Latest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --31

Maha

Author
Author
SM Exclusive Author
IMG_20191207_220048.JPG?லயா?பவன் ?

மன்னிக்கணும்? நட்புக்களே நிறையவே லேட் பண்ணிட்டேன், நமக்கு வந்த பிரச்சனைங்க அப்பிடி.

அட்லாஸ்ட் எப்பிடியோ முட்டி மோதி எழுதி முடிச்சே ஆகணும் அண்ட் , என் இளம் தோழியின் ஒருவரின் அன்பு ஆர்டர். முடிச்சுட்டேன் ...

கொஞ்சம் ud லென்த்தீயா வரும் டார்லிங்ஸ் சீக்கிரம் முடிக்கும் ஐடியாவே ?

அடுத்து அடுத்து ஹனிமூன் ரொமான்ஸ் வருவதால், ரொமான்டிக் காட்சிகள் முட்டிகோ கட்டிக்கோ இப்பிடி லவ்லி சீன்ஸ் add ஆகி வருவதால் final அண்ட் prefinal இன்னும் ரெண்டு மூணு யூடிக்கு பிறகு வரும்... பொறுத்துக்கோங்க ?

அண்ட் கொஞ்சம் கொஞ்சமா ப்ரூப் ரீடிங் பண்ணி ஒவ்வொன்னா போடணும் , போடுவேன் ?
அண்ட் finally ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ப்ளீஸ் kindly ப்பியர் வித் மீ தங் யூ...


ம்...?? முதலில்
மணமேடைக்கு போகும் முன், இன்னும் இழுபறியாக இருக்கும் பவன் லயாவின் புரிதல் ஒரு முடிவுக்கு வரணும் இல்லையா அதற்காக சில ஆட்டம் பின் மணமேடைக்கு ஓட்டம்.

********
பவன் லயா.?லவ் சின்ன முன்னோட்டம் ஒரு புரிதலுக்காக,

small recap...
**************
நாயகன் அண்ட் நாயகி திருமணபந்தத்தில் ரெண்டு பேரும் அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில், இன்னும்
என் நாயகி லயா தன் இயல்பில் இருந்து முழுமையாக மாறி வரவில்லை,நத்தை போல தன்னை சுருக்கி கொண்டு இருக்கிறாள்.அந்த மனஉளைச்சலில் இருந்து வெளியே வர சற்று தாமதம் ஆனதே தவிர, மென்மையானவள் அதிகமான அன்பு இரக்ககுணம்
அவளோட பிளஸ் அண்ட் மைனஸ் ,

சற்று வீம்பு... தான் விரும்பும், நேசித்த ஆணிடம் மட்டுமே வரும் பொஷிசிவ் மைண்ட்டின் தாக்கமே இந்த லயா , அதனால் சண்டையும் போட்டால் விவாதமும் செய்தால். தானாய் மாறி வருவாள்.
இல்லை...? வர வைப்பான் அவள் அவன்.
குறும்பின் மொத்த உருவமாக இருந்து பவனை ஒரு நேரம் ஆட்டி படைத்தவள் இதே லயா தானே,

அனைத்துக்கும் சூத்திரதாரியும் அவனே . அவளின் அனைத்து சேஷ்ட்டையும், பாவங்களையும் ரசிக்கும் கள்வனும் அவனே,
கொஞ்சம் நஞ்சமா ஆட்டமா காட்டினாரு இந்த மன்னவரு ...பண்ணிய குசும்பும் அப்பிடி தானே . இன்றைய காலகட்டத்தில் சந்தேகம் படுவது ஒன்றும் கொலை குத்தம் கிடையாது தான்.

நம்ப லயாம்மா பழமையும் புதுமையும் கலந்த ஒரு பக்கா இண்டியன் மேட், தன்மான சிங்கப்பெண் ஆச்சே ?
அதனால விழுந்த விரிசல் கொஞ்சம் ஆழம் அதிகம்.Wat to do ?‍♀...?

பாபி ஸ்வரா தெளிவா தெளிஞ்ச நீரோடை போல இருக்காங்கயா, இப்போ லயா அம்மினிக்கு கூட கொஞ்சம் அவங்களை பார்த்து ஹார்மோன்ஸ் எல்லாம் ஆர்மினியம் வாசிக்க ஆரம்பிச்சு...
பவன் அய்யாவை பார்த்து பழைய அருந்த வாலுத்தனம் எல்லாம் வெளியே எட்டி பாக்க ஆரம்பிச்சிருக்கு.
மனசு வேற மறுபடியும் என்ன என்னவோ நினைக்குது, பண்ணுது ?ம்...? .

இப்பொழுது மூன்று முடிச்சு போட போகும் மகிமையால் இருவருக்கும்
மவுன மொழியில் இருந்து , கிரேட் ஏறி காதல் பேசும் மொழி அரும்பி ஆரம்பம்...

