பாட்டி சொல்லைத் தட்டாதே

Ramya boobalan

Author
Author
SM Exclusive Author
#1
பாட்டி சொல்லைத் தட்டாதே

டேய் மச்சான் தீபக் எங்கடா இருக்க என்று தன் நண்பனிடம் அலைபேசியில் கேட்டவாறு தன் வீட்டு ஸ்டோர் ரூமில் இருந்து வெளியேறினான் கதிர்.

வீட்ல தான்டா இருக்கேன் காலை 9 மணிக்கே ஃபோன் பண்ணி இருக்க என்ன பிரச்சனை டா

பெருசா ஒன்னுமில்லேடா நைட்டு சரக்கு அடிச்ச போதையில பெட்ரூமுக்கும் ஸ்டோரூமுக்கும் வித்தியாசம் தெரியாம ஸ்டோர் ரூம்ல போய் தூங்கிட்டேன் டா அங்க இருந்து எந்த பூச்சி கடிச்சதுனு தெரியல முகத்தில் அங்கங்க வீங்கிப்போய் இருக்கு.

அதுக்கு எனக்கு ஏன்டா ஃபோன் பண்ண ஹாஸ்பிடலுக்கு போய் பாரு டா லூசு பயலே.

காலையிலேயே கடுப்படிக்காத டா மச்சி ஈவ்னிங் அவ வர சொல்லி இருக்கா அவள போய் பார்க்கணும் அங்கே போகும்போது மூஞ்சி இப்படி இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லு அவளே என்னை இப்போ கழட்டிவியலாமா அப்போ கழட்டி விடலாமான்னு காரணம் தேடிட்டு இருக்கா உனக்கு தெரிஞ்ச ஸ்கின் டாக்டர் இருந்தா சொல்லுடா உடனே சரியாக...

சரிடா நீ கிளம்பி வீட்டுக்கு வா இங்க இருந்து எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்.
என்று அழைப்பை துண்டித்தான் தீபக்.

படுக்கை அறையில் இருந்து தன் நண்பனுடன் உரையாடியவாறு வெளியேறியவன் வீட்டின் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தான் அவன் பேசும் வரை அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனது பாட்டி சரோஜா அவனிடம்

டேய் கதிரு என்னடா ஆச்சு உன் முகமெல்லாம் இப்படி வீங்கி போய் இருக்கு என்றார்.

இவ்வளவு நேரம் இந்த முகத்தை தானே எம்ஜிஆர் டான்ஸ் ஆடறத பார்க்கிற கணக்கா வேடிக்கை பாத்துட்டு இருந்த இப்ப என்ன கேள்வி கேட்கற என்றான் கடுகடுத்த குரலில் கதிர்.

அது சரிடா சின்ன பூச்சி கடி தானே அதுக்கு போய் எதுக்கு டாக்டர் கிட்ட எல்லாம் போற பாட்டி வேப்பங்கொழுந்து மஞ்சளும் அரச்சு தடவி விடுறேன் டா சீக்கிரமா சரியா போயிடும் அப்புறமா எங்கேயோ எவளயோ பாக்க போறேன்னு சொன்னியே அங்க போயிட்டு வாடா என்றார் சரோஜா பாட்டி பாக்கு கொட்டையை இடித்து கொண்டே...

அடக்கடவுளே கிழவிக்கு காது கேட்காதுனு நினைச்சு இது பக்கத்துல நின்னு பேசினது தப்பா போச்சே இனிமே இது கிட்ட ஜாக்கிரதையா நடந்துக்கணும் என மனதில் நினைத்தவன் ஆமா மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நீ வைத்தியம் பார்க்கிறயாக்கும் போ பாட்டி போய் பாக்கு இடிக்குற வேலைய பாரு
என்று கூறியவன் விட்டால் போதும் என எழுந்து ஓடி விட்டான்.

வீட்டிலிருந்து வெளியேறிய கதிர் நேராக தன் நண்பன் தீபக் வீட்டிற்கு சென்று அங்கிருந்து தன் நண்பனுடன் மருத்துவமனை நோக்கி செல்லலானான்.
 

Ramya boobalan

Author
Author
SM Exclusive Author
#2
தீபக் மற்றும் கதிர் மருத்துவமனை வந்தடைந்தனர் மருத்துவர் அறை‌ கதவில் மாட்டப்பட்டிருந்த மருத்துவரின் பெயர் பலகையை கண்ட கதிர் அதிர்ச்சி அடைந்தான்.

(அப்படி என்ன பேரா இருக்கும்)

டேய் தீபக் என்னடா பேரு இது வாடா நாம வேற டாக்டர்கிட்ட போய் பார்க்கலாம் எனக்கு என்னமோ சரியா படல‌ என தன் நண்பன் தீபக் இடம் அலரினான் கதிர்.

அட யாருடா இவன் பேரா முக்கியம் நமக்குத் தேவை இப்போ ட்ரீட்மென்ட் இவர் பல வருஷமா எங்க ஏரியால ஸ்கின் டாக்டரா இருக்குறாரு டா பேர் போன டாக்டர் அதெல்லாம் சரியா போயிடும் வந்த வேலைய பாத்துட்டு கெளம்புவியா அத விட்டுட்டு சும்மா வாய மூடுடா. என்றான் தீபக் அதட்டலாக

அதன் பிறகு நண்பர்கள் இருவரும் மருத்துவரை சந்தித்து அவர் சொன்ன மருந்துகளை மருந்தகத்தில் இருந்து வாங்கியவர்கள் தீபக் வீடு நோக்கி புறப்பட்டனர்.

மருத்துவரின் பெயரை கண்டதிலிருந்து கதிருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது.

அந்த ஆளு பேரே சரியில்லடா மச்சான் அந்த மருந்து சாப்பிடலாமா வேண்டாமா மருந்து சாப்பிட வா வேண்டாமா டா எனக்கு பயமா இருக்குடா என்று தீபக்கிடம் புலம்பியவாறு இருந்தான் கதிர்.

டேய் என்ன தாண்டா உன் பிரச்சனை உன் ஆளு உன்னை கழட்டி விட்டுட்டு போகம இருக்கணும்னா பேசாம இந்த மருந்தை சாப்பிட்டு ஆயில்மெண்ட் மூஞ்சில பூசிவிட்டு மூடிட்டு தூங்கு டா எருமை மாடு என்று தீபக் கடிந்து கொண்ட‌ பிறகு மருந்துகளை விழுங்கியவன் தீபக் கூறியவாறு இழுத்து போத்தி கொண்டு தூங்கி போனான்.

மாலை 4 மணி அளவில் கண் விழித்த கதிர் முகத்தில் வீக்கம் குறைந்து இருப்பதை கண்டு நிம்மதி அடைந்தான். பிறகு தீபக்கிடம் கூறிக் கொண்டு தன் காதலியை சந்திக்க பூங்கா நோக்கி புறப்பட்டான்.

மாலை ஆறு மணி அளவில் தீபக்கின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்த தீபக் வெளியில் கதிர் நின்ற கோலத்தை கண்டு அதிர்ந்தான்.

டேய் மச்சான் கதிர் என்னடா காலையில மூஞ்சி மட்டும்தான் வீங்கிப் போய் இருந்தது இப்போ உடம்பெல்லாம் இப்படி சிவந்து போய் வீங்கிப் போய் வந்து இருக்க இப்போ எந்த குப்பைத் தொட்டியில குடித்துவிட்டு போய் விழுந்து எழுந்து வந்து இருக்கா டா என்றான் தீபக்...

தீபக்கை பொறுமையாக வீட்டின் உள்ளே அழைத்து சென்று கதவை மூடிய கதிர் தீபக்கை புரட்டிப் போட்டு மிதி மிதி என்று மிதித்தான்.

டேய்...டேய்... டேய்... டேய்... நிறுத்துடா எதுக்குடா என்ன அடிக்கற வாயிலை மிதிக்காதடா டேய் என்னடா ஆச்சு சொல்லிட்டு அடிடா பாவி பாவி...

ஒரு சிறு உலகப் போருக்குப் பிறகு தீபக் வீட்டில் அமைதி நிலவியது.

தீபக் குப்புறப் படுத்தவாறு கீழே விழுந்திருக்க அவன் டீ ஷர்ட் காலரைப் பற்றி இழுத்தவாறு அவன் முதுகில் ருத்திரமூர்த்தியாக அமர்ந்திருந்தான் கதிர்...

நான் தான் சொன்னேன்ல டா அப்பவே சொன்னேன்ல அந்த டாக்டர் பேரே சரி இல்ல அங்க போக வேணாம் வாடான்னு கேட்டியா இப்ப பாரு அந்த ஆள் கொடுத்த மருந்துல சின்னதா என் மூஞ்சில மட்டும் இருந்த வீக்கம் இப்போ எவ்ளோ பெருசா உடம்பு முழுக்க ஆயிடுச்சி பாருடா பாரு.

என ஏகத்துக்கும் கத்திய கதிர் மூச்சு வாங்க தீபக் இடம் இருந்து நகர்ந்து அமர்ந்தான்...

பிறகு சாவகாசமாக எழுந்த தீபக் கதிர் அருகில் சென்று அமர்ந்தவாறு

அது சரி மச்சான் உன் ஆள பார்க்கப்போறேனு போனியே அங்க என்ன ஆச்சு அந்த கதைய கொஞ்சம் சொல்லு கேட்போம் என்று ஆர்வமாக கேட்டான் தீபக்...

என்ன ஆச்சா நாசமா போச்சு டா நாசமா போச்சு எல்லாம் உன்னால தாண்டா பாவிப்பயலே என் வாழ்க்கையில உனக்கு நான் என்ன பாவம் பண்ணுனேனு என் காதல்ல இப்படி மண்ண அள்ளிப் போட்டியேடா நீ எல்லாம் சாகுற வரைக்கும் சிங்கள(single) நான் தான் டா சாவ இது என் சாபம் டா என்றான் கதிர்.

ஆமா இவரு கண்ணகியோட மேய்ல் வெர்ஷன் (male version) எனக்கு சாபம் விடுறாரு என்ன ஆச்சுன்னு சொல்லு டா என்றான் தீபக்.

தீபக்கை எரித்துவிடும் பார்வை பார்த்த கதிர் மாலை பூங்காவில் தன் காதலியை சந்திக்கச் சென்றபோது நடந்தவற்றை கூறத்
துவங்கினான்...
(தீபக் கதிர் கிட்ட கதை கேக்கட்டும் நான் உங்களுக்குச் சொல்றேன்)

மாலை கதிர் பூங்காவிற்கு தன் காதலியை சந்திக்கச் சென்றபோது கதிருக்கு முன்பாகவே கதிரின் காதலி அவனுக்காக காத்துகொண்டு இருந்தாள்.

பூங்காவில் சிறிது நேரம் நடந்தவாறு உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு மர நிழலில் அமர்ந்தனர்.

அப்போது கதிருக்கு அவன் உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட கை கால்களில் தேய்த்து கொண்டிருந்தான்.

கதிரின் செய்கையை கண்ட கதிரின் காதலி என்ன ஆச்சு கதிர் ஏன் இந்த மாதிரி பண்ற என வினவினாள்.

ஒன்னும் இல்ல சும்மாதான் ஏதோ பூச்சி ஊர்ற மாதிரி இருந்துச்சு அதுதான் வேற ஒன்னும் இல்ல என சமாளித்த கதிரால் சிறிது நேரத்திற்கு பிறகு சமாளிக்க இயலாத அளவிற்கு அவன் உடலில் அரிப்பு ஏற்பட துவங்கியது.

அரிப்பு அதிகமாக அதிகமாக கதிர் தன் உடலை போட்டு சொரிந்து கொள்ளத் துவங்கினான்...
 

Ramya boobalan

Author
Author
SM Exclusive Author
#3
கதிரின் செய்கைகளை கண்ட காதலி முகம் சுளித்து என்ன கதிர் பொது இடத்தில் வந்து இப்படி அசிங்கமா பண்ணிட்டு இருக்க உன் கூட வந்தது தப்பா போச்சே நான் கெளம்புறேன் என கூறி சென்று விட்டாள்...

பூங்காவில் நடந்தவற்றை கதிர் கூறியதும் தீபக் தன் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விழுந்து கொண்டிருந்தான்.

தீபக் சிரிப்பதை கண்ட கதிர் மேலும் கோபம் அடைந்து அவனை மீண்டும் நான்கு உதை உதைத்து விட்டு தீபக் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

கதிர் வீட்டிலிருந்து சென்றபோது இருந்த நிலையையும் இப்பொழுது வரும் நிலையும் கண்ட கதிரின் அன்னையும் பாட்டியும் என்னடா ஆச்சு காலையில போகும்போது கொஞ்சம் நல்லா இருந்த இப்போ இவ்ளோ அதிகம் ஆச்சு பாட்டி சொன்னத அப்பவே கேட்க வேண்டியதுதானே என கதிரின் அன்னை கதிரை கடிந்து கொண்டார்.

பிறகு கதிரை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்ற கதிரின் பாட்டி கதிருக்கு சில மூலிகை மருந்துகளை அரைத்து அவன் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு நல்லெண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்...

சில மணி நேரங்களுக்கு பிறகு கதிரின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்க சென்றனர் கதிருக்கு பால் கொடுக்க கதிரின் அறைக்கு சென்ற கதிரின் அன்னை கதிர் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இரவு வீடு வந்து சேரும்வரை நடந்தவற்றை அவனிடம் கேட்டு அறிந்தார்.

சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு அவர் கிளம்ப எத்தனிக்கையில் ஆமா எல்லாத்தையும் சொன்னா அந்த டாக்டர் பேரை சொல்லவே இல்லையே டா என கேட்டார்.

ஆங்ங்ங் மண்ணாங்கட்டி என கத்தியவன் இழுத்து போத்தி கொண்டு படுத்து விட்டான்.

இப்ப நான் அப்படி என்ன கேட்டுவிட்டேனு இப்படி கத்துறான் என மனதில் நினைத்தவர் அவர் அறைக்கு சென்று உறங்கிப் போனார் கதிரின் அன்னை.

மறுநாள் காலை தூங்கி எழுந்து அறையிலிருந்து வெளியேறிய கதிர் வரவேற்பறையில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை கண்ட கதிரின் அன்னையும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினார்கள்...

டிவியில் சென்று கொண்டிருந்த செய்தி யாதெனில்...

இன்றைய முக்கிய செய்தி:

பித்தலாட்டம் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர்
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர் கடந்த பத்து வருடங்களாக தான் ஒரு தோல் மருத்துவ நிபுணர் என கூறிக்கொண்டு அவர் இருந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது அவர் பெயர் மண்ணாங்கட்டி என கூறப் படுகிறது...

டேய் கதிரு அப்போ நைட் நீ
அம்மாவை திட்டலயா அந்த ஆளு பேருதான் சொன்னியா அம்மா கூட கோபத்தில் என்ன திட்றனு நினைத்துட்டேன் டா என கூறிய கதிரின் அன்னை மேலும் சிரிக்கத் தொடங்கினார்...

போதும் சிரிச்சது இரண்டு பேரும் நிறுத்துறீங்களா ஆயிரம் பேரைக் கொன்றாள் தான் அரை வைத்தியன் ஆகலாம்னு சொல்லுவாங்க அந்த ஆளு அத ஃபாலோ பண்ணியிருப்பான் போல விடுங்க ஏதோ தெரியாம மாட்டிக்கிட்டேன் அதுக்குனு இப்படியா சிரிப்பீங்க கடுப்பேத்தாமா போய் காலையில டிபன் செய் மா என கதிர் சிடு சிடுத்து கொண்டான்...

பிறகு கதிரின் அன்னை சமையலறைக்கு சென்று விட்டார்.

டேய் பேராண்டி இங்க வா என கதிரின் பாட்டி சரோஜா கதிரை அவர் அருகில் அழைத்தார்.

இப்ப எதுக்கு பாட்டி என்ன கூப்ட நீ என கேட்டுக்கொண்டே பாட்டியின் அருகில் அமர்ந்தான் கதிர்.

இல்ல இப்போ ஏதோ பழமொழி சொன்னியேடா ஆயிரம் பேரை கொன்றால் தான் முழு வைத்தியனாக முடியுமோ அரை வைத்தியனாக முடியுமோ என்று சொன்னல அத உனக்கு யார் சொல்லிக் கொடுத்தா என வினவினார் சரோஜா பாட்டி...

யாரு சொன்னாங்கனு எல்லாம் எனக்கு தெரியாது பாட்டி எல்லாரும் சொல்றாங்க நானும் சொன்னேன் இப்ப என்ன அதுக்கு என்றான் கதிர்.

அது சரி யாரு சொன்னாங்க ஒன்னும் தெரியாது என்ன சொன்னாங்கனு தெரியாது எதுவுமே தெரியாமல் நான் தான் அறிவாளினு பேச வேண்டியது. என்றார் சரோஜா பாட்டி நமுட்டு சிரிப்புடன்.

சரி நான் முட்டாள் தான் நீ அறிவாளி தானே நீ சொல்லு எது சரி எது தப்புன்னு என கதிர் தன் பாட்டியிடம் ஏட்டிக்கு போட்டி நடத்திக்கொண்டிருந்தான்.

நீ சொன்னது பழமொழியெல்லாம் சரிதாண்டா ஆனால் அது ஆயிரம் பேர் இல்லை ஆயிரம் வேர் நம்ம நாட்டுல முதல் முதல்ல மருத்துவம்னு கொண்டுவந்தது சித்த மருத்துவம், சித்த மருத்துவம் முழுக்க முழுக்க இயற்கை சம்பந்தப்பட்டது ஆயிரம் வேரை வெட்டி அதை பரிசோதித்து அதைப் பற்றிய முழு விவரங்கள் குறிச்சி அதை மருத்துவத்துக்கு பயன்பாடுக்கு கொண்டு வந்தா தான் அரை வைத்தியன் ஆக முடியும்னு சொல்லு வாங்க டா கதிர் இது தான் சித்த மருத்துவம் அதைதான் ஆயிரம் பேரை கொன்றால் அரை மருத்துவன் அப்படின்னு பேச்சு வழக்குல மாத்திட்டாங்க உங்கள மாதிரி இளசுகள்.
 

Ramya boobalan

Author
Author
SM Exclusive Author
#4
அட பாட்டி நீ சூப்பர் போ வீட்டுக்குள்ளேயே உக்காந்துட்டு எம்ஜிஆர் பாட்டு கேட்டுட்டு பாக்கு இடிச்சிட்டு இருக்க உன்ன ஒரு மொக்க பீசு நினைச்சேன் உண்மையிலேயே நீ சூப்பர் பாட்டி என தன் பாட்டியை அணைத்து அவர் கண்ணத்தில் இதழ் பதித்தான் கதிர்...

அடப்போட இவனே என கன்னத்தைத் துடைத்துக் கொண்டு தன் பாக்கு இடிக்கும் வேலையை தொடர்ந்த சரோஜா பாட்டி பாட துவங்கினார்...

டில்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்லை தட்டாதே
பட்ட படிப்பு படிச்சி வந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே...

முற்றும்...

இதன் மூலமாக நான் சொல்லவருவது என்னனா சின்னதா தலை வலி ஜலதோஷம் அப்புடினா உடனே மெடிக்கல் ஷாப் போய் ஒரு மாத்திரைய வாங்கிப் போட்டுக்காம நம்ம பாட்டி தாத்தா நமக்காக விட்டுட்டுபோன பக்கவிளைவுகள் இல்லாத
மருத்துவத்த உபயோகப்படுத்தி வளமுடன் வாழ்வோமாக....
 

Sponsored

Advertisements

New threads

Top