஸ் எனக்கு ஊட்டி விட எவ்வளவு தயக்கம் டி உனக்கு,

ஓகே விடு... எனக்கு புரியுது , இன்னும் உன் கோவம் மிச்சம் இருக்குன்னு, உன்னோட ஒதுக்கம், நீ அளந்து பேசும் போது எனக்கு புரியாம இல்ல டி,

உன்னை சங்கடம் படுத்தி எந்த சந்தோஷமும் எனக்கு தேவையும் இல்ல உனக்கு அதை தரவும் நான் விரும்பலை
காத்திருக்கேன் டா,

ஒய்யி,
என்னிடம் என்ன குறை இருந்தாலும் அதை பெருசாவே எடுத்துக்க மாட்டார் என்று பொண்டாட்டியும்...

என் பொண்டாட்டி எனக்கு எந்த விஷயத்துக்காகவும், யாருக்காகவும் என்னை விட்டு குடுக்க மாட்ட, எந்த குறையும் வைக்க மாட்டான்னு சொல்லும் புருஷனும் கிடைச்ச வரம் டா....

நான் அந்த புருஷனாக இருக்கவே விரும்புறேன் லைலு,
நீ எப்போ இதை சொல்லுவே, சொல்லுவே இல்லடா, அவள் கலங்கிய பார்வையை பார்த்து கலக்கமாக கேட்டதும்,

விழிநீர் உருண்டு விழ தானாக அவள் கண்முடி திறந்து பதில் போல சொல்லவும்,
மெல்லிய சிரிப்பில் அவளுக்கு ஊட்டி விட அடுத்த வாய் ஊட்ட வந்த கையை அவன் உதட்டருகே, கை முட்டியல் தள்ளி உன்ன செய்யவும்.. சாப்பிட்டு முடித்து நண்பர்கள் கோஷ்டி வரவும் சரியாக இருந்தது.

மாலையில் பொழுதில் தொடங்கி
இரவு 12 மணி வரை சங்கீத்
மெஹந்தி இனிமையாக கழிந்தது .

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

2 ம் நாள்...

(இனி இரு ஜோடியும் மாப்பிள்ளை அழைப்பு அன்று தான் பார்த்து கொள்ள முடியும்).

பெண்கள் மட்டும் கூடி பூந்தமல்லி சென்று, புவனா வீட்டில் முகூர்த்த புடவை வைத்து குலதெய்வம் வழிபாடு செய்தனர்.

அதற்க்கு பிறகு, அடுத்த கட்ட வேலைகள், மாப்பிளைகளுக்கு நலுங்குக்கு வேண்டிய ஆர்கனைஸ், உடை நகை ட்ரையல் etc etc...
என இங்கே பரணியோடு பவன் பாபி சுற்றினார்கள்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

3ம் நாள்....

தாய் மாமன் நலுங்கு


( தாய் மாமன் இருக்குறவங்க கண்டிப்பா செய்யும் சடங்கு )

திருமணத்திற்கு இரண்டு மூன்று
நாள் முன்னே மணமக்கள்
இருவருக்கும் அவர்களுடைய
தாய் மாமன் தன் உடன் பிறந்த
சகோதரி பிள்ளைகளுக்கு நலுங்கு
வைத்து செய்யும் சீர் ,உரிமை, கடமை.

எத்தனை உறவுகள் இருந்தாலும் தனக்கும் தான் பெற்ற பிள்ளைகளுக்கும் தன்
தாய்வீட்டிலில் இருந்து கிடைக்கும் இது போல மரியாதை தான் கெளரவம்,
பலம் ஒரு பெண்ணுக்கு.

ஒரே நாளில் இருவருக்கும் நலுங்கு முதலில்...

💛மாப்பிள்ளை நலுங்கு❤️

அன்று காலை மணி 8:30...

காலை பரணி வீட்டில் பவன் பாபிக்கு நாலுக்கு வைக்கும் வைபவம், மாப்பிள்ளை இருவரும் பட்டு ஷார்ட் குர்தாவில் கம்பிர தேஜஸ்ஜோடு வந்து அமர்த்தும்.