ரம்...பம்...பம்...ஆரம்பம் !
ரம்...பம்...பம்...பேரின்பம் ! தான் ?

பட்... பட்...? ?
இந்த ஜோடி சற்று மாறுபட்ட ஜோடிங்க , தாமரை இலையில் ததும்பும் நீரை போல இவங்க ரெண்டு பேரும்.
வேதாளம் குணம் வந்தால் முருங்கை மரமும் ஏறும்...இல்ல அதே முருங்கை மரத்துக்காய்யை சாம்பாரில் போட்டும் சாப்புடும்...

எப்போ எப்பிடி குணம் மாறாட்டம் ஆகும்'ன்னு தெரியாது எதுவும் நடக்கலாம் காரணம் பவனுக்கு லயாவிடம் ஒரு டீல் உண்டு. அந்த டீல் நடைமுறைக்கு வரும் நேரம் நிறைவேறுமா, இல்லை ...??

லயாவிடமே அதன் முடிவு... பொருத்து, படித்து தெரிந்து கொள்ளுங்கள்?

எல்லாம் அவன் செயல்... ஈசா ?

நேற்று இரவு விழா தோரும், காலை நலுங்கின் போதும்,அவர்கள் மவுன காதல் உங்களுக்கும் புரிய...

திருமண ஜோடிகள் சேர்ந்து இருப்பது,
சுற்றி வருவது போல் தோன்றினாலும், இரு மாப்பிள்ளை சிங்கம் முகத்தில்
சிறு வாட்டம் , பின்னே இருக்காதா,உறவினர் வந்த வண்ணம் இருக்க , நண்பர்கள் வேறு நடுநிசி
ஆகியும் கூடவே இருந்தா...

வயிரு அடுப்பு நெருப்பாக மாறி கடுப்பு ஆகாத மை லாட். அது தான் முகம் கொத்து பரோட்டா மாதிரி இருக்கு ,
நம்ப ஹீரோஸ் மாடர்ன்ஸ் ஆனால் அது ஊரு ஆச்சே சோ அடங்கி வாசி... ? திருமணம் முடியும் வரை அவங்க கூடவே இருந்து வாட்ச் பண்ண சொல்லி பெருசுங்க ஆர்டர்.

பாபி...!?
கையும் , காலும், ஒரு நிலையில் இல்லை பரபரப்பாய் இருந்தான். நிமிடத்துக்கு
ஒரு அணைப்பு, பல வித முத்தங்கள் பரிமாறிக்கொண்டே இருப்பவனால்,
கண் எதிரே அவன் கன்னி இருந்தும் அனைத்துக்கும் தடா,
கர்ண கொடுமை யா,
பாவம் புள்ள,

ஸ்வரா?,
அவனை பற்றி தெரிந்தே வேண்டும்
மென்றே அவன் கைக்கு எட்டும்
தூரத்தில் இருந்தும் கண்டு கொள்ளாது ,
ஆட்டம் காட்டி கொண்டு இருந்தாள்.
தற்போது கல்யாண பெண்ணுக்கே
உரிய கலையோடு, மேலும் வசீகரம்
கூடி ,சும்மா கொழுகொழு, மொழுமொழு வென எடுப்பாய் நேர்த்தியாக எடுத்து
காட்டும் உடை வேறு.

அதுவும் இன்று நலுங்கில் அவனுக்கு மிகவும் பிடித்த தாவணி வேறு
உடுத்தி வரவே, பாபிக்கு சொல்லவும்
வேண்டாம் பித்தம் சற்று கூடி,அவள்
பின்னே பூனைக்குட்டி போல சுற்றி வந்தவன் கையில் அகப்படாமல், வெறுப்பேற்றி கொண்டு இருந்தாள்
ஸ்வரா.

பவன் ?‍♂ நிலையோ வேறு...

சங்கீத் விழாவில் இருந்தே, லயாவிடம் நிறைய மாற்றம் கண்டான், அவள் முகத்தில் இப்போது நிலை கொண்டு உள்ள வெக்க சிரிப்பின் சாயல், அவள் அருகில் தான் இல்லாத நேரம், அவள் கண்கள் தன்னை நிமிடத்துக்கு ஒரு முறை தேடி அலைப்புறுவதை கண்டு கொண்டான்.

அதுவும் நேற்று இரவு மாப்பிள்ளை அழைப்பு ஊரோடு என்பதால் அழைத்த ஆட்கள் குறைவு. விழாவும் 11'க்கு எல்லாம் முடிந்ததும். மேலே டெர்ரஸ் கார்டனில் டெஸெர்ட் (dessert ) பார்ட்டி ஏற்பாடு ஆனது.

