Latest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம்--33

Maha

Author
Author
SM Exclusive Author
IMG_20191207_220048.JPG
?திருமணம்?

சின்ன டவுட் வருது...
அநேகமா என் கதையில் தான் நிறைய pics and songs use பண்ணி இருக்கேன் நினைக்கிறேன்.புது முயற்சி முதல் காதல் கதை...
கொஞ்சம் வித்தியாசமா இருக்கவும் situvation தகுந்த மாதிரி பாடல் வந்த ஒரு movie எபெக்ட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கோர்த்தது.
ரொம்ப annoying ah இருந்த sry dears...
இனி அடுத்து கதைன்னு ஒண்ணு ஏழுதும் ஐடியா வந்த கண்டிப்பா இதை எல்லாம் avoid பண்ணி குடுக்க முயற்சிக்கிறேன் நன்றி ??

******
சரியாக முகூர்த்தம் நேரத்திற்கு 1 மணி நேரம் இருக்கும் போது கல்யாண மேடை அமைத்த இடத்துக்கு இரு வேறு காரில்,

ஒன்றில் மணமகளோடு பெண்கள், இன்னொன்றில் மணமகன் தோழன் மாப்பிள்ளையோடு வந்து இறங்கினர்.
அதற்குள் நிறைந்து இருந்தது அந்த திருமணம் ஹால்.

முன்னே வாத்தியம் இசைக்க , கொள்ளை அழகோடு மணமக்கள் அவரவர் ஜோடியை கண்களால் நிறைத்து கொண்டு சேர்ந்து கைகோர்த்து முன்னே அழைத்து வந்தனர்.
IMG_20191207_172225.JPG
ஆழம் சுற்றி, அடுத்து ...

சகோதரன் ஸ்தானத்தில் நிரு, ஷ்ராவனிடம் வைர மோதிரங்கள் கொடுத்து போட சொல்லி, மாலை அணிவித்தும் அவர்களுக்கும் பதில் மோதிரம் அணிவித்து இன்னும் சில சாங்கியம் முடிந்ததும் .

மேடை நோக்கி மணமக்கள் நடந்து வர மலர் தூவியப்படி சிறுவர்கள் முன் செல்ல , மங்கள இசையோடு மணப்பெண்கள் மலர் மெத்தையில் நாணம் நளினம் நடை பின்னி அவரவர் ஜோடியுடன் கை அணைத்து மெல்ல நடத்து வருவதை கண்டு.

அங்கே தனி இளமை பட்டாளமாக அமர்ந்து இருந்த இளவட்டங்கள், ஒரே கரகோஷம் செய்து வரவேற்றனர்.
IMG_20191213_125116.JPG
IMG_20191213_124108.JPG
IMG_20191213_125818.JPG
இரு இளவரன் போன்ற கம்பிர தேஜஸ் நிரம்பிய மணமகன்கள் தங்கள் ஜோடிகளுடன் சேர்த்து பின் கையோடு கை பின்னி வரும் அழகு... சொல்லில் அடங்காது, முன்னே "போட்டோகிராபி விஜய் ஈஷாம் " குழுவின் வீடியோ கேமராக்களும், பல விதமான தான் இயக்கும் வீடியோ கேமரா வெளிச்சமும் சேர்ந்து மேலும் பளிச்சிடும் அழகோடு ஜொலித்து கொண்டு இருந்தனர்.


தோழன் தோழி நெருக்கிய உறவுகள் பின்னே வர, மண மேடைக்கு வந்து விழுந்து வணங்கி வரிசையாக ஜோடிகள் அமர்ந்து அடுத்த நொடியே, ஐயர்
அக்கினி வளர்த்து மந்திரங்கள் ஓதி,

முகூர்த்த ஆடைகள் ஆசிர்வதித்து கொடுத்ததும். அணிந்து வந்து அமர்ந்த மணமக்கள், ஐயர் சொல்லு மந்திரங்களை கூடவே மிகவும் பயபக்தியோடு பெண்கள் இருவரும் ஆச்சு பிசகாமல் சொல்லினர் ...

