பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
492
Reaction score
855
Points
93
பாசமென்னும் பள்ளத்தாக்கில்.jpgஇரண்டு மாதத்தில் யமுனா நல்லபடியாக குழந்தையை ஈன்றெடுத்தாள். பூவுலகில் தாரகையாய் அடியெடுத்து வைத்தாள் மதுமிதா. தாயாய் தந்தையாய் உறவுகளின் மொத்த உருவமாய் குணா குழந்தையை பராமரிக்க, அவனை மலைப்பாய் பார்த்து பூரித்தாள் யமுனா. நாளிடைவில் அவளுக்கும் பெற்றோர் தன்னருகில் இல்லை என்ற ஏக்கம் மறைந்தது.

குணா அப்பாவிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் தொல்லைகளும் குறைந்தன. படிப்பு, தொழில் என்று அனைத்தையும் தள்ளிவைக்க சொல்லி அவனே யமுனாவுக்கு பரிந்துரை செய்தான். அவளும் முழு நேரமும் ஆசைத்தீர மதுமிதாவிற்கு சீராட்டி பாலூட்டி நாட்களை கழித்தாள்.

குழந்தையை அவள் வேண்டுமென்றே மது! மது! என்று அழுத்தமாக சொல்லி கொஞ்சும் போதும் குணா அதை பெரிதுபடுத்தவில்லை. அவனும் அவளுக்கு இணையாகவே குழந்தையிடம் பாசமாக இருந்தான்; குழந்தையிடம் மட்டும் தான் பாசமாக இருந்தான். மாமன் தன்னிடமிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்வதை பெண்ணின் மனம் கண்டும் காணாமல் இருந்தது.

பணிச்சுமை அதிகம் என்று காரணம் காட்டி நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கி கொண்டான். வீட்டில் இருந்த குறுகிய நேரத்தையும் மதுமிதாவுடன் மட்டும் தான் செலவழித்தான்.

குணா தன்னிடமிருந்து விலகியிருப்பதை பற்றி எண்ணி யமுனா மிகவும் வருந்தினாள். அவர்களுக்குள் நிலவிய மௌனமும், படிப்படியாக பெருகும் விரிசலும் அவளை வாட்டியெடுத்தது. அவன் தன்னுடன் சண்டையிட்டு கண்டிப்பாக இருந்த நாட்களே எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

நந்தினியிடம் இதைப்பற்றி கலந்தாலோசித்தாள். அவளும் இதெல்லாம் பிரசவித்த பெண்களுக்கே வரும் “பிரசவத்திற்கு பிந்தைய மனச்சோர்வு” (Postpartum Depression) என்று மருத்துவரீதியான விளக்கங்களை தந்து வீணாக குழம்ப வேண்டாம் என்று சமாதானம் செய்தாள்.

சனிக்கிழமை இரவு யமுனா அவனுக்கு மிகவும் பிடித்த பணியாரம் செய்து கொண்டுவர, அவன் கைபேசி ஒலித்தது. திரையில் வழக்கம்போல ஒரு மாணவியின் பெயரை கண்டவள், தானே அழைப்பை துண்டித்து,

“வாத்தி! சூடா பணியாரம் சாப்பிட்டு அப்புறம் போய் உங்க ஹனி ஸ்வீட்ஹார்ட் கிட்ட எல்லாம் கடலை போடுங்க!” அவள் பாணியில் வம்பிழுத்து தட்டை நீட்டினாள்.

ஆனால் அவள் செயலில் கடும்கோபம் கொண்டவன், தட்டை தட்டிய வேகத்தில் அது தடம்புரண்டு விழுந்தது. பணியாரம் தரை முழுவதும் சிதற, “உனக்கு தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காத!” அவள் முகம் எதிரே விரல் நீட்டி மிரட்டி, கைபேசியுடன் வேகமாய் வெளியே நடந்தான்.

“என்ன முடிவெடுத்தீங்க குணா? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் எதிர்முனையிலிருந்து கேள்வி பறந்தது.

“அது…அது…ஒரு ஆறு மாசம் ஆரப்போடலாமே ப்ளீஸ்!” அவகாசம் கேட்டு பம்பினான் குணா.

ஆறு மாதமானாலும், ஆறு வருடங்கள் ஆனாலும், தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தீர்மானமாய் பதில் வந்தது.

