• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் -30(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
?மணப்பெண்கள் நலுங்கு ❤

3ம் நாள், மாலை 6:00 மணி ...

சிவாஜி ...
மாமனார் இன்று,
தாய்மாமனாக முன் நின்று எந்த
குறையும் தெரியாமல்,மிகவும் எளிமையாக ஆனால் நிறைவான
பங்ஷ்ன் ஏற்பாடு செய்து இருந்தார்.

IMG_20190806_195210.JPGஅவருக்கு இது புதிது முதல் முறையாக தான் வீட்டில் நடக்கும் விழா. எதுவும் விளங்கவில்லை அவருக்கு, சகோதரி, மருமகள்கள் உதவியோடு,

இருவருக்கும் தனி தனியாக பட்டு ஆடைகள்,கழுத்துக்கு நவரத்தின
நகை ஆசிர்வதித்து
கொடுத்து, அணிந்து வந்ததும்,
IMG_20190924_142611.JPGIMG_20190924_143252.JPG ட்வின்சிஸ்டர்ஸ்


சிவாஜி அவரே முன் வந்து,இருவரையும் தன் தோள் வளைவில் அணைத்து அழைத்து வந்து சபை முன்னே அமர வைத்தவர் , நின்று ஆசையாக இரு மருமகளுக்கு அவரே முதலில் நலுங்கு இடுவதை பார்க்க பார்க்க, புனிதாவுக்கு எவ்வளவு கட்டு படுத்தியும் கண்ணீர் உருண்டு, திரண்டு விழுந்தது ,

அருகே சற்று தள்ளி கை காட்டி மனைவியையும், மகள்களையும் மாறி மாறி பார்த்தவாறு நின்று இருந்த பரணியின் கண்களும் சிவந்து போயி இருந்தது. பெற்ற மனம் தங்கள் மகளுக்கு நடக்கும் விழா ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும்.

இரு மகள்கள் அவரின் உலகம் ஆயிற்றே இனி ஒரு மகள் இந்த வீட்டின் உரிமையாக சொந்தம் ஆக போகிறது என்ற மனநிலையில் உதடு கடித்து தன் பாச உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தார் பரணி ..

இதை கவனித்த சிவாஜியின் இரண்டு சகோதரிகள் புனிதா அருகில்,
(தாய் வழி உறவுகள் அவர் அருகே இருந்தும்)
இருபக்கம் வந்து அணைத்து,

"புனி மா..."!,
"ஏன் மா..? சந்தோசமா ரசிக்கறது விட்டு இப்பிடி சின்ன புள்ள போல அழுதுட்டு,
பாரு புள்ள ரெண்டு பேரும் உன்னையே தான் பாத்துட்டு இருக்காங்க, அவங்க முகமும் வாடி போச்சு பாரு மா.
இரு அக்காவும் பரிவுடன் பேச..

புனிதா விசும்பிய படி ..

"இல்லிங்க அக்கா... இது சந்தோச அழுகை தான், எனக்கு இது வரைக்கும் கூட பிறந்த உறவுகள் இல்லன்னு எந்த ஏக்கம் தெரியாம அவரும் என் பொண்ணுங்களும் என்ன சுத்தி எப்பவும் கவசம் மாதிரி இருப்பாங்க..

இன்னைக்கு சிவா அண்ணா எனக்காக இதை எடுத்து நடத்தும் போது அந்த அன்பு என்னை கொஞ்சம் அசைச்சு பாக்குது, அது தான்..
எனக்கு ரொம்ப சந்தோசம் தான் கா, என் பொண்ணுங்க உண்மையாவே ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காங்க, இப்பிடி ஒரு அன்பான உறவுகள் யாருக்கு கிடைக்கும்.

அதுவும் சிவா அண்ணா போல பார்த்து பார்த்து செய்யும் ஒரு மாமனார் கிடைச்சது என் பொண்ணு அதிர்ஷ்டசாலி தான் என்றதும்.
சிரித்து கொண்டே அக்காமார் இருவரும் புனிதா தலையை கோதி தோளில் சாய்த்து அணைத்து தங்கள் அன்பையும் வெளி படுத்தினர்.