இந்த குறும்பு ஆண்கள் குசும்பு தான் தலை விறித்து ஆடியது,தனியாவே பாபியை பிடிக்க பத்து பேரு வேணும்.

இப்போ பவன் சப்போட் வேறு அதுவும் தங்கள் டிரேட் மார்க் அசட்டு சிரிப்போடு...! இஞ்சி தின்ற குரங்கை போல முழித்து வாய்க்கு நுழையாத மாத்திரங்களை இவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் ஓதினார்கள்.

(அய்யோ? சாமி கண்ணை குத்தி, ச்சா...போட்டும் பாவம் யா புள்ளிங்கோ...?? ஏதோ வாய்க்கு வராத வார்த்தைங்க, விட்டுருவோம் அவங்களை மன்னிச்சு)

புகை வேறு மூச்சை மூட்டவும், எல்லாம் புது அனுபவம் ஒரு கடுப்போடு, நெளித்தபடியே ஐயர் கொடுப்பதை எல்லாம் அவர் பார்க்காத போது முறைத்து... பார்க்கும் போது இளித்து அக்கினியில் போட்டனர் , இவர்கள் அவசரம் ஐய்யர்க்கு புரிதல் தானே...

எங்கே...? எங்கு இருந்து புரிய, வாய்க்கு கைக்கும் அவருக்கு தான் வேலை இருக்கே, சும்மா ஹோம புகையை கிளப்பி விட்டு நான்ஸ்டாப்பாக, கேப் விடாமல் சொல்லும் ஐய்யரை குத்தவ கொல்லவா எனும் உள்ளே பொங்கு வெறியை வெளி காட்டாதது இருந்தனர்.

(ஐயர்வால் எல்லாம் கோவிச்சிக்க பிடாது எங்க ஆத்து பங்சனுக்கு வரும் ஐயர் செம்ம ஜாலி ஆக்கும் அந்த சில பிட்டு தான் இங்கே போட்டு இருக்கேன் சும்மா நம்ப பவன் லயா கல்யாணத்தை ஒரு ஜாலி கல்யாணமா ஆக்குவோமேன்னு தான் ??)

மேலுக்கு ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டு சிரிப்பு சிந்தியஆண்களை, இவர்கள் சேட்டைகள் அனைத்து ஓர கண்ணால் ஆச்சரியமாக கவனித்த லயா ஸ்வராவுக்கு அடக்க முடியாமல் வரும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமமாக இருந்தது.
கஷ்டப்பட்டு அடக்கி வைக்க பெண்கள் இருவருக்கும் அடிக்கடி தலை குனிந்து கொள்ள வேண்டி இருந்தது.

ஸ்வரா--
பாபியின் அட்டகாசம் மேலும் வளரவிடாமல் இருக்க அவனுக்கு வலது பக்கம் அமர்ந்து இருந்தவள் தான் இடது விரலால் அவன் தொடை கீழே நறுக்கென கிள்ளவும்...

"ஸ்ஸ்..ஆஆ....ஏன் பேபி கில்லிங், மாமாவுக்கு வலிக்குது டி...

டேய்...போதும், கொஞ்சமாச்சும் அடங்கு மாமு, இது நம்ப கல்யாணம் டா இங்கயுமா...

இப்போ நீங்க ஒழுங்கா அமைதியா தாலி காட்டும் வரை இருக்கலை மகனே, பாத்துக்கோ, இத்தனை பேரு இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன், கடிச்சு வைச்சுருவேன் பாருங்க, என்னை பத்தி தெரியும் இல்ல பப்பு மா, என்று அவன் காதோரம் ரகசியமாய் சொல்லவும் .

மேலும் அவள் கிட்ட நெருங்கியவன் ,
ஹேய்... ஹேய்... அதுக்கு தாண்டி உன் பப்பு அவசரப்படுறேன். அது எங்கே இந்த கொண்டை போட்ட ஐயருக்கு புரியுது ஹனி ...