“சரி! எனக்கு ரெண்டு வாரம் அவகாசம் கொடு; ஏதாவது காரணம் சொல்லி அவள ஊருக்கு அனுப்பிடறேன்! ஆனா குழந்தை என்னோட தான் இருப்பா! அதுக்கு நீ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது!” தன் பக்கத்து திட்டங்களை தெளிவாய் சொல்ல,

“அது உங்க இஷ்டம்; ஐ டோன்ட் கேர் அபௌட் இட்!” எதிர்முனையிலிருந்து கறாராக பதில் வர, குணா ஏற்பாடுகளை செய்துவிட்டு மீண்டும் அழைப்பதாக சொன்னான். அதுவரை தன்னிடம் பேசவோ, சந்திக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்.

வெளியே சொல்ல முடியாத விவகாரங்களை பேசிமுடித்து வீட்டிற்குள் வந்தவன், யமுனாவின் வாடிய முகம் கண்டு தன் செயலுக்கு வருந்தினான். தன்னுடன் இருக்க போகும் இரண்டு வாரங்களுக்காவது அவள் மனம்கோணாமல் நடக்க வேண்டும் என்று நினைத்தான்.

சிதறிக்கிடந்த உணவை தானே சுத்தம் செய்து, அவளிடம் மன்னிப்பும் கேட்டான். வேலையில் இருந்த உளைச்சலை அவளிடம் காட்டிவிட்டதாக பொய்காரணம் சொல்லி மழுப்பி அவளுக்கு வலுகட்டாயமாக பணியாரத்தை ஊட்டினான். பெண் மனம் அவன் வசியப் பேச்சிலும் அன்பிலும் தோற்றுப்போனது.

காலம் தாழ்த்தாமல் தனது இக்கட்டான சூழ்நிலையை அஷ்வினிடம் பகிர்ந்து கொண்டான். யமுனாவை ஊருக்கு அனுப்பவதற்கு தான் வடிவமைத்த திட்டத்தையும் விளக்கினான்.

“தப்பு குணா! நாலு மாத குழந்தையை தாய் கிட்டேந்து பிரிக்கறது ரொம்ப பாவம் டா… நீ தைரியமா யமுனாகிட்ட உண்மைய சொல்லு…எந்த முடிவா இருந்தாலும், அது அவளே எடுக்கட்டும்!”

அவன் யோசனையை கேட்டு ஏளனமாக சிரித்தவன், “உண்மைய சொன்னா…பரவாயில்ல மாமான்னு பக்குவமா பேசுவான்னு நெனச்சியா… பத்ரகாளியா மாறி ருத்ர தாண்டவம் ஆடுவா டா!” குணா மறுக்க,

“இருந்தாலும் நீ செஞ்ச தப்புக்கு குழந்தை அம்மாவ விட்டுட்டு…” நண்பனை காட்டிலும், ஒரு குழந்தைநல மருத்தவராகவே அஷ்வின் தயங்க,

“மதுமிதா என்கிட்ட இருந்தா தான் நல்லது! அவ என்கிட்ட இருந்தாதான் யமுனா என் சொல்படி நடப்பா… எனக்கும் அவ மேல ஒரு பிடிமானம் இருக்கும்!” உறுதியாய் சொல்லி, மேலும் அறிவுரை தந்து தொல்லை செய்ய வேண்டாம் என்று அஷ்வினுக்கு எச்சரிக்கை விடுத்தான்.

இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்த போதும் குணாவின் மனதை மாற்றுவதில் தோற்றுப்போனான் அஷ்வின். கடைமுடிவாக அஷ்வின் வேறுவழியில்லாமல் நண்பனின் ரகசிய திட்டத்திற்கு பணிந்துபோனான். நந்தினியிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டாம் என்று இருவரும் தீர்மானித்தனர்.

நான்கு நாட்களில் தேவையான ஆவணங்களை தயார் செய்தார்கள் நண்பர்கள். வாரத்தின் மத்தியில் அஷ்வின் குணாவுடன் வீட்டிற்கு வந்ததே வழக்கத்திற்கு மாறாக இருந்தது யமுனாவிற்கு.

“அம்மு! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” குணா தொடங்க, யமுனாவின் சந்தேகம் உறுதியானது. அவள் மெல்ல தலையசைக்க குணா சுவாசத்தை சீர் செய்து கொண்டு பேசத்தொடங்கினான்.

“அது…அம்மு…உன் விசாவுல ஒரு சிக்கல். நீ உடனே இந்தியாவுக்கு போய் அத சரி செஞ்சிட்டு வரணும்!” என்று ஆவணங்களை மேஜையில் வைத்தான்.

“அதுக்கென்ன மாமா! ஊருக்கு போய் இந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு, அப்படியே குழந்தையை எல்லார்கிட்டையும் காட்டிட்டு வரலாம்!” முகமலர்ச்சியுடன் பேசினாள்.

