• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
50. முதல் தண்டனை



1907- ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி வந்தது. அன்று டிரான்ஸ்வால் எங்கும் இந்தியர்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு அநுமதிச் சீட்டுப் பெறும் காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இந்தக் காரியாலயங்களுக்கு அருகில் சத்தியாக் கிரஹத் தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.. விஷயம் தெரியாததினாலோ அல்லது பயத்தினாலோ பதிவு செய்து கொள்ள வரும் இந்தியர்களுக்குச் சாத்வீக முறையில் எச்சரிக்கை செய்வதற்காகவே தொண்டர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். தொண்டர்களுக்கென்று தனியாக ஒரு அடை யாளம் கொடுக்கப் பட்டிருந்தது. முரட்டுத்தனமாகவோ அவமரியாதையாகவோ பேசக் கூடாதென்றும், லவலேசமும் பலாத்காரத்தைக் கையாளக் கூடாதென்றும் தொண்டர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருந்தது. கறுப்புச் சட்டத் துக்கு உட்படுவதால் இன்னின்ன தீமைகள் விளையும் என்பதைக் கூறும் அச்சுப் பிரசுரத்தைக் கொடுத்து விட்டு, அதில் கண்ட விவரங்களை விளக்கிச் சொல்வதே தொண்டர்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் போலீஸார் தலையிட்டுத் தொண்டர்களை வைதாலும் அடித்தாலும் தொண்டர்கள் பொறுமையாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுக்க முடியாமற் போய்விட்டால் அங்கிருந்து அப்புறம் போய்விட வேண்டும். போலீஸார் கைது செய்தால் சந்தோஷமாகச் சிறைக்குப் போக வேண்டும்.

இவ்விதமாக, சாத்வீக மறியல் என்னும் ஆயுதமான து 1907-ம் வருஷத்திலேயே காந்திஜியினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தைக் காந்திஜி பிற்காலத்தில் இந்தியாவில் பற்பல துறைகளிலும் உபயோகப்படுத்தினார். கள்ளுக்கடை மறியல், விதேசி ஜவுளிக் கடை மறியல் முதலியவை நடந்தன. இந்தச் சாத்வீக மறியல் முறையினாலேயே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்த முறையை ஆரம்பித்த போது அது முற்றும் புதுமையா யிருந்தபடியால் பல தொல்லைகள் ஏற்பட்டன. "வெறுமனே 'அப்பா ஐயா!' என்று கெஞ்சினால் யார் கேட்பார்கள் ? " என்று எண்ணிய இந்தியர்கள் சிலர் இருந்தார்கள். இவர்கள் இரகசியமாகப் பயமுறுத்தல் முறைகளைக் கையாண்டார்கள். பயமுறுத்தலுக்கு உள்ளானவர்கள் உடனே சர்க்காரின் பாதுகாப்பைக் கோரினார்கள். சர்க்காரின் பாதுகாப்பு உடனே கிடைத்தது. இது காரணமாக இந்திய சமூகத்தில் பலவீனமும் பிளவும் ஏற்பட்டன. சில பிரபல வியாபாரிகள் இராத்திரி பத்து மணிக்கு மேலே பதிவுக் காரியாலயங்களுக்குச் சென்று பதிவு செய்து கொண்டார்கள். இம்மாதிரி சுமார் ஐந்நூ று இந்தியர்கள் வரையில் பதிவு செய்து கொண்டு அநுமதிச் சீட்டுப் பெற்றார்கள்.

ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் இதனால் திருப்தி அடைய வில்லை. சட்டம் அமுலுக்கு வந்து சில மாதங்கள் ஆகியும், சுமார் பன்னிரண்டாயிரம் இந்தியர்களில் ஐந்நூறு பேர் தான் புதிய சட்டத்துக்கு உட்பட்டார்கள் என்பது சர்க்காருக்கு அவமானந் தரும் நிலைமை அல்லவா ? ஆகவே அடக்கு முறையைக் கையாள வேண்டியதுதான் என்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.

முதன் முதலில் அத்தகைய அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவரின் பெயர் பண்டித ராமசுந்தரம். இவர் வட இந்தியர், பிரசங்கத் திறமை வாய்ந்தவர். சம்ஸ்கிருத சுலோகங்களும் துளசிதாஸ் ராமாயணப் பாடல்களும் சொல்லக் கூடியவர். ஜெர்மிஸ்டன் என்னுமிடத்தில் இவர் இருந்தார். அந்த ஊரில் வசித்த இந்தியர்களிடையில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந் தார். அந்த ஊரிலிருந்த இந்தியர்கள் இவராலேதான் பதிவு செய்து கொள்ள முன்வரவில்லை யென்று அதிகாரிகள் கருதி இவரைக் கைது செய்தார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. தென்னாப் பிரிக்கா முழுவதும் இவருடைய பெயர் பிரசித்தியாயிற்று. இந்தச் சம்பவத்தின் பயனாக இந்தியர்களின் உறுதியும் உற்சாகமும் அதிகமாயினவே தவிரக் குறையவில்லை. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறைக்குப் போகத் தயாரானார்கள். ஜெர்மிஸ்டனில் ஒரு இந்தியர்கூடப் பதிவு செய்து கொள்ளவில்லை.

அதிகாரிகளின் கோபம் அதிகமாயிற்று. ஜோகானிஸ்பர்க்கில் இருந்து இயக்கத்தை நடத்தி வைத்த முக்கியமான தலைவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தாலன்றிச் சட்டத்தை அமுல் நடத்த முடியாது என்று தீர்மானித்தார்கள். எனவே சில முக்கியமான இந்தியத் தலைவர்களைப் பொறுக்கி எடுத்து, 1907-ம் வருஷம் டிசம்பர் 28௳ கோர்ட்டில் ஆஜராகி, அவர்கள் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

இப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட தலைவர்களில் காந்திஜி ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. இன்னொருவர் குவின் என்னும் சீனர். இந்தியர்களைப் போலவே சீனர்களும் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுத்தப் பட்டார்கள். ஆகையால் சீனர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்திருந்தார்கள்.

இன்னொரு தலைவர் பெயர் தம்பி நாயுடு. இவருடைய பெற்றோர்கள் தமிழ்-நாட்டிலிருந்து மோர்சி எனப்படும் மொரீஷஸ் தீவுக்குச் சென்று குடியேறியவர்கள். அந்தத் தீவில் பிறந்தவர் தம்பி நாயுடு. இந்தியா தேசத்தை அவர் பார்த்ததே யில்லை. ஆயினும் தாய்நாடாகிய இந்தியா மீது அவர் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை யென்று காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார். இன்னும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி மிக வியந்து எழுதியிருக்கிறார். இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி முதலிய பல பாஷைகள் தம்பி நாயுடுவுக்குத் தெரியுமாம். நீகிரோ பாஷைகூடத் தெரியுமாம். எந்த வேலையையும் மட்டமான து என்று அவர் நினைக்க மாட்டாராம். பொது கூட்டத்துக்குத் தலைமை வகிக்க நேர்ந்தாலும் வகிப்பாராம். தலையில் மூட்டை தூக்கிக் கொண்டு சாலையில் போக வேண்டி வந்தாலும் போவாராம். சமூகத்துக்காகச் சர்வ பரித் தியாகமும் செய்வதற்குத் தயாராயிருந்தாராம். இரவு பகல் என்று பாராது பொது வேலைகளில் ஈடுபடுவாராம். "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்தின் சரித்திரத்தில் தம்பி நாயுடுவின் பெயர் எப்போதும் நிலைபெற்று விளங்கும்" என்கிறார் காந்தி மகான்.

குறிப்பிட்ட தினத்தில் 'நோட்டீசு' கிடைத்தவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போனார்கள். யாரும் எதிர் வழக்கு ஆடவில்லை. ஆகவே, 'இரண்டு வாரத்திற்குள் அவர்கள் கறுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது டிரான்ஸ்வாலை விட்டுப் போய்விடவேண்டும்' என்று மாஜிஸ்ட்டிரேட் தீர்ப்பு அளித்தார்.

ஆனால் அந்தத் தீர்ப்பின்படி ஒருவரும் பதிவு செய்து கொள்ளவும் இல்லை; டிரான்ஸ்வாலை விட்டுப் போகவும் இல்லை. 1908-ம் வருஷம் ஜனவரி 10-ம் தேதி தவணை தீர்ந்தது. அன்று எல்லோரும் மறுபடியும் கோர்ட்டுக்கு வரவழைக்கப்-பட்டார்கள். மாஜிஸ்ட்டிரேட்டின் உத்திரவை மீறிய குற்றத்தைச் செய்ததாக எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள்.

கோர்ட்டில் இந்த விசாரணை ஆரம்பமாகிக்கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டோரியாவிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கேயும் சில இந்தியத் தலைவர்கள் இதே மாதிரி விசாரணை செய்யப்பட்டு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனையும் அதைத் தவிரப் பெருந் தொகை அபராதமும் விதிக்கப்பட்டனர் என்று தெரிந்தது. உடனே காந்திஜி தாம் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புவதாகவும் அதற்குக் கோர்ட்டார் அநுமதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதுவரை ஒன்றுமே சொல்வதற்கில்லை யென்று சொல்லி வந்த காந்திஜி இப்போது வாக்குமூலம் கொடுப்பதாகச் சொன்னதும் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் சிறிது வியப்பா யிருந்தது. ஒரு வேளை, காந்திஜி பயந்துபோய்ப் பணிந்து விடுவதாகச் சொல்லப் போகிறாரோ என்று எண்ணினார். அவருடைய கோரிக்கையின்படி வாக்குமூலம் கொடுக்க அநுமதி தந்தார். காந்திஜியின் சகாக்களும் மற்றும் விசாரணையைக் கவனிப்பதற்காகக் கோர்ட்டில் கூடியிருந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களும் "காந்திஜி என்ன சொல்லப் போகிறாரோ?" என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காந்திஜி கொடுத்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான் :- "கறுப்புச் சட்டத்துக்கு இந்தியர்கள் உட்படக் கூடாது என்கிற இயக்கத்தை ஆரம்பித்தவனும் அதற்குத் தலைமை வகித்து இதுவரை நடத்தி வந்தவனும் நான். ஆகையால் சட்டத்தை மீறிய மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமாகவும் கடுமையாகவும் தண்டனை கொடுக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன்."

இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட் திணறிப்போனார். காந்திஜியைத் தண்டிக்க அவருக்கு மனம் வரவில்லை. தண்டியாமலிருக்கச் சட்டம் இடந்தரவில்லை. எனினும் காந்திஜியின் கோரிக்கையை நிறைவேற்ற அவர் மறுத்து இரண்டு மாதம் வெறுங்காவல் தண்டனை அளித்தார். அவ்விதம் தீர்ப்பு அளிக்கப்பட்டவுடனே காந்திஜியைப் போலீசார் சூழ்ந்து சிறைச்சாலைக்குக் கொண்டுபோனார்கள்.

இவ்விதமாக, 1908-ம் வருஷம் ஜனவரி-10 உலக சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
51. முதல் ராஜி



முதல் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டவுடனே காந்திஜி சிந்தனையில் ஆழ்ந்தார். என்ன விதமான சிந்தனை என்பதைக் காந்திஜியே எழுதியிருக்கிறார் :

"வீடு, கோர்ட்டு, பொதுக்கூட்டம் எல்லாம் கனவிலே தோன்றுவதுபோல் என் மனத்தில் தோன்றி மறைந்தன. நான் இப்போது ஒரு கைதி. இரண்டு மாதம் சிறைத்தண்டனை பெற்றவன். இந்த இரண்டு மாதத்துக்குள் என்ன நடக்கும்? இரண்டு மாதமும் நான் சிறையிலேயே கழிக்க வேண்டி நேரிடுமா? ஜனங்கள் பொதுக்கூட்டத்தில் சபதம் செய்ததற்கு இணங்க நடந்து கொண்டால், வெகு சீக்கிரத்தில் சிறைகளை நிரப்பிவிடுவார்கள். அப்போது தண்டனையை முழுதும் அநுபவிக்க வேண்டியிராது. விரைவிலேயே விடுதலை கிடைக்கும்? ஆனால் ஜனங்கள் சும்மா இருந்து விட்டால்?......

இந்தச் சிறையில் இரண்டு மாத காலம் எப்படிக் கழிப்பது ? இரண்டு மாதம் இரண்டு யுகம்போலத் தோன்றும். இந்த எண்ணங்க ளெல்லாம் மின்னல் வேகத்தில் ஒரு நொடிப்பொழுதில் தோன்றிச் சென்றன. அடுத்த நிமிஷம், மேற்கண்ட விதமான எண்ணங்கள் என் மனத்தில் தோன்றியது குறித்து வெட்கம் அடைந் தேன். விடுதலையைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும் ? ஜனங்களுக்கெல்லாம் நான் உபதேசம் செய்ததென்ன ? இப்போ து சிந்திப்பது என்ன ? சிறைச்சாலைகளை அரசாங்கத்தின் விருந்து விடுதிகளாகக் கருதவேண்டும் என்றும், கருப்புச் சட்டத்துக்கு உட்படுவதைக் காட்டிலும் சிறைவாசம் சொர்க்கலோகத்துக்கு இணையாகும் என்றும், கறுப்புச் சட் டத்தை எதிர்க்கச் சகல பரித்தியாகங்களும் செய்யச் சித்தமா யிருக்க வேண்டும் என்றும் பேசி வந்தேன். இப்போது ஏன் விடுதலையைப் பற்றியோ சிறைவாசத்தின் பலா பலன்களைப் பற்றியோ நான் கருத வேண்டும் ?- இந்த இரண்டாவது எண்ணத்தினால் என் மனம் தெளிவடைந்தது."

காந்திஜி இவ்விதமான சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கையில், வெளியே ஜோகானிஸ்பர்க் நகரில் ஏக அமர்க்களமா யிருந்தது. காந்திஜி சிறைப்பட்ட செய்தியை அறிந்ததும் இந்தியர்கள் பலர் மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். கையில் கறுப்புக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றார்கள். வரவர ஊர்வலத்தில் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. போலீஸார் தலையிட்டார்கள். ஊர்வலத்தைப் பலாத்காரமாகக் கலைத்தார்கள். ஊர்வலத்தில் சேர்ந்திருந்த பல இந்தியர்கள் போலீஸாரின் பிரம்படிக்கு உள்ளானார்கள்.

காந்திஜிக்குப் பிறகு அவருடைய சகாக்களையும் மாஜிஸ்ட் ரேட் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார். அப்படித் தண்டனை அடைந்தவர்கள் அனைவரையும் காந்திஜி இருந்த கொட்டடிக்கே கொண்டுவந்து அடைத்தார்கள். ஒரே இடத்தில் அடைக்கப்பட்டதனால் எல்லாருக்கும் உற்சாகமாக இருந்தது. காந்திஜி சிறைக்கு வந்த பிறகு நடந்த சம்பவங்களைப் பின்னால் வந்தவர்கள் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.

ஆறு மணிக்குச் சிறைக் கொட்டடியின் கதவைப் பூட்டி விட்டார்கள். அது இரும்புக்கம்பிக் கதவு அல்ல. முழுதும் இரும்புத் தகட்டினால் அடைத்திருந்த கதவு. சுவரில் உச்சியில் ஒரு சிறு ஜன்னல் மட்டுந்தான் இருந் தது. மற்றப்படி அவர்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டி யில் போட்டுப் பூட்டி விட்டது போலத் தோன்றியது. ஆயினும் காந்திஜியாவது அவருடைய சகாக்களாவது மனந்தளரவில்லை. இதைப்போல் இன்னும் பல பயங்கரமான கஷ்டங்களுக்கும் அவர்கள் தங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

முதன் முதலில் சத்தியாக்கிரஹக் கைதியான பண்டிதர் ராமசுந்தரம் என்பவருக்குச் சிறையில் சகல செளகரியங்களும் செய்து கொடுக்கப் பட்டன. அவர் முதல் கைதி; அதோடு தனிக் கைதி. ஆனால் காந்திஜியும் அவருடைய சகாக்களும் கூட்டமாக வந்தபடியால் சிறையில் அவர்களுக்கு எவ்வித வசதியும் அளிக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்கா சிறைச்சாலைகளுக்குள்ளேயும் வெள்ளைக் கைதிகள் - கறுப்புக் கைதிகள் என்று இரு பிரிவுகள் இருந்தன. இதுவரை கறுப்புக் கைதிகள் என்றால் நீக்ரோக் கைதிகளாகவே இருந்தனர். இப்போது, இந்தியர்களும் நீக்ரோப் பகுதியில் சேர்க்கப் பட்டனர்.

சிறையில் உள்ள கஷ்டங்களுக்கு மேலே காந்திஜி அதிகப்படி கஷ்டங்களை தேடிக்கொண்டார். வெறுங்காவல் கைதிகள் தங்கள் சொந்த உடைகளை உடுத்திக்கொள்ளலாம் என்பது சிறைச்சாலை விதி. இந்தியக் கைதிகளில் வெறுங்காவல் கைதிகளும் இருந்தார்கள் ; கடுங்காவல் கைதிகளும் இருந்தார்கள். பின்னால் தண்டிக்கப் பட்டவர்கள் எல்லாரும் கடுங்காவல் தண்டனையே பெற்றார்கள். காந்திஜி கடுங்காவல் கைதிகளைப்போலச் சிறைச்சாலை உடையே தரிப்பேன் என்று வற்புறுத்தினார். அதன்படியே அவருக்குக் கடுங்காவல் உடை கொடுக்கப் பட்டது.
அடுத்த சில தினங்களில் மேலும் பல இந்திய சத்தியாக் கிரஹக் கைதிகள் சிறைக்கு வந்தார்கள். இவர்களில் பெரும் பாலோர் வீதி வியாபாரிகள். அதாவது துணி மூட்டையோ அல்லது வேறு சாமானோ தெருத்தெருவாய்க் கொண்டு போய் விற்கிறவர்கள். இவர்களிடம் போலீஸார் லைஸென்ஸ் காட் டும்படி கேட்டதும், இவர்கள் 'இல்லை' என்று பதில் சொன் னார்கள். உடனே இவர்களைப் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தித் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இப்படியாக ஒரு வாரத்திற்குள் சத்தியாக்கிரஹக் கைதிகள் நூற்றெண்பது பேர் சிறைக்கு வந்து விட்டார்கள்.

சிறையில் கொடுத்த சாப்பாடு மிகவும் மோசமாயிருந்தது. சமைக்கும் விதம் அதைவிடக் கேவலமாயிருந்தது. உணவுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய முயன்றும் முடியவில்லை. கடைசியில் "கொடுக்கிற சாமானைக் கொண்டு நாங்களே சமைத்துக் கொள்கிறோம்" என்று கேட்டார்கள். அந்த உரிமை அளிக்கப் பட்டது. தம்பி நாயுடு சமையல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு சிறைச் சாப்பாடு கொஞ்சம் சுமாராயிற்று.

காந்திஜி சிறை புகுந்து இரண்டு வாரம் ஆன பிறகு, புதிதாகச் சிறைக்கு வந்தவர்கள் வெளியில் ஏதோ ராஜிப் பேச்சு நடை பெறுவதாகச் செய்தி கொண்டுவந்தார்கள். ராஜிப் பேச்சு ஆரம்பமாகியிருந்தது உண்மைதான். "டிரான்ஸ்வால் லீடர்" என்னும் பத்திரிகை ஆசிரியரான மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் என்பவர் மேற்படி ராஜிப் பேச்சுக்குக் காரண பூதரா யிருந்தார். மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் கெட்டிக் காரர் ; அத்துடன் விசால உள்ளம் படைத்தவர். ஏற்கெனவே காந்திஜியுடன் பழகி அவருடைய மேன்மைக் குணங்களை அறிந்திருந்தார். தம் பத்திரிகையில் இந்தியரின் கட்சியை ஓரளவு ஆதரித்தும் எழுதி வந்தார். காந்திஜி சிறை புகுந்த பிறகு மிஸ்டர் கார்ட்ரைட் தளபதி ஸ்மட்ஸைப் பார்க்கச் சென்றார். இந்தியத் தலைவர்களுடன் எப்படியாவது ராஜியாகப் போகவேண்டும் என்று வற்புறுத்தினார். தளபதி ஸ்மட்ஸ் அதற்கிணங்கியதோடு, "நீரே சமாதானத் தூதராகச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேசும். அவர்கள் ராஜிக்கு வருகிறார்களா என்று கேட்டுப் பாரும்" என்றார்.

மிஸ்டர் கார்ட்ரைட் முதலில் வெளியிலிருந்த தலைவர்களைப் போய்ப் பார்த்தார். அவர்கள், "எங்களைக் கேட்டுப் பயனில்லை. ராஜி பேசும் உரிமை உள்ளவர் காந்திஜிதான். அவர் எந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டாலும் அதை நாங்களும் ஒப்புக் கொள்ளத் தயார்!" என்றார்கள்.