IMG_20190923_123418.JPG IMG_20190923_123318.JPG

முதலில் தாய்மாமனாக பரணியும் புனிதவும் ஜோடியாக வந்து இளம் சிகப்பு மெல்லிய ரோஜா மலை போட்டு சந்தனம் பூசி குங்குமம் இட்டு, நகையாக கைக்கு சிங்கம் முகம் வைத்த யானைமூடி காப்பு. வைர மோதிரம்.
இருவருக்கும் அணிவித்து, அட்ச்சதை தூவி பரணியும் அவர் தாய்மாமன் கடமையை செவ்வனே செய்தார். மெல்லிய நாதஸ்வர இசையில் அமைதியாக உறவு பெண்கள், நிரஞ்சன் ஷ்ரவன் அவர்கள் மனைவி இவர்களை சுற்றி கொண்டு கேலி கிண்டலாக அவர்களும் நலுங்கு வைத்து ஒர் வழியாக முடிந்தது ஆண்களுக்கான நலுங்கு.

மாப்பிள்ளைகள் பரணி வீடு வரும்
முன்னே...
மணப்பெண்களை சிவாஜியின்
சகோதரி மருமகள்கள் வந்து மாலை
அவர்களுக்கான நலுங்கு விழாவுக்கு முன் ஏற்பாடாக அழைத்து சென்று விட்டனர். பிறகு பெரியவர்கள் வந்து இதில் கலந்து கொண்டனர்.

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

அன்று மாலை மணி 6:00...

லயா ஸ்வராவுக்கு தாய்மாமனாக முன் நின்று எந்த குறை தெரியாமல், சிவாஜி மிகவும் எளிமையாக ஆனால் நிறைவான
பங்ஷ்ன் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

இங்கே பாபியும் பவனும் ஒரே அட்டகாசம், மதியம் வரை இவர்களோடும் போனில் மணப்பெண்களோடும் அரட்டை அடித்த நிரஞ்சன் அஷி, ஷ்ரவன், சைந்தவி,

மாலை சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வரவும் அங்கு நலுங்கு வீட்டுக்கு கிளம்ப ஆயத்தம் ஆக,

மாப்பிள்ளைகள் இருவரும் தாங்களும் வருவதாக ஒரே பிடிவாதம் செய்ய,
அவர்களை அனுப்பி வைத்து விட்டு,
இருவரையும் அடக்கி வைத்தார் புவனா....

முகம் தூக்கி வைத்து இருந்த பவன் பாபியை பார்க்க ஒரே சிரிப்பாக
இருந்தது அவருக்கு..

"என்ன புள்ளைங்க நீங்க, ஹும்... "! போனில் தான் மணிக்கணக்காய் பேசியும் ஒரு ரெண்டு நாளு கூட பார்க்காமல் இருக்க முடியலைன்னா,எப்புடி மா " -புவனா

"அப்போ உங்க அப்பங்க எல்லாம் எப்பிடி இருந்து இருப்பங்க ராசா .. "? புவனா கேள்வியாக , அவன் அருகே சென்று தலை கோதி கன்னம் பற்றி நிமிர்த்தி கேட்டதும்

"மம்மி அது அப்போ.. 😒 இது இப்போ, போமா....

பாபி-- ஆமா ஆமா மம்மி... பிலிஸ் புவ்வு மா
கொஞ்சம் கருணை காட்டுங்க..

புவனா... "ராஜா என்னமா இது சின்ன குழந்தை போல அடம் பிடிக்கிறிங்க.. "! இப்போ அங்க போக கூடாது கண்ணா.."

ஏன்... போக கூடாது நாங்க என்ன un touchables ah...
பாபி பவனை உசுப்பி விட.

புவனா...

"பாபி உன்னோட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிட்டு இருக்கு, கொஞ்சம் உன் வலை ரெண்டு நாளைக்கு சுருட்டி வைடா மா...
இது சாங்கியம், புரியுதா செல்லம் பெரியவங்க சொன்ன அதில் ஒரு அர்த்தம் இருக்கும் டா ராசா,
பாபியின் கன்னத்தில் லேசா ஒரு அடி வைக்க...
"ம்மா..? சும்மா சும்மா என்ன சொல்லாதீங்க புவனம்மா.... "!முகத்தை குழந்தை போல வைத்து,

"ஆரம்பிச்சது மச்சி தான் மா.."

