• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
11
அழகிய பெருமாள் பதில் அனுப்பிய லட்சணத்தை லதாவிடம் சொன்னதற்கு “ அவன் உனக்கு முறைப் பையன் ஆகுதுல, அதான் விளையாடுறான். இப்படி ஒரு ஆள் இல்லாததால தான் நீ என்கிட்ட நாக்கால நாட்டியமாடிக்கிட்டு இருந்த. இனியாச்சும் அடக்க ஒடுக்கமாக இரு “ என்று அர்த்தமில்லாமல் உளரிவிட்டுப் போனார்.

இதில் அவருக்கு சற்று நெருடல்தான். ஆனால் அதை தானே பெரிதுபடுத்தி பேசி இல்லாததை இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் மேம்போக்காக குருவியை மட்டம் தட்டி ஆட்டையை கலைக்கப் பார்த்தார்.
ஆனால் அதற்கு அவன் அடங்கவே இல்லை.

தாயின் பதிலில் எரிச்சல் அடைந்த பூங்குருவி தரையை உதைத்துச் சிணுங்கினாள்.
“ பூமாதேவியை உதைக்கதடி. நல்லதில்லை “ _ லதா அதற்கும் 'லபோ திபோ' என்று கத்த குருவி தன் எதிரில் இல்லாத பெருமாளை கழுத்தை நெரிக்கப் போனாள்.
“ என்னடீ? மெண்டலாயிட்டியா?”
“ ஆமா. உங்க ரெண்டு பேரையும் போல “
சொல்லிவிட்டு வீட்டுத் தோட்டத்தில் உலாவல் நடத்தப் போனாள் குருவி.

இவர்கள் பேசியதில் ‘உதை ' என்னும் வார்த்தை ' உதய் ' என தேனாக காதில் விழுந்தது வாணிக்கு!

தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் அப்போது அவள். இனி கூடுதல் நேரம் கம்பனி வேலை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தாள்.
இதுவரை தன்னைப் பற்றி அக்கறை இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த கல்யாணம் முடியும் வரை தேவையில்லாத பேச்சு, செயல்பாடு எதுவுமே இருக்கக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை காட்டினாள்.
ஏனெனில் இப்போது உதய் உளறுவாயனாக மாறி மாலை வேளைகளில் மாலைச்சந்திரன் கடையை வலம் வந்து பூ, புஷ்பம், புய்ப்பம் எல்லாம் இவளுக்கு கொடுத்து சுற்றி இருப்பவர்களை சோதித்துக் கொண்டு இருந்தான். அவன் அன்பு இம்சை தாங்கவில்லை அவளால்.
ஆகவே ‘பொதுவாக திருமணம் முடிவானால் பெண், பிள்ளை வெளியே தெருவே சுற்றக் கூடாது என்பார்கள். அதை நமக்கு யாரும் சொல்லப் போவதில்லை என்பதால் அதனை நாம் பின்பற்றி விடுவோம் ' எனச் சொல்லி அவனை ஆஃப் செய்துவிட்டு அவளும் வீட்டில் வந்து அடைந்து கொள்கிறாள்.