அதன்மேல் மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று காந்திஜியைப் பார்த்துப் பேசத் தீர்மானித்தார். அதற்கு முன்னால் தளபதி ஸ்மட்ஸுடன் கலந்து ஆலோசித்துச் சில ராஜி நிபந்தனைகளைத் தயாரித்துக் கொண்டார். ராஜி நிபந்தனைகளில் முக்கியமான அம்சம் என்னவென்றால் : இந்தியர்கள் தாங்களாகவே வலுவில் சென்று தங்களுடைய பெயர் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது. அப்படிச் செய்ய சம்மதித்தால் கறுப்புச் சட்டத்தை டிரான்ஸ்வால் சர்க்கார் ரத்து செய்துவிடுவார்கள்.

மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று இந்த ராஜி நிபந்தனையைக் காந்திஜியிடம் தெரிவித்தார். அதை இந்தியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார். "கறுப்புச் சட்டம் இந்திய சமூகத்தை இழிவு செய்கிறது என்பது தானே உங்களுடைய ஆட்சேபம் ? சட்டத்தை எடுத்துவிட்டால் அந்த ஆட்சேபம் போய்விடுகிறதல்லவா? இந்தியர்கள் புதிதாக டிரான்ஸ்வாலுக்குள் வருவதைக் கட்டுப்படுத்தவே டிரான்ஸ்வால் சர்க்கார் விரும்புகிறார்கள். அதற்காக ஏற்கெனவேயுள்ள இந்தியர்களைப்பற்றி எல்லா விவரங்களும் ஊர்ஜிதமாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். நீங்களாகவே இந்தக் காரியத்தைச் செய்துவிடுவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் ? " என்று வாதம் செய்தார்.

காந்திஜி இதை ஒப்புக்கொண்டார். ஆனால் ராஜி நிபந்தனைகளின் வாசகத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று சொன்னார். மிஸ்டர் கார்ட்ரைட் முதலில், "அதெல்லாம் முடியாது ; இதில் திருத்தம் எதையும் ஸ்மட்ஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்" என்றார். அதற்குக் காந்திஜி, 'ராஜி நிபந்தனை வாசகத்தில் சந்தேகத்துக்கு இடம் இருக்கக்கூடா தல்லவா ? கொஞ்சங்கூட மாற்றக்கூடாது என்றால், அதற்கு ராஜி என்று என்ன பெயர்?" என்று கேட்டார். கடைசியாக, “சரி ; உங்கள் விருப்பத்தின்படியே திருத்திக் கையெழுத்திட்டுக் கொடுங்கள். ஸ்மட்ஸிடம் போய்ப் பார்க்கிறேன்" என்றார் மிஸ்டர் கார்ட்ரைட்.

தம்பி! இந்தமாதிரி ராஜி நிபந்தனையைக் காந்திஜி ஒப்புக் கொண்டதுபற்றி உனக்கு ஆச்சரியம் ஏற்படலாம். "சட்டப்படி பதிவு செய்துகொண்டால் என்ன ? சட்டமில்லாமல் பதிவு செய்து கொண்டால் என்ன ? காரியாம்சத்தில் இரண்டும் ஒன்றுதானே ?" என்று உனக்குத் தோன்றலாம்.

உண்மையில், இரண்டுக்கும் மிக்க வித்தியாசம் உண்டு, நாமே சுயமாகச் செய்யக்கூடிய காரியமா யிருந்தபோதிலும், பிறர் அதைச் செய்யும்படி நம்மைக் கட்டாயப் படுத்துவதற்கு உட்பட்டால் அது நம்முடைய சுயமதிப்புக்குப் பங்கமாகிறது. அடுத்த வீட்டுக்காரனுடைய சௌகரியத்தை முன்னிட்டு நம்மை நாமே சில நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்திக்கொள்ளச் சம்மதிக்கலாம். ஆனால் அடுத்த வீட்டுக்காரன் நம்மைப் பல வந்தப் படுத்தினால் அதற்கு உட்படுவ தற்கு நாம் விரும்ப மாட்டோமல்லவா ?
இன்னொரு விஷயத்தையும் நீ நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். காந்திஜியின் அஹிம்சைப் போர் முறைக்கும் மற்றவர்களின் பலாத்காரப் போர் முறைக்கும் ராஜிப் பேச்சு விஷயத்தில் மிக்க வித்தியாசம் உண்டு. பலாத்கார முறையில் எதிரியைத் தோற்கடித்துச் சரணாகதி அடையும்படி செய்கிறார்கள் ; அல்ல து அடியோடு அழித்துவிடுகிறார்கள். அஹிம்சைப் போர் முறையில் அப்படியல்ல. எதிரியின் மனத்தை மாற்றுவதுதான் அஹிம்சை முறையின் முக்கிய நோக்கம். எதிரியின் மனம் சிறிதளவு மாறியிருப்பதாகத் தெரிந்தாலும் அஹிம்சை வீரன் திருப்தியடைகிறான் ; ராஜி பேசுவதற்குத் தயாராகிறான் ; எதிரியின் மனம் வேதனையடையாத வகையில், அவனுடைய சரணாகதியை எதிர்பாராமல், விட்டுக்கொடுத்து ராஜி செய்துகொள்ள எப்போதும் சித்தமாயிருக்கிறான். இதனால் எதிரியின் உள்ளம் மேலும் மாறுதலடையும் என்று நம்புகிறான்.

எதிரியை அடியோடு அழித்து வெற்றியடைவது பலாத் காரப் போரின் நோக்கம். எதிரியைச் சிநேகிதனாக்கிக்கொண்டு வெற்றியடைவது அஹிம்சை முறையின் நோக்கம். எனவே, அஹிம்சை முறையைப் பின்பற்றுவோர் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரியுடன் ராஜி செய்து கொள்வதற்குச் சித்தமாயிருக்க வேண்டும். சட்டத்தை எடுத்துவிடுகிறோம் என்று சொல்லும் அளவுக்குத் தளபதி ஸ்மட்ஸ் இறங்கி வந்தது அஹிம்சையின் வெற்றி என்று காந்திஜி கருதினார். சட்டத்தின் கட்டாயம் இல்லாமல் நாமாகச் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதில் தம் மதிப்புக்குப் பங்கம் ஒன்றும் இல்லையென்றும் கருதினார், ஆகையினாலேதான் மகாத்மா ராஜிப் பேச்சுக்கு உடன்பட்டார், மிஸ்டர் கார்ட்ரைட் கொண்டு வந்திருந்த நகல் ராஜி நிபந்தனைகளில் தாம் அவசியமெனக் கருதிய திருத்தங்களைச் செய்து கையொப்பமிட்டார். மிஸ்டர் குவின், ஸ்ரீ தம்பி நாயுடு இவர்களும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள்.

மிஸ்டர் கார்ட்ரைட் வந்துபோன இரண்டு நாளைக்கெல் லாம் ஜோகானிஸ்பர்க் போலீஸ் தலைவர் மிஸ்டர் வெர்னன் வந்து காந்திஜியைச் சிறையிலிருந்து விடுவித்துப் பிரிடோரியாவுக்கு அழைத்துப் போனார். அங்கே காந்திஜி தளபதி ஸ்மட்ஸைச் சந்தித்தார். ஸ்மட்ஸ் மிக்க பவ்யமாகப் பேசினார். "நீங்கள் சிறைக்குப் போன பிறகும் இந்திய சமூகம் இவ்வளவு உறுதியுடனிருந்ததை நான் பாராட்டுகிறேன். இந்திய சமூகத்தின் பேரில் எனக்கு வெறுப்பு என்பதே கிடையாது. ஆனால் இங்கேயுள்ள ஐரோப்பியர்கள் பெரும்பாலோரின் அபிப்பிராயத்தை யொட்டி நான் என் கடமையைச் செய்யவேண்டி யிருக்கிறது. நகல் நிபந்தனைகளில் நீங்கள் செய்துள்ள திருத்தங்களை ஒப்புக்கொள்கிறேன். உங்களில் பலர் சுயமாகப் பதிவு செய்துகொண்டதாகத் தெரிந்ததும் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி கூறுகிறேன். இனிமேல் இந்த மாதிரி சங்க டமே ஏற்படக்கூடாது என்பது என் விருப்பம் ! இனி நீங்கள் போகலாம்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.

"நான் எங்கே போகட்டும் ? மற்றக் கைதிகளின் விஷயம் என்ன ?" என்று காந்தி மகாத்மா கேட்டார்.

"நீங்கள் இந்த நிமிஷத்திலிருந்து சுயேச்சை யடைந்துவிட் டீர்கள். இனி எங்கே வேண்டுமானாலும் நீங்கள் போகலாம். மற்றக் கைதிகள் எல்லாரையும் நாளைக் காலையில் விடுதலை செய்துவிடுவார்கள்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.

அப்போது மாலை ஏழு மணி இவ்வளவு லகுவாகத் தமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று காந்திஜி எதிர்பார்க்கவேயில்லை - அவர் கையிலோ காலணா இல்லை. ஜோகானிஸ்பர்க்குக்குப் போக ரயில் சத்தம் தளபதி ஸ்மட்ஸின் காரியதரிசியிடமிருந்து காந்திஜி பெற்றுக்கொண்டார். பிரிடோரியாவிலிருந்து ஜோகானிஸ்பர்க் போக ஒரே ஒரு வண்டி தான் பாக்கியிருந்தது. காந்தி விரைவாகச் சென்று அந்த வண்டியைப் பிடித்து ஏறினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
52. "ஹே ராம்!"



தம்பி ! இந்த வருஷம் ஜனவரி மாதம் 30ந் தேதி டில்லியில் நடந்த மகா பாதகச் செயலின் விவரங்களை நீ மறந்திருக்க மாட் டாய். கொலைபாதகன் ஒருவன் காந்தி மகாத்மாவுக்கு அஞ்சலி செய்ய வந்தவனைப் போல நடித்து அவர்மீது நாலு குண்டுகளைச் சுட்டான். முதல் குண்டு பட்டதும் மகாத்மா "ஹே ராம்!" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழுந்தார். இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதல்லவா ?

தென்னாப்பிரிக்காவில் 1908-ம் வருஷத்தில் ஒருமுறை காந்தி மகாத்மா "ஹே ராம் !" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழும்படி நேர்ந்தது. முரட்டுப் பட்டாணியன் ஒருவன் அவரைத் தடியினால் மண்டையில் அடித்ததினால் அவ்விதம் அவர் விழும்படி ஆயிற்று. உலகத்தின் பாக்கிய வசத்தினால் அம்முறை காந்தி மகானின் உயிருக்கு ஆபத்து நேரவில்லை. மூர்ச்சையடையும்படியாக மட்டும் ஏற்பட்டது. அந்த அற்புத சம்பவத்தைப்பற்றி இப்போது நீ தெரிந்துகொள்ளப்போகிறாய்,
பிரிடோரியாவில் ரயில் ஏறிய காந்திஜி இரவு ஒன்பது மணிக்கு ஜோஹானிஸ்பர்க் வந்து சேர்ந்தார். சத்தியாக்கிரஹ சபையின் தலைவரான சேத் எஸ்ஸப் மியான் என்பவரின் வீட் டுக்கு நேரே போனார். ராஜிப்பேச்சைப்பற்றி எஸ்ஸப் மியானும் மற்ற இந்திய நண்பர்களும் அறிந்திருந்த போதிலும் இவ்வளவு விரைவில் காந்திஜி விடுதலையடைந்து போலீஸ் பாராவும் சிறை வார்டரும் இல்லாமல் வந்து சேர்வார் என்று நினைக்கவில்லை. எல்லாரும் அதிசயமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அன்று இரவு பன்னிரண்டு மணிக்குப் பொதுக் கூட்டம் கூட்டுவ தென்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தியப் பிரமுகர்களும் சிநேகிதர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களுக்கு ராஜி நிபந்தனைகளைப்பற்றிக் காந்திஜி விவரமாக எடுத்துக் கூறினார். பெரும்பாலோர் திருப்தி அடைந்தார்கள். இரண்டொருவர் ராஜியை எதிர்த்துப் பேசித் தங்கள் சந்தேகங்களை வெளியிட்டார்கள். "சட்டத்தின்படி பதிவு செய்து கொள்வதற்கும் நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் அப்படி என்ன வித்தியாசம் ? மேலும் கறுப்புச் சட்டத்தை எடுத்த பிறகு நாமாகப் பதிவு செய்துகொண்டாலும் அர்த்தம் உண்டு. நாம் பதிவு செய்துகொண்ட பிறகு கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பது என்ன நிச்சயம் ? ஸ்மட்ஸ் வாக் குறுதி பிறழ்ந்துவிட்டால் நாம் என்ன செய்யமுடியும் ? " என்று, கேட்டார்கள். அவர்களுக்குச் சந்தேகம் தீர்ந்து ராஜியை ஒப்புக் கொள்ளுமாறு காந்திஜி பதில் சொன்னார். அதன் விவரம் பின் வருமாறு:

"இத்தகைய ஆட்சேபத்தைக் கிளப்புவது நியாயந்தான். கறுப்புச் சட்டத்தை ரத்து செய்த பிறகு நாம் வலியச் சென்று பதிவு செய்து கொள்வது என்று ஏற்பாடாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ராஜி என்று ஏற்படும் போது இரண்டு கட்சியாரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தே தீரவேண்டும். கொள்கைப் பற்றிய விஷயங்களில் விட்டுக் கொடுக்கக் கூடாதே தவிர மற்ற அம்சங்களில் விட்டுக் கொடுத்தால் தான் அது ராஜியாகும். 'கறுப்புச் சட்டத்துக்கு உட்படக் கூடாது' என்பது நம்முடைய அடிப்படையான கொள்கை. வேறு விதத்தில் ஆட்சேபமில்லாத காரியங்களைக் கூடச் சட்டத்தின் பலவந்தத்துக்காக நாம் செய்யத் தயாரா யில்லை. சர்க்காரின் அடிப்படையான கொள்கையோ, 'புதிய இந்தியர்கள் சட்ட விரோதமாக டிரான்ஸ்வாலுக்குள் நுழையக் கூடாது ; இதைத் தடுக்க வேண்டுமானால் ஏற்கெனவே யுள்ள இந்தியர்கள் சர்க்காரிடம் சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது. ஒருவருடைய சர்டிபிகேட்டை இன்னொருவர் சட்ட விரோதமாக உபயோகிக்க இடமில்லாதபடி சர்டிபிகேட்டில் தகுந்த அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். சர்க்காருடைய இந்தக் கொள்கையை நாம் ஒப்புக் கொண்டு அதற்கு அநுகுணமாக நடந்து வருவதாகச் சொல்லி யிருக்கிறோம். சட்டம் இயற்றுவதைத்தான் ஆட்சேபித்திருக்கிறோம். ஓர் உதாரணம் சொல்கிறேன். யாராவது ஒருவரை நாம் சந்தித்தவுடனே 'நமஸ்காரம்' என்று சொல்லி வணங்குகிறோம். இது நாமாகச் செய்வது. ஆனால், என்னைக் கண்டதும் நீ வணங்கி நமஸ்காரம் செய்யவேண்டும் என்று பலவந்தம் செய்தால், அதற்கு இணங்க நாம் உட்படுவோமா ? மாட்டோம்' என்று தான் சொல்லுவோம். இதுபோலவே கறுப்புச் சட்டத்துக்கு உட்பட மறுத்ததற்கும் இப்போது நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. தளபதி ஸ்மட்ஸ் வாக்குறுதி பிறழ்ந்து விட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு கேள்வி. தன்னுடைய கட்சியின் நியாயத்தில் நம்பிக்கையுள்ள சத்தியாக்கிரஹிக்கு இத்தகைய சந்தேகம் உதவாது. எதிராளி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பான் என்றே நாம் நம்ப வேண்டும். அப்படி எதிராளி வாக்குறுதி மீறும் பட்சத்தில் நம்மிடமுள்ள சாத்தியாக்கிரஹ ஆயுதம் எங்கே போகிறது ? மறுபடியும் அதே ஆயுதத்தைக் கையாண்டு வெற்றி பெறுவோம்."

காந்திஜி இவ்வாறு விளக்கிச் சொன்ன பிற்பாடு முதலில் சந்தேகப் பட்டவர்களும் ராஜியை ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்கு நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வளவு சுலபமாகக் காரியம் நடக்கவில்லை. சுமார் ஆயிரம் இந்தியர்கள் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். இவர்களில் பட்டாணி முஸ்லிம்கள் சிலரும் இருந்தார்கள். நண்பர்களிடம் கூறிய விஷயத்தை யெல்லாம் பொதுக் கூட்டத்திலும் காந்திஜி எடுத்துக் கூறினார். அவருடைய பேச்சு முடிந்ததும் கூட்டத்தில் ஒரு பட்டாணி முஸ்லிம் எழுந்து நின்றார்.

"உங்களுடைய ராஜி ஒப்பந்தப்படி பதிவு செய்து கொள்வோர் பத்து விரல் அடையாளம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா ?" என்று கேட்டார்,

"கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம். ஆனால் அப்படிக் கொடுப்பது தன்மதிப்புக்கு விரோதம் என்று எண்ணுகிறவர்கள் கொடுக்க வேண்டிய தில்லை" என்று காந்திஜி பதில் கூறினார்.

"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? பத்து விரல் அடையாளம் கொடுப்பீர்களா? மாட்டீர்களா ? " என்று அந்தப் பட்டாணியர் மீண்டும் கேட்டார்.

"நான் கொடுக்கத்தான் போகிறேன்" என்றார் காந்திஜி.

"அது எப்படி? பத்து விரல் அடையாளம் கொடுப்பது. அவமானம் என்றும், குற்றவாளிகளிடந்தான் அப்படி விரல் அடையாளம் வாங்குவது வழக்கம் என்றும் நீங்கள் தானே சொன்னீர்கள் ? இப்போது நீங்களே பத்துவிரல் அடையாளம் கொடுப்பது எப்படிச் சரியாகும்?" என்று கேட்டார் பட்டாணியர்.

இதற்குப் பதிலாகக் காந்திஜி, கட்டாயத்தின் பேரில் ஒன்றைச் செய்வதற்கும் சொந்தமாகச் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக் கூறினார். ஆனால் அவர் கூறியது அந்தப் பட்டாணியருடைய காதில் ஏறவேயில்லை.

"நீங்கள் சொல்வது ஒன்றும் சரியில்லை. தளபதி ஸ்மட்ஸிடம் பதினையாயிரம் பவுன் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய சமூகத்தை நீங்கள் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப் படுகிறோம். இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் நாங்கள் ஒருநாளும் விரல் அடையாளம் கொடுக்கப் போவதில்லை. யார் ஒருவன் முதன் முதலில் விரல் அடையாளம் கொடுப்பதற்குப் போகிறானோ அவனை நான் கொன்று போட்டு விடப் போகிறேன். அல்லாமீது ஆணையாகச் சொல்கிறேன். ஜாக்கிரதை! "

பட்டாணியர் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கிப் போனார்கள். ஆனால் காந்திஜி மட்டும் எவ்விதக் கலக்கமும் அடையவில்லை. அவர் அமைதியாகக் கூறியதாவது:

“பட்டாணிய நண்பர் ஆத்திரங் கொண்டு பேசினார். அவருடைய ஆத்திரத்துக்குக் காரண மிருக்கிறது. ஆனால் பணத்துக்காக இந்திய சமூகத்தை நான் காட்டிக் கொடுத்து விட்டேன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன். பத்து விரல் அடையாளம் கொடுப்பது சுய மதிப்புக்குப் பங்கம் என்று கருதுகிறவர்கள் அவ்விதம் கொடுக்க வேண்டியதில்லை என்று முன்னமே சொன்னேன். அவர்கள் விஷயத்தில் பத்து விரல் அடையாளம் இல்லாமலே சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. ஆனால் விரல் அடையாளம் கொடுப்பவரைக் கொன்றுவிடுவதாக அவர் பயமுறுத்தியது பெருந்தவறு. அதிலும் ஆண்டவன் பெயரைச் சொல்லி யாரையும் கொல்லப் போவதாகச் சபதம் செய்யக் கூடாது. ஏதோ ஆத்திரப்பட்டு அவ்விதம் அவர் சொன்னார் என்றே கருதுகிறேன். அவர் தாம் பயமுறுத்தியபடி காரியத்தில் செய்வதா யிருந்தாலும் நான் என்னுடைய கொள்கையிலிருந்து பிறழ முடியாது. இதுவரை இயக்கத்தை நடத்தி வந்தவனாகிய நான் தான் இப்போது முதலில் சென்று விரல் அடையாளம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கத்தான் போகிறேன். உலகத்தில் பிறந்தவர்கள் எல்லாருக்கும் மரணம் உண்டு. வியாதியினாலோ முதுமையினாலோ இறப்பதைக் காட்டிலும் சகோதரன் ஒருவனுடைய கையினால் கொல்லப்பட்டு இறப்பது மேலானது. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை; அப்படி என்னைக் கொல்லவரும் சகோதரனிடத்திலும் கோபமோ துவேஷமோ இல்லாமல் நான் இறந்தேனானால், அதுவே நான் பெறக் கூடிய பெரும் பேறாகும். அதுதான் என் ஆத்மாவுக்கு நற்கதி அளிக்கும். என்னைக் கொல்லும் பொருட்டுத் தாக்கிய சகோதரனும் பிற்காலத்தில் கட்டாயம் நான் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து கொள்வான்."