சிவாஜி பெரிய அக்கா...
உண்மை தான் புனி அவனை போல பாசம் காட்ட யாராலும் முடியாது , நாங்களும் கல்யாணம் பண்ணி நாடு விட்டு நாடு போயிட்டோம் அதுக்கு பிறகு சின்ன மனஸ்தாபம், எங்க தம்பி நாங்க சொன்ன பொண்ணு வேண்டான்னு, சொல்லாம கொள்ளாம காதல் திருமணம் பண்ணிட்ட அப்போ கொஞ்சம் விரிசல் ஆச்சு.. "!
உசிப்பி விட்டு எங்க வீட்டு பெருசுங்க பண்ண வேலை..

பேசாம இருந்தோம், இருந்தாலும் எங்க தம்பி மனைவி தாங்க கம்பி மா, அவ இருக்கும் வரை எங்களை அப்பிடி பகைச்சு இருக்க விடல அடிக்கடி போன் பண்ணி எங்க மனசை மாத்திட்டா மகராசி கடவுள் அவளுக்கு ஆயுசு தான் கொடுக்கல..
என் தம்பி, புள்ளைய வைச்சுகிட்டு ஆசை பட்ட மனைவியும் இல்லாம ரொம்ப கஷ்டபட்டுட்டன் மா, எவ்வளவோ சொன்னோம் மறு கல்யாணம் பண்ணிக்க சொல்லி.....

"முடியவே முடியாது என் மனைவி இடத்தை நான் யாருக்கு குடுக்க முடியாதுன்னு.." சொல்லிட்டன்..! , இதோ இப்போ வரைக்கும் அவன் புள்ளைக்காக வாழ்ந்துட்டு இருக்கான் என் தம்பி , மனம் கனத்து சொல்ல,

சின்ன அக்கா கண்ணை துடைத்து கொண்டே ..
ஆமா புனிமா, இப்போ தம்பி பிசினஸ்ன்னு ஹைட்ரபாத் வந்த பிறகு அடிக்கடி பார்க்க முடியுது, அது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு,
பெரிய அக்கா தான் பாவம். சிவாக்கு பெரிய அக்கான்னா ரொம்ப பிரியம் புனிதா அவங்க வளர்த்த தம்பி இல்லியா, அவனுக்கு ஆறுதலாய் இருக்க முடியலனு கவலை அதிகம் ,

அக்கா கணவர் ரொம்ப கோவக்காரர் .அவர் தங்கச்சிய சிவா கல்யாணம் பண்ண மறுத்த கோவம் தான். எப்பிடியோ இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு. அப்போ கூட அவரு வரல பாரு மா ,

இப்போ பாபி தான் அவன் உலகம், மருமகளையும் மகளை போல் தானே பாத்துக்குவா கண்ணை தொடைச்சிட்டு
நீ வா டா, பொண்ணுங்க கிட்ட போயி
நில்லுமா குழந்தைங்க முகம் வாடி
போச்சு. புனிதாவை இழுத்து கொண்டு
போனார்கள்.

நாங்களும் சளைத்தவர் இல்லை அன்பு கட்டுவதில் என்று சொல்லுவது போல் இருந்தது அவர்களில் நடவடிக்கை... புனிதா மிகவும் நெகிழ்ந்து போனார்.

அதற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக, வந்த பெண்கள் நலுங்கு வைத்து திருஷ்ட்டி களித்து நிறைவு செய்தனர்.
????????????

4 ம் நாள்....

பவனும் பாபியும் அன்று காலையே அவரவர் குடும்பங்களோடு தங்கள் திருமணம் நடக்க போகும் பூர்விக
ஊருக்கு கிளம்பி விட்டனர்.