" நான் சும்மா தான் அடக்கி வாசிச்சிட்டு இருந்தேன்.. "

பவன் அவனை முறைத்து, " டேய் டேய் மித்ரா துரோகி போடா..போடா...?

அப்போ நீ வராதே போடா, நான் மட்டும் போறேன்..

"ம்மா.....
நீங்க எல்லாம் வேஸ்ட் மா, எங்க அப்பா பாவம், இப்போ தான் தெரியுது நீங்க என் அப்பாவை எப்பிடி தண்ணி குடிக்க வைச்சு இருப்பிங்கன்னு,

திரும்பி அமர்ந்து, நின்ற தான் தாயை காட்டி பிடித்து வயிற்றில் தலை சாய்த்து,

"ம்மா... நான் போயி யாரும் பாக்காம தூரம் இருந்து எட்டி மட்டும் பார்த்துட்டு வரேன் மா பிலிஸ் மா.

பவன் தந்தை பற்றி சொன்னதும் அவரின் நினைவலைகள் துரத்த முகம் வாடி போனது புவனாக்கு ..
பாபி கவனித்து பவனை இடிக்க, நிமிர்ந்து பார்த்த பவன்..

இவன் மூடி கோதிய படி எங்கோ நிலைத்த பார்வையில் நின்று இருப்பவரை பார்த்தது தான் தவறு புரிந்த தலையில் அடித்து
மேலும் அவரை காட்டி பிடித்து கொள்ள, பாபியும் வந்து சேர்த்து கட்டி கொள்ள -பவன்

"ம்மா.. நாங்க சும்மா சொன்னோம் மா நாங்க ஏன் மா பொண்ணுங்க நலுங்கு எல்லாம் போயி பாத்துட்டு,சா சா.. எங்களுக்கு என்ன வேற வேலையே இல்லையா ,

என்ன பாபி..."?

" ! " -பாபி

"மாம்ஸ் வாட நாமா அப்பிடியே
பீச்சில் சுண்டல் போட்டு வரலாம்..."!!!
சீ சீ.."? சாப்பிட்டு வரலாம்.. குழப்பமாய் உளறி கொட்டி எழுத்து போக நினைக்க..

அவர்களை பிடித்து இழுத்து அடக்கி அமர்த்தி...

"ராசா..."? நீங்க எங்கயும் போயி சுண்டலுக்கு சண்டே அதுவும் சண்டை எல்லாம் போட வேணாம் தங்கம்,
கொஞ்சம் அடங்கி இங்கேயே இருங்க நான் போயி உங்களுக்கு காப்பியோட சுண்டக்காய் சுண்டல் " ச்சா...!", 🙆

சுண்டக்கய்யா...?? மாஆஆ ஏன் மா ..? பாபி வாடா எங்கன பொந்து இருந்த போயி
ஒழிஞ்சுக்குவோம்...

புவனா விழுந்து விழுந்து சிரித்து ..

"கொரங்கு பிள்ளைங்களா...
இவனுங்க கூட சேர்த்து எனக்கும் வாய் இழுத்துகிட்டு போகுது..? " சோளம் சுண்டல் எடுத்துட்டு வரேன் மா ...

பாபி.. டேய் மாம்ஸ் சுண்டைக்காயில் இருந்து தப்பிச்சோம் டா.. ஒரே சிரிப்பும் அரட்டையும்மாக அவர்களோடு அண்ணன் வீட்டில் இருந்தார் புவனா...

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
மாலை மணப்பெண்களுக்கு நலுங்கு... அது நாளை முடிந்தால் யூடி வரும் 🙏
 

Maha

Author
Author
SM Exclusive Author
#6
வாங்க வாங்க banu dear🤩🤩😘💖🙏🙏 நம்ப கல்யாண வீட்டுக்கு முதல் மூத்த மகளாக நீங்கள் வந்ததுக்கு பெருமை கொள்கிறது இந்த பவன் லயா கல்யாணம் குடும்பமும் மஹாவும் வருக வருக நன்றிகள் பல 👍😉
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top