தம்பி! இவ்விதம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஜோகா னிஸ்பர்க்கில் 1908-ம் வருஷம் ஜனவரி 30௳ இரவு கூறினார். அப்படிக் கூறிய விவரத்தை அவரே 1924-ம் வருஷம் ஏரவாடா சிறையில் எழுதிய "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம்" என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

காந்தி மகாத்மாவின் வாக்கு நினைக்கவும் பயங்கரமா யிருக் கும் முறையில் நாற்பது வருஷத்துக்குப் பிறகு பலித்துவிட்டது ! அவருடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. சரியாக நாற்பது வருஷத்துக்குப் பிறகு 1948-ம் வருஷம் ஜனவரி 30௳ மாலை காந்தி மகான் அவருடைய சகோதரன் ' ஒருவனுடைய கையினால் இறக்கும் பெரும் பாக்கியத்தை அடைந்தார். 'சகோதரன் ' என்று குறிப்பிடுவதற்கு எனக்குக் கை கூசுகிறது. 'சண்டாளப் பாதகன்' என்று எழுதத் தோன்றுகிறது. ஆனால் காந்தி மகாத்மாவின் வாக்கின்படி அந்தப் பாதகனும் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்துவானா ? ஆண்டவனுக்குத் தான் தெரியும்!

பிறகு நிகழ்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் அந்தப் பட்டாணியன் அவ்விதம் ஆத்திரங்கொண்டு பேசியதின் காரணத்தை உனக்குக் கூறவேண்டும். டிரான்ஸ்வாலில் அப்போது சுமார் 50 பட்டாணியர்கள் இருந்தார்கள். பட்டாணியர்களின் இயல்பைப் பற்றிக் கொஞ்சம் உனக்குத் தெரியுமல்லவா? இந்தியாவின் வடமேற்கு எல்லையில் வசிக்கும் சாதியார் பட்டாணியர். முரட்டுத்தனத்துக்கும் பலாத்காரச் செயல்களுக்கும் பெயர் போனவர்கள். கொல்லுவதும் கொலையுண்பதும் அவர்களுக்குச் சர்வ சாதாரணம். இரத்தம் என்பது அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. அதிக முன்கோபம் உடையவர்கள். அடிக்கடி தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். சண்டை என்றால் அநேகமாகக் கொலையிலே தான் முடியும்.

'எல்லைப்புற காந்தி' என்று பெயர் பெற்ற கான் அப்துல் கபூர்கான் ஒரு பட்டாணியர் தான். தம்முடைய சாதியாரை முரட்டுத்தனத்தையும் பலாத்காரத்தையும் விட்டு அஹிம்சா வாதிகளாக்க அவர் எவ்வளவோ பாடுபட்டார். சிலகாலம் ஏதோ பலித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் நிரந்தரமாக நிற்க வில்லை. காஷ்மீரில் கொள்ளை யடிக்கலாம் என்று கேள்விப் பட்டதும் எல்லைப்புறப் பட்டாணியர் அந்த அழகிய தேசத்தில் புகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 'எல்லைப்புற காந்தி' யாகிய கான் அப்துல் கபூர்கானும் அவருடைய சகோதரரும் சிறையிலே பல்லாண்டு இருந்தனர்.

இதனால் பட்டாணியர்களிடம் நல்ல குணங்களே இல்லை யென்று நினைத்துவிடக் கூடாது. எவ்வளவோ நல்ல குணங்கள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் முரட்டுத்தனமும் பலாத்காரப் பற்றும் அவர்களிடமுள்ள பல நல்ல குணங்களை மறைத்து வருகின்றன.

அதோடு சூது வாது அதிகம் இல்லாத சாதியாராகையால் அவர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம். தென்னாப்பிரிக்காவிலிருந்த பட்டாணியர்கள் அந்த மாதிரிதான் ஏமாற்றப் பட்டிருந்தார்கள்.

அவர்களை ஏமாற்றி காந்திஜியின் மேல் குரோதம் மூளும் படி செய்தவர்கள் யார் என்று இப்போது பார்க்கலாம். சில இந்தியர்கள் அநுமதிச் சீட்டு இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்திருந்தார்கள்.

இவ்விதம் அநுமதிச் சீட்டு இல்லாமலோ பொய் அநுமதிச் சீட்டுடனோ இந்தியர்களை டிரான்ஸ்வாலுக்குள் கொண்டு வருவதற்காகவே ஒரு கோஷ்டி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த வேலையின் மூலம் மேற்படி கோஷ்டி லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷ்டியாருக்குச் சத்தியத்திலோ அஹிம்சையிலோ நம்பிக்கை கிடையாது. காந்திஜி ஆரம்பித்த சத்தியாக்கிரக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய முறை தவறிய காரியங்களைச் செய்து கொண்டு போகலாம் என்று எண்ணி யிருந்தார்கள். இயக்கம் நடந்து கொண்டிருக்கும் வரையில் யாரும் எந்த விதமான அநுமதிச் சீட்டும் காட்ட வேண்டியதில்லை யல்லவா ? ஆகையால் இயக்கம் நடக்கும் வரையில் இவர்களுக்குச் சௌகரியம் ; இயக்கம் நின்றுவிட்டால் இவர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாது. இந்தக் கோஷ்டியார் தான் "காந்திஜி ஸ்மட்ஸிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டார் " என்ற கதையைக் கட்டி விட்டு, பட்டாணியருக்கும் தூபம் போட்டு விட்டிருந்தார்கள்.

பொதுக் கூட்டத்தில் பட்டாணியரின் கேள்விகளையும் காந்திஜியின் பதில்களையும் ஜனங்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு பொதுக் கூட்டத்தின் தலைவரும் ராஜி ஏற்பாட்டை ஆதரித்துத் தமது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டு, கூட்டத்தின் கருத்தைக் கேட்டார். கூட்டத்திலிருந்த சுமார் ஆயிரம் இந்தியர்களில் பட்டாணியர் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ராஜி ஏற்பாட்டை ஒப்புக் கொண்டு கையைத் தூக்கித் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
இரவு மூன்று மணிக்குக் காந்திஜி வீடு போய்ச் சேர்ந்தார். அப்புறமும் தூக்கம் வரவில்லை. மறுநாள் உதயத்தில் மற்ற சத்தியாக்கிரஹக் கைதிகளை வரவேற்பதற்காகச் சிறைச்சாலை வாசலில் அவர் போய்க் காத்திருக்க வேண்டுமல்லவா ?

சிறைச்சாலைத் தலைவருக்கு முதல் நாள் இரவே உத்தரவு வந்து விட்டது. காலை ஏழு மணிக்குக் காந்திஜி சிறைவாச லுக்கு வந்து சேர்ந்ததும் சிறைக்குள்ளிருந்த சத்தியாக்கிரகக் கைதிகள் வெளியே வர ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத்துக்குள் எல்லோரும் விடுதலை செய்யப் பட்டார்கள். அப்புறம் இரண்டுநாள், விடுதலையடைந்த சத்தியாக்கிரகிகளுக்கு வரவேற்பும் விருந்தும் கொண்டாட்டமுமாக இருந்தது.

ராஜி ஏற்பாட்டின் ஷரத்துக்கள் இந்தியர்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லப்பட்டன. ஆயினும் ஏற்கெனவே அதிருப்தி யடைந்தவர்களைத் திருப்தி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் துவேஷப் பிரசாரத்தை விடாமல் செய்து வந்தார்கள். பொதுவாகப் பெரும்பாலான இந்தியர்கள் விஷயத்தில் அவர்களுடைய பிரசாரம் பலன் தரவில்லை. ஆனால் பட்டாணியர்களின் ஆத்திரம் மட்டும் வளர்ந்து கொண்டு வந்தது.

இந்தியர்கள் தாங்களாகவே சென்று பதிவு செய்வதற்குரிய பாரங்களை சர்க்கார் அதிகாரிகள் இந்தியத் தலைவர்களைக் கலந்து கொண்டு தயாரித்தார்கள்.
பிப்ரவரி 10௳ இந்திய சமூகத்தின் தலைவர்கள் முதன் முதலாகச் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானமாயிற்று. தலைவர்கள் வழிகாட்டினால் தான் மற்றவர்கள் சங்கோசமில்லாமல் சென்று பதிவு செய்து கொள்ள முடியும். அதோடு சர்க்கார் அதிகாரிகள் பதிவு செய்து கொள்ள வருகிறவர்களை மரியாதையாக நடத்துகிறார்களா என்று கவனித்துக் கொள்ளுதலும் சாத்தியமாகும்.

பிப்ரவரி 10 காலையில் காந்திஜி வீட்டை விட்டுக் கிளம்பித் தம் காரியாலயத்துக்குச் சென்றார். அவருடைய காரியாலயத்திலேயே தான் சத்தியாக்கிரஹ காரியாலயமும் இருந்தது. காரியாலயத்தின் வாசலில் மீர் ஆலம் என்னும் பட்டாணியரும் அவருடைய தோழர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். மீர் ஆலம் ஏற்கெனவே காந்திஜியிடம் தொழில் முறையில் ஆலோசனை கேட்கப் பலதடவை வந்திருக்கும் கட்சிக்காரர். ஆறு அடி உயரமும் திடகாத்திர தேகமும் படைத்தவர். காந்திஜியைச் சந்தித்தவுடனே சலாம் செய்து முகமன் கூறுவது அவருடைய வழக்கம். ஆனால் இன்றைக்கு அவர் சலாம் செய்யவில்லை. அவருடைய முகத்தில் வழக்கமான புன்னகையும் இல்லை. காந்திஜி "என்ன சேதி ? செளக்யமா?" என்று கேட்டதற்கு அவர் சரியாய் பதில் சொல்லவும் இல்லை. அவருடைய கண்களில் கோபம் கொதித்ததைக் காந்திஜி கவனித்துக் கொண்டார். ஏதோ ஒரு விபரீத சம்பவம் இன்றைக்கு நடக்கப்போகிறது என்று அவருடைய உள்ளுணர்வு கூறியது.

காரியாலயத்துக்குக் காந்திஜி வந்து சேர்ந்த சில நிமிஷங்களுக் கெல்லாம் சத்தியாக்கிரஹக் கமிட்டித் தலைவர் ஜனாப் எஸ்ஸப்மியானும் மற்றப் பிரமுகர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லாரும் பதிவு செய்யும் ஆபீஸுக்குப் புறப்பட்டார்கள்.
காந்திஜியின் காரியாலயத்தி லிருந்து மேற்படி ஆபீஸ் ஏறக்குறைய முக்கால் மைல் தூரத்தில் இருந்தது. எல்லாரும் நடந்தே சென்றார்கள். அவர்களை மீர் ஆலமும் அவருடைய பட்டாணியத் தோழர்களும் பின்தொடர்ந்தார்கள்.

பதிவு செய்யும் சர்க்கார் ஆபீசுக்குச் சில கெஜ தூரத்தில் அர்னாட் கிப்ஸன் என்னும் அட்டர்னிகளின் ஆபீஸ் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் வாசலில் மீர் ஆலம் காந்திஜியின் அருகில் நெருங்கி வந்து "எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.

"என் பெயரைப் பதிவு செய்து அனுமதிப் பத்திரம் பெறுவதற்காகப் போகிறேன். பத்து விரல் அடையாளமும் கொடுக்கப் போகிறேன்!" என்று காந்திஜி சொன்னார்.

அவ்வளவு தான்; பின் புறத்திலிருந்து ஒரு பெரிய குண்டாந்தடி காந்திஜியின் தலையில் விழுந்தது. “ஹே ராம்!" என்று சொல்லிக் கொண்டே காந்தி மகாத்மா தரையில் சாய்ந்து மூர்ச்சை யடைந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
53. சாந்த மூர்த்தி



காந்திஜி தரையில் விழுந்து மூர்ச்சை யடைந்த பிறகும் மீர் ஆலமும் அவருடைய நண்பர்களும் சும்மா விடவில்லை. மேலும் அவரைத் தாக்கி அடித்தார்கள். எஸ்ஸப் மியானும் தம்பி நாயுடுவும் காந்திஜி மீது அடி விழாமல் தடுக்க முயன்றபோது, அவர்களும் அடிக்கும் உதைக்கும் பாத்திரமானார்கள். இந்தக் காட்சியைச் சாலையிலே போய்க் கொண்டிருந்த சில ஐரோப்பி யர்கள் பார்த்து விட்டு விரைந்து வந்தார்கள். அவர்கள் சமீபித்ததும் மீர் ஆலமும் அவருடைய தோழர்களும் தப்பி ஓடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை. அவர்களை ஐரோப்பியர்கள் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் காந்திஜியைத் தூக்கி எடுத்து மிஸ்டர் கிப்ஸனுடைய ஆபீஸ் அறைக்குக் கொண்டு போனார்கள். மூர்ச்சை தெளிவதற்குரிய சிகிச்சையும் செய்யப்பட்டது. காந்திஜி கண் விழித்தபோது, ரெவரண்ட் டோக் என்னும் நண்பர் தம்மைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
"இப்போது உடம்பு எப்படி யிருக்கிறது ? " என்று டோக் கேட்டார்.

"உடம்பு சரியாய்த் தானிருக்கிறது. பல்லிலும் விலாவிலும் மட்டும் வலி யிருக்கிறது. மீர் ஆலம் எங்கே ?" என்று காந்தி மகான் கேட்டார். "அவனும் அவனுடைய சகாக்களும் கைது செய்யப்பட் டனர்" என்றார் டோக் பாதிரியார்.

"அது எப்படி ? கூடவே கூடாது ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்!" என்றார் மகாத்மா காந்தி.

"அதைப்பற்றி இப்போது என்ன ? பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய உதடு, கன்னம் எல்லாம் காயமாகி இரத்த விளாறாக இருக்கிறது. முதலிலே சிகிச்சையைப் பற்றிக் கவனிக்க வேண்டும். போலீஸார் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ஜாகைக்குத் தாங்கள் வருவது நலம். வந்தால் நானும் என் மனைவியும் எங்களால் இயன்ற செளகரியங்கள் செய்து கொடுக்கிறோம்."

"போலீஸாருக்கு வந்தனம். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்குப் போக விரும்பவில்லை. உங்களுடைய வீட்டுக்கே வருகிறேன். என்னை அழைத்துப் போங்கள்." இவ்வாறு காந்திஜி கூறியதற்குக் காரணம் டோக் பாதிரியாரிடம் மகாத்மாவுக்கு இருந்த அன்பும் நம்பிக்கையுந்தான்.

ரெவரண்ட் டோக் நியூஸிலாந்து தேசத்திலிருந்து தென் னாப்பிரிக்காவுக்கு வந்தவர். காந்திஜியைப் பற்றியும் அவருடைய அஹிம்சா இயக்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தவர்.

மேற்படி சம்பவம் நடந்ததற்கு ஆறு மாதத்துக்கு முன்னால் டோக் பாதிரியார் காந்திஜியை நேரில் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வதற்காகச் சென்றார். "ரெவரண்டு டோக்" என்ற பெயரைப் பார்த்ததும், அவர் தம்மைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்க்க வந்திருப்பதாக மகாத்மா நினைத்தார். ஆயினும் அவரைச் சந்திக்க இசைந்தார். டோக் பாதிரியாருடன் சில நிமிஷம் சம்பாஷிப்பதற்குள்ளேயே அவர் எப்பேர்ப்பட்ட உத்தம புருஷர் என்பதைக் காந்திஜி தெரிந்து கொண்டார், "உங்களுடைய போராட்டத்தில் என்னை உங்கள் நண்பனாகக் கருதுங்கள். என்னால் முடிந்த அளவு தங்களுக்கு உதவி செய்வது என் கடமை " என்றார் டோக்.

ரெவரண்டு டோக் கிறிஸ்துவ மதத்தில் பாப்டிஸ்ட் மிஷன் என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர். அந்த உட்பிரிவைச் சேர்ந்த வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்களுக்கு மத போதனை செய்து அதற்காக அவர்களிட மிருந்து வருமானம் பெற்று வந்தார். சத்தியாக்கிரஹ இயக்கத்துக்கு ஆதரவு தருவதின் காரணமாக அவருடைய ஜீவனோபாயத்துக்கு ஆபத்து நேரிடலாம் என்று காந்திஜி கருதினார். அதாவது வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள், "உங்களுடைய போதனை எங்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லி விடலாம் அல்லவா ? இது பற்றி மகாத்மா பிரஸ்தாபித்த போது, டோக் பாதிரியார், "அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏசுநாதருடைய உண்மையான தர்மத்தைப் பின்பற்றி நான் நடக்கிறேன். வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் என்னைக் கைவிட்டால் விடட்டும். என்னைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் இருக்கிறார்!" என்றார்.

இதுமுதல் காந்தி மகானுக்கும் டோக் பாதிரியாருக்கும் அத்தியந்த சிநேகம் ஏற்பட்டு வளர்ந்திருந்தது. ஆகையினாலே தான், படுகாயப்பட்டிருந்த காந்திஜி ஆஸ்பத்திரிக்குப் போவ தற்குப் பதிலாக டோக் பாதிரியாரின் வீட்டுக்குப் போக இசைந்தார்.
டோக் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் டாக்டருக்குச் சொல்லியனுப்பினார்கள். இதற்கிடையில், ஆசியாக்காரர்களைப் பதிவு செய்யும் உத்தியோகஸ்தர் மிஸ்டர் சாம்னி காந்திஜியைப் பார்க்க வந்தார். மிஸ்டர் சாம்னியின் காரியாலத்துக்குக் கொஞ்ச தூரத்திலேதான் மகாத்மா அடிபட்டு விழுந்த சம்பவம் நடந்ததல்லவா ? ஆகையால், காந்திஜியின் தேக நிலைமையைப் பற்றி நேரில் தெரிந்துகொண்டு போவதற்காகவும் அநுதாபம் தெரிவிப்பதற்காகவும் மிஸ்டர் சாம்னி வந்தார்.

அவரைப் பார்த்ததும் காந்திஜி கூறியதாவது :-"தங்களுடைய காரியாலயத்துக்கு நான் வந்து கொண்டிருந்தேன். விரல் அடையாளம் கொடுத்துப் பதிவுப் பத்திரம் பெறுவதற்காகவே வந்தேன். வழியில் இப்படி நடந்துவிட்டது. அதனால் பாதகமில்லை. அவசியமான பத்திரங்களை உடனே எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் இங்கேயே பெயர்ப் பதிவு பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். எனக்கு முன்னால் வேறு எந்த இந்தியரையும் பதிவு செய்யக்கூடாது. முதலில் பதிவு செய்வது நானாக இருக்க வேண்டும்."

இவ்விதம் மகாத்மா கூறியதைக் கேட்ட மிஸ்டர் சாம்னி, "அதற்கென்ன அவசரம் வந்தது? இப்போது டாக்டர் வரப் போகிறார். அவர் உங்களைப் பார்த்துச் சிகிச்சை செய்யட்டும், நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரிஜிஸ்டரின் தலைப்பிலே இடம் விட்டு விட்டு, மற்றவர்களைப் பதிவு செய்கிறேன். உடம்பு நன்றாய்க் குணமான பிறகு பதிவு செய்து கொள்ளலாம் " என்றார்.

"இல்லை இல்லை ; முதன் முதலில் நான் பதிவு செய்து, கொள்வதாகச் சபதம் செய்திருக்கிறேன். கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பதால் அந்தச் சபதத்தை நிறைவேற் றியே தீரவேண்டும். தயவு செய்து இவ்விடமே கொண்டு வாருங்கள்!"
அதற்குமேல் மறுத்துச் சொல்ல இயலாமல் ரிஜிஸ்டரையும் பத்திரங்களையும் எடுத்து வர மிஸ்டர் சாம்னி சென்றார்.

அடுத்தபடியாக, சர்க்காரின் அட்டர்னி ஜெனரலுக்கு மகாத்மா பின் வரும் தந்தியை அனுப்பினார்:- "மீர் ஆலத்தின் பேரிலும் அவருடைய தோழர்கள் பேரிலும் நான் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் மேல் வழக்குத் தொடரப்படுவதையும் விரும்பவில்லை. தயவு செய்து எனக்காக அவர்களை உடனே விடுதலை செய்துவிட வேண்டும்!"