“நீ மட்டும்தான் ஊருக்கு போகப்போற…உனக்கு மட்டும்தான் விசாவுல சிக்கல்…நானும் மதுமிதாவும் இங்கேயே தான் இருப்போம்!” தெளிவுபடுத்தி பத்திரத்தில் கையெழுத்திட சொன்னான்.

“என்னது! மதுவ தனியா விட்டுட்டு நான் மட்டும் போகணுமா?” எடுத்த எடுப்பிலே அவள் வாயை பிளக்க, குணா நண்பனை பார்த்து தன் யூகம் எவ்வளவு சரி என்று கண்ணசைத்தான்.

தற்காலிகமாக குழந்தையை விட்டு இருப்பதற்கே இவ்வளவு பதறுபவள், குணாவின் திட்டத்தை முழுவதுமாக அறிந்தால், என்று மனதில் நினைத்தவன் அவளுக்காக பரிதாபப்பட்டான்.

“அப்படி ஒண்ணும் நம்ம இந்த ஊருல கஷ்டப்பட்டு இருக்கணும்னு அவசியமில்ல மாமா…நாம மூணு பேரும் ஊருக்கு போயிடலாம்!” மறுவழி சொல்லி பத்திரத்தை தள்ளினாள் யமுனா.

அதைக்கேட்டு கொந்தளித்தவன், “உனக்கு உன் பிரச்சனை மட்டும்தான் பெருசா! என் வேலை, கனவு எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னால வர சொல்றியா!” குரல் உசத்தி,

“இவளுக்கு நீயாவது புரியவை டா!” நண்பனிடன் சிடுசிடுத்தான்.

செய்யும் பாவம் போதும் என்று அமைதியாக இருந்தவன் பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான். நண்பன் எடுத்த முடிவு தவறென்று இன்னும் நம்பியவன்,

“குணா உன் நல்லத்துக்கு தான் சொல்றான் யமுனா. பத்திரத்த நிதானமா படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடு!” மறைமுகமாக எச்சரித்தான் அஷ்வின்.

அஷ்வின் மனம் தள்ளாடுவதை உணர்ந்தவன், முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு யமுனா அருகில் வந்து அமர்ந்தான். அவளை மென்மையாய் அரவணைத்து, “இங்க பாரு அம்மு! ஒரு மாசம் தான்! மதுமிதா இங்க என்கூட இருந்தா தான், உன் விசாவ ரத்து செய்யாம மறுபடியும் இங்க அனுப்புவாங்க. நமக்கு இங்கதானே தங்கம் பாதுகாப்பு!” தேனொழுக பேச, துக்கத்தை அடக்கி அவன் காட்டிய இடத்தில் எல்லாம் மறுகேள்வி இல்லாமல் கையெழுத்திட்டாள்.

மாமனே உலகம் என்று கண்மூடித்தனமாக நம்பும் இவளுக்கு யார்தான் புத்தி சொல்ல முடியும் என்று தோளினை குலுக்கி கொண்டான் அஷ்வின்.

ஊருக்கு புறப்படும் நாளும் வந்தது. யமுனாவுடன் டெல்லி சென்று, அவளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்யும் பொருப்பை அஷ்வினிடம் விட்டிருந்தான் குணா.

விசா வேலைகளை சென்னையில் செய்திருக்கலாமே என்று கேட்டவளுக்கு, வழக்கம் போல மழுப்பலாய் காரணம் சொல்லி சமாளித்தான். குழந்தையின் உச்சந்தலையில் முத்தமிட்டு யமுனா செல்லம் கொஞ்ச, விமானம் புறப்பட நேரமாகிறது என்று குணா நினைவூட்டினான்.

குழந்தையை பிரிய மனமில்லாதவள், “மாமா! இதெல்லாம் வேண்டாமே!” கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

மதுமிதாவை வலுகட்டாயமாக வாங்கியவன், புன்முறுவலுடன் யமுனாவின் கன்னத்தினை வருடி, “நான் தான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல…என்ன நம்ப மாட்டியா அம்மு!” பாசமாய் பேசி அவள் வாயடைத்தான்.

மறுகேள்வி கேட்காமல் அவள் நகர, “அம்மு!” மென்மையாக அழைத்தான் குணா. நண்பன் மனம் மாறிவிட்டானோ என்று ஒரு கணம் அவனை ஆவலாய் பார்த்தான் அஷ்வின்.

