பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
Profile Picture.jpgதன்னவன் வீசிய காகிதத்தின் கூரிய முனை பல்லவியின் கருவிழியை பதம் பார்த்துவிட்டு தரையிறங்கியது. நீர் கசியும் கண்களைக் கசக்கியவாறு அதை எடுத்தவளுக்கு எழுத்துக்கள் மங்கலாகத் தெரிய,

“இது என்ன குணா?” கபடமற்ற குரலில் வினவினாள்.

“போதும் டி உன் நாடகம்!” இரைந்தவன், “இன்னும் ஏன் அப்பாவி மாதிரி நடிக்கற! உன்ன உளவுபார்க்க அனுப்பினாளே ஒருத்தி…அவகிட்ட சொல்லு…மோசடி செய்த குற்றத்திற்காக நானும் என் அண்ணனும் அமெரிக்காவுல சிறைவாசம் அனுபவிச்சிட்டு இருக்கோம்னு!” ஆக்ரோஷமாக மிரட்டினான்.

அண்ணன் பெயரை குறிப்பிட்டதும், குணா அவர்கள் செய்த பரிசோதனை விவரங்களை கண்டறிந்துவிட்டான் என்று உணர்ந்தாள் பல்லவி.

“குணா…அது…அது…நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்!” சூழ்நிலை கைதியாக பேதை மன்றாட,

“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை! காவல் நிலையத்தில் வாக்குமூலம் கேட்பாங்க! அங்க வந்து சொல்லு…” என்றவன் படிக்கட்டுகளில் சரணை கண்டதும் அவனை குத்தீட்டும் பார்வையால் வீழ்த்தி, “…சொல்லுங்க அண்ணனும் தங்கையும்!” அழுத்தமாக உரைத்தான்.

குற்றம் புரிந்தவன் ஆவேசம் கொள்வதும், அதற்கு காதலின் மாயவலையில் சிக்கியவள் தடுமாறி பேசுவதையும் கண்ட சரண் எரிச்சலடைந்தான்.

“நானும் அதையேதான் சொல்றேன்! உன்கிட்ட பேச எங்களுக்கும் எதுவும் இல்ல! நீ போய் எங்கமேல புகார் கொடுடா! உயிரோடு இருக்குற மனைவி இறந்துட்டான்னு பொய்சொல்லி ஊர ஏமாத்திட்டு இருக்கான்; பெறாத பிள்ளைக்கு அப்பான்னு சொந்தம் கொண்டாடுறான்னு நானும் வாக்குமூலம் கொடுக்கறேன்!” வெஞ்சினத்துடன் உறுமினான்.

‘யமுனாவை பற்றியும் தெரியுமா’ திடுக்கிட்டவனுக்கு பேச வார்த்தை வரவில்லை. உறைந்து நிற்பவனின் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கி மேலும் மிரட்டினான் சரண்.

“குணச்சித்திர நடிகர் மிஸ்டர்.குணசேகரன் குழந்தை வளர்ப்பில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. குழந்தையின் பாதுகாப்பு கருதி குறுக்குவழியில் பரிசோதனை செய்யவேண்டிய சூழ்நிலைன்னு சொன்னா எங்கள யாரும் கைதி செய்ய முடியாது…மிஞ்சிப்போனா விசாரனை கமிஷன் வைப்பாங்க…

அப்படியே விசாரனை நடத்தினாலும், அவங்க என்ன என்னோட மாமனா மச்சானா…தப்பு செஞ்சிட்டோமேன்னு அவங்க முன்னால அவமானபட்டு நிற்க!” இளக்காரமாக பேசியவன், “ஆனா உன் நிலமையை யோசிச்சு பாரு…நீ பதில் சொல்லவேண்டியது உன்ன உத்தமன்னு நம்புற உண்மை உறவுகள்கிட்ட!”, எதில் வலி அதிகமென்று உணர்த்தினான்.

அண்ணனின் குத்தல் பேச்சில், குற்றமே செய்யாமல் குற்றவாளியாய் கூனிக்குறுகி நிற்கும் தன்னவனை ஆறுதலாய் கட்டியணைக்க பெண்மனம் துடித்தது.

“இன்னும் ஏன் இங்கேயே நிக்கற! போய் எங்க மேல புகார் கொடு! தக்க ஆதாரங்களோட வாக்குமூலம் கொடுக்க நாங்களும் தயார்!” திமிராய் உரைத்தவன், “பித்தலாட்டம் செய்யறவன் எல்லாம் மிரட்ட வந்துட்டான்!” முணுமுணுக்க,

“போதும் நிறுத்து அண்ணா!” கொந்தளித்தாள் பல்லவி.

அரக்கனை விட்டுவிட்டு தன்னை அதட்டுகிறாளே என்ற அண்ணனின் பரிதவிப்பை உணர்ந்தபோதும் குணாவிற்காகவே வாதாடினாள்.