போலீஸார் ஏற்கெனவே மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்திருந்தார்கள். காந்தி மகாத்மாவின் மேற்படி தந்தியின் பேரில், அட்டர்னி ஜெனரல் உத்தரவுப்படி, அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஜோகானிஸ்பர்க் ஐரோப்பியர்கள் அதை விரும்பவில்லை. அவர்களில் சிலர் அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்கள்.

"குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றிக் காந்திஜியின் கொள்கைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். அந்தக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. காந்தியை அடித்த சம்பவம் அவருடைய சொந்த இடத்தில் நடக்க வில்லை ; பொதுச் சாலையில் நடந்தது. ஆகையால் அது பொது ஜன விரோதமான குற்றம். சம்பவத்தை நேரில் பார்த்த பல ஐரோப்பியர்கள் சாட்சி சொல்லத் தயாராயிருக்கிறார்கள், ஆகையால் குற்றவாளிகளைக் கட்டாயம் கைது செய்து விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்."

பிரபல ஐரோப்பியர்கள் கையொப்பமிட்டிருந்த இந்தக் கடிதத்தின் பேரில் அட்டர்னி ஜெனரல் மறுபடியும் மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்ய உத்தரவிட்டார். விசாரணை நடந்து குற்றவாளிகளுக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண் டனையும் கிடைத்தது. ஆனால் காந்திஜியின் கொள்கையை மதித்து, அவரைச் சாட்சி சொல்வதற்குக் கேர்ட்டுக்கு அழைக் காமல் விட்டு விட்டார்கள்.

டாக்டர் வந்து காந்திஜியைப் பார்த்தார். கன்னத்திலும் மேல் உதட்டிலும் பட்டிருந்த பெருங் காயங்களுக்குத் தையல் போட்டுக் கட்டினார். விலாக்களுக்கு மருந்து தடவினார் தையலை எடுக்கும் வரையில் பேசக்கூடாது என்றும், திரவ பதார்த்தந்தான் சாப்பிடலாம் என்றும் கண்டிப்பாகச் சொன்னார். ஒரு வாரம் படுக்கையை விட்டு நகரக் கூடாதென்றும் அப்புறம் இரண்டு மாதம் வேலை எதுவும் செய்யக் கூடாது என் றும் கூறினார்.

ஆகவே, காந்திஜி கட்டாயமாக மெளன விரதம் கைக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் முக்கியமான காரியம் ஒன்று பாக்கியிருந்தது. நல்ல வேளையாகக் கையிலே எழுதும் சக்தி இருந்தது. காகிதம் பேனா தருவித்து இந்திய சமூகத்துக்குப் பின் வரும் வேண்டுகோளை எழுதினார்:

"டோக் பாதிரியாரின் வீட்டில் பத்திரமாயிருக்கிறேன். டோக்கும் அவருடைய மனைவியும் என்னை நன்றாய்ப் பாதுகாத்து வருகிறார்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

" என்னை அடித்தவர்கள் தாங்கள் செய்த காரியத்தின் பலா பலனை உணர்ந்து செய்யவில்லை. நான் தவறு செய்வதாக நினைத்தார்கள். தங்களுக்குத் தெரிந்த ஒரே முறையைக் கையாண்டு என்னைத் திருத்தப் பார்த்தார்கள். ஆகையால் அவர்கள் பேரில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
'முஸல்மான்கள்' என்னை அடித்து விட்டார்கள் என்ற காரணத்தினால் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் பேரில் கோபங்கொண்டால், அது பெருந்தவறாகும். நான் இன்று சிந்திய இரத்தம் இரண்டு சமூகங்களையும் நிரந்தரமாக ஒன்று பிணைப்பதற்குச் சாதனமா யிருக்க வேண்டும். இதுவே என்னுடைய மன மார்ந்த பிரார்த்தனை. ஆண்டவன் அருள் புரியட்டும்.

"நடந்து விட்ட சம்பவத்தின் காரணமாக இந்திய சமூகத் துக்கு நான் கூறிய யோசனையில் மாறுதல் எதுவும் இல்லை. ஆசியாக்காரர்கள் தாங்களே வலியச் சென்று பதிவு செய்து சர்டிபி கேட் வாங்கிக்கொள்ள வேண்டும். விரல் அடையாளம் கொடுப்பதற்கு மனச்சாட்சி இடங் கொடாதவர்கள் அவ்விதம் சொல்லி சர்க்காரிட மிருந்து விலக்குப் பெறலாம். மற்றவர்கள் எல்லாரும் இந்திய சமூகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

"சத்தியாக்கிரஹ தத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள் கட வுளைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட வேண்டிய தில்லை. இந்தியர்கள் யாராவது ஏதாவது சொல்வார்களோ ? ' என்ற கோழைப் பயம் காரணமாகத் தங்கள் கடமையைச் செய்யத் தவறக் கூடாது. நாமாகப் பதிவு செய்து கொண்டால் கறுப்புச் சட்டம் ரத்தாகும் என்று சர்க்கார் வாக்குக் கொடுத்திருக்கின்றனர். ராஜி ஒப்பந்தத்தில் நமக்குரிய பகுதியை நிறை வேற்றி வைப்பது நம்முடைய கடமையாகும்."

இவ்விதம் இந்திய சமூகத்துக்குக் காந்திஜி விக்ஞாபனம் எழுதி முடித்ததற்கும் மிஸ்டர் சாம்னி ரிஜிஸ்டர்களையும் பத்திரங்களையும் கொண்டு வருவதற்கும் சரியா யிருந்தது. காந்திஜி கஷ்டப்பட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு கையெழுத்துப் போட்டு விரல் அடையாளமும் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் சாம்னியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

இவ்வளவு காரியங்களும் அரைமணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. ஆயினும் காந்திஜி இம்மாதிரி தம்மைச் சிரமப் படுத்திக் கொள்வதைப் பார்த்து மிஸ்டர் டோக்கும் அவருடைய மனைவியும் வருத்த மடைந்தார்கள். காந்திஜி குணமடைவதற்கு இடையூறாகலாம் என்றும் பயந்தார்கள். பிறகு, டோக் பாதிரியார் அந்த அறையிலிருந்தவர்களை யெல்லாம் சமிக்ஞை மூலம் அப்புறப் படுத்தினார். இனிமேல் ஒன்றும் எழுதவும் கூடாது, உடம்பை அசைக்கவும் கூடாது என்று காந்திஜியை வற்புறுத்தினார். அதன் பேரில் காந்திஜி இன்னும் ஒரு விஷயம் எழுதிக் காட்டினார். "அருள் ஒளியே! வழி காட்டுவாய்!" என்று தொடங்கும் கிறிஸ்துவப் பிரார்த்தனை கீதத்தை யாராவது பாடினால் தமது மனம் நிம்மதி அடையும் என்று எழுதினார். டோக் தம்பதிகளின் குமாரி, ஆலிவ் என் னும் சிறுமி, அந்த அறையின் வாசற்படியில் நின்று மேற்படி கீதத்தை இனிய குரலில் பாடினாள். அதைக் கேட்டு காந்திஜி மன அமைதி பெற்றார்.

டோக் குடும்பத்தார் அச்சமயம் காந்திஜிக்குச் செய்த சேவையின் பெருமையைச் சொல்லி முடியாது. குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் எப்போதும் காந்திஜியின் பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தார்கள். அந்த வீட்டில் காந்திஜி படுத்திருந்தவரையில் வீடு ஏதோ சத்திரம் சாவடி என்று சொல் லும்படி ஆயிற்று. காந்திஜியின் நிலைமை பற்றி விசாரிப்பதற்காக ஓயாமல் இந்தியர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரை மற்றவர்கள் பார்க்கலாம் என்று டாக்டர் அநுமதித்த பிறகு கூட்டம் இன்னும் அதிகமாயிற்று. ஜவுளி மூட்டை தூக்கிச் சென்று தெருவிலே விற்கும் இந்தியர்கள் உள்படப் பெரிய முத லாளிகள் வரையில் எல்லாரும் வந்துகொண்டிருந்தார்கள். டோக் தம்பதிகள் அனைவரையும் அன்புடன் முகமன் கூறி வரவேற்று, டிராயிங் அறையில் உட்காரச் செய்து, சமயம் அறிந்து மகாத்மாவைப் பார்க்க அனுமதித்து வந்தார்கள். காந்திஜி இது விஷயமாக எழுதியிருக்கிறார் :

"நான் அவருடைய வீட்டில் இருந்த வரையில் என்னைக் கவனிப்பதும் என்னைப் பார்க்க வந்தவர்களைக் கவனிப்பதுமே அவருக்கு வேலையா யிருந்தது. இராத்திரி நேரத்தில் கூட இரண்டு மூன்று தடவை டோக் என் அறைக்கு மெள்ள நடந்து வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். அவருடைய வீட்டில் வசித்த காலமெல்லாம் அது என்னுடைய வீடு என்ற எண்ணமே என் மனத்தில் குடி கொண்டிருந்தது. இன்னொருவர் வீட்டில் இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. என்னுடைய சொந்த உற்றார் உறவினர் யாரும் டோக் தம்பதிகளைக் காட்டிலும் அதிகப் பரிவுடன் என்னைப் பராமரித்திருக்க முடியாது.

காந்திஜிக்கும் டோக் பாதிரியாருக்கும் ஏற்பட்ட சிநேகம் பிற்காலத்தில் அணுவளவும் மாறவில்லை. மறுபடியும் காந்திஜி சத்தியாக்கிரஹப் போர் ஆரம்பிக்க நேர்ந்த போது, டோக் பாதிரியின் சீடர்களான ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் டோக் மீது கோபங் கொண்டார்கள். அதனால் டோக் கஷ்டப்பட வும் நேர்ந்தது. ஆயினும் அவர் எள்ளளவும் மனம் சலிக்கவில்லை .

சத்தியாக்கிரஹப் போர் தீவிர நிலையை அடைந்திருந்த சமயத்தில், டோக் பாதிரியார் ரோடீஷியாவில் காலமானார். அவருடைய மரணம், அவரை எதிர்த்தவர்களின் மனத்தைக்கூட மாற்றிவிட்டது. பாப்டிஸ்ட் தேவாலயத்தில் வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் அநுதாபக் கூட்டம் நடத்தினார்கள். காந்திஜி, கச்சாலியா சாகிப் முதலிய இந்தியர்களை மேற்படி அநுதாபக் கூட்டத்துக்கு அழைத்துப் பேசும்படியும் செய்தார்கள்.

காந்தி மகாத்மாவின் அஹிம்சையின் மகிமைக்கு டோக் குடும்பம் சிறந்த உதாரணம் ஆகும். வெறும் பலாத்கார இயக்கமாயிருந்தால், எதிரிகளின் கூட்டத்திலிருந்து இத்தகைய அருமையான ரத்தினம் போன்ற சிநேகிதர்கள் கிடைக்கக் கூடுமா ?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
54. ஸ்மட்ஸ் மோசடி



காந்தி மகான் அடிபட்டு டோக் பாதிரியாரின் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் காந்தியின் குடும்பத்தார் போனிக்ஸில் வசித்து வந்தார்கள். ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் குழந்தைகளும் காந்திஜி அடிபட்ட செய்தி அறிந்ததும் அளவில்லாத கவலை அடைந்தார்கள். உடனே பறந்து சென்று காத்திஜியைப் பார்க்கவேண்டுமென்று அவர்களுடைய உள்ளம் துடித்தது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. போனிக்ஸி லிருந்து ஜோகானிஸ்பர்க் போவதற்கு வேண்டிய ரயில் சத்தப் பணம் அவர்களிடம் இல்லை !

காந்திஜிக்கு உடம்பு குணமாகிப் பிரயாணம் தொடங்கலாம் என்று ஏற்பட்டதும் உடனே போனிக்ஸக்குப் போக விரும்பினார். போனிக்ஸ், நேட்டால் மாகாணத்தில் டர்பனுக்குக் கொஞ்ச தூரத்தில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். காந்திஜி நேட்டாலுக்குப் போகவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருந்தது.

கறுப்புச் சட்டமான து, டிரான்ஸ்வால் மாகாணத்தில் செய்யப்பட்டது. 'டிரான்ஸ்வாலைச் சேர்ந்த 13,000 இந்தியர்களையே அது பாதித்தது. நேட்டாலை அந்தச் சட்டம் பாதிக்க வில்லை. ஆயினும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து காந்திஜி நடத்திய இயக்கத்தில் நேட்டாலிலும் கேப்டவுனிலும் தென் னாப்பிரிக்கா முழுவதிலுமுள்ள எல்லா இந்தியர்களுக்கும் சிரத்தை இல்லாமற் போகவில்லை. அந்த இயக்கத்தின் போக்கை எல்லா இந்தியர்களும் கவனித்துக்கொண்டு வந்தார்கள். ஏனெனில் இன்றைக்கு டிரான்ஸ்வாலில் ஏற்பட்ட சட்டத்தைப்போல் நாளைக்கு மற்ற மாகாணங்களிலும் ஏற்படலா மல்லவா ? டிரான்ஸ்வாலில் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து இந்தியர்கள் வெற்றிபெற்றால் அது நேட்டால் இந்தியர்களின் பலத்தையும் வளர்க்கும். டிரான்ஸ்வால் சத்தியாக்கிரஹம் தோல்வி யடைந்தால் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அனைவரையும் அது பலவீனப்படுத்தும்.

தளபதி ஸ்மட்ஸுடன் செய்துகொண்ட ராஜி ஏற்பாடு நேட்டால் இந்தியர்களின் மனத்திலும் சந்தேகங்களையும் கலக்கங்களையும் உண்டாக்கி யிருப்பதாகக் காந்திஜி அறிந்தார். முதன் முதலில் காந்தி மகாத்மாவை ஆதரித்து நின்றவர்கள் டர்பன் இந்தியர்களே யல்லவா ? ஆகையால் நேரே டர்பனுக்குப் போய் அங்குள்ள இந்தியர்களைப் பார்த்துப் பேசி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துவிட்டுப் பிறகு போனிக்ஸக்குப் போகக் காந்திஜி தீர்மானித்தார்.

டர்பனுக்குக் காந்திஜி போய்ச் சேர்ந்த அன்று அங்கே ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கேயும் பட்டாணியர்களால் ஏதேனும் தொல்லை நேரலாம் என்று காந்திஜியின் நண்பர்கள் சந்தேகித்தார்கள். எனவே, தக்க முன்னேற்பாடு செய்திருந்ததுடன், டர்பன் போலீஸ் தலைவரான பழைய அலெக்ஸாண்டருக்கும் தெரிவித்திருந்தார்கள்.

இன்னும் சில நண்பர்கள் காந்திஜிக்கு எச்சரிக்கை செய்தார்கள். பொதுக் கூட்டத்தில் அவர் தாக்கப்படலாமென்றும் ஆகையால் கூட்டத்துக்கே அவர் வரவேண்டாம் என்றும், கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் மகாத்மா இந்த யோசனைகளை ஒப்புக்கொள்ள வில்லை. "பொது ஊழியம் செய்ய வருகிறவன் புகழ்ச்சியைப் பெறுவதற்குத் தயாராயிருப்பது போலவே இகழ்ச்சிக்கும் தயாரா யிருக்கவேண்டும். பூமாலைக்கும் தயாரா இருக்கவேண்டும் ; கல்மாரிக்கும் சித்தமாயிருக்க வேண்டும். பொது மக்களின் கண்டனத்துக்குத் தப்பி ஓட முயலுதல் கூடாது. நான் கூட் டத்துக்கு அவசியம் போய்த்தான் தீருவேன். கடவுளுடைய விருப்பம் போல நடக்கும்" என்று சொல்லிவிட்டார்.

மாலை எட்டு மணிக்குப் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. காஸ் விளக்குகள் போடப்பட்டிருந்தன. சேத் தாவுத் முகம்மது என்பவர் தலைமை வகித்தார். இந்தியர்களுடைய நியாயமான சந்தேகங்கள் எல்லாம் தீரும்படியாக மகாத்மா தாம் ராஜிக்கு ஒப்புக்கொண்டதன் காரணங்களை விளக்கிக் கூறினார். காந்திஜியின் பேச்சு முடிந்து தலைவர் முடிவுரை கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பட்டாணியன் கையில் ஒரு பெரிய தடியுடன் மேடையை நோக்கி ஓடி வந்தான். அதே சமயத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. கூட்டத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. ஆனால் மேடையில் இருந்த பிரமுகர்கள் - தலைவர் தாவுத் முகம்மது உள்பட- காந்திஜியைத் தங்களுக்கு மத்தியில் நிறுத்திச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்கள். காந்திஜியின் நண்பர்களில் ஒருவர் இம்மாதிரி நேரும் என்று எதிர்பார்த்து கைத்துப்பாக்கி ஒன்று கொண்டு வந்திருந் தார். அதை அவர் எடுத்து ஆகாயத்தை நோக்கி வெற்று வேட்டு ஒன்று போட்டார். இதனால் கூட்டத்தில் குழப்பம் இன்னும் அதிகமாயிற்று.

பார்ஸி ரஸ்டம்ஜியின் முன் யோசனையின் பயனாகச் சில நிமிஷ நேரத்தில் சூபரின்டென்டெண்ட் அலெக்ஸாண்டர் அனுப்பிய போலீஸ் படையினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் காந்திஜியைச் சூழ்ந்து நின்று கூட்டத்தின் வழியாகப் புகுந்து அவரைப் பார்ஸி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

மறுநாள் காலையில் மகாத்மாவின் யோசனையின்படி பார்ஸி ரஸ்டம்ஜி டர்பனிலிருந்த பட்டாணியர்களை யெல்லாம் தம்முடைய வீட்டுக்கு வரவழைத்தார். காந்திஜியிடம், நேரே அவர்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொள்ளும்படி சொன்னார். மகாத்மாவும் அவர்களுக்கு எவ்வளவோ விளக்கமாக உண்மையை எடுத்துரைத்தார். ஆயினும் பயன் ஏற்படவில்லை. காந்திஜி ஏதோ துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணம் அந்தப் பட்டாணியர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அதை அசைக்கவே முடியவில்லை.

தம்பி! நம்முடைய காலத்தில் ஹிந்துக்களிலே சில மகா மூடர்கள் மகாத்மா காந்தி ஹிந்து சமூகத்துக்குத் துரோகம் செய் து விட்டதாக நினைத்தார்கள் அல்லவா ? அதன் விபரீத பலனை இவ்வருஷம் 1948 ஜனவரி 30ந் தேதி கண்டோம் அல் லவா ? இன்னமும் கூட அத்தகைய பரம முட்டாள் தனமான எண்ணத்தைப் போக்கிக்கொள்ளாத அறிவிலிகள் சிலர் இருப் பதை நாம் காண்கிறோ மல்லவா ?

இப்படியிருக்கும்போது முரட்டுப் பட்டாணியர்களின் மனத்திலிருந்த சந்தேகம் போகாததில் வியப்பு என்ன ?

எவ்வளவு விளக்கிச் சொல்லியும் பயனில்லை எனக் கண்ட மகாத்மா, "இந்த மாதிரி சந்தேகம் என்கிற வியாதி ஒருவருடைய மன தில் ஏற்பட்டு விட்டால், அதை வெறும் பேச்சினாலோ விவாதத்தினாலோ மாற்ற முடியாது. செய்யும் செயலினாலேதான் சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும்" என்னும் முடிவுக்கு வந்தார்.

அத்தகைய செயல் புரிவதற்குரிய சந்தர்ப்பமும் கூடிய விரைவில் வந்தது. அந்த விஷயத்துக்குப் போவதற்கு முன்னால் மகாத்மா காந்தியின் போனிக்ஸ் பிரயாணத்தைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

டர்பன் பொதுக்கூட்டம் நடந்த மறு நாள் மாலை காந்திஜி போனிக்ஸுக்குப் புறப்பட்டார். முதல்நாள் அவரைப் பொதுக் கூட்டத்தில் பாதுகாக்க முஸ்தீபு செய்திருந்தவர்கள், இப்போது போனிக்ஸுக்கும் தாங்கள் வரவேண்டும் என்றார்கள். அவர்களை வரவேண்டியதில்லை யென்று காந்திஜி சொல்லிப் பார்த்தார்;

அவர்களுக்குப் போனிக்ஸில் நல்ல சாப்பாடு கிடைப்பது துர்லபம் என்றும் எச்சரிக்கை செய்தார். அந்த நண்பர்கள் "சாப்பாடே கிடைக்கா விட்டாலும் பாதகமில்லை. இந்தச் சமயத்தில் தங்களைப் பிரிந்திருக்க முடியாது!" என்றார்கள். காந்திஜியும் வேறு வழியின்றிச் சம்மதம் கொடுத்தார்.