அனைவருடன் அவரவர் ஜோடியோடு சுற்றியும் அமர்ந்து, ஆண்கள் மட்டும் கார்ட்ஸ் ஆடியபடியே புட்டிங் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.பெண்கள் அவர்கள் ஆடுவதை நோட்டம் விட்டு கொண்டே நாளை செய்ய போகும் அலங்காரம் குறித்து பேசினர்,

அதே சமயம் கீழே இருந்து பவனை அவன் அன்னை அழைக்கவே, அருகே லயாவிடம் கண்களால் சொல்லி கொண்டு ஆடிய கார்ட்ஸ், சாப்பிட்ட புட்டிங் பாதியில் வைத்து சென்றவன். உடனே திரும்பியும் விட்டான் ஆனால் வந்ததும் அவன் கண்கள் நிலைகுத்தி நின்று விட்டது கண்ட காட்சி அப்பிடிங்கோ, பயங்கர ஷாக்...! புள்ளைக்கு ?

சற்று முன்னே புட்டிங் வேண்டாம் என்றவளை, விட்டு சாப்பிட மனம் இல்லாது, அத்தனை முறை பவன் கேட்டும் , பிடிவாதமாய் வேண்டாம் என்ற லயா ,

அவன் சென்ற அடுத்த நிமிடமே லயா சுற்றியும் பார்வையை ஓட்ட, எல்லோரும் சாப்பிட, கார்ட்ஸ் விளையாட என அதில் பிஸியாக இருக்கவே...

லயா திருட்டு பூனை ?பவன் வைத்து சென்ற புட்டிங் கப்பில் இருந்து ஒரு ஸ்பூன் நடுக்கும் கையோடு எடுத்து கண்ணை மூடி ருசித்தவள் , யாரும் கவனிக்கும் முன் அவசரமாய் கீழே வைத்ததை ,

உடனே திரும்பியவன் கண்ணை விட்டு தப்ப வில்லை அக்காட்சி. எப்பிடி இருக்கும் அவனுக்கு ? இன்ப அதிர்ச்சியாட...! சற்றும் எதிர் பாராத காட்சி இல்லையா அது அவனுக்கு.

சடன் பிரேக் போட்டு நின்றது அவன் கால்கள். திடீர் சந்தோஷ தாக்குதலில் சிரித்து பொங்கும் கண்களை ?உள்ளிழுத்து, தன்னை சரி செய்து கொண்டான்.


சட்டென பின்னே சென்று மறைந்து
இருந்து கவனித்தான்.

லயா,
அடுத்து சுற்றியும் கண்களால் வட்டம்
இட்ட அவள் விழி, அடுத்த நொடி
அவன் உதடு,கை துடைத்து வைத்து
சென்ற வெள்ளை கைக்குட்டையை , மெதுவாய் எடுத்து மடியில் மறைத்து வைத்தாள்,

சுற்றும் யாரும் கவனிக்காத நேரம். அவள் உதடு துடைப்பது போல மெல்ல முத்தமிட்டு , அவன் வாசம் அதில் நுகர்ந்து , தான் துப்பட்டாவில் மறைத்து கொண்டாள்.

பவனுக்கு வாய் கொள்ளா சிரிப்பு , குஷி ஆகி பாதம் பூமியில் உதைத்து, சிறு குழந்தை போல, "யெஸ் "என தன் இரு
கை அசைத்து வெளிப்படுத்தியவன்,
உடல் பூமியில் பதியாத உணர்வு ,
பறக்கும் நிலையில் இதயம் , அப்பொழுதே அவளை தூக்கி சுற்றி முத்தமிட தோன்றிய ஆசையை அடக்கியவன்.

"அடி கள்ளி தேன் (ஹனி ) இருடி உன்னை...",
தலை கோதி முகம் எங்கும் நகைப்போடு அங்கே இசைக்கும் இசைக்கு ஏற்றார் போல உடலை அடி அசைத்தபடி எதுவும் தெரியாதது போல வந்த பவன், லாயவை நெருங்கி இடித்து அமர்ந்தும் இல்லாமல், பெருமூச்சு விட்டபடி, விழி எடுக்காத பார்வை, குறும்பு சிரிப்போடு , தன் சுண்டு விரலை மெல்ல அவள் உதட்டு அருகே எடுத்து செல்லவே ,

மிரட்சியானால் லயா, கண்ணில் அதிர்ச்சி !பின்னே...?திடிர்னு என்று வந்து, இடித்து அமர்ந்தது இல்லாமல், ஆளை மயக்கும் சிரிப்போடு அதிரடி தாக்குதல் தரவே புருவம் கண்ணும் சுருக்கி முகத்தருகே வரும் விரலையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள்.

அவன் விரலை கெட்டியாக பிடித்துக்கொண்டே சற்று பின் சாய
போன லயா, சாய பிடிமானம் இல்லாது தடுமாறி பின்னோடு ஆ ஆ... வென சத்தமிட்டு விழப்போக சட்டென இடையில் கைகொடுத்து தாங்கி கொண்டான்.
எதிர் பாரத போது இடையில் கை படவும் ஆயிரம் வர்ட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள் லயா, வலது கை தானாக அவன் நெஞ்சில் இடம் பெயரா...