இனி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத கட்டுபாடு . அன்று ஒரு நாளுக்கே தவித்து போயினர் வேறு வழி....
இன்னும் 24 மணி நேரம் காத்திருப்பு
வேறு இருக்கே ...

அது வரை காற்றோடும், கைபேசியில்
தான் உறவாட முடியும். பெரியவர்களிடம் இருந்து கண்டிப்பான தாடை விதிக்க பட்டுவிட்டது.
அன்று மாலை நிரஞ்சன் , ஷ்ரவன் குடும்பம் வருவதாக வாக்கு கொடுக்கவும், அவர்களுக்காக காத்து இருந்தனர் பவன், பாபி.
சிவாஜியும் அதிகம் பூந்தமல்லி வீடு வருவதில்லை என்றாலும் ஆட்கள் அமர்த்தி பாபி சுத்தமாவே வைத்து இருந்தான் வீட்டை.
பவன் வரும் போது எல்லாம் தான் வீட்டையும் ஒரு பார்வை பார்த்து செல்வான். முன்னேற்பாடாக தற்போதும் ஆட்கள் அமர்த்தி அவர்கள் வீடு வாழை மரம் மாவிலை தோரணங்களோடு பிரகாசமாக இருந்தது. இவர்கள் வருகையால் மேலும் வீடு நிறைத்து இருந்தது .

மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு பண்ணை வீட்டில் நடத்த இருப்பதால்,அதற்க்கு செல்ல வேண்டிய ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர்.

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

5 ம் நாள்...

( பண்ணை வீட்டில் மாலை மாப்பிள்ளை வரவேற்பு)

.
மணமகள் இல்லம் ...
விடியற்காலை முன் வாசலில் 5 பெண்கள் பந்தக்கால் வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு பூஜைகள் ஆனதும். அதே நேரம் மாப்பிளைகள் வீட்டிலும் இதே பூஜை நடத்தப்பட்டது.

அன்று மத்தியமே திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளோடு, பயணம் ஆனார்கள்..
மத்திய சாப்பாட்டுக்கு நேரத்திற்கு பரணி குடும்பம் பண்ணை வீட்டிற்கு போய் சேர்த்தனர்.

புவனா இல்லத்துக்கு லயா மருமகளாக திருமணம் முடித்த பின் தம்பதிகளாக முகூர்த்த தேங்காய் உடைக்க தான் நாளை மத்தியம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

அது வரை அவர்களும், சகல வசதிகளோடு, நான்கு குடும்பம் தங்கும் அளவுக்கு அறைகள் இருக்கும் பண்ணை வீட்டிலே தங்கும் அனைத்து ஏற்பாடு செய்து வைத்து விட்டார் புவனம்மா.

இவர்களும் மாலை மாப்பிள்ளை வரிசையோடு வரவேற்புக்கு வந்து,
மறுநாள் எண்ணெய், நலுங்கு சாங்கியம் எல்லாம் முடித்து குளித்து அலகாரம் செய்து கொண்டு மணமேடைக்கு செல்ல வேண்டும் ஜோடிகளாக )

மாலை...

பண்ணை வீடு, கோவில் முன்னே அமைத்த திருமணமேடை , பவன், பாபி ஈஸ்வர் மாளிகை வண்ண வண்ண விளக்கு, பூ அலங்காரம், வாழை, தென்னை குருத்து, மா, பலா .ஓலையில் வேலைப்பாடு செய்து இருபக்கமும் தொங்க விட்டு கலை கட்டியது.

Screenshot_20190814_231520.jpg
IMG_20190806_195004.JPG

IMG_20190924_125248.JPG
IMG_20190924_125527.JPG
IMG_20190806_195117.JPG

குல கோவில், வண்ண வண்ண விளக்குகள் போட்டு வைர கற்கள் பாதித்தது போல் மின்னியது கோபுரம்.