இவ்விதம் காந்திஜியைப் பாதுகாக்கப் புறப்பட்ட கூட்டத் தின் தலைவர் யார் தெரியுமா ? அவர் ஒரு தமிழர் ! நேட்டாலில் பிறந்த கிறிஸ்துவத் தமிழர்! அவருடைய பெயர், ஜாக் முதலியார். குஸ்திச் சண்டையில் அவர் கைதேர்ந்தவர். தென்னாப் பிரிக்காவிலுள்ள யாரும் - வெள்ளைக்காரனாயினும் கறுப்பு மனிதனாயினும் - குஸ்திச் சண்டையில் ஜாக் முதலியை ஜயிக்க முடியாது என்று அச்சமயம் அவருக்குப் புகழ் ஏற்பட் டிருந்தது.
"தங்களுடன் இருக்கும்போது எங்களுடைய கைவரிசை ஒன்றையும் காண்பிக்க மாட்டோம்!" என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் போனிக்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

தென்னாப்பிரிக்காவில் மழை இல்லாத காலங்களில் எல்லாம் காந்திமகான் திறந்த வெளியிலே தூங்குவது வழக்கம். போனிக்ஸ் ஆசிரமத்திலும் திறந்த வெளியிலேயே படுத்துத் தூங்கினார். ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் முறை போட்டுக்கொண்டு இரவெல்லாம் காந்திஜியைக் காவல் புரிந்தார்கள். பட்டாணியர்கள் இராத்திரியில் கள்ளத்தனமாக வந்து தூங்குகிற காந்திஜியைத் தாக்கிவிடப் போகிறார்களே என்பதற்காகத்தான். " என்னுடைய உயிர் எனக்கு அவ்வ ளவு பெரிதன்று. என்னுடைய சகோதரர் கையினால் சாக நேர்ந்தால் அதுவே என் பாக்கியமாகும்" என்று காந்திஜி சொன்னார். இதையெல்லாம் ஜாக் முதலியார் கோஷ்டி கேட்கவில்லை. "உங்களுக்கென்ன கவலை? நீங்கள் பாட்டுக்குத் தூக்கம் வரும்போது தூங்குங்கள்!" என்று சொல்லி விட்டு, காந்திஜியின் கண்ணில் படாமல் தூரத்தில் நின்று அவர்கள் காவல் புரிந்தார்கள்.

தம்பி ! இதைப் படிக்கும்போது, காட்டிலே இராமரும் சீதையும் தூங்குங்கால் இலங்மணன் கண் விழித்துக் காவல் புரிந்தது நினைவு வருகிறதல்லவா?
போனிக்ஸில் காந்திஜி வசித்த நாட்களில் தளபதி ஸ்மட் ஸுடன் செய்துகொண்ட ராஜியைப்பற்றி “இண்டியன் ஒபினியன் " பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதினார். கேள்வி பதில் ரூபத்தில், ஆட்சேபங்களைக் குறிப்பிட்டுச் சமாதானமும் எடுத்துக் கூறினார். டிரான்ஸ்வால் இந்தியர்கள் சம்பந்தப் பட்ட வரையில், அவர்கள் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியை மனப்பூர்வமாகப் பின்பற்றி னார்கள் என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது. மிகச் சில தினங்களுக்குள்ளே டிரான்ஸ்வால் இந்தியர்கள் அனை வரும். தாங்களே வலியச் சென்று பதிவு செய்துகொண்டு விட்டார்கள். எனவே, ராஜி உடன்படிக்கையில் இந்தியர்கள் தங்களுடைய பங்கை நிறைவேற்றி விட்டார்கள்.

ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் தங்களுடைய பங்கை நிறைவேற்றினார்களா என்றால், அது தான் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் மோசம் செய்துவிட்டார் !

தளபதி ஸ்மட்ஸ் பெரிய கைகாரர். உலகத்து மகா இராஜ தந்திரிகளில் ஒருவர். 1907-ம் வருஷத்தில் டிரான்ஸ்வால் அரசாங்கம் அவருடைய கைக்குப் போயிற்று. மிஸ்டர் மாலன் தேர்தலில் ஜயிக்கும் வரையில் சுமார் 40 வருஷ காலம் தென்னாப்பிரிக்கா சர்க்காருக்கு அவரே தலைவராயிருந்து வந்தார். அவருடைய இராஜ தந்திரத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி இன்றைக்கு உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது.
அப்படிப்பட்ட தளபதி ஸ்மட்ஸ் தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காந்திஜியின் சத்தியாக்கிரஹ ஆயுதத்துடன் போராட நேர்ந்தது. சத்தியாக்கிரஹத்தை வெற்றி கொள்வதற்கு தளபதி ஸ்மட்ஸ் அரசியல் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கையாண்டார். காந்திஜியிடம் மிக மரியாதை யாகப் பேசி ராஜி ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்தார். காரியம் முடிந்த பிறகு, மோசடியான சூழ்ச்சியைக் கையாண்டு வாக்குறுதிக்குப் பங்கம் செய்தார்.

ஆனால், "வாக்குறுதியை மீறுகிறேன்" என்றோ , "மோசடி செய்கிறேன்" என்றோ பட்டவர்த்தனமாகச் சொன்னாரா ? பெரிய இராஜ தந்திரியாயிற்றே ? தாம் சரியான காரியத்தையே செய்வதாகப் பாவனை காட்டிக்கொண்டு வாக்குறுதியை மீறினார்.
எல்லா இந்தியர்களும் பதிவு செய்துகொண்டானதும், கறுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருந்தார் அல்லவா ? அதன்படி அவர் செய்யவில்லை. கறுப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு வேறு இரண்டு மசோதாக்களைச் சட்டசபையில் கொண்டுவந்தார்.

இவற்றில் ஒரு மசோதா, தாங்களாகப் பதிவு செய்து கொண்ட இந்தியர்களின் பதிவுப் பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தின் விதிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்தது.

இன்னொரு மசோதா, இனிமேல் ஆசியாக்காரர்கள் பதிவு செய்துகொள்வதற்கு வேண்டிய விதி முறைகளை வகுத்தது. தளபதி ஸ்மட்ஸின் சூழ்ச்சித் திறமை இப்போது தெரிகிறதல்லவா ?

"தாங்களே பதிவு செய்து கொண்ட இந்தியர்களைக் கறுப்புச் சட்டம் பாதியாமல் செய்து விட்டேன். இனிமேல் வரும் இந்தியர்கள் சம்பந்தமாக நான் எந்த நிபந்தனையையும் ஒப்புக் கொள்ள வில்லையே ? " என்று ஸ்மட்ஸ் சொல்லிவிடலா மல்லவா ?

தளபதி ஸ்மட்ஸின் இந்த இராஜ தந்திரம் காந்தி மகானுக்கு அர்த்தமாகவில்லை. கறுப்புச் சட்டம் அடியோடு ரத்து செய்யப்படும் என்று காந்திஜியும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகி விட்டது. அதற்கு விரோதமாக ஸ்மட்ஸ் காரியம் செய்தார். ஸ்மட்ஸின் அந்தக் காரியத்தை மோசடி என்றே மகாத்மாவும் மற்ற இந்தியர் களும் அச்சமயம் கருதினார்கள். இதைப் பற்றிக் காந்தி மகான் எழுதியிருப்பதாவது:

"தளபதி ஸ்மட்ஸ் மிக்க தந்திரசாலி என்றும் அவரை நம்ப வேண்டாம் என்றும் சில இங்கிலீஷ் நண்பர்கள் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்கள். இரண்டு கட்சியும் தங்களுக்குச் சாதகம் என்பதாக நினைத்துக் கொள்ளும்படி அவர் வாசகங்களைப் புனைவார் என்றும், பிறகு தனக்கு இஷ்டமான ஒரு புதிய பொருளைக் கற்பிப்பார் என்றும் சொல்லி யிருந்தார்கள். அவர்களுடைய எச்சரிக்கை உண்மை தான் என்று இப்போது தெரிந் தது. தளபதி ஸ்மட்ஸ் எங்களை மோசம் செய்து விட்டதாகவே அப்போது நானும் மற்ற இந்தியர்களும் நம்பினோம். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது 'மோசடி' என்று சொல்வதில் சந்தேகம் ஏற்படுகிறது. நோக்கத்தில் மோசடி இல்லா தவரையில் அதை மோசடி என்று சொல்ல முடியா தல்லவா ? 1913 - 14 -ம் வருஷத்தில் ஸ்மட்ஸிடம் எனக்கு ஏற்பட்ட அநுபவம் அவர் பேரில் நல்ல எண்ணம் உண்டாக்கியது. அவர் 'யோக்கியர்' என்றும் 'நாணயவான்' என்றும் இன்றைக்கும் நான் கருதி வருகிறேன். ஆகையால் 1908-ம் ஆண்டில் ஸ்மட்ஸ் வேண்டுமென்று மோசடி செய்ததாக இப்போது நான் சொல்ல முடியாது."

1924 -ம் வருஷத்தில் மகாத்மா மேற் கண்டவாறு எழுதினார். ஆனால் 1908-ம் ஆண்டில் மகாத்மா காந்திக்கும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களுக்கும் ஸ்மட்ஸ் செய்த மோசடி ? பெரும் வியப்பையும் கலக்கத்தையும் அளித்தது.

நிலைமை இன்னதென்று தெரிந்தவுடனே காந்திஜி சத்தியாக் கிரஹக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் சிலர், "முன்னமே சொன்னோமே, கேட்டீர்களா ? இப்படித் தான் நீங்கள் யாரையும் சுலபத்தில் நம்பிவிடுகிறீர்கள். பிறகு ஏமாந்து போகிறீர்கள் !" என்றார்கள்.

அவர்களுக்குக் காந்திஜி தமது கட்சியை எடுத்துச் சொன்னார். " எதிரியை நம்புவது சத்தியாக்கிரஹத்தின் முதல் தர்மம். பிறகு எதிரி வாக்கை மீறினால் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லாமல், உலகத்திலே எல்லாருமே அயோக்கியர்கள் என்று எண்ணிக் கொண்டு சத்தியாக்கிரஹத்தைக் கையாள முடியாது. பிறரை நம்புவது என்னிடமுள்ள குறை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால், அந்தக் குறையுடனேயே என்னை உங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டார். எல்லாரும் ஒருமுகமாகக் காந்திஜியை மீண்டும் தலைமை ஏற்கும்படியும், போரைத் திருப்பத் தொடங்கி நடத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
-------
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
55. ஏறுதே, தீ !



டிரான்ஸ்வால் முழுவதிலும் வசித்த இந்தியர்களிடையே மறுபடியும் பிரசாரம் ஆரம்பமாயிற்று. எல்லா இடங்களிலும் பொதுக் கூட்டங்கள் போட்டுத் தளபதி ஸ்மட்ஸ் செய்த மோசத்தைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. இந்தியர்கள் எல்லாரும் ஒருமுகமான உற்சாகம் காட்டினார்கள். மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவும் சிறை செல்லவும் சித்தமா யிருப்பதாகத் தெரிவித்தார்கள். தாங்களாகப் பதிவு செய்து கொண்டவர்களிடமிருந்து, பதிவுப் பத்திரங்கள் வாங்கிச் சேகரிக்கப்பட்டன. டிரான்ஸ்வால் சர்க்காருடன் காந்திஜி நடத்தி வந்த கடிதப் போக்குவரவில் பலனில்லாவிட்டால், மேற்படி பதிவுப் பத்திரங்களை யெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்துச் சொக்கப்பானை கொளுத்திவிடுவது என்று தீர்மானிக் கப்பட்டது.
தளபதி ஸ்மட்ஸ் வாக்களித்தபடி ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்யவேண் டும் என்றும், புதுச் சட்டம் கொண்டு வரக்கூடாதென்றும் இந்தியரின் சார்பாக டிரான்ஸ் வால் சட்ட சபைக்கு மகஜர் அனுப்பப்பட்டது. அது பயனளிக்கவில்லை. மசோதாவைச் சீக்கிரத்தில் சட்டமாக்குவதற்கு நடவடிக்கை நடந்து கொண்டிருந்தன. எனவே, கடைசி கடைசியாகச் சத்தியாக்கிரஹிகள் டிரான்ஸ்வால் சர்க்காருக்கு ஒரு 'அல்ட்டிமேட்டம் ' - அதாவது, இறுதி எச்சரிக்கை - அனுப்பினார்கள்.

மேற்படி கடைசிக் கடிதத்தில் இந்தியர்கள் தங்களைச் 46 சத்தியாக்கிரஹிகள் என்பதாகக் குறிப்பிட்டுக் கொள்ள வில்லை. அதை ' இறுதி எச்சரிக்கை' (அல்ட்டிமேட்டம்) என்று குறிப்பிடவும் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் அவர்கள் தான் மேற்படி கடிதத்துக்கு 'இந்திய சத்தியாக்கிரஹிகளின் இறுதி எச்சரிக்கை' - என்று நாமகரணம் சூட்டினார்.

"சர்க்காரை இந்திய சத்தியாக்கிரஹிகள் இப்படி பய முறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களுடைய துணிச்சலை என்ன வென்று சொல்வது ? டிரான்ஸ்வால் அரசாங்கம் இந்தப் பயமுறுத்தலுக்கு இணங்கிவிடுமா ? டிரான்ஸ்வால் அரசாங்கத்தின் பலம் இவ்வளவு என்று தெரியாமல் இந்தக் கிளர்ச்சிக் காரர்கள் காரியம் செய்கிறார்கள். இவர்களுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் ஏழை இந்தியர்கள் அடியோடு அழிந்துபோக வேண்டியதுதான்!" என்று சொன்னார் தளபதி ஸ்மட்ஸ். இந்தியர்கள் இறுதி எச்சரிக்கை விடத் துணிந்த விஷயம் டிரான்ஸ்வால் சட்டசபை அங்கத்தினர்களுக்கு அளவில்லாத ஆத்திரத்தை மூட்டியது. இந்த ஆத்திரங் காரணமாக மேற்படி சட்டசபை அங்கத்தினர்கள் தளபதி ஸ்மட்ஸின் புதிய மசோதாவை ஒருமுகமாகவும் உற்சாகமாகவும் நிறைவேற்றி வைத்தார்கள்.

மேற்படி அங்கத்தினருக்கு இவ்வளவு கோபத்தை உண்டாக்கிய இந்தியர்களின் இறுதிக் கடிதத்தில் என்ன தான் எழுதி யிருந்தது என்று இப்போது கவனிக்கலாம். அதன் சாராம்சம் பின் வருமாறு:

'தளபதி ஸ்மட்ஸுக்கும் இந்தியர்களுக்கும் ஏற்பட்ட ராஜி உடன்பாட்டின் முக்கியமான அம்சம், இந்தியர்கள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில், அதை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பதே. அரசாங்கத்தார் திருப்தியடையும் முறையில் இந்தியர்கள் பெரும்பாலோர் தாங்களாகவே முன் வந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசியாக்காரர் சட்டத்தை இப்போது ரத்து செய்வது தான் முறை யாகும். இதை ஞாபகப்படுத்தித் தளபதி ஸ்மட்ஸுக்கு இந்தியர்கள் பல கடிதங்கள் எழுதியும் பயன் விளையவில்லை.

தளபதியிடமிருந்து இதுவரையில் பதிலே கிடைக்கவில்லை. இன்னும், சட்ட முறைக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய முயற்சிகளை யெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஒன்றிலும் பயனில்லை. இது காரணமாக இந்திய சமூகத்தினிடையே பெரும் அதிருப்தியும் ஆத்திரமும் உண்டாகி வளர்ந்து வருகிறதென் பதைச் சட்டசபை அங்கத்தினருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். ராஜி உடன்பாட்டின் நிபந்தனையின் பிரகாரம் ஆசியாக்காரர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டு மென்று வற்புறுத்துகிறோம். அவ்விதம் ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்துவிட்டதாக ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் அரசாங்கத்தாரிடமிருந்து தகவல் கிடைக்கா விட்டால், இந்தி யர்கள் தாங்களாகப் பதிவு செய்து கொண்டு பெற்ற சர்டிபி கேட்டுகளை யெல்லாம் கொளுத்தி விடுவதென்று இந்திய சமூகம் முடிவு செய்திருக்கிறது. இந்தக் காரியத்தின் விளைவாக ஏற்படும் பலாபலன் களை இந்திய சமூகம் அநுபவிக்கத் தயாரா யிருக்கிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள் கிறோம்."- மேற்படி கடிதத்தில் பதில் கிடைப்பதற்கு ஆகஸ்டு 16௳ என்று தவணை குறிப்பிட்டிருந்த காரணத்தினால் அதை இறுதிக் கடிதம் என்றும், எச்சரிக்கை என்றும், பயமுறுத்தல் என்றும் வெள்ளைக்காரர்கள் கருத நேர்ந்தது. இந்தக் கடிதத்தை அ னுப்புவதற்கு முன்னால் இந்தியத் தலைவர்களுக்குள்ளே சாங்கோபாங்கமாக விவாதம் நடந்து, ஆட்சேப சமாதானங்கள் சொல்லி முடிந்து, அதற்குப் பிறகு தான் எப்படியும் கடிதத்தை அனுப்பியே தீர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் வெள்ளைக்காரர்கள் பலர் ஆத்திரங் கொண்டது பற்றி இந்தியர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்குச் சரியாகத் தோன்றும் காரியத்தைச் செய்வதற்காக எந்த விதமான கஷ்டம் ஏற்பட்டாலும் சகித்துக் கொள்ள இந்தியர்கள் சித்தமாயிருந்தார்கள்.

டிரான்ஸ்வால் சட்டசபையில் என்றைய தினம் புதிய ஆசியாக்காரர் மசோதாவை நிறைவேற்றுவதற்காகக் குறிப் பிட்டிருந்தார்களோ அதே தேதியில் இந்தியர்கள் ஸ்மட்ஸ் சர்க்காருக்கு விடுத்த இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்ட தவணையும் முடிவாயிற்று.

அன்றைய தினம் அதாவது 1908-ம் வருஷம் ஆகஸ்டு 16௳ ஜோகானிஸ்பர்க் ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் மாலை நாலு மணிக்குப் பொதுக்கூட்டம் போட்டிருந்தது. அரசாங்கத்தாரிட மிருந்து பதில் எதுவும் வராது என்றே காந்தி மகாத்மாவும் மற்ற இந்தியர்களும் எண்ணினார்கள். ஆயினும் ஒரு வேளை, கடைசி நிமிஷத்தில் அரசாங்கத்தின் மனம் மாறித் தந்தி மூலம் ஏதேனும் பதில் வந்தால், அதை உடனே பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

குறிப்பிட்ட காலத்துக்கு மிக முன்னதாகவே ஹமீதியா மசூதி மைதானத்தில் இந்தியர்கள் வந்து கூடி விட்டார்கள். ஒரு அங்குல இடமும் மிச்சம் வைக்காமல் கூட்டம் கூடி விட்டது. காந்திஜி முதலிய தலைவர்களும் முன்னதாகவே வந்து விட்டார்கள். மைதானத்தின் ஒரு மூலையில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. நீகிரோவர்கள் சமூக விருந்து சமைத்துச் சாப்பிடுவதற்கு, நாலு கால்கள் உடைய பெரிய கொப் பறைகளை உபயோகிப்பது உண்டு. அத்தகைய பிரம்மாண்டமான கொப்பறை ஒன்றை இந்திய வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கி வந்து மேடையின்பேரில் ஏற்றி யிருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் சர்க்காரிடமிருந்து தகவல் வராவிட்டால், சர்டிபிகேட்டுகளை யெல்லாம் அந்தக் கொப்பறையில் போட்டுக் கொளுத்தி விடுவது என்று திட்டமாகி யிருந்தது.
பொதுக் கூட்டம் ஆரம்பிக்கும் தறுவாயில் தொண்டர் ஒருவர் சைகிளில் ஏறி விரைந்து வந்தார். அத் தொண்டர் கொண்டுவந்த தந்தி காந்திஜியிடம் கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தாரிடமிருந்து வந்த தந்திதான் அது. தந்திக்குள்ளே என்ன எழுதி யிருக்கும் ? சாதகமான பதில் இருக்குமா ? இந்த எண்ணத்தினால் ஏற்பட்ட பரபரப்புடன் காந்திஜி தந்தியைப் பிரித்துப் படித்தார். "இந்திய சமூகம் மேற் கொள்ள எண்ணியிருக்கும் நடவடிக்கைக்காக மிகவும் வருந்துகிறோம். அதற்காக அரசாங்கத்தின் உத்தேசத்தை மாற்றிக்கொள்ள முடியாது" என்று தந்தியில் எழுதி யிருந்தது. உடனே பொதுக் கூட்டத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சர்க்காரிடமிருந்து வந்த பதில் படித்துக் காட்டப்பட்டது.

அதைக் கேட்டார்களோ இல்லையோ, மைதானத்தில் கூடியிருந்த அவ்வளவு ஜனங்களும் அளவில்லா உற்சாகத்துடன் பலத்த கரகோஷம் செய்தார்கள். அரசாங்கத்திடமிருந்து 'இல்லை' என்று வந்த பதில்தான் அவர்களுக்கு அத்தனை உற்சாகம் அளித்தது. சாதகமான பதில் வந்திருந்தால், சர்டிபி கேட்டுகளை எரிப்பதற்காகச் செய்த ஏற்பாடு வீணாகி விடு மல்லவா ? இந்தியர்கள் போராட்டம் நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தபடியால், சர்க்காரிடமிருந்து சாதகமான பதில் வருவதை விரும்பவில்லை என்று தோன்றியது. இந்தியர்கள் தங்களுடைய வலிமையை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு அந்தக் கரகோஷ ஆரவாரம் அறிகுறியாக இருந்தது.