பவன்...
அதே கட்டிபுடி நிலையில் அவள் உதட்டோரம் சிறிது கிரீம் ஒட்டி இருப்பதை சுண்டு விரலால் சுண்டி எடுத்து, தன் உதட்டில் வைத்து ருசித்து,
முசக்குட்டி ? உன் உதடு பட்டு இன்னும் ருசிக்குதேடி இந்த ஸ்வீட் என் ஸ்வீட்டு ?என்றதும் தான் லயாவுக்கு புரிந்தது, தான் வசமாய் மாட்டி கொண்டது.

வெளுவெளுத்து போயி தலை குனிய போனவள், மறைத்த வைத்த கையை வேண்டும் என்றே தான் மறுகையால் பவன் பிடித்து இழுக்கவும் தான். அதிர்ந்து போன லயா கையை வெடுக்கென துப்பட்டாக்குள் இழுத்து கொண்டே பவனை ஒரு படபடப்போடு நிமிர்ந்து பார்த்தது தான் தாமதம்,

இரண்டு புருவமும் மேலும் கீழுமாய் உயர்த்தி, பட்டென கண்சிமிட்டி ,
என்ன... என்ன பதட்டம் என கண் உருட்டி கேட்வனை
திரு திரு வென விழித்து பார்த்ததும் ,

"ஹாஹா"... வென வாய்விட்டு பவன் சிரித்தான் ,
அனைவரும் ஒரு சமயம் அவர்களை திரும்பி பார்க்கவும் , லயா ஒரு அதிர்வோடு அவனை நெட்டி தள்ளி நிறுத்தி, ஒரு சிணுக்களோடு முகம் சுருக்கி பார்த்துவிட்டு சட்டென எழுத்து தம் தம் என்று வேகமாக நடந்து அஷி, சைந்தவி இருக்கும் இடத்துக்கு தலை தெறிப்பது போல ஓடினாள்...

அதை பார்த்து இன்னும் சத்தமாக பவன் சிரிக்கவும்...
ஷ்ரவன் ! என்ன மாம்ஸ்...? முத்தி போச்சா,

பவன்.. "ச்சா நீ வேற பா, லயா நேத்து பாபி சொன்ன ஒரு கடி ஜோக் சொல்லவே சிரிச்சே மச்சான் ,"

ஷ்ரவன், "ம் ம்... நம்பிட்டோம் நம்பிட்டோம், அதுக்கு லயா எதுக்கு ஓடணும் மாமா...? ??நீங்க நடத்துங்க மாம்ஸ்? நக்கலாய்
காலாய்க்கவே,

பவன், "டேய்...? அப்பா, ராசா?
ஏன் டா?‍♂..?இப்பிடி ?‍♂ என் கல்யாணம் முடியும் வரைக்கும் என்ன ஒட்டுறதை விட மாட்டேன்ன்னு நினைக்குறேன்,

யப்பா..." என்ன விட்டுரு டா சாமி உனக்கும் உன் திசைக்கு ஒரு கும்புடு டா..."?‍♂

?‍♂அவனுக்கே வெக்கம் வர புரூட் சாலட் எடுப்பது போல் அந்த இடத்தை விட்டு நழுவியவன், அதற்க்கு பிறகு லயா
போகும் பாதை யாவும் பார்வையால் விழுங்கி கொண்டே சுற்றி வந்தான் , அவனுக்கும் வேறு எதுவும் செய்ய இயலாத படி , அவனிடம் அகப்படாதவாறு ஒரு கண் அவன் புறம் சுழல விட்டு கொண்டே
ஸ்வரா, அஷி நடுவே கூடி இருந்தாள் லயா.

வெகு நேரம் கழித்து எல்லோரும் அடங்கி படுக்க சென்று விட, படுக்க சென்ற பவனுக்கு ஏனோ இருப்பு கொள்ளவில்லை,

அந்த அர்த்தம் ஜாமத்தில் லயாவிடம் போனிலாவது பேச நினைத்தவனுக்கு , அய்யோ ...ஹோ ? அவன் போன் கையில் இல்லையே ? தொடர் போன் கால்கள் வரவே நேற்று மாலையே புவனாவால் பிடுங்கப்பட்டு நிருவிடம் இருந்தது.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமும் வரவில்லை, எங்கோ மெல்லிய இசை கேட்கவே ஏழுந்த பவன் திரும்பி பார்த்தால் அருகில் படுத்து இருந்த பாபியையும் காணவில்லை...
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
சீட் அவுட் கதவை திறந்து வெளியே வந்த பவனுக்கு இன்னும் தெளிவா பாடல் கேட்கவே எட்டி கீழே பார்த்தான். கயிற்று கட்டிலில் படுத்து இருந்த வாட்ச் மேன் தாத்தாவின் குட்டி ரேடியோவில் இருந்து தான் அமுதமாக அந்த பழைய பாடல் கேட்டது.