"வேணா...? பப்புமா... ! மறுபடியும் மறுபடியும் ஆரம்பிக்காதீங்க கண்டையிடுவேன் டா விட்டுரு...

ஐயர்...." பெண்ணை பெத்தவா வாங்கோ... "

அடுத்து பாதைபூஜை செய்ய பெண்ணை பெற்றோரை வரவழைத்ததும்... நால்வரும் அமைதி ஆகி போயினர்...

பரணி புனிதாவும்...
இரு மகளும் பாத பூஜையை செய்ய செய்ய புனிதாவின் உடல் அழுகையால் குலுங்க தோள் அணைத்து பிடித்து இருந்த பரணி மேலும் இறுக்கி தோளோடு அணைத்து, தான் நெஞ்சோடு அவர் தலையை சாய்த்து நின்றார் , இதயம் கணக்க, பொத்தி பொத்தி அருமை பெருமையாக வளர்த்த தங்கள் இரு செல்ல சீமாட்டிகளை ஆனந்த கண்ணீர் பெறுக ஒரே சமயம் கன்னிகா தனம் செய்விக்கும் நேரம் இது....

புகுத்தவிடு அவர்களை தங்கத்தால் இழைத்தலும்,இந்த நொடிகளை தாண்ட பெற்ற மனங்கள் சற்று கலங்க தானே செய்யும், சுற்றி இருந்தோருக்கு மனம் கனத்து போயி கலங்கி விட்டது தான் உண்மை.

மணப் பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் ,பெற்றவர்கள் பாத பூஜையோடு அவர்கள் கடைமை நிறைவு செய்ததும். வருத்தமாய் தலை தொங்கி போயி இருந்த தங்கள் சாக தர்மினியை அப்பிடி காண பொறுக்காத பவன் பாபி இருவருக்கும் மேலும் நெருங்கி அமர்ந்து இன்னும் இறுக்கி கை கோர்க்கவும் ஒரே நேரம் இரு பெண்களும் அவரவர் ஜோடியாய் நிமிர்த்து பார்க்க ...
கண்களில் காதல் பொங்கி ததும்ப
நாங்க இருக்கோம் உங்களுக்கு என்று சொல்லாமல் சொல்லியது அவர்கள் காதல் பார்வை, நெருக்கம், அன்பு.

ஐயர், ஆண்கள் பெற்றோரை பாதபூஜைக்கு அழைக்கவும்... சற்று சுற்றியும் அமைதி பிறகு,
சிவாஜி...
பெண்ணை பெத்தவங்க தான் எங்க பிள்ளைகளுக்கு இனி அப்பா அம்மா இதை அவங்களே செய்யலாமே என்று தான் இயலாமையை மறைத்து சொல்லவும்,

பாபி....
"இல்ல...? ப்பா நீங்க வாங்க, நீங்க ஒருத்தர் போதும் எனக்கு, இந்த சமுதாயம் சாம்ரதாயம் பத்தி எனக்கு கவலை இல்லை... நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ண தான் நான் நல்ல இருப்பேன் ப்பா,"

"உங்களை தவிர வேற யாருக்கும் அந்த உரிமையை நான் தர மாட்டேன். அது என் மாமா அத்தையாக இருந்தாலும் சரி என்றவன் திரும்பி அவர்களையும் பார்த்து வருத்தம் நிறைத்த கண்களால் மன்னிப்பும் கேட்டான், பின் தந்தையிடம் திரும்பி...

" இங்க வாங்க... ப்பா என அவர் கை பிடித்து கெஞ்சவும் ...

பரணி ... "போங்க சம்மந்தி புள்ளைங்க மனசு சந்தோஷ இருந்த தான் அவங்க வாழ்க்கையும் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் யாரை பத்தியும் கவலை படாமல் போங்க யா ...