பொதுக் கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தின் தலைவர் சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லி, “போராட்டம் என் றால் விளையாட்டு அல்ல ; பல கஷ்ட நஷ்டங்களுக்குத் தயாரா யிருக்கவேண்டும்" என்று எச்சரித்தார். மற்றும் பலர் பேசினார்கள், தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. கடைசியாகக் காந்தி மகான் பேச எழுந்தார். ராஜி ஏற்பாட்டின் நிபந்தனைகளை விளக்கமாகச் சொன்னார். அந்த நிபந்தனைகளைச் சர்க்கார் நிறைவேற்ற மறுத்ததையும், நிறைவேற்றும்படி செய்வதற்கு இந்திய சமூகம் செய்த பிரயத்தனங்களையும் எடுத்துச் சொன்னார். கடைசியாகக் காந்தி மகான் கூறியதாவது: "உங்களில் பெரும்பாலோர் சர்டிபிகேட்டுகளை எரிப்பதற்காகக் கொடுத்திருக்கிறீர்கள். கொடுத்த பிறகு யாருக்காவது மனம் மாறியிருந்தால், சர்டிபிகேட்டை எரிக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இஷ்டப்பட்டால், உடனே எழுந்து இந்த மேடைக்கு வரலாம் ; சர்டிபிகேட் அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். வெறுமனே சர்டிபிகேட்டை எரித்து விட்டால் மட்டும் போதாது. அதன் பிறகு நடக்கும் போராட்டத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இப்போது சர்டிபிகேட்டைத் திருப்பி வாங்கிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை; அவமானமும் இல்லை. ஆனால் இன்றைக்கு எரித்துவிட்டு நாளைக்கு மறுபடியும் போய்ப் பதிவு செய்து சர்டிபிகேட் வாங்கினால் அதைக்காட்டிலும் இந்திய சமூகத்துக்கு ஒரு இந்தியர் செய்யக் கூடிய துரோகம் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையால் தீர்க்கமாக ஆலோசித்துச் சொல்லுங்கள். இஷ்டப்பட்டவர் கள் இப்போதுகூடச் சர்டிபிகேட்டுகளைத் திருப்பி வாங்கிக் கொண்டு விடலாம்!"

காந்திஜி இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலேயே கூட் டத்தில், "எங்களுக்கு சர்டிபிகேட் வேண்டாம் ; எரித்து விடுங்கள்!" என்ற கூச்சல் எழுந்தது. காந்திஜியின் பேச்சு முடிந்ததும் ஒரே குரலாகக் கூட்டத்தார் அதே பதிலைச் சொன்னார்கள். மகாத்மாவைத் தடியால் அடித்த மீர் ஆலம் என்னும் பட்டாணியனும் கூட்டத்துக்கு வந்திருந்தான். அவன் திடீரென்று எழுந்து நின்றதும் என்ன சொல்லப் போகிறானோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். "நான் தங்களை அடித்தது பெரும் பிசகு. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என்பேரில் கோபம் வைத்துக்கொள்ள வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய சர்டிபிகேட்டையும் எரிப்பதற்காகக் கொண்டு வந்து கொடுத்தான் ! கூட்டத்தில் காது செவிடு படும்படியான கரகோஷம் எழுந்தது. காந்திஜி மீர் ஆலத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி, "அப்பனே ! உன் பேரில் எப்போதுமே எனக்குக் கோபம் இருந்ததில்லையே !" என்றார்.

அதுவரை சத்தியாக்கிரஹக் கமிட்டியார் இரண்டாயிரம் சர்டிபிகேட்டுகள் சேகரித்திருந்தார்கள். அவ்வளவும் கொப் பறையில் போடப்பட்டன. அவற்றின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. ஜனாப் எஸ்ஸப்மியான் தீக்குச்சியைக் கிழித்துக் கொப்பறைக்குள் போட்டார். தீப்பிடித்துக் கொண்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் ஜூவாலை விட்டு எரியத் தொடங்கியது. ஏற்கெனவே சர்டிபிகேட்டுகளைக் கொடாதவர்கள் பலர் கையோடு சர்டிபிகேட்டுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக மேடைக் குச் சென்று தங்கள் சர்டிபிகேட்டுகளை நெருப்பிலே போட்டார்கள். ஒவ்வொருவரும் சர்டிபிகேட்டைக் கொண்டுவந்து போட்டபோது கரகோஷம் வானை அளாவியது. இவ்விதமாக அளவில்லா உற்சாகத்தினிடையே சர்டிபிகேட் தகனம் நடந்து முடிந்தது.

இதை யெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் சிலர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடந்ததை யெல்லாம் விவரமாகப் பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். லண்டன் 'டெயிலி மெயில்' பத்திரிகையின் நிருபர் ஒருவரும் வந்திருந்தார். அவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமான செய்தியைத் தம் பத்திரிகைக்கு அனுப்பினார், அமெரிக்க சுதந்திரப் போரின் ஆரம்பத்தில் பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்த பிரிட்டிஷ் கப்பலில் அமெரிக்கர்கள் ஏறி அதிலிருந்த தேயிலைச் சரக்கையெல்லாம் கடலில் தள்ளிய சரித்திரப் பிரசித்தியான சம்பவத்தோடு டிரான்ஸ்வால் இந்தியர்கள் சர்டிபிகேட்டுகளை எரித்ததை மேற்படி நிருபர் ஒப்பிட்டிருந்தார்.

உவமானம் அவ்வளவு பொருத்தமில்லை தான். சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருடன் போர் தொடங்கிய அமெரிக்கர்கள் பெருந்தொகையினர். அதோடு அவர்களிடம் சகலவிதமான ஆயுதங்களும் பயிற்சி பெற்ற சைன்யமும் இருந்தன.

ஆனால் டிரான்ஸ்வால் இந்தியர்களோ சொற்பத் தொகையினர். அவர்களிடம் ஆயுதம் ஒன்றும் இல்லை; ஆயுதத்தை அவர்கள் விரும்பவும் இல்லை. சத்தியத்தையும் அஹிம்சையையுமே ஆயுதங்களாகக் கொண்டு வலிமை மிக்க டிரான்ஸ்வால் சர்க்காருடன் இந்தியர்கள் போர் தொடங்கினார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
56. ஏறு கப்பல் !



இந்தியர்கள் பதிவுப் பத்திரங்களை எரித்த சம்பவம் தென் னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கும் டிரான்ஸ்வால் அரசாங்கத்துக்கும் பெரிதும் ஆத்திரத்தை உண்டாக்கிய து. ஆனால் பெரிய இராஜ தந்திரியான தளபதி ஸ்மட்ஸ் அதனால் நிதானம் இழந்து விடவில்லை. "பதிவுப் பத்திரங்களை எரித்தால் எரித்து விட்டுப் போகட்டும். அது நடவடிக்கை எடுக்கத் தக்க குற்ற மாகாது. இந்தியர்கள் மேலே என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்தார். சர்க்கார் சிறிது காலம் சும்மா இருந்தால் இந்தியர்களுடைய கிளர்ச்சி அடங்கிவிடும் என்பது அவருடைய எண்ணம்.

அதே சமயத்தில் புதிய இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் வருவதைத் தடுக்கும் வேறு ஒரு சட்டம் டிரான்ஸ்வால் சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். இது பொதுப் படையாக டிரான்ஸ்வாலுக்குள் புதுமனிதர்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் சட்டந்தான். ஆனால் போட்டிருந்த நிபந்தனைகள் காரியாம்சத்தில் இந்தியர்கள் வருவதை மட்டுமே தடுத்தன. உதாரணமாக, ஐரோப்பிய பாஷை ஏதாவது ஒன்று தெரிந்திராதவர் டிரான்ஸ்வாலுக்குள் வரக்கூடாது என்பது ஒரு நிபந்தனை.

காந்திஜியின் யோசனைப்படி மேற்படி புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தியர்கள் தீர்மானித்தார்கள்.
"பார்த்தீர்களா, இந்தியர்களின் போக்கை ? முதலிலே ஆசியாக்காரர் சட்டத்தை மட்டும் ஆட்சேபிப்பதாகச் சொன்னார்கள். இப்போது குடியேற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தியர்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்ப்பார்கள் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா ? ” என் று தளபதி ஸ்மட்ஸ் பிரசாரம் செய்தார்.

ஸ்மட்ஸின் பிரசாரத்துக்கு இந்தியர்கள் பயந்து விடவில்லை. “எங்களுடைய உரிமைகளைப் பறிக்கும் எந்தச் சட்டத்தையும் ஆட்சேபித்துச் சத்தியாக்கிரஹம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு" என்று பதில் சொன்னார்கள்.

புதிய சட்டத்தை எதிர்த்து எப்படிச் சத்தியாக்கிரஹம் செய்வது என்னும் கேள்வி பிறந்தது. அதற்குக் காந்திஜி தக்க யோசனை கூறினார். நேட்டால் மாகாணத்திலிருந்து சில இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றும் அதன் விளைவு என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் என் றும் கூறினார். நேட்டாலில் வசித்த ஸோராப்ஜி ஷாபூர்ஜி அதா ஜேனியா என்னும் பார்ஸி இளைஞரை முதன் முதல் சத்தியாக் கிரஹம் செய்வதற்குக் காந்திஜி தேர்ந்தெடுத்தார்.

அவ்விதமே ஸோராப்ஜி தாம் டிரான்ஸ்வாலுக்குள் குறிப்பிட்ட தேதியில் பிரவேசிக்கப் போவதாக டிரான்ஸ்வால் சர்க்காருக்கு அறிவித்துவிட்டு அந்தத் தேதியில் ரயில் ஏறி வந்தார். டிரான்ஸ்வால் எல்லையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் நடைபெற வில்லை. "சட்டத்தைச் சோதிப்பதற்காக வருகிறேன்" என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு வருகிற மனிதரை என்ன செய்வது என்று குடியேற்றக் கட்டுப்பாடு அதிகாரிக்குத் தெரியவில்லை. ஆகையால் எல்லைப்புறத்தில் ஸோராப்ஜியைத் தடை செய்யாமல் விட்டுவிட்டார்.
ஜோகானிஸ்பர்க்குக்கு ஸோராப்ஜி வந்ததும் அவரை இந்தி யர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். சில இந்திய இளைஞர்கள், "ஸ்மட்ஸ் சர்க்கார் தோல்வியடைந்து விட்டனர்; இனி மேல் அவர்கள் ராஜிக்கு வரவேண்டியதுதான்" என்றுகூட நினைத்தார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். ஸோராப்ஜியைப்போல் எத்தனையோ இளைஞர்கள் இந்தியரின் உரிமைகளுக்காகத் தங்களைத் தியாகம் செய்யவேண்டி யிருக்கும் என்று தெரிந்துகொண்டார்கள்.

ஜோகானிஸ்பர்க் போலீஸ் சூபரின்டெண்டுக்கு ஸோராப்ஜி தம் வரலாற்றைப் பற்றித் தெருவித்தார். டிரான்ஸ்வாலிலேயே இருக்க உத்தேசத்திருப்பதாகவும் தமக்கு இங்கிலீஷ் பாஷை தெரியும் என்றும் தம்மைப் பரீட்சித்துக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தார். குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் வந்து ஆஜராகும்படி அவருக்கு ஸம்மன் வந்தது. கோர்ட்டில் விசாரணை ஆரம்பமான போது, காந்திஜி ஸோராப்ஜியின் கட்சியில் ஆஜராகி எதிர் வழக்காடினார். சட்டப்படி ஸோராப்ஜி குற்றம் செய்ய வில்லை யென்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். காந்திஜியின் வாதத்தை ஒப்புக் கொண்டு நீதிபதி ஸோராப்ஜியை விடுதலை செய்தார்.

ஆனால் மறுநாளே ஸோராப்ஜிக்கு இன்னொரு உத்தரவு வந்தது. ஏழு நாளைக்குள் ஸோராப்ஜி டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவில் கண்டிருந்தது. "நான் அப்படி வெளியேறப் போவதில்லை" என்று ஸோராப்ஜி உறுதியாகத் தெரிவித்தார். ஆகவே, அவர் மறுபடியும் கோர்ட்டுக்குப் போகவேண்டிய தாயிற்று. இந்தத் தடவை மாஜிஸ் ட்ரேட்டின் உத்தரவை மீறியதற்காக ஒரு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஸோராப்ஜி தண்டனை யடைந்ததைத் தொடர்ந்து நேட்டாலிலிருந்து இன்னும் பல இந்தியப் பிரமுகர்கள் வரத் தொடங்கினார்கள். இவர்கள் நேட்டாலில் நிலையாகத் தங்கி வியாபாரம் முதலிய தொழில்களைச் செய்து வந்தவர்கள். ஆகவே டிரான்ஸ்வாலுக்கு வரவேண்டிய அவசியம் ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. டிரான்ஸ்வாலுக்குள் வர இந்தியர்களுக்கு உரிமையுண்டு என்பதை ஸ்தாபிப்பதற்காகவே இவர் கள் வந்தார்கள். இப்படி வந்தவர்களில் சேத் தாவூத் முகம் மதுவும், பார்ஸி ரஸ்டம்ஜியும் பெரிய வியாபாரிகள். சுரேந்திர ராய், கண்டுபாய் தேஸாய், ரதன் ஸிமூல்வி, ஹரிலால் காந்தி ஆகியவர்கள் இன்னும் சிலர்.

இப்படிக் கூட்டமாக வந்தவர்களைச் சட்டத்தை மீறி டிரான்ஸ்வா லுக்குள் வரும்படி விட்டுவிட்டால் டிரான்ஸ்வால் சர்க்காரின் மதிப்பு என்ன ஆகிறது ? எனவே அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். ஏழு நாளைக்குள் அவர்கள் டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவு போட்டார். அவர்கள் உத்தரவை மீறி டிரான்வாலிலேயே இருந்தார்கள். பிரிட்டோரியாவில் அவர்களை மறுபடியும் போலீஸார் கைது செய்து விசாரணை ஒன்று மில்லாமல் டிரான்ஸ்வாலுக்கு வெளியிலே கொண்டுபோய் விட்டார்கள். அப்படி விடப்பட்ட வர்கள் இரண்டாவது தடவையும் டிரான்ஸ்வாலுக்குள்ளே பிரவேசித்தார்கள். இதன் பேரில் அவர்கள் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடந்து, "ஐம்பது பவுன் அபராதம் அல்லது மூன்று மாதம் கடுங்காவல் " என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. சேத் தாவூத் முதலியவர்கள் அபராதம் கட்ட மறுத்துக் குதூகலத்துடன் சிறைக்குச் சென்றார்கள்.

இப்படி நேட்டால் இந்தியப் பிரமுகர்கள் டிரான்ஸ்வாலுக்குப் படையெடுத்து வந்து சத்தியாக்கிரஹம் செய்து சிறைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது டிரான்ஸ்வால் இந்தியர்கள் சும்மா இருக்க முடியுமா ? சர்ட்டிபிகேட்டை எரித்து விட்டதற்காகச் சர்க்கார் அவர்களை ஒன்றும் செய்கிற தாகக் காணோம். எனவே, சிறை செல்லுவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. சிலர் டிரான்ஸ்வாலிலிருந்து வெளியேறிச் சென்று மறுபடி டிரான்ஸ்வாலுக்குத் திரும்பி வந்தார்கள். இப்படித் திரும்பி வரும்போது சர்ட்டிபிகேட்டைக் காட்டியாக வேண்டும். எரிந்துபோன சர்ட்டிபிகேட் திரும்ப எப்படி வரும்? எனவே அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

சிறை புகுவதற்கு இன்னொரு வழியும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தியர்கள் பதிவுப் பத்திரத்தைக் காட்டினால் தான் வியாபார லைசென்ஸ் கிடைக்கும். வியாபார லைசென்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆகவே சில இந்தியர்கள் ஏற்கெனவே வியாபாரிகளா யில்லா விட்டாலும் சத்தியாக்கிரஹம் செய்து சிறை புகுவதற்காக ஏதாவது ஒரு சாமானை எடுத்துக்கொண்டு தெருவில் விற்பனை செய்தார்கள். அவர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இப்படிப் புதிதாகத் தெரு விற்பனை செய்து சிறை புகுந்தவர்களில் இமாம் சாகிப் என்னும் முஸ்லிம் பெரியார் ஒருவர். ஜோசப் ராயப்பன் என்னும் பாரிஸ்டர் இன் னொருவர். பாரிஸ்டர் ராயப்பன் நிறையப் பணம் சம்பாதித்து ஆங்கில முறையில் வாழ்க்கை நடத்தியவர். வீட்டுக்குள்ளே கூட பூட்ஸ் போட்டுக் கொண்டுதான் நடப்பார். அப்படிப் பட்டவர் ஒரு கூடையில் கறிகாய்களை நிரப்பிக்கொண்டு தெருவில் விற்பனை செய்யச் சென்று கைதியானார்!

இப்படியாக நேட்டால் இந்தியர்களும் டிரான்ஸ்வால் இந்தியர்களும் போட்டி போட்டுக்கொண்டு டிரான்ஸ்வால் சிறைகளை நிரப்பினார்கள். காந்திஜியும் கைதியானார். சில காலம் காந்திஜியை மற்ற இந்தியக் கைதிகளோடு சேர்த்து வைத்திருந்தார்கள். அப்புறம் அவரைத் தனியாய்ப் பிரித்து விட வேண்டும் என்று கருதிப் பிரிடோரியா சிறைக்குக் கொண்டு போய் அபாயகரமான கைதிகளுக்காக ஏற்பட்ட, தனிக் கொட்டடி யில் அடைத்து வைத்தார்கள்.

ஆயினும் சத்தியாக்கிரஹ இயக்கம் ஓய்கிற வழியாயில்லை. எத்தனை இந்தியர்களைச் சிறைப்படுத்துவது ? எத்தனை நாள் வைத்திருப்பது? இதற்குச் செலவு வேறு சர்க்காருக்கு ஆகிக் கொண்டிருந்தது. எனவே, இயக்கத்தை அடக்கச் சர்க்கார் வேறு வழி தேடத் தொடங்கினார்கள்.

முதலில் டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்து வெளியே கொண்டுவிடும் முறையைச் சிலர் விஷயத்தில் கையாண்டார்கள் அல்லவா ? டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டி நேட்டால் அல்லது ஆரஞ்சு பிரீஸ்டேட்டில் விடப்பட்ட சத்தியாக் கிரஹிகளுக்கு அது ஒரு தமாஷா யிருந்தது. உடனே சட்டத்தை மீறி மறுபடி டிரான்ஸ்வாலுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு வசதியாகவும் இருந்தது. இந்த மாதிரி இந்தியர்களை வெளி யேற்றுவதில் பயனில்லை யென்று கண்ட டிரான்ஸ்வால் சர்க்கார் சத்தியாக்கிரஹிகளை டர்பன் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் அங்கே கப்பலில் ஏற்றி இந்தியாவிலேயே கொண்டு விட்டுவிடுவது என்று தீர்மானித்தார்கள். இது மிகவும் கொடுமையான தண்டனையாகும். ஏனெனில், இப்படிக் கப்பல் ஏற்றப்பட்ட இந்தியர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்; இந்தியாவை அவர்கள் பார்த்ததே யில்லை. அவர்களில் பலருக்குத் தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் சொத்து இருந்தது ; சிலருக்குக் கடை இருந்தது ; வேறு சிலர் குடும்பஸ்தர்கள். கடன் பட்டிருந்தவர்களும் உண்டு. இப்படித் தென்னாப்பிரிக்காவிலேயே வேரூன்றியவர்களைத் திடீ ரென்று பிடித்துக் கப்பலில் ஏற்றி ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் கொண்டு போய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் ? அதோடு, கப்பல் பிரயாணத்தின் போது எத்தனையோ கஷ்டங்கள் காத்திருந்தன. அவர்கள் கையில் பணங் காசு இல்லை. கப்பல் அதிகாரிகள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு விட்டுக் கப்பல் மேல் தட்டில் விழுந்து கிடக்க வேண்டும்.