https://drive.google.com/file/d/1nV0N6-pvCTXg15QNTT-oVtOdWVW5Y_et/view?usp=drivesd

இரவின் பால் நிலா வெளிச்சம், குளிர்ந்த தென்றல் காற்று, இனிமையான தேவகானம்.மனம் நிறைந்த அவன் தேவதையின் பிம்பம் எல்லாம் சேர்ந்து அவனை ஏதோ வேறு உலகத்திற்கு கூட்டி செல்லவே அங்கே கிரில் சுவரில் சாய்த்து கண்ணைமூடி அமர்ந்தவனை அதே நிலையில் உறக்க தேவதையும் தழுவிக்கொண்டாள்.

********
காலை கல்யாண வீடு ஒரே பரபரப்பு, பேச்சு குரல்கள் ,மெல்லிய நாதஸ்வர இசை பவன் இரவு எந்நேரம் படுக்கையில் வந்து விழுந்தான் என்று அவனுக்கே தெரியாது, திடீர்னு என யாரோ தன்னை உலுக்குவது போல இருக்ககே சட்டென திரும்பி கண்ணை கசக்கி பார்க்க அருகில் தலை துவட்டியப்படி இருந்த பாபி தான் பவனை எழுப்பி கொண்டு இருந்தது.
எழுந்திரு மச்சி...

இதற்கு பிறகு நிருவுக்கு வந்து இருவரையும் கிளப்பி எண்ணெய் நலுங்குக்கு அழைத்து சென்றது.

(இதன் தொடர் தான் லாஸ்ட் 30(3)யூடியில் வரும் நலுங்கு கட்சிகள்)

Recap finished...

********

எண்ணெய் நலுங்கு முடித்ததும்,.
??
IMG_20191210_141034.JPG
IMG_20191210_141257.JPG


பெரிய அலங்கார தட்டில் திருமண பட்டாடை , ஆபரணங்களை, பெரியவர்கள் பூ அட்ஷதையோடு தூவி ஆசிர்வதித்து கொடுத்து அனுப்ப , ஆண்களுக்கு மேல் அறை, பெண்கள் கீழ் அறையிலும் என மணமக்களை...நிரு , ஷ்ரவன் தம்பதிகள் அலங்கரித்து கொண்டு இருந்தனர்

இதற்கிடையில்...

பவனுக்கு அல்மோஸ்ட் அலங்கரம் முடிந்தது... நிரு ரூமில் உடை அணியும் போது திரும்பியவன் பார்வையில்... அவன் ஐ போன்...! நேற்று மாலை பிடுங்கபட்டது அங்கு டேபிள் மேல் இருக்க கண்டவனுக்கு ஒரே பரபரப்பு.

எட்டி பார்க்கும் தூரத்தில் பெண் இருந்தும் , நேற்றில் இருந்து இருக்கும் உள்ள கொதிப்பு, தவிப்பு, யாரும் அறியாமல் அந்த நிமிடமே அவளிடம் பேசிட நினைத்த இதயத்துடிப்பு அவனுக்கே இன்னிசையாக கேட்டது.
மெல்ல போனை கையில் எடுத்து கொண்டு நழுவி செல்ல நினைக்க பாபியிடம் மாட்டி கொண்டான்.

பாபியின் கடியில் ஆல்ரெடி மாட்டி தடுமாறி கொண்டு இருந்த ஷ்ரவனுக்கு உதவிட வந்த நிரஞ்சனையும் பிடித்து கொண்டு ,

பாபி... "யோவ் மச்சான்ஸ் யாருய்யா கண்டுபுடிச்சாங்க, இந்த டிரஸ் எல்லாம்
எனக்கு செட் ஆகாது பா... ஆளை விடுங்க வேஷ்ட்டி இடுப்பில் நிக்கது, காட்டவும் வராதுன்னு சொன்னேன்'ன்னு தான் ஸ்வரா இந்த ரெடிமேட் பாட்டு பாஞ்சி வேட்டியை செலக்ட் பண்ணா , இன்னைக்கு இதும் சொதப்புது...

பாபி --"அடேய் சரவண தம்பி ...
என ரகம் இழுத்தப்படி , ஷ்ரவன் பெயரை கூப்பிடவும்,

காண்டனா ஷ்ரவன்... ?

யோவ் நண்பா... நானும் வந்த நாளில் இருந்து பாக்கறேன் என் பேரை கொலை பண்ணிட்டே இருக்கே , இப்பிடியா அண்ணாச்சி கடை பையனை கூப்பிடுற போலவே கூப்பிடுவே போய்யா , ஹூம்...
மூச்சு வாங்கி கொண்டே கர்ஜிக்கவும்..