“அப்புறம்? நீ என்னடி? அன்னிக்கு சொன்னதுக்கு அடுத்த வார்த்தை இன்னும் வரலை? என்ன சொல்லுது அந்த உதய் தம்பி?”
பெருமூச்சு விட்டு நிமிர்ந்த வாணி, “ அப்பாடா! இப்பவாச்சும் கேட்டீங்களே? நீங்க கேக்கவும் சொல்லனும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.” என சொல்லி மென்னகை புரிந்தாள்.
“ ரொம்ப சமர்த்துதான். சரி. நான் ஒன்னும் சொல்லிக்கல. அவங்க வீட்ல இருந்து பெரியவங்க யாராச்சும் கூட்டிட்டு வந்து பொண்ணு கேக்க சொல்லு “
அவர் குரலில் மெல்லிய செம்மை விரவி இருந்தது.
அது என்னவோ, மகள்களுக்கு கல்யாணம் பேசும்போது அம்மாக்களுக்கு வெட்கம் வந்துவிடுகிறது.
வாணி யோசித்தது என்னவெனில், உதய் பக்கம் பெரியவர்கள் இல்லை. இவர்கள் பக்கமும் இந்த திருமணத்தில் அத்தனை விருப்பம் இல்லை. அதனால் அவர்களால் _ அதாவது லதவாக எப்போது மீண்டும் திருமண பேச்சை ஆரம்பிக்கிறாரோ அப்போதுதான் அடுத்து இதைப் பற்றி பேச வேண்டும் என்ற உறுதியில் இருந்தாள்.
அதற்குள் இந்த உதய் கிறுக்கன் பல காதல் கவிதை கிறுக்கல்கள் எழுதி தள்ளி இருந்தான்.
கூடவே கடை, வீதிகளில் இவளைச் சுற்றி உலா வேறு!.
அப்பாடா! என்று இருந்தது வாணிக்கு.
“ ராத்திரி நேரம் தோட்டத்துக்கு போயிருக்காளே இந்த சின்ன சிறுக்கி? தோட்டமெல்லாம் பூமரமும் பூஞ்செடியும் வச்சு என் உயிரை வாங்குறது! பேருல பூ இருக்காம்! நல்லவேளை, இவ தலையில குருவி கூடு வைக்கல. அதுவும் கூட எதுக்கு? இவ முடி லட்சணம் அப்படித்தானே இருக்கு”
பலவாறாக புலம்பியவர் மகளைத் தேடி தோட்டத்துக்கு சென்றார்.
பூங்குருவி பவளமல்லி மரத்தின் அடியில் நின்றாள்.
“ அம்மா, பவளமல்லிக்கு 'பாரிஜாதம் ‘ன்னு ஒரு பேர் இருக்காமே?”
தரையில் சிதறி இருந்த மற்றும் இன்னும் வாடியும் வாடாமலும் மரத்தில் இருந்த பவளமல்லி மலர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் குருவி.
“ அது எனக்கு தெரியாது. ஆனால் பாரிஜாதம் தனி செடி. அதோட பூ ரொம்ப வாசமா இருக்கும். பாரிஜாதம் தேவலோக மலர் அப்படின்னு சொல்லுவாங்க. “
லதா தோட்ட விளக்கின் வெளிச்சத்தில் செடி கொடி, குறு மரங்களுக்கு நடுவே தேவதையாக தெரிந்த தன் இளைய மகளை கண் எடுக்காமல் பார்த்தார்.
‘ ஆண்டாள் ஜாதகமாமே இவளுக்கு? இவளை அடையும் அந்தப் பெருமாள் யாரோ?’
“ அம்மம்மா, அம்மம்மா “ என்று நச்சினாள் குருவி.
சிந்தனை கலைந்தது லதாவுக்கு.
‘ இந்தா ஆரம்பிச்சிட்டால்ல!’
“ என்ன வேணும்? சொல்லுடி இங்கே நின்னது போதும். வீட்டுக்குள்ள வா”
“ வர்றேன். அதுக்கு நீ எனக்கு பாரிஜாத பூச்செடி வாங்கித் தரணும் “
“ அது அவ்வளவு சீக்கிரம் இங்கே கிடைக்காது குருவிமா “
“போம்மா. சும்மா குருவிமா, குரங்குமான்னுகிட்டு “ என்று ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டு பின் நாக்கை கடித்து கொண்டாள்.
“ இந்த விசயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கட்டும் “ என டீலிங் பேசினாள் குருவி.
“ அதுக்கு நீ நல்ல பிள்ளையா வீட்டுக்குள்ள வா” என்று அவளுக்கு அம்மா தான் என்பதை நிரூபித்தார் லதா.
“ சின்னப் பிள்ளைங்களை பயம் காட்டுறதே உங்களுக்கு வேலையா போச்சு. “
சிலும்பி கொண்டே வீட்டுக்குள் போனாள் குருவி.
பிறகும் விடாமல் வாணியின் கல்யாணத்தில் குருவியை பெட்ஷீட் தலையணை தூக்க வைத்து ஓட்டி இருக்கிறான்!
அக்காவிடம் புலம்பிய குருவி அதற்கு முன்பு அன்னையிடமும் சொல்லியிருக்க லதா சிரித்து விட்டார்.
அவன் மீது கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் போய்விட்டது அவருக்கு.
“ உன் வாய்க்கு சரியான ஆள்தான் அவன் “
இதையும் அக்காவிடம் சொல்லிவிட்டு குருவி போனை டொக் என்று வைக்க, அது ஆண்ட்ராய்டு ஃபோன் ஆதலால் அமைதியாகவே இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரிந்தது.
இத்தனை நேரம் தங்கையின் அழகிய பெருமாள் மீதான அவதூறு செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அவள் வாய் வழியாகவே தெரிந்து வைத்திருந்த வாணி மனதில் ஓட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றவள்,
தான் இருக்கும் இடம் உணர்ந்து தலையில் வலிக்காமல் தட்டிக் கொண்டு சோறு பொங்கப் போனாள்.
‘ இன்னிக்கு என்ன சாம்பார் வைக்கலாம்? தோட்டத்துல முருங்கைக் காய் இருக்கு. எடுத்து போட்டு வச்சுட வேண்டியதுதான் ‘ முடிவெடுத்தாள்.