இவ்விதம் முதல் கோஷ்டி இந்தியர்களைக் குறிப்பிட்ட கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள் என்று தெரிய வந்ததும் காந்திஜி பெரிதும் கலக்கமடைந்தார். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்வது என்று ஆலோசித்தார். பண உதவி செய்யலாம் என்பதற்குக் கையில் போதிய பணமும் இல்லை. அதோடு, பண உதவி செய்யும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால் இயக்கத்தின் தியாக சக்தி போய்விடும் என்றும் விரும்பத் தகாதவர்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து விடுவார்கள் என்றும் மகாத்மா எண்ணினார். கடைசியில், ஒரு யோசனை தோன்றியது. யாராவது ஒரு இந்தியப் பிரமுகரை அதே கப்பலில் அனுப்பி வைத்தால் தண்டனையின் பேரில் வெளியேற்றப் படுகிறவர்களுக்கு ஆறுதலா யிருக்கும். இந்தியாவில் போய் இறங்கியதும் அவர்களுக்கு அவசியமான உதவி கிடைப்பதற்கு அந்தப் பிரமுகர் ஏற்பாடு செய்யக் கூடுமல்லவா ?

சத்தியாக்கிரஹப் போரின் முன்னணியில் நின்றவர்களில் ஒருவரான ஸ்ரீ பி. கே, நாயுடுவை அவ்வாறு கப்பல் துணையாக அனுப்பக் காந்திஜி விரும்பினார். உடனே ஸ்ரீ பி. கே. நாயுடு வைக் கூப்பிட்டு, "கப்பலேற்றிக் கட்டாயமாக அனுப்பப்படும் ஏழைச் சகோதரர்களோடு நீங்களும் இந்தியாவுக்குப் போகமுடியுமா ? " என்று கேட்டார்.
"பேஷாக முடியும்" என்றார் நாயுடு.

"கப்பல் இன்னும் சற்று நேரத்தில் புறப்படப் போகிறதே ? "

"அதனால் என்ன ? இந்த நிமிஷமே நான் புறப்படத் தயார்."

“ இரண்டாவது உடுப்பு வேண்டாமா? வழியில் சாப்பாட் டுக்கு என்ன செய்வீர்?”

"நான் இப்போது அணிந்திருக்கும் உடுப்பே போதும். கப்பலில் எல்லாருக்கும் கொடுக்கும் சாப்பாட்டை நானும் சாப்பிட்டுக் கொள்கிறேன்."

டர்பனில் பார்ஸி ரஸ்டம்ஜி வீட்டில் மேற்படி சம்பாஷணை நடந்தது. காந்திஜி இரண்டாவது தடவை சிறை வாசத்தை முடித்து வெளிவந்த பிறகு, இந்தியர்களைக் கப்பலேற்றி அனுப்பப் போகிற விஷயம் தெரிந்து அதற்காகவே டர்பனுக்கு வந்திருந்தார். ஸ்ரீ பி. கே. நாயுடுவின் பதில் காந்திஜிக்கு எல்லை யற்ற மகிழ்ச்சியை அளித்தது. உடனே கொஞ்சம் உடைகளும் கம்பளிப் போர்வைகளும் சம்பாதித்து ஸ்ரீ பி. கே. நாயுடுவிடம் கொடுத்தார்.

"இந்த ஏழைச் சகோதரர்களை உங்கள் வசத்தில் ஒப்புவித்திருக்கிறேன். முதலில் அவர்களுடைய சௌகரியங்களைக் கவனித்துவிட்டு அப்புறம் உங்களுடைய சௌகரியத்தைப் பார்க்க வேண்டும்!" என்று காந்திஜி சொல்லி அனுப்பினார். ஸ்ரீ பி. கே., நாயுடு மகாத்மாவின் வார்த்தையை அப்படியே நிறைவேற்றி வைத்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
57. உண்ணாவிரத வெற்றி



டிரான்ஸ்வால் சர்க்கார் இந்தியர்களைக் கப்பலேற்றி இந்தியாவுக்குப் பலாத்காரமாக அனுப்பியது சட்ட விரோதமான காரியம். அதோடு, இரக்கமற்ற கொடுமையான காரியம். இந்தியாவைப் பார்த்தே அறியாதவர்களும் டிரான்ஸ்வாலிலேயே பிறந்து வளர்ந்து பிள்ளை குட்டி குடும்பம் உள்ளவர்களையும் திடீரென்று பிடித்துக் கப்பலேற்றி அனுப்பினால் அவர்கள் இந் தியாவுக்குச் சென்று திக்குத் திசை தெரியாமல் தவிப்பது இயற்கையே யல்லவா ? இது எவ்விதம் நியாயமாக முடியும் ? எந்தச் சட்டந்தான் அதற்கு இடம் கொடுக்கும் ?

எனவே, தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் டிரான்ஸ்வால் சர்க்காரின் மேற்படி செயலைப் பற்றித் தீவிரமான கண்டனங்கள் எழுந்தன. கொஞ்ச நாளைக்குப் பிறகு டிரான்ஸ்வால் சர்க்கார் மேற்படி சட்ட விரோதமான முறையைக் கை விட வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குள்ளே டிரான்ஸ்வால் சர்க்காரின் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. "கப்பல் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் " என்று தெரிந்த பிறகு சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த இந்தியர்கள் பலர் பின் வாங்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்திய சத்தியாக்கிரஹிகளின் உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் வேறு கடுமையான முறைகளையும் கையாண்டார்கள். இதுவரையில் எல்லா இந்திய சத்தியாக் கிரஹிகளையும் ஒரே சிறையில் போட்டிருந்ததற்குப் பதிலாக வெவ்வேறு சிறைகளுக்குப் பிரித்து அனுப்பினார்கள். கடுமை யான வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தினார்கள். டிரான்ஸ்வாலில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாயிருக்கும். வேலை செய்யும் கைகள் உறைந்து செயலற்றுப் போகும்.

புதிய சாலை போடும் வேலை நடந்த ஓர் இடத்திற்குச் சில இந்திய சத்தியாக் கிரஹிகளைக் கொண்டு போய்க் கடுமையாக வேலை வாங்கினார்கள். இவர்களில் ஒரு சத்தியாக் கிரஹியின் பெயர் சாமி நாகப்பன். அவன் பதினெட்டு வயது இளம் பிள்ளை. அதிகாலையில் அவனை எழுந்திருக்கப் பண்ணிச் சாலை போடும் வேலை செய்யப் பண்ணினார்கள். சாமி நாகப்பன் கஷ் டத்தைப் பொருட்படுத்தாமல் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலையில் வேலை செய்த போது குளிரினால் 'டபிள் நிமோனியா' என்னும் அபாயகரமான சுரம் வந்துவிட்டது, அதிலிருந்து அவன் தேறவேயில்லை. அந் திய காலம் நெருங்கி விட்டது என்று அறிந்த பிறகு அவனை விடுதலை செய்தார்கள். 1909 ஜூலை 7௳ சாமி நாகப்பன் இவ்வுலக வாழ்வை நீத்தான்.

காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார் ;-- "நாகப்பனுக்குக் கடைசி மூச்சு இருந்த வரையில் சத்தியாக்கிரஹ இயக்கமே நினைவா யிருந்தான். அதைப் பற்றியே பேசினான். சுரத்திலும் சத்தியாக்கிரஹத்தைப் பற்றியே பிதற்றினான். இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றது பற்றி அவன் வருத்தப்படவே யில்லை. நண்பனை அன்புடன் தழுவி வரவேற்பது போல் அவன் மரணத்தை வரவேற்றான். தற்காலத்தில் 'படித்தவன் ' என்பதற்கு நாம் பொருள் கொள்ளும் முறையில் நாகப்பன் படித்தவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனுடைய பொறுமையும் தேசபக்தியும் தியாக உணர்ச்சியும் மன உறுதியும் இணையின்றி விளங்கின. சாமி நாகப்பனைப் போன்ற பலர் இயக்கத்தில் சேர்ந்திரா விட்டால் சத்தியாக்கிரஹம் நடத்தி யிருக்கவே முடியாது."

இந்தியர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் இன்னும் பல கொடுமையான முறைகளையும் கையாண்டார்கள். அபாயகரமான முரட்டுக் கைதிகளை வைப் பதற்கு என்று டிரான்ஸ்வாலில் ஒரு தனிச் சிறைச்சாலை இருந் தது. இதற்குப் பெயர் 'டீப்கு லூப்' சிறை. இந்தச் சிறையின் அதிகாரியாக முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன ஜெயிலர் ஒருவர் இருந்தார். சாதுக்களான இந்திய சத்தியாக்கிரஹிகள் சிலரை இந்த 'டீப்கு லூப்' சிறைக்கு அனுப்பினார்கள். இங்கே ஜெயிலர் கொடுத்த கடுமையான வேலைகளை யெல்லாம் இந்தியர்கள் செய்தார்கள். ஜெயிலர் எந்த அளவு வேலை கொடுத்தாரோ அந்த அளவைப் பூர்த்தி செய்தார்கள். அப்படியும் ஜெயிலருக்குத் திருப்தி உண்டாகவில்லை. இந்தியர்களுடைய உறுதியைக் குலையச் செய்வது அல்லவா அங்கே அவர்களை அனுப்பியதின் நோக்கம் ? எனவே, இந்தியர்களைக் கடுமையாக வேலை வாங்கியது போதாது என்று ஜெயிலர் அவர்களை அவமதிப்பதும் திட்டுவதும் அதிகமாகி வந்தது. இதை இந்தியர்களால் பொறுக்க முடியவில்லை. "ஒன்று, எங்களை இந்தச் சிறையிலிருந்து மாற்றவேண்டும்; அல்லது ஜெயிலரை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை செய்துவிட்டு, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். அந்த நாளில் தென்னாப்பிரிக்கா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய சத்தி யாக்கிரஹிகளுக்குப் பரிகாரம் தேட வேறு உபாயமே கிடை யாது. சிறைக்கு உள்ளே என்ன நடக்கிறதென்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. கைதிகளை வெளியார் சென்று பார்க்கவும் முடியாது. ஆகவே வெளியில் பொதுஜனக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு வழியில்லை.

உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு இந்தக் காலத்தில் சிலர் இரகசியமாகக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டு நெடுநாள் காலங்கழிப்பது உண்டு. இந்த மாதிரி மோசடி செய்வதற்குத் தென்னாப்பிரிக்காவில் மார்க்கமே யில்லை. பட்டினி என்றால், முழுப் பட்டினி தான். "பட்டினி கிடந்து சாகட்டும்" என்று சிறை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்திருந்தால் சாகவேண்டியதுதான், அவர்கள் இறந்துபோன விவரங்கள் கூட வெளியில் உள்ளவர்களுக்கு உடனே தெரிவதற்கு வழி யில்லை. இப்படி யெல்லா மிருந்தும், 'டீப்குலூப்' சிறையிலிருந்த இந்திய சத்தியாக் கிரஹிகள் உண்ணாவிரதம் தொடங்கி அந்த விரதத்தில் உறுதியாக நின்றார்கள். காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களை ஆட்கொண்டு அத்தகைய மனோதிடத்தை அவர்களுக்கு அளித்திருந்தது. சத்தியத்துக்கும் அஹிம்சைக்கும் எள்ளளவும் மாறு படாத அந்த சத்தியாக்கிர ஹிகளின் உண்ணாவிரதம் கடைசியாகப் பூரண வெற்றி அளித்தது. ஏழு நாள் விரதம் இருந்த பிறகு அவர்களை அந்தச் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றச் சர்க்காரிடமிருந்து உத்தரவு வந்தது. சத்தியாக்கிரஹப் போர் இவ்வாறு நடந்து வருகையில் தென்னாப்பிரிக்காவின் அரசியலில் ஒரு பெரிய மாறுதல் நிகழ்வதற்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

இதுவரையில் டிரான்ஸ்வால், நேட்டால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் முதலிய மாகாணங்கள் தனித்தனி அரசியலுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தோடு நேராகப் பிணைக்கப்பட்டிருந்தன. தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா மாகாணங்களையும் ஓர் ஐக்கிய சர்க்காருக்கு உட்படுத்தி, பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒருமுக சம்பந்தம் வைத்துக் கொள்வது பற்றி யோசனைகள் நடந்தன. தென்னாப்பிரிக் காவில் வசித்த இங்கிலீஷ்காரர்கள், போயர்கள் - ஆகிய இரு சாராரும் மேற்படி யோசனையை ஒப்புக்கொண்டு பிரயத்தனம் தொடங்கினார்கள். இப்படி ஐக்கியப்பட்டு ஏக அரசாங்கம் ஆவதினால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தென்னாப்பிரிக்காவின் அந்தஸ்து உயரும் என்று கருதினார்கள். இந்த யோசனைக்கு நல்ல ஆதரவு இருப்பதாகத் தெரிந்ததும் போயர்களின் சார்பாகவும் ஆங்கிலேயர் சார்பாகவும் இங்கிலாந்துக்குத் தூது கோஷ்டிகள் சென்றன. ஜெனரல் போதாவும் ஜெனரல் ஸ்மட்ஸும் போயர் கோஷ்டிக்குத் தலைமை வகித்துச் சென்றார்கள்,

தென்னாப்பிரிக்கா மாகாணங்கள் ஓர் அரசாங்கமாக ஐக்கியப்படும்போது இந்தியர் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காந்திஜி கருதினார். இப்போது ஒவ்வொரு மாகாணத்திலும் சிற்சில சட்டங்கள் இந்தியருக்குப் பாதகமா யிருந்தன.

தென்னாப்பிரிக்கா ஐக்கியப்பட்டு விட்டால், இந்தியருக்கு விரோதமாக ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சட்டங்கள் எல்லாம் சேர்ந்து தென்னாப்பிரிக்கா முழுவதிலும் அமுலுக்கு வரலாம். இந்தியர்களின் கஷ்டம் மேலும் அதிகமாகலாம். எனவே, தென்னாப்பிரிக்கா அரசியல் நிலைமை இங்கிலாந்தில் விவாதிக்கப்படும் சமயத்தில் இந்தியர்களின் சார்பாக அங்கு யாராவது இருக்கவேண்டும் என்று காந்திஜியும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள். இந்தத் தடவை காந்திஜியும் சேத் ஹாஜி ஹபீப் என்னும் முஸ்லிம் வர்த்தகரும் இங்கிலாந்துக்குப் போவது என்று நிச்சயமாயிற்று. அப்படியே 1909-ம் வருஷம் ஜூன் மீ 23௳ கேப் டவுனிலிருந்து புறப்பட்ட 'கெனில் வொர்த் காஸில்' என்ற கப்பலில் காந்திஜி, சேத் ஹாஜி ஹபீப் இருவரும் புறப்பட்டார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
58. டால்ஸ்டாய் பண்ணை



காந்திஜி முதன் முறை இங்கிலாந்து சென்றிருந்த போது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அங்கே ஒரு சங்கம் ஸ்தாபித்துவிட்டு வந்தார் அல்லவா ? அந்தச் சங்கத்தின் தலைவர் லார்ட் ஆம்த்தில் காந்திஜி இப்போது இங்கிலாந்து வந்ததின் நோக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஜெனரல் போதா முதலியவர்களைக் கண்டு பேசினார். ராஜி செய்து வைப்பதற்கு அவர் பெரு முயற்சி செய்தார். ஆனால் வெற்றி காணவில்லை. காரியாம்சத்தில் இந்தியர்களுடைய நன்மைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், ஆனால் நிறவேற்றுமையை எடுத்து விடுவது முடியாத காரியம் என்றும் போயர் தலைவர்கள் சொன்னார்கள். ஆசியாக்காரர் சட்டம், குடியேற்றத் தடைச் சட்டம் - இவற்றை எடுக்கவே முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

இந்தப் பதிலை லார்ட் ஆம்த்தில் காந்திஜிக்கும் ஹாஜி ஹபீப் சேத்துக்கும் தெரியப்படுத்தினார். "காரியாம்சத்தில் நீங்கள் கேட்கும் வசதிகள் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சட்டத்திலேயுள்ள நிற வித்தியாசம் இருந்து கொண்டிருக்கும். இந்த உலகத்தில் நாம் கோருவதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை. சில சமயம் விட்டுப் பிடித்தேயாக வேண்டும். ஆகையால் யோசனை செய்யுங்கள். வெறும் கொள்கைக்காகப் போராட்டத்தை நடத்திக் கொண்டு போவது அவசியமா என்று நன்றாய்ச் சிந்தித்து முடிவு செய்யுங்கள். கூடிய சீக்கிரத்தில் பதில் சொல்லுங்கள்" என்று லார்ட் ஆம்த்தில் கூறினார்.

சேத் ஹாஜி ஹபீப் வெறும் கொள்கைக்காகப் போராடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தார். அவர் கூறியதாவது:

"ஜெனரல் போதா சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள். தாங்கள் கூறியபடி அவர் இந்திய சமூகத்துக்குச் சௌகரியங்களை அளித்தால் இப்போதைக்கு நான் திருப்தி யடைவேன். இந்தியர்கள் சமரசக் கட்சியின் சார்பாக நான் பேசுகிறேன். தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்தில் பெரும்பாலோர் நாங்களே. சமூகத்தில் பண வசதியுள்ளவர்களும் நாங்களே. இதற்கு மேலே இந்திய சமூகம் கஷ்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கொள்கைக்காகப் போராடுவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."

ஹாஜி ஹபீப் குஜராத்தியில் பேசினார். அதை வார்த்தை வார்த்தையாகக் காந்திஜி மொழி பெயர்த்துக் கூறினார். கூறி விட்டு மகாத்மா தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் : தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக நன்றி செலுத்துகிறேன். சேத் ஹாஜி ஹபீப் இந்திய சமூகத்தில் பெரும்பாலோரின் பிரதிநிதி என்பதும் செல்வர்களின் பிரதிநிதி என்பதும் உண்மை. ஏழை இந்தியர்கள் - சிறுபான்மையோர் சார்பாக நான் பேசுகிறேன். நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உடனே கிடைக்கக்கூடிய வசதிகளுக்காக மட்டும் போராடவில்லை ; கொள்கைக்காக உயிரைக் கொடுத்துப் போராடத் தயாரா யிருக்கிறோம். தற்கால அநுகூலம், கொள்கை, இந்த இரண்டில் ஒன்றைக் கைவிட வேண்டுமானால் தற்கால அ நுகூலத்தையே நாங்கள் கைவிடுவோம். ஜெனரல் போதாவின் வலிமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆயினும் எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் கைவிட முடியாது. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு, என்ன நேருவதா யிருந்தாலும் பொறுமையுடன் கொள்கையைக் கடைப்பிடித்து வருவோம். எங்களுக்காக நீங்கள் மிகவும் பிரயாசை எடுத்திருக்கிறீர்கள். அதை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம். ஆனாலும். தங்களுடைய புத்திமதியை நாங்கள் ஏற்க முடியவில்லை, ஜெனரல் போதாவிடம் ஹாஜி ஹபீப் கூறிய பதிலையும் நான் கூறும் பதிலையும் தனித்தனியே தெரிவித்து விடுங்கள். அதற்குப் பிறகு தாங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் மென எதிர்பார்க்க மாட்டோம்."

இதற்கு லார்ட் ஆம்த்தில், "அப்படி நீங்கள் நினைக்க வேண்டாம். கொள்கைக்காக நீங்கள் போராடுவதென்று தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்காக உங்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டேன். இங்கேயுள்ள கமிட்டியின் தலைவனாக இருந்து என்னாலியன்றவரை மேலும் உங்களுக்கு உதவி செய் து வருவேன். இங்கே எனக்கு உள்ள செல்வாக்கை யெல்லாம் உங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவேன்" என்று சொன்னார்.