அளவாக அழைத்த உறவினர், அவர்களுக்கு என தங்கிட, உணவு, கல்யாணத்துக்கு என வர போக வாகன வசதிகளும், புவனா அவர்கள் வீட்டின் அருகே இருக்கு ஹோட்டல் ரூம்ஸ் மொத்தம் புக் செய்து வைத்து இருந்தனர்.
அந்த ஊரில் இருக்கும் மொத்த குடும்பங்களுக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது .

??????????????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
?‍?மாப்பிள்ளை அழைப்பு ?

பண்ணைவீடு...
மாலை மாப்பிள்ளை வரவேற்பு.
Screenshot_20190814_231520.jpg

மாலை மாப்பிள்ளை இருவரும் ஒன்று போல் வேறு வேறு நிறத்தில் சிம்பிள் வேட்டி குர்தா அணிந்து கம்பீரமாக காரில் வந்து இறங்கவும்,

வரிசை ஏந்திய பெண்களோடு முன்னே செல்ல, பின்னே இவர்கள் நண்பர்கள் கூட்டத்தோடு பண்ணை வீட்டு வாசல் வந்து நின்றதும்,
ஆழம் சுற்றி வரவேற்று,
பின் தோட்டத்தில் அவர்களுக்காக போட பட்ட இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
IMG_20190924_130037.JPG
IMG_20190924_130327.JPG
சிறிது நேரத்துல மணப்பெண்களும் மெல்லிய லெஹன்கா உடையில் மெல்லிய வைர நகைகள் அணிந்து அழகு தேவதையாக குனிந்து, நாணம் தின்ன, நடை பின்ன அசைந்தாடும் முல்லை தேர் போல வந்து வெட்கத்தோடு அவர்கள் அருகே சற்று தள்ளி அமர, விடவில்லை இவர்கள்.

உட்காரும் முன்னே இடையில் கை குடுத்து பாபி நெருக்கி அமர செய்ய, பவனோ அவன் இழுத்து இழுப்பில் அவன் பாதி மடியில் பொத்தென அமர்ந்து பின் சுதாரித்து , அவனை முறைத்து விட்டு தலை குனிந்து தள்ளி அமர்தல்.

2, 3 நாள் பார்க்காத ஏக்கம் அவர்கள் கண்ணில் நன்றாகவே தெரிந்தது.
இருக்காதா பின்னே ?

கொஞ்சம் நேரம் அவங்களை தனியா விட்டுருவோம் என்ஜாய் பண்ணட்டும்..

நாம சுத்தி என்ன நடக்குது பாப்போம்.... ???

தோட்டம் சுற்றியும் வண்ண விளக்குகள், 50 பேர் அமர்வதற்கு ரவுண்டு டேபிள் இருக்கையோடு, வரும் விருந்தினர்க்கு போப்பே ஸ்டைலில் உணவு அமைப்பு. மைல்டு மியூசிக், மிகவும் ரம்மியமாக இருந்தது அன்று இரவு.

ஊர் மக்கள் எல்லாம் மணமக்களை காண ஆசையாக வந்து பேசி, உண்டு மகிழ்ந்து சென்றனர்.

போகும் போது அவர்களுக்கு திருஷ்ட்டி கழிக்க சொல்லாமல் செல்லவில்லை வந்தவர்கள்.
அவ்வளவு அழகாக இருந்தனர் இரு ஜோடியும். அவர்களும் கள்ளு உண்டா மிதப்பில் இருக்க கூடவே நட்பு வட்டமும் வந்து விடவே சொல்லவும் வேணுமா.

ஒருவரை ஒருவர் சீண்டி விட்டு, மணம் ஆனவர்கள் நிரு, ஷ்ரவன் அவர்கள் இனிமையான திருமண அனுபவங்களை கேட்டு துளைத்தும் ஒரே இளமை பட்டாளம் கொண்டாட்டம் ...
இன்னும் கண்ணுக்கு குளிர்வாக ஜோடி ஜோடியாக நடனம் வேறு..
இனிதே அந்த நிகழ்வும் நிறைவாக முடித்தது..