ஆ ... ஹான்... தோ பார்ரா .. புள்ள பூச்சிக்கு கோவத்தை... இப்பிடி ஆங்கிரி போர்ட்ஸ் ஆயிட்டானே ஹும், ?...
சரி சமாளிப்போம்... "

" கோவிச்சுக்காதே ஆங்கிரி..சீ நண்பா ...
இதோ இந்த பட்டு டென்ஷன் மச்சான்,
இரு இரு... என்றவன் தொடர்ந்து,

ஆமா...? இது நம்ப தலைவர்
எம் ஜி ஆர் "அடிமை பெண் " படத்துல இந்த பட்டானி பேண்ட் தானே போட்டு இருப்பாரு, அது மாதிரியே தொழா தொழன்னு இருக்கு நண்பா ...!" ?
இதை போட்டுக்கிட்டு தான் கல்யாணம் பண்ணனுமா மச்சான்...? "

ஏன் இந்த ஜீன்ஸ், குர்தி, பெர்முடாஸ் இருக்கே... அட்லீஸ்ட் ஒரு லுங்கியாவது தாங்க பாஸ்.
இது எல்லாம் போட்டுட்டு போயி, தாலி கட்டுன தானா இல்லனா என் ஹனி கட்டிக்க மாட்டாளா?...?

ஷ்ரவன் ப்..ப்பூ... பக் என சிரித்து ,
அது சரி... கொஞ்சம் இதே டைலக்கை உங்க ஜோடியிடம் சொல்றிங்களா , இதை செலக்ட் பண்ணதே உங்க ஆளுன்னு தானே கொஞ்சம் நேரம் முன்னடி சொன்னிங்க கூப்பிடவா...

சா... சா, நீ வேற நண்பா என் டார்லி செலக்ட் பண்ணது, சூப்பரு இல்ல, நண்பா ... நீ டைட்டா ஒட்டு ராஜா ??

ஹாஹா... வாய்விட்டு சிரித்த ஷ்ரவன் பாபியின் முறைப்பில் கப் என வாய் அடைத்து ஏதோ எடுப்பது போல திரும்பி கொண்டான் ...

ஷ்ரவன்,பாபியை தயார் செய்வதற்குள் அவனிடம் மல்லு கட்டுவதில் சோர்ந்து போனான்
புள்ள,

பாபி சற்று எடை குறைத்து விட்டதால் அவன் பன்ஞ்சி மாடல் வேட்டி இடுப்பு சற்று லூசாக போனதும் தான் கால கொடுமை, அங்கே ஆரம்பித்தது இந்த பாபியின் டார்ஜான் அக்கப்போர்...., ??
அதுவும் , நேரம் குறைவு, மாற்றவும் முடியாத நிலை...

ஷ்ரவன் --"பவன் மாம்ஸ்...!" மிடியாலை சாமி, ப்பா...?‍♂ ?" இவரோட...ஸ்ஸு, இல்லாத வேர்வையை வளித்து போட்டு,
அய்யோ?‍♂ ... பாவம் டா என் தங்கை, அம்மா சுறா மா... நீயி இவரு கிட்ட மாட்டினா இறா மா ? ?

எப்பிடி தான் சமாளிக்கிறிங்கன்னு தெரியல தெய்வமே...!"
இன்னைக்கு ஒரு நாளுக்கே எனக்கு கண்ணு கட்டிறிச்சு டா ஈசா?‍♂

"...ம் ??," -பாபி ?

"யோவ் சரவண, என்ன நக்கலா போயா...? முன்ன பின்ன செத்து இருந்த தானே சுடுகாடு தெரியும்ன்னு சொல்லுவாங்க,

நானும் முன்னபின்னே வேட்டி பாவாடை எல்லாம் கட்டி இருந்தா தானே...? "முடியல டா சாமி,?? ரொம்ப இம்சையா இருக்குயா இது... !"

என் ஹனிக்கு தாலி கட்டுற சமயம் கழண்டு விழுந்துட்டா, அய்யோ செத்தான்டா இந்த பாபி.. யோவ் பயமா இருக்குயா,

"நிரு மாமே ஹெல்ப்பு மாமே "

நிரு- " ஹாஹா ! டோன்ட் ஒர்ரி பாபி அப்பிடி எல்லாம் நடக்க விட்டுருவோமா பாபிக்கு ஏன்மா பயம், உன்ன அப்பிடி பாக்குறவனுக்கு தான் பயம்?
இதோ எக்ஸ்ட்ரா வெல் க்ரோ பெல்ட் இருக்கே விடு மச்சான் கவலையா. "?

பாபி-"ஓ... இருக்க நிரு மாம்ஸ்...!" தென் ஓகே?? என்றவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்த பவன்,

"டேய் மல மாடே, நீ இருக்க பாரு, ஒரு நிமிஷம் உன்னால சும்மா இருக்க முடியுதா ...? "
உன் இம்சையில் மாட்டி ஷ்ரவன் முகத்தை பாரு..மல கொரங்கே, பாவம்டா அவன் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே ஆகிட்டான் பாருடா ஹாஹா...!"என சிரிக்கவும்

அனைவரும் ஷரவனை பார்க்க...!"