இந்தச் சம்பாஷணையிலிருந்து காந்திஜியின் குணாதிசயத்தில் இரண்டு அம்சங்கள் தெளிவாகின்றன அல்லவா ? ஹாஜி ஹபீப் சேத்தும் காந்திஜியும் வெவ்வேறு அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். எனினும் அவர்களுடைய சிநேகிதத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படவில்லை. ஹாஜி ஹபீப் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே தம் அபிப்பிராயத்தை மொழிபெயர்த்துச் சொல்லும்படி மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார். மகாத்மாவும் தம் அபிப்பிராயத்துக்கு மாறுபட்ட அபிப்பிராயத்தை உள்ளது உள்ளபடி மொழி பெயர்த்துச் சொல்வதற்குத் தயங்கவில்லை.
லார்ட் ஆம்த்தில் ஆங்கிலேயராயிருந்தும் அவர் உதவி செய்வதாக முன் வந்ததைக் காந்திஜி மகிழ்ச்சியுடன் வர வேற்று நன்றி செலுத்தினார். அவரிடம் காந்திஜி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இறுதிவரை லார்ட் ஆம்த்தில் தென்னாப்பிரிக்கா இந்தியரின் கட்சியில் நின்று தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். போராட்டம் நடந்து கொண்டிருந்த வரையில் காந்திஜியுடன் அவர் மிக்க சிநேக பாவத்துடன் பழகி வந்தார்.
* * *

இங்கிலாந்துக்குத் தூது போன காரியத்தில் வெற்றி பெறாமல் காந்திஜி தென்னாப்பிரிக்கா திரும்பினார். ஆனால் வேறொரு விதத்தில் அந்தப் பிரயாணம் அளவில்லாத பயனை அளித்தது. இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது இந்தியாவின் சுதந்திரத்தில் பற்றுக்கொண்ட சில இந்திய இளைஞர்களை மகாத்மா சந்தித்தார். அவர்களுடன் கலந்து பேசினார். அந்த இளைஞர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்ட புரட்சிக் காரர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக எதுவும் செய்ய அவர்கள் தயாரா இருந்தார்கள். அவர்களுடன் பேசியதிலிருந்து காந்திஜிக்கு இந்தியாவின் சுதந்திரப் பிரச்னையைப் பற்றி அறிந்து சிந்தனை செய்ய வசதி ஏற்பட்டது. "இந்தியா சுய ராஜ்யம் பெற்றே தீர வேண்டும். ஆனால் பலாத்காரமும் அரா ஜகமும் அதற்கு வழியல்ல ; அஹிம்சையும் சத்தியாக்கிரஹமும் தான் வழிகள் என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார். இந்த முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு “ஹிண்ட் ஸ்வராஜ் "(இண்டியன் ஹோம் ரூல்) என்ற புத்தகத்தை இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி வரும்போது கப்பலில் எழுதி முடித்தார்.
* * *

தென்னாப்பிரிக்காப் போராட்டத்தை இனித் தொடர்ந்து நடத்தும் முறையைப் பற்றியும் கப்பலில் காந்திஜி சிந்தனை செய்தார். போராட்டம் இலகுவில் முடிகிறதாயில்லை. நீடித்த காலம் நடந்தே தீரவேண்டும். பணக்கார வியாபாரிகளின் ஆதரவு இனிமேல் இயக்கத்துக்கு கிடைப்பது துர்லபம். ஏழை இந்தியர்களை வைத்துக் கொண்டே நடத்த வேண்டும். அவர்களிலும் எத்தனை பேர் நிலைத்து நிற்பார்கள் என்று தெரியாது. ஆனால் சத்தியாக்கிரஹத்தின் சக்தியைப் பற்றி மகாத்மாவுக்கு இதற்குள்ளே மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. சத்தியாக்கிரஹத்தின் சக்தி ஆள்களின் தொகையைப் பொறுத்த தல்ல வென்றும், அதைக் கடைப்பிடிப்போர் ஒரு சிலராயிருந் தாலும் அவர்களுடைய உறுதியைப் பொறுத்தது என்றும் மகாத்மா நிச்சயம் பெற்றிருந்தார். ஆகையால் எத்தனை பேர் போராட்டத்தில் நிலைத்து நிற்பார்கள் என்பதைப் பற்றிக் காந்திஜி கவலைப்படவில்லை. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழைக் குடும்பங்களின் கதி என்ன என்பது மகாத்மாவுக்குப் பெரும் கவலை அளித்தது. அவர்களுக்கு உண்ண உணவும் தங்க இடமும் கொடுத்து உதவ வேண்டாமா?

தென்னாப்பிரிக்கா சேர்ந்ததும் இதைப் பற்றிச் சில நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். டர்பனுக்குப் பக்கத்தில் போனிக்ஸ் பண்ணை ஏற்படுத்தியது போல் ஜோகானிஸ்பர்க்குக்குச் சமீபமாக 'டால்ஸ்டாய் பண்ணை ' என்பதாக ஒரு ஆசிரமம் ஸ்தாபிக்கத் தீர்மானித்தார். காந்திஜியின் அத்தியந்த நண்பர்களில் ஒருவரான மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மானியர் 1,100 ஏக்ரா விஸ்தீரணமுள்ள ஒரு விவசாயப் பண்ணையை வாங்கியிருந்தார். அந்த இடத்தில் 1910-ம் வருஷம் மே மாதம் 10-ம் தேதி டால்ஸ்டாய் பண்ணை ஸ்தாபிக்கப்பட்டது.

சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால் ஜீவனோபாயத்தை இழந்த சத்தியாக்கிரஹிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறினார்கள். எல்லாரும் கையால் உழைத்துப் பாடுபட வேண்டும் என்றும் வீட்டு வேலைக்காக வேலைக்காரர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நியதி ஏற்பட்டது. குடியிருப்பு இடத்திலிருந்து ஐந்நூறு கஜ தூரத்தில் இருந்த நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டி யிருந்தது. ஆசிரம வாசிகள் காவடிகட்டித் தோள் மீது சுமந்து தண்ணீர் கொண்டு வந்தார்கள். ஸ்திரீகள் சமையல் வேலையின் பொறுப்பை ஏற்றார்கள். இப்படியே பாத்திரங்கள் துலக்குதல், இருப்பிடத்தைச் சுத்தம் செய்தல், தெருக் கூட்டுதல் முதலிய சகல வேலைகளையும் ஆசிரம வாசிகள் பகிர்ந்து கொண்டு செய்தார்கள். ஆசிரமத்தில் மிக எளிய உணவே அளிக்கப்படும் என்று ஏற்பாடு. ஆனாலும் உணவு விஷயத்தில் ஒரு சிக்கலான பிரச்னை ஏற்பட்டது. ஆசிரமத்தில் வந்து குடியேறியவர்களில் குஜராத்தியர், தமிழர், ஆந்திரர், மற்ற வட மாகாணத்தார் எல்லாரும் இருந்தனர். அவ்விதமே ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்துவர்கள் ஆகிய நாலு மதத்தினரும் இருந்தார்கள். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் புலால் உண்பவர்கள். அவர்கள் புலால் உணவு வேண்டும் என்று சொல்லும் பட்சத்தில் இரண்டு சமையல் அறைகளும் இரண்டு விதமான சமையல்களும் அவசியமாகும். எனினும் புலால் உணவு அருந்திப் பழக் கப்பட்டவர்களைத் தாவர உணவுதான் அருந்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் காந்திஜி விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் புலால் உணவுக்கு ஏற்பாடு செய்யத் தயாராயிருந் தார். ஆயினும் அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை அவர்களுக்குக் காந்திஜி எடுத்துச் சொல்லி, கறிகாய் உணவுடன் திருப்தி அடைய முடியுமா என்று கேட்டார். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் - ஸ்திரீகள் உள்பட- பொது செளகரியத்தை முன்னிட்டுப் புலால் உணவு தங்களுக்கு வேண்டிய தில்லை யென்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள்."
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
59. கடின சோதனைகள்



ருஷியா தேசத்து மகான் டால்ஸ்டாய் எழுதிய "ஆண்ட வன் ராஜ்யம் உனக்குள்ளே" என்ற புத்தகம் மகாத்மா காந்தியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதை முன்னமே பார்த்தோமல்லவா ? டால்ஸ்டாயின் கொள்கைகள் காந்திஜியின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்தன என்று கூறலாம். காந்திஜிக்கு டால்ஸ்டாயிடம் ஏற்பட்டிருந்த மரியாதை காரணமாகவே தென்னாப்பிரிக்காவில் அவர் ஸ்தாபித்த இரண்டாவது ஆசிரமத்துக்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயர் வைத்தார்.

டால்ஸ்டாய் பண்ணையில் காந்திஜி வசித்த காலத்தில் பல கடினமான பிரச்னைகளும் சோதனைகளும் ஏற்பட்டன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

டால்ஸ்டாய் பண்ணையில் வாலிபர்களும் கன்னிகைகளும் வசித்தார்கள். எல்லாரும் வித்தியாசமில்லாமல் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய கல்மிஷமில்லாத வாழ்க்கை அவர்கள் நடத்தவேண்டு மென்பதுதான் காந்திஜியின் விருப்பம். இதில் தவறு ஒன்றும் நேர்ந்துவிடாது என்ற பூரண நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது. ஆயினும் ஆசிரமத்தில் வசித்த இளம் பெண்களின் பாதுகாப்புக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர்ந்து அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார்.

ஒரு சமயம் காந்திஜியின் மனதுக்கு மிகவும் ஆயாசம் தரும் படியான சம்பவம் ஒன்று நேரிட்டு விட்டது. அதாவது ஆசிரமத்து வாலிபர்கள் சிலர் இரண்டு இளம் பெண்களிடம் பரிகாச வார்த்தையாடினார்கள் என்று தெரிந்தது. இந்தமாதிரி மறுபடி நேராதிருப்பதற்கு என்ன வழி என்று காந்தியே சிந்தனை செய்தார். அந்த இளைஞர்களை அழைத்துக் கண்டித்துப் புத்திமதி கூறினார். இதனால் அவருடைய உள்ளம் திருப்தியடையவில்லை, இலங்கையில் தன்னந்தனியே சிறையிருந்த சீதா தேவியை இராவணன் நெருங்கவும் அஞ்சியது மகாத்மாவுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. சீதை அத்தகைய கடுந்தவ விரதத்தை மேற் கொண்டிருந்ததினால் அல்லவோ, இராவணன் சீதா தேவியிடம் நெருங்கவும் தயங்கினான் ? அவ்விதமே டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறி ஆசிரம வாழ்க்கையை மேற் கொண்ட பெண்களும் தவ விரதத்தை மேற்கொள்ள வேண்டு மென்று மகாத்மா எண்ணினார். அவர்கள் தவ விரதம் மேற் கொண்டிருப்பதோடு, அதற்கு வெளிப்படையான அறிகுறியும் இருக்கவேண்டும். அந்த அறிகுறியான து பரிகாசப் பேச்சுப் பேச விரும்பும் வாலிபர்களுக்குப் புத்தி புகட்டி எச்சரிக்கை செய்யக் கூடியதா யிருக்கவேண்டும்.

ஒரு நாள் இரவெல்லாம் காந்தி மகாத்மா ஒரு கண நேரங் கூடத் தூங்காமல் மேற்கூறிய விஷயத்தைப் பற்றி யோசனை செய்தார். பொழுது புலரும் சமயத்தில் ஒரு முடிவுக்கு வந்தார். பொழுது நன்றாக விடிந்ததும் அந்த இரு பெண்களையும் கூப்பிட்டார். "என் அருமைக் குழந்தைகளே ! நேற்று உங்களைப் பார்த்துச் சில வாலிபர்கள் பரிகாச வார்த்தை பேசினார்கள். இதை எண்ணி நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. அவர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இதற்காக உங்களை ஒரு தியாகம் செய்யும்படி கோருகிறேன். உங்களுடைய தலையில் உள்ள அழகான நீண்ட கூந்தலை வெட்டி விட விரும்புகிறேன். அப்படி வெட்டி விட்டால், உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வாலிபர்கள் தங்கள் தவறை நினைந்து வருத்தப்படுவார்கள். ஆசிரமத்தில் மறுபடியும் இம் மாதிரி தவறு நேராது. ஆசிரமத்தின் நன்மைக்காக உங்களை இந்தக் கடினமான சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா ? என் சொல்லுக்காக இந்தத் தியாகத்தைச் செய்வீர்களா ? " என்று கேட்டார்.

இந்தியப் பெண்களுக்குத் தங்கள் கூந்தல் நீளமாயிருக்க வேண்டு மென்பதில் மிக்க ஆசை உண்டு அல்லவா? எந்த இளம்பெண் மணிதான் காந்தி மகான் கூறிய சோதனைக்குத் தயங்காமல் உட்படுவாள்?

அந்தப் பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள், அவர்களுடைய தாய்மார்களுக்கு இது தெரிந்தபோது அவர்களும் வந்து காந்திஜியிடம் மன்றாடினார்கள். மகாத்மா, "உங்களைக் கட்டாயப் படுத்த எனக்கு இஷ்டமில்லை ; வேண்டாம் என்றால் வேண்டாம்" என்று கூறி மறுபடியும் தம்முடைய நோக்கம் என்ன வென்பதை விளக்கிச் சொன்னார். கடைசியில் அந்தப் பெண்கள் இருவரும், 'பாபு ! உங்கள் விருப்பத்துக்கு நாங்கள் மாறு சொல்ல வில்லை. தங்கள் கட்டளைப் படி நடக்கிறோம்!" என்று சம்மதம் கொடுத்தார்கள். தாய் மார்களும் சம்மதித்தார்கள்.

காந்தி மகாத்மா எழுதுகிறார் :-"இந்த நிகழ்ச்சியை இன்று எழுதும் இதே கையினால் கத்திரிக்கோலை எடுத்து அந்தப் பெண்களின் கூந்தலை வெட்டி எறிந்தேன். அந்த இரு பெண்களும் உத்தம குண வதிகள் ; நல்ல புத்திசாலிகள். அவர்களில் ஒருத்தி பிற்காலத்தில் இம் மண்ணுலக வாழ்வை நீத்துச் சென்றாள். இன்னொருத்தி இன்று ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியா யிருக்கிறாள். அவர்களுடைய கூந்தலை வெட்டி விட்ட பிறகு, நான் நடத்தி வந்த வகுப்பில் அதன் காரணத்தை எடுத்து விளக்கமாகக் கூறினேன். இதனால் மிகவும் நல்ல பலன் ஏற்பட்டது. அதற்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையில் எந்தப் பெண்ணிடமும் யாரும் பரிகாசமாகப் பேசியது கிடையாது!" மேற்கண்டவாறு சம்பவத்தைப் பற்றி எழுதிவிட்டு மகாத்மா ஓர் எச்சரிக்கையும் தந்திருக்கிறார். இம்மாதிரி கடின சோதனைகளைத் தகுதியற்றவர்கள் கையாளக் கூடாது என்பதுதான், காந்திஜி எழுதியிருப்பதாவது:

"இந்தச் சம்பவத்தை நான் சொல்லியிருப்பது மற்றவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. இம் மாதிரி சோதனையைக் கையாளுவதில் பெரும் அபாயம் இருக்கிறது. நாங்கள் மேற்கொண்டிருந்த சத்தியாக்கிரஹம் எத்தனை தூய்மையானது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். இத்தகைய தூய்மையினாலே தான் இயக்கம் வெற்றிபெறும் என்னும் நிச்சயம் எனக்கு இருந்தது. இப்படிப்பட்ட கடுமையான சோதனையை ஒருவர் கையாளுவதாயிருந்தால், தம் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகளிடம் சொந்தத் தாயும் தகப்பனும் செலுத்தும் அன்பைத் தாமும் செலுத்தப் பழகியிருக்க வேண்டும். சொந்தக் குழந்தைகளின் விஷயத்திலும் அதே மாதிரி செய்வோம் என்ற திட நம்பிக்கை இருக்கவேண்டும். சோதனையில் தவறிப் போனால் அதற்கேற்ற பிராயச்சித்தம் செய்து கொள்ள எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும்."
* * *

காந்தி மகாத்மா உருக்கமாக விவரித்திருக்கும் மேற்படி சம்பவத்துக்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையின் வாழ்க்கை மேலும் தூய்மையடைந்தது ; எளிமையும் பெற்றது. அது வரையில் ஆசிரமத்தில் வசித்த இந்தியர்கள் ஐரோப்பிய கனவான்களைப் போல் உடைதரித்து வந்தார்கள். இனி எல்லாரும் எளிய தொழிலாளிகளின் உடை தரிக்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று. சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உடையை ஓரளவு பின்பற்றி நீல நிற முரட்டுத் துணியில் கால் சட்டையும் அரைக்கைப் பனியன்களும் தைத்துக் கொண்டார்கள். ஆசிரமத்து ஸ்திரீகள் தையல் வேலை கற்றுக் கொண்டு ஆடவர்களுக்கு வேண்டிய சட்டைகளை யெல்லாம் தாங்களே தைத்துக் கொடுத்தார்கள்.

இம்மாதிரியே ஆசிரம வாசிகளின் உணவும் முன்னைவிட எளிய உணவாயிற்று. பிற்காலத்தில் காந்தி மகாத்மாவின் வாழ்க்கையில் முக்கியத்துவம் அடைந்த பல காரியங்கள் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பமாயின. தினந்தோறும் மாலை ஏழு மணிக்கு அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பித்ததுதான். இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனை கீதங்கள் பாடப்பட்டன. இராமாயணம், குர்ஆன், பைபிள் ஆகிய மத நூல்களிலிருந்து சிற்சில பகுதிகள் படிக்கப்பட்டன.

காந்திஜிக்கு ஏற்கெனவே இயற்கை வைத்திய முறைகளிலும் உணவுப் பரிசோதனை-களிலும் ஆர்வம் உண்டு. டால்ஸ்டாய் பண்ணையில் அச்சோதனைகளை நடத்த வேண்டிய வசதிகள் இருந்தன. பண்ணையில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் டாக்டரைக் கூப்பிடுவதில்லை. சமீபத்தில் கூப்பிடும்படியாக டாக்டரும் இல்லை. காந்திஜி இயற்கை வைத்திய முறைகளைக் கொண்டே எல்லா நோய்களையும் குணப்படுத்தி வந்தார். ஆசிரமத்துக்கு வெளியே அக்கம் பக்கத்திலிருந்து கூட மகாத்மாவிடம் இயற்கை வைத்தியம் செய்துகொள்ள ஜனங்கள் வந்தார்கள். டால்ஸ்டாய் பண்ணைக்குச் சற்று தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தை - இரண்டு வயதுப் பிள்ளைக்கு - டைபாய்டு சுரம் கண்டது. அதை இயற்கை வைத்திய முறையைக் கையாண்டு குணப்படுத்தினார். இயற்கை வைத்திய முறையில் தம்முடைய அநுபவங்களைக் கொண்டு காந்தி மகாத்மா "ஆரோக்கிய வழி " என்னும் ஒரு அருமையான நூலை எழுதியிருக்கிறார்.

ஆனால் இந்தத் துறையிலேயும் மகாத்மா எழுதியுள்ள எச்சரிக்கையை நாம் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வது. அவசியம். அந்த எச்சரிக்கை வருமாறு:- "இம்மாதிரி பல சோதனைகளை டால்ஸ்டாய் பண்ணையில் நான் நடத்தினேன், ஒன் றிலாவது தோல்வியடைய வில்லை. ஆனால் நான் கைக் கொண்ட முறைகளில் அப்போதிருந்த உறுதி இப்போது எனக்குக் கிடையாது. 1918-ம் வருஷத்தில் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு எனக்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்தது. அதை என்னால் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய நம்பிக்கை குறைந்து போனதா அல்லது சீதோஷ்ண நிலையில் வித்தியாசமா என்று சொல்ல முடியாது. தென்னாப்பிரிக்காவில் வெற்றியளித்த சில முறைகள் இந்தியாவில் எனக்கு வெற்றி தர வில்லை யென்று மட்டும் சொல்லுவேன்."

இயற்கை வைத்திய முறைகளில் சோதனை நடத்தியது போல் மகாத்மா உணவுப் பரிசோதனைகளும் செய்து வந்தார். மகாத்மாவின் சோதனைகளில் அவருக்கு உற்ற துணையாக இருந்து வந்தவர் மிஸ்டர் காலன் பாக் என்னும் ஜெர்மானியர். இருவரும் ஒரு தடவை கல்கத்தாவில் பசுமாடுகளை நிறையப் பால் கறக்கும்படி செய்வதற்காகக் கையாளும் கொடூர முறைகளைப் பற்றி ஒரு பத்திரிகையில் படித்தார்கள். "பால் சாப்பிடாமல் என் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று காந்திஜி கேட்டார். உடனே, தாம் பால் உணவை விட்டு விடத் தயார் என்றார் மிஸ்டர் காலன் பாக். அவ்விதமே இருவரும் பால் அருந்துவதை நிறுத்தினார்கள். கொஞ்சநாளைக் கெல்லாம் சமைத்த உணவு எல்லாவற்றையுமே விலக்கி விட்டுக் கனி உண வு சாப்பிட ஆரம்பித்தார்கள். புதிய பழங்களையும் உலர்ந்த பழங்களையுமே சாப்பிட்டுக் காலங் கழித்தார்கள்.

"தனித்த பழ உணவு மட்டுமே அருந்திய ஐந்து வருஷம் நான் சுகமாயிருந்தது போல் வேறு எந்தக் காலத்திலும் ஆரோக்கியமா யிருந்ததில்லை. அதே காலத்தில் தான் உடல் உழைப்புச் சக்தி எனக்குப் பூரணமா யிருந்தது. நாள் ஒன்றுக்குச் சர்வ சாதாரணமாய் நாற்பது மைல் நடப்பேன். குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஐம்பத்தைந்து மைல் நடந்திருக்கிறேன். இவ்விதம் உடலுக்கு ஏற்பட்ட நலத்தையல்லாமல், கனி உணவு என்னுடைய ஆத்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையா யிருந்தது என்று உறுதியாகக் கூறுவேன். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, தனித்த பழ உணவு மட்டும் சாப்பிட முடியாமல் வேறு உணவும் சேர்த்துக் கொள்ளும்படி நேரிட் டது. அதை எப்போது நினைத்தாலும் எனக்கு வருத்தம் உண்டாகாம லிருப்பதில்லை" என்று காந்தி எழுதியிருக்கிறார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top