அத்தோடு இல்லாமல் இரவு 1:00மணி வரைக்கும் மொட்டை மாடி தோட்டத்தில் ஐஸ்கிரீம், ஜூஸ், புருட்ஸ் சாலட் என மினி ஜூஸ் பாப் அங்கே இருந்தது.
.
நாளை விடிந்தால் திருமணம் என்ற சந்தோஷம் நினைவில் நேரம் ஆனது கூட தெரியாமல் அடுத்து ஹனிமூன் எங்கே என்ன பிளான் என்று பேசி இரண்டு பெண்களையும் நானி சிவக்க விட்டனர் கூட இருந்த நட்பு கூட்டம்.
தங்களை மறந்த பேச்சில் இருந்தனர். பெரியவர்கள் குரல் குடுக்கும் வரை....

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

6 ம்... நாள்...

முகூர்த்தம், வளர்பிறையில் ஒன்பதில் இருந்து பத்தரைக்கு திருமணம்.

(பொழுது புலர்ந்தும் புலராத விடியலில் 3றில் இருந்து 4 1/2 பிரம்ம முகூர்த்தம்)

காலை....

நிரஞ்சன் ஷ்ரவன் நேற்று, சற்று இருள் சூழ்ந்த நேரத்தில் வந்ததால் சுற்றி இருக்கும் அழகு அப்போது புலப்படவில்லை அவர்களுக்கு.

காலையில் அலாரம் அடித்து எழுந்து வெளியே வர, சுற்றியும் பனி படர்ந்த பசுமை, கீழே எட்டி பார்க்க

ஒரு பக்கம் சமையல் புகை, காய்கறி குவியல் ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக நடமாட்டம், கறிகாய் நறுக்கி கொண்டு சில பேர், வாசலில் மாவிலை பூ சரங்கள், தோரணம் கொத்து கொத்தாக சிலர் கட்டி கொண்டு இருந்தனர்.

Screenshot_20190901_193311.jpg

மறுபக்கம் எண்ணெய் நலுங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளை அங்கே குளித்து முடித்து வந்த புவனா, புனிதா வேலை ஆட்களையும், உறவு பெண்களையும் கூட வைத்து விரட்டி செய்து கொண்டு இருந்தனர்.

சுற்றியும் இன்னும் விளக்கு எரித்து கொண்டு இருந்தது. விடியலும் விடிய நான் வர வா என எட்டி பார்க்க துடிக்கும் சூரியனை எதிர் பார்த்து காத்து இருந்தது... ...

மாடி அறையில் அவர்கள் இருந்த அரை கதவை திறந்து வெளியே வந்தால் வெட்ட வெளியாக பெரிய பால்கனி.
மேல் இருக்கும் எல்லா ரூம்க்கு ஒரே நீளமான, ஓபன் வரண்ட அது.
கீழே தனியாக கெஸ்ட் ஹவுஸ்.

Screenshot_20190901_202612.jpg


நிரு வெளியே வர, அவன் பின்னே அடுத்த அறையில் இருந்து ஷ்ரவனும் வந்தான் கையை முறுக்கி சோம்பல் முறித்து கொண்டே வெளி சுவரோரம் வந்தவன் அப்பிடியே கீழே பார்க்க, பார்த்தது பார்த்த படி வாய் பிளந்து நின்று விட்டான் .
நிரு சிரித்து கொண்டே அவன் அருகே வந்து தோள் மேல் கை போட்டு என்ன ஷ்ரவன் அப்பிடி ஒரு ஷாக்கிங்...

நிரு மாம்ஸ்...! எங்க ஊர் கோயம்பத்தூர் பொள்ளாச்சி பக்கம் எல்லாம் பசுமை இயற்கை அழகு கொட்டி கிடைக்கும் ஊர் ஆக்கும் ...

அதே போல பசுமையா இந்த ஊரில் இப்போ தான் பாக்குறேன் நான். படிக்க வந்தப்போ சென்னையை மட்டுமே வட்டம் போட்டு சுத்திகிட்டு இருந்த ஆளு, வேற சுற்றி எந்த ஊரு சைடும் போனது இல்ல தெரியாது...

இங்க இப்பிடி ஒரு அழகு கொட்டி கிடைக்கும் ஊரும் இருக்குன்னு இப்போ தானே தெரியுது.

அப்பா.... சினிமாவில் பாக்குறது போல இருக்கும் நிரு மாம்ஸ் என கன்னத்தை தேய்த்து கையை கட்டி கொண்டான்.
காலை சற்று குளிர்காற்று வீசவே குளிருட்டியது ஷ்ரவனுக்கு...

வாய் பிளந்து ரசித்து கொண்டு இருந்தனர்.

குளித்து முடித்து மணமக்களையும் விரட்டி எழுப்பிவிட்டு, கீழே வந்து வீட்டை கண்களால் சுழட்டி பார்த்து கொண்டே நிரு அஷியுடம்,

பவன் தாத்தா மார்கள் நல்ல ரசனை உள்ளவங்க இல்ல புஜ்ஜி.
அந்த காலத்திலேயே எப்பிடி தேக்கு இளைச்சி கட்டி இருக்காங்க பாரு மா.
அவளும் அவன் கை வளைவில் சாய்ந்து நடந்தபடி ஆம் என ஆமோதித்தாள். பேசிய படியே ஷ்ரவன் ஜோடியும் வளம் வந்தனர்.

பழைய காலத்து ஓடு போட்ட பெரிய அகலமான மாடி வீடு பெரிய பெரிய பளிங்கு போல மின்னிய மரத்தூண்கள்.

திண்ணை வைத்து இரு பக்கமும் பெரிய ஜன்னல்கள், சுற்றியும் நிறைய இடம் விட்டு ரெட் oxside தரை... முன்னே அகலமான இடம் இருந்தது..

மறுபக்கம் பெரிய கார் செட் உள்ளே . இரண்டு டிரக்ட்டர் நிறுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்து இவர்கள் வந்த வாகனங்கள்.

பண்ணை வீட்டின் சுற்றியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் குளிச்சியாய், ரம்மியமாக சுற்றிலும் எங்கும் பசேல்....
ஒரு பக்கம் வாழை தோப்பு ஒரே சீராக,
மறுபக்கம் வீட்டை ஒட்டியே மாமரம், கிணறு அடுத்து சுற்றியும் ஏக்கர் கணக்கில் வயல் வெளி ...

மணமக்கள் வரவே.. குடம் குடமாக மஞ்சள் மூலிகை சேர்த்த தண்ணீர் கொண்டு வந்து வைத்து சென்றனர் உறவு பெண்கள்.
ஜோடிகள் நால்வரும் பட்டு சரசரக்க வந்து நிற்க காண கண்கோடி வேண்டும்.
நால்வரும் கொள்ளை அழகில் வெண் பட்டு உடையில் பளிச் என்று இருந்தனர்...

பின்னே நடுவே துளசி மடம், சற்று தள்ளி கிணற்றடி அருகே அகலமான இடத்தில் நாற்காலி போட்டு ஜோடியாக அமர செய்து, சுற்றியும் நண்பர் கூட்டம் நிற்க,

அருக்கம்பூல் கொத்து கொண்டு எண்ணெய் நலுங்கு இட்டு மஞ்சள், சந்தனம், நலுங்கு மாவு கலந்து கன்னம், கை கால்கள் என்று உடல் எங்கும் பூசி,

Screenshot_20190901_195504.jpg
சுற்றியும் பெண்கள் நின்று நீரில் எல்லா வாசனை மூலிகைகளும் சேர்த்து கலந்த வைத்த நீரை ஊற்றி, ஒரே கேலி கொண்டாட்டம் ஒருவருக்கு ஒருவர் உடல் எங்கும் பூசி விட்டு,

IMG_20190827_115419.JPG
(இதோ சாம்பிள் பிச்சர் )

வெள்ளை பட்டு மஞ்சள் பட்டு ஆகி ஒரு வழியாக அவரவர் அறைக்கு நண்பர் தோழிகள் பட்டாளத்தோடு விரட்டி புரட்டி உள்ளே தள்ளி குளிக்க செல்ல..