பாபி...
வலுக்கட்டாயமாக தன் தந்தை சிவாஜி வர வைத்து அவர் எவ்வளவோ மறுத்தும் விடாது , தாலி காட்ட மாட்டேன் என்று மிரட்டி பாத பூஜை செய்ததோடு நில்லாமல் பாவனையும் செய்வித்தான்.
சிவாஜிக்கு தான் மகனை நினைத்து மிகவும் பெருமையாகி இது வரை கண்ணீர் சிந்தது கடினமாய் இருத்தவருக்கும் கலங்கி போனது இதயம் , நடுங்கும் கையோடு நால்வர் தலையிலும் மலர் தூவி தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தான் பின்னே சென்றார்.

அதே நேரம் பவன் ஒரு படபடப்போடு தான் தாயை தேட...

புவனா பவனை பார்த்தப்படி அவன் பின்னே தான் சற்று தள்ளி தன் இழப்பை வாய் பொத்தி மகன் அறிய வண்ணம் மறைக்க முயற்சித்து கொண்டு இருந்தார் ,

கண்டு கொண்ட பவன், அவனுக்கு சற்று தள்ளி நின்று இருந்தவரை கண் ஜாடையிலியே அருகே வர சொல்ல,
தயங்கி தயங்கி வந்தவரை கை பிடித்து அருகே அழைத்து சேர்த்து நிற்க வைத்து அவர் கை மேல் முத்தமிட்டு சாய்த்தார் போல, கையை கெட்டியாக பிடித்து கொண்டான் அவரின் தவப்புதல்வன்...
மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களை கடந்து...

(பவனும் இதை செய்து இருக்க கூடும் ஆனால் அவன் தாயை பற்றி நான்கு அறிந்தவன்,தான் தந்தை துணை இல்லாது எந்த நல்லா காரியமும் செய்தது இல்லை... அவரின் இழப்புக்கு பிறகு அவர் இதற்க்கு ஒரு காலமும் சம்மதிக்கவும் மாட்டார். காலம் அதன் கோலத்தை மாற்றினாலும் பழமையில் ஊறிய பெண்கள் அதை தாண்டி வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மாறாது )

தாலி கொடி பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று வந்ததும்...கெட்டி மேளம் கெட்டி மேளம்....என
மேளம் கொட்ட, இரு ஜோடியும் ஒரே நேரத்தில் மலைசூடி, மங்கள நான் பூட்டினர்.

IMG_20191207_172652.JPG

தாலி காட்டும் முன் மணமகன் கட்டை விரல் கொண்டு மணப்பெண்ணின் கட்டை விரலில் பதித்த பின் தாலி கட்ட சொல்லவும், குஷி ஆகி போனது ஆண்கள் முகம், சின்ன சின்ன சீண்டல் நாணம் குறும்பு என படு சுவாரஸ்யமாக சென்றது திருமண விழா.
 

Maha

Author
Author
SM Exclusive Author
சரியாக தாலி காட்டும் போது சந்தோஷ உணர்ச்சி பெருக்கில் இரு பெண்களும் மூக்கு விடைக்க அழுது கரைய ரெடி ஆகவே,

ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி கண்சிமிட்டி தங்களின் சாகதர்மினியை சேர்த்து அணைத்து கொண்டே மூன்று முடிச்சை போட்டனர்.
IMG_20191207_172500.JPG
IMG_20190813_190310.JPG
இதில் பவன் இன்னும் அட்வான்ஸ் ஆக போயி, தன் காதலியை நெஞ்சோடு அணைத்து ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒவ்வொரு லவ் யூ, லவ் யூ என சொல்லி தன் மனைவியாக்கி உச்சி முகர்ந்து நெற்றி வகிட்டில் குங்குமம் இடவும்...

IMG_20190806_205005.JPG
லயா தன்னை கட்டு படுத்த முடியாமல் உதட்டை கடித்து திணறினாள்.பவன் அவள்முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டவன்...

ஸ்வீட்டு இதுவே நீ சிந்தும் கடைசி கண்ணீராய் இருக்கணும் என்றவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் சிரிக்கும் கண்களும் சிவந்து கலங்கி தன் போயி இருந்தது.

எத்தனையோ குழப்பங்களுக்கு பிறகு கிடைத்த தீர்வு அல்லவா இந்த நொடி.