“ எனக்கு குழந்தை பாக்கியம் இருக்காதாம். ஒரு நாடி ஜோசியர் சொன்னார். அதனால் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் “_ இவர்கள் திருமணம் முடிவான சமயத்தில் தேவையில்லாமல் உதய் ஏதோ ஜோசியம் பார்த்துவிட்டு ஒற்றைக் காலில் நிற்க, “ உனக்கு மட்டும் பார்த்து தானே அப்படி சொன்னாங்க. நமக்கு சேர்த்து பார்க்க சொன்னா, கண்டிப்பா குழந்தை பிறக்கும்ன்னு சொல்லுவாங்க பாருங்க. தவிர, எனக்கு நீங்க என்னைக் கல்யாணம் செய்துகிட்டா போதும். வேற எதும் வேண்டாம்.” எனத் தேற்றி அவன் கையால் தாலி வாங்குவதற்குள் 'போதும் போதும்' என்று ஆகிவிட்டது.
இதோ, இப்போது வாணி அவன், மற்றும் பவித்ரா கூட்டுக் குடித்தனம் வந்துவிட்டார்கள்.
உதய் தங்கை பவித்ரா _ இப்போது இன்னும் அழகாக இருப்பதாகத் தோன்றியது. கள்ளம் கபடமற்ற அவள் மனமே அதற்கு முக்கிய காரணம் போலும்.
கரஸ்சில் படித்துக் கொண்டு இவர்கள் கடையிலும் வேலை செய்கிறாள்.
“ வயதுப் பெண்ணை எதற்கு இப்படி கடையில் நிறுத்த வேண்டும்? “ என்றதற்கு, “ அதை நீ சொல்றியா? இதுல என்னம்மா இருக்கு? அவ இதுல்லாம் பழகணும்மா. நாளைக்கு அவ தன் கால்ல நிக்கணும். கல்யானத்தை மட்டும் நம்பி பொண்ணு பிள்ளைகளை வளர்க்க கூடாது. நிறைய பெற்றோர்கள் அவங்க பொண்ணுங்களை நல்லா படிக்க வைக்கிறாங்க. நல்ல பெரிய வேலை எல்லாம் பார்க்க வைக்கிறாங்க. ஆனா கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க வீட்ல சமைச்சு, சாப்பிட்டு சீரியல் பார்க்கிற மாதிரிதான் மாப்பிள்ளை பார்த்து கட்டி குடுக்கிறாங்க.
அவங்களை பத்தி நான் எதுவும் சொல்லலை. அதுக்கு எனக்கு உரிமையும், தகுதியும் இல்லை. ஆனா என் தங்கச்சிக்கு எனக்கு தெரிந்த அளவு அவளுக்கும் வியாபாரம், கடை நிர்வாகம் காத்துக் குடுப்பேன். அவளுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிக்க வைப்பேன். “
“ அப்போ கல்யாணம்?”
“ உளராதடி. அவ இன்னும் சின்னப் பொண்ணு. குருவி மாதிரி அவளும் சின்னக் குழந்தை “
“ நீங்க உங்க தங்கச்சி பத்தி என்னவோ சொல்லிட்டு போங்க. ஆனா என் தங்கச்சி பத்தி நீங்க சொல்லக் கூடாது.”
உதய் அதிர்ந்து பார்க்க, “ நீங்க பவியை சின்னக் குழந்தை சொல்லுங்க. அது உண்மை. இவ இருக்காளே, இவ. இவ ஒரு புள்ள பூச்சி. பிள்ளை பூச்சிய பார்த்து இருக்கிங்களா? அது குடைஞ்சிகிட்டே இருக்கும். அந்த மாதிரி இவ “
சிரித்துக் கொண்டே வாணியின் கன்னத்தை தட்டியவன், “ பவியை என் அப்பாம்மா கூட்டுட்டு வரும்போதே ‘ இவ உன் தங்கச்சி ‘ன்னுதான் சொன்னாங்க. அதுதான் என் அடி மனசு வரை பதிஞ்சு இருக்கு. ஆனா குருவிமா என் குழந்தை. முதல் முதல் உங்க வீட்டுக்கு வந்தப்போ எனக்கு கொஞ்சம் அன் ஈஸியா இருந்துது. மூணு பொண்ணுங்க இருக்கற வீடு ஆண்ட் ஏதோ சம் ஹேசிடேசன்ஸ். ஆனா குருவி! அவ என்கிட்ட அவ்வளவு சந்தோசமா பேசினா!?. பவியை ஃப்ரெண்ட் பிடிச்சுகிட்டு ஒரே அதகளம் பண்ணினா.
பவிக்கு அவளை ரொம்ப புடிச்சு போச்சு. ஆக்சிடன்டுக்கு அப்புறம் பவி அடுத்தவங்க கூட ஜாஸ்தி பழகரதில்ல. சுத்தி வளைச்சு எல்லோரும் அவ மறக்க நினைக்கிறதையே நினைவு படுத்துறாங்கன்னு சொல்லுவா. ஆனா குருவிகிட்ட அவள் அவளைப் பத்தி மனம் விட்டு பேசி இருக்கா. அதுக்கு அப்புறம் குருவி அவ ஆக்சிடென்ட் பத்தி ஒரு வார்த்தை பேசவே இல்லியாம். ஆனா இவளை பரிதாபமா, இளக்காரமா - இப்படி எப்படியும் இல்லாம ரொம்ப க்ளோஸ்சா இவளோட பழகறாலாம். “
உதய் இவ்வளவு தம் கட்டி பேச காரணம் உண்டு. பவித்ராவுக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டார்கள். ஆனால் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் இன்னும் தழும்பு உண்டு.
அங்கே ஒன்றும் செய்ய வேண்டாம், புண் ஆறினால் போதும் என்றுவிட்டார்கள். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