கல்யாண பட்டாடைகள் நகைகள் கொடுத்து அவர்களை அணிய வைத்து அலங்கரம் செய்து தயார் செய்ய லயா ஸ்வராவுக்கு உதவியாக அஸ்வதா , சைந்தவியும்.

பவன் பாபிக்கு நிரஞ்சன், ஷ்ரவன் மாப்பிள்ளை தோழனாக அவர்கள் அறையில் கூடவே இருந்து அலங்கரித்து கொண்டு இருந்தனர்....

சரியாக முகூர்த்தம் நேரத்திற்கு 1 மணி நேரம் இருக்கும் போது கல்யாண மேடை அமைத்த இடத்துக்கு வந்து இறங்கினர் அதற்குள் நிறைந்து இருந்தது அந்த திருமணம் ஹால்.

முன்னே வாத்தியங்கள் இசைக்க,
மாலையிட்டு முன்னே ஜோடி ஜோடியாக கைகோர்த்து மேடை நோக்கி நடக்க, பின்னே மணமக்கள் தோழன் தோழி நெருக்கிய உறவுகள் சூழ மண மேடைக்கு வந்து விழுந்து வணங்கி வரிசையாக ஜோடிகள் அமர்ந்ததும் .
அய்யர் அக்கினி வளர்த்து மந்திரங்கள் ஓத.... .

Next ud திருமணம், பவன் புது மனைபுகுவிழா, ஹனிமூன்...

தொடரும்...
 




Last edited:

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
சூப்பராக இருந்தது எபிக். கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது. 30(2) அப்டேட்ல எல்லாமே மஞ்சல் கலரில் கலக்கலாக இருந்ததுப்பா(y):love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சூப்பராக இருந்தது எபிக். கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது. 30(2) அப்டேட்ல எல்லாமே மஞ்சல் கலரில் கலக்கலாக இருந்ததுப்பா(y):love::love:
ரொம்ப சந்தோஷம் டா வசந்தி நேர்த்தியாக குறையில்லாம குடுக்கணும்ன்னு நிறைய
ஹோம் ஒர்க்வோட ரிசல்ட் தான் ஒவ்வொரு யூடியும்.
பட் நம்ப சைட் ரீடேர்ஸ் ரெஸ்பான்ஸ் தான் கம்மி இட்ஸ் ஓகே..
ஒருwedding invite கூட ரெஸ்பான்ஸ் இல்ல நிறைய காத்து கொடுக்குறாங்க இந்த சைட்டில் எனக்கும் நன்றி.. sry டா..
பட் அதன் பலன் பரிசாக உங்க கமெண்ட் நினைச்சுக்குவேன் iam glad dear tnk u ???
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
நேர்த்தியாகதான் நீங்க எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு யூடியும் படிக்கும் ரொம்ப ரொம்ப திருப்தியாக இருந்தது. எழுத்தால் மட்டும்மின்றி ஒவ்வொரு பிக்ஸரும் போட்டு, அதற்குரிய பாடல்களை தந்து படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடுறீர்கள்? சூப்பர்ப்பா. GOOD JOB KEEP IT UP ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நேர்த்தியாகதான் நீங்க எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு யூடியும் படிக்கும் ரொம்ப ரொம்ப திருப்தியாக இருந்தது. எழுத்தால் மட்டும்மின்றி ஒவ்வொரு பிக்ஸரும் போட்டு, அதற்குரிய பாடல்களை தந்து படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடுறீர்கள்? சூப்பர்ப்பா. GOOD JOB KEEP IT UP ??
Love u darling danyan anein ????
Idhu phothum? iam going in right path மிக்க மகிழ்ச்சி உங்க சப்போர்ட்க்கும் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top