“ப்ளீஸ் அண்ணா! அவசரப்பட்டு வார்த்தையை விட்டுடாதீங்க! என்னதான் இருந்தாலும், குணா நாளைக்கு இந்த வீட்டிற்கு மாப்பிள்ளையா வரப்போறவரு!” தன்னவனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

‘சாயம் வெளுத்த பின்னும் எதற்கிந்த நாடகம்’ குணா அவளை கேள்வியாய் பார்க்க, கர்வத்தில் ஆடிய பாசமலரோ, தங்கையின் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தது.

“வாங்க குணா! நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!” மென்மையாக அவன் கரத்தைப் பிடிக்க, அவனோ சட்டென்று விலகி நின்றான்.

தங்கை கெஞ்சுவதும், வஞ்சகன் முரடு பிடிப்பதுமென அவர்களைப் பார்க்க சகிக்கமுடியாமல், “எதுவாயிருந்தாலும் இங்கேயே பேசு!” உத்தரவிட்டான் சரண்.

“எனக்கு அவரோட தனியா பேசணும்னு சொல்றேன்ல!” எதிர்த்தாள் பல்லவி.

சரண் கோபம் எல்லையை கடக்க, விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை வெடுக்கென்று தூக்கியவன், “நான் வெளிய போறேன்! போதுமா!” கர்ஜித்து வேகநடையிட்டான்.

குணாவும் வாசலை நோக்கி நகர அவன்முன் நின்று வழிமறித்தாள் பல்லவி.

“நம்புங்க குணா! சுதா உங்கமேல குற்றம் சுமத்தியபோதும், தொழில்தர்மத்தையும் மீறி உங்களுக்காகத்தான் யோசிச்சேன். தந்தைவழி பரிசோதனை செய்யச் சொன்னதும், உங்க பக்கத்து நியாயம் பலப்படுத்ததான்!”

அவளை வெட்டும் பார்வையில் நோக்கியவன், “பரிசோதனை செய்யாதன்னு சொல்லியும், ரத்த தானம்ன்ற பேருல போலியா கையொப்பம் வாங்கி திருட்டுத்தனமா பரிசோதனை செய்யறதுதான் உங்க தொழில்தர்மமா?” ஏளனமாய் கேட்டான்.

“தப்புதான் குணா!” மன்னிப்பு கேட்டவள், குழந்தைகள் பாதுகாப்பு சேவை மையம் அன்று வீட்டில் நடத்திய புலனாய்வுகளின் விவரங்களை சரணிடம் சொன்னதால் ஏற்பட்ட குழப்பம் என்றாள்.

“பரிசோதனை செய்யலாம்னு நான் சொன்னப்போவே என்ன நம்பி, ஒளிவுமறைவு இல்லாமல் பேசியிருந்தீங்கன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுல.” அவன் தவறையும் சுட்டிக்காட்டினாள்.

“என்னோட அந்தரங்கமான விஷயங்களை பகிர்ந்துக்க, நீங்க எனக்கு யாரு?” கொச்சையாகப் பேசி அவமதித்தான்.

“அன்னைக்கு உங்களோட ஒரு உண்மையான சிநேகிதி! இன்னைக்கு...” தொடங்கியவளின் விழிகள் தயக்கத்தில் தரையில் படர்ந்தது.

“சிநேகிதியா!” இழிவாய் சிரித்தவன், “என் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட என் உறவுகளுக்கே உரிமையில்லாத போது, நீ எம்மாத்திரம்!” செய்நன்றி மறந்து அவமதித்தான்.

சுருக்கென்று குத்திய அவனது வார்த்தைகளில் எரிச்சலடைந்தவள், “அப்போ! ஒரு வக்கீலா உங்களை குறுக்குவிசாரணை செய்திருந்தா உண்மைகளை உரக்க சொல்லிருப்பீங்களா?” திடமான குரலில் வினவினாள்.

“இது…இது…இதுதான் உன்னோட உண்மையான சுயரூபம் பல்லவி!” ஒற்றைவிரலை காட்டி உரைத்தவன், “நீ எத்தனை ஆதாரங்கள் சேர்த்தாலும், என் மதுமிதாவை என்னிடமிருந்து பிரிக்கமுடியாது!” சவால்விட்டு புறப்பட எத்தனித்தான்.

உயிரானவளை ஊர் போற்ற, உண்மைகளை மறைக்க போராடும் இவனிடம் தர்க்கம் செய்வது நியாயமில்லை என்று நொடியில் உணர்ந்தவள்,

“ஒரு நிமிஷம் குணா!” மீண்டும் கையசைத்து தடுத்தாள்.

“கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க! நீங்க இத்தனை பொய்சொன்ன பிறகும், உங்கள காதலிக்கறேனே ஏன் தெரியுமா?” இடைநிறுத்தி அவனை ஏறிட்டாள்.

