பாணிபூரி | சின்னஞ்சிறுகதை - 7

Vijayanarasimhan

Author
Author
SM Team
#21
நிதர்சனத்தை காட்டும் கதை. நாம் அன்றாடம் கடந்து செல்லும் கீழ்மட்ட மனிதர்களின் வாழ்க்கை நிலையை படம் பிடிக்கும் முயற்சி, அருமை ஆசிரியரே👏👏👍
:):):)(y)(y)(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#22

Vijayanarasimhan

Author
Author
SM Team
#23
ஹாய் ண்ணா..

இங்கே சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் சிறு சிறு உணவங்களை மூட வேண்டிய நிலை.. அவர்களுக்கு என்ன சொல்ல.. தெரில.. தண்ணீர்க்கு பணம் இல்லை...
உண்மைதான்... பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று அடி வாங்கியவர்களை இயற்கையும் வஞ்சிக்கிறது...

ஜெ.ஜெ. முதல்வராக இருந்த போது மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கினார், அப்போது புலம்பினர், ஏமாற்றித் தப்பித்தனர், பேருக்கு ஒரு குழாயைச் சொருகி வைத்தனர்... இன்று அவதியுறுகின்றனர்...

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#24
கரைட்டாஆஆ ஒரு பாணிபூரி சாப்பிடற நேரமும்..ம்..கதை படித்து முடிக்குற நேரமும் ஒரே கால அளவு...
Original pani puri story ☺☺☺
ஆக்சுவலி, ஒரு சாப்பிடு நிபுணராக நாங்கள் இக்கதை படிக்கும் கால அளவில் 2டு 3று பாணிபூரிகளை உள்ளே தள்ளிவிடுவோம் என்று பணிவுடன், தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்... (எடுத்து வைக்கும் பையன் எங்கள் வேகத்திற்கு ஈடுகொடுத்தால் சரி!) :LOL::LOL::LOL:
 
#25
ஆமாம் அம்மா... சி.சி.கதை என்று நான் விவரிக்கவில்லை (எழுதியதை நீக்கிவிட்டேன்!)

எங்கள் பாணிபூரிக்காரர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் என்று பல மொழிகளைச் சரளமாகப் பேசுவார், வரும் வாடிக்கையாளர்களின் தாய்மொழியில் அவர்களை உபசரிப்பார்...

அனைவரிடமும் நட்பு கொண்டுவிடுவார்... கொஞ்ச நாள் தொடந்து சென்றால் நம் வீட்டு நலத்தை எல்லாம் விசாரிப்பார்...

திருமணம் முடிந்து நான் என் மனைவியை முதன்முதலில் அழைத்துச் சென்றபோது பக்கத்துக் கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கிவந்து கொடுத்தார் (அவள் அதை எல்லோரிடமும் சொல்லி ஆச்சரியப்பட்டாள் :LOL::LOL: பாணிபூரி கடையில் குளிர்பானம் குடித்தது நானாகத்தான் இருப்பேன் என்று!)

இன்று நான் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டேன், ஆனாலும், அந்தப் பக்கம் எப்போதாவது சென்றால் அன்புடன் கையாட்டுவார், ‘வாங்க ஏதாச்சு சாப்பிடுங்க’ என்பார், அவருக்குக் காசுகொடுத்துவிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்...

அவர் பெயர் திரு. எத்திராஜ் :):)

[உண்மையில் வர்தா புயலில் அவரது தள்ளுவண்டி உருட்டப்பட்டு பலத்த சேதம் அடைந்துவிட்டது... அப்போது நானும் என் நண்பர்களும் காசு புரட்டிக் கொடுத்து உதவினோம்! அப்போது அவரோடு நீண்ட நேரம் பாணிபூரி சாப்பிடாமல் அமர்ந்து பேசினோம்... அதன் பின் எழுதியதே இக்கதை!]
super super 👌👌👌👌👌👌👌
 