“அம்மு! விசா பேப்பர் இருக்குற ஃபைல்ல, ஒரு கவர் வெச்சிருக்கேன். உனக்கே உனக்கு மாமா ஆசை ஆசையாய் எழுதிருக்கேன்!” பதமாய் பேசி அவள் நெற்றியில் முட்டியவன், “அத மறக்காம படிச்சு பாரு! இந்த மாமாவ மீறி எதுவும் நடக்காதுன்னு நீ புரிஞ்சுப்ப!” கண்சிமிட்ட, அவளும் கவலைகள் மறந்து குழைந்தாள்.

‘அத இப்போவே படிச்சு பாரு யமுனா!’ அஷ்வினின் மனசாட்சி உரக்க பேசியது.

மாமனின் வசியப்பேச்சில் மிதந்தவளின் செவிகளை அது எட்டவில்லை. மகளுக்கும், மாமனுக்கும் முத்தம் கொடுத்துவிட்டு அமைதியாய் நகர்ந்தாள் பெண்.

நண்பனின் ஊசலாடும் மனதை படித்தவன், “நண்பா! நான் சொன்னத செஞ்சிட்டு என்னோட புது நம்பருக்கு போன் செய்…உனக்காக இங்க உன் மனைவி குழந்தைகள் எல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க…சீக்கிரம் வந்துடு!” ஜாடையாக பேசி எச்சரித்தான்.

எல்லாம் கைமீறி போய்விட்டது என்று உணர்ந்தவன் அமைதியாய் தலையசைத்து யமுனாவை பின்தொடர்ந்தான்.

“மது குட்டி! இனிமே உனக்கு அம்மா, அப்பா எல்லாம் நான்தான் டா செல்லம்” குழந்தையை உயரத்தூக்கி கொஞ்சியவன், “அப்பா சொல்லு!” என்றான்.

‘ஆ…ஆ…ஆ’ குரல் எழுப்பியவள், ‘நடப்பது அத்தனைக்கும் நானே சாட்சி!’ என்பது போல இளித்தாள்.

டெல்லியில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது என்று ஒரு வாரத்தில் அஷ்வின் குணாவின் புது எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்தான். குணாவின் சூழ்ச்சிகளை அறிந்தவுடன் ஆர்ப்பாட்டம் செய்தவள், கடிதத்தை படித்ததும் அமைதியானாள் என்றும் விளக்கினான். எழுதிய கடிதம் வீண் போகவில்லை என்று இறுமாப்புடன் சிரித்து, தொட்டிலில் உறங்கும் அதிர்ஷ்ட்ட தேவதையின் நெற்றியில் முத்தமிட்டான் குணா.

இரண்டு வாரங்கள் இனிதே கடக்க தீர்க்க வேண்டிய பிரச்சனை வேறொன்று இருப்பதை உணர்ந்தான். யமுனாவை பற்றி சந்தேகம் வராத அளவிற்கு ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கு அவளை பற்றி சொல்ல ஒரு கட்டுக்கதை தேவைப்பட்டது.

இந்தியாவில் இருக்கிறாள் என்று உண்மையை சொன்னால், பாசப்பிணைப்புகள் அவளை தேடிச்செல்வதற்கு வாய்புகள் அதிகம்; வெகு நாட்களுக்கு அவள் அவர்களுடன் பேசாமல் இருந்தால், அதுவும் பிரச்சனையில் முடியும்; இப்படி பல கோணங்களில் சிந்தித்தவன் உகந்த காரணம் தேடி மூளையை கசக்கினான். கடவுள் வழிகாட்டியது போல இருந்தது, அன்று மாலை தொலைக்காட்சியில் அவன் பார்த்த தலைப்பு செய்தி.

கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ போல பரவி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று பற்றி செய்திகள் குவிந்த வண்ணமாய் இருந்தன. நாள்தோரும் உயிர் சேதம் ஆயிரம் கணக்கில் ஏற்படுகிறது என்றும், குறிப்பாக நியூயார்க் நகரத்தில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என உலகமே அறிந்திருந்தது.

ஊரில் இருக்கும் பெற்றொரின் மூடநம்பிக்கை என்ற பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் குணா. யமுனா கொரொனா தாக்கத்தால் இறந்துவிட்டாள் என்று தகவல் சொன்னான்.

நோயின் தீவிரத்தால் ஊரடங்கு, போக்குவரத்து முழக்கம் என்று தொடர்ந்த அரசாங்க கட்டளைகளால், பெண்ணின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போனது என்று நொந்தனர் பெற்றோர். ஆழ்துயரத்தில் இருந்த உறவுகள், குணாவை வெறுத்தார்களே தவிர அவன் மேல எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை.மூன்று வருடங்களாக அவனுக்கு துணைப்போன சந்தர்ப்பங்கள் இந்த மூன்று நாள் டெல்லி பயணத்திலும் கைக்கொடுத்தது. யமுனாவின் கண்ணில் படாமலே, சென்னை புறப்படும் விமானத்தில் ஏறி அமர்ந்ததை எண்ணி நெகிழ்ந்தான், ஊரில் தனக்கு காத்திருக்கும் சவால்களை பற்றி அறியாதவன்…

டெல்லி விமான நிலையத்திலிருந்து இருநூறு மைல் தள்ளி இருக்கும் யமுனா அவன் வருகையை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்; பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இளம் பெண்களோடு சிற்றாடை தைத்து கொண்டிருப்பவளுக்கு அவனை பற்றி சிந்திக்கவும் நேரமில்லை; சந்திக்கவும் அவசியமில்லை தான்.

தெய்வம் நின்று கொல்லும் என்று இவன் மனதில்,


தெளிவு பிறக்கும் நாள் தான் என்றோ?

ஊரார் பிள்ளைகளுக்கு சிற்றாடை தைப்பவள்,

பெற்ற பிள்ளையை சீராட்டும் நாள் தான் என்றோ?

சுகமும் துக்கமும் எவருக்கும் நிரந்தரமில்லை - அதை

சுற்றும் காலச்சக்கரம் தலைகீழாய் மாற்றும் - இவர்கள்

உணரும் நாள் தான் என்றோ – விடை தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
 
Last edited:

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
492
Reaction score
855
Points
93
தொடர்ந்து கதையை படித்து உற்சாகமூட்டும் பாசப்பிணைப்புகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் 😍 🙏

இதுவும் யமுனா உங்களுக்கு Clue கொடுக்கும் பதிவே👩‍🦱🧐✍

மதிமிதாவிற்கு பின்👩‍🦱👶

படித்து "குணாவின் குணாதிசயங்களை" பற்றி என்னிடம் சொல்லுங்கள்🧐🤗:)

உங்கள்
"பாசமென்னும்" கருத்து மழையில் நனைய ஆவலுடன் 🦹‍♂️🦹‍♀️ போட்டி "பள்ளத்தாக்கில்" காத்துக்கொண்டிருக்கும்,

உங்கள்

அனாமிகா 50😍🙏
 
DhruvAathavi

Well-known member
Joined
Nov 4, 2021
Messages
179
Reaction score
276
Points
63
Location
Kanchipuram
@DhruvAathavi
Thank You Ma :love: 🙏
இன்னைக்கு இரண்டு எபிசோடு (10,11) அடுத்தடுத்து பதிவிட்டிருக்கேன். இரண்டையும் படித்தீர்களா:unsure::unsure:
இரண்டு பதிவும் அருமை தோழி, கதையிலையும் ஊரடங்கு சூப்பர்.
யமுனா🧐🧐🧐😇
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,863
Reaction score
34,888
Points
113
Age
36
Location
Tirunelveli
😳 😳 😳 Serthum vaikkama🙄🙄🙄🙄

Thaniya thayyal machine la thaichuttu irukka👀👀

Ava lover ku flash back irukksa🧐🧐🧐🧐

Avalukku than theriyathu aana ivanukku theriyum thana ava irukkra idam🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Interesting Pallathaaku👍👍

Death certificate a sudha Machini kekkalaiya😑😑😑😑
 
Chittijayaraman

Well-known member
Joined
Oct 16, 2018
Messages
2,086
Reaction score
4,242
Points
113
Location
Chennai
Mudalla ashwon ah dan adikanum enna dan avan sonnalum nee en da help panra ippadi patta friend thevai illa nu vittutu polame, inda loose enna dan problem en ippadi avalai delhi ku anupitan avalum thirumba pogala kuzhandai ah kuda ninaichi parkala, nice update dear thanks.
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
878
Reaction score
1,021
Points
93
Location
USA
நா இத முன்னாடியே பார்க்கல, ரைட்டர் ஜீ 😁😁😁

இப்ப தான் படிச்சென், யமுனா வா ஏன் மறு வாழ்வு மையத்தில் கொண்டு விட்டு இருக்கான், அந்த கடிதத்தில் என்ன இருந்தது🤔🤔🤔🤔

இவளுக்கு ஏதும் டிசீஸ் ஆ😳😳😳😳, ஆன us லா இல்லாத வைத்தியமா 🧐🧐🧐🧐

அவளும் அமைதி ஆயிட்டா🙄🙄🙄

இப்ப வீட்டில் என்ன பிராப்ளம் இருக்கோ, சுதா வேற அங்க இருக்கா, கண்டிப்பா அவ குழந்தை ஓட நிலையை கண்டு பிடிச்சிடுவா.....

இப்ப குணா நிலமை?????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements