• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாட்டு போட்டி முடிவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வணக்கம் மக்கா சைட் டே என்று ஆரம்பித்து வெற்றிகரமாக கொண்டாட்டம் நடந்து முடிந்து விட்டது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் பள்ளி கல்லூரி காலங்களுக்கு திரும்பப் போன ஒரு உணர்வு கிடைத்ததா. பாட்டு போட்டி பத்து பக்கங்கள் - 41 பேர் பங்கேற்பாளர்கள் - 89 பாடல்கள்!!! ஸ்ப்பா அம்புட்டையும் ஓப்பன் பண்ணி கேட்பதற்குள் விடாது கருப்பு மாதிரி ஓப்பன் ஆகாத பைலைக்கூட யாரிடமாவது கேட்டு பெற்று கேட்டு முடிப்பதற்குள் அப்படியே கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆகிடுச்சு. சைட்டுக்குள் சைலண்ட்டா சுத்துனவங்க எல்லாம் பாட்டு போட்டியில் களம் இறங்கி சும்மா பட்டையைக் கிளப்பியிருக்காங்க. பெண்கள் குடும்ப பொறுப்புகளுக்கு இடையில் நம் திறமையோ, இல்லை ஒரு செயலோ, அதற்கான ஓரு அங்கீகாரத்தை எதிர் பார்க்கிறோம். அப்படிபட்ட ஒரு அங்கீகாரம் நமக்கு இங்கு கிடைத்திருக்கிறது யார் தருவார்கள் இப்படிப் பட்ட ஒரு சுதந்திரத்தை!!! பாடலாம், கதைக்கலாம், படம் வரையலாம், நம் திறமைகளுக்கு ஒரு சபாஷ் கிடைக்கிறது. எழை ஒருவருவனுக்கு லாட்டரியில் லட்ச ரூபாய் விழுந்தால் எப்படி மகிழ்ச்சி அடைவானோ அதுபோல் நமக்கு கிடைக்கும் லைக், நைஸ், அருமை, இப்படிப் பட்ட வார்த்தைகள் நம்மை லட்சாதிபதி இல்லை கோடீஸ்வரனாக பாவிக்க வைக்கிறது. நம்ம பிரேம்ஸ் அசராமல் 10 பாடல்கள் பாடி அசத்தியிருக்கா (வீட்டில் பாடி பயிற்சி எடுக்கிறேன் என்ற பெயரில் பக்கத்து வீட்டுகாரங்க போலீஸைக் கூப்பிட்டது தனி கதை), அதற்கு அடுத்து ரங்கன் சுபஶ்ரீ தேன்மழை பொழிந்திருக்கிறார்கள், யாஸ்மின் குழந்தையின் மழலையில் இனிமை, இந்த பாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காகவே சனிக்கிழமை திரட் ஓப்பன் பண்ணி swetha198 என்ற தோழி பாடியிருக்காங்க. கூடவே அவர்கள் அண்ணாவின் குரலில் ஒரு பாடலும் வந்திருக்கு. மற்றும் ஓர் புது ஐடி காவியா கணேஷ். சுவிதாவின் பாடல் ஒரு தோழன் தோழியின் இயல்பான உரையில் பாடல். தற்போழுது வரும் கதையின் மாந்தர்கள் பரவலாக ஸ்கோர் அடித்திருக்கிறார்கள். அடேய் மக்கா என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே?? இந்த ஷ்யாம் க்கு ஆர்மிலாம் அமைத்து பாவா னு சுத்திகிட்டு அண்டா அண்டாவா பிரியாணிலாம் கிண்டி கொடுத்து நான் ஷ்யாம் க்கு தான் எல்லோரும் பாடல் போடுவார்கள் என நினைத்தேன். என் நினைப்பில் எல்லோரும் டிப்பர் லாரி வைத்து மண்ணை கொட்டிவிட்டீர்கள். கடைசியில் ஸ்கோர் என்னவோ நம்ம விஜி தட்டிகிட்டு போயிட்டான் இனி யாராவது ஷ்யாம் பாவான்னு சொல்லிகிட்டு சுத்துங்க, அவங்களுக்கு தனி ஆவர்த்தன கச்சேரி வைச்சுடுவோம். சிங்கம் சிங்கிளாக வந்து களம் இறங்கிய தம்பி கலைவாணனின் தாலாட்டு பாட்டு கில்லி மாதிரி பாடியிருக்கிறார்?. நமது SM சைட்டை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் முழ்கடித்த கானக் குயில்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த போட்டியில் வெற்றி தோல்வி என்பது இல்லை. நாம் அறிவித்த கதை மாந்தருடன் இணைக்கும் பாடல் @Rangan Subhashree அவர்கள் பாடிய மித்திரன் தாமரைக்கா வரிகள் கதை மாந்தர்களை பாட்டுடன் இணைத்து வரிகளை அழகாகக் கோர்த்து பாடியிருக்கிறார்கள். மற்றவர்களும் ஒவ்வோரு விதத்தில் அவர்களின் திறமையை அழகான பாடல்களுடன் நமக்கு தந்திருக்கிறார்கள் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துக்கள்??
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Best wishes for all and winners..Akka naange ellarum serthu 89 song padanum le.. ippo judge oode special performance.. @Manikodi akka oru song paduvingala:love::love::love:
சேதாரம் ஜாஸ்தியாக ஆயிடும் அதனால் என் தங்கை பிரியங்கா இன்று சைட்டில் தொபுகடிர்னு குதிச்சு உங்களை இன்ப கடலில் முழ்கடிப்பாங்க.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றவர்கள்தான். முடிவு என்பது அந்த நேரத்தில் யாரால் சிறப்பாக செயல்பட முடிந்ததோ அவர்களுக்கு சாதகமாக அமைவது. அதனால் மற்றவரிடம் அந்த சிறப்பு இல்லை என்றாகிவிடாது. இன்று அவர்களுடைய நாளாக இல்லாமல் இருக்கலாம் அவ்வளவுதான். நாளை அவர்களுடைய நாளாகலாம் தொடர். முயற்சியினால். கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் ? ? ?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றவர்கள்தான். முடிவு என்பது அந்த நேரத்தில் யாரால் சிறப்பாக செயல்பட முடிந்ததோ அவர்களுக்கு சாதகமாக அமைவது. அதனால் மற்றவரிடம் அந்த சிறப்பு இல்லை என்றாகிவிடாது. இன்று அவர்களுடைய நாளாக இல்லாமல் இருக்கலாம் அவ்வளவுதான். நாளை அவர்களுடைய நாளாகலாம் தொடர். முயற்சியினால். கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் ? ? ?
அழகா சொன்னீங்க... Chithra ma...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top