புண் ஆறிய பின் இருந்த தழும்பு பவி 'க்ளோஸ்ட் நெக் ' அணிந்தாலும் வெளியே தெரியும். அதைப் பார்த்துவிட்டு அவள் கதையை துருவி துருவி கேட்டு “ அச்சோ. பாவம். பெத்தவங்களும் இல்ல. எடுத்து வளத்தவங்களும் இல்ல. இதுக்கும் இப்படி ஆகிப் போச்சு. என்ன ஒரு கொடுமை பாருங்க “ என வெந்த புண்ணில் விளக்குமாறு கொண்டு அடிப்பார்கள்.
இதை எல்லாம் அரசல் புரசலாக கேட்கும் உதய், கழுத்து பகுதிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாமே என நினைப்பான்.
என்ன சொல்ல? அப்போது துணைக்கு யாரும் இல்லை. அவனாக எடுத்த முடிவு. புண் ஆறிவிடும் என்னும்போது தேவை இல்லாமல் எதற்கு ஒரு ஆப்பரேஷன் என்று தான் நினைத்தான். தவிர மூச்சுக்குழல் செல்லும் பாதை, ஏற்கனவே அதிக காயம், இவளுக்கும் சில மூச்சு பிரச்சனைகள், அது இது என்று கழுத்துப் பகுதி புண் ஆறினால் போதும் என்பதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
மற்றபடி இப்படி எல்லாம் அவன் அப்போது யோசிக்கவே இல்லை.

இவர்கள் திருமண வைபோகத்தில் குருவியும் பவியும் உடன்பிறந்தவர்கள் போல ஒட்டிக் கொண்டு அலையவும் இவனுக்கு நெஞ்சம் நிறைந்து போனது.
அவள் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு அந்த அழகிய பெருமாள் குருவியைச் சுற்றி சுற்றி வந்தது விளையாட்டாகவா வேடிக்கையாகவா என்பதைத் தாண்டி விருப்பத்துடன்தான் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஒவ்வொன்றாக சிக்க ஆரம்பித்தன.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Nalla irukku sister update 👍 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top