இதை காண்பவர் கண்ணையும் கலங்கி விட தன் செய்தது. அதே மனநிலையில் அட்சதை தூவி மணமக்களை மனதார வாழ்த்தவும் செய்தனர் வந்து இருந்த பெரியோர்.
IMG_20191212_171601.JPG

IMG_20191207_172258.JPG

IMG_20191212_172342.JPG
பின் அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்து இன்னும் சில சம்பிரதாயங்கள் மோதிரம் தேடும் விளையாட்டு என நிறைவு செய்து முன்னே இருந்த பெரியோர் முன் விழுந்து வணங்கி ஆசி பெற்றதும்.

குல தெய்வ கோவிலுக்கு ஜோடியா சென்று வழிப்பட்டு சரியாக இன்னும் ஒரு முகூர்த்த நேரம் வரவும் மண்டபத்தில் இருந்து பவன் தான் மனைவியோடு அவர்கள் வீட்டுக்கும்,

பாபி தன் மனைவியோடு அவர்கள் சொந்த பந்தங்களோடு அவர்கள் இல்லத்துக்கு முகூர்த்த தேங்காய் உடைக்க சென்றனர்.

எல்லா காரியமும் நல்ல படியாக முடித்த திருத்தியோடு முகூர்த்த தேங்காய் உடைக்க பட்டதும், மருமகளை கொண்டு தயார் நிலையில் இருந்த பூஜை அறையில் விளக்கு ஏற்றி பின் பாலும் பழமும் கொடுத்து மணமக்களுக்கு தனிமையும் கொடுக்க அவர்கள் அறைக்கு அனுப்பி மாலை விழாவுக்கு தெம்பாக வர சற்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு .

பரணி புனிதாவும், பாபி ஸ்வரா வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கும் எல்லாம் முடித்து அன்று மாலையே ரிசெப்ஷன், இரவு சாந்தி முகூர்த்தம் தங்கள் இல்லத்தில் வைத்து இருப்பதால், மண்டபம் காலி செய்து பண்ணை வீட்டையும் காலி செய்து விட்டனர். மணமக்கள் மதியம் வரும் முன்னே எல்லாம் தயார் செய்ய முன்னே சில உறவினரோடு சென்னை கிளம்பி விட்டனர்.

பவன் அவன் அறைக்கு சென்ற அடுத்து சில நிமிடங்களில் லயாவும் அவன் அறை கதவருகே சென்றவளுக்கு ஏதோ ஒரு உணர்ச்சி குவியல், தயக்கம் வரவே கதைவை தட்ட ஓங்கிய கை அப்பிடியே நின்றது...

********
 

srinavee

Author
Author
SM Exclusive Author
Really nice episode...??? Situation song podrathu nallathu thaane... நமக்கும் கதைக்குள்ள போகிற ஃபீல கிடைக்கும்..
எல்லாமே நல்லா இருக்கு மஹாக்கா... Don't feel ???
 

Maha

Author
Author
SM Exclusive Author
Really nice episode...??? Situation song podrathu nallathu thaane... நமக்கும் கதைக்குள்ள போகிற ஃபீல கிடைக்கும்..
எல்லாமே நல்லா இருக்கு மஹாக்கா... Don't feel ???
ரொம்ப மகிழ்ச்சி மா ??
அந்த பீல் வர வைக்க தான் இத்தனை மெனக்கிடல்... maha happy da ?
 

Maha

Author
Author
SM Exclusive Author
Hai maha kaa.. vanthuten vanthuten.. pavan laya vaa vida boobi swara part aavala ethirpaarkuren.. ???
Hai chellame ?enga da poyite ellam nalam dhane.
so happy da neenga ellam illana indha site aluthu vadiyuthu ma?
parava illa sikiram vanthute...
Ini arambi unnoda kacheri kalai kattatum kanna . ???

Bobby swara honemoon varum ok va ?haha? nallave irrukum dont wry ok va nandri ma ennai marakamal teidi vandathukku ??
 

Advertisements

Advertisements

Top