உண்மையில் அவன் அப்பிடி தான் விழி பிதுங்கும் நிலையில் இருந்தான் கிட்ட தட்ட ஒரு அரை மணி நேரமாக பாபியின் கடியில் மாட்டியவன், அரண்டு போனான்...!"அந்த ஏசி அறையில் கூட அவனுக்கு வேர்த்து விறுவிறுத்து போயி இருந்தது.

வெடி சிரிப்பின் சத்தம் கேட்கவே மண்டபம் செல்ல கிளம்பிய சிவாஜி நின்று எட்டி பார்த்தவர் கண்ட காட்சினால் , அவரையும் தொற்றி கொண்டது சிரிப்பு.

இடுப்பில் கை வைத்து விறைப்பாய் இன்னர்வெர் adக்கு மாடல் போஸ் போல் பாபி நின்று இருக்க... ஷ்ரவன் ஒரு கையில் பட்டு உடையும் மறு கை கன்னத்தில் வைத்து மோடாவில் நொந்து உட்கார்ந்து இருப்பதை கவனித்தவர் சற்று சத்தமாகவே சிரித்து கொண்டே உள்ளே வந்தவருக்கு புரிந்ததுவிட்டது.

தான் மகனுக்கும், வேட்டிக்கும் நடக்கும் அக்கப்போர் தெரிந்தவர், அவரை தவிர வேறு யாராக இருப்பார், சில முக்கிய கோவில் செல்லும் போது
அனுபவப்பட்டவர் அவர் தானே ?
அதை நினைத்தவருக்கு மேலும் சிரிப்பு வந்தாலும், அடக்கி, அதட்டலாய்...

"டேய் மவனே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா நானா..? "
அனைவரும் திரும்பி பார்த்து சேர்ந்து சிரிக்க,
பாபியும் ஏதோ சிந்தனையில்,

" ஹுஹும்...? "இல்லை என்கிறது போல தலையை வேகமாய் ஆட்டி சொல்லவே,

"ராஸ்கல் மவனே...!" மகன் காதை பிடித்துஇழுத்து கொண்டே... இன்னைக்கு மாப்பிள்ளைன்னு கூட பாக்க மாட்டேன் நானா(மகனே) .." இப்போ ஒழுங்கா கட்டிட்டு சீக்கிரம் கீழே வரல மவனே..?
" இதை நான் எடுத்துட்டுட்டு போறேன், நீங்க எப்பிடி வருவீங்களோ வாங்க ராஜா, என்றதும் தான் தாமதம்...

"காதை தடவி கொண்டே, ஆஆ... அய்யிய்யோ??....? " ப்பா...!
"ஏன் பா ஏன்" நீங்களுமா ப்பா... என் நிலைமை தெரிஞ்சும், போங்க டாடி... !
நீங்க வேற...

ஹும், க்கும்?... சிணுங்கிய மகனை தோள் அணைத்து சீக்கிரம் ரெடி ஆகி வாய்யா... டைம் ஆகுது நானா,
நான் பரணி மாமா எல்லாரும் முன்னடி மண்டபத்திற்கு போறோம் நீங்களும்
டைம்க்கு வர பாருங்க... என்று கண்ணை சுழட்டி சுற்றி இருப்பவரிடமும், பவனிடமும் திரும்பி தோள் தட்டி சொல்லிவிட்டு அவர் கிளம்பி சென்றதும்.

பவன், சட்டென நினைவு வந்தவன் போல பாபிக்கு உதவிக்கொண்டு இருந்த நிருவிடம் நெருங்கி,

"ப்ரோ ஒன் செகண்ட் ஒரு அர்ஜென்ட் போன் கால் பேசிட்டு வந்துடுறேன் ஓகே ", என்றான் கண்சிமிட்டி,

நிரு புன்னகையோடு " பார்ரா, ம்...ம், கோ ஹெட் பாஸ்,
ஆல் தா பெஸ்ட் ப்ரோ. நானும் இதை தாண்டி தான் யா வந்து இருக்கேன் ஹாஹா...

கோ... கோ பாஸ் , ஐ கேன் அண்டர் ஸ்டாண்ட் யுவர் பிலிங்ஸ் யர்,
"ப்ளீஸ் கோஹெர்ட், பட் கம் சூன் ... என்று கை ✌காட்டி அனுப்பவும் ",

பாபி... "டேய் பவன் மச்சான் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல, போட போ... ?கொஞ்சம், " நாளைக்கும் பேச மிச்சம் வைடா எனவும்,
அவன் தலை கொட்டி...." போட பொறாமை புடிச்சவனே நேத்து நைட் நீ 2 மணிக்கு ராக்கோழி மாதிரி எழுத்து போனதை நானும் பார்த்தேன் டி...
நீ மூடிட்டு?, வேட்டி திறந்து இருக்கு பாரு அதையும் மூடு ராசா நான் வரட்டா?

பாபி, "ஆஆஆ..."வெனஅலறி குனிந்து கை வைத்து முடி கொள்ளவும்.

பை...யியி, மச்சு என எட்டி அவன் கன்னத்தில் முத்தம் இட்டு நக்கல் சிரிப்பை ஈஈஈ என்று காட்ட ,
சீ.... கருமம் டேய்... !"என்னை ஏண்டா கிஸ் பண்றே, போ போ அர்ஜென்ட் கால் காலிங் மச்சான்,அவர்களுக்கு குடு டி...go....டி ? ", கன்னத்தை துடைத்து கொண்டே நக்கல் செய்த பாபியின் வேட்டியை இழுத்துவிட்டு,

நிருவிடம் திரும்பி , " ஐ வில் பீ பாக் இன் மினிட்ஸ் ப்ரோ ??, என்று அடுத்து இருக்கும் சிட் அவுட் அறைக்கு வந்தும். ஒரு பதட்டம் தொற்றி கொண்டது மனதில் ... மூச்சை இழுத்துவிட்டு லயாவுக்கு கால் செய்தான்.

"ச்சா, என்ன ஆச்சு நமக்கு.. இப்பிடி ஆயிட்டோம் ",

(மச்சி... இது எல்லா புது மாப்பிள்ளைக்கு வரும் காதல் வைரஸ் தான் யா , தாலி காட்டும் வரை காரணமே இல்லாமல் ஏதோ ஒரு பயம் இருக்க தான் செய்யும், நிமிஷத்துக்கு ஒரு முறை கால் பண்ணி பேச சொல்லும். நாங்க பாக்காத லொள்ளு, நீங்க விடாத ஜொள்ளு... ம், நடத்துங்க ராசா ? )

காரணம்... இன்னும் சில மணி நேரத்தில் அவள் தன்னோடு தான் இருக்க போகிறாள் என்பது அறிவுக்கு புரிந்தும், அலைபாயும் மனதுக்கு புரியவில்லையே...! தனித்து பேசிட ஏங்கும் மனம் , டீன் ஏஜ் மாணவனின் மனநிலை , ஏதோ தெளிவு படுத்தி கொள்ளும் ஆவா...

ஒன்று...
தன்னை நெருங்க விடாது தூர நிறுத்தி இருந்தவள், நேற்றில் இருந்தே புதிதாய் தெரிந்தாள். வெளியே அமைதியா, தள்ளி இருப்பது போல கட்டி கொண்டாள். ஆனால் அவள் பார்வையின் ஏக்கம், தவிப்பு, அவனை ரொமான்டிக் மூடிலே அலைய விட்டு உள் உறங்கும் ரெமோவை விழிக்க செய்து, ஹிப் பாப் பாடி ஆடியது .

"பார்க்காத நேரத்தில் பாக்குறதுக்கு..
பதுங்கி குலுங்கி சிரிக்கிறதும்.
ஏலேலோ ஏலேலோ ஏ... ஏலேலோ...ஆல் மனது பட்டு வேறு பாடியது.

இரண்டு...
காலை நலுங்கின் போது முழுதாய் அவனை திணற விட்டது அவள் பிம்பம் , வெண் பட்டாடையில் நனைந்த எழில் ஓவியமாய் அவளில் சாமுத்திரிகா லச்சனம், அருகருகே நெருக்கமாக வேறு அமர்ந்து இருந்தது
கண்முன்னே வந்து போனது காட்சி
. ஷப்பா... என்று இருந்தது அவனுக்கு,

*******
 

srinavee

Author
Author
SM Exclusive Author
ஒரு வழியா வந்துட்டாங்க ... மண்டபத்தில உக்காந்து மீ சோ tired... Come fast next ud authorji ??... Nice update
 

Maha

Author
Author
SM Exclusive Author
ஒரு வழியா வந்துட்டாங்க ... மண்டபத்தில உக்காந்து மீ சோ tired... Come fast next ud authorji ??... Nice update
ஹாஹா டார்லி நீங்க படிச்சா வேகம் போட்ட லைக்ஸ் பார்த்தே புரிஞ்சுக்கிட்டேன் நீங்க செம்ம
டயட் ன்னு இனி back ஆகாது முடிச்சுடுவேன் ??
 

Raman

Well-known member
ஹாஹா டார்லி நீங்க படிச்சா வேகம் போட்ட லைக்ஸ் பார்த்தே புரிஞ்சுக்கிட்டேன் நீங்க செம்ம
டயட் ன்னு இனி back ஆகாது முடிச்சுடுவேன் ??
??.thankyou.
 

Advertisements

Advertisements

Top