‘காதல் என்னும் பெயரில் கள்ளாட்டம் ஆடுகிறாய்!’ மனதில் நினைத்தவன் அசையாமல் நின்றான்.

“தனிமனிதனாக குழந்தையை வளர்க்கும் குணாவவையே நான் பிரம்மிப்பா பார்த்தேன். அப்படியிருக்க அந்த குழந்தை உங்களுக்கு பிறக்கலன்னு தெரிஞ்சியிருந்தும் அவமேல உயிரா இருக்குற உங்க பாசம்தான் என்னை உங்ககிட்ட ஈர்த்தது!” அவன் கரத்தை இறுக பற்றிக்கொண்டவள்,

“எனக்கு உங்க கடந்தகாலத்தைப் பற்றிக் கவலையில்லை. யார் சரி? யார் தப்பு? எதுவுமே நீங்க எனக்கு சொல்லவேண்டாம். இப்போ இருக்குற குணா…மதுமிதா மேல கண்மூடித்தனமான பாசம் வெச்சிருக்க இந்த குணாவோட நிழல்ல வாழ எனக்கும் இடம் கொடுங்க. அதுபோதும்!” முடிந்த அளவிற்கு தன் காதலின் ஆழத்தை எடுத்துரைத்தவள்,

“வரும் வெள்ளிக்கிழமை விமான நிலையத்துல உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன். நல்ல முடிவோட வாங்க!” என்று சிறைசெய்த அவன் கரங்களை விடுவித்தாள்.

செவிடன் காதில் ஊதியச் சங்குபோல எந்த உணர்ச்சியும் காட்டாமல் நகர்ந்தான்.



மீதமிருந்த நாட்களில், அண்ணனுடன் ஏற்பட்ட விரிசல்களை ஒட்டவைக்க பெரும்பாடுபட்டாள். விமான நிலையத்தின் அலைமோதும் கூட்டத்தில் தன்னவனை தேடிய அவள் விழிகள் ஏமாற்றத்தில் துவண்டுபோனது. பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்ததும் குணாவின் கைப்பேசிக்கு அழைத்தாள்.

பலமுறை முயற்சி செய்தும், அவன் அழைப்பை ஏற்கவில்லை. வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்தவள்,

‘இவன மிரட்டினாதான் வேலைக்காகும்’ எண்ணியபடி, அழுத்தமான தோரணையில் குரலஞ்சல் பதிவுசெய்தாள்.

“மிஸ்டர் குணா! பதிலெதுவாக இருந்தாலும் நேருல வந்து சொல்லிருக்கலாம். குறைந்தபட்சம் போன் செய்திருக்கலாம். என் முகம் பார்க்க முடியாம நீங்க ஒதுங்கி இருக்கீங்கன்னா, உங்களுக்கும் என் மேல காதல் இருக்கு; அதை சொல்ல தயங்கறீங்க.

பரவாயில்லை குணா! நான் ஊருக்கு போய் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன். வந்து என் கழுத்துல தாலிகட்டுங்க; தேன்நிலவுக்கு எங்க போகுறதுன்னு நேருல பார்த்துப் பேசிக்கலாம்; மிஸ் யூ ஸ்வீட்ஹார்ட்!”

தன்மான சிங்கம் அதைக் கேட்ட மறுகணமே, ‘‘மனசுல ரதிதேவின்னு நெனப்பு’ முணுமுணுத்தபடி அழைத்தான்.

திரையில் அவன் பெயர் கண்டதும் ‘அப்படி வாங்க வழிக்கு’ நமுட்டுச் சிரிப்புடன் அழைப்பை ஏற்றவள், “அதான் தேன்நிலவு பற்றி அப்புறம் பேசலாமுன்னு சொன்னேனே!” அவனை இன்னும் கடுப்பேத்தினாள்.

தன் காரியமே குறி என்றிருந்தவன், “எனக்கு எந்தவித தயக்கமும் இல்ல; என் யமுனா இருக்குற இடத்துக்கு வர முயற்சி செய்யாதீங்க; மதுமிதாமேல உண்மையிலேயே அக்கறை இருந்தா அந்த குட்டிச்சாத்தானோட சேர்ந்து ஆடாதீங்க!” அவன் தீர்கமாய்ப் பேச, அவள் இதழ்கள் புன்னகையில் தாண்டவமாடியது.

‘உங்க யமுனா இடத்தை யார் கேட்டா!’ மனதில் நினைத்தவள், “வழக்கு எல்லாம் போடமாட்டேன் குணா! மதுமிதாமேல இருக்குற அக்கறைனால இல்ல; என் புருஷன ஜெயிலுக்கு அனுப்பிட்டு நான் எப்படி தனியா டூயட் பாடமுடியும்.” அப்பாவியாக உரைத்தவள்,

“நீங்க என் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து பேசியிருந்தா நானும் உங்களுக்காக எத்தனை நாட்கள் வேணும்னாலும் காத்திருந்திருப்பேன். ஆனா இப்போ “யூ டோன்ட் ஹேவ் எ சோய்ஸ் டியர்! முகூர்த்த நாள் பார்த்து சொல்றேன் வந்து சேருங்க!” திடமாய்ச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

சிரித்துப் பேசினாலும் மனதளவில் குமுறினாள் அவள். காதலை சொன்னதும் தங்களுக்குள் இருந்த புரிதலில், மனம்திறந்து பேசுவானென்று பெரும் நம்பிக்கையுடன் வந்தவளுக்கு இப்பயணம் பகல்கனவாய் முடிந்தது. யமுனாவை பற்றிய பயம் வேண்டாமென்று தானே வாய்விட்டு சொல்வதைக் காட்டிலும் அவனாக உள்ளத்து ரகசியங்களை முன்வந்து சொல்லவேண்டும் என்று நினைத்ததுதான் தவறென்று காலம் அவளுக்கு பாடம் புகட்டும்.

சிடுசிடுத்துப் பேசினாலும் மனதளவில் நிம்மதி அடைந்தான் அவன். பல்லவியின் காதல் பிணத்தல்கள் எரிச்சலூட்டினாலும், அவள் தன் மீது வழக்கு தொடுக்க மாட்டேன்று சொன்னதில் நெகிழ்ந்தான். பகட்டு வாழ்க்கை விரும்பியவள் இன்று தன்னை காதலிப்பதாய் சொன்னது எல்லாம் அவளின் நிலையற்ற புத்தியின் வெளிப்பாடு என்று அலட்சியம் செய்தான்.

அவள் செய்யும் தந்திரங்களில் இனி அவன் திக்குமுக்காட போகிறான் என்று யார் அவனிடம் சொல்வது. தன்னிடம் எல்லா சமயத்திலும் உண்மையாய் இருந்தவளின் காதலும் நிஜத்திலும் நிஜமென்று உணர தவறிவிட்ட இவனுக்கும் காலம் பாடம் புகட்டும்.



நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில் பணிக்கு திரும்பினாள் பல்லவி. மற்ற வழக்குகளில் கவனம் செலுத்தியபோதும் குணாவின் நினைவலையில் தத்தளித்தாள். அழுத்தக்காரனுக்கு தன் காதலை எப்படி புரியவைப்பதென்று அசைப்போட, அச்சமயம் இருப்புக் கொள்ளாதவளாக உள்ளே நுழைந்தாள் சுதா.

“என்ன பல்லவி இது! இப்படி அடிக்கடி விடுப்பு எடுக்கறீங்க. வழக்கு தொடர சொன்னா, இழுத்தடிக்குறீங்க! உங்களால முடியலேன்னா சொல்லுங்க, நான் வேற வக்கீல் பார்த்துக்கறேன்!” அவளே கேள்வி, அவளே பதிலென்று பொறிந்தாள்.

அவளை தன்பிடியில் வைத்திருப்பதுதான் குணாவிற்கு பாதுகாப்பு என்று அறிந்தவள், ஆதாரங்கள் அனைத்தும் அவனுக்கு சாதகமாக இருப்பதால், இன்னும் தீவிரமாக புலனாய்வில் இறங்கி இருப்பதாக விளக்கி,

“வழக்கு போட்டுட்டா, ஒவ்வொரு ஹியரிங்கும் வழக்கறிஞயர் உங்ககிட்ட பணம் கறந்துகிட்டே இருப்பாங்க! பலமான ஆதாரம் ஒண்ணு கிடைத்தாலும் போதும், கேஸ் சீக்கிரம் முடிஞ்சுடும்!” அவள்மேலுள்ள அக்கறையில் நடப்பதாய் இருக்கையிலிருந்து முன்வந்து ரகசியம் பேசினாள் பல்லவி.

“உங்க நல்லமனசு புரியுது பல்லவி! ஆனா, குழந்தை பெண்ணின் அரவணைப்பு இல்லாம இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்த கயவன்கிட்ட அவதிப்படும்!” ஆதங்கப்பட்டாள்.

‘இவளே நம்ம காதலுக்கு வழிவகுக்கின்றாளே’ உதடுவரை வந்த சிரிப்பை அடக்கிகொண்டவள், “பேசாம உங்க மாமாவ இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லுங்க!” யோசனை சொன்னாள்.

“பெண்சகவாசத்துக்கு பேர் போனவன்னு சொல்றேன்! அவனுக்கு இன்னொரு திருமணமா! அவனை தண்டிக்கச் சொன்னா, உல்லாசமா வாழ வழிசொல்றீங்களே!”, கண்கள் அகல வினவினாள் சுதா.

“அப்படியில்ல சுதா! குழந்தைக்கு பெண்ணின் அரவணைப்பு ரொம்ப முக்கியம்; அதனால குழந்தையை நாங்க வளர்க்கறோம், இல்ல நீங்க மறுமணம் செய்துக்கோங்கன்னு உங்க மாமாகிட்ட சொல்லுங்க; பெண்சகவாசம் இருந்தா, நிச்சயமா திருமண பந்தத்துல மாட்டிக்க விரும்பமாட்டாரு; அதையே காரணம்காட்டி, நம்ம குழந்தையை மீட்டுடலாம்!” என்றாள்.

சட்டப்புத்தகத்தை கரைத்துக் குடித்தவள்போல பல்லவியை உயர்வாய் பார்த்தவள் அந்த ஆலோசனையை ஆமோதித்தாள்.

பல்லவியும் அவளை நம்பவைக்கும் விதத்தில் முதல்படியாக பிரதிவாதியிடம் முன்வைக்கும் கோரிக்கையாக அதை எழுதிதரச் சொன்னாள். அடுத்து குணா காதில் போடுவதை பற்றி சிந்தித்தவள்,

“இதைப்பற்றி நீங்க உங்க மாமாகிட்ட திட்டவட்டமா சொல்லுங்க!” என்றாள்.

மாமனிடம் பேச விரும்பாதவள், அத்தையிடம் தகவல் சொல்வதாக மறுத்துப் பேசினாள். தன்னை குணாவின் நலம்விரும்பியாக பாவிக்கும் சாவித்ரி, எப்படியும் விஷயமறிந்த தன்னிடம் வருவாள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள், சுதாவிற்கு சம்மதம் தெரிவித்தாள்.

மாமனை கையும் களவுமாக சிக்கவைக்க வழிபிறந்ததாய் எண்ணிய சுதா, சாவித்ரியை சந்தித்து எச்சரித்தாள். இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த சுதா, மீண்டும் பிரச்சனை செய்கிறாளே என்று தாய்மனம் பதறியது. குணாவைப் பற்றி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், சுதா தன்னிலையில் பிடிவாதமாக இருந்தாள். குணாவிடம் சமயம்பார்த்து பேசுகிறேன் என்று சமரசம் பேசியவளுக்கு பல்லவி நினைவு வந்தது.

பல்லவியிடன், சுதா கிளப்பும் புதுப் பிரச்சனையை விவரித்தவள், அவள் ஆலோசனைக்காக காத்திருந்தாள். அனைத்தும் அறிந்தும் அறியாதவளாய்,

“இந்திய சட்டம்படி அவங்க கேக்குற விஷயம் ரொம்ப நியாயமானது ஆன்ட்டி. குணா நல்லவருன்னு நமக்குத் தெரியும்; ஆனா இந்தமாதிரி சூழ்நிலையில குணா என்னதான் குட்டிகரணம் போட்டாலும், குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்குமாவது பெண்ணின் அரவணைப்பு அவசியம்னு தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாதான் வரும்.”

பல்லவி தன்னால் முடிந்தளவுக்கு சாவித்ரியை குழப்பிவைக்க, அவளோ மகனிடம் இதைப்பற்றி பேசக்கூடத் தயங்கினாள். அன்று மதுமிதாவுக்கு தீக்காயம் பட்டப்போது குணா, பல்லவியின் பக்குவமான பேச்சுக்கு செவிசாய்ததை சுட்டிக்காட்டியவள், “குணாகிட்ட நீயே கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லுமா! நீ சொன்னா அவன் நிச்சயம் கேட்டுப்பான்!” உதவும்படி கேட்டுக்கொண்டாள்.

‘நானும் அப்படி நம்பித்தானே ஏமாந்துப் போனேன்!”, உள்ளுக்குள் நொந்துக்கொண்டவள்,

“அன்னைக்கு நான் அங்க இருந்ததுனால தலையிட்டேன். ஒவ்வொரு முறையும் அவர் விஷயத்துல தலையிட்டா அது அவ்வளவு நல்லாயிருக்காது ஆன்ட்டி! நீங்களே நேரடியா பேசுங்க! வேணும்னா, சட்டரீதியா இதுல இருக்குற சிக்கல் எல்லாம் நான்தான் சொன்னேன்னு சொல்லுங்க! அவருக்கு இந்த விஷயத்துல என்கிட்ட பேசணும்னு தோணினா, அவரே எனக்கு போன் செய்வார்!” அப்பாவியாக பேசி மறுத்தாள்.

சாவித்ரி தகவல்கொடுத்த அடுத்தநொடியே, குணா தன் சூழ்ச்சியை உணர்ந்து திட்டுவதற்காகவாவது தன்னை தொடர்புகொள்வான் என்ற மிதப்பில் இருந்தாள் அவள். ஒட்டுமொத்தமாய் ஒதுங்கியிருப்பதற்கு, சண்டையிட்டுப் பேசிக்கொண்டால் கூடப் போதுமென்று தோன்றிது.

கடவுள் மீது பாரத்தைப்போட்டு, சாவித்ரி குணாவை தொடர்புகொண்டாள். சுதா மிரட்டியது, அதைப்பற்றி பல்லவியிடம் தான் பேசியது, அதற்கு பல்லிவியின் ஆலோசனை என்று முழூவிச்சாக ஒப்பித்தவள், மகன் எரிமலையாய் வெடிக்கும் அந்த நொடிக்காக காத்திருந்தாள்.

குணாவோ, பல்லவியின் பெயரை கேட்டதுமே, இது அனைத்தும் அவள் சூழ்ச்சிதான் என்று கண்டறிந்தான். தந்திரம் செய்பவர்களை, அவர்கள் வழியிலேயே சென்றுதான் மடக்க வேண்டுமென்று தெளிந்தவன்,

“பல்லவி சொல்றது ரொம்ப சரிதான் மா!” மென்மையிலும் மென்மையாய் தொடங்கினான்.

அதுவே சாவித்ரிக்கு வியப்பாய் இருந்தது.

“எனக்கும் நீங்க எல்லாரும் சொல்றது புரியுது. மதுமிதாவுக்கு தாயின் அரவணைப்பு ரொம்ப முக்கியம். அவளுக்காக நான் கட்டாயம் திருமணம் செய்துக்கறேன். நீயே நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா பாரு மா; ஆனா திருமணமாகி கணவன் இழந்த பெண்ணா இருக்கணும்! அப்படிபட்டவங்க, என் நிலமையை புரிஞ்சுகிட்டு அனுசரணையா இருப்பாங்கன்னு நம்பறேன்.” திருமணத்தில் பரிப்பூரண சம்மதமென்று சொன்னதும் சாவித்ரிக்கு நடப்பதெல்லாம் கனவா நிஜமா என்று சந்தேகமாக இருந்தது.

உடனே அவனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் இறங்குவதாக அவள் உற்சாகமாய் உரைக்க, குணா குறுக்கிட்டான்.

“ஆனா ஒரு ஆறு மாசத்திற்குப் பிறகு திருமணம் செய்துக்கறேன்.” தடைவிதிக்க, தாய்மனம் விழித்துக்கொண்டது.

“ஏன் டா! ஆறு மாசத்திற்குப் பிறகு ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கலாம்னு பாக்குறியா?” அதிகாரமாய் கேட்டாள்.

ஆறு மாதத்தில், மதுசூதனன் மனம்மாறி வந்துவிட வேண்டுமென்று அவன் மனம் ஏங்கியதுதான் உண்மை. அதுவரை சுதாவும், பல்லவியும் அவன் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதற்கே திருமணத்திற்கு செவிசாய்த்தான். ஆனால் இம்முறை சாவித்ரியிடம் தேனொழுகப் பேசி அவளை ஏமாற்ற முடியவில்லை.

“இல்லம்மா! இன்னும் ஆறுமாசத்துல என்னோட முனைவர் பட்டப்படிப்பு முடிஞ்சிடும்!” நம்பகாமான காரணம் கூற,

அப்பொழுதும் தாய்மனம் திருப்தி அடையவில்லை.

“சரிமா!” பெருமூச்சுவிட்டவன், “பெண்பார்த்ததும் உடனே நிச்சயம் செய்துக்கலாம்! ஆனால் கல்யாணம், படிப்பு முடிஞ்சப் பிறகுதான்!” தழைந்து போக, அதைக்கேட்டவளின் மனம் குளிர்ந்தது.

“அப்படியே பல்லவிகிட்ட என் முடிவையும் அவங்களுக்கு என் நன்றிகளையும் சொல்லிடு!” காதல் நாடகம் ஆடும் அவளுக்கு தானும் சளைத்தவனில்லை என்று காட்டிக்கொள்ள விரும்பினான்.

மகனின் மனமாற்றத்தில் மகிழ்ந்தவள் அவனுடன் பேசிமுடித்த கையோடு பல்லவியை அழைத்தாள். அவளுக்கு உளமாற நன்றி தெரிவித்தவள் மகனுக்கு பெண்பார்க்கும் திட்டங்களைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.

மறுமுனையில் இருந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தன்னிடமிருந்து தப்பிக்க, வேறொரு பெண்ணை மணக்க நினைக்கிறானே என்று வருந்தினாள். அதுவும் கணவன் இழந்த பெண்ணை மணக்கும் அளவிற்கு தன்னை வெறுக்கின்றான் என்று நினைக்கும்போது அவளுக்கு வேதனையாக இருந்தது.

“ஆன்ட்டி! நான் உங்கள நேருல பார்த்துப் பேசணும்!” குணாவை மணக்க வேண்டுமென்றால், சாவித்ரியிடம் மனம்விட்டு பேசுவதைவிட வேறுசிறந்த வழியில்லை என்று தீர்மானித்தாள்.




இருண்டுபோன வாழ்விற்கு ஒளியாய் வந்தவளை,
ஈவிரக்கமில்லாமல் ஒதுக்குகிறான் அவன்!
இகழ்வாய் பேசி இதயம் துளைத்தவனை மணக்க,
ஈன்றெடுத்தவளிடம் ஓடுகிறாள் அவள்!
தாய்மனம் யார் பக்கம் சாயும்-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
 




Last edited:

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
தொடர்ந்து கதையைப் படித்து உற்சாகமூட்டும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்:love:🙏

இன்றும் இரண்டு எபிசோடுகள்✌✌ பதிவிடுகிறேன் தோழமைகளே! இரண்டு என்பதைக் காட்டிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பான நிகழ்ச்சிகள் வருவதால், இரண்டு பாகங்களாக பிரிக்காமல், தனி எபிசோடு எண்கள் கொடுத்திருக்கேன். அவ்வளவுதான்🤗🤗🤗

இந்தப் பகுதியில் உங்களுக்கு மிகவும் எளிமையான கேள்விதான்!

வீம்பனிடம் வீண் பிடிவாதம் பிடிப்பதுதான் சரியா – இல்லை

தோழியாக பாவித்தவளை இன்று துரோகி என்று பழிப்பதுதான் பிழையா?
கடந்த இரண்டு எபிசோடுகளுக்கு பெரும்பாலானோர் பள்ளத்தாக்கு பக்கம் வரவேயில்லை😟😟😟😟

எபிசோடுகள் நீங்கள் பார்க்கவில்லையா - இல்லை
சஸ்பனெஸ் தெரிந்ததால் படிக்கவில்லையா -இல்லை
கதையின் போக்கு பிடிக்கவில்லையா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் நிறைகுறைகளே எனக்கு தூண்டுகோல்🙏🙏

இம்முறை உங்களை எல்லாம், இவ்விடத்திலேயே tag செய்கிறேன்.


உங்கள் பாசமென்னும் கருத்து மழையில் நனைய ஆவலுடன் 🦹‍♂️🦹‍♀️போட்டி பள்ளத்தாக்கில் காத்துக்கொண்டிருக்கும்,

உங்கள்
அனாமிகா 50🙏🙏

@ப்ரியசகி @Mrs beenaloganathan @KalaiVishwa @Shasmi @Shaniff @Chittijayaraman @Raman @Priyakutty @DhruvAathavi @Rajiprabha @Sasi @e anandhi @AkilaMathan @Vijayasanthi @Resh @chitraravi @vapoorani @Sai deepa
 




Last edited:

Priyakutty

Well-known member
Joined
Nov 22, 2021
Messages
887
Reaction score
730
Points
93
Location
Salem
Pavi ku unamai theriyarathuku munna baby ah pathukapa pathukanum and Guna ku thandanai vangi kodukanum nu evlo kopam ah nenachanga....😔
Ipo Guna mattum epd oru unmaiyum theriyama avanga love ah accept panvanga....?🤔
Avaruku avanga pannadhu vera therinjiduchu....😕
Ivarum avanga feeling ah purinjika try panna matraru ore nodiyila avangala kettavangala nenaika arambichutaru....☹
Nice Episode dear....😊

Happy Pongal....🥰❤
 




Raman

Well-known member
Joined
May 29, 2019
Messages
3,146
Reaction score
8,190
Points
113
Location
Trichy
தொடர்ந்து கதையைப் படித்து உற்சாகமூட்டும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்:love:🙏

இன்றும் இரண்டு எபிசோடுகள்✌✌ பதிவிடுகிறேன் தோழமைகளே! இரண்டு என்பதைக் காட்டிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பான நிகழ்ச்சிகள் வருவதால், இரண்டு பாகங்களாக பிரிக்காமல், தனி எபிசோடு எண்கள் கொடுத்திருக்கேன். அவ்வளவுதான்🤗🤗🤗



கடந்த இரண்டு எபிசோடுகளுக்கு பெரும்பாலானோர் பள்ளத்தாக்கு பக்கம் வரவேயில்லை😟😟😟😟

எபிசோடுகள் நீங்கள் பார்க்கவில்லையா - இல்லை
சஸ்பனெஸ் தெரிந்ததால் படிக்கவில்லையா -இல்லை
கதையின் போக்கு பிடிக்கவில்லையா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் நிறைகுறைகளே எனக்கு தூண்டுகோல்🙏🙏

இம்முறை உங்களை எல்லாம், இவ்விடத்திலேயே tag செய்கிறேன்.


உங்கள் பாசமென்னும் கருத்து மழையில் நனைய ஆவலுடன் 🦹‍♂️🦹‍♀️போட்டி பள்ளத்தாக்கில் காத்துக்கொண்டிருக்கும்,

உங்கள்
அனாமிகா 50🙏🙏

@ப்ரியசகி @Mrs beenaloganathan @KalaiVishwa @Shasmi @Shaniff @Chittijayaraman @Raman @Priyakutty @DhruvAathavi @Rajiprabha @Sasi @e anandhi @AkilaMathan @Vijayasanthi @Resh @chitraravi @vapoorani @Sai deepa
🏃🏃🏃. thankyou.
 




Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
296
Reaction score
476
Points
63
Location
COIMBATORE
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டாம்
ஆடி தீர்த்து விட்டான் குணா மாம்ஸ்....
ஆடும் ஆட்டத்தை
ஆடும் வரை ஆடு என்று
ஆர போடாமல்
அதிரடியாய்
ஆட்டத்துக்கு நான் ரெடி.....
ஆருயிர் காதலியாய் உரைக்க
ஆடிப்போய் விட்டான்
ஆணவ காதலன்.....

சிலந்தி வலை போல
சிறை கைதியாய்
சின்னஞ்சிறு கிளிக்காக
சிறு உலகம் கொண்டு
சிந்தித்து வாழ்ந்த
சிரஞ்சீவியை
சிறை பிடிக்க
சிறகை விரித்து பறக்க துடிக்கும்
சிட்டுக் குருவி....

தூதாய் தன் காதலுக்கு
தாயையே தன் பக்கம்
திருப்பி
தூபம் போட்ட
தன்னவளை நினைத்து
தன் வலையில் சிக்க வைக்க
தன்மையாக தாயிடம் பேச
தன் மகன் வாழ்வில்
தீபமேற்ற ஒரு
திருமகளை தேட அனுமதி கிடைக்க
திருப்தியாய் தாய்மனம்......
 




KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,816
Reaction score
34,820
Points
113
Age
36
Location
Tirunelveli
Pallavikku payirchi kaanathu polaye 🤔🤔🤔

Junior vakkeel ku soothanama pesa varala🙄🙄

Kidukku pidi pottu kirukka vaikra mathri kelvi kekka venama🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Savithri ammavum pallaviyum saat poot three pottu Guna va yematha porangala🤔🤔

Nalla irukku update 👍
 




ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
Guna ku ava pannathu theriyumndra batchathula love yepdi acpt?🙄🙄🙄🙄

Savi ma pallavi guna va yemathiruvangala?🙄🙄🙄

Pavi🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 




ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
தொடர்ந்து கதையைப் படித்து உற்சாகமூட்டும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்:love:🙏

இன்றும் இரண்டு எபிசோடுகள்✌✌ பதிவிடுகிறேன் தோழமைகளே! இரண்டு என்பதைக் காட்டிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பான நிகழ்ச்சிகள் வருவதால், இரண்டு பாகங்களாக பிரிக்காமல், தனி எபிசோடு எண்கள் கொடுத்திருக்கேன். அவ்வளவுதான்🤗🤗🤗



கடந்த இரண்டு எபிசோடுகளுக்கு பெரும்பாலானோர் பள்ளத்தாக்கு பக்கம் வரவேயில்லை😟😟😟😟

எபிசோடுகள் நீங்கள் பார்க்கவில்லையா - இல்லை
சஸ்பனெஸ் தெரிந்ததால் படிக்கவில்லையா -இல்லை
கதையின் போக்கு பிடிக்கவில்லையா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் நிறைகுறைகளே எனக்கு தூண்டுகோல்🙏🙏

இம்முறை உங்களை எல்லாம், இவ்விடத்திலேயே tag செய்கிறேன்.


உங்கள் பாசமென்னும் கருத்து மழையில் நனைய ஆவலுடன் 🦹‍♂️🦹‍♀️போட்டி பள்ளத்தாக்கில் காத்துக்கொண்டிருக்கும்,

உங்கள்
அனாமிகா 50🙏🙏

@ப்ரியசகி @Mrs beenaloganathan @KalaiVishwa @Shasmi @Shaniff @Chittijayaraman @Raman @Priyakutty @DhruvAathavi @Rajiprabha @Sasi @e anandhi @AkilaMathan @Vijayasanthi @Resh @chitraravi @vapoorani @Sai deepa
Pothuvagave saturday sunday na site pakkam varathu kuraivu than pa. Athulayum pandigai samyangal la koncham kashtam than. Naane ippothan konchama kedaicha gap la intha pakkam vanthiruken. So ellarum avanga velaiya mudichutu thane varanum. Varuvanga
 




Advertisements

Latest Episodes

Advertisements