#26
ஆக்சுவலி, ஒரு சாப்பிடு நிபுணராக நாங்கள் இக்கதை படிக்கும் கால அளவில் 2டு 3று பாணிபூரிகளை உள்ளே தள்ளிவிடுவோம் என்று பணிவுடன், தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்... (எடுத்து வைக்கும் பையன் எங்கள் வேகத்திற்கு ஈடுகொடுத்தால் சரி!) :LOL::LOL::LOL:
சகோ இரண்டு, மூன்று பாணிபூரியா இல்லை இரண்டு தட்டு பாணிபூரியா
 

Guhapriya

Well-known member
#28
மழைவிட்டு இன்றோடு இரண்டு நாள்கள் ஆகிறது. வங்கத்துப் புயல் ‘வாரி’ வழங்கிவிட்டு, ஒரு கலக்கு கலக்கிவிட்டு, இருந்த இடம் தெரியாமல் கரைந்து போய்விட்டது.

அது ஏற்படுத்தி இருந்த சுவடுகள் இன்னும் காயாமல்...

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து, கணினியே கதி என்று இருந்தது அலுத்து வெளியில் ஒரு நடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கும் பொழுதுதான் “எங்கள்” பாணிபூரிக் ’கடை’யைக் கவனித்தேன், அந்த வண்டி மட்டும் இறுக்கி மூடப்பட்டு இருந்தது, ஈரத்துடன்.

மழைவிட்டு இரண்டு நாள் ஆகியும் அவர் கடை போடவில்லை. மழை முழுதாய் ஓய்ந்தது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள இரண்டு நாள்கள் தேவை போல!

எப்பொழுது தொடங்கினோம் என்று தெரியாத ஒரு பழக்கம் - அந்தக் கடைக்காரருடன். தொடக்கத்தில் பாணிபூரி, சாண்ட்விச் முதலியவற்றைத் தின்றுவிட்டு வந்துவிடுவது என்றுதான் இருந்தோம்,பிறகு தின்று கொண்டிருக்கையில் அடிக்கும் அரட்டைகளில் அவரும் பங்கு கொள்வார், பிறகு அவரையும் வம்புக்கிழுப்போம், அரசியல், விலைவாசி, ஒரு நாள் பரஸ்பர அறிமுகம் - இப்படி வளர்ந்தது.

இவரைக் கூட்டிக்கொண்டு போய் நிர்வாகவியல் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வைக்க வேண்டும் என்று கூட சில சமயம் தோன்றும், அப்படி ஒரு ’வாடிக்கையாளர் சேவை’ நுட்பம் அவரிடம்.

கடந்த ஐந்து நாள்களாய் அவர் கடை போடவில்லை, அவரது பிழைப்பு என்னவாகும்? ஐந்து நாள் வருமானம் இன்றி எப்படிச் சமாளிப்பார்? வீடு வந்து சேரும்வரை இந்தக் கவலை நெஞ்சை ஆக்கிரமித்து இருந்தது.

மறுநாள் மாலை அவர் கடை போட்டிருந்தார், போய் குசலம் விசாரித்துவிட்டு ஒரு பாணிபூரி சொன்னேன்.

”அஞ்சு நாளா என்னண்ணா பண்ணீங்க? கடை போடலேனா கஷ்டம்ல?”

முதல் பூரியை மென்று முழுங்கிவிட்டுக் கேட்டேன்,

“கஷ்டந்தாங்க! வீட்லதா இருந்தேன்! வேற என்ன பண்ண”

இலேசாய்ப் புன்னகைத்தார், எப்படி முடிகிறது? நிறைய ‘வாழ்ந்து’விட்டவரோ!

பாணிபூரி முடிந்ததும் நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்தேன்,

சில்லரை எடுத்தார்,

”பரவால்ல, வெச்சுக்கோங்கண்ணா!” என்றேன்,

சிரித்தார்,

“சரிங்க, கணக்குல வெச்சுக்குறேன்!” என்றார்.
=====================​
சகோ, இந்த கதை தான் தெளிவா புரிந்தது😀😀. சகோ இவ்வளவு நாள் பானி பூரி தான் எழுதிட்டு இருந்தேன். இனி பாணி பூரி தான் எழுதனுமோ??
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#29
நிதர்சனமான உண்மை... 5 நாட்கள் தொழில் பாதிக்கபட்டால் எத்தகைய இழப்பு .... நினைக்கவும் பயம் எனக்கு....
 

Advertisements

